Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ராணுவ தளங்களை நிர்மூலமாக்கி விடுவோம்! - ஈரான் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

iran-president-6712-150.jpg

[size=4]எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஈரானை சுற்றியிருக்கும் 35 அமெரிக்க ராணுவ தளங்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் நிர்மூலமாக்கப்படும் என்று ஈரான் விமானப்படை கமாண்டர் அமிர் அலி ஹாஜிஜதே எச்சரித்துள்ளார்.[/size]

[size=4]ஈரான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:[/size]

[size=4]ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிற அடுத்த சில நிமிடங்களியே ஈரானைச் சுற்றி அமெரிக்கா அமைத்துள்ள 35 ராணுவ தளங்களையும் நிர்மூலமாக்கக் கூடிய வகையில் ஏவுகணை தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரானின் ஏவுகணைகள் இந்த தளங்களை சில நிமிடங்களில் சென்று தாக்கி அழித்து விடக் கூடியவை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்த ஒரு அமெரிக்க ராணுவ தளத்தையும் விட்டுவைக்கமாட்டோம்.[/size]

[size=4]இதேபோல்தான் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலிய படைகளையும் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும். இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா ராணுவ தளங்களை அமைத்திருப்பது எங்களுக்கு அச்சுறுத்தல் அல்ல..இன்னும் சொல்லப்போனால் ஈரான் படைகள் தாக்குவதற்கான ஒரு "சந்தர்ப்பத்தை" யே அவைகள் ஏற்படுத்தியிருக்கின்றன என்றே கூறலாம் என்றார் அவர்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

இப்படித்தான் சதாமும் சவுண்ட் விட்டார், கடாபியும் சவுண்ட் விட்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ரொம்ப நாளா எதிர்பார்க்கிறேன் சொல்லுறாங்கள் செய்யுறாங்கள் இல்லையே??? :unsure: :unsure:

சவுண்டு மட்டும் தான் வருது :(

நானும் ரொம்ப நாளா எதிர்பார்க்கிறேன் சொல்லுறாங்கள் செய்யுறாங்கள் இல்லையே??? :unsure: :unsure:

சவுண்டு மட்டும் தான் வருது :(

:lol: :lol: :lol:

சும்மா வெருட்டுறதுக்காக சொல்லினம். அவர்கள் நடைமுறைப்படுத்த வெளிக்கிட்டால் அழிவை நோக்கி செல்கிறார்கள் என்று அர்த்தம். எப்ப அழிவார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறியள்போலிருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ரொம்ப நாளா எதிர்பார்க்கிறேன் சொல்லுறாங்கள் செய்யுறாங்கள் இல்லையே??? :unsure: :unsure:

சவுண்டு மட்டும் தான் வருது :(

அதேதததததததத

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானை சதாமின் ஈராக்கோட ஒப்பிடுவது தவறு. சதாம் சி ஐ ஏயின் முன்னாள் கூட்டாளி. அவரின் பலம் பலவீனம் எல்லாம் அமெரிக்காவிற்கு அத்துபடி..! ஆனால் ஈரான் அமெரிக்காவின் இஸ்ரேலின் பரம எதிரி..!

ஈரானின் இராணுவ பலம்.. ஈராக்கினதை விட அதிகம். நிச்சயமா ஈரானை தாக்க முதல் மேற்குலக நாடுகள் ஒன்றிற்கு இரண்டு முறை சிந்திக்கவே செய்வார்கள்.

சில தினங்களுக்கு முன்னும் பல ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி தனது பலத்தை அமெரிக்கா உட்பட்ட மேற்குலக அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு ஈரான் காட்டியிருந்தது. அதுமட்டுமன்றி.. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு சீனா.. இந்தியா.. போன்ற அதன் பிரதான எண்ணெய் கொள்வனவு நாடுகள் அனுமதிக்கா. அப்படி அனுமதித்தால் உலக எண்ணெய் வளத்தின் ஒட்டுமொத்த முதலாளியாக ஏகாதபத்திய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் செயற்படுவார்கள். அது சீன.. இந்திய பொருண்மிய வளர்ச்சிக்கு தேவையான எரிபொருள் வள விநியோகத்தை கட்டுப்படுத்தலாம்.

எனவே ஈரானைப் பொறுத்தவரை.. அதன் இருப்பு... சீனா... போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவிற்கு எதிராக சவால்விட அவசியம்..! ரஷ்சியாவின் பிரதான இராணுவ ஆயுதக் கொள்வனவாளராக ஈரான் இருக்கிறது. இந்த விடயத்தில் ஈரானை அமெரிக்கா தாக்க.. ரஷ்சியா.. ஈராக்கை தாக்கவிட்டு வேடிக்கை பார்த்தது போல பார்க்காது. அதற்கு உதாரணமாக.. சிரியா விவகாரம்.

