Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனுவிற்கு முதலாவது பிறந்தநாள்

Featured Replies

அண்மையில் சுவிஸ் நாட்டில் நம்ம தமிழரின் சாதனை ஒன்று சுவிஸ் நாட்டவரையே வியப்பாக்கியுள்ளது.

அதாவது சீனுவிட்கு முதலாவது பிறந்தநாள் ஒரு தமில்குடும்பதால் கொண்டாடப்பட்டது. ஹால் புக் பண்ணி நண்பர்களுக்கு விருந்து கொடுத்து மிக அருமையாக கொண்டாடப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு அருமையான சுவிஸ் உணவும் மதுவகையும் பரிமாறப்பட்டது. சீனுவிட்கு விதம் விதமான அழகான உடைகள் அணியப்பட்டு புகைப்படம் பிடிக்கபட்டது.

இது நடந்த இடம் சுவிஸ் சொலோத்துன் மாநிலம். அந்த சீனு யாரும் அல்ல ஒரு நாய்குட்டி. கொண்டாடியவர்கள் கு.என்ற ஊரை சேர்ந்த ஈ என்ற முதல் எழுத்தை கொண்ட நபரும் அவரது துணைவியார் பு. என்ற தீவை சேர்ந்த அம்மணி. இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனர். பிறந்தநாள் பிள்ளைகளுக்கு கிடையாது இவர்கள் வளர்த்த சீனு என்கிற நாய்குட்டிக்கு கொண்டாடப்பட்டது. இப்பிடியான மக்களும் இந்த உலகத்தில் இருக்குறார்கள். சொந்த நாட்டிலே ஒரு நேர உணவிற்கு கஷ்டபடும் எவளவோ நம்மினத்தவர் இருக்கையில் அந்த மக்களுக்கு ஒரு சதம் கூட குடுத்து தெரியாத இந்த குடும்பம் நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடியது நம்மவர்க்கு கூட அதிசயம் தான்.

நாய்தமிலன் என்கிறது இவர்களை தானோ? எனக்கு வெளிநாடுகளில் நாய் வளர்ப்பவர்களையே பிடிக்காது ஏன் என்றால் அதற்கு மாதம் மாதம் செலவழிக்கும் அந்த பணத்தை நம்ம தாயக மக்களுக்கு உதவலாம் என்பது என் கருத்து. இவர்கள் என்னடா என்றால் ஒரு படி மேல போய் நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடி பார்ட்டி வைத்திருக்குறார்கள்.

எம் இனமே என் சனமே ஏன் இந்த வாழ்க்கை உங்களுக்கு?

இப்பவே தெரியுமா அடுத்த ஜென்மம் நீங்க நன்றி உள்ள பிராணி என்று?

oscarhund2_14181-240x300.jpg9971021-hund-dackel-mit-birthday-party-hustet-isoliert-auf-weissem-hintergrund.jpg

400_F_16205083_OfUnqjlbklIEt1wYr42W6Qug2qejAkAP.jpg

stoned-party-dog-original-580x439.jpg

stoned-birthday-dog-blow-job.jpg

stoned-birthday-dog-baby.jpg

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்" :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணி என்ர ஊர் போலக்கிடக்கு. :( :(

நெருங்கிடுவன் விரைவில்.

இருக்கு சாத்து.

  • தொடங்கியவர்

அண்ணன் எங்கட ஊர் :blink: :blink: :blink:

  • கருத்துக்கள உறவுகள்

கு. என்ற ஊர்... எந்த ஊராக இருக்கும்.....

குப்பிளான், குடும்பிமலை, குருநாகல்....m1703.gif

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நாய் வளர்க்கிற ஆட்களை பிடிப்பதேயில்லை..சொந்த பிள்ளைகளை ஒழுங்காய் வளர்க்காதுகள் ஆனால் நாயை மட்டும் கவனமாய் பாத்துக் கொள்ளுங்கள் :) ...ஒரு நாய் வளர்க்கிற காசில ஆபிரிக்கா,ஆசியாவில் இருக்கும் பத்து பிள்ளைகளுக்கு உணவு போடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

கு. என்ற ஊர்... எந்த ஊராக இருக்கும்.....

குப்பிளான், குடும்பிமலை, குருநாகல்....m1703.gif

குறிகட்டுவான், குரும்பசிட்டி , என்ற ஊர்களும் இருக்கிறது :D

எனக்கு நாய் வளர்க்கிற ஆட்களை பிடிப்பதேயில்லை..சொந்த பிள்ளைகளை ஒழுங்காய் வளர்க்காதுகள் ஆனால் நாயை மட்டும் கவனமாய் பாத்துக் கொள்ளுங்கள் :) ...ஒரு நாய் வளர்க்கிற காசில ஆபிரிக்கா,ஆசியாவில் இருக்கும் பத்து பிள்ளைகளுக்கு உணவு போடலாம்

முற்றிலும் உண்மை. :)

  • கருத்துக்கள உறவுகள்

பார்ட்டிக்குப் போய் வீணி வடிச்சுத் திண்டு குடித்துவிட்டு பிறகேன் எச்சில்கதை?

நாயை செல்லப்பிராணியாக வளர்த்தால் எமது ஆயுள் அதிகரிக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம், உண்மை, பொய் தெரியவில்லை. நாயை இங்கு வளர்ப்பதற்கு நான் பல தடவைகள் முயற்சி செய்தேன். முறையாக நாயை வளர்ப்பது என்றால் அதிகளவு பணச்செலவு ஏற்படும் என்பதால் அந்த ஆசை இதுவரை கைகூடவில்லை. அத்துடன், ஒரு நாயிற்கு செலவு செய்கின்ற பணத்தை ஊரில் உள்ள அநாதரவான குழந்தை ஒன்றிற்கு கொடுத்து அதை வளர்க்கலாமே என்று எனக்குள் சிந்தனை ஓடியதால் நாய் வளர்க்கும் ஆசை கைகூடவில்லை.

நாய் வளர்ப்பதற்கு நல்லதொரு செல்லப்பிராணி என்றாலும், அது நோய் வந்து மடிவது என்பது மிகவும் துயரமான விடயம். கடைசியாக ஊரில் மேரி எனும் பெயரில் வளர்த்த நாய் இறந்தபோது மிகுந்த துயர் அடைந்தேன். marley & me எனும் பெயரில் ஓர் ஆங்கிலத்திரைப்படம் படம் வந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள். அருமையானதொரு படைப்பு.

நாயிற்கு வீட்டில் பிறந்தநாள் கொண்டாடினால் பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. ஆனால், மண்டபம் எடுத்து விமரிசையாக நாயிற்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவது எல்லாம் அதிபிரசங்கித்தனமே.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றயை தினம் இந்த செய்தி இணைக்கும் போதே படிச்சுட்டு ரொம்ப வேதனைப்பட்டேன்...அத்தோடு இப்படியானவர்களின் செயல்களை கேட்கும் போது சீ இப்படியும் மனிசர் இருக்கீனமா என்று தான் நினைக்க தோணுது...வேற்று இனத்தவர்கள் செல்லப் பிராணிகளை வளர்க்கிறார்கள் அது வேறு விடயம்..வந்த நாடுகளில் எவ்வளவு துன்பங்களை அனுபவிச்சு கொண்டு பணத்தை ஒவ்வொருவரும் உழைக்க வேண்டி இருக்கிற நிலையில் இது எல்லாம் சுத்த மடத்தனம்..அது மட்டுமில்லை எங்கள் நாட்டிலயே எவ்வளவு மக்கள் அன்றாட சாப்பாட்டுக்கே அவலப்படும் நிலையில் இவர்கள் செல்லப் பிராணிக்கு விழா எடுக்கிறார்கள்..ஏன் சில வீடுகளில் பெற்ற பிள்ளைகளே எவ்வளவோ வேதனைகளோடு தான் வாழ்வார்கள்..வெளியில் சொல்ல மாட்டார்கள்..இப்படியான விழாக்களுக்கு போகும் விருந்தினர்களை சொல்லவேணும்..

[size=4]நாய்ங்க ரொம் நன்றி உள்ள பிராணீங்க :) . ஒரு கோடீஸ்வரரோட நாயி அவங்க இறந்தக்கப்புறம் அவங்க சமாதிக்கிட்ட அழுதீச்சு இருந்திது :( . அப்புறம் அத்தோட படம் போட்டு இசத்தட்டு வந்ததுங்க . ஆமா.......... அவங்க தான் பிறந்தநாளு செலிபறேற் செஞ்சாங்க அதுக்கு போன பேமானி நாய்ங்களை என்னங்க சொல்றது <_<<_< ? ஏன்னா இதுல ஏல்லாருமே குத்தவாளீங்கதான் :icon_idea: .[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.