Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மாவையும் மனைவியையும் ஒப்பிடும் பல ஆண்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

"அம்மாவையும் மனைவியையும் ஒப்பிடும் பல ஆண்கள்" என்று தலைப்பை மாற்றியுள்ளேன். இதுவும் பிழை என்றால் வேறு தலைப்பை கூறுங்கள். மாற்றுகிறேன்.

Edited by துளசி

  • Replies 62
  • Views 17.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதில ஜீவாவின் கருத்து தான் என்ட கருத்தும்... தற்போது ஊரிலும் சரி,இங்கேயும் சரி சாப்பாட்டுக்காக கணவன் மனைவியை எதிர் பார்த்துக் காத்திருப்பதில்லை...பிள்ளைகளை பாடசாலையால் கூட்டி வந்து ரீயூசனுக்கு கூட்டிப் போகின்ற வேலைகளை பெரும்பாலும் மனைவி செய்ய சமையலை கணவர் செய்கிறார்...இங்கு அநேகமாக பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் அப்படி மனைவி வேலைக்குப் போகாத வீட்டிலும் கூட சில நேரத்தில் கணவர் தான் சமைக்கிறார்[அன்று தான் நல்ல சாப்பாடு சாப்பிடுவாங்களோ :D ]...உடுப்பு விடயத்தில் கூட அநேக ஆண்கள் தங்கள் மனைவிமார் வடிவாக வெளிக்கிட்டு போறதையே விரும்புவார்கள்.அதைப் போடாதே,இதைப் போடாதே என்று தடுக்கின்ற ஆண்கள் குறைவு...ஆண் பிள்ளைகள் மீதே சின்னனில் இருந்து அம்மாமார் பாசம் வைத்திருப்பினம் அதே ஆண்கள் வளர்ந்த பின்னர் அம்மா மாதிரி தன் மீது அன்பு செலுத்தக் கூடிய பெண்ணையே எதிர் பார்ப்பினம் ஏன் என்டால் ஆண்களுக்கு எப்பவும் சுயமாய் நிற்கத் தெரியாது :lol::rolleyes:

:lol: :lol: ஆண்களுக்கு ஆதரவா கதைச்சுப்போட்டு கடைசியில் கவிழ்த்துப்போட்டியளே. :icon_idea:

சாப்பாடு, உடை என்பது வெறும் உதாரணம் தான். வேறு பல அலுவல்களிலும் அம்மாவை ஒப்பிட்டு கதைப்பார்கள். (எல்லாரும் அல்ல.)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை சொன்னதுபோல எனது அம்மாவைப் போலத்தான்

எனக்கும் மனைவியும் கிடைத்திருக்கின்றா.

அம்மா என்பவர் தான் எமக்கு எல்லாம்.

அவரைப்போல ஒரு மனைவியைப் பெற்றுக் கொள்வதற்கு

எல்லோரும் தவம் செய்திருக்க வேண்டும்.

அதேபோல என் அம்மாவைப் போல எனக்குப் பிள்ளைகளும்

கிடைத்திருக்கின்றார்கள்.

அதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ இப்படி அல்லவா காலம் மாறிட்டு வருகிறது..தமணா,அசின்,பாவனா போன்ற பெண்களைத் தான் ஆண்களுக்கு பிடிக்கும்..விரல் விட்டு எண்ணக் கூடிய ஆண்களே அம்மா போல் துணை வேண்டும் என்று எதிர் பார்ப்பது..அதுவும் சரி வராட்டிக்கு ரட்டா காட்டிட்டு போவது தான்.

உங்களுக்கு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. நன்றி வருகைக்கும் கருத்திற்கும். :)

  • தொடங்கியவர்

இப்போ இப்படி அல்லவா காலம் மாறிட்டு வருகிறது..தமணா,அசின்,பாவனா போன்ற பெண்களைத் தான் ஆண்களுக்கு பிடிக்கும்..விரல் விட்டு எண்ணக் கூடிய ஆண்களே அம்மா போல் துணை வேண்டும் என்று எதிர் பார்ப்பது..அதுவும் சரி வராட்டிக்கு ரட்டா காட்டிட்டு போவது தான்.

