Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொலைந்து போன காதல்

Featured Replies

Bella_and_Edward_Twilight-2-1-1.jpg

மின்னல்கள் கூட இடைபிரிந்து

திசைவழியிறங்கி உனை தேடுகின்றன- என்

தொலைந்து போன காதலை

மீட்டுக்கொடுப்பதற்காய்.

- from my blog -

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல்கள் கூட இடைபிரிந்து

திசைவழியிறங்கி உனை தேடுகின்றன

இந்த வரிகளுக்குள் அர்த்தம் கண்டுபிடிக்க கஸ்டமா இருக்கே...

மின்னல்கள் கூட இடைபிரிந்து

அப்புறமா..

திசை வழியிறங்கி...

மின்னல் வந்து இடைபிரிந்தது என்றால் என்ன அர்த்தம்... பிறகு திசைவழி இறங்கி.. உனைத் தேடுகிறேன்...

மின்னல் வர இடைபிரிஞ்வரை.. ஏன்.. திசைவழி தேடனும்.. அருகில் தானே இருப்பினம்....????!

மேலும்.. உங்கள் காதலை மீட்டு யாரிடம் கொடுக்கப் போறீங்க... நீங்கள் தானே வைச்சுக்கனும்.. உங்க கூட...???????! இன்னொருவரின் காதலை தானே மீட்டு அவையட்ட கொடுக்கிறது...????!

மற்ற வழமாப் போட்டா

மின்னல்கள் கூட

அப்ப தான் இடைபிரிந்து...

திசை வழி இறங்கி..

தொலைந்து போன என் காதலை...

அதுக்குள்ள எப்படி தொலைஞ்சது காதல்..

அதை மீட்டு.. யாரட்டக் கொடுக்கப் போறீங்க.. ஓ.. மின்னல் பிரிக்க.. சேர்க்கிறதோ...

எப்படி போட்டுப் பார்த்தும்...

கருத்துப் பிடிபடல்ல.. அதனால கேட்டன்... நீங்கள் சொல்லாட்டிலும்..

சிலர் இதை லைக் பண்ணி இருக்காங்க.. அவங்களாவது சொல்லுறாங்களான்னு பார்ப்பம்...! :lol::D

Edited by nedukkalapoovan

மின்னல்கள் கூட இடைபிரிந்து

திசைவழியிறங்கி உனை தேடுகின்றன- என்

தொலைந்து போன காதலை

மீட்டுக்கொடுப்பதற்காய்.

என் மார்பில் நீ சாய்ந்தால்

பொறுக்காதே மேகத்திற்கு

துப்பியது மின்னலாய்

எம்மீது

வாழ்த்துக்கள் , சுயமான படைப்புகளிற்கு . மேலும் படைப்புக்கு ஒரு பச்சை .

*********** ஒருவர் சுயமாக ஒரு படைப்பைத் தரும்பொழுது அதில் வித்துவங்களைக் காட்டாது அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுததுவது எனது வழக்கம் . அதனால் காதலுக்கு ஒரு பச்சை .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

*********** ஒருவர் சுயமாக ஒரு படைப்பைத் தரும்பொழுது அதில் வித்துவங்களைக் காட்டாது அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுததுவது எனது வழக்கம் . அதனால் காதலுக்கு ஒரு பச்சை .

எனக்குப் புரியல்ல.. அது என் விளங்காத்தனமாக் கூட இருக்கலாம். இதில வித்துவத்தனம் காட்ட என்ன இருக்குது...

படைப்பாளி களத்தில் இருக்கும் போதுதான் வாசகர்கள் விளக்கம் கேட்கலாம்.

