Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நா.க.தஅ. மற்றும் GTV இற்கும் பேரழிவைக் கொண்டு வந்து விடாதீர்கள்: தயாபரனுக்கு ஜெயசங்கர் முருகையா மடல்

Featured Replies

  • தொடங்கியவர்

* இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் உலகத்தமிழ் மக்களினது ஒரே நம்பிக்கை ஒளியான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிது சிறிதாக அழிந்து கொண்டு வருவதனை அதன் உறுப்பினர்களுள் ஒருவனாகவும் அதே சமயம், எங்கள் மக்களையும், எங்கள் தேசத்தையும் உண்மையாக நேசிப்பவர்களுள் ஒருவனாகவும் இருந்து கொண்டு, என்னால் இன்னமும் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

* உங்கள் கருத்துக்களுடனும், செயற்பாடுகளுடனும் நான் முற்றாக வேறுபட்டதனால், என்னை உங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்காக நீங்கள் ஆரம்பத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டீர்கள், ஆனால், உங்கள் ஆசை நிறைவேறாது என்று நீங்கள் அறிந்தது முதல், என்னை முழுக்க முழுக்க ஓரம் கட்டுவதற்கு நீங்கள் தலைப்பட்டீர்கள்.

* எங்கள் அரசாங்கத்தில் நீங்கள் அரங்கேற்றிவரும் உங்கள் திருவிளையாடல்கள் அனைத்தையும் நான் பொறுமையாகத்தான் இதுநாள் வரையில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

* பொய்கள், புரட்டுக்கள், புளுகுகள்,கோள்” மூட்டி அதில் “குளிர்” காய்வதும் – “நடுநிலைமை” என்ற போர்வையில் ஒரு சாராருக்கு “தலை” காட்டுவதும் மற்றவர்களுக்கு “வால்” காட்டுவதும்,எங்கள் அரசாங்கத்தில் மிகவும் ஒரு முக்கியமான பொறுப்புமிக்க துறைக்கு அமைச்சராகப் பார்ப்பதற்கு எங்கள் மக்களும், எங்கள் பிரதமரும் என்ன “பாவம்” செய்தனரோ

* உங்கள் திருவிளையாடல்களை எங்கள் அரசாங்கத்தில் மட்டுமல்லாமல், ஈழத்தமிழர்களின் நம்பிக்கைக்கு உரிய தமிழ்த்தேசிய ஊடகமான GTV’யிலும் அல்லவா நீங்கள் ஆரம்பித்து விட்டிருக்கின்றீர்கள்?

* நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும், தமிழ்த்தேசிய ஊடகமான GTV’இற்கும் பேரழிவைக் கொண்டு வந்து விடாதீர்கள்.

* தயவுசெய்து, எங்கள் தமிழினத்தை உங்களைப் போன்றவர்கள் மேலும் காரிருளுக்குள் இட்டுசென்று விடாதீர்கள்

* தயவுசெய்து, நீங்கள் உடனடியாக GTV’யை விட்டு வெளியேற வேண்டும். - இது என் விருப்பம் மட்டுமல்ல அல்லது எங்கள் அரசாங்கத்தின் பல உறுப்பினர்களின் விருப்பம் மட்டுமல்ல, இது எங்கள் மக்களின் விருப்பமும் ஆகும்.

... மிக தெளிவாக விளங்குவோருக்கு விளங்கும் விதத்தில் கூறப்பட்டிருக்கிறது ...

  • Replies 65
  • Views 6k
  • Created
  • Last Reply

ஜெய்சங்கரின் கடிதம் தயாபரன் அப்படி என்ன செய்தார் என்பதை நேரயாகச் சொல்லவில்லை. கோள் மூட்டினார், குழப்பினார் போன்றவைகள் எல்லோராலும் எல்லோர் மீதும் சொல்லக் கூடியதுதான்.

இது கூட ஓர் ஆய்வாளருக்குரிய வார்த்தைப்பிரயோகங்கள் இல்லை மதிப்புக்குரிய ஆய்வாளரே......................

ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது அவர் என்ன செய்தார் என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டும்

அழிவைத் தருகிறார்,திருவிளையாடல் புரிகிறார் என்றால் போதாது. என்ன விதமான அழிவைத் தருகிறார், என்ன திருவிளையாடல் செய்கிறார் என்று சொல்ல வேண்டும்.

பொய் சொல்கிறார் என்று சொன்னால், என்ன இடத்தில் எது பற்றி பொய் சொன்னார் என்று சொல்ல வேண்டும்.

இந்தக் கடிதம் தயாபரன் என்ன குற்றம் செய்தார் என்பதை தெளிவாகச் சொல்லவில்லை. சும்மா வசைபாடியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இது கருத்துக்களம் இங்கு கருத்துகள் தான் முக்கியமே தவிர முகம்கள் முக்கியமில்லை... முக்கிய பொறுப்பிலுள்ள நீங்கள் கருத்துகளை எழுத முன்னம் யோசித்து எழுதுங்கள் .. இது வரை நாடு கடந்த அரசு பற்றி நெல்லையன் கருத்து எழுதும் போதெல்லாம் பெரிசாகவே எடுப்பதில்லை வாசித்து சிரித்து விட்டு செல்லுவேன்

நீங்கள் எழுதிய கருத்துக்கு பிறகு இப்பிடியானவர்களா நாடுகடந்த அரசாங்கத்தில் இருக்கிறார்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது..

