Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஒலிம்பிக் போட்டி: சில சுவாரஸ்யமான தகவல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தங்கம் வென்றது சீனா! இந்தியர்கள் ஏமாற்றம்.

லண்டன்:லண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்று சாதித்தது சீனா. பெண்களுக்கான 10 மீ., "ஏர் ரைபிள்' துப்பாக்கி சுடுதலில் சீனாவின் சிலிங் யி தங்கம் வென்று அசத்தினார். துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடிய இந்திய நட்சத்திரங்கள் தோல்வி அடைந்து ஏமாற்றினர். பாட்மின்டன் வீரர் காஷ்யப் மட்டும் வெற்றி பெற்று ஆறுதல் தந்தார்.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக துவங்கியது. வாண வேடிக்கை, வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு, நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சி என லண்டன் நகரமே திருவிழா கோலம் பூண்டது. நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீ., "ஏர் ரைபிள்' துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனாவின் சிலிங் யி 502.9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றார். வெள்ளி பதக்கத்தை போலந்தின் சில்வியா போகாக்கா (502.2 புள்ளி), வெண்கலப் பதக்கத்தை சீனாவின் டான் யு (501.5 புள்ளி) பெற்றனர்.

இந்தியா "அவுட்': வில்வித்தை ஆண்கள் அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இந்தியா சார்பில் தருண்தீப் ராய், ராகுல் பானர்ஜி, ஜெயந்தா தலுக்தார் பங்கேற்றனர். இப்போட்டி 214-214 என சமநிலை அடைந்தது. இதனால் இரு அணியினருக்கும் "டை பிரேக்கர்' வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் இந்திய வீரர்கள் சொதப்ப 27-29 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினர்.

ஜுவாலா ஜோடி ஏமாற்றம்: பாட்மின்டன் கலப்பு இரட்டையர் "சி' பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா, திஜு ஜோடி, இந்தோனேஷியாவின் டான்டோவி அகமது, லிலியானா நாட்சிர் ஜோடியிடம் 16-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இத்தோல்வியின் மூலம் ஜூவாலா-திஜு ஜோடி காலிறுதிக்கு முன்னேற, அடுத்து நடக்கவுள்ள டென்மார்க் மற்றும் தென் கொரியா அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

சுவர்ன் சிங் வாய்ப்பு: துடுப்பு படகு ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுவர்ன் சிங் விர்க் பங்கேற்றார். இதில் பந்தய தூரத்தை 6 நிமிடம் 54.04 வினாடிகளில் கடந்த சுவர்ன் சிங், 4வது இடம் பிடித்தார். இருப்பினும் காலிறுதிக்கு முன்னேற இன்னும் ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது. இன்று நடக்கவுள்ள போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதிக்கு தகுதி பெறலாம்.

அன்கிடா தோல்வி: டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிடா தாஸ், ஸ்பெயினின் சாரா ராமிரசை சந்தித்தார். இதில் அன்கிடா தாஸ் 9-11, 8-11, 7-11, 11-8, 2-11 (1-4) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

விஜய் குமார் ஏமாற்றம்: துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீ., "ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்று நடந்தது. இந்தியா சார்பில் விளையாடிய விஜய் குமார் 570 புள்ளிகள் பெற்று 31வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

காஷ்யப் ஆறுதல் வெற்றி

பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் "டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் காஷ்யப், பெல்ஜியத்தின் யுகான் டானை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய காஷ்யப் 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஜூலை 31ம் தேதி நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் காஷ்யப், வியட்னாம் வீரர் டியன் மின்க் நுகுயனை சந்திக்க உள்ளார்.

http://www.thedipaar.com/news/news.php?id=49843

  • Replies 102
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியா முதலாவது தங்கப்பதக்கத்தை பாரம் தூக்குவதில் Om Yun Chol வென்றார். இவர் தனது நிறையை விட 3 மடங்கு பாரத்தை தூக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

om-yun-chol.jpg

Edited by nunavilan

போட்டி தொடங்க முதலிலேயே தமிழ்நாடு ஆட்டத்தை கோட்டைவிட்டு விட்டதாக கூறுகிறது டெக்கான் குறொனிகல்.

http://www.deccanchronicle.com/channels/sport/others/no-olympic-cheer-tamil-nadu-226

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

31-michel-morganella-300.jpg

கொரியர்கள் தலையில் தீ வைக்க சொன்ன ஸ்விஸ் வீரர்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை.

லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தென் கொரிய கால்பந்து அணியினரை, மங்கோலாய்ட்ஸ் (Down's Syndrome பிரச்சனை உள்ளவர்கள்) என்று டுவிட்டர் இணையதளத்தில் விமர்சித்த சுவிட்சர்லாந்து வீரர் மைக்கேல் மார்கனில்லா ஒலிம்பிக் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக, உடனடியாக போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் தென் கொரியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இதில் தென் கொரிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு பிறகு டுவிட்டரில் கருத்து தெரிவித்த சுவிட்சர்லாந்து வீரர் மைக்கேல் மார்கனில்லா, தென் கொரியர்களை 'மங்கோலாய்ட்ஸ்' என்று குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறுகையில், தென் கொரிய மக்கள் அனைவரும் மங்கோலாய்ட்ஸ். அவர்களின் தலைகளில் தீ கூட பற்ற வைக்கலாம் என்று கூறியிருந்தார்.

இதற்கு சுவிட்சர்லாந்து ஒலிம்பிக் அணியை தலைமையேற்று நடத்தும் ஜியன் கில்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, மைக்கேல் மார்கனில்லா டுவிட்டரில் தெரிவித்த கருத்தின் மூலம் தென் கொரிய மக்கள் மற்றும் அந்நாட்டு கால்பந்து அணியை கேவலப்படுத்தி உள்ளார். இது தண்டனைக்குரிய ஒரு செயலாகும். ஒலிம்பிக் போட்டியின் விதிமுறைகளை மீறி உள்ள மைக்கேலை, சுவிட்சர்லாந்து ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கி உள்ளோம்.

எங்கள் அணியின் வீரரின் செயலுக்காக, தென் கொரிய ஒலிம்பிக் வாரியம் மற்றும் தென் கொரிய கால்பந்து வாரியத்திடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த நடவடிக்கையின் மூலம் மைக்கேல் தனது தவறை உணர்நது கொள்வார் என்று கருதுகிறேன் என்றார்.

பிரென்சு மொழியில் கருத்து வெளியிட்ட மைக்கேல் மார்கனில்லாவின் டுவிட்டர் இணையத்தளத்தில் இருந்து, படங்களை எடுத்த சுவிட்சர்லாந்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதனால் அந்த இணையதள முகவரியை மைக்கேல் நீக்கிவிட்டார்.

மேலும் மைக்கேல் மார்கனில்லா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். சுவிட்சர்லாந்து ஒலிம்பிக் வாரியம் அளித்த தண்டனையை தான் ஏற்று கொள்வதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து மைக்கேல் மார்கனில்லா கூறியதாவது, தென் கொரிய மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மேலும் சுவிட்சர்லாந்து அணியினர் மற்றும் கால்பந்து வீரர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நான் ஏற்று கொள்கிறேன். தென் கொரியாவிடம் தோல்வி அடைந்ததால், கோபத்தில் நான் பெரிய தவறை செய்துவிட்டேன் என்றார்.

முன்னதாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட கிரேக்க தத்தி தாண்டுதல் வீரர் வோயுலா பப்பாகிறிஸ்டோ, டுவிட்டர் இணையதளத்தில் தவறான கருத்துகளை வெளியிட்டார். இதற்காக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15434.jpg

ஒலிம்பிக்கில் முஸ்லிம்களுக்காக தளர்த்தப்பட்ட விதிமுறை.

