Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க மனைவிய செல்லமா எப்படிக் கூப்பிடுவீங்க?

கூகுள் னு.

ஏன்?

நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா.

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Lankasri

ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்

****************************************

விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதாகும்.

அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம்.

ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும்.

அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளது போல ஆகிவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் !

மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர்.

டாக்டர் :.? :(:D :d :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியில் வைகோ மகன் ஒரு ஹோட்டல் திறக்கிறார். அதில் பார் பகுதியை லீசுக்கு விட்டாலே 30 லட்சம் ரூபா லம்ப்பா கிடைச்சுடும்நு அவருக்கு வேண்டியவங்க அட்வைஸ் பண்ணி இருக்காங்க. இந்த தகவல அவர் தன அப்பா வைகோ கிட்டே சொல்லி இருக்காரு.வைகோ முகம் சட்டென்னு மாறிடிச்சாம். நான் மதுவை எதிர்த்து நடைபயணம் போய்கிட்டு இருக்கேன்.மதுவுக்கு எதிரா கடுமையா பிரசாரம் செய்றேன். எதனை கோடி வருமானம் வந்தாலும் இது மாதிரி மதுபான விடுதி நடத்துவதோ, லீசுக்கு விடுவதோ கூடாதுன்னு சொல்லிட்டாராம். அதனால அந்த திட்டத்த அவரோட மகன் கைவிட்டுடாரு".இன்றைய சூழ்நிலையில் ஒரு தங்கும் விடுதி பார் இல்லாமல் நடத்துவதென்பது சாதாரண காரியம்ல்ல.. இந்த வணிகத்தையே (தொழில்) ஒட்டுமொத்தமாக பாதிக்க வாயப்பிருக்கிறது.

# அரசியல் வாதிகள் சொன்னபடி நடப்பதில்லை. அனால் வைகோ தான் "நடக்கிற" படியே சொல்லிருக்காரு. பாராட்டபட வேண்டிய விடயம் தானே!

  • கருத்துக்கள உறவுகள்
அதுதான் வைகோ,
எனக்கு பிடித்தவர்களில் அவரும் ஒருவர்.  :)
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பிடித்திருக்கின்றது ! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

" மனைவி எது செஞ்சாலும் அதுல

ஒரு அர்த்தம் இருக்கும்..!! " இப்படின்னு

ஒரு பெரியவர் சொல்லி இருக்காரு..

அது சரி..., ஆனா.., அதுல எதாவது உள்குத்தும்

இருக்குமோன்னு நான் சந்தேகப்படறேன்..

1. Function-க்கு கிளம்பறப்ப எவ்ளோ

அழகான Dress-ஐ நாம போட்டு இருந்தாலும்..

' இது நல்லாவே இல்லைங்கன்னு ' சொல்லி....,

நம்ம பீரோல இருந்து வேற Dress-ஐ அவங்களே

Select பண்ணி தர்றாங்களே...

அது...

** நாம அழகா தெரியவா..?

இல்ல

** நம்மகூட வரும்போது அவங்க

Better-ஆ தெரியவா..??

2. நாம எவ்ளோ சொல்லியும் கேட்காம..,

" சிங்கம் - 2 ", " கடல் " இந்த மாதிரி படத்துக்கு

நம்மள கூட்டிட்டு போக சொல்றாங்களே..

அது..

** படத்தை பார்க்கவா..?!!

இல்ல

** படத்தை பார்க்க முடியாம., நாம படற

அவஸ்தையை பார்க்கவா..?!

3. பசங்களுக்கு " Homework " சொல்லி தர

சொல்றாங்களே..

அது...

** பசங்க Homework முடிக்கவா..?

இல்ல

** பசங்ககிட்ட நம்ம Image-ஐ முடிக்கவா..??

4. அடுப்புல பால் வெச்சிருக்கேன்

ஒரு நிமிஷம்

பார்த்துக்கோங்கன்னு ' அப்பப்ப ஒரு பெரிய

வேலை

நமக்கு தர்றாங்களே...

அது..

** பால் பொங்காம இருக்கவா..?

இல்ல

** பால் பொங்கின அப்புறம் நம்மள

பொங்கவா..??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம

தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ?

சுண்டல் : என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?

  • கருத்துக்கள உறவுகள்

267356_10200408394195962_925388234_n.jpg

காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம

தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ?

