Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை : சாந்தி வவுனியன் அவர்களின் "கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு” கவிதை நூல் வெளியீடு. இன்று

  17:00

01-08-2012

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் , கே கே நகர். சென்னை 78. http://discoverybookpalace.com/  

சாந்தி வவுனியன் அவர்களின் "கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு” 

கவிதை நூல் வெளியீடு

விழா தலைமை ஏற்று நூலை வெளியிடுவர்

இயக்குநர் மு.களஞ்சியம்

முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு 

சிரப்புரை : இயக்குநர் புகழேந்தி தங்கராசு

வாழ்த்துரை: கவிஞர் ஈழவாணி

லண்டனில் இருந்தபடி ஏற்புரை:

நூலாசிரியர் சாந்தி வவுனியன் 

விழா ஏற்பாடு & நன்றியுரை: மனிதம் பதிப்பகம்- அக்னி சுப்ரமணியம் 

---------------

கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச் சொட்டு...

வாழ்த்துக்கள் சாந்தி.

உங்களின் தீபம் தொலைகாட்சி சந்திப்பு நிகழ்ச்சி பார்த்தேன். பேட்டி கண்டவருக்கு இன்னும் ஆணித்தரமாக சில கருத்துகளை சொல்லி இருக்கலாம் என்று எனக்கு தோணியது.

  • முக்கியமாக நீங்கள் பிறந்த இடம் இன்னும் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக, மக்களை மீள குடியேற்ற விடமால் அரசாங்கம் தடுத்து வருவது.
  • புனர்வாழ்வு பெற்ற போராளிகளை, குறிப்பாக பெண் போராளிகளை கூட அரச புலனாய்வாளர்கள் தொடர்ந்து தொல்லை கொடுப்பதால் தான், பெரும்பாலான இடங்களில் அவர்களுக்கு வேலை கொடுக்க பயபடுகிறார்கள்.
  • கிழக்கு மாகாணத்தில் போர் முடிந்து ஐந்து வருடங்கள், கிழக்கின் உதயம் என்று அரசாங்கம் அபிவிருத்தி தொடக்கி ஐந்து வருடங்கள், இன்னும் உங்கள் (நேசக்கரத்தின் ) உதவிகளை வேண்டி மக்கள் இருக்கிறார்கள் என்றால் யார் காரணம் என்று திரும்ப கேட்டிருக்க வேண்டும்.
  • அவருடைய கேள்விகள், உங்கள் கவிதை சம்பந்தமாக இல்லாமல், நடப்பு அரசியல், புலிகள் மீதான பழிசுமத்தல்கள் போன்ற கருத்து பட அமைந்தது போல இருந்தது.
  • புலம்பெயர் பணக்கார இரண்டாம்தாரம் தேடும் கனவாங்கலாலும் எங்களின் பெண் போராளிகளின் எண்ணங்கள், புரட்சிகர சிந்தனைகள் உடைக்கபடுகின்றன.
  • இன்னும் ஓர் புரட்சி அல்லது விடுதலை போராட்டம் வரும் என்று கேட்டத்துக்கு, அது அரசாங்கம் எவ்வளவு தூரம் மக்களை கொடுமைபடுத்துகிறது, தீர்வு தர பின்னடிக்கிறதோ, அவ்வளவு விரைவாக தொடங்கும் என்பது எனது நம்பிக்கை மட்டுமல்ல, விடுதலையை வேண்டி நிற்கும் அனைவரினதும் நம்பிக்கை என்று சிரிக்காமல் சொல்லி இருக்க வேண்டும்.
  • விடுதலை போராளிகள், போராளிகளாக பிறப்பவர்கள் அல்லர் உருவாக்க படுபாவ்ர்கள் என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லி இருக்க வேண்டும்.

உங்களுக்கு என்ன சூழ்நிலையோ எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு மனசில் பட்டத்தை சொன்னேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் அக்கினி சுப்பிரமணியம். இயக்குனர் புகழேந்தி தங்கராசு மற்றும் ஈழவாணி

553418_2304466426675_304052666_n.jpg

வாழ்த்துக்கள் சாந்தி.

வீடியோ நேற்றுப்பார்த்தேன் பேட்டி மிக நன்றாக இருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தி.

