Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி நண்பர்

Featured Replies

ஸ்டாக்ஹோல்ம் செல்வதற்கான விமானம் 86 வது நுழைவாயிலில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், மெதுவாக நானும் என் மனைவி அம்முவும் கைக்கோர்த்துக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று. என ஒவ்வொன்றாக , கடந்தபடி 70 வது நுழைவாயில் வரை வந்தாகிவிட்டது. கண்ணாடி சுவர்களின் வழியாக குழந்தைகளும் , இளைஞர்களும் , நடுத்தர வயது மக்களும், விமானம் வந்து நிற்பதை அது புறப்படுதை வியப்பாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விமானங்களில் எத்தனை முறை பறந்தாலும், விமானங்கள் தரையில் ஓடும்பொழுதும் தலைக்கு மேலேப் பறக்கும் பொழுதும் தலைசாய்த்து பார்ப்பதும் ஒரு சுவாரசியந்தான். அவர்களுடன் அம்முவும் சேர்ந்து கொண்டது மனநிலையை மேலும் ரம்மியமாக்கியது.

குட்டிநகரமே இந்த ஜூரிச் விமானநிலையத்தில் இருப்பதைப் போன்ற ஒரு பிரம்மாண்டம். ஈரோ - ரூபாய் மதிப்பு மாற்றம் நினைவிற்கு வந்ததால் ஆடைகள் விற்கும் பகுதியைத் தவிர்த்து அம்மு சுவிட்சர்லாந்து கேட்ட சாக்லேட்டுகளையும் சில வாழ்த்து அட்டைகளையும் வாங்கிக் கொண்டு, மேலும் சில நுழைவாயில்கள் கடந்து , ஒரு காப்பிக்கடைக்கு எதிரே விலைப்பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது,

”என்ன சாப்பிடுறீங்க” என்பதை ஈழத்துத் தமிழ் உச்சரிப்பில் ஒருவர் கடையினுள் இருந்து கேட்டார். வலிகள் வேதனைகளுடன் தமிழையும் போகும் இடமெல்லாம் கொண்டு சென்றவர்கள் ஈழத்தவர்கள். என்னைப்பொறுத்தவரை சுந்தரத் தமிழ் , ஈழத்துத் தமிழ்தான்.

நாங்கள் கேட்ட காப்பிச்சினோவை அவர் கொடுக்கும்பொழுது கையில் புலிப் படத்தைப் பச்சைக் குத்தி இருந்ததைப் பார்த்த அம்மு என்னை இடுப்பில் குத்தினாள். ஆண் குழந்தை பிறந்தால் திலீபன் எனவும் பெண் குழந்தை பிறந்தால் இசைப்பிரியா எனவும் பெயர் வைக்க இப்பொழுதே நான் முடிவு செய்து வைத்துள்ள அளவுக்கு புலிகளைப் பிடிக்கும் என்பது அம்முவிற்குத் தெரியும். இருந்தாலும் அம்முவிற்கு இதில் இருக்கும் நுட்பமான உணர்வுகள் புரியாது, அவளைப் பொறுத்தமட்டில் ஐரோப்பிய பாஸ்போர்ட் கிடைக்கும் வரை, இந்திய இறையாண்மைக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது.

நாங்கள். எவ்வளவு வற்புறுத்தியும் அந்த புலி நண்பர் காசு வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.

”தினமும் ஒரு தமிழனையாவது சந்தித்துவிடுவேன்... ஒரு சின்ன திருப்தி அவர்களுக்கு காப்பியோ அல்லது அவர்கள் விரும்பும் ஏதோ ஒன்றைத் தந்து தமிழில் கதைப்பது”

“நடிகர்களைப் பார்த்து இருக்கிறீர்களா” இது அம்மு, அவளின் அடுத்த கேள்வி சூரியாவைப் பார்த்து இருக்கிறீர்களா என்பதுதான்..

”நிறைய நடிகர் நடிகைகள் வருவாங்க, அவர்களை எல்லாம் கண்டுக்க மாட்டேன்... நான் பேச விரும்புவது சாமானிய மனிதர்களிடந்தான்”

“தலைவர் உயிரோட இருக்காரா?” எந்த ஈழத்தமிழரை ஐரோப்பாவில் சந்தித்தாலும் நான் மறக்காமல் கேட்கும் கேள்வி இதுதான்.