லிபியாவில்.. கடாபியை அடக்க.. உடனடியாக நடவடிக்கையில் இறங்க அனுமதித்த (சாட்டுக்கு எதிர்ப்புக் காட்டியது) ரஷ்சியா.. சிரியா விவகாரத்தில் அதன் மத்திய கிழக்கு கடல் செல்வாக்குத் தளத்தைக் காப்பாற்ற தன்னால் இயன்றதை செய்துள்ளது. வேறு வழி இல்லாமல்.. இப்போ துருக்கியை வைத்து.. அமெரிக்கா கிளர்ச்சியாளர்களை தூண்டி விட்டு வன்முறை மூலம் மக்களை பலியிட்டு.. ஆட்சியை அகற்ற முடிவு செய்துள்ளது. அதெல்லாம் பயங்கரவாதமாக அமெரிக்காவிற்கும்.. மேற்குக்கும் தெரியவில்லை.

ஆனால் எமது விடுதலைப் போராட்டம் மட்டும் பயங்கரவாதமானது தான் வேடிக்கை..! எமது விடுதலைப் போராட்டத்தை அரபு நாடுகளுக்கு கூட பயங்கரவாதமாகக் காட்டியது அமெரிக்கா தான்..! அமெரிக்காவின் இரட்டை வேடத்திற்கு சதாம்.. கடாபி.. நாம் பலியானது போல.. ஈரான் அவ்வளவு இலகுவாக பலியாக மாட்டாது என்பது எனது கணிப்பு. :icon_idea:

என்னைப் பொறுத்தவரை இஸ்லாமிய அடிப்படைவாத வெறி பிடித்த.. ஈரான் அடிவாங்கிற அதே நேரம்.. அமெரிக்காவின் இராணுவத் திமிரும்.. முதுகெலும்பும்.. முறிக்கப்பட வேண்டும்..! அப்போது தான்... மேற்குலக ஏகாதபத்தியவாதிகளின் ஏகபோக.. கொள்கை வகுப்புக்களில் மாற்றம் ஏற்படும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்ப அழிவார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறியள்போலிருக்கு. :D

லைவ் ஸோ பார்த்து ரொம்ப நாளாச்சுல்லே !! :lol: :lol:

ஈரானின் இராணுவ பலம்.. ஈராக்கினதை விட அதிகம். நிச்சயமா ஈரானை தாக்க முதல் மேற்குலக நாடுகள் ஒன்றிற்கு இரண்டு முறை சிந்திக்கவே செய்வார்கள்.

---------

---------

--------

என்னைப் பொறுத்தவரை இஸ்லாமிய அடிப்படைவாத வெறி பிடித்த.. ஈரான் அடிவாங்கிற அதே நேரம்.. அமெரிக்காவின் இராணுவத் திமிரும்.. முதுகெலும்பும்.. முறிக்கப்பட வேண்டும்..! அப்போது தான்... மேற்குலக ஏகாதபத்தியவாதிகளின் ஏகபோக.. கொள்கை வகுப்புக்களில் மாற்றம் ஏற்படும்..! :icon_idea::)

ஈரானின் இராணுவ பலம் ஈராக்கை விட அதிகம். அத்துடன் அணு ஆயுதம் வேற உற்பத்தி செய்யுறம் என்று சொல்லிப்போட்டினம். எனவே அமெரிக்கா இலகுவில் ஈரானில் கைவைக்காது. (கைவைக்க பயப்படும்)

ஆனால் ஈரானுக்கு சீனா, ரஷ்யா ஆதரவளிப்பது போல் அமெரிக்காவுக்கு இஸ்ரேல் ஆதரவளிக்கும். அத்துடன் பிரான்ஸ் பிரித்தானியா கூட கடல்வழி தாக்குதலுக்கு அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் சாத்தியம் உண்டு.

