Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலை விலாசம்?

Featured Replies

வோல்கானோ வேறொரு திரியில் சொன்னதற்காக இந்த பதிவு .

கனடாவில் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதேன்றால் கல்வித்திணைக்களம் நாங்கள் வசிக்கும் விலாசத்தை வைத்து பாடசாலையை முடிவு செய்யும் ,நாம் விரும்பிய பாடசாலைகளில் சேர்க்க முடியாது .(தனியார் பாடசாலை பற்றி எழுதவில்லை ).

அப்படி இருந்தும் எம்மவர் பலர் நல்ல பாடசாலை என்று பேரெடுத்த பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்காக உறவினர் ,நண்பர்கள் முகவரியை பாவித்து பிள்ளைகளை அங்கு கொண்டுபோய் சேர்க்கின்றார்கள் .நல்ல பாடசாலையில் பிள்ளைகள் படிப்பது நல்லதுதான் ஆனால் படிக்கும் பிள்ளை எங்கும் படிக்கும் .

இலங்கையில் நிலை அப்படி அல்ல .ஒரு குறிப்பிட்ட பாடசாலைக்காக அருகில் ஒரு பாடசாலை இருக்க எங்கிருந்தோ வந்ததெல்லாம் சேருவார்கள் .

நல்ல பாடசாலை அருகில் இல்லாதவர்கள் அப்படி வந்து விடுதியில் தங்கியிருந்து படிப்பதில் தவறில்லை ஆனால் உரும்பிராய் இந்துகல்லூரிக்கு அருகில் இருப்பவர் யாழ் மத்தியகல்லூரிக்கோ யாழ் இந்துவிற்கோ போவது பிழையான ஒரு நடைமுறை .

இதை பாடசாலை நிர்வாகங்களும் தமக்கு வசதியாக பல சமயங்களில் பாவித்தார்கள் .வேறு பாடசாலைகளில் இருந்து நல்ல மதிப்பெண் எடுப்பவர்களை ,பெயர் போன விளையாட்டுவீரர்களை தமது பாடசாலைக்கு கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் .இப்படி செய்து பின்னர் பெருமைப்படுவதில் என்ன இருக்கு என விளங்கவில்லை .

மகாஜனா கல்லூரி கிழக்கு மாகாணத்தில் இருந்து சில உதைபந்தாட்ட வீரர்களை கொண்டுவந்து (முஸ்லிம்கள் ) தொடர்ந்து ஆறு முறை சம்பியன் அடித்தது.அதே போல்தான் சபாலிங்கமும் மத்திய கல்லூரியில் இருந்து இந்துவிற்கு வரும்போது எட்டு மாணவர்களை தம்முடன் கொண்டுவந்தார். அவர்கள் அவ்வளவு பெரும் மிக சிறந்த ரிசல்டுடன் பல்கலை கழகம் போய் இந்துவிற்கு பெயரெடுத்து கொடுத்தார்கள் .

இதே போல் தான் பற்றிக்ஸ் இல் இருந்து வந்த சித்திரரஞ்சன் (இவர் பின்னர் கொழும்பு போக்குவரத்து A.S.P)யாழ் இந்துவில் நாலுவருடமாக விளையாடிக்கொண்டிருந்த விக்கியின் இடத்தை பறித்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குவில் இந்து, மானிப்பாய் இந்து,சாவகச்சேரி இந்து (இன்னும் பல) பாடசாலைகளில் மிக நல்ல பெறுபேறுகளை பெற்றவர்களை யாழ் இந்துவும்,சென் ஜோன்சும் எடுத்து விடுவார்கள்.இதே போல் நெல்லியடி மகா வித்தியாலயம், வேலாயுதம் மகா வித்தியாலயம் போன்றவற்றின் சிறந்த மாணவர்களை ஹாட்லி கல்லூரி உள்வாங்குவார்கள்.ஆதலால் தான் இவ்விரு பாடசாலைகளும் நல்ல பெறுபேறுகளை பெற்ற அதிக மாணவர்களை பல்கலைகளகத்துக்கு அனுப்பியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

இதே முறை விளையாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது.கிறிக்கட்டில்,உதைப்பந்தில் சிறந்த மாணவர்களை பிரபல்யமான பாடசாலைகள் உள்வாங்கி விளையாட்டிலும் தாம் தான் சிறந்தவர்கள் என காட்டினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பாடசாலை அதிபரும், நிர்வாகமும்....

தனது பாடசாலைக்கு பெயர் வர விரும்புவதை,

தடுப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்.

உரும்பிராய் இந்துக்கல்லூரியில் படிப்பவர், யாழ் இந்துவில் படிக்கப் போகும் போது...

லஞ்சம் கொடுத்து, படிப்பை ஆரம்பிக்கவில்லை.

தனது, ஆரம்ப கட்ட தகுதித் தேர்வை எழுதியே... பாடசாலையில் இடம் பிடிக்கின்றார்.