“தெரியாது, ஆனால் உங்கட இந்தியா, தலைவரை அந்தமான் தீவுகளில் எங்கேயாவது பாதுகாப்பாக வைத்திருக்குமோ என உள்மனது அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கு”

ஏற்கனவே எனக்குத் தெரிந்து இருந்த விசயங்கள் என்றாலும் புலிகளின் ஈழத்து அரசாங்கத்தின் ஒழுக்கம், நேர்மை , நிர்வாகம் என அவர் தொடர்ந்து பேசியதைக் கேட்க சுவாரசியமாகத்தான் இருந்தது.

“எத்தனை வருஷமா இந்தக் கடை இங்கு வச்சிருக்கீங்க”

“இது என் கடை இல்லை தம்பி, நான் இங்க வேலைப் பார்க்கிறேன், 20 வருஷமா இங்கடதான் வேலை செய்யுறேன் !! “

ஸ்டாக்ஹோல்ம் விமானத்திற்கு அழைப்பு வர, மின்னஞ்சல் முகவரிகளைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்றோம்.

விமானஇருக்கையில் சன்னலின் வெளியே வேடிக்கைப் பார்த்தபடி

“என்னதான் டைகர்ஸோட டிசிப்ளினோ, ஹானஸ்டியோ ... எதிக்ஸோ ... முதலாளியை ஏமாத்திவிட்டு வர்றவன் போறவனுக்கு எல்லாம் காப்பி கொடுக்கிற எத்திக்ஸ்.. ஒரு நாளைக்கு 10 பிராங்க்னு வச்சிக்கிட்டா ஒரு மாசத்துக்கு 250 பிராங்க், 20 வருஷத்துக்கு எத்தனை பிராங்க்

முதலாளியை அந்த ஆளு ஏமாத்திருக்காரு, கடைத் தேங்கா வழிப்பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருது, .. இதுல எதுக்குமே யூஸ் இல்லாத தமிழ் ஃபீலிங்ஸ் வேற !!!” அம்மு பொரிந்து தள்ளினாள்.

நான் பதில் பேசவில்லை. அவர் எனக்கு மின்னஞ்சல் எழுதிக் கொடுத்து இருந்த தாளைத் திருப்பிப் பார்த்தேன். அது நாங்கள் குடித்த காப்பிக்கான பில். அம்முவின் கவனம் கண்ணாடி சுவருக்கு அப்பால் இருந்த விமானங்களின் மேல் அலைபாய்ந்து கொண்டிருந்த பொழுது புலி நண்பர் எங்களுக்கான காசை அவரின் பாக்கெட்டில் இருந்து எடுத்து கல்லாவில் போட்டதையும் , அதற்கான பில்லை அச்சிட்டதையும் நான் கவனித்து இருந்தேன். அம்மு சொன்ன அதே கணக்குதான் ஆனால் புலி நண்பர் தன்னிடம் இருந்து கொடுத்து இருக்கிறார், வெறும் தமிழ் உணர்வுக்காக !!!

http://vinaiooki.blo.../blog-post.html

Edited by அபராஜிதன்

[size=4]இந்தக்கதையில் எனக்கு பிடித்த வரிகள்.[/size]

புலி நண்பர் எங்களுக்கான காசை அவரின் பாக்கெட்டில் இருந்து எடுத்து கல்லாவில் போட்டதையும் , அதற்கான பில்லை அச்சிட்டதையும் நான் கவனித்து இருந்தேன். அம்மு சொன்ன அதே கணக்குதான் ஆனால் புலி நண்பர் தன்னிடம் இருந்து கொடுத்து இருக்கிறார், வெறும் தமிழ் உணர்வுக்காக !!!
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் அபராஜிதன்..

புல்(லி) அரிக்குது .

  • தொடங்கியவர்

இவரை பற்றி மேலும்

கூகிள் நிருவனத்தால் வருடம்தோறும் வழங்கபடும் புலமை பரிசில் இந்த ஆண்டு ஐரோப்பாவில் பெற்றவர்களில்(20பேர் sorry 10 பேர் ) இவர் ஒருவர் தான் தமிழர் இவரைபற்றிய மேலதிக தகவல்கள் முடிந்தால் பின்னர் இணைக்கிறன்