:lol: :lol: :lol:

நடிகைகள் போன்ற பெண்களை ரசிப்பார்கள், காதலிப்பார்கள், கடைசியில் நடிகை மாதிரி நீ நடக்கிறாய் எனக்கு பிடிக்கேல்லை என்று சொல்லியே பிரிவார்கள். இது அவர்களின் தந்திரம். ஆனால் திருமணம் என்று வரும் போது அம்மா போல் பெண் வேண்டுமென்று கேட்பார்கள். அப்ப தான் தன்னை எதிர்த்து கதைக்க மாட்டா என்று :lol: . (தற்போதைய இளவட்டங்களில் பலரை சொல்லுறன். ஏனையவர்களை அல்ல)

உங்கள் கருத்துகள் பல இப்பொழுது நகைச்சுவையுடன் கூடிய கருத்துகளாக உள்ளது. :D தொடருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

கோவம் உடலுக்கு ஆகாது என்று வைத்தியர் சொல்லிட்டார்..அது தான் காமடில இறங்கீட்டன் துளசி. :lol: 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]பல இளைஞர்களுக்கு திருமணத்தின் போது இருக்கும் எண்ணம், என் அம்மாவை போல எனக்கு மனைவி வேண்டும். கிட்ட தட்ட பல ஆண்களின் சிந்தனை இது தான் ஆனால் இதில் எவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்கு தெரியுமா? கிட்டதட்ட ஆணாதிக்கத்தின் ஆரம்பம் இது எனலாம்.[/size]

[size=3]முதலில் தன் அம்மாவை நம் சமூகத்தில் உள்ள ஆண்களுக்கு ஏன் பிடிக்கிறது? பெரும்பாலான குடும்பத்தில் அப்பா எப்போதும் கொஞ்சம் விறைப்பான ஆளாகவே இருப்பார், அவரிடம் நேரடியாய் பேச முடியாது, ஆனால் அம்மா அப்படி இல்லை. கொஞ்சம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு ஏதாவது கேட்டா போதும் உடனே கிடைத்து விடும். சில சமயம் கேட்டாலே போதும். ஸோ, தன் பேச்சை கேக்கணும். இது தான் அம்மா போல மனைவியை கேட்கும் முதல் காரணம். ஆனா இன்றைய காலகட்டத்தில் இது முறையா? முறையா என்பதை விட மிகப் பெரிய முட்டாள்தனம் இது.[/size]

[size=3]நம் அப்பாக்களை கொஞ்சம் உன்னித்து பாருங்கள், மனைவியிடம் ம்,சரி,என்ன,ஆமா என்று தான் பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளை மட்டும் பேசுவார்கள், ஆனால் மற்ற பெண்களிடம் அதிகமாக பேசுவார்கள். அதாவது மற்றவர்கள் முன்னிலையில் நான் என் மனைவி சொல்லை கேட்பவன் அல்ல. என் சொந்த சிந்தனையை பயன்படுத்துவன் என்று காட்டிக் கொள்ள. அப்படியான பெண்களை தான் இந்த சமூகத்தின் ஆண்கள் இன்றும் விரும்புகிறார்கள். [/size]

[size=3]இதே, தான் கேட்ட எதையும் வாங்கித் தராத ஒரு அம்மா, எப்போதும் முறைக்கும் ஒரு அம்மா போன்ற மனைவியை ஆண்கள் எதிர்பார்ப்பார்களா? இல்லையே. [/size]

[size=3]முதலில் அம்மாவையும், மனைவியையும் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அம்மா என்பவர் ஒரு மகனை/மகளை பொறுத்த வரை வெறும் மனுஷி அல்ல. அடுத்தவர் வாழ்க்கைக்கு வெளிச்சம் தர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல, ஒருவனால் எப்போதும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே வாழ்ந்து விட முடியாது, தன்னை உயர்த்திக் கொள்ள, உணர்ந்து கொள்ள அதை விட மேலான ஒரு வெளிச்சம் தேவைப்படுகிறது. அது ஒரு டார்ச் லைட் ஆகவோ அல்லது சூரியன் ஆகவோ கூடவோ இருக்கலாம். அந்த இரண்டாவது தான் மனைவி. இரண்டு பேரும் வேறு வேறு தலைமுறையில் இருக்கிறவர்கள். உங்கள் அப்பாவுக்கும் உங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குமோ, அதே அளவு அம்மாவுக்கும் மனைவிக்கும் இருக்கும் அல்லவா?[/size]

[size=3]young-couple-in-pink-love-heart-cartoon.jpg[/size]