சுண்டல் : என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?

 

சின்ன வீடாகவே எப்பவும் இருக்க யோசிக்ககூடாது சுண்டல் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் : பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?

அடுத்தவர் : தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் : என்ன இவ்வளவு கவலையாய் இருக்கிறீங்கள் !

மற்றவர் : என் மனைவி என்கூட ஒரு மாதம்   கதைக்க மாட்டேன்னுட்டா ! 

ஒருத்தர்:  அதுக்கு நீ சந்தொசமேல்லோ படனும் !

மற்றவர் :  இன்றோட அந்த ஒரு மாதம் முடியுது, அதுதான் ! :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதன்முதலாக லுங்கி அணிந்தபோது நான் அடைந்த உணர்வு சுதந்திரம். இவ்வுணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா என்று தெரியவில்லை. பெண்கள் நைட்டி அணியும்போது இதே உணர்வை அடைவார்கள் என்று கருதுகிறேன். ஆண்களின் இல்லறத்துக்கும் ஏற்ற உடை லுங்கிதான். இந்த ‘இல்லற விஷயத்தில்’ வேட்டிக்கு வேறு சிக்கல்கள் உண்டு.

Lucky look

:D :d :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் அங்கே?

அமெரிக்கன், ஆங்கிலேயன்,

ஐரிஷ்காரன் ஆகிய மூவரும்

ஒரு காரில் பயணம்

செய்து கொண்டிருந்தார்கள்.

திடீரென்று அந்தக் கார்

பழுதாகி நின்று விட்டது.

சிறிது தூரம் நடந்த அவர்கள்

ஒரு வீட்டைக் கண்டார்கள்.

அந்த வீட்டுக் கதவைத்

தட்டிய அவர்கள் தங்கள்

நிலையைச்

சொல்லி "இன்றிரவு எங்களை இங்கே தங்க

அனுமதிக்க வேண்டும்"

என்று வேண்டினார்கள்.

"இங்கே வயதுக்கு வந்த

பெண்கள் இருக்கிறார்கள்.

உங்களைத் தங்க அனுமதிக்க

முடியாது.

வீட்டிற்கு வெளியே மாட்டுக்

கொட்டகை ஒன்று உள்ளது.

இன்றிரவு அங்கே தங்கிவிட்டுச்

செல்லுங்கள்.

யாராவது இங்கே வர

முயற்சி செய்தால் இந்தத்

துப்பாக்கியால் சுட்டுக்

கொன்று விடுவேன்"

என்று மிரட்டினான்

வீட்டுக்காரன்.

மூவரும் மாட்டுக்

கொட்டகையில் படுத்தார்கள்.

அமெரிக்கனுக்குத் தூக்கம்

வரவில்லை. எழுந்த அவன்

மெல்ல நடந்து அந்த

வீட்டிற்குள் நுழைய

முயற்சி செய்தான்.

காலடி ஓசை கேட்டு விழித்த

வீட்டுக்காரன்

துப்பாக்கியை நீட்டியபடி,

"யார் அங்கே" என்று குரல்

கொடுத்தான்.

தப்பிக்க நினைத்த

அமெரிக்கன் "மியாவ்"

என்று பூனையைப் போலக்

கத்தினான்.

வந்தது பூனை என்று நினைத்த

வீட்டுக்காரன்

சும்மா இருந்தான்.

உயிர் பிழைத்த அமெரிக்கன்

மாட்டுக் கொட்டகைக்குத்

திரும்பினான்.

நடந்ததை நண்பர்களிடம்

சொன்னான்.

அடுத்தது ஆங்கிலேயன்,

மெல்ல நடந்து அந்த

வீட்டிற்குள் நுழைந்தான்.

ஓசை கேட்டு விழித்த

வீட்டுக்காரன்

துப்பாக்கியை நீட்டியபடி,

"யார் அங்கே"

என்று கேட்டான்.

"மியாவ்" என்று குரல்

கொடுத்தபடி அங்கிருந்து தப்பித்து வெளியே வந்தான்

ஆங்கிலேயன்.

நாமும்

முயற்சி செய்து பார்ப்போம்

என்ற எண்ணத்தில்

ஐரிஷ்காரன் அந்த

வீட்டிற்குள் நுழைந்தான்.