நானும் இவ்வளவு நாளும் நெல்லையன் நாடு கட‌ந்த அர‌சை விமர்சித்து[எனக்கு நம்பிக்கை இல்லை என்பது வேற விச‌யம்] எழுதினால் அவரைப் புழுவைப் போல தான் பார்த்தனான் ஆனால் நா.க.அர‌சில் எப்படியான ஆட்கள் இருக்கிறார்கள் என இன்று தான் தெரியுது

Edited by ரதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த அரசாங்கத்திற்கு கருத்தியல் அளவில் இருக்கும் ஓரளவான பெறுமதியும் அதில் உயர் 'பதவி' யில் இருப்பவர்களின் நடத்தையாலும் கருத்துக்களினாலும் இழந்துவிட்டது. முள்ளிவாய்க்காலின் பின்னரான காலப்பகுதியில் புலத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கும் பிரிவினைகளுக்கும் நாடுகடந்த அரசாங்கத்தில் இருக்கும் பலரும் GTV இனரும் முக்கிய பங்கு வகித்தனர் இன்றும் வகிக்கின்றனர். மே 2009 பின்னரான காலப்பகுதியில் இவர்களில் பலர் சிறிலங்கா அரசாங்கத்துடன் சரணாகதி அரசியலுக்கு தயாராக இருந்தனர். ஆனால் மக்களின் விழிப்புணர்வால் அவர்களினால் தாம் நினைத்தபடி செய்யமுடியாது இருந்தது. இவர்கள் தொடர்பான தொடர்ச்சியான விமர்சனத்துடன் கூடியதான பார்வை மிக முக்கியமானது.

  • தொடங்கியவர்

... இங்கு நாகதஅ இன் உறுப்பினர் ஜெய்சங்கர் முருகையா விடுத்த மடல் என்று கூறபட்டு இங்கு இணைக்கப்பட்ட செய்தி தொடர்பாக ..

1) இங்கு இணைக்கப்பட்ட மடலோ(?), ஜெய்சங்கர் முருகையாவினால் தான் இம்மடல் எழுதப்பட்டது?

2) இங்கு ஜெய்சங்கர் முருகையாவினால் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில்கள்?

... இன்னும் வரவில்லை!

யாழ் கள உறவுகளுக்கு !

இங்கே முன்வைக்கப்பட்டுள்ள குறித்த மடல் தொடர்பில் சில விளக்கங்கள் :

- இக்கடிதத்தில் ஜெய்சங்கர் முருகையன் எழுதியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுவரை ஜெய்சங்கர் முருகையா தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை.

அவருடன் தொடர்பு கொண்ட பின்னர்தான் இது அவருடைய கடிதமா என்பதனை உறுதிப்படுத்த

முடியும்

- இது நா.தஅரசாங்கத்தின் பிரதிநிதிக்கு எழுதப்பட்ட திறந்தமடலாகவுள்ளது.

இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிரானதாக வரையப்படவில்லை.

- இதில் ஜீரிவி தொடர்பிலும் எழுத்தப்பட்டுள்ளது.

- இக்கடிதம் வெளிப்படையான ஆதாரங்கள் ஏதுமற்று மேலெழுந்த வாரியாக சொல்லாடல்கள் ஊடாக வரையப்பட்டுள்ளது.

அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு இடையிலான ஒரு திறந்த மடலை நா.த.அசரசாங்கத்திற்கு எதிரானதாக நெல்லையன் என்ற நபர் திசை திருப்ப முனைந்ததன் காரணத்தினாலேயே இக்களத்தில் நான் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியேற்றபட்டது.

மேலும் கடித்தில் சம்பந்தபட்ட நபர்களை நியாயப்படுத்தவோ அல்லது அவர்களில் பிழை காண்பதோ என் பணியல்ல . நோக்கமும் அதுவல்ல.

இத்தகைய கடிதங்கள் சமூகத்தள்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாது வண்ணம் கவனத்தில் கொள்வதே ஆகும்.

இந்நிலையில் குறித்த மடலினால் நா.த.அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற நெருக்கடி நிலை குறித்து சம்பந்த பட்ட நபர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் அவர்கள் பதிலினை சமர்பிக்கும் போது அதனை உரியவகையில் தெரியப்படுத்துகின்றேன்.

மேலும் நா.த.அரசாங்கம் என்பது ஒரு சர்வதீகார கட்டமைப்பல்ல.

இது சனநாயக்கட்டமைப்பு .

இங்கு எல்லோரும் கருத்துக்கள் முன்வைப்பதற்கு முழுமையான சுதந்திரம் உண்டு.

இந்த சனாநாயக்சூழலை புரிந்து கொள்ள வேண்டுமே அன்றி இவ்வாறான கடிதங்களை ஒற்றை நிலையில் இருந்து அணுகாமல் பன்முக நிலையில் இதனை அணுகவேண்டுகிறேன்.

ஒரு சில யாழ் உறவுகள் இதனை சரியாக புரிந்து கொள்ளமல் நா.தஅரசாங்கத்தினை பிழையாக விளங்கிவிடக்கூடாது

என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் அது நா.த.அரசாங்கத்தின் கருத்துக்களை பிழையாக கற்பிதம் கொள்ளப்படும் நிலை உள்ளதனால் இந்த விவாதக்களத்தில் இருந்து நாகரீகம்கருதி நான் விலகிக் கொள்கின்றேன்.

நன்றி

:o

ஐயா

தொலைபேசி வழியாக தொடர்பு கிட்டவில்லை.

ஆனால் மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி :D

[size=5]தகவலுக்கு நன்றி எமது யாழ் கள உறவு நெல்லையன் அவர்கள் எதையும் திசை திருப்பவுமில்லை .குழப்பவுமில்லை . சுட்டிக்காட்டினார்.............இதை நீங்கள் இன்னொரு தடவை வாசித்தபின் நெல்லையன் போன்ற உங்கள் உறவுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி ஒரே பாதையில் பயணிக்க முயற்சியுங்கள்.இதுவே எம் தேசியத்தலைவரின் சிந்தனயுமாகும்..மண்ணிற்காய் மரணித்த மாவீரரின் கனவுமாகும், ஒட்டுமொத்த தமிழர்களின் குரலுமாகும் .................நன்றி .................இணைந்து பயணிப்போம் [/size]

Edited by தமிழ்சூரியன்

திறந்த மடல் எண்டா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

திறந்த மடல் எண்டா என்ன?