முஸ்லிம்களுக்காக பளு தூக்குதல் போட்டியில் முதல் முறையாக ஆடை விதி முறைகள் தளர்த்தப்பட்டது. அதன்படி முழு உடலையும் மறைக்கும் உடையணிந்து ஒலிம்பிக் பளு தூக்குதலில் பங்கேற்றார் துனிஷிய வீராங்கனை காதா ஹசீன்.

பளு தூக்குதலில் பங்கேற்பவர்கள் தங்கள் கைகளையும், கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையில் உடையணியக் கூடாது என்பது பொதுவான விதி.

இந்நிலையில் கடந்தாண்டில் அமெரிக்கா சார்பில் இந்த விதியை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக அமெரிக்கா இந்த கோரிக்கையை முன்வைத்தது. அதன்படி பளு தூக்குதலில் முழு உடை அணிந்து பங்கேற்கலாம் என்று விதி மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக முழுமையாக உடலை மறைக்கும் உடையை அணிந்து போட்டியில் பங்கேற்றார் துனிஷிய வீராங்கனை காதா ஹசீன்.

19 வயதாகும் அவர் 69 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வீரகேசரி.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

02-russell-and-lauryn-mark-600.jpg

சாதனை தங்கத்துக்கு குறி வைக்கும் ஆஸ்திரேலிய துப்பாக்கி சுடும் ஜோடி!

லண்டன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு ஜோடி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்களத்தை பரபரப்பாக்கியுள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் ஜோடியாக தங்கத்தைத் தட்டிப் பறிக்க இவர்கள் களம் இறங்கியுள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீரர் ருஸ்ஸல். இவரது மனைவி லாரன் மார்க். இவரும் துப்பாக்கிச் சுடும் வீராங்கனைதான். இருவரும் இணைந்து லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கத்திற்காக களம் குதித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கணவன், மனைவியாக யாரும் சேர்ந்து தங்கம் வென்றதில்லை. அந்தச் சாதனையை தாங்கள் படைக்கப் போவதாக லாரனும், ருஸ்ஸலும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல இணைந்து ஒரே குரலில் கூறுகின்றனர்.

ருஸ்ஸல் சாமானியப்பட்ட ஆள் இல்லை. 1996ல் அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார்.இவரது மனைவி லாரன் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்தார். இம்முறை இருவரும் இணைந்து ஜோடியாக பங்கேற்றுள்ளனர்.

அதி நவீன பிரெட்டா ஷாட் கன்னுடன் இவர்கள் போட்டிக்கு வந்துள்ளனர். இந்த நவீன துப்பாக்கியுடன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளவர்கள் மொத்தமே நான்கு பேர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர் ருஸ்ஸல். இருவரும் ஒலிம்பிக் போட்டிக்காக லண்டன் வ்நது விட்டதால் இவர்களது 6 வயது மகள் சியாரா, 5 வயது மகன் இன்டி ஆகியோரைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு ஆயாவை ஏற்பாடு செய்து விட்டு வந்துள்ளனராம். ருஸ்ஸலுக்கு லாரன் 2வது மனைவிதான். முதல் மனைவி மூலம் 13 வயதில் ஒரு குழந்தையும் ருஸ்ஸலுக்கு உள்ளதாம்.

இன்னொரு சமாச்சாரம் இவர்களைப் பற்றி - கணவன் மனைவியான இவர்களுக்கு கேம்ஸ் வில்லேஜில் ஒரே அறை ஒதுக்கப்படவில்லை. மாறாக தனித் தனியாகத்தான் தங்க வேண்டும் என்று கேம்ஸ் வில்லேஜ் அதிகாரிகள் கூறியது நினைவிருக்கலாம்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் வளையங்கள், ஐந்து கண்டங்களை குறிப்பதற்காக... ஐந்து நிறங்களில் உள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

நேற்று பூரண சந்திரன், ரவர் பிரிட்ஜில் (Tower Bribge) தோன்றி ஆறாவது வளையத்தையும் வைத்த, கண்கொள்ளாக் காட்சி.