எனவே இரு பகுதியும் ஒருவர் மேல் மற்றவர் தாக்குதல் நடத்த தயங்குவார்கள். மீறி தாக்குதல் நடந்தால் அது இருபகுதிக்கும் பேரழிவாக இருக்கும். (நீங்கள் கடைசியா சொன்னது தான் நடக்கும்)

இப்ப அமெரிக்காவுக்கு தெரிய வேண்டியது ஈரான் ஏற்கனவே அணு ஆயுதம் ஏதும் தயாரித்து விட்டதா அல்லது இப்ப தான் தயாரிக்க தொடங்கியிருக்கா என்று? ஏற்கனவே தயாரித்திருந்தால் அதை ஈரான் யுத்தத்தின் போது பயன்படுத்தினால் அது பல நாடுகளுக்கு பேரழிவை உண்டாக்கும். ஆனாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை சண்டை தொடங்காது என்று நினைக்கிறன்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சொன்னது போல்

அவசரப்பட்டு ஈரான் மீது அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கை வைக்காததற்கு காரணம் இந்தப்போர் பல படிமானங்களை மாற்றியமைத்துவிடும் என்பதால் அது அவ்வளவு சுலபமாக வெல்லப்படமுடியாதது என்பதால்தான்.

ஆனால் தொடர்ந்து இத போக்கை எவரும் விரும்பமாட்டார்கள். அழிப்பதற்கான அத்திவாரங்கள் போடத்தொடங்கி பல வருடங்களாகிவிட்டன. அத்துடன் அதை சமாளிப்பதற்கான தயாரிப்புக்களும் நடநந்தவண்ணமே உள்ளன. எனவே காலம் கடத்துவதும் சிக்கலானது.

எனவே போர் விரைவில் வரலாம்.

அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் வெல்வர். ஆனாலும் பெருத்த மறக்க முடியாத ஏற்கமுடியாத பாதிப்புக்கள் இவர்களுக்கும் வரும். இன்றைய பொருளாதார சிக்கலில் அந்தவகை அழிவுகள் எல்லாவற்றையும் மாற்றியும் போடலாம்.

நெடுக்கு சொன்னது போல்

அவசரப்பட்டு ஈரான் மீது அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கை வைக்காததற்கு காரணம் இந்தப்போர் பல படிமானங்களை மாற்றியமைத்துவிடும் என்பதால் அது அவ்வளவு சுலபமாக வெல்லப்படமுடியாதது என்பதால்தான்.

ஆனால் தொடர்ந்து இத போக்கை எவரும் விரும்பமாட்டார்கள். அழிப்பதற்கான அத்திவாரங்கள் போடத்தொடங்கி பல வருடங்களாகிவிட்டன. அத்துடன் அதை சமாளிப்பதற்கான தயாரிப்புக்களும் நடநந்தவண்ணமே உள்ளன. எனவே காலம் கடத்துவதும் சிக்கலானது.

எனவே போர் விரைவில் வரலாம்.

அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் வெல்வர். ஆனாலும் பெருத்த மறக்க முடியாத ஏற்கமுடியாத பாதிப்புக்கள் இவர்களுக்கும் வரும். இன்றைய பொருளாதார சிக்கலில் அந்தவகை அழிவுகள் எல்லாவற்றையும் மாற்றியும் போடலாம்.

ஆம் வெல்வது அமெரிக்கா தான். ஆனால் பல பாதிப்புகளை சந்திப்பர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6 ஆம் திகதி. எனவே போர் அதுக்கு பிறகு தான் தொடங்கும் என்று நினைக்கிறன். அல்லது அதையொட்டி ஆரம்பமாகலாம்.

கமோன் ..கமோன்.......... :lol:

என்னைப் பொறுத்தவரை இஸ்லாமிய அடிப்படைவாத வெறி பிடித்த.. ஈரான் அடிவாங்கிற அதே நேரம்.. அமெரிக்காவின் இராணுவத் திமிரும்.. முதுகெலும்பும்.. முறிக்கப்பட வேண்டும்..! அப்போது தான்... மேற்குலக ஏகாதபத்தியவாதிகளின் ஏகபோக.. கொள்கை வகுப்புக்களில் மாற்றம் ஏற்படும்..! :icon_idea::)

லைவ் ஸோ பார்த்து ரொம்ப நாளாச்சுல்லே !! :lol: :lol:

இது ரொம்ப கொடுமை அண்ணா. என்ன தான் இருந்தாலும் சண்டை என்று வந்தால் பேரழிவுகள் இடம்பெறும். எம் நாட்டில் பேரழிவை பார்த்தவர்கள் அடுத்த நாட்டில் நடக்கும் சண்டையை பார்த்து சந்தோசப்பட கூடாது. எந்த நாட்டு அரசாங்கம் எமக்கெதிராக நடந்தாலும் கொல்லப்பட போவது பொதுமக்களும் சேர்ந்து தான். அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் கூட.

ரெண்டு பில்லியன் டாலரும் கொடுத்து, எரிபொருளும் கொடுத்து எம்மை அழிக்க உதவியது இரான்.

இரான் அழிவது தெற்காசிய நாடுகளுக்கு நல்லது.