வீடியோ நேற்றுப்பார்த்தேன் பேட்டி மிக நன்றாக இருந்தது .

உண்மையை சொல்லுங்கள் அர்ஜுன் அண்ணா இந்த சந்திப்பு[ பேட்டி] நன்றாகாவா இருக்குறது ?...

பேட்டிஎடுத்தவர் கவிதை பற்றி கேட்காமல் விசர் கேள்வி கேட்கிறார் சாந்தி அக்காவும் சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் சிரிக்கிறார்.ஒரு கவிஞர், அவ்வின் புத்தக வெளியீடூ நடக்கப் போகுது அதை விட நேசக்கரத்தை கொண்டு நடத்துபவர் அதுக்கேற்ற மாதிரி சுமாட்டாகவும்.பதில்களை ஆணித்தரமாகவும், உறுதியாவும் வைத்திருக்க வேண்டும் அல்லவா?

இது எனது கருத்து மனதை பாதித்தால் சாந்தி அக்கா மன்னிக்கவும்

உண்மையை சொல்லுங்கள் அர்ஜுன் அண்ணா இந்த சந்திப்பு[ பேட்டி] நன்றாகாவா இருக்குறது ?...

பேட்டிஎடுத்தவர் கவிதை பற்றி கேட்காமல் விசர் கேள்வி கேட்கிறார் சாந்தி அக்காவும் சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் சிரிக்கிறார்.ஒரு கவிஞர், அவ்வின் புத்தக வெளியீடூ நடக்கப் போகுது அதை விட நேசக்கரத்தை கொண்டு நடத்துபவர் அதுக்கேற்ற மாதிரி சுமாட்டாகவும்.பதில்களை ஆணித்தரமாகவும், உறுதியாவும் வைத்திருக்க வேண்டும் அல்லவா?

இது எனது கருத்து மனதை பாதித்தால் சாந்தி அக்கா மன்னிக்கவும்

பேட்டி சம்மந்தமான பலரது விமர்சனங்களை பார்த்துவிட்டு என்னதான் கதைக்கின்றார்கள் என்று அறியும் ஆவலில் நானும் இன்று முழுமையாக காணொளியை பார்த்தேன். வினாதொடுப்பவர் ஓர் இடத்தில் யாழ்ப்பாண கண்கள் என்று கூறி தனது சுயத்தின் பகுதியை இயல்பாக வெளிப்படுத்துவது தவிர, மிகுதியானவற்றில் திட்டமிட்ட திசைதிருப்பல்கள் உள்ளதாக எனக்கு தெரியவில்லை. எனினும், சாந்தியிடம் அழுத்திப்பிடித்து சாந்தி வாய்மூலம் சில விசயங்களை சொல்லவைக்கவேண்டும் எனும் நோக்கில் பேட்டி காண்பவர் பிரயத்தனம் செய்ததையும் தெளிவாக காணமுடிகின்றது.

பொதுவாக பார்த்தால் சாந்தியின் பதில்களின் அடிப்படையிலேயே அவர் வினா தொடுக்கின்றார். தொடர்பு இல்லாமல் எதேச்சையாக அவர் சாந்தியிடம் வினா தொடுக்கவில்லை. அதாவது, இன்னோர் வகையில் கூறுவதானால் உங்கள் பார்வையில் பார்ப்பினும் சாந்தியே அவருக்கு பிடி/வாய்ப்பு கொடுத்ததுபோல் உள்ளது.

சுருக்கமாக கூறினால், கும்பலில் கோவிந்தா போடாமல் பலதரப்பட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி சம்மந்தமான பலரது விமர்சனங்களை பார்த்துவிட்டு என்னதான் கதைக்கின்றார்கள் என்று அறியும் ஆவலில் நானும் இன்று முழுமையாக காணொளியை பார்த்தேன். வினாதொடுப்பவர் ஓர் இடத்தில் யாழ்ப்பாண கண்கள் என்று கூறி தனது சுயத்தின் பகுதியை இயல்பாக வெளிப்படுத்துவது தவிர, மிகுதியானவற்றில் திட்டமிட்ட திசைதிருப்பல்கள் உள்ளதாக எனக்கு தெரியவில்லை. எனினும், சாந்தியிடம் அழுத்திப்பிடித்து சாந்தி வாய்மூலம் சில விசயங்களை சொல்லவைக்கவேண்டும் எனும் நோக்கில் பேட்டி காண்பவர் பிரயத்தனம் செய்ததையும் தெளிவாக காணமுடிகின்றது.

