Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவன் யார் ? ( இறுதிப் பாகம் )

Featured Replies

235124_l-entree-de-la-gare-de-lyon-a-paris-en-mars-2010.jpg

http://www.lexpress....n-mars-2010.jpg

கார் து லியோன் (Gare de lyon ) புகையிரத நிலையம் காலையின் அமைதியை இழந்து காணப்பட்டது . புகையிரத நிலையம் நவீன வடிவமைப்புடன் முற்றுமுழுதாகவே மாறியிருந்தது . நான் 89களில் பார்த்த தகரக்கொட்டகை போலில்லாமல் முற்றுமுழுதாகவே கார் து லியோன் அசுர வளர்சியடைந்திருந்தது . நாங்கள் புகையிரத மேடை 6 ஐ நோக்கி மக்கள் வெள்ளத்தில் மிதந்தோம் . அங்கு பிறான்சின் வெளியிடங்களுக்குச் செல்ல ரீ ஜி வி ( T g v ) க்கள்* அணிவகுத்து நின்றன . நான் ரீ ஜி வி யைப் பற்றிக் கேள்விப் பட்டாலும் இதுவே எனக்கும் குடும்பத்திற்கும் முதல் பயணம் . பிள்ளைகள் ரீ ஜி வி யைப் புதினமகப் பார்தார்கள் . நான் எங்களுக்கான பெட்டியை தேடுவதில் மும்மரமாக இருந்தேன் .

TGV-Paris.Gare.de.Lyon.2007.JPG

http://upload.wikime...e.Lyon.2007.JPG

நாங்கள் ஒருவாறாகப் பலமீற்றர்கள் தூரம் நடந்து எமக்கான பெட்டியில் ஏறி அமர்ந்தோம் . உள்ளே சிறிய ரகவிமானத்திற்கான அனைத்து வசதிகளுடனும் அந்த ரெயில் இருந்தது . சிறிது நேரத்தில் எங்களைச் சுமந்து கொண்டு புகையிரதம் லியோனை நோக்கி நகரத்தொடங்கியது . கார் து லியோன் எனது பார்வையிலிருந்து சிறிது நேரத்திலேயே விடைபெற்றது . உடனடியாகவே மணிக்கு 250 கிலோமீற்றருக்கு மேல் எம்பிப் பாய்ந்த ரீ ஜி வியில் எங்களால் வெளியே ஒன்றுமே பார்க்க முடியவில்லை . எல்லாமே கோடு போட்டு இழுத்தால் போல இருந்தது .

எனக்கு குகனைப் பார்க்கப்போகின்ற எண்ணமே ஒருவித கை கால் வியர்ப்பைக் கொடுத்தது . குகனை என்னிடமிருந்து பிரித்த காலத்தின் மீது எனக்குக் கோபம் கோபமாக வந்தது . இரண்டு மணித்தியால ஓட்டத்தின் பின்பு எங்கள் புகையிரதம் லியோன் பார்தூ புகையிரதிலயத்தில் நுளைந்து கொண்டிருந்தது . புகையிரத மேடையில் ரீ ஜி வி தன்னை நிலை நிறுத்தியதும் , மக்கள் முண்டியடித்து விட்டதைப் பிடிக்க இறங்கினார்கள் . நாங்கள் எல்லோரும் இறங்க இடம் விட்டு மெதுவாகவே இறங்கி வெளியேறும் வாயிலை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.

தூரத்தே எங்களைக் கண்டவுடன் குகன் ஓடிவருவது தெரிந்தது .குகன் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டான் . அவன் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் முட்டி மோதின . நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன் ,எனது கண்ணீரை மறைக்க . அவனது முகத்தில் ஒரு இனம்புரியாத சோகம் இழையோடுவதை அவதானித்தேன். நான் அதை வெளிக்காட்டாது அவன் பின்னால் சென்றேன்.