சிலர் அதி உச்ச வித்துவத்தனத்தோடு இதனை விளங்கிக் கொள்ளலாம். அது அவர்களின் திறமை. எமக்கு அந்தளவுக்கு திறமை இல்லை. அதுதான் கேட்கிறோம்..! :lol::D:icon_idea:

மேலும் படைப்பாளியை சரியான வகையில் ஊக்குவிக்கிறது தான்.. அவர் தன்னை முன்னேற்றிச் செல்ல உதவும். சிலருக்கு.. அர்த்தமே பிடிபடாதிருக்கும் வகையில் படைப்பு தென்படுறப்போ.. அதைச் சுட்டிக்காட்டுதல்.. அவர் அதனை மெருக்கூட்ட உதவுமே அன்றி.. சும்மா பாராட்டிட்டுப் போறது அவருக்கு தவறாக வழிகாட்டும்..! :icon_idea:

காதலில் பல கவிதைகளை இங்கும்.. அவரின் இணையத்திலும் படித்திருக்கிறேன். பாராட்டி இருக்கிறேன். அவை எனக்குப் புரிந்தன. ஆனால்.. இதில் பொருள் மயக்கமா இருக்குது. :)விளங்கல்ல...!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

  • தொடங்கியவர்

கருத்துப் பிடி படல்ல.. அதனால கேட்டன்... நீங்கள் சொல்லாட்டிலும்..

சிலர் இதை லைக் பண்ணி இருக்காங்க.. அவங்களாவது சொல்லுறாங்களான்னு பார்ப்பம்...! :lol::D

:lol: :lol:

மின்னல்கள் தொடர்ந்து நேர்கோட்டில் செல்லாமல் இடையில் பிரிஞ்சு பிரிஞ்சு பல பல திசைகளில் சென்று தான் பூமியை அடையும். அப்ப என் காதலன் எந்த பக்கம் இருக்கிறானோ எண்டு அவனை தேடிப்பிடிச்சு கொண்டு வந்து என்னோட சேர்த்து வைக்கலாம் எண்டு அவனை தேடித்திரியுது. :lol:

என்ட தொலைந்து போன காதலை (பிரிஞ்சு போன எம்மை) மீட்டு கொடுக்க போராடுது எண்டு சொல்ல வந்தன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மின்னலைத் தூது விடும்காதல் போலும்........... :D. [/size]

[size=1]

[size=4]...மின்னல் நேராக இறங்காமல் இடையிலே சில கிளைகளாக பிரிந்து [/size][/size][size=1]

[size=4].நீ இருக்கும் திசை நோக்கி ...........இறங்கி உன்னை தேடுகின்றன சேர்த்து வைக்கும் எண்ணத்துடன்.................[/size][/size]

  • தொடங்கியவர்

மின்னல்கள் கூட இடைபிரிந்து

திசைவழியிறங்கி உனை தேடுகின்றன- என்

தொலைந்து போன காதலை

மீட்டுக்கொடுப்பதற்காய்.

என் மார்பில் நீ சாய்ந்தால்

பொறுக்காதே மேகத்திற்கு

துப்பியது மின்னலாய்

எம்மீது

வாழ்த்துக்கள் , சுயமான படைப்புகளிற்கு . மேலும் படைப்புக்கு ஒரு பச்சை .

*********** ஒருவர் சுயமாக ஒரு படைப்பைத் தரும்பொழுது அதில் வித்துவங்களைக் காட்டாது அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுததுவது எனது வழக்கம் . அதனால் காதலுக்கு ஒரு பச்சை .

கோமகன் அண்ணாவுக்கு நன்றி. :)

அடடடடா கோமகன் அண்ணா என் திரிக்கு வந்ததுமில்லாமல் எனக்கு சார்பாக கதைத்திருக்கிறார். :D நன்றி அண்ணா. :) இன்று I'm happy. :lol:

என்ன தான் எழுதினாலும் நீங்கள், சுபேஸ் அண்ணா, கவிதை அண்ணா, நிழலி அண்ணா, நெடுக்ஸ் அண்ணா, புங்கையூரன் அண்ணா, விசுகு அண்ணா, அர்ஜுன் அண்ணா(அரசியல் எழுதினாலும் கவிதை ஆற்றல் இருக்கு) மற்றும் பலர் போல் எழுத தெரியாது. :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இநந்தப்பெண்களை நினைத்தால பபயமாக இருக்கு

மமின்னல் அடித்தால் ஓடித்தான் பழக்கம்

இங்க என்னவென்றால் தூது விடுகிறார்கள்.

உண்மையில் இதன் அர்த்தம் அவனை எரித்துவிடு என்பது தானே....???