யாழ் இந்துக் கல்லூரியின் அருகில் இருக்கும்... போளை அடிக்கும் மாணவனை கல்லூரியில் சேர்த்தால்...

கல்லூரிக்கு என்ன பெருமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உழுகிற மாடு எல்லா வயலிலும் உழுமாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் இனி... கனடாவின் தலைநகரத்தில் இருக்காமல்,

செவ்விந்தியர் பகுதியில் போய்... இருப்பார், என நம்புகின்றேன். :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பணக் குடாநாட்டிலுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில்மிகவும் கூடுதலான புள்ளிகளை வாங்கிய மாணவர்களுக்கு பாடசாலி அனுமதியளித்து. தனது பெயரை இற்றைவரை காப்பாறிக்கொண்டு வருகிறது. மாறாக அம்மாணவர்கள் யாழ் இந்துவின் ஆசிரியர்களது பாடபோதனையை மட்டுமே பின்பற்றி உயர்கல்விக்குத் தெரிவுசெய்யப்படுவதில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துத் தனியார் கல்விநிலைய வாங்கில்களையும் தேய்த்தே திறமைச் சித்தியெய்துகிறார்கள். இதில் யாழ் இந்துவுக்கு என்ன பெருமையோ எனக்குத் தெரியாது.

கனடாவில் ஒவொரு பாடசாலைக்கும் தர வரிசையில் (Rating) புள்ளிகள் வழங்கியிருப்பார்கள். உச்சப் புள்ளி 10 ஆகும். இந்த தரப்படுத்தல்களின் அடிப்படையிலான புள்ளிகள் பல விடயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு வழங்கப்படுகின்றது. 10இற்கு 5 எடுக்கின்ற பாடசாலைகளுக்கும் 10 இற்கு 8 எடுக்கின்ற பாடசாலைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அப்பாடசாலையில் இருக்கும் நூலகம், விளையாட்டு வசதிகள், கலை நாடகம் போன்றவற்றிற்கான வசதிகள், பிற தாய் மொழி பாடங்கள் (தமிழ்,சீனம், இந்தி) கற்பிப்பதற்கானச வசதிகள், விளையாட்டு மைதானம், ஆசிரியர்களின் தரம், பிள்ளைகளின் கல்வித் திறன் போன்ற பல விடயங்களை கவனத்தில் கொண்டு தான் இந்தப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

கனடாவில் அதிக புள்ளிகள் பெற்று இருக்கும் பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்க்க நினைக்கும் பெற்றோர்களின் எண்ணத்தினைக் குறை சொல்ல முடியாது. புத்தகப் படிப்பு தவிர்ந்த ஏனைய விடயங்கள் கற்றுக் கொள்வதற்கும் அதிக வாய்ப்புள்ள பாடசாலைகளில் தம் பிள்ளைகள் படிப்பதைத் தான் பொறுப்புணர்வுள்ள எந்தப் பெற்றோரும் நினைப்பினம். சிறந்த ஆசிரியர்கள், சிறந்த கல்வி வழங்கள் மற்றும் அதற்கான வசதிகள் என்பதை ஆராய்ந்து பிள்ளைக்களை தகுந்த பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் எண்ணம் மற்றும் சிந்தனை போன்றவற்றை போற்ற வேண்டும்.

வாழ்க்கையில் எல்லாமே போட்டிதான். போட்டியில் வெல்பவர்கள்தான் முன்னுக்கு வருகின்றனர். ஆயிரம் வியாக்கியானங்கள், எள்ளல்களும் சொன்னாலும் இந்தப் போட்டி மிகுந்த உலகில் தம் வாழ்க்கையில் முன்னுக்கு வர வெற்றி அவசியமாகின்றது. அதை நோக்கி தம் பிள்ளைகளை நகர்த்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனுனுக்கு... உரும்பிராய் இந்துக்கல்லுரியில் படித்த, பொன்னுத்துரை சிவகுமார் யாழ். இந்துக்கல்லூரியில் படிக்க வந்ததால்....

இவ்வளவு அழிவும் வந்தது, என்றும்... யோசிக்கக் கூடிய....மூனாப் பயல்.

அரும் பொருள் அகராதி;

மூனா பயல்: முட்டாள் பெடியன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகாஜனா கல்லூரி கிழக்கு மாகாணத்தில் இருந்து சில உதைபந்தாட்ட வீரர்களை கொண்டுவந்து (முஸ்லிம்கள் ) தொடர்ந்து ஆறு முறை சம்பியன் அடித்தது.அதே போல்தான் சபாலிங்கமும் மத்திய கல்லூரியில் இருந்து இந்துவிற்கு வரும்போது எட்டு மாணவர்களை தம்முடன் கொண்டுவந்தார். அவர்கள் அவ்வளவு பெரும் மிக சிறந்த ரிசல்டுடன் பல்கலை கழகம் போய் இந்துவிற்கு பெயரெடுத்து கொடுத்தார்கள் .