லியோன் பாரிஸ்சை விட அமைதியாக இருந்தது . நாங்கள் போகின்ற வழியில் பொதுவான கதைகளையே கதைத்துகொண்டோம் . குகன் மிக லாவகமாக தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தான் . ஊரிலேயே குகன் ஒரு வாகனப்பிரியன் . நாங்கள் சிறிது நேரத்தில் குகன் வீட்டை அடைந்தோம் . குகனின் பவியோன் ** விலாசமாக முன்னும் பின்னுமாகத் தோட்டத்துடன் காணப்பட்டது. குகனின் மனைவி ரூபிணி இயல்பாகவே என்னுடன் அடிக்கொருதரம் "அண்ணை " என்று உரிமையுடன் கதைத்தாள் . குகனுக்கு ஒரு மகனும் மகளுமாக இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள் . மகள் குகனை உரித்து வைத்தால் போல இருந்தாள் . மகனுக்கு தனது தம்பியின் பெயரையே குகன் வைத்திருந்தான் . என்னைக் கண்டது குகனுக்கு வார்த்தையில் வடிக்க முடியாத சந்தோசமாக இருந்தது.

அன்று மாலை மாதுமை பிள்ளைகள் ரூபிணி தோட்டத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள் . நான் அப்பொழுது தான் நித்திரையால் எழுந்திருந்தேன் . ரூபிணியின் பிளேன் ரீயும் ,பருத்தித்துறை வடையும் எனக்கு தூக்கக் கலக்கத்தை விரட்டியடித்தது . குகன் என்னிடம் வந்து ,

" வாவன் மச்சான் வெளீல போட்டு வருவம் "

என்றான். நான் உடுப்பை மாற்றிக்கொண்டு அவனுடன் வெளியே வந்தேன் . நாங்கள் இருவரும் ஒழுங்கையால் நடந்து பிராதான வீதியிலுள்ள " பப் " க்கு வந்தோம் . எனக்கு குகனின் மௌனம் மிகவும் கவலையாகவே இருந்தது . குகன் தனக்கு தெமி ஓடர் பண்ணினான் . நான் எகஸ்பிறாசோ ஓடர் பண்ணினேன் .நான் பொறுக்கமுடியாமல் குகனிடம் கேட்டேன் ,

petits-carreaux-brasserie.jpg

http://images.france...x-brasserie.jpg

"என்னடாப்பா நான் என்ன உனக்கு பிறத்தியானோ ? கனடாக்கு போனப்பிறகு நீ என்னோடை சரியாய் கதைக்கிறேல .இங்கையும் நீ ஒருமாதிரி இருக்கிறாய். உனக்கு என்ன பிரச்சனை "?

என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினேன்.

குகன் தெமியை ஒரு இழுவையில் இழுக்க தெமி அரைவாசிக்கு வந்தது . குகன் தனது சேட் பொக்கற்றுக்குள் இருந்த சிகரட்டை எடுத்துப்பற்ற வைத்து புகையை ஆழ இழுத்து விட்டான் . அந்தப் புகையில் அவனது மனவெக்கை வெளிக்கிட்டதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது .

"மச்சான் எனக்கு நன்தான்ரா பிரச்சனை "

என்றான் குகன் . நான் அவனை நளினத்துடன் பார்த்தபடி,

"என்னடாப்பா இப்பத்தானே ஒரு கிளாஸ் பாய்ஞ்சது சொல்லுறதை விளப்பமாய் சொல்லு". என்றேன்.

" டேய் மச்சான் நீ என்னை விட்டிட்டு கனடா போட்டாய் . நீ இல்லாதால என்ரை வாழ்கையே தலைகீழாப் போச்சுது . நீ எனக்கு பக்கத்தில இருந்திருந்தால் சிலநேரம் எனக்கு இப்பிடியெல்லாம் நடந்திருக்குமோ தெரியாது "?

என்று சொன்ன குகனின் கண்கள் குளமாயின . குகன் இரண்டாவது தெமியை நிரப்பிக்கொண்டு வந்தான் .

"என்னமச்சான் ஏன்ராப்பா இப்பிடி கதைக்கிறாய் ?என்னெண்டாலும் எனக்குச் சொல்லு ". என்றேன் .