ஓசை கேட்டு விழித்த

வீட்டுக்காரன்

துப்பாக்கியை நீட்டியபடி,

"யார் அங்கே"

என்று கோபத்துடன் குரல்

கொடுத்தான்.

"நான் தான் பூனை"

என்று பதில் சொன்னான்

ஐரிஷ்காரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தட்டி வான் சாரதியும்

கடகப் பெட்டி ஆச்சியும்

யாழ்ப்பாணத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் பகிடிக் கதை.

தட்டி வான் பயணம் ஒரு காலத்தில் அங்கு பிரபலம். ஒரு தடவை ஓர் ஆச்சி கடகப் பெட்டியோடு இவ்வானில் ஏறிக்கொண்டாராம். முன்னிருக்கையில் அமர்ந்தவாறு கடகப் பெட்டியை கியர் பெட்டிக்கு மேலாக வைத்து விட்டாராம். வண்டி சென்றுகொண்டிருக்க... சாரதி, ''அனே ஆச்சி கியர் போடனும் உந்த கடகத்தை கொஞ்சம் எடு" என்றாராம். உடனே ஆச்சி ''அத உந்த கடகத்துக்க போடன்" என்றாராம் சர்வசாதாரணமாக...

(ஹி.. ஹி... ஹி...)

கடகம் - பனை ஓலையால் பின்னப்பட்ட வட்ட வடிவான பெட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனை கட்டி வைத்து அடித்துவிட்டு அவனை வென்று விட்டோம் என்று கூறுவது வீரம் இல்லை. அது கோழைத்தனத்தின் உச்சம், பயத்தின் வெளிப்பாடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவன் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர்.

முடிதிருத்துபவர், ""எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்!'' என்றார்.

""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான் அவன்.

""காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தெருவில் அலையுமா? கடவுள் இருந்தால் துன்பமும், வலியும் இராது. இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நம்பவில்லை,'' என்றார் முடிதிருத்துபவர்.

அவன் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று மவுனமானார்.

முடிதிருத்தும் வேலைமுடிந்து, அவன் வெளியே போனான்.

அவன் போன சற்று நேரத்தில், வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய், ஒரு ஆள் நிற்பதை கடைக்காரர் பார்த்தார்.

அந்த ஆளைப் பார்த்தால், முடிதிருத்தும் கடையை மாதக் கணக்கில் எட்டிப் பார்க்காதவர் போலத் தோன்றியது. அவ்வளவு அடர்ந்தும், சடைபிடித்த முடியும் தாடியும் இருந்தன.

அப்போது முன்னால் வந்து போன அவன் மீண்டும் கடைக்கு வந்தான்.

""என்ன?'' என்று கேட்டார் முடிதிருத்துபவர்.

""ஒரு விஷயம்! முடிதிருத்துபவர் யாருமே இல்லை என்று சொல்லலாம்,'' என்று வந்தேன்.

""என்ன உளறுகிறீர்? இதோ! நான் இருக்கிறேன். நானும் ஒரு முடிதிருத்துபவன் தானே? அப்படி இருக்க முடிதிருத்துபவரே இல்லை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?'' என்று எரிச்சலாக கேட்டார் முடிதிருத்துபவர் .

""இல்லை! முடிதிருத்துபவர் இருப்பது உண்மை என்றால் அதோ தெருவில் நிற்கிற அந்த ஆசாமி இப்படி அலங்கோலமான தலைமுடி, சிக்குப்பிடித்த தாடியுடன் இருப்பானேன்?'' என்று கேட்டான் அவன்.

""ஓ! அதுவா? விஷயம் என்னவென்றால், அந்த ஆசாமி என்னிடம் வருவதில்லை!'' என்றார் முடிதிருத்துபவர்.

""சரியாகச் சொன்னீர்கள். அதுதான் விஷயம். கடவுளும் இருக்கவே செய்கிறார். ஆனால், என்ன நடக்கிறது என்றால், மக்கள் அவரை சரியாக அணுகுவதில்லை. அவரை நேர்மையாக தேடிப் போவதில்லை. அதனால்தான் எங்கும் நிறைய துன்பமும், வேதனையும் உலகில் நிறைந்துள்ளன!'' என்றான் அவன் .

உண்மையை உணர்ந்தார் முடிதிருத்துபவர்.