உடுப்பு எல்லாத்தையும் கழட்டி வைச்சிட்டு காத்தோட்டமாய் இருந்து எழுதிறதுதான் திறந்தமடல் ஆனந்த சங்கரி எழுதிற மாதிரி

நினைச்சுப் பார்க்கவே கஸ்டமா இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைச்சுப் பார்க்கவே கஸ்டமா இருக்கு.

கவனம் கண்டதையும் யோசித்து போடதயனனே என்ற குஞ்சு.

ஐயா

தொலைபேசி வழியாக தொடர்பு கிட்டவில்லை.

ஆனால் மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி :D

ஐயா அகரன்.

நீங்கள் ஏன் ஐயா கஸ்டப்படுறீங்கள்.

உது திறந்த மடல். பதில் சொல்ல வேண்டியது தயாபரன்.

நீங்கள் (நா.க.அ சார்பாக) கேள்வி கேக்க வேண்டியது தயாபரனிட்ட, (ஒழுங்காற்று நடவடிக்கை ஏதாச்சும் எடுக்கிறது எண்டா)

தயாபரன்ட தொடர்பும் கிடைக்கல்லையோ..

உதை வெளியில சொல்லிடாதீங்க... (அமைச்சர் எண்டுறீங்க... முக்கிய பதவி எண்டுறீங்க)

ஒரு அமைப்பில இருக்கிற உங்களாலேயே தொடர்பு கொள்ள ஏலாது எண்டா...

மக்கள் எல்லாம் எந்த மூலைக்கு?

முடிந்தால் தயாபரனை இழுத்துக் கொண்டு வந்து இங்க விடுங்க...

உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எதுவித கோபதாபமுமில்லை.

உங்கட கஸ்டத்தை என்னால பொறுக்க முடியவில்லை.

நன்றி.

******

நாட்டுக்கு ஒண்டுமே புடுங்காத வெங்காயங்கள் எல்லாம் (என்னையும் சேர்த்துத்தான்)

உங்கட நேரத்தை மினக்கெடுத்தி ஏதோ செய்யிற உங்கள மாதிரி ஆக்களை கேள்வி கேக்க வந்திடுவம்.

*****

கொடுமை என்ன எண்டா நா.க.அ தேர்தலுக்கு ஓட்டுப் போடாமா ஒளிச்சு திரிஞ்சவன் எல்லாம் கேள்வி கேக்கிறான்.

யாழ் கள உறவுகளுக்கு !

இத்தகைய கடிதங்கள் சமூகத்தள்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாது வண்ணம் கவனத்தில் கொள்வதே ஆகும்.

இந்நிலையில் குறித்த மடலினால் நா.த.அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற நெருக்கடி நிலை குறித்து சம்பந்த பட்ட நபர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் அவர்கள் பதிலினை சமர்பிக்கும் போது அதனை உரியவகையில் தெரியப்படுத்துகின்றேன்.

மேலும் நா.த.அரசாங்கம் என்பது ஒரு சர்வதீகார கட்டமைப்பல்ல.

நன்றி

அகரன்:

இப்படியான ஒரு ஒழுங்கு முறையை இங்கே யாழுக்கு நிரந்தரமாக அமைத்து தர முடியுமா? உதாரணத்திற்கு ஒரு உறவு நா.க அரசுக்கு ஒரு கேள்வியை இங்கே பதிகிறது என்று வைத்துக்கொள்ளுவோம். அதில் 15 உறவுகள் பச்சை குத்தி கேள்வியைப் பொது கேள்வி என்ற தரத்திற்கு உயர்த்தி வைக்கிறார்கள். நீங்கள். இடையில் நின்று அந்த கேள்வியை நாடுகடந்த அரசுக்கு அனுப்பி அவர்களின் அதற்கான பதிலை பெற்றுத்தர முடியுமா? உதாரணத்திற்கு 5000 கைநாட்டுகள் இட்டால் வெள்ளை மாளிகை ஒரு கேள்வி மனுவுக்கு பதில் அளிக்கிறது. அப்படி ஒரு வழிவகை இருந்தால் நெல்லையானும், மற்றும் எல்லோரும், யாரையும் சீண்டாமல் அந்த procedure ஐ பயன் படுத்தி கேள்விகளுக்கு பதில்களைப்பெற்றுக்கொள்ளலாம்.