Edited by அபராஜிதன்

கூகிள் நிருவனத்தால் வருடம்தோறும் வழங்கபடும் புலமை பரிசில் இந்த ஆண்டு ஐரோப்பாவில் பெற்றவர்களில்(20பேர்) இவர் ஒருவர் தான் தமிழர் இவரைபற்றிய மேலதிக தகவல்கள் முடிந்தால் பின்னர் இணைக்கிறன்

[size=4]அப்படியானால் இது உண்மைக்கதை?[/size]

[size=4]கூகிள் மூலம் புலமைப்பரிசில் பெற்ற ஒரு தமிழருக்கு இவ்வளவு உணர்வு உள்ளது என்பது மிகவும் பெரிய நம்பிக்கையை தருகின்றது. இவரைப்பற்றி இணையுங்கள். [/size]

  • தொடங்கியவர்

முகநூலில் இவரினை பற்றி பகிர்ந்து இருந்தவர்கள் தேடிபார்க்கிறன்

Edited by அபராஜிதன்

முகநூலில் இவரினை பற்றி பகிர்ந்து இருந்தவர்கள் தேடிபார்க்கிறன்

[size=4]நன்றி அபராஜிதன்.[/size]

[size=4]இன்னொரு விடயம். நாங்கள் இந்த உணர்வுத்தமிழனை போல முன்னோக்கி செல்லுவோம். சொறிகள் எல்லாத்திற்கும் அதுதான் மருந்து.[/size]

  • தொடங்கியவர்

ஒரு உணர்வு பூர்வமான சம்பவத்தை கொச்சை படுதினதால கொஞ்சம் கடுப்ஸ் ஆகிட்டன் sorry : :D

[size=5]அழகான அனுபவ பதிவு , நன்றி [/size]

  • கருத்துக்கள உறவுகள்

...”என்ன சாப்பிடுறீங்க” என்பதை ஈழத்துத் தமிழ் உச்சரிப்பில் ஒருவர் கடையினுள் இருந்து கேட்டார். வலிகள் வேதனைகளுடன் தமிழையும் போகும் இடமெல்லாம் கொண்டு சென்றவர்கள் ஈழத்தவர்கள். என்னைப்பொறுத்தவரை சுந்தரத் தமிழ் , ஈழத்துத் தமிழ்தான்...

உண்மை.. !

சென்ற வருடம் ஜெர்மனியில் இருந்தபொழுது, அச்சிறிய தொழிற்நகரத்தில் எங்காவது தமிழை கேட்போமா, தமிழ் உணவு கிடைக்குமாவென தவித்தது உண்மைதான்.. !

ஒரு நாள், உடன் வந்த ஜெர்மனியருடன் நகரத்தில் கடைவீதிகளில் உலா வருகையில் சிக்னல் சந்திப்பில் எங்களைக் கடந்து ஒரு வயதான தம்பதியினர், ஈழத்தமிழில் கதைத்தவாறே எதிரே வந்துகொண்டிருந்தனர்...இருநாட்களாக தமிழே கேட்டிராத எனக்கு, அடிமனதில் எங்கோ சில்லென்ற உணர்வும், உற்சாகமும், குறுகுறுப்பும்..! சடுதியில் ஏறி மறைந்த அந்த எழுச்சியை விவரிக்க இயலாதது. :icon_mrgreen:

அவர்களும் என்னை சிறிது உற்று நோக்கிவிட்டு புன்னகையுடன் கடந்துவிட்டனர்... நான் மனம் கேளாமல் சாலையின் மறுபுறம் அடைந்தவுடன் அந்த தம்பதியினர் தூரத்தில் மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தேன்..

ஒரு நிமிடம் அவர்களோடு பேசி இருக்கலாமே என தங்கியிருந்த விடுதிவரை அங்கலாய்ப்புடன் நடந்து சென்றேன்...

அன்றைய இரவில்தான் நமது கோம்ஸும், தமிழ் சிறியும் என்னிடம் ஈழத் தமிழிலில் கதைத்தனர். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]நல்ல பகிர்வு அபராஜிதன்,நன்றி [/size]

இணைப்புக்கு நன்றி அபராஜிதன்.

  • தொடங்கியவர்

Previous Scholars

The Google Lime Scholarship for Students with Disabilities was first launched in 2009 in the United States and Canada. In 2010, the programme has successfully expanded to Europe.