அது எனக்கும் தெரியும். அத்துடன் அமெரிக்காவிடம் ஈரான் அடி வாங்கப்போகுது என்றும் தெரியும். அது எனக்கும் சந்தோசம். ஆனால் மக்கள் இறப்பை பார்த்து சந்தோசப்பட மாட்டன். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்வீர்கள்.

ஜீவா அண்ணா சொன்னது live show பார்த்து ரொம்ப நாளாச்சு என்று. அதற்கு தான் என் பதில் அப்படி அமைந்தது.

சீனா இருக்க பயமேன்..

இனி ஒரு பெரும் படையெடுப்புகளுக்கு இப்போதைக்கு ஒரு நாடும் போகாது (USA உள்பட) ஆனால் Siriya ல் நடப்பது போல் நடக்கலாம்..

ஈரான்'இல் ஏன் இவ்வளவு கடுப்பு எல்லாருக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் சதாமும் சவுண்ட் விட்டார், கடாபியும் சவுண்ட் விட்டார்

அவர்கள் விடுவது வெறும் சவுண்ட் என்று ஊருக்கே தெரியும் அதுதான் அடுத்த நிமிடமே அள்ளி கட்டிக்கொண்டு போனார்கள்.

இது சிங்கம் சிங்கிளாய் நிற்குது இருந்தும் ஒரு தயக்கம் எல்லோருக்கும் உண்டு.

இராக்கில் சியா மற்றும் சுன்னி இனக்குழுக்களிடையே இருந்த உள்நாட்டுப் பிரிவினைவாதம் அமெரிக்க மற்றும் மேற்குலக போரினை இலகுவாக்கியது போன்று ஈரானில் உள்நாட்டு பிரச்சனை எதுவும் பெரிதாக இல்லை. ஈரான் அண்மையில் ஓர் அமெரிக்க உளவு விமானத்தை கைபற்றியதானது அமெரிக்கரை பெரும் வியப்பிலாழ்த்தியது என பத்திரிக்கைகள் எழுதின.

மற்றும் இராக்கை விட 3 மடங்கு மக்கள் தொகை மற்றும் வசதிகள் கூடிய நாடு ஈரான்.

மற்றைய உறவுகள் கூறியது போன்று ரசிய மற்றும் சீனா பச்சைக்கொடி காட்டினால் ஒழிய நேரடி யுத்தம் சாத்தியமாகாது என்றே நினைகிறேன்.

ஜூலை 2012 இல் அமுலுக்கு வரும் பெட்ரோலிய இறக்குமதி தடை ஈரானை பணிய வைக்குமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பின்புலம் ஈரானிற்கு இருக்கும்வரைக்கும் அமெரிக்கா கைவைக்கத் தயங்கும்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் பின்புலம் ஈரானிற்கு இருக்கும்வரைக்கும் அமெரிக்கா கைவைக்கத் தயங்கும்..! :D

:D :D :lol:

இரு தரப்பினரும் போர் மூளுவதைத் தவிர்க்கவே செய்வார்கள்.

அமெரிக்கா, இதுவரை உபயோகிக்காத ஆயுதங்களை பரிசோதனை பண்ணிப் பார்க்க இந்தப் போர் உதவும். ஈரான் பாவிக்கப் போகும் ஆயுதங்கள், மேற்குலக பழைய தொழிநுட்ப வடிவமைப்பை பிரதி எடுத்த ஆயுதங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வுலகத்திற்கு போர்களும் அதனை ஒட்டிய அழிவுகளும் காலத்திற்கேற்ப தேவைப் படுகின்றன. தவிர்க்க நினைத்தாலும் அவை தவிர்க்க முடியாதவையாக அமைந்துவிடும் / அமைந்துவிடுகின்றன.

இங்கு அமெரிக்காவிற்கு வக்காளத்து வாங்குபவர்கள் / ஆதரவு குடுப்போர் அமெரிக்காவினால் (தனது சுயநலத்திற்காக!) எத்தனை போர்கள் மூண்டன, அதனால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்பட்டன என்று சற்று சிந்தித்து பார்க்கவும். ஈரான் ஒன்றும் உலகவல்லரசு கிடையாது தனித்து நின்று யாரின் 100 வித ஆதரவு அல்லாமல் அமெரிக்காவிற்கு ( & அதன் கூட்டணி நாடுகளிற்கும்) எதிராக போர் தொடுக்க! ஈரானால் உலகத்திற்கு பேராபத்து என்று சொன்னால், அது மிக மிக சிறியதே! இங்கு ஈரானை ஒட்டிய செய்திகள் மேற்குலகினால் 100ற்கு 80 வீதம் மிகப்படுத்தியே உள்ளன.

Edited by NMa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.