306427_455354474484914_1633858959_n.jpg

article_624b1bff389310ac_1344067561_9j-4aaqsk.jpeg

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பிரெஞ்சுக்காரர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது

[size=5]இங்கிருந்து ஒலிம்பிக்கில் விளையாட போயிருக்கும் எவராவது தங்கப்பதக்கம் வென்றால் அவர்களுக்கு ஆளுக்கு 50 ஆயிரம் ஈரோக்கள் தரப்படும் என அவர்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் சங்கத்திடம் காசு இல்லை. அரசிடமும் இல்லை. இந்த நிலையில் பிரெஞ்சு அதிபர் விளையாடுபவர்களை உற்சாகப்படுத்தும் போது மனதுக்குள் என்ன நினைப்பார்.????[/size]

[size=5]தங்கப்பதக்கம் எடுத்து விடாதீர்கள் என்று தானே???? :lol::D :D [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்கில் பிரான்ஸ் இதுவரை தங்கம் 8 வெள்ளி 6 செப்பு 8 என 22 பதக்கங்களை எடுத்து உலகநாடுகளின் வரிசையில் 5 இடத்தில் நிற்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

usain_bolt_pose.jpg6802cec75e74d3441f06701903489ebc451-usain-bolt-laeuft-mit-angezogener-handbremse-1_485x364.jpg

ஐரோப்பிய நேரம் 22:50 ற்கு... உலகின் வேகமான மனிதன்.... ஜமேக்காவை சேர்ந்த உசைன் போல்ட் 100 மீற்றர் ஓடப் போகின்றார்.

அரிய காட்சியை கண்டு களியுங்கள். (முன்பு எடுக்கப்பட்ட‌ படம்)

Edited by தமிழ் சிறி

உறவுகளின் இணைப்பை வாசிக்கையில், ஏன் நானும் கொல்லைப் புறத்தில் நடக்கும் ஒலிம்பிக் ஜோதியில் கலந்துக்கக் கூடாது எனும் ஆர்வம் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளின் இணைப்பை வாசிக்கையில், ஏன் நானும் கொல்லைப் புறத்தில் நடக்கும் ஒலிம்பிக் ஜோதியில் கலந்துக்கக் கூடாது எனும் ஆர்வம் வருகிறது.

யாரு நீங்களும் உங்கள் குடும்பமுமா :D

யாரு நீங்களும் உங்கள் குடும்பமுமா :D

ம்ம்ம்.....

தடகளத்தில் கால் பதித்து ஜோதியோடு கலந்து கொள்ள நிற்பவனைப் பார்த்து ஒரு கேள்வி. :D

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஜமேக்காவின் 50 வது சுதந்திர தினம்.

உசைன் போல்ட் அதற்குப் பெருமை சேர்க்கும் வகையில்

புதிய சாதனை படைக்க வாழ்த்துகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

usain-bolt-ist-der-sieger-ueber-100-meter-.jpg

சற்று முன் நடந்த 100 மீற்றர் ஒட்டத்தில்.... உசைன் போல்ட் 9.63 செக்கனில்.... 41 காலடி தடம் வைத்து ஓடி முடித்தார்.

விளையாட்டு மைதானத்திலிருந்த 80,000 பார்வையாளர்களும் கரகோஷம் செய்து தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

இரண்டாவது இடத்தையும் ஜமேய்க்கா வீரர் பிளேக்கும்(9.75), மூன்றாவ‌து இட‌த்தை அமெரிக்க‌ வீர‌ர் ஜ‌ஸ்ரினும் (9.79) ம‌யிரிழை வித்தியாச‌த்தில் பெற்றுக் கொண்டார்க‌ள்.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உலக சாதனை படைக்க முடியாவிட்டாலும்