இதே போல் தான் பற்றிக்ஸ் இல் இருந்து வந்த சித்திரரஞ்சன் (இவர் பின்னர் கொழும்பு போக்குவரத்து A.S.P)யாழ் இந்துவில் நாலுவருடமாக விளையாடிக்கொண்டிருந்த விக்கியின் இடத்தை பறித்தார் .

இன்னுமொருவர் இரும்பன் சண்முகலிங்கம்- முதலில் படித்தது ஸ்டான்லி- பிறகு வந்தது சென்ரல்...

நன்றி அர்ஜுன் இந்த திரியை தொடகினதுக்கும் நான் கேட்ட பதில்களை தந்ததிற்கும்..

எனக்கு சில வேலைகள் இருப்பதால் விரிவான பதில் போடா முடியாமல் உள்ளது. நாளை அல்லது மறுநாள் பதில் போடுவேன் கிராமத்தில் இருந்து நகரத்து பள்ளிகளுக்கு,/ பல்கலை கழகங்களுக்கு போவதில் நன்மைகளும் தீமைகளும் உண்டு. அது பற்றி இங்கே உள்ள "முதலாவது" தலைமுறை சரிவர விளங்கவில்லை என்றுதான் சொல்லுவேன். பெரும்பாலான சந்தர்பங்களில் பார்ப்பது "வருப்பில் என்ன நிலை" என்பதே. பெரியளவு போட்டிகள் உள்ள இடத்தில் சிலர் தவறுவது இதனாலேயே. அதே நேரத்தில் தேவையான போட்டி இல்லாவிடிலும் சாதனைகள் படிக்க முடியாது. ஆனால் இது ஒரு குழப்பமான நிலை. மாணவர்களின் தனிப்பட்ட உளவியலையும் உள்ளடக்கியது. இதுபற்றி பிறகு எழுதுகிறேன்.

இது இங்கே வெளிநாட்டுக்கு வந்து வாழ்வை தொடங்குவது போன்றது. ஊரில் மூக்கை பொத்தினால் வாயை திறக்காதவர்கள் இங்கே ஊசிக்குளால் போய் உரலுக்கால் வருவார்கள், அதே நேரத்தில் ஊரில் "கிங்" மாதிரி இருந்தவர்கள் இங்கே 5 - 10 க்கும் நாயாய் பேயாய் அலைவார்கள். நான் பெரிதாக நினைப்பது

எங்கள் தகுதிக்கு ஏற்ற

பாடசாலைக்கு போகாவிட்டால் முதலில் இழப்பது உங்கள் தலைமைத்துவத்தையும், தன்னமிப்பைகையும். இது தனியே இதுக்கலூரியையும் இன்னும் இரண்டு கல்லூரியையும் பற்றி கதைப்பது அல்ல. இந்த பிரச்சனை உலகம் பூராக இருக்கு. தெளிவான பதில் யாருக்கும் தெரியாதால் தான்.

இங்கே ஒரு கூட்டம் பிரைவேட் பாடசாலைக்கும் அனுப்புகிறது....அங்கே போயும் உளவியல் படிக்கிறவர்கள் இருக்கிறார்கள், வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஹை ஸ்கூல் க்கு போய் அதே படிக்கிறவர்கள் இருக்கிறார்கள்..ஒன்று மட்டும் சொல்லாம், அவ்வளது காசு செலவழித்து, உளவியல் தான் படிக்க முடியும் என்றால், பிரைவேட் ஸ்கூல் தேவை இல்லை..அதே நேரத்தில் இப்படியும் எடுக்கலாம், பிரைவேட் ஸ்கூல் க்கு போயே உளவியல் என்றால் அங்கேயும் போகாமல் விட்டிருந்தால் என்ன நடக்கும் :(

  • தொடங்கியவர்

கனடாவில் பாடசாலையை ராங் பண்ணுகின்றார்கள்.அதேபோல் பல்கலைக்கழகம் போகும் போதும் இப்படியான பாடசாலைகளுக்குரிய வித்தியாசம் அவர்களுக்கு தெரியும் .அதற்காக நான் இருக்கும் இடத்தில் இருந்து வேறொரு இடத்தில் இருக்கும் பாடசாலைக்கு பிள்ளையை சேர்க்க முடியாது .

படிக்கும் பிள்ளை எங்கும் படிக்கும் என்பதே அவர்கள் பொலிசி .பல்கலைக்கழக படிப்புத்தான் இங்கு பலர் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றது .அதை மாணவர்கள் தாம் விரும்பியபடி தெரிவு செய்யாலாம் .

அதைவிட கரும்பு வேறொரு திரியில் எழுதிய மாதிரி மருத்துவம் கனடாவில் படிப்பது மிக கஷ்டம் .பல நாடுகளில் இலங்கை போல் A/L நல்ல பெறுபேறு இருந்தால் நேரடியாக மருத்துவம் செய்ய போய்விடலாம் .கனடாவில் அப்படி அல்ல .அதற்குபின்பும் பல படி முறைகள் உண்டு ,அதனால் தான் எம்மவர்கள் பலர் இந்தியா ,யூரோப் ,கரிபியன் என்று மருத்துவம் படிக்க பறக்கின்றார்கள் .பின்னர் கனடா திரும்பி ஒரு சோதனை எடுத்து பாஸ் பண்ணினால் காணும் .முப்பது வயதிற்கு முதல் மருத்துவருக்கு படித்து முடிப்பது என்பது கனடாவில் நினைத்து பார்க்க முடியாதது .

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ படிப்பு என்பது,

ஒரு சேவை. ஒரு மருத்துவருக்கு...

சனி, ஞாயிறு... இரவு,பகல் எல்லாம் துறக்க வேண்டிய தொழில்.

அத்துடன்... எந்நேரமும், மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஒரு, நோயாளியில் பிழை வந்தால்... அவருக்கும், குடும்பத்தவருக்கும் பதில் சொல்ல வேண்டிய தொழில் தான்... மருத்துவத்துறை.

அதையும்... தாண்டியவர்கள் தான், அந்தத் துறையை நாட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹாட்லி பழைய மாணவன் என்ற ரீதியிலே நுணா அண்ணா ஹாட்லி பற்றி குறிப்பிடிருந்ததால் எழுதுகிறேன். எனது நிலைப்பாடும் தமிழ் சிறி அண்ணாவின் கருத்துப் போன்றதே. ஆரம்பத்தில் இருந்து மெரிட் அடிப்படையில் தான் ஹாட்லியினுள் மாணவர்களை சேர்த்தார்கள். இன்னும் சொல்லப் போனால் புலமைப் பரிசில் பரீட்சையில் தேறியவர்களுக்கு முன்னுரிமை, மற்றைய வெற்றிடங்களுக்கு அவர்கள் ஒரு உள் நுழைவுத் தேர்வு வைப்பார்கள். அது ஒரு மிகக் கஷ்டமான சோதினை. அதில் தேவையான மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வெட்டுப் புள்ளி தீர்மானிப்பார்கள். அப்படி வடிகட்டி மாணவர்களை எடுப்பதில் தவறேதும் இல்லை. போட்டியான உலகிலே திறமயானவர்களுக்குத் தான் எப்பவும் முதல் வாய்ப்பு அளிக்கப் படுகிறது. அப்படி திறமையான மாணவர்கள் வரும் போது தான் ஒரு போட்டிச் சூழ்நிலை உருவாகும். இதனால் தான் ஒரு காலத்தில் எமது கல்லூரி பொறியியலாளர்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் என வர்ணிக்கப்பட்டது. இன்றும் அந்த உற்பத்தி தொடர்கிறது.

கடந்த சில வருட பரீட்சை முடிவுகளை இணைக்கிறேன். இவற்றின் மூலம் ஹாட்லிக் கல்லூரி இணையத்தளம். வடிகட்டிய மாணவர்கள் இன்றி இந்த முடிவுகளை எதிர்பார்க்க முடியாது.

Hartley_2010.png

Hartley_2009.png

Hartley_2007.png

Hartley_2006.png

Hartley_2005.png

Hartley_2004.png

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விரிவான... அட்டவணைப் படங்களுக்கும், அருமையான விளக்கத்திற்கும் நன்றி தும்பளை அண்ணா. :D

Edited by தமிழ் சிறி

சிறிய பாடசாலைகளில் படித்து உயர்ந்தவர்களும் உள்ளார்கள், பெரிய பாடசாலைகளுக்கு சென்று தாழ்ந்தவர்களும் உள்ளார்கள். யாழ் நகரப்பாடசாலைகளில் சிறந்த சித்திகளைப்பெற்றுக்கொடுப்பது யாழ் நகருக்கு வெளியே உள்ள ஊர்களைச்சேர்ந்தவர்களே என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால், உரிமை கொண்டாடுவது என்னவோ யாழ் நகரே.

நான் சிறிய பாடசாலை ஒன்றில் படித்து பின்னர் பல காரணங்களின் நிமித்தம் (கூடுதலாக பிரச்சனைகள்) யாழ் நகர் பாடசாலைக்கு மாற்றலாகவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது யாழ் சென்.ஜோன்ஸ் அனுமதிப்பரீட்சையில் சித்தியடைந்து அனுமதி கிடைத்தமையால் பல எதிர்பார்ப்புக்களுடன் இணைந்துகொண்டேன். பல நல்ல விடயங்கள் எனக்கு கிடைத்தாலும், ஊர்ப்பாடசாலையில் இருந்து விலகியதால் நான் வாழ்க்கையில் இழந்தவை பல.

ஊர்ப்பாடசாலைபோல் நகர்ப்பாடசாலையில் தனி மாணவன் மீது அக்கறை செலுத்த மாட்டார்கள். மாணவனின் பின்னணி அதிக செல்வச்செழிப்புடன் காணப்பட்டாலே விளையாட்டு அணிகளில் இணைவதற்கு அதிக வாய்ப்பு கிடைப்பதோடு, கல்வியிலும் சிறந்து விளங்கமுடியும்.

சென்.ஜோன்சிற்கு வரும் மாணவர்களில் ஏறக்குறைய அனைவரும் தனியார் வகுப்புக்களிற்கு செல்பவர்கள். பல தடவைகள் பாடசாலை வகுப்பில் ஆசிரியர் கற்பிக்கும்போது தனியார் வகுப்புக்களிற்கு போகாமல் பாடசாலையையே நம்பி கற்கின்ற மாணவர்கள் கற்கமுடியாதவகையில் குழப்பம் விளைவிப்பார்கள். சுயநலம் எங்கும், எதிலும் அங்கு மேலோங்கி நிற்கும்.

பெரிய பாடசாலைகளில் இணைந்தால் பிள்ளையின் கல்வித்தரம் உயரும், பிள்ளை நல்ல நிலையை அடையும் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை.

பலர் நினைப்பது சென்.ஜோன்ஸ் என்றால் ஆங்கிலத்தில் நன்றாகக்கதைப்பார்கள், ஆங்கிலத்தில் முன்னுக்கு பிள்ளையைக்கொண்டு வருவதற்கு சென்.ஜோன்சில் சேர்க்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், உண்மையில் அங்கு தனியார் வகுப்புக்களிற்கு சென்றுதான் அதிகம் மாணவர்கள் ஆங்கிலமொழி விருத்தி அடைகின்றார்கள். பாடசாலையில் அதிபர் கூட்டங்களின் போது ஆங்கிலத்தில் உரையாற்றுவது, மற்றும் ஓரிரு விடயங்கள் தவிர, மிகுதி எல்லாமே எல்லோரும் எல்லாவற்றிலும் தமிழே. ஆங்கில மொழி விருத்தி அடைவதற்கு சென்.ஜோன்சில் சொல்லிக்கொள்ளுமளவிற்கு ஒன்றும் அங்கு இல்லை.

அர்ஜுன் கூறியதுபோல் சிறந்த, நல்ல பாடசாலையில் பிள்ளையைச்சேர்ப்பிக்கவேண்டும், பிள்ளை அங்கு கற்கவேண்டும் என பெற்றோர் விரும்புவதெல்லாம் வெற்று ஆசை என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை. திறமை உள்ள பிள்ளை, அல்லது முறையாக வழிகாட்டி நடாத்தப்படும் பிள்ளை எங்கு சென்றாலும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி முதல்நிலைக்கு வரும். மிகுதி எல்லாம் போலி வேசங்களே.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலே என்னுடைய கருத்து என்று சொல்லுவதனளால்;

ஒரு பல்கலை பேராசிரியர் உடனான சம்பாசனை; அவர் ஒரு இலங்கை பேராசிரியர், இப்போது அமெரிக்காவில் பேராசியர் ஆக உள்ளார். அவரது மகனுக்கு நான் நினைக்கிறேன் ஹவாட் பல்கலை கிடைக்கவில்லை என்ற கவலையில் இருந்தார்- நான் சந்தித்த போது- ஒருவருடம் கழித்து முயற்சி செய்திருந்தால் கிடத்திருக்குமாம், அதை விடுத்து வேறு ஒரு பல்கலையில் சேர்ந்து படித்திருந்தார், - நான் சந்தித்த போது; அந்த நேரத்தில் மருத்துவத்திர்ற்கு விண்ணபித்திருந்தார்கள்- தெரியாதவர்களுக்காய்- கனடா/ USA மருத்துவம் ஒரு இரண்டாவது படிப்பு, அதற்கு முதல் ஒரு இளமாணி பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் , BSC போன்ற பட்டம் .... என்னிடம் தனது ஆதங்கத்தை சொன்னார்; அவருக்கு அந்த நேரத்தில் சொன்னது, ""ஹவார்ட் இல் கடைசி ஆளாய் போய், சிலவேளைகளில் கடைசி ஆளாய் வருவதை விட, அருகில் உள்ள பல்கலையில் சிறந்த மாணவனாய் வருபவருக்கு, தொடர்ந்து மேற்படிப்பு படிப்பதர்ர்கான சந்தர்பங்கள் அதிகம்"". விளங்ககூடியவாறு சொன்னால், ஒரு சராசரி மாணவன் ஒரு பெரிய பல்கலை கற்பதை, அறிந்து கொள்ளுவதை விட, ஒரு கடை நிலை மாணவன் ஒரு சராசரி பல்கலையில் அறிவது, கற்பது அதிகம்- மொக்கனின் மேடன் திறம்- அதைதான் தெரிவு கமிட்டி களில் பார்பார்கள். என்று சொன்னேன். அவருக்கு நான் நினைக்கிறேன் அவர் இளநிலை படித்த பல்கலையினே மருத்துவம் கிடைத்தது அது வேற கதை. அவருடைய மகன் ஒரு பேய்காய்- நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு -

இன்னும் விளக்கமாய் சொல்லுவது என்றால், இப்ப உள்ள Z கோர் முறையும் அதைத்தான் சொல்ல வருகிறது, சராசரி மாணவனின் தகுதியில் இருந்து எவளவு தூரம் விலத்தி உள்ளார் என்பதை காட்டுகிறது. (தனியே புள்ளியும் அதே கட்டினாலும், இந்த புள்ளி முறையை விட, Z கோர் சிறப்பாக காட்டும். உதரணத்துக்கு, கொழும்பில் சராசரி ஒன்று என்றால், மருத்துவ அனுமதிக்குரிய Z கோர் 1 . 5 , ஆக இருக்கென்று வைத்துக்கொண்டால், அது மன்னருக்கும் கிட்டத்தட்ட 1 . 5 அக்கத்தான் இருக்கும், யாழ்பனத்தும் அதே போலத்தான் இருக்கும். என்ன வித்தியாசம் என்றால், கொழும்பின் சராசரி 275 என்று உள்ளபோது மன்னார் 230 அகவும், யாழ்பாணம் 250 இருக்கக்கூடும்

ஆனால் அவர்கள் என்னத்தை பார்கிறார்கள் என்றால், அந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்களுடன் எவ்வளவு தூரம் விலகி உள்ளார்கள் என்றுதான் பார்கிறார்கள் . எனது முதலாவது வேலைக்கு உனிவேர்சிட்டி மார்க்ஸ் கொடுத்த போது, அவர்கள் கேட்ட கேள்வி, இந்த மார்க்ஸ் எனது பல்கலையில் எந்தனையாவது என்பதே ஆகும்.

இதே முறைப்படி பார்த்தால், பெருமளவிர்ற்கு, பாடசாலைகளுக்கும் பொருந்தும்;

தும்பளையான் இணைத்த அடவனையை பார்த்தல்;

2004 ஆம் ஆண்டு அட்டவனையை எடுத்தால்;

கணிதத்தில் 78 பேர் சோதினை எடுத்து 39 பேர் பல்கலைக்கு -அனுமதிக்கு - தகுதி பெர்ரிருகிரார்கள். கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் 3 S இலும் குறைய எடுத்திருகிறார்கள். நான் சொல்லுவது அந்த மிச்சம் 39 பேர் பற்றித்தான். நான் கதைக்கிறேன். வடமரசியிலேயே பல முறை வடிகட்டி எடுத்த மாணவர்கள் 3 S எடுக்க இயலாமல் இருந்திருக்கிறார்கள். அதவேளை, உந்த வடிகட்டலில் தவறிய பலர், 3 s க்கு கூடவும், அதில் இன்னும் சிலர் பல்கலை அனுமதியும் பெற்றும் இருப்பார்கள்.

எனது நண்பன் ஒருவருக்கு நடத்தது இதுதான்; ஊர் பள்ளிக்கூடத்தில் முதலாவது மாணவன், 5 D எடுத்தார் ஒ லெவெலில் , பிறகு பெற்றோரின் விருப்பத்தால், யாழ் இந்துவிர்ற்கு போனார், இரண்டு தடவை 4 F , அந்த நேரத்தில் 6 D எடுக்க வேண்டும் இந்துவிர்ற்கு போக- காசும் கட்டி சேர்ந்தவர்- கடைசில் கனடா வந்தார், நான் இப்பவும் தேடிக்கொண்டு திரிகிறேன் :(

இன்னுமொன்று, அமெரிக்கா எல்லா நாடுகளில் இருந்தும் நிபுணர்களை எடுத்தால் பிரைன் ட்ரைன் என்று சொல்லுபவர்கள், இதை பற்றி கதைப்பதில்லை..

குறிப்பு,

நெ,

கரும்பு எழுதியதியத்தை வழிமொழிகிறேன்

UK சரியான சுகம் கனடா உடன் ஒப்பிடும் போது ...:(..

கடுபெத்துகிறார் மை லோர்ட்; யாழ்பாணத்து ஆக்கள் கிணத்து தவளையை என்றால் , UK குளத்து தவளை :(

எங்களோட இருக்கிற ஆக்கள் திமிங்கிலம் ஆக்கும். ( ஒரு UK இல் medicine படித்த தமிழ் டாக்டர் சொன்னது -நான் இல்லை -)

விலாசத்தை விட அவரவரின் தனித்தன்மையே அவர்களை உச்ச நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்த அத்தனை பேரும் நல்லநிலையிலா இருக்கிறார்கள்? அதேபோல், புள்ளிகள் குறைந்த பல்கலைகழகங்களில் படித்த எத்தனையோ பேர் நல்ல நிலைக்கு வரவில்லையா? எல்லாம் பெற்றோரின் கைகளிலேயே தங்கியுள்ளது. விலாசத்தைப் பார்த்து பள்ளிகளுக்கு அனுப்புவோரின் நோக்கம் விலாசம் காட்டுவதே தவிர பிள்ளைகளில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

தூரவுள்ள பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதன் மூலம் பெற்றோர் பிள்ளைகளைக் கஸ்டப்படுத்துகிறார்களே தவிர, அவர்களின் நலனைப் பற்றி யோசிப்பதில்லை. தூரவுள்ள பாடாசாலைக்குப் போய்வர, அந்தப் பிள்ளைகள் குறைந்த பட்சம் இரண்டு மணி நேரத்தைச் செலவழிக்கப் போகிறது. அதனால் பிள்ளை, வீட்டிற்கு வரும்போதோ களைத்துத்தான் வரப்போகிறது. அதே, அருகிலிருக்கும் பாடசாலையெனில், அந்த நேரம் மிச்சமாவதோடு, அயலவர்களின் பிள்ளைகளே அவர்களின் நண்பர்களாகவும் இருப்பார்கள். அந்த நண்பர்கள் அனைவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் படிப்பு உட்பட அனைத்து விடயங்களிலும் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கு முக்கியம் ஊக்கமே தவிரப் பாடசாலை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலே என்னுடைய கருத்து என்று சொல்லுவதனளால்;

ஒரு பல்கலை பேராசிரியர் உடனான சம்பாசனை; அவர் ஒரு இலங்கை பேராசிரியர், இப்போது அமெரிக்காவில் பேராசியர் ஆக உள்ளார். அவரது மகனுக்கு நான் நினைக்கிறேன் ஹவாட் பல்கலை கிடைக்கவில்லை என்ற கவலையில் இருந்தார்- நான் சந்தித்த போது- ஒருவருடம் கழித்து முயற்சி செய்திருந்தால் கிடத்திருக்குமாம், அதை விடுத்து வேறு ஒரு பல்கலையில் சேர்ந்து படித்திருந்தார், - நான் சந்தித்த போது; அந்த நேரத்தில் மருத்துவத்திர்ற்கு விண்ணபித்திருந்தார்கள்- தெரியாதவர்களுக்காய்- கனடா/ USA மருத்துவம் ஒரு இரண்டாவது படிப்பு, அதற்கு முதல் ஒரு இளமாணி பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் , BSC போன்ற பட்டம் .... என்னிடம் தனது ஆதங்கத்தை சொன்னார்; அவருக்கு அந்த நேரத்தில் சொன்னது, ""ஹவார்ட் இல் கடைசி ஆளாய் போய், சிலவேளைகளில் கடைசி ஆளாய் வருவதை விட, அருகில் உள்ள பல்கலையில் சிறந்த மாணவனாய் வருபவருக்கு, தொடர்ந்து மேற்படிப்பு படிப்பதர்ர்கான சந்தர்பங்கள் அதிகம்"". விளங்ககூடியவாறு சொன்னால், ஒரு சராசரி மாணவன் ஒரு பெரிய பல்கலை கற்பதை, அறிந்து கொள்ளுவதை விட, ஒரு கடை நிலை மாணவன் ஒரு சராசரி பல்கலையில் அறிவது, கற்பது அதிகம்- மொக்கனின் மேடன் திறம்- அதைதான் தெரிவு கமிட்டி களில் பார்பார்கள். என்று சொன்னேன். அவருக்கு நான் நினைக்கிறேன் அவர் இளநிலை படித்த பல்கலையினே மருத்துவம் கிடைத்தது அது வேற கதை. அவருடைய மகன் ஒரு பேய்காய்- நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு -

இன்னும் விளக்கமாய் சொல்லுவது என்றால், இப்ப உள்ள Z கோர் முறையும் அதைத்தான் சொல்ல வருகிறது, சராசரி மாணவனின் தகுதியில் இருந்து எவளவு தூரம் விலத்தி உள்ளார் என்பதை காட்டுகிறது. (தனியே புள்ளியும் அதே கட்டினாலும், இந்த புள்ளி முறையை விட, Z கோர் சிறப்பாக காட்டும். உதரணத்துக்கு, கொழும்பில் சராசரி ஒன்று என்றால், மருத்துவ அனுமதிக்குரிய Z கோர் 1 . 5 , ஆக இருக்கென்று வைத்துக்கொண்டால், அது மன்னருக்கும் கிட்டத்தட்ட 1 . 5 அக்கத்தான் இருக்கும், யாழ்பனத்தும் அதே போலத்தான் இருக்கும். என்ன வித்தியாசம் என்றால், கொழும்பின் சராசரி 275 என்று உள்ளபோது மன்னார் 230 அகவும், யாழ்பாணம் 250 இருக்கக்கூடும்

ஆனால் அவர்கள் என்னத்தை பார்கிறார்கள் என்றால், அந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்களுடன் எவ்வளவு தூரம் விலகி உள்ளார்கள் என்றுதான் பார்கிறார்கள் . எனது முதலாவது வேலைக்கு உனிவேர்சிட்டி மார்க்ஸ் கொடுத்த போது, அவர்கள் கேட்ட கேள்வி, இந்த மார்க்ஸ் எனது பல்கலையில் எந்தனையாவது என்பதே ஆகும்.