[size=3]தன் மனைவி தன் அம்மாவை போல இல்லை என்பவர்கள் சொல்லும் பல காரணங்களில் ஒன்று சமையல். அதெப்படிங்க மகனாக உங்களுக்கு பிடிக்கும் சமையல், உங்கள் அப்பாவுக்கு ஒரு கணவராக எப்படி பிடிக்கிறது? உங்கள் அம்மா, உங்கள் அப்பாவின் அம்மாவைப் போலத்தான் சமைக்கிறாரா? உங்க அப்பாவுக்கு கிடைச்சது போல ஒரு அனுசரனையான பொண்டாட்டி வேணும் ஆனா உங்களால் அனுசரித்து போக முடியாது. இதெப்படி நியாயம் ஆகும். உங்கள் மனைவி செய்யும் சமையல் உங்கள் குழந்தைக்கு பெரும்பாலும் பிடிக்கும் தானே? அப்போ தப்பு யார் மேல.

உங்க அப்பா இன்னும் அவங்க அம்மா சாப்பாட்டைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் உங்களுக்கே சாப்பாடு ஒழுங்கா வராது பாத்துக்கோங்க.

அடுத்து என் மனைவி என் அம்மா போல பாந்தமாக சேலை கட்டி தான் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் மாடர்ன் உலகத்தை வரவேற்பார்கள்,பெண்கள் சுதந்திரத்தை அங்கீகாரம் செய்வார்கள். எப்படி என்றால், தன் அலுவலகத்தில், தான் பார்க்கும் பெண்கள் மாடர்ன் உடை உடுத்தினால். ஆனால் தன் மனைவி அப்படி இருக்கக் கூடாது. அப்படி எல்லோரும் நினைத்து இருந்தால் பாண்ட்,ஷர்ட் போட்ட ஒரு பெண்ணை கூட நீங்கள் தெருவில் பார்க்க முடியாது, அப்படிபட்ட மாடர்ன் பெண்களுக்கும் குடும்பம் இருக்கிறது. நீங்கள் எல்லாம் வெளியே சொல்லாதீர்கள் நான் மாடர்ன் பார்ட்டி என்று, இன்னும் 60களை தாண்டாத அசடுகள் நீங்கள்.

இன்றைய பெண்கள் யாராவது தங்கள் அப்பாவை போல கணவரை கேட்கிறார்களா? பெரும்பாலும் இல்லை. ஏன் அப்பா என்பவர் தன்னிடம் பாசமாக இருக்கிறார் என்பதை தாண்டி, தன் அம்மாவை அவர் சக மனுஷியாக நடத்தவில்லை என்பது ஒரு முக்கிய காரணம். ஆனால் அப்படி கேட்கும் பெண்கள் தான் பெரும்பாலான ஆண்களுக்கு வேண்டும்.

சமீபத்தில் முகப்புத்தகத்தில் ஒரு செய்தி படித்தேன், (இதுக்கு நிறைய லைக் வேற, நான் கொடுத்தேனா என்று தெரியல)

“கோவம் வந்தால் சமைத்து விட்டு சாப்பிடாமல் படுப்பவர் அம்மா, சமைக்காமல் படுப்பவள் மனைவி”

இது என்னய்யா கொடுமை, உங்க அம்மா உங்களுக்கு மட்டுமா சமைக்கிறார், தன் கணவனுக்கும் தானே? ஒரு குழந்தை பிறந்த பின் உங்கள் மனைவியும் இதையே தான் செய்வார். சரி அப்படியே கோவம் வந்தால் யாரால்? பெரும்பாலும் கணவனால், அப்படி வந்தால் கோவத்தைக் காட்டுவதில் என்ன தவறு? ஒரு ஆண் கோவத்தைக் காட்டலாம் ஆனால் பெண் காட்டக் கூடாதா?

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே , உங்கள் அம்மா என்பவர் ஒரு ஆணுக்கு மனைவி, உங்கள் மனைவி என்பவர் ஒரு மகனு(ளு)க்கு தாய்(வருங்காலத்தில் கூட இருக்கலாம்).[/size]

- Prabu Krishna -

பி.கு:- இதனை வாசிக்கும் போது நெடுக்ஸ் அண்ணாவின் நினைவு வந்தது. :D

அவர் ஒரு திரியில் கூறியிருந்தார், "தாயின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளுற ஆண்.. ஏன் மனைவியின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளுறான் இல்லை. அதற்கு காரணம்.. அவன் தாயை நம்பும் அளவிற்கு மனைவி மீது நம்பிக்கை வைக்கிற அளவுக்கு அவள் அவனோட நடந்துகொள்ளேல்ல.. அவனைப் புரிஞ்சு கொள்ள முயலல்ல என்று தானே" என்று. இங்கு மனைவியில் தவறா கணவனில் தவறா என்ற கேள்விக்கு விடை இங்கு உண்டு. :D