(எனக்கில்லாதவன் எவருக்கம் வேண்டாம்)

  • தொடங்கியவர்

ம்ம்ம்

என்ன விசுகு அண்ணா, நீங்களும் வர வர நிழலி அண்ணா போல் மாறி போனியள். அவரை மாதிரி கா... என்று என்னை கூப்பிட்டியள். இப்ப அவரை மாதிரி ம்ம்ம் போடுறியள். :lol: :lol:

வருகைக்கும் ம்ம்ம் க்கும் நன்றி. :D:icon_idea:

இநந்தப்பெண்களை நினைத்தால பபயமாக இருக்கு

மமின்னல் அடித்தால் ஓடித்தான் பழக்கம்

இங்க என்னவென்றால் தூது விடுகிறார்கள்.

உண்மையில் இதன் அர்த்தம் அவனை எரித்துவிடு என்பது தானே....???

(எனக்கில்லாதவன் எவருக்கம் வேண்டாம்)

மின்னலடிச்சு எரிஞ்சு போக அவன் என்ன பனை ஓலையே? :lol::icon_idea:

கண்ணால் நேர மின்னலை பார்த்தால் கண் தான் குருடாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறன். தூது போற மின்னல் கண்ணை தாக்காது. பின் பக்கமாய் போய் கூட்டிக்கொண்டு வரும். :icon_idea:

[size=4]மின்னலைத் தூது விடும்காதல் போலும்........... . [/size]

[size=1][size=4]...மின்னல் நேராக இறங்காமல் இடையிலே சில கிளைகளாக பிரிந்து [/size][/size]

[size=1][size=4].நீ இருக்கும் திசை நோக்கி ...........இறங்கி உன்னை தேடுகின்றன சேர்த்து வைக்கும் எண்ணத்துடன்.................[/size][/size]

:lol:

நீங்கள் தான் அக்கா point ஐ பிடிச்சியள். டீச்சர் என்றால் அப்படி தான் இருக்க வேணும். ஒரு வேளை தமிழ் பாடத்துக்கு பதிலா காதல் பாடம் படிப்பிச்சு போட்டியளோ? :icon_idea:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தமிழில் காதலும் உண்டு ............. [/size][size=1] :D[/size]

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் இன்றுவரை புறா,மனிதன் என்று பல வாறு காதலுக்கு தூது விட்ட காலம் போய்..

இப்போ இயற்கையையே தூதுவிடும் காலம் வந்துட்டு அதுவும் இடி,மின்னல் என்றால் மனிதர்கள் அவற்றில் இருந்து சற்று விலத்தியே நடப்பது வளக்கம்...ஆனால் இங்கே காதலுக்கு தூதாக மின்னல்..சற்று வித்தியாசமான தூது..எதுவித தொடர்பும் இன்றி இருட்டுக்குள் இருப்பது போல் இருப்பவர்களை எந்த வெளிச்சம் கொண்டும் நாம் கண்டு கொள்ள முடிய இல்லை,தேடிக் கொள்ள முடிய இல்லை....பூமித் தாயின் மின்னலாவது திக்கு,திக்காய் வெளிச்சத்தை இடை பிரித்து கொடுத்து. அத்தனை திசைகளிலும் சென்று இந்தப் பூமி பந்தில் எங்கிருந்தாலும் தேடித் தரட்டும் என்ற எதிர்பார்பாகவும் இருக்கலாம் இல்லையா.....மின்னலின் தேடலாவது சந்தோசத்தைக் தரட்டும் ...காதலின் கவிதைக்கு உரிய விளக்கம் எனக்கு இப்படித் தான் புரிந்து கொள்ள முடிந்தது..

Edited by யாயினி

எனக்குப் புரியல்ல.. அது என் விளங்காத்தனமாக் கூட இருக்கலாம். இதில வித்துவத்தனம் காட்ட என்ன இருக்குது...

படைப்பாளி களத்தில் இருக்கும் போதுதான் வாசகர்கள் விளக்கம் கேட்கலாம்.