Google is proud to recognise the alumni of the Google Europe Scholarship for Students with Disabilities programme

The 2012 Scholarship Recipients

  • Joey Angeren, Utrecht University, Netherlands
  • William Gatens, University of Liverpool, United Kingdom
  • Franziska Huth, Saarland University, Germany
  • Katherine Leonard, University of Oxford, United Kingdom
  • Denis (Donnacha) McCarthy, University College Cork, Ireland
  • Davide Mulfari, University of Messina, Italy
  • Pawel Orzechowski, Heriot-Watt University, United Kingdom
  • Martin Pistorius, University of Hertfordshire, United Kingdom
  • [size=5]Selvakumar Ramachandran, University of Roma Tor Vergata, Italy[/size]

  • Marian Rusu, University of Bacau, Romania

http://www.google.com/studentswithdisabilities-europe/winners.html

[size=5][size=4]நன்றி அபராஜிதன். இவர் கற்கும் பல்கலைக்கழத்தில் தேடியபொழுது இது கிடைத்தது. [/size][/size]

[size=5]Dealing with Selvakumar Ramachandran be a challenge for anyone, because this ethnic Tamil Indian boy who friends affectionately call Roman "Selvone" speaks five languages​​, play sport, is the author of two books of short stories in English, Swedish and in its original language, as well as successful engineer. He is doing a PhD at the University of Rome Tor Vergata. [/size]

[size=5]His disability? "When I was a year I got polio in both legs and are paralyzed, so I never walked."[/size]

http://www.lastampa.it/_web/cmstp/tmplrubriche/blog/grubrica.asp?ID_blog=211&ID_articolo=422

[size=4]சாதாரணமாக ஒரு வேலை கூகிளில் பெறுவதற்கு பத்து வரையான பரீட்சைகள் / நேர்முகத்தேர்வுகளை சந்திக்கவேண்டும் என்பார்கள். இவர் அவர்களின் புலமைப்பரிசிலையே பெற்றுள்ளார்.[/size]

[size=4]இவரது வெற்றி பல புலன்குறைந்த தமிழ் உறவுகளுக்கு நம்பிக்கை தருவாதாக இருக்கும்[/size].

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் வளரணும்

தன்னை உயர்த்தணும்

அதுவே அவனது தாயகவிடுதலையை முன்னோக்கி தள்ளும்

இந்தத்தமிழனுக்காய்பெருமைப்படுகின்றேன்

சும்மா இருப்பதைக்காட்டிலும் எதையாவது செய்யத்துடிப்பவன் செய்பவனே எமக்கு வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி அபராஜிதன் அண்ணா. :)

[size=4]"தானும் வளரவேண்டும், சக உறவுகளையும் வளர்க்கவேண்டும் - அதுதான் வளர்ச்சி"[/size]

[size=4]இந்த உறவின் பதிவு ஒன்று அதை உறுதிப்படுத்துகின்றது. [size=5] [/size][/size]

[size=4]================================================================================[/size]

[size=4]இத்தாலிய தலைநகர் ரோமில் மூன்று முக்கிய பல்கலைகழகங்கள் உள்ளன. அவற்றில் ரோமா பல்கலைகழகம் - தோர் வெர்கட்டா வில் (http://web.uniroma2.it/home.php ) ஆராய்ச்சிப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித் தொகைகள் தோராயமாக 70,000 ரூபாய் மதிப்பில் கிடைக்கும். [/size]

[size=4]மருத்துவம் , பொறியியல், உயிர் தொழில்நுட்பம், கலை, அறிவியல், பொருளாதாரம், மேலாண்மை, வரலாறு, மொழியியல், தகவல் பாதுகாப்பு என அனைத்துத் துறைகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தாலியில் ஆராய்ச்சிப்படிப்புகளில் ஆங்கிலம் தான் பயன்படுத்தப்படுகின்றது. [/size]

[size=4]உதவித்தொகை மற்ற நாடுகளைக்காட்டிலும் குறைவு என்றாலும் தரத்தில் ஏனைய ஐரோப்பியப் பல்கலை கழகங்களுக்கு இணையானதே !!! [/size]

[size=4]நான் இந்தப் பல்கலைகழகத்தில் தான் தகவல் பாதுகாப்புத் துறையில் எனது ஆராய்ச்சிப்படிப்பைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். எனது ஆராய்ச்சிக்கூடத்திலும் ஓர் இடம் காலியாக உள்ளது. [/size]

[size=4]விண்ணப்பங்களுக்கான விதிமுறைகள், தகுதி நிர்ணயம் ஆகியன கீழ்க்காணும் சுட்டியில் உள்ளது. [/size]

[size=4]http://dottorati.uni...&view=articl...