உறவுகளுக்கு: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஆனால் நீங்கள் ஒரு சந்தர்ப்பத்தை வைத்து நாடுகடந்த அரசை கணக்கு போடாதீர்கள். கேள்வி கேட்ட விதம் நாகரிகமாக இருக்கலாம். இல்லையாய் இருக்கலாம். கேள்விக்கு பதிலை பெற்றுக்கொள்வது உங்கள் கடமை. தற்கால நிலைமையில் பதிலை தேவையிருந்தால் கேள்வியை கேளுங்கள்(ஏன் எனில் பதில் அளிக்கப்போபவர்கள் தொண்டர்கள்). கேட்ட கேள்விகளுக்கு பதிலை பெற்றுகொள்ள வேண்டியது, ஜனநாயத்தில், உங்கள் கடமை. நீங்கள் உங்களுக்காக, உங்கள் உறவுகளுக்காக போராடுகிறீர்கள். உங்களுக்கு நீங்கள் ஒன்றிணந்து போராட ஒருஅமைப்பு தேவை. நாடுகடந்த அரசை ஜனநாயக போராட்ட அரசாக மாற்ற வேண்டியது உங்கள் தேவை. ""நாடுகடந்த அரசை எனக்கு தெரியாது. உவையளோ அவை" என்று எழுதாதீர்கள். ஏன் என்றால் அந்த உவைகளுக்குள் நீங்களும் அடங்குகிறீர்கள். அந்த உவையளில் பிழை இருந்தால் உங்களிலும் பிழை. அதிகாரத்தை யாராவது Hijack பண்ண கோட்டை விட்டு விட்டது மாதிரி நடந்து கொள்ளாதீர்கள். தயவு செய்து இந்த ஜனநாயக அமைப்பில் ஈடுபட்டு பங்காளிகள் ஆகுங்கள். புரோகிதத்திற்கு வந்த குருக்கள் மாதிரி தூர நிண்டு ஒரு கேள்வி கேட்டுப்போட்டு தூக்கி அடிச்சு கோவிச்சுக்கொண்டு ஓடாதீர்கள். கிட்ட வந்து உங்கள் அமைப்பாக்குங்கள். நா.க.அரசில் பணியாற்றுபவர்கள் எல்லோரும் யாழ்க்கள நிர்வாகிகள் போலத்தொண்டர்களே. எனவே குறைகளை நிவிர்த்த கை கொடுங்கள்.

Edited by மல்லையூரான்

அகரன்:

இப்படியான ஒரு ஒழுங்கு முறையை இங்கே யாழுக்கு நிரந்தரமாக அமைத்து தர முடியுமா? உதாரணத்திற்கு ஒரு உறவு நா.க அரசுக்கு ஒரு கேள்வியை இங்கே பதிகிறது என்று வைத்துக்கொள்ளுவோம். அதில் 15 உறவுகள் பச்சை குத்தி கேள்வியைப் பொது கேள்வி என்ற தரத்திற்கு உயர்த்தி வைக்கிறார்கள். நீங்கள். இடையில் நின்று அந்த கேள்வியை நாடுகடந்த அரசுக்கு அனுப்பி அவர்களின் அதற்கான பதிலை பெற்றுத்தர முடியுமா? உதாரணத்திற்கு 5000 கைநாட்டுகள் இட்டால் வெள்ளை மாளிகை ஒரு கேள்வி மனுவுக்கு பதில் அளிக்கிறது. அப்படி ஒரு வழிவகை இருந்தால் நெல்லையானும், மற்றும் எல்லோரும், யாரையும் சீண்டாமல் அந்த procedure ஐ பயன் படுத்தி கேள்விகளுக்கு பதில்களைப்பெற்றுக்கொள்ளலாம்.

******

நாட்டுக்கு ஒண்டுமே புடுங்காத வெங்காயங்கள் எல்லாம் (என்னையும் சேர்த்துத்தான்)

உங்கட நேரத்தை மினக்கெடுத்தி ஏதோ செய்யிற உங்கள மாதிரி ஆக்களை கேள்வி கேக்க வந்திடுவம்.

*****

கொடுமை என்ன எண்டா நா.க.அ தேர்தலுக்கு ஓட்டுப் போடாமா ஒளிச்சு திரிஞ்சவன் எல்லாம் கேள்வி கேக்கிறான்.

ஜனநாயக அரசை கேள்வி கேட்க அதற்கு ஒட்டு போடவேண்டும் என்பது முன் நிபந்தனை அல்ல. நா.க. அ புதியது. எனவே பதிலை எப்படி கிண்டு எடுத்து, களுவி, துடைச்சு வீட்டுக்கு கொண்டு வருவது என்பது இப்போதைக்கு நம்ம பிரச்சனை. நீங்கள் பார்த்த "நாடுகடந்த அரசுக்கு ஒட்டு போடாதவர்" தனது விருப்பத்தை இரகசியமாக வெளிவிட நாடுகடந்த அரசு சந்தர்ப்பம் கொடுத்திருந்தது. எனவே நீங்கள் அவர் ஓட்டு போட்டாரா இல்லையா என அறிந்து கொள்ள முயல்வது நாடுகடந்த அரசின் அரசியல் அமைப்புக்கு முரண் ஆனது. நீங்கள் அப்படி யாரையாவ்து வாக்களிக்காதவர் என தயவு செய்து பச்சை குத்திவிடாதீகள்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது அவர் என்ன செய்தார் என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டும்

அழிவைத் தருகிறார்,திருவிளையாடல் புரிகிறார் என்றால் போதாது. என்ன விதமான அழிவைத் தருகிறார், என்ன திருவிளையாடல் செய்கிறார் என்று சொல்ல வேண்டும்.

பொய் சொல்கிறார் என்று சொன்னால், என்ன இடத்தில் எது பற்றி பொய் சொன்னார் என்று சொல்ல வேண்டும்.

இந்தக் கடிதம் தயாபரன் என்ன குற்றம் செய்தார் என்பதை தெளிவாகச் சொல்லவில்லை. சும்மா வசைபாடியிருக்கிறது.

..தெளிவாக சொல்லச் சொல்வதோ, உண்மைகளை வெளிக்கொணர்வது ... இனி அவை ஊடகங்களின் கைகளில்! அவை எம் மக்களுக்கு ... நாகதஅ இற்கு வாக்களித்தவர்களோ, வாக்களியாதவர்களோ அல்ல பிரட்சனை, எம்மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்!