கஸ்ட்டபடுகிறவர்கள்தான் கடவுளை கும்பிடுபவர்கள். மறுவளத்தை பார்த்தீர்களானால் கடவுளை இன்று கும்பிடுபவர்களில் பலர்  நிச்சயமாக கஸ்டப்படுகிறார்கள். ஏழை எளியதுகளுக்கு சவரம் செய்வது கௌரவக்குறைவு என்று நினக்கிறார் போலும் நாவிதனார். அதாவது முடி திருத்த சென்றால் "நீ போய் யாரவது பரதேசியாக பார், நான் அல்ல உனக்கு முடிதிருத்த பொருத்தமான ஆள் என்கிறார்" நாவிதனார். ஆனால் ராஜபக்சா போனால் கீளீன் கட் போட்டு அனுப்பிவைக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகலாயர் படையெடுப்பு நடந்திராவிட்டால்....கீழே உள்ள நன்மைகள் எல்லாம் இந்தியர்களுக்கு கிடைத்திருக்கும்....

(1) சிற்றூர்...தாலுகா..பஞ்சாயத்து....எல்லாம் "தனி தனி நாடுகளாக" இருந்து இருக்கும்

(2) அரசர்கள் அடுத்த நாட்டு அரசர்களின் மனைவிகளின் மேல் ஆசைகொண்டு கடத்தி வந்து இருப்பார்கள்...

(3) அதற்காக போர் ஏற்ப்பட்டு சாமான்ய மக்கள் மடிந்து போயிருப்பார்கள்...

(4) பார்ப்பனர்களுக்கு பல ஊர்கள்....பல மாநிலங்கள் தாரை வார்த்து கொடுக்கபப்ட்டு இருக்கும்....

(5) பசுக்கள்...தாழ்த்தபட்டவர்களை விட புனிதமாக மதிக்கப்படும்...

(6) குருகுலம் ஏற்ப்படுத்தப்பட்டு பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினர் மட்டும் "கல்வி" பயில சட்டம் இருக்கும்.....

(7) பார்ப்பனர்கள் சாமான்ய மனிதர்களை கொன்றால் குற்றம் ஆகாது.. சாமான்யர்கள் பார்பனர்களை தீண்டினால்.. கொலை குற்றமாக கருதப்படும்....

(8) குளத்தில்...குட்டையில்...நீர்நிலைகளில் கால்நடைகள் இறங்கி...குளிக்கலாம்.. சாமான்ய...மக்கள்..தாழ்த்தப்பட்டவர்கள்...குளிக்க.குடிக்க.தடை விதிக்கப்பட்டு.... இருக்கும்....

(9) தாழ்த்தப்பட்டவர்கள் சட்டை அணிய...உடலை மறைத்து ஆடை அணிய தடுக்கபடுவார்கள்... பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்க....மறைத்து உடை அணிய தடுக்கப்பட்டு இருப்பார்கள்...

(10) வர்ணாசிரமத்தால் இந்திய மக்கள் அடிமைப்பட்டு போயிருப்பார்கள்...

(11) இப்போது இருக்கும் சாதிகளை விட பல நூறு சாதிகள் பார்ப்பனர்களால் உண்டாகிஇருக்கும்..

(12) மனு நீதி என்ற மனிதனுக்கு எதிரான சட்டங்களால் வலியவனுக்கு ஒரு நீதி, தாழ்த்தப்பட்டவனுக்கு ஒரு நீதி என்று பார்ப்பனர்களால் நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கும்...

(13) தீண்டாமை..இரட்டை குவளை...இருந்து இருக்கும்...

(14) பார்ப்பனர்கள் வேதத்தை கேட்பவருக்கு காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்பட்டு இருக்கும், படிப்பவர்களுக்கு நாக்கு துண்டிக்கப்பட்டு இருக்கும், பார்ப்பவருக்கு கண்கள் நோன்டப்பட்டுருக்கும்..

(15) பால்ய விவாகம் இருக்கும்....

(16) தேவதாசி...பொட்டு கட்டுதல்...நடைமுறையில் இருக்கும்...

(17) விதவை மறுமணம் மறுக்கப்படும்...

(18) கணவன் இறந்த பின்...உடன்கட்டை கட்டாயமாக்கப்படும்...

(19) மாத விலக்கு, மாத விடாய் இருக்கும் பெண்கள் வெளித்திண்ணையில்... நிறுத்தப்படுவார்கள்...