விண்ணப்பிக்க கடைசித் தேதி - மே 2.

<http://dottorati.uni...&view=articl...>[/size]

[size=4]தமிழ்நாட்டில் படித்த மாணவர்களுடன் ஏற்கனவே ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகளில் மேற்படிப்பு படித்த தமிழ் மாணவர்கள் விண்ணப்பிக்கும்படி

கேட்டுக்கொள்கின்றேன். மருத்துவம் சார்ந்தத் துறைகளில் ஆராய்ச்சிப்படிப்பிற்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. [/size]

[size=4]அடுத்த கல்விவருடத்தில், ரோம் நகரத்தில் தமிழ் குரல்களின் எண்ணிக்கை அதிகம் ஆக வேண்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக இத்தமிழ் வையகம் ... விபரங்களைத் தமிழில் பிற தமிழ்நாட்டு, தமிழ் பேசும் மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. [/size]

[size=4]அனைவருக்கும் வாழ்த்துகள். [/size]

[size=4]விண்ணப்பிக்க கடைசித் தேதி - மே 2.

<http://dottorati.uni...&view=articl...>[/size]

விண்ணப்பிக்கும் கடைசி திகதி (2 may 2012) முடிந்து விட்டது. ஆனாலும் இது பற்றிய தகவல்களை வழங்கியதன் மூலம் நாமும் தெரிந்து கொண்டோம். நன்றி.

இணைப்புக்கு நன்றி அபராஜிதன்.

அர்யுன் அண்ணா புலி புலிதான் நரி நரிதான் என்ன செய்வது.

"தானும் வளரவேண்டும், சக உறவுகளையும் வளர்க்கவேண்டும் - அதுதான் வளர்ச்சி"

இந்த உறவின் பதிவு ஒன்று அதை உறுதிப்படுத்துகின்றது.

================================================================================

இத்தாலிய தலைநகர் ரோமில் மூன்று முக்கிய பல்கலைகழகங்கள் உள்ளன. அவற்றில் ரோமா பல்கலைகழகம் - தோர் வெர்கட்டா வில் (http://web.uniroma2.it/home.php ) ஆராய்ச்சிப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித் தொகைகள் தோராயமாக 70,000 ரூபாய் மதிப்பில் கிடைக்கும்.

மருத்துவம் , பொறியியல், உயிர் தொழில்நுட்பம், கலை, அறிவியல், பொருளாதாரம், மேலாண்மை, வரலாறு, மொழியியல், தகவல் பாதுகாப்பு என அனைத்துத் துறைகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தாலியில் ஆராய்ச்சிப்படிப்புகளில் ஆங்கிலம் தான் பயன்படுத்தப்படுகின்றது.

உதவித்தொகை மற்ற நாடுகளைக்காட்டிலும் குறைவு என்றாலும் தரத்தில் ஏனைய ஐரோப்பியப் பல்கலை கழகங்களுக்கு இணையானதே !!!

நான் இந்தப் பல்கலைகழகத்தில் தான் தகவல் பாதுகாப்புத் துறையில் எனது ஆராய்ச்சிப்படிப்பைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். எனது ஆராய்ச்சிக்கூடத்திலும் ஓர் இடம் காலியாக உள்ளது.

விண்ணப்பங்களுக்கான விதிமுறைகள், தகுதி நிர்ணயம் ஆகியன கீழ்க்காணும் சுட்டியில் உள்ளது.

http://dottorati.uni...&view=articl...

விண்ணப்பிக்க கடைசித் தேதி - மே 2.

<http://dottorati.uni...&view=articl...>

தமிழ்நாட்டில் படித்த மாணவர்களுடன் ஏற்கனவே ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகளில் மேற்படிப்பு படித்த தமிழ் மாணவர்கள் விண்ணப்பிக்கும்படி

கேட்டுக்கொள்கின்றேன். மருத்துவம் சார்ந்தத் துறைகளில் ஆராய்ச்சிப்படிப்பிற்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.

அடுத்த கல்விவருடத்தில், ரோம் நகரத்தில் தமிழ் குரல்களின் எண்ணிக்கை அதிகம் ஆக வேண்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக இத்தமிழ் வையகம் ... விபரங்களைத் தமிழில் பிற தமிழ்நாட்டு, தமிழ் பேசும் மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைவருக்கும் வாழ்த்துகள்.