"நீ போய் ஆறுமாசத்தால ரூபிணி என்னட்டை வந்திட்டா . அவாவின்ரை தமையன் ஆக்கள் இங்கை துளூசில இருக்கிறாங்கள் , உனக்கு தெரியுந்தானே ?அவங்கள் தான் ரூபிணியை கூப்பிட்டவங்கள் . அப்ப உன்ரை மட்டையோடதான் திரிஞ்சனான் . ரூபிணியின்ரை தமையன் ஆக்கள்தான் பூபலசிங்கத்தாரை பிடிச்சு வழக்கு எழுதினாங்கள் . நானும் தங்கைச்சீன்ரை பாசத்தில செய்யிறாங்கள் எண்டு ஒண்டுஞ் சொல்லைலை . ஆனால் மச்சான் அதுதான் எனக்கு வினையாப் போச்சிது . ரூபிணி எனக்கும் சொல்லாமல் தமையனாக்களோடை சேந்து என்னை " ஊரிலை காணாமல் போட்டன் " எண்டு வழக்கை பூபலசிங்கத்தாரைக் கொண்டு எழுதி ஒஃப்றாவுக்கு அனுப்பி போட்டாள் . அனுப்பி மூண்டாம் மாசமே அவளுக்கு காட் குடுத்திட்டாங்களடாப்பா . இதால எனக்கும் ரூபிணிக்கும் பிரச்சனை . என்ரை நிம்மதியெல்லாம் போட்டுது . அந்தநேரம் உன்னைத்தான் நினைப்பன் . ஆனால் உன்னோடை கதைக்க என்னவோ தெரியேல மனம்வரேலை .

நான் உண்மையில இந்தியன் ஆமியால பிரச்சனைப்பட்டு இங்க வந்து உள்ளதை சொல்லி கேட்டேன் . எனக்கு கார்ட் இல்லை .ஆனால் " புருசன் துலைஞ்சு போனார் " எண்டு பொய் சொன்னவளுக்கு கூப்பிட்டு வைச்சு காட்டை குடுத்தாங்கள் . எனக்கு மனம் விட்டுப் போச்சுடா மச்சான் . எனக்கும் கொமிசனில வழக்கு இழுபட்டு கொண்டு இருந்திது .பிள்ளையளும் வளரத் தொடங்கீட்டுதுகள் . எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல . அப்பதான் எங்கடை துளூஸ் *** பாலா ஒரு ஐடியா தந்தான் . தன்ரை வீட்டு அட்ரஸ்சில இன்னுமொரு விசா போடச்சொன்னான் . எனக்கும் வழிதெரியேல . நானும் என்னுமொரு விசாவை கங்காதரன் எண்ட பேரில கொஞ்சம் பொய்யும் கலந்து போட்டன் . சொல்லி நாலுமாசத்தில ஒஃப்றாவில கூப்பிட்டு காட் தந்தாங்கள் மச்சான் . இது எப்பெடியிருக்கு? "

என்று அழுகையுடன் சொன்னான் குகன் . நான் அவனது கதையை கேட்டுக்கொண்டே நான்காவது சிகரட்டை முடித்திருந்தேன் . குகன் மீண்டும் இருவருக்கும் தெமியும், எக்ஸபிறாசோவும் ஓடர் பண்ணினான்.

"சரியடாப்பா உனக்கு விசாப்பிரச்சனை முடிஞ்சிட்டுது தானே ? ஏன் சும்மா மண்டையை உடைக்கிறாய் ?"

என்றேன் . குகன் இருந்தால் போல் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான் .

"நீ மொன்றியல்லை நல்லா படிச்சு விரவுரையாளராய் வேலை செய்யிறாய் . என்ரை கேள்விக்கு மறுமொழி சொல்லு மச்சான் . நான் என்ரை ரூபிணிக்கும் பிள்ளைகளுக்கு ஆரடாப்பா ? சட்டப்படி ரூபிணி மனுசனை தொலைச்ச விதவை . என்ரை பிள்ளையளுக்கு அப்பா இல்லை . ஆனால் நான் கங்காதரன் எண்டபேரில என்ரை குடும்பத்தோட இருக்கிறன் . உண்மையில நான் ஆரடாப்பா ???????"