பொதுவாக பார்த்தால் சாந்தியின் பதில்களின் அடிப்படையிலேயே அவர் வினா தொடுக்கின்றார். தொடர்பு இல்லாமல் எதேச்சையாக அவர் சாந்தியிடம் வினா தொடுக்கவில்லை. அதாவது, இன்னோர் வகையில் கூறுவதானால் உங்கள் பார்வையில் பார்ப்பினும் சாந்தியே அவருக்கு பிடி/வாய்ப்பு கொடுத்ததுபோல் உள்ளது.

சுருக்கமாக கூறினால், கும்பலில் கோவிந்தா போடாமல் பலதரப்பட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார்கள்.

கலைஞன் இந்த பேட்டி சாந்தி அக்காவின் "கண்கள் சொட்டும் கவிதை" என்ட நூல் வெளியீடு தொடர்பாகவே நடை வெற்றது ஆகவே அவர் அந்த நூல் சம்மந்தமாக கேள்விகள் கேட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து...அவரும் வேண்டும் என்றே சில தேவையில்லாத கேள்விகள் கேட்ட மாதிரி எனக்குப் பட்டது...சாந்தி அக்காவைப் பற்றி மேலே எழுதி விட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.

கவிதைநூல் வெளியீடு படங்கள்:-

IMG_4243.jpg

IMG_4236.jpg

IMG_4271.jpg

IMG_4248.jpg

IMG_4245.jpg

IMG_4274.jpg

IMG_4278.jpg

IMG_4284.jpg

IMG_4283.jpg

IMG_4253.jpg

IMG_4261.jpg

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வாழ்த்துக்கள் சாந்தி அக்கா[/size]

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக வெளியீட்டு படங்களைப் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது..உங்கள் முயற்சிகள் அனைத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள் சாந்தி அக்கா..

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

பிரித்தானியாவில் சாந்தி வவுனியனின் ‘கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு’ கவிதைநூல் அறிமுகவிழா இடம் பெற்றது.[/size][size=4]

மேஜர் சிட்டுவின் 15ம் ஆண்டு நினைவை முன்னிட்டு மேஜர் சிட்டுவுக்கு சமர்ப்பணமாக இக்கவிதைநூல் 04.08.2012 அன்று வெளிவந்துள்ளது.[/size][size=4]

போரில் உயிரிழந்த மக்களுக்கும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. லெப்.கேணல் ராதா அவர்களின் தந்தையார் கனகசபாபதி அவர்கள் விளக்கேற்றி வைக்க மேஜர் சிட்டுவின் திருவுருவப்படத்திற்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.[/size][size=4]

சிறந்த பாடகனாகவும் சிறந்த கலைஞனாகவும் வாழ்ந்த போராளி சிட்டுவின் நினைவுகளைத் தாங்கிய நிகழ்வில் நிகழ்வை தலைமையேற்று சிறப்புரையாற்றி நிகழ்வைத் தொகுத்து வழங்கிய சந்திரிக்கா சிட்டுவைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.[/size][size=4]

சிட்டுவுடன் ஒன்றாகப் பயிற்சி முடித்து ஒன்றாக அரசியல் பணி செய்த காலங்களை சந்திரிக்கா தனதுரையில் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையினை ஜெயக்குமார் மகாதேவன் ஆற்றினார்.[/size][size=4]

கவிதைநூலின் முதல் பிரதியை லெப்.செல்லக்கிளியம்மானின் சகோதரரும் தொழிலதிபருமான சூரி அவர்கள் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் கண்ணன் அவர்கள் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.[/size][size=4]