அகூதா, இதை தனித் திரியாகவும் போடுங்கள்.

பலருக்கு உதவி செய்யக் கூடிய இணைப்புகளில் ஒன்று இது

இவரின் இணைப்புகள் போய் பார்தேன் .நல்லதொரு வலைப்பதிவு.

ஆனால் கதை மொக்கை .இவர் பிளேன் ஏறேக்க அவர் போக்கேட்டில் இருந்து காசு போடுவதை பார்த்தாராம் .கிட்டதட்ட கருணாநிதி லெவலில் தான் கதை சொல்லுகின்றார் .

இவரின் இணைப்புகள் போய் பார்தேன் .நல்லதொரு வலைப்பதிவு.

ஆனால் கதை மொக்கை .இவர் பிளேன் ஏறேக்க அவர் போக்கேட்டில் இருந்து காசு போடுவதை பார்த்தாராம் .கிட்டதட்ட கருணாநிதி லெவலில் தான் கதை சொல்லுகின்றார் .

அப்படி எழுதியிருந்தால் கூட உங்களை விட அதிகமாக ரீல் விட்டிருக்க மாட்டார். :lol:

ஆனால் இங்கு நீங்கள் புரிந்து கொண்டது தான் தவறு. :) அவர் ஏற்கனவே (விமானத்தில் ஏற முன்னர் ) அவதானித்ததை பற்றி விமானத்தில் ஏறியதும் விமான இருக்கையிலிருந்து யோசிக்கிறார். (மின்னஞ்சல் எழுதிக் கொடுத்து இருந்த தாளைத் திருப்பிப் பார்க்கும் போது அவருக்கு நினைவு வந்தது)

உங்களுக்கு நித்திரை வர வேணும் எண்டதுக்காக இப்பிடியெல்லாம் சும்மா சும்மா பழி போடக்கூடாது. சொல்லிப்போட்டன். :D

--------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்டாக்ஹோல்ம் விமானத்திற்கு அழைப்பு வர, மின்னஞ்சல் முகவரிகளைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்றோம்.

விமானஇருக்கையில் சன்னலின் வெளியே வேடிக்கைப் பார்த்தபடி

“என்னதான் டைகர்ஸோட டிசிப்ளினோ, ஹானஸ்டியோ ... எதிக்ஸோ ... முதலாளியை ஏமாத்திவிட்டு வர்றவன் போறவனுக்கு எல்லாம் காப்பி கொடுக்கிற எத்திக்ஸ்.. ஒரு நாளைக்கு 10 பிராங்க்னு வச்சிக்கிட்டா ஒரு மாசத்துக்கு 250 பிராங்க், 20 வருஷத்துக்கு எத்தனை பிராங்க். முதலாளியை அந்த ஆளு ஏமாத்திருக்காரு, கடைத் தேங்கா வழிப்பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருது, .. இதுல எதுக்குமே யூஸ் இல்லாத தமிழ் ஃபீலிங்ஸ் வேற !!!” அம்மு பொரிந்து தள்ளினாள்.

நான் பதில் பேசவில்லை. அவர் எனக்கு மின்னஞ்சல் எழுதிக் கொடுத்து இருந்த தாளைத் திருப்பிப் பார்த்தேன். அது நாங்கள் குடித்த காப்பிக்கான பில். காப்பி தயாராகும் இடைவெளியில், அம்முவின் கவனம் கண்ணாடி சுவருக்கு அப்பால் இருந்த விமானங்களின் மேல் அலைபாய்ந்து கொண்டிருந்த பொழுது புலி நண்பர் எங்களுக்கான காசை அவரின் பாக்கெட்டில் இருந்து எடுத்து கல்லாவில் போட்டதையும் , அதற்கான பில்லை அச்சிட்டதையும் ஏற்கனவே நான் கவனித்து இருந்தேன். அம்மு சொன்ன அதே கணக்குதான் ஆனால் புலி நண்பர் தன்னிடம் இருந்து கொடுத்து கொண்டே இருக்கிறார்,

வெறும்

தமிழ் உணர்வுக்காக !!!

http://vinaiooki.blogspot.ca/

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அர்ஜுன் அண்ணாவின் பிரச்சினைகள் உங்களுக்கு விளங்கியிருக்கும்தானே??!! :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.