சிலர் அதி உச்ச வித்துவத்தனத்தோடு இதனை விளங்கிக் கொள்ளலாம். அது அவர்களின் திறமை. எமக்கு அந்தளவுக்கு திறமை இல்லை. அதுதான் கேட்கிறோம்..! :lol::D:icon_idea:

மேலும் படைப்பாளியை சரியான வகையில் ஊக்குவிக்கிறது தான்.. அவர் தன்னை முன்னேற்றிச் செல்ல உதவும். சிலருக்கு.. அர்த்தமே பிடிபடாதிருக்கும் வகையில் படைப்பு தென்படுறப்போ.. அதைச் சுட்டிக்காட்டுதல்.. அவர் அதனை மெருக்கூட்ட உதவுமே அன்றி.. சும்மா பாராட்டிட்டுப் போறது அவருக்கு தவறாக வழிகாட்டும்..! :icon_idea:

காதலில் பல கவிதைகளை இங்கும்.. அவரின் இணையத்திலும் படித்திருக்கிறேன். பாராட்டி இருக்கிறேன். அவை எனக்குப் புரிந்தன. ஆனால்.. இதில் பொருள் மயக்கமா இருக்குது. :)விளங்கல்ல...!

உங்களுக்கு விளங்கவில்லையென்பதற்காக எல்லோருக்கும் விளங்கவில்லையென்பது சிறுபிள்ளைத்தனம் . நான் விளங்கிக்கொண்டதால்தான் காதலுக்குப் பச்சை குத்தினேன் . நான் சொன்ன " வித்துவத்தனம் " என்பது எங்களின் அதி உயர் எதிர்பார்ப்பை புதியவர்களில் எதிர்பார்த்து ,அவர்களது முயற்சியை ஆரம்பத்தில் மழுங்கடிப்பது . இங்கு கருத்து எழுதியவர்கள் காதலின் கவிதையை புரிந்து கொண்டு தான் எழுதியுள்ளார்கள் . மேலும் கவிதைக்கு மொழி இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியாத விடையமல்ல .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இடை என்ற சொல்...பல அர்த்தங்களைத் தரும்.ஆகவே அந்த இடை என்ற சொல்லில் ஏற்பட்ட குளப்பமாகவும் இருக்கலாம்...

இடை: (1) நடுவிடம் middle place;

இடையறாத: நடுவில் விட்டுப் போகாத without any break, uninterrupted

இடைக்குறை: (இலக்) ஒரு சொல்லின் இடையிலுள்ள ஓர் எழுத்து மறைந்து நிற்றல் (gr) the dropping of a letter between the first and the last of a word; (கா.) 'எல்லாம்' என்பது 'எலாம்' என நிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விளங்கவில்லையென்பதற்காக எல்லோருக்கும் விளங்கவில்லையென்பது சிறுபிள்ளைத்தனம் . நான் விளிங்கிக்கொண்டதால்தான் காதலுக்குப் பச்சை குத்தினேன் . நான் சொன்ன " வித்துவத்தனம் " என்பது எங்களின் அதி உயர் எதிர்பார்ப்பை புதியவர்களில் எதிர்பார்த்து ,அவர்களது முயற்சியை ஆரம்பத்தில் மழுங்கடிப்பது . இங்கு கருத்து எழுதியவர்கள் காதலின் கவிதையை புரிந்து கொண்டு தான் எழுதியுள்ளார்கள் . மேலும் கவிதைக்கு மொழி இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியாத விடையமல்ல .

விளங்கிக் கொண்டதை விளங்கப்படுத்தி இருக்கலாமே. காதல் விளங்கப்படுத்திய பின் உங்க வித்துவத்தனத்தை நம்ம தயார் இல்லை.

நன்றி. :):lol:

:lol: :lol:

மின்னல்கள் தொடர்ந்து நேர்கோட்டில் செல்லாமல் இடையில் பிரிஞ்சு பிரிஞ்சு பல பல திசைகளில் சென்று தான் பூமியை அடையும். அப்ப என் காதலன் எந்த பக்கம் இருக்கிறானோ எண்டு அவனை தேடிப்பிடிச்சு கொண்டு வந்து என்னோட சேர்த்து வைக்கலாம் எண்டு அவனை தேடித்திரியுது. :lol:

என்ட தொலைந்து போன காதலை (பிரிஞ்சு போன எம்மை) மீட்டு கொடுக்க போராடுது எண்டு சொல்ல வந்தன். :icon_idea:

தொலைந்து போன காதலை தேடி.... மின்னலை தூதுவிடுறீங்களோ.