உசைன் போல்ட் புதிய ஒலிம்பிக் சாதனையைப் படைத்து

தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஓலிம்பிக்கில் அடித்த இலையான்கள்

slide_241640_1300857_free.jpg

எத்தனை முறை சொல்லிட்டன். சோட்ஸ் எல்லாம் ஒரே வெட்டாயிடிச்சு. எங்கே போயிட்டு நம்ம தங்கம்? ஏம்பா இவ்வளவு சுணக்கம்? சுறுக்கிலை ஒண்டு கொண்டுவா!

slide_241640_1300944_free.jpg

இந்தா பாரு ஏய் கிழிஞ்சு போன போலு. என்னோடு முட்டி மோதினா! பந்தாடிடுவேன்.

slide_241640_1300704_free.jpg

நம்ம மம்மி கூட இப்படி பெரிய பாறாங்கல்லை தூக்கி எம்மீது வீசிறது கிடையாது. யாரப்பா நீ இது பண்ணறது?

slide_241640_1303522_free.jpg

அல்கைடாவா? இங்கேயும் வந்துட்டாங்களா? நான்தான் அப்போதேயே சொல்லிட்டேனே தங்கமே வேண்டாமின்னு.

slide_241640_1301348_free.jpg

படமூலம்: AOL 2012 Olympics

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.....

தடகளத்தில் கால் பதித்து ஜோதியோடு கலந்து கொள்ள நிற்பவனைப் பார்த்து ஒரு கேள்வி. :D

நான் ஜோதியோடு கலந்து கனகாலமயிட்டுது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் இதுவரை பெற்றுக் கொண்ட பதக்கங்களின் எண்ணிக்கையை பார்வையிட இந்த இணைப்பிற்கு செல்லுங்கள்..

http://ca.sports.yahoo.com/olympics/medals.html

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா 62வது இடத்தில ஒரு பதக்கம் கூட இல்ல :icon_mrgreen:

சிறிலங்கா 62வது இடத்தில ஒரு பதக்கம் கூட இல்ல :icon_mrgreen:

எதுக்கும் 62லை வச்சு அதிலை முன்னையிலை நிக்கிற ஆப்கானிஸ்த்தானை மச்ட் பண்ணிட்டமில்ல. இனி நேட்டோ ன்காறன் வந்து இறங்கிறதுதான் பாக்கி.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

die-trinkflasche-landete-genau-hinter-sprinter-johan-blake-.jpg0608_bolt_flasche_fitwidth_420.jpg

நேற்றைய 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை, உசேன் போல்ட் ஆரம்பிக்க இருந்த சில வினாடிகளின் முன் மைதானத்தை நோக்கி எறியப்பட்ட பியர் போத்தல்.

எறிந்த சந்தேகநபரை, காவல் துறையினர் உடனே... கைது செய்து, விசாரணை வளையத்துள் கொண்டு வந்துள்ளார்கள்.

Edited by தமிழ் சிறி

வை திஸ் கொலைவேறி சறினா வில்லியம்ஸ்?

ஒலிம்பிக்ஸ் டெனிசில் கோல்ட் மெடலை தட்டிகொண்டுவிட்ட விளையாட்டு ரசிகர்ளின் 31 வயது கனவு கன்னியான சறினா, டெனிஸ் ஆடத்தின்பின் ஒரு கொலைவெறி ஆட்டம் ஆடினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரே விழுத்தில் இலகுவாக மறியா ஸப்போராவை மண்கவ்வ விழுத்திய சறினா வெற்றிக்களிப்பில் ஆடிய ஆட்டம் கொலை வெறியர்கள் ஆடும் ஆட்டமாக விளையாட்டு ஊடகங்களால் வருணிக்கப்படுகிறது. "Crip Walk" எனப்படும் இந்த ஆட்டம் கலிபோர்ணிய கொலைவெறிக்குழுக்கள் வெற்றிகரமாக தமது எதிரிகளை கொலை விழுத்தியபின்னர் ஆடப்படும் ஆட்டமாக கருதி MTV இதை ஒளிபரப்புவதில்லை என்கிறது விக்கிபீடியா.

மூலம் வலையிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதால் இதை இணைக்கிறேன்

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.