(20) சவரம்... பீ..(மலம்) அள்ளுதல்..குழி தோண்டுதல்....சாக்கடை.. கழிவு நீர் என்ற "உயர்ந்த" தொழில்களை "தாழ்ந்தவர்களும்...."பூஜை, பஜனை, புனஸ்காரம், வணிகம், வியாபாரம் போன்ற "சாதாரண" தொழில்கள் பார்பனர்கள் மற்றும் உயர்சாதியினரும் செய்துகொண்டு இருப்பார்கள்......

(21) கோவிலில் நுழைந்ததற்காக நித்தம் ஒரு "நந்தன்" தீயிட்டு "மோட்சம்" கொடுக்கப்பட்டு இருப்பார்கள்...

(22) சாணிப்பால் .. சர்வ சாதாரணமாக சட்டமாக்கப்படும்..

(23) பார்ப்பனர்களும், ஜமீன்தார்களும், நிலப்பிரபுக்களும்.. தாங்கள் "நினைத்ததை" முடித்துக்கொண்டு இருப்பார்கள்....

(24) உங்களின் முன்னோர்கள்.. அவர்கள்.. இன்னும் உங்களுக்கு என்ன..என்ன.. கொடுமைகள் நேர்ந்து இருக்கும்..

(25)சேரிகளும்..காலணிகளும்....தாழ்த்தப்பட்டவர்களுக்கும்.... அக்ரஹாரம் ...பார்பனர்களுக்கும்... குளிர்வசதி செய்ப்பட்ட மாட்டு கொட்டகைகள் புனித பசுக்களுக்கும் ஏற்ப்படுத்தப்பட்டு இருக்கும்....

துரதிஷ்டவசமாக வரலாற்றை... திரித்தும்..மறைத்தும்...முகலாயர்களுக்கு எதிராக எழுதியுள்ளனர்...

Lucky look

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: என்னங்க நம்ம ராசன்ர மனைவி ஆத்தில குளிக்கும் போது ஒரு கையையும் ஒரு காலையும் முதலை கடிச்சுட்டுதாம். மனிசிக்கு கையும் ,காலும் இல்லை என்று அவர் கவலையோடு இருக்கின்றார்!

கணவன்: அதுக்கேன் அவன் கவலைப் படுறான்!  உனக்குக் கூடத்தான் கழுத்தும், இடுப்பும் இல்லை, நான் கவலைப்படுறேனா !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் கணவன் உடம்பை பரிசோதித்துவிட்டு " இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் அதற்குள் உங்களுக்கு பிடித்ததை எல்லாம் செய்துவிடுங்கள்"

மாலை 5 மணி. கண்ணீர் மல்க மனைவியிடம் செய்தியை பகிர்ந்தான் அவன் . துடித்தாள் அவள் ...

எனக்கு உன் கையால ரவா தோசையும் வெங்காய சட்னியும் குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கி ......

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு உன் கையால மீன் குழம்பு வச்சு குடும்மா இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும் பால்ல உன் கையால பாதாம் அரைச்சு கொஞ்சமா சர்க்கரை போட்டு குடு - இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு ..

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான் ...

அவள் : பேசாம படுங்க - காலைல எழுந்த உடன் எனக்கு ஆயிரம் வேலை கெடக்கு , சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்பணும் ,அய்யர் ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்டுல booking பண்ணணும் , உங்களுக்கு எழுந்திருக்கற வேலை கூட இல்ல....

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்கள் சேவையைச் செய்ய வாழ்த்துக்கள் சுண்டல். :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்,சுண்டல் பெண்கள் எவ்வளவு முன்னேற்பாடனவர்கள் எனப் புரிந்து கொண்டீர்களா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவிமகன் 12மணிக்கு என்னதுக்கு தட்டியெழுப்பினானோ ஆருக்குத்தெரியும்? :(  :(  :(

" நிலவையும் , விண்ணையும் பிரிப்பது அமாவாசை
என்னையும் , அவளையும் பிரிப்பது அவ அம்மா ஆசை.... "

 

 

ஆஹா......அருமை அருமை...........

 

( வரிகளை Copy & Paste செய்ததற்கு மன்னிக்கவும் , Quote பண்ண தெரியவில்லை, பழக வேண்டும்...)

Edited by kayshan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.