சிறப்புப்பிரதிகளை ரமேஷ் வவுனியன் வழங்க மூத்த பெண் போராளிகளில் ஒருவரான சீதா ஜீவன், சுதாஜினி றவி, எல்லாளன் திரைப்பட இயக்குனர் சந்தோஸ், வல்வை நண்பர்கள் சார்பில் உதயணன் ,லெப்.கேணல்.ராதாவின் சகோதரி சகிலா,மானுடவியல் ஆய்வாளர் விசாகன் , மூத்த பெண் போராளி சந்திரிக்கா, தமிழ்த்தகவல்நடுவம் நிறுவனர் வரதகுமார், மற்றும் கணேஸ், திருமலை பாலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூல் மதிப்பீட்டுரையினை நவஜோதி யோகரட்ணம் அவர்கள் வழங்கினார்.[/size][size=4]

நிகழ்வின் நிறைவாக நூலாசிரியரின் பதிலுரையுடன் நேசக்கரம் மனிதாபிமானப் பணிகள் பற்றிய அறிமுகத்தோடும் தொடர்ந்த தாயக மக்களுக்கான பணிகள் பற்றிய விபரங்களும் பகிரப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.[/size][size=4]

http://ttnnews.com/35481.html[/size]

[size=5]வாழ்த்துக்கள் சாந்தி!![/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

[size=1][size=4]வாழ்த்துக்கள் சாந்தி. உங்களின் வெளியீடு நடந்த சமயம் நான் இங்கு நாட்டில் இல்லை. விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தேன். வாழ்த்துத் தெரிவிக்க அதனால் தாமதமாகி விட்டது. தங்களின் தீபம் ஒளிபரப்பையும் யாழினூடாகப் பார்த்தேன். வாழ்த்துக்கள் மறுபடியும்[/size]...[/size]

  • கருத்துக்கள உறவுகள்
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் – டென்மார்க்

சாந்திவவுனியன் எழுதிய மேயர் சிட்டு தொடர்பான கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு; எனும் கவிதை நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

IMG_268012-300x199.jpg23 .09 .2012 அன்று தமிழர் நடுவம் டென்மார்க்கினால் பில்லுண்ட் நகரத்தில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஞாயிறு மலை 4.30 மணியளவில் பொதுசுடர் ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தேசியகொடி கொடிப்பாடலுடன் ஏற்றப்பட்டது. அகவணக்கத்தினை தொடர்ந்து பொது மாவீரர்கள், தியாகதீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர், மேஜர் சிட்டு, தியாகி தங்கவேல் விஜயராஜ் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட தமிழீழ உணர்வாளர்கள் தீபங்கள் ஏற்றி மலர் வணக்கத்தினை செலுத்தினர், மேலும் நிகழ்வில் எழுச்சி நடனம் நடை பெற்றது. இன்றைய நிகழ்வின் சிறப்பு விடையமாக தேசியத் தலைவர் தொடர்பான அகரம் அமுதன் எழுதிய வெண்பா வடிவிலான கரிகாலன் இற்றேடுப்பு எனும் கவிதை நூலின் வெளியீடு நடை பெற்று மதிப்பீட்டு உரையும் வழங்கப்பட்டது. அதே போன்று சாந்திவவுனியன் எழுதிய மேயர் சிட்டு தொடர்பான கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு; எனும் கவிதை நூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் உதவி பிரதமர் அவர்கள் தியாகி திலீபன் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கவுரையினையும் வழங்கினார்.

தொடர்ந்து சமகால எதிர்கால அரசியல் செயல்பாடுகள் தொடர்பாகவும், தமிழர் நடுவம் டென்மார்க்கின் தோற்றமும் தேவையும்,மற்றும் முள்ளிவாய்க்காலின் இறுதி கணங்கள் பற்றியும் போராளிகள் கருத்துரைகளை வழங்கினார்கள்.

கவிதைகள், மற்றும் நன்றியுரையினை தொடர்ந்து தேசிய கோடி இறக்கலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் பாடல் ஒலிக்க உணர்வு பூர்வமாக நிகழ்வு நிறைவு பெற்றது.

இந் நிகழ்வில் டென்மார்க்கின் பல பகுதிகளிலும் இருந்து உணர்வாளர்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.

http://tamilcentre.dk/?p=437

Edited by sathiri

சாந்தியின் கவிதைத்தொகுதி வெற்றிகரமாக வெளிவர மனதார வாழ்த்துகின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.