நல்லாத் தான் இருக்குது. :)

மின்னல் குறுகிய நேரம்.. தானே தேடும்.. அதுதான்.. பொருள் பிடிபடல்ல. நான் நினைச்சன் மின்னல் வழி சமைக்க.. அந்தக் குறுகிய நேரத்தில்.. அது காட்டிய வழி.. இறங்கி நீங்க விரைந்து தேடிறீங்கள் என்று...! அவ்வளவு.. ஆவல்.. என்று..! அதுதான்.. பொருள் மயக்கமா இருந்திச்சு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

[size=4]தமிழில் காதலும் உண்டு ............. [/size][size=1] :D[/size]

:D :D

ம்ம். அது தான் எல்லாரும் இலக்கணத்தை விட்டிட்டு இலக்கியத்தோட மினக்கடுறவை. :icon_idea:

அன்று தொடக்கம் இன்றுவரை புறா,மனிதன் என்று பல வாறு காதலுக்கு தூது விட்ட காலம் போய்..

இப்போ இயற்கையையே தூதுவிடும் காலம் வந்துட்டு அதுவும் இடி,மின்னல் என்றால் மனிதர்கள் அவற்றில் இருந்து சற்று விலத்தியே நடப்பது வளக்கம்...ஆனால் இங்கே காதலுக்கு தூதாக மின்னல்..சற்று வித்தியாசமான தூது..எதுவித தொடர்பும் இன்றி இருட்டுக்குள் இருப்பது போல் இருப்பவர்களை எந்த வெளிச்சம் கொண்டும் நாம் கண்டு கொள்ள முடிய இல்லை,தேடிக் கொள்ள முடிய இல்லை....பூமித் தாயின் மின்னலாவது திக்கு,திக்காய் வெளிச்சத்தை இடை பிரித்து கொடுத்து. அத்தனை திசைகளிலும் சென்று இந்தப் பூமி பந்தில் எங்கிருந்தாலும் தேடித் தரட்டும் என்ற எதிர்பார்பாகவும் இருக்கலாம் இல்லையா.....மின்னலின் தேடலாவது சந்தோசத்தைக் தரட்டும் ...காதலின் கவிதைக்கு உரிய விளக்கம் எனக்கு இப்படித் தான் புரிந்து கொள்ள முடிந்தது..

அதே தான் அக்கா. :)

  • தொடங்கியவர்

இடை என்ற சொல்...பல அர்த்தங்களைத் தரும்.ஆகவே அந்த இடை என்ற சொல்லில் ஏற்பட்ட குளப்பமாகவும் இருக்கலாம்...

இடை: (1) நடுவிடம் middle place;

இடையறாத: நடுவில் விட்டுப் போகாத without any break, uninterrupted

இடைக்குறை: (இலக்) ஒரு சொல்லின் இடையிலுள்ள ஓர் எழுத்து மறைந்து நிற்றல் (gr) the dropping of a letter between the first and the last of a word; (கா.) 'எல்லாம்' என்பது 'எலாம்' என நிற்கும்.

:o :o :o

ஆம் அக்கா. :)

ஆனால் நான் நிலா அக்கா சொன்னது போல் மின்னல் இடையிடையே கிளைகளாக பிரிந்து செல்கிறது என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தேன். :)

தொலைந்து போன காதலை தேடி.... மின்னலை தூதுவிடுறீங்களோ.

நல்லாத் தான் இருக்குது. :)

மின்னல் குறுகிய நேரம்.. தானே தேடும்.. அதுதான்.. பொருள் பிடிபடல்ல. நான் நினைச்சன் மின்னல் வழி சமைக்க.. அந்தக் குறுகிய நேரத்தில்.. அது காட்டிய வழி.. இறங்கி நீங்க விரைந்து தேடிறீங்கள் என்று...! அவ்வளவு.. ஆவல்.. என்று..! அதுதான்.. பொருள் மயக்கமா இருந்திச்சு..! :icon_idea:

படங்களில் ஹீரோ மார் பறந்து பறந்து சண்டை பிடிக்கும் போது நாங்கள் மின்னலை தூது விடலாம் தானே. :lol:

நான் தேட வெளிக்கிட்டால் இந்த ஜென்மத்தில் கண்டு பிடிக்க ஏலாது. :icon_idea:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