தெரிந்த ஒன்றுடன் மற்றயதை ஒப்பிடுவது தான் மனித இயல்பு. அநேகமான ஆண்களுக்கு தெரிந்த, நன்கு பழகிய பெண் அம்மா தான். இதனால தான் அம்மா மாதிரி பெண் வேணும் எனக் கேட்கிறார்கள். இதை ஆணாதிக்கம் எனக் கூறுவது நொன்சென்ஸ். எனக்கு அம்மா மாதிரி பெண் வேணும் என நான் நினைத்தது இல்லை ஆனால் வந்தவள் சரியா அம்மா மாதிரியே இருக்கிறாள். எழுதியவர் போன நூற்றாண்டில இப்பவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெண் பட்டிகாடாக, பின்தங்கிய நிலையில் இருக்க வேண்டும் என்று ஆண்கள் நினைப்பதில்லை. அதோட ஒரு பெண் தன்னை உருக்கோணும், சமைக்கோணும், பிள்ளை வளர்க்கொனும் எண்டு இப்ப ஆம்பிளையள் எதிர்பார்க்கிறது வலு குறைவு. இருவரும் அலுவலகம் போவதால், இருவருக்கும் துறை சார்ந்த படிப்புகள் கருத்தரங்குகள் இருப்பதால் வீட்டு வேலையிலே பாதி பாதி செய்கிறார்கள். நாங்கள் இப்பவும் மனிசிமாற புட்டவிக்க வச்சுக் கொண்டிருந்தால் உலகம் எங்களை விட்டிட்டு எங்கயோ ஓடிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அம்மா போல் மனைவி வேண்டும் - ஆண்களின் குரூரம்[/size]

[size=5]இல்லை இப்படியா[/size]

[size=5]1. வாய் முழுக்க வெத்திலை பாக்கு [/size]

[size=5]2. சாயம் பிடித்த பற்கள்[/size]

[size=5]3. சோல்ற் அண்ட் பெப்பர் கேயர்[/size]

[size=5]4. காதில் பெரிய கடுக்கன்[/size]

[size=5]5. குறுக்குக் கட்டு[/size]

[size=5]6. தலையில் கடகம்[/size]

[size=5]7.செருப்பில்லாத பித்த வெடிப்புக் கால்[/size]

[size=5]8. கையால் பல் விளக்கும் பிகர்[/size]

391333_305871912841776_2039010396_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

Edited by nedukkalapoovan

இந்த ஜென்மத்திலை... உங்களுக்கு கலியாணம் இல்லை.

வாழ்க்கை முழுக்க, தனித்தவில் தான்... :D:icon_idea:

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

நெடுக்கு உங்களுடைய சாதகத்தை ஒருக்கால் அனுப்பி விடுங்கோ. என்னிடம் ஒரு பிள்ளை இருக்கிறா, நீங்கள் சொன்ன எல்லா குணங்களுடனும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுடைய சாதகத்தை ஒருக்கால் அனுப்பி விடுங்கோ. என்னிடம் ஒரு பிள்ளை இருக்கிறா, நீங்கள் சொன்ன எல்லா குணங்களுடனும்.

நெடுக்கருக்கு, இப்பவே... 45 வயசு ஆயிட்டுது என்பது, எனது கணிப்பு :lol: .

ஒகேயா... யாழ்கவி. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுடைய சாதகத்தை ஒருக்கால் அனுப்பி விடுங்கோ. என்னிடம் ஒரு பிள்ளை இருக்கிறா, நீங்கள் சொன்ன எல்லா குணங்களுடனும்.

முதல்ல ஆளைக் காட்டுங்க.. அப்ப தான் சாதகம்.. பாதகம் அறிக்கை.. தர முடியும்..! :lol::D

நெடுக்கருக்கு, இப்பவே... 45 வயசு ஆயிட்டுது என்பது, எனது கணிப்பு :lol: .