... பல குற்றச்சாட்டுக்கள், பல ஊகங்கள், ... நாகதஅ என்ற அமைப்பை கேபி உருவாக்க முனைகையில் இருந்து எழுப்பப்பட்டு வருகிறது! நாகதஅ இன் செயற்பாடுகள் உறங்கு நிலைக்கு சென்று விட்டதாக நாகதஅ உடன் தொடர்புடைய பலர் கூறுகின்றனர் ... நீண்ட காலமாக நாகதஅ இற்கு ஆதரவளித்து வரும் IBC TAMIL, சில மாதங்களுக்கு முன் தன் மதிய தலைப்பு செய்தியாக "நாகதஅ முற்றாக செயலிழந்து விட்டதா என பகிரங்கமாக கேள்வியும் எழுப்பியிருந்தது" ... அதற்கு மேல் நாகதஅ இலிருந்து ஒரு பிரிவினர் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வெளியேறியோ/வெளியேற்றப்பட்டும் உள்ளனர். ஏறக்குறைய நாகதஅ ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்டன, இம்மூன்றாண்டுகளில் என்னத்தை சாதித்தது என்பதை பட்டியலிடுவார்களா??? ... தயவுசெய்து மாவீரர் நாளை சீரளித்ததை பட்டியல் இடல் வேண்டாம்! ... சிறிய அமைப்புக்களாகிய BTF, GTF போன்றவைகளே பல சந்திப்புகள், பல செயற்பாடுகளை செய்துவருவது எவருமறிந்தது!

... நீண்ட காலத்துக்கு பொத்தி மெழுகி உண்மைகளை மறைக்க முடியாது! இது ஓர் இராணுவ அமைப்பல்ல, ஜனநாயக அமைப்பு, , நமக்கு என்ன நடைபெறுகிறதென்பதை கேட்கவோ, அறியவோ முழு அதிகாரமும் உள்ளது.

இங்கே நெல்லையன் போன்றவர்கள் மக்களுக்கு உண்மைகளை மறைப்தோடு போராட்டம் மக்கள் போகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள்.

அதாவது ஏகபோக சாசனத்தின் இருப்பினை தக்கவைக்கவே நெல்லையன் போன்றவர்கள் மக்களால் தோற்றம் பெற்ற நா.த.அரசாங்கத்தினை அழிக்க நினைக்கின்றார்கள்.

உங்களுடைய அகக்கண் நன்றாகவே தெரிகிறது.

ஏகபோக சாசனத்தின் விளக்கம் தர முடியுமா திரு அகரன் அவர்களே......

அதை விட நீங்கள் விடுதலை புலிகளுக்கு எதிரான என்று நேரிடையாகவே சொல்லலாம்

எனக்கு தெரிந்து கூடுதலான உங்க உறுப்பினர்கள் இப்பிடிதான் பிதற்றுகிறீர்கள்.......

எல்லாம் காலம் தான் 2009 இட்கு பிறகு பல முகமூடி நபர்கள இனங்காண முடிகிறது நன்றி தலைவரே

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்புபட்ட செய்தி..

ஜீ.ரி.வி ஊடகவியலாளர் தினேஷ் – காணாமல்போனவர் ஆக்கப்பட்டவர் : ஜோர்ஜ் திலகன்

கீழ்வரும் கட்டுரை ஜோர்ஜ் திலகன் என்பவரால் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. விரிவாக்கப்பட வேண்டியதும் முரண்படத்தக்க கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் விவாத நோக்கில் கட்டுரையைப் பதிவிடுகிறோம். ஆரோக்கியமான விவாதங்கள் ஊடகச் சுதந்திரம் குறித்த கருத்தை வளர்த்தெடுக்குமானால் மகிழ்ச்சி.

dinesh_gtv.jpg

முள்ளிவாய்க்காலில் இரத்த ஆறு ஓடியபோது புலம் பெயர் நாடுகளில் தமிழர்கள் வீடுகளிலும் மரண ஓலம் கேட்டது. மறு நாள் தெருவைக் கடந்து ஆர்ப்பாட்டம் நடத்தியோ, அழுது கூக்குரல் போட்டோ, ஏதாவது செய்து ஏனைய சமூகங்களிலிருந்து மனிதாபிமனிகளைக் கூட்டிவந்தோ கொலைகளை நிறுத்திவிடலாம் என்று ஒவ்வொருவரும் எண்ணினார்கள். எல்லாம் முடிந்துபோனது. இரத்தவாடை எங்கள் வீடு வரை வீசியது. காற்றுக் கொடியதானது. கணனிகளுக்கு மின்னழுத்தம் அதிகரித்தது. விண்ணில் தெரியும் விமானங்கள் எல்லாம் குண்டுகள் காவித் திரிவதான உணர்வு. ஏன், எப்படி.. கண்ணிமைப்பதற்குள் மனிதர்கள் அனைவரும் சாம்பாலகிப் போனார்கள்.

மரங்கள் கூட விண்ணை விசாரணை செய்யும் ஒரு தேசத்திதை முச்சுக் கூட விடமுடியாமல் முடக்கிவைத்துவிட்டார்கள்.

ஈழத்தில் மக்கள் வேதனைப்படும் போது புலம்பெயர் நாடுகளில் கண்ணீர்வடிக்கும் உணர்ச்சி கொண்ட மக்கள் கூட்டம் ஒன்றைக் கண்டோம்.

எங்களை நாங்களாக மார்தட்டி வாழ்ந்து மடிந்து பின்னர் மறுபடி உயிர்த்து குறைந்தபட்சம் பிரித்தானிய ஊடக ஜனநாயகத்தையும் அங்கே வாழும் நாகரிகத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம்.

இந்த குறைந்தபட்ச நாகரிகத்கை படைத்த ஆங்கிலேயரைப்போல நாம் கோட் சூட் அணிந்து டை கட்டியிருக்கிறோம். ஆனால் நாம் மட்டும் உள்ளத்தாலும் உணர்வாலும் மாறாமல் அப்படியே நிலபிரத்துவ சர்வாதிகாரியாக இருக்கிறோம் என்பதைத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகவியலாளரான தினேஷ் அவர்கள் ஜீ ரீ வி யிலிருந்து வெளியேறவேண்டிய நிலைமை தோற்றுவிக்கப்பட்டதாக ஜீரீவியின் உள்வட்டாரத்திலிருந்து நம்பகரமாக அறிகிறோம்.