மின்னலிடை என்று கவிஞர்கள் பாடியதுண்டு மின்னலிற்கு இடையை பிரித்தது நீங்கள்தான் தொடருங்கள். :)

  • தொடங்கியவர்

மின்னலிடை என்று கவிஞர்கள் பாடியதுண்டு மின்னலிற்கு இடையை பிரித்தது நீங்கள்தான் தொடருங்கள். :)

:lol: :lol:

இதை கேட்டு மின்னல் தற்கொலை பண்ண போகுது. :lol: இடை என்பதை நான் கிளை என்று போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கலாம்.

சாத்திரி அண்ணாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

:o :o :o

ஆம் அக்கா. :)

ஆனால் நான் நிலா அக்கா சொன்னது போல் மின்னல் இடையிடையே கிளைகளாக பிரிந்து செல்கிறது என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தேன். :)

இடை என்ற சொல்லுக்கு 20ற்கும் அதிகமான வெற்வேறு அர்த்தங்கள் இருக்கிறது...எல்லாவற்றையும் இங்கே கொண்டு வந்து பதிந்தால் ஆ....இவா ஒருத்தி வகுப்பு எடுக்க வந்துட்டா என்று யாரும் சொல்லிடக் கூடாது அல்லவா..அதனால் தான் உதாரணத்திற்கு சிலவற்றோடு நிறுத்தினேன் காதல்...ஆம் நீங்கள் மின்னல் பற்றி சொல்ல வந்த விதத்தையும் புரிந்து கொண்டேன்..

ஆம். நான் ஒண்டும் சொல்ல மாட்டன். :) மற்றவர்கள் சொல்வார்கள். :D

நீங்கள் மின்னல் பற்றி புரிந்து கொண்டது உங்கள் முதல் கருத்திலேயே தெரிகிறதே. :)

  • கருத்துக்கள உறவுகள்

என் முதல் முத்தம்

அவன் மூளையை

மின்னல் வேகத்தில் தாக்கியது.....

(படத்தில் மின்னல் ஆணின் தலைப்பபகுதியை தாக்குகின்றது....கி...கி..)

  • தொடங்கியவர்

என் முதல் முத்தம்

அவன் மூளையை

மின்னல் வேகத்தில் தாக்கியது.....

(படத்தில் மின்னல் ஆணின் தலைப்பபகுதியை தாக்குகின்றது....கி...கி..)

உங்கள் கவிதை நன்றாக உள்ளது. :) நன்றி வருகைக்கும் உங்கள் கவிதைக்கும். :)

படத்தில் இருப்பது காதலர்களின் நினைவுகளே அன்றி காதலர்கள் அல்ல. :D அப்ப மின்னல் தாக்கினாலும் தலைக்கு சேதாரமில்லை. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Bella_and_Edward_Twilight-2-1-1.jpg

உன் பரிசம் பட்டதும்

ஆயிரம் கோடி வால்ட் மின்சாரமாய்

பாய்கிறது என் மகிழ்ச்சி....!

அதில்..

நீயோ நாண..

சிவக்கும் என் வதனமோ..

விம்பமாய் வீழ்கிறது

நீல வானக் கண்ணாடியில்...!

எம்மிருவர் நெருக்கம் கண்டு..

மேகங்களும் பொறாமையில்

ஒன்றை ஒன்று உரச

மின்னல் என்னை

தாக்குகிறது..

இருந்தும் பிரியேன்

உயிரே...

உன்னை விட்டு என்றும்..!

(சும்மா ஒரு கற்பனை) :)

இந்த இயற்கை காட்சி என்னைக் கவர்ந்திருந்தது. அதனால்.. வந்தது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Bella_and_Edward_Twilight-2-1-1.jpg

இயற்கையின் படைப்பில்,

இரண்டே முனைகள்!

வாங்க ஒன்று!

வழங்க இன்னொன்று!

வாங்கலும், வழங்கலும்,

அர்த்தனாரீஸ்வரமாக,

இன்னொரு படைப்பு,

நிகழ்கிறது!

அருமையான கவிதைக்கு நன்றிகள், காதல்!

தொடர்ந்து எழுதுங்கள்!

,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.