ஒகேயா... யாழ்கவி. :D

உங்க கணிப்பு மகா மட்டம். சிறி அண்ணா உங்களுக்கும் சாஸ்திரத்திற்கும் வெகு தூரம் போல..! நமக்குத் தான் அது வரேல்லைன்னா.. எதுக்கு அவசியமில்லாததை அடைய விடாமல் முயற்சிப்பான். உடம்பு நோவான்..! :lol::D

Edited by nedukkalapoovan

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

மரபணுத் தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகலாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆண்களில் பிடித்த விசயமே தங்களிடம் இன்னென்ன தகுதியிருக்குதா எனப் பார்க்காமல் தங்களுக்கு வரும் மனைவிமார் மட்டும் ஓவர் தகுதியாக இருக்க வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது :lol::D:rolleyes:

நெடுக்ஸ்... கலியாணம் கட்டுவது, உடம்பு நோகும் வேலையா... :o .

உங்களுக்கு, யாரோ... தவறான தகவலை தந்திருக்கினம். :D

மரபணுத் தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகலாம். :lol:

தப்பிலி...

நெடுக்ஸ்க்கு, மணப் பெண்ணை (Madame Tussauds) தொழிற்சாலையில்...

ஓடர் பண்ணித்தான் செய்ய வேணும் :D .

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களுக்குப் பொறாமை. ஆண்கள் துணிச்சலா இதுதான் வேணும் என்று கேட்கிறது..! ஆண்கள் எப்பவும் துணிச்சலானவங்க தான். சுயமா சிந்திக்கிறவங்க..! ஒரு ஆணுக்குரிய எல்லா தகுதியும் உள்ளவன் தான் இப்படி துணிஞ்சு கேட்கவும் செய்வான்.. என்பது பாவம் சில பெண்களுக்குப் புரிவதில்லை...! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை சொன்னதுபோல எனது அம்மாவைப் போலத்தான்

எனக்கும் மனைவியும் கிடைத்திருக்கின்றா.

அம்மா என்பவர் தான் எமக்கு எல்லாம்.

அவரைப்போல ஒரு மனைவியைப் பெற்றுக் கொள்வதற்கு

எல்லோரும் தவம் செய்திருக்க வேண்டும்.

அதேபோல என் அம்மாவைப் போல எனக்குப் பிள்ளைகளும்

கிடைத்திருக்கின்றார்கள்.

அதிலே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

உண்மைதான் வாத்தியார்

இது அடுத்த தலைமுறைக்கும் தொடரும் போலுள்ளது

எனது மூத்தமகன் தாயிடம் சொல்லியுள்ளான்

அப்பபாவை நீங்க கவனிப்பது போல தற்போது எவரும் கணவனைக்கவனிப்பதில்லை.

எனக்கும் இப்படித்தான் பொண்ணு வேணும் என்று.

இதில் மேலோட்டமாகப்பார்த்தால் சிலவேளை வேறு அர்த்தம் தரக்கூடும்

ஆனால் அவனை எனக்குத்தெரியும்

அந்த அன்பை மட்டுமே அவன் எதிர்பார்க்கின்றான்.

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

கல்யாணம் செய்யப்பேபாறதில்லை என்று சொன்னால் எங்களுக்குப்புரியாதா ராசா.

ஏன் இவ்வவவவவவவவவவவளவும்..........??? :lol::D :D

  • தொடங்கியவர்

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

அப்பிடியொரு பொண்ணு இருக்குதண்ணா. உங்களை பற்றி சொல்லி கேட்டனான். அந்த பொண்ணுக்கு சகோதரங்கள் போல பாசமும் சூர்யா மாதிரி முகமும், வெள்ளையான தோற்றமும், பொண்ணுங்களை மதிக்கிற ஆணும் (இன்னும் பல) தான் வேணுமாம் என்று சொல்லி உங்களை பிடிக்கேல்லை என்று சொல்லிப்போட்டா. :lol::icon_idea:

எனக்கு ஆண்களில் பிடித்த விசயமே தங்களிடம் இன்னென்ன தகுதியிருக்குதா எனப் பார்க்காமல் தங்களுக்கு வரும் மனைவிமார் மட்டும் ஓவர் தகுதியாக இருக்க வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது :lol::D:rolleyes:

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அம்மா போல ஈகையும் அன்பும் அரவணைப்பும்.. அனுஷ்கா போல உடலும்.. ஐஸ்வரியா ராய் (உலக அழகியா இருந்தப்ப) அழகும்.. அன்னை தெரேசா போல கருணையும்.. இலட்சுமி போல செல்வமும்... சரஸ்வதி போல படிப்பும்.. அஞ்சலி போல துடுக்கான.. வாயும் வார்த்தையும்.. மேரி கியூரி போல.. விவேகமும் உள்ள பெண் வேணும்...! யாராச்சும் வைச்சிருக்கீங்க...????!