ஜீ டீ வி க்கு ஒரு வரலாறு உண்டு. அதனை நேசிக்கும் லட்சக்கணக்காண ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன் சோதனை மிகுந்த நாட்களில் அதனோடு அரைபட்டினி நிலையிலிருந்து உழைத்த ஒருசிலரில் தினேஷ் ஒருவர். அதன் வளர்ச்சிக்காக அவர் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது என்பதை அதன் நிர்வாகம் மறுக்காது என நினைக்கிறோம்.

முரண்பாடுகள் உடன்பாடுகள் என்ற எல்லாவற்றையும் ஒரு மூலையிலே தூக்கிவைத்துவிட்டு உழைப்பு என்ற தராசை வைத்து மட்டும் பார்த்தால் கூட ஜீ.ரி.வி தினேஷிடம் இருந்து பெற்றுக்கொண்டது கூலியால் சமப்படுத்த முடியாதது.

ஆனால் திடீரென ஒரு சீ ஈ ஓ அதற்குள் புகுத்தப்பட்டது பலரையும் அதிர்ச்சியடையவைத்தது. ஏனெனில் அவர் ஒர் அரசு இல்லாத அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர். வில்லியம் ஹேக் பீபீசியின் சீ ஈ ஓ வாக வருவi;த பிரித்தானிய மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதிகம் ஏன் ஜி எல் பீரிஸ் ரூபவாகினியின் சீ ஈ ஓ வாவதை இலங்கை மக்கள் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஜீ டீ வி; அந்த அரசு இல்லாத அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரை சீ ஈ ஓ வாக நியமித்தமையைப்பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துகளும் எழுந்தன. அவற்றை இங்கு நாம் ஆராய வேண்டியதில்லை. ஆனால் இத்தகைய ஒரு அரசியல் நியமனம் ஊடக சுதந்திரத்திற்கு அடிப்படையில் முரணாணது என்பதை நாம் அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகிறோம்.

ஒரு விடயத்தை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

ஊடகவியலாளர்களை அடிமை எஜமானர்கள் பாணியில் அடிமைகளைப் போல நடத்த முடியாது. தங்களோடு செயற்படுகின்ற ஊடகவியளார்களை மனிதர்களாக நடத்தத்தெரியாதவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றியும் மகிந்த ராஜபக்ஷவின் ஊடக அடக்குமுறை பற்றியும் பேசுவதற்கு உரிமை கிடையாது.

நாங்கள் ஊடகவியாலாளர்கள் அதிகாரவர்கத்தின் நலனுக்காக மரணித்து மாண்டுபோன சமூகத்தைச் சார்ந்தவர்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜபக்ச லண்டன் வந்தபோது தெருவுக்கு வந்து ஆர்ப்பரித்தவர்கள். இனி ஜீ.டி,விக்குப் போக அதிக நேரமாகாது.

நிர்வாக ரீதியான பிரச்சினை ஒன்றுதான் இதற்குக் காரணம் என்றால் அதனைக் கையாளவதற்கு சில சட்டவரைமுறையும் நாகரீகமான நடைமுறையும் இருக்கிறது. தாதா பாணியில் அதனைச்செய்ய முடியாது.

http://inioru.com/?p=28541

... அழுவதா? சிரிப்பதா? ... இச்செய்தியையும் நெல்லையின் தலையில் போட்டு விட்டு தப்பி விடாதீர்கள், நாகதஅ பிரதிநிதியாம் அகரன் அவர்களே!!!!!!!!!!!!

தயவுசெய்து மாவீரர் நாளை சீரளித்ததை பட்டியல் இடல் வேண்டாம்! ... சிறிய அமைப்புக்களாகிய BTF, GTF போன்றவைகளே பல சந்திப்புகள், பல செயற்பாடுகளை செய்துவருவது எவருமறிந்தது!

... நீண்ட காலத்துக்கு பொத்தி மெழுகி உண்மைகளை மறைக்க முடியாது! இது ஓர் இராணுவ அமைப்பல்ல, ஜனநாயக அமைப்பு, , நமக்கு என்ன நடைபெறுகிறதென்பதை கேட்கவோ, அறியவோ முழு அதிகாரமும் உள்ளது.

நெல்லையான்: என்னுடைய அபிப்பிராயமும் BTF ,GTF செய்த அளவுக்கு நா.க.அரசு சில கோணங்களில் செயல் பட இல்லை.

ஆனால் நா.க.அரசு ஒரு முழு அமைப்பு. தொண்டர்களின் பங்களிப்புகள் குறைவென்பதால் உங்களுக்கு அதன் முழு உயரம் பெருப்பதையும் காணமுடியவில்லை.தகவல் மந்திரி சபை மட்டும் சரியாக இயங்க தொடங்கினால் அதுவே இன்றைய BTF, GTF போன்றவறை விட பன்மடங்காகிவிடும். பொருளாதாரம், கல்வி ...... மிச்சம் வேறை கதை. நான் இதற்குள் அதன் முதல் நோக்கமான விடுதலையை சேர்க்கவிலை. சில கருத்துகள், இங்கே காணப்படத்தக்க சில வாசகர்களை விட, உங்களுக்கு கூட விளங்க வேண்டும். உதாரணத்திற்கு NASA வை போய் நீங்களும் இருக்கிறியல், ஐன்ஸ் ரீன் கண்டு பிடித்த மாதிரி கண்டு பிடித்தீர்களா என்று கேட்க முடியாது. விஞ்ஞானத்தை முன்னேற்றுவது NASA வின் ஒரு குறிக்கோள் மட்டுமே. மேலும் NASA ஐன்ஸ் ரீன் மாதிரி திறமையான விஞ்ஞானிகளை கண்டால் அவர்களுடன் போட்டி போடாது. மாறாக, அவர்களை அரவணைத்து அனுசரித்து செல்லும் மட்டும் என்பதில்லை, காலப்போக்கில் அந்த அந்த விஞ்கானிகளை உள்வாங்கி மேலும் தன்னை பெரிதாக்கி கொள்ளும். நா.க.அ ஒரு ஜானநாயக கட்டமைப்பு. நான் ஆருடம் சொல்வதால் பயன் ஒன்றும் இல்லை. இன்றைய மெலிந்த நிலையில் அமெரிக்க, பிருத்தானிய, யேர்மனிய அரசுகளுடன் ஒப்பிட்டு, உங்களுக்கு ஊடுருவல்களை தடுக்க முடியவில்லை; நீங்கள் எப்படி தொழில் படப்போகிறீர்கள் என்று கேட்பதால் எதுமில்லை. ஜனநாய அமைப்பிலிருந்து ஒரு நல்ல தலைவன் வெளியே போவதோ அல்லது புல்லூருவிகள் உள்நுளைவதோ நீண்டகால அடிப்படையில் பெரிய தாக்கத்ததை தர மாட்டா. உடனுக்கு, நிச்சயமாக சில குழப்பங்களை ஆக்கி விடும்.

எனக்கு ஐரோப்பிய நிலைகளை விளங்கப் படுத்த முடியாது. அமெரிக்காவில், நாடுகடந்த அரசால் தான் முன்னெடுக்கும் கருமங்களில் மற்றைய எல்லா அமைப்புகளையும் அழைத்துவந்து பங்குபற்றவைக்கதக்க பலம் ஏற்கனவே இருக்கு.

ஜின்னா குறுகிய நோகத்தோடு பாகிஸ்தானை ஆரம்பித்து அது சின்னபின்னமாக உடைந்துகொண்டிப்பதை காணலாம். அதேமாதிரி சோல்பரி கமிசனை பகிஸ்கரித்து தமிழர்களை தன்கையில் தரவேண்டும் என்று வாங்கி விட்ட D.S இன் ஜெனநாயகம் "அரசர் மகிந்தா வாழ்கவே" என்ற பாட்டில் வந்து நிற்கிறது.

எமது நோக்கம் மக்களை இணைத்து, பலத்தை உருவாக்கி அதிகாரத்தை அவர்களின் கையில் கொடுப்பதென்ற பரந்த அளவில் செயல்பட வேண்டும். மிச்சத்தை அவர்கள் கவனிக்க விட்டுவிட வேண்டும். நாம், கோட்டில், கேள்விகளைக்கேட்டு பதிலை வெளிவரப் பண்ணும் வக்கீல்களாகவே இருக்க வேண்டும். ஊடுருவல் இருக்கா? இதை மூடி விடவா? என்ற முடிவை மக்களாகிய யூறிகள் தான் சொல்ல வேண்டும். யூறிகளை தள்ளிவைத்துவிட்டு நாம் முன்னே போனால்(நாம் ஆடிவைக்கும்) சர்வாதிகாரம் தான் விளையும். முடிவை நாம் சொல்லக்கூடாது. பதிலை பெற்றுக்கொடுக்க மட்டும் தான் நாங்கள் பங்களிக்க வேண்டும். உதரணத்திற்கு ஒருவரை பதவி நீக்கினால் சில கேல்விகளை கருத்துகளத்தில் நாம் போடவேண்டும். பதில்களை எல்லோரும் வாசிக்க விடவேண்டும். அதுதான் ஊடக தர்மம். குறிப்பிட்ட ஒருவர் பதவியிலிருந்து நீக்கப்படிருக்கிறார்; ஆகையால் நா.க.அரசு பதவி விலகவேண்டும் என்பது அரசியல்-தேர்தல் விஞ்ஞாபனம்; அல்லது பதவிப்போட்டி.

இணந்து செயல்படத்தயாராகும் நாம், மக்கள் சொல்லும் வரை காத்திருக்க தயாராக வேண்டும். இல்லையேல் கடல் கரையில் இருந்து விளாயாட்டுக்கு மணல் வீட்டை திரும்பத் திரும்ப கட்டி உடைத்து விளையாடும் சிறு பிள்ளையாகத்தான் நாம் இருப்போம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

தொடர்புபட்ட செய்தி..

ஜீ.ரி.வி ஊடகவியலாளர் தினேஷ் – காணாமல்போனவர் ஆக்கப்பட்டவர் : ஜோர்ஜ் திலகன்

கீழ்வரும் கட்டுரை ஜோர்ஜ் திலகன் என்பவரால் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. விரிவாக்கப்பட வேண்டியதும் முரண்படத்தக்க கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் விவாத நோக்கில் கட்டுரையைப் பதிவிடுகிறோம். ஆரோக்கியமான விவாதங்கள் ஊடகச் சுதந்திரம் குறித்த கருத்தை வளர்த்தெடுக்குமானால் மகிழ்ச்சி.

dinesh_gtv.jpg

முள்ளிவாய்க்காலில் இரத்த ஆறு ஓடியபோது புலம் பெயர் நாடுகளில் தமிழர்கள் வீடுகளிலும் மரண ஓலம் கேட்டது. மறு நாள் தெருவைக் கடந்து ஆர்ப்பாட்டம் நடத்தியோ, அழுது கூக்குரல் போட்டோ, ஏதாவது செய்து ஏனைய சமூகங்களிலிருந்து மனிதாபிமனிகளைக் கூட்டிவந்தோ கொலைகளை நிறுத்திவிடலாம் என்று ஒவ்வொருவரும் எண்ணினார்கள். எல்லாம் முடிந்துபோனது. இரத்தவாடை எங்கள் வீடு வரை வீசியது. காற்றுக் கொடியதானது. கணனிகளுக்கு மின்னழுத்தம் அதிகரித்தது. விண்ணில் தெரியும் விமானங்கள் எல்லாம் குண்டுகள் காவித் திரிவதான உணர்வு. ஏன், எப்படி.. கண்ணிமைப்பதற்குள் மனிதர்கள் அனைவரும் சாம்பாலகிப் போனார்கள்.