இதே முறைப்படி பார்த்தால், பெருமளவிர்ற்கு, பாடசாலைகளுக்கும் பொருந்தும்;

தும்பளையான் இணைத்த அடவனையை பார்த்தல்;

2004 ஆம் ஆண்டு அட்டவனையை எடுத்தால்;

கணிதத்தில் 78 பேர் சோதினை எடுத்து 39 பேர் பல்கலைக்கு -அனுமதிக்கு - தகுதி பெர்ரிருகிரார்கள். கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் 3 S இலும் குறைய எடுத்திருகிறார்கள். நான் சொல்லுவது அந்த மிச்சம் 39 பேர் பற்றித்தான். நான் கதைக்கிறேன். வடமரசியிலேயே பல முறை வடிகட்டி எடுத்த மாணவர்கள் 3 S எடுக்க இயலாமல் இருந்திருக்கிறார்கள். அதவேளை, உந்த வடிகட்டலில் தவறிய பலர், 3 s க்கு கூடவும், அதில் இன்னும் சிலர் பல்கலை அனுமதியும் பெற்றும் இருப்பார்கள்.

எனது நண்பன் ஒருவருக்கு நடத்தது இதுதான்; ஊர் பள்ளிக்கூடத்தில் முதலாவது மாணவன், 5 D எடுத்தார் ஒ லெவெலில் , பிறகு பெற்றோரின் விருப்பத்தால், யாழ் இந்துவிர்ற்கு போனார், இரண்டு தடவை 4 F , அந்த நேரத்தில் 6 D எடுக்க வேண்டும் இந்துவிர்ற்கு போக- காசும் கட்டி சேர்ந்தவர்- கடைசில் கனடா வந்தார், நான் இப்பவும் தேடிக்கொண்டு திரிகிறேன் :(

இன்னுமொன்று, அமெரிக்கா எல்லா நாடுகளில் இருந்தும் நிபுணர்களை எடுத்தால் பிரைன் ட்ரைன் என்று சொல்லுபவர்கள், இதை பற்றி கதைப்பதில்லை..

குறிப்பு,

நெ,

கரும்பு எழுதியதியத்தை வழிமொழிகிறேன்

UK சரியான சுகம் கனடா உடன் ஒப்பிடும் போது ... :(..

கடுபெத்துகிறார் மை லோர்ட்; யாழ்பாணத்து ஆக்கள் கிணத்து தவளையை என்றால் , UK குளத்து தவளை :(

எங்களோட இருக்கிற ஆக்கள் திமிங்கிலம் ஆக்கும். ( ஒரு UK இல் medicine படித்த தமிழ் டாக்டர் சொன்னது -நான் இல்லை -)

வோல்கனோ, உங்களின் கூற்றுடன் உடன் படுகிறேன் அதாவது அரைவாசிப் பேர் 3S கூட எடுக்கவில்லை. வெட்கப் பட வேண்டிய விடயம் தான். முன்னைய காலங்களில் கெட்டிக்கார மாணவர்களுடன் அதிகம் மினக்கெட்டு அவர்களை Island rank, district rank அடிக்க வைக்கப் பாடுபடுவார்கள். கடைநிலை மாணவர்களின் மீதான கவனிப்பு குறைவு. தற்போது நிலைமை மாறி விட்டது. யாரும் கணிதம், விஞ்ஞானம் எண்டு விரும்பிய துறையை படிக்க முன்னர், பாடசாலையும் ஒரு தரப் படுத்தல் சோதினை வைத்துதான் அவர்கள் துறைகளை தெரிவு செய்ய விடுகிறார்கள். முன்பு பலர் பெற்றோர் என்ஜினியரா வா, டாக்டரா வா எண்டு குடுக்கும் அரியண்டத்தால அந்தத் துறைகளை தெரிவு செய்து அழிந்திருக்கிரார்கள். இப்போது பாடசாலையே அவர்களுக்கான துறைகளில் வழிகாட்டுகிறது. ஹாட்லி ஒரு சிறந்த கருவி, அதனைப் பயன்படுத்தி முன்னேற வேண்டியது மாணவர்களின் கடமை. அத்துடன் எமது கல்லூரியில் படித்து, பல்கலைக்குப் போக முடியாத மாணவர்களுக்காக ஒரு தொழில் நுட்பக் கல்லூரி ஆரம்பிப்பது பற்றி அதிபர் ஒரு திட்டம் கூறியிருந்தார். நடைமுறைப் படுத்த பல வருடங்கள் எடுக்கும் என நினைக்கிறன் ஆனால் மிகவும் நல்ல திட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.