இருக்கிறது எல்லாம்.... வேலைக்காகாத... *** ***** எல்லோ இருக்குதுங்க..! :lol::D

உங்களின் ஆசைக்கு இதைத் தான் நம்மளால செய்யமுடிஞ்சது... :lol::lol:

  • தொடங்கியவர்

மரபணுத் தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாகலாம்.

அதுக்கு செலவாகுமே. :lol: காசு வர வேணும் எண்டு தானே லட்சுமி மாதிரி பொண்ணு வேணும் எண்டு கேட்டார். பிறகு எப்படி காசு செலவழிப்பார். அதாலை இதுவும் சரிவராது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியொரு பொண்ணு இருக்குதண்ணா. உங்களை பற்றி சொல்லி கேட்டனான். அந்த பொண்ணுக்கு சகோதரங்கள் போல பாசமும் சூர்யா மாதிரி முகமும், வெள்ளையான தோற்றமும், பொண்ணுங்களை மதிக்கிற ஆணும் (இன்னும் பல) தான் வேணுமாம் என்று சொல்லி உங்களை பிடிக்கேல்லை என்று சொல்லிப்போட்டா. :lol::icon_idea:

:lol: :lol: :lol:

இது பச்சப் பொய். எங்க அம்மாவையே அறியாத ஒரு பெண்.. அவாவப் போல.. ஈகை.. அன்பு.. அரவணைப்புச் செய்யக் கூடியவா என்று சுயமதிப்பிட்டதே மிகத் தவறு. இதில சூரியா கேட்குதாம் சூர்யா.. அதுதான்.. ஜோதிகா கட்டிக்கிட்டா எல்ல. வேணுன்னா.. அவாக்கு சக்களத்தியா போய் கட்டிக்கச் சொல்லுங்க..! :lol::D :D

அதுக்கு செலவாகுமே. காசு வர வேணும் எண்டு தானே லட்சுமி மாதிரி பொண்ணு வேணும் எண்டு கேட்டார். பிறகு எப்படி காசு செலவழிப்பார். அதாலை இதுவும் சரிவராது. :icon_idea:

நகைக்குச்.. சேலைக்கு.. மேக்கப்புக்கு.. என்னால உழைக்க முடியாது. ஒரு மனிசன் உயிர் வாழ தேவையான அத்தியாவசியத்தை தான் வழங்க முடியும். அந்த வகையில் செல்வத்தின் அதிபதி.. இலட்சுமியா வந்திட்டா நமக்கு அந்தத் தொல்லை இல்லையே.. என்று ஒரு பெரிய தியாக மனப்பான்மையோட தான் கேட்டன்..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இது பச்சப் பொய். எங்க அம்மாவையே அறியாத ஒரு பெண்.. அவாவப் போல.. ஈகை.. அன்பு.. அரவணைப்புச் செய்யக் கூடியவா என்று சுயமதிப்பிட்டதே மிகத் தவறு. இதில சூரியா கேட்குதாம் சூர்யா.. அதுதான்.. ஜோதிகா கட்டிக்கிட்டா எல்ல. வேணுன்னா.. அவாக்கு சக்களத்தியா போய் கட்டிக்கச் சொல்லுங்க..! :lol::D :D

தன் கணவனுடன் மிகமிக அன்பு செலுத்த கூடிய பெண் என்றால் அனைத்து தாயும் தன் பிள்ளைகளுடன் அன்பு செலுத்துவது போல் என்று அர்த்தம். உங்கள் அம்மாவை தெரிஞ்சு தான் அவா மாதிரி அன்பு செலுத்த வேணும் எண்டில்லை. :D

சூர்யா வேணும் என்று கேட்கேல்லை. சூர்யா மாதிரி முகம் உள்ளவர் என்று தான் கேட்டவர். அது பிழை என்றால் நீங்களும் ஐவர்யாராய் மாதிரி அழகு என்று கேட்டனீங்கள் தானே? அவவை தான் அபிஷேக் பச்சன் கட்டிக்கிட்டாரெல்லே? :lol: வேணும்னா நீங்களும் போய் ஐஸ்வர்யாரயோட இருக்க வேண்டியது தானே? என்ன ஒண்டு....அவா வேண்டாம் என்று சொல்லிப்போடுவா. :lol::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.