மரங்கள் கூட விண்ணை விசாரணை செய்யும் ஒரு தேசத்திதை முச்சுக் கூட விடமுடியாமல் முடக்கிவைத்துவிட்டார்கள்.

ஈழத்தில் மக்கள் வேதனைப்படும் போது புலம்பெயர் நாடுகளில் கண்ணீர்வடிக்கும் உணர்ச்சி கொண்ட மக்கள் கூட்டம் ஒன்றைக் கண்டோம்.

எங்களை நாங்களாக மார்தட்டி வாழ்ந்து மடிந்து பின்னர் மறுபடி உயிர்த்து குறைந்தபட்சம் பிரித்தானிய ஊடக ஜனநாயகத்தையும் அங்கே வாழும் நாகரிகத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம்.

இந்த குறைந்தபட்ச நாகரிகத்கை படைத்த ஆங்கிலேயரைப்போல நாம் கோட் சூட் அணிந்து டை கட்டியிருக்கிறோம். ஆனால் நாம் மட்டும் உள்ளத்தாலும் உணர்வாலும் மாறாமல் அப்படியே நிலபிரத்துவ சர்வாதிகாரியாக இருக்கிறோம் என்பதைத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகவியலாளரான தினேஷ் அவர்கள் ஜீ ரீ வி யிலிருந்து வெளியேறவேண்டிய நிலைமை தோற்றுவிக்கப்பட்டதாக ஜீரீவியின் உள்வட்டாரத்திலிருந்து நம்பகரமாக அறிகிறோம்.

ஜீ டீ வி க்கு ஒரு வரலாறு உண்டு. அதனை நேசிக்கும் லட்சக்கணக்காண ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன் சோதனை மிகுந்த நாட்களில் அதனோடு அரைபட்டினி நிலையிலிருந்து உழைத்த ஒருசிலரில் தினேஷ் ஒருவர். அதன் வளர்ச்சிக்காக அவர் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது என்பதை அதன் நிர்வாகம் மறுக்காது என நினைக்கிறோம்.

முரண்பாடுகள் உடன்பாடுகள் என்ற எல்லாவற்றையும் ஒரு மூலையிலே தூக்கிவைத்துவிட்டு உழைப்பு என்ற தராசை வைத்து மட்டும் பார்த்தால் கூட ஜீ.ரி.வி தினேஷிடம் இருந்து பெற்றுக்கொண்டது கூலியால் சமப்படுத்த முடியாதது.

ஆனால் திடீரென ஒரு சீ ஈ ஓ அதற்குள் புகுத்தப்பட்டது பலரையும் அதிர்ச்சியடையவைத்தது. ஏனெனில் அவர் ஒர் அரசு இல்லாத அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர். வில்லியம் ஹேக் பீபீசியின் சீ ஈ ஓ வாக வருவi;த பிரித்தானிய மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதிகம் ஏன் ஜி எல் பீரிஸ் ரூபவாகினியின் சீ ஈ ஓ வாவதை இலங்கை மக்கள் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஜீ டீ வி; அந்த அரசு இல்லாத அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரை சீ ஈ ஓ வாக நியமித்தமையைப்பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துகளும் எழுந்தன. அவற்றை இங்கு நாம் ஆராய வேண்டியதில்லை. ஆனால் இத்தகைய ஒரு அரசியல் நியமனம் ஊடக சுதந்திரத்திற்கு அடிப்படையில் முரணாணது என்பதை நாம் அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகிறோம்.

ஒரு விடயத்தை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

ஊடகவியலாளர்களை அடிமை எஜமானர்கள் பாணியில் அடிமைகளைப் போல நடத்த முடியாது. தங்களோடு செயற்படுகின்ற ஊடகவியளார்களை மனிதர்களாக நடத்தத்தெரியாதவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றியும் மகிந்த ராஜபக்ஷவின் ஊடக அடக்குமுறை பற்றியும் பேசுவதற்கு உரிமை கிடையாது.

நாங்கள் ஊடகவியாலாளர்கள் அதிகாரவர்கத்தின் நலனுக்காக மரணித்து மாண்டுபோன சமூகத்தைச் சார்ந்தவர்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜபக்ச லண்டன் வந்தபோது தெருவுக்கு வந்து ஆர்ப்பரித்தவர்கள். இனி ஜீ.டி,விக்குப் போக அதிக நேரமாகாது.

நிர்வாக ரீதியான பிரச்சினை ஒன்றுதான் இதற்குக் காரணம் என்றால் அதனைக் கையாளவதற்கு சில சட்டவரைமுறையும் நாகரீகமான நடைமுறையும் இருக்கிறது. தாதா பாணியில் அதனைச்செய்ய முடியாது.

http://inioru.com/?p=28541

யாழ்கள அகரன் ... இச்செய்தி தொடர்பாக ஏதாவது தெரிவிக்க விரும்புகிறாரா?????? :o

[size=1]சி.கு: களம் சப்பென்று போகக்கூடாது ... அனல் பறக்க வேண்டும் ... [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.