என்று ஆவேசத்துடன் தெமி கிளாசை மேசையில் அடித்து வைத்தான் குகன் . குகன் வைத்த வேகத்தில் தெமிக்கிளால் சுக்குநூறாகி உடைந்து சிதறியது , எனது மனதைப் போலவே!!!!!!!!

இக்கதையின் முன்னைய தொடரைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்

http://www.yarl.com/...howtopic=103153

பிற்குறிப்பு :

* ரீ . ஜி . வி . : பிரான்ஸ்சின் அதிவேக புகையிரதம்.

** பவியோன் : காணியுடன் அமைந்த தனிவீடு.

*** துளூஸ் : பிரான்ஸின் ஏயர்பஸ் விமானக் கட்டுமான தொழிற்சாலை அமைந்துள்ள நகரம்.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இது பரவாயில்லை உதவிக்காசும் வசதியான வீடும் எடுக்கிறதுக்காக எத்தினைபேர் பொய் விவாக ரத்து எடுத்துப்போட்டு மனிசன் மார் இரவிலை கள்ளர் மாதிரி வீட்டை பதுங்கி பதுங்கி போன கதையள் எல்லாம் இருக்கு :lol:

அண்ணா,

திரில்லாக போன கதை த்ரில் இல்லாமல் முடிந்த மாதிரி இருக்கிறது. எனினும் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது சப்பெண்டு glassa போட்டு உடைச்சாமாதிரி கதையையும் முடிசிட்டிங்க? என்றாலும் நல்லா இருக்கு

இதல்லாம் இலண்டனில சாதரணமப்பா :icon_mrgreen:

  • தொடங்கியவர்

இது பரவாயில்லை உதவிக்காசும் வசதியான வீடும் எடுக்கிறதுக்காக எத்தினைபேர் பொய் விவாக ரத்து எடுத்துப்போட்டு மனிசன் மார் இரவிலை கள்ளர் மாதிரி வீட்டை பதுங்கி பதுங்கி போன கதையள் எல்லாம் இருக்கு :lol:

உண்மை இதைவிட எவ்வளவோ ருசிகர சம்பவங்கள் இருக்கு . எழுலாம்தான் . ஆனா கொஞ்சம் கொஞ்சம் யோசிக்க வேண்டிக்கிடக்கு .வருகைக்கு மிக்க நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பலரை நான் பாத்திருக்கிறேன் அண்ணா...எனக்கு தெரிந்தவர்கள் கூட வேறுபெயரில் விசாவுக்காஅக வாழ்க்கையை அடைவு வைத்துவிட்டு அலைகிறார்கள்..நல்ல கதை..நன்றி அண்ணா பகிர்விற்க்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]

[size=4]அருமை,[/size][/size][size=1]

[size=4]பகிர்விற்கு மிக்க நன்றிகள் [/size][/size]

[size=4]http://leo-malar.blogspot.no/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வித்தியாசமான, ஆனால் நிதர்சனமான கதை கோமகன்!

கதையென்று கூடச் சொல்லமுடியாத அளவுக்கு, நிஜங்கள் கலந்துள்ளது!

எனக்குத் தெரிய, சிலர் விசாவுக்காகச் சொன்ன பொய்கள், நீங்கள் கூறியவற்றைக் கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடியவை!

இவ்வளவுக்கு, ஒரு சுயநலம் பிடித்த இனத்தில் நான் வந்து பிறந்தேனா, என வெட்கப் பட்ட நாட்கள் அதிகம்!

ஒரு பெண்ணால், தான் கெடுக்கப் பட்டதாக, அப்பட்டமாகப் பொய் கூடக் கூறமுடியுமா?

அவ்வளவுக்குக் கீழ்த்தரமான, முறையில், ஒரு ஆசிரியையால், எழுதப் பட்ட கடிதமொன்றை, நான் பார்க்க வேண்டி வந்தது!

எனது வாழ்க்கையில், அப்படியாக எழுதப்பட்ட விவரணத்தை, நான் பார்த்ததே கிடையாது!

பொய்கள் தான், எவ்வளவுக்கு அலங்கரிக்கப் படுகின்றன?

தொடர்ந்து எழுதுங்கள், கோமகன்! நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இது பரவாயில்லை உதவிக்காசும் வசதியான வீடும் எடுக்கிறதுக்காக எத்தினைபேர் பொய் விவாக ரத்து எடுத்துப்போட்டு மனிசன் மார் இரவிலை கள்ளர் மாதிரி வீட்டை பதுங்கி பதுங்கி போன கதையள் எல்லாம் இருக்கு :lol:

எனக்கு தெரிஞ்ச பல ஆட்கள் கவுன்சிலில் வேலை செய்பவர்கள் அவர்களுக்கு எப்படி அரசை ஏமாத்துகிறது என்பது தெரிந்த படியால் அதை வைத்து கொண்டே கணவன்,மனைவி பிரிவு என சொல்லி காசை சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள்...அதிகமாய் இதை செய்வது 80,90 களில் வந்த ஆட்களாய்த் தான் இருக்கும்.

ஒரு குடும்பத்தில் கணவர் நல்ல வேலையில் இருந்தார் ஆனால் மனைவியோ கணவர் தன்னோட இல்லை என சொல்லி தனக்கும்,பிள்ளைகளுக்கும் அரச உதவிப் பணம் எடுத்து வந்தார் ஆனால் கணவர் அவர்களோட தான் இருந்தார்...ஒரு நாள் வேலை முடிந்து வந்து அவர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது இரு வெள்ளையல் வந்து கதவைத் தட்ட இவரோ சாப்பிட்ட அரை குரையில்,கட்டிய சாறத்தோட பின் பக்க தோட்ட கதவைத் திறந்து கொண்டு ஓடி விட்டார் :D ...கதவை தட்டியவர்கள் வந்ததோ வேறு அலுவலுக்காக ஆனால் இவர்கள் நினைத்ததோ அவர்கள் பெனிபிட் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் என்று :lol::rolleyes:

கதையை தந்த கோமகனுக்கு நன்றி

பாவம் குகன். இதுவே அதிகளவு தமிழர்களின் கலாச்சாரம் ஆகிவிட்டது தெரியாமல், விவரம் தெரியாத கிணற்றுத் தவளையாக இருக்கிறார்.

அரச உதவி வழங்கும் அலுவலகத்தில் வேலை செய்யும் தெரிந்த வேற்றினப் பெண், எங்கட ஆக்கள் 'பிச்சைச் சம்பளம்' பெறுவதற்காக என்னென தகிடுதத்தமெல்லாம் செய்கிறார்கள் என்று சொன்னார். பிடிபடாமல் இருக்க கணவன், மனைவி இருவரும் ஒரே குடும்பப் பெயர் வைக்காமல் வேறு வேறு பெயர்கள் வைப்பார்களாம். அதிலும் மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து லண்டணிற்கு வரும் அதிகமான எங்கட ஆக்கள், பிச்சைச் சம்பளத்தையே குறி வைத்து வருகிறார்கள் என்றும் சொன்னார்.

மனிதனுக்கு மனச்சாட்சி ஒன்று உண்டு ....அது நேர்மையானது,உண்மையானது என்பதை இந்தக்கதை மூலம் உணரக்கூடியதாக உள்ளது...........எம் வாழ்க்கையை இலகுபடுத்துவதர்காகவும்,சரிப்படுத்துவதர்காகவும்

நாம் எப்படி எப்படி எல்லாம் பொய்களைகூறி நல்ல இடத்திற்கு சென்றாலும்.............ஒரு நாள் அந்த பொய்களுக்கு உண்மையாக பதில் கூறும்போது அல்லது அதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும்போது நாம் எந்தக்கேட்டவர்கள் ஆனாலும் எமக்குள் இருக்கும் நல்ல மனச்சாட்சி எம்மை வாட்டி வதைத்து விடும்............உங்கள் நல்ல மனம் கொண்ட அந்த நண்பரின் வாழ்க்கை சுபீட்சமாக அமைய எனது வாழ்த்துக்கள் கோ அண்ணா..........உங்களைப்போல் நல்ல நண்பன் அவருக்கு இருக்கும் வரை அவர் கவலைப்படத்தேவயில்லை என்பதே என் கருத்து ....

  • தொடங்கியவர்

அண்ணா,

திரில்லாக போன கதை த்ரில் இல்லாமல் முடிந்த மாதிரி இருக்கிறது. எனினும் நன்றாக இருக்கிறது. பாராட்டுகள். :)

எந்தவிதமான பரபரப்பை எதிர்பார்த்தீர்கள் ? உங்கள் வருகையும் விமர்சனங்களுமே என்னைத் திருத்தியமைக்கும் . வருகைக்கும் , உங்கள் நேரத்திற்கும் மிக்கநன்றிகள் .

  • தொடங்கியவர்

என்னப்பா இது சப்பெண்டு glassa போட்டு உடைச்சாமாதிரி கதையையும் முடிசிட்டிங்க? என்றாலும் நல்லா இருக்கு

ஆக இழுத்தால் நீங்கள் என்னைப் போட்டுத் தள்ளிப்போடுவியளே சுண்டு . வருகைக்கு மிக்க நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் குகன். இதுவே அதிகளவு தமிழர்களின் கலாச்சாரம் ஆகிவிட்டது தெரியாமல், விவரம் தெரியாத கிணற்றுத் தவளையாக இருக்கிறார்.

அரச உதவி வழங்கும் அலுவலகத்தில் வேலை செய்யும் தெரிந்த வேற்றினப் பெண், எங்கட ஆக்கள் 'பிச்சைச் சம்பளம்' பெறுவதற்காக என்னென தகிடுதத்தமெல்லாம் செய்கிறார்கள் என்று சொன்னார். பிடிபடாமல் இருக்க கணவன், மனைவி இருவரும் ஒரே குடும்பப் பெயர் வைக்காமல் வேறு வேறு பெயர்கள் வைப்பார்களாம். அதிலும் மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து லண்டணிற்கு வரும் அதிகமான எங்கட ஆக்கள், பிச்சைச் சம்பளத்தையே குறி வைத்து வருகிறார்கள் என்றும் சொன்னார்.

அவர்கள் எங்களைவிட தெளிவாகவே இருக்கின்றார்கள் . எங்களுக்கு தெரியாத பெனிபிட் எல்லாம் அவர்களுக்குத் தெரியும் .ஆனால் அவர்கள் பிள்ளைகளின் படிப்பிர்காகவே இங்கு வருவதாகச் சொல்வார்கள். ஆனால் வேலைக்குப் போவது இல்லை முழு பெனிபிட்டிலேயே வாழ்க்கையை ஓட்டுவார்கள்.

  • தொடங்கியவர்

இதல்லாம் இலண்டனில சாதரணமப்பா :icon_mrgreen:

சாதாரணமாக எடுப்பதால் தானே எமது மக்களின் மனங்களது நுண்ணிய உணர்வுகள் விகாரமாகி , கருத்து , உழுத்துப் போய் வெறும் மனிதர்கள் என்ற போர்வையில் உலாவுகின்றோம் . உங்கள் வருகைக்கு மிக்கநன்றிகள் நன்றிகள் நந்தன் .

  • தொடங்கியவர்

இப்படிப் பலரை நான் பாத்திருக்கிறேன் அண்ணா...எனக்கு தெரிந்தவர்கள் கூட வேறுபெயரில் விசாவுக்காஅக வாழ்க்கையை அடைவு வைத்துவிட்டு அலைகிறார்கள்..நல்ல கதை..நன்றி அண்ணா பகிர்விற்க்கு...

இப்படிப்பட்ட பலர்களில் ஒருவன்தான் இந்தக்கதையின் நாயகன் குகன் . இந்தக்கதை எனது சொந்தக்கதையோ , சோகக்கதையோ இல்லை . மாறாக 87களில் உள்ள புலம்பெயர் சூழலில் எனது கண்ணால் கண்ட நண்பர்களது வாழ்க்கை அனுபவங்களின் வலிகளையே உங்கள்முன் கொண்டு வந்தேன் . ஏனேனில் புலம்பெயர்ந்த அகதிகள் என்றால் இழிபிறவிகள் என்ற ஒரு ஆழமான கருத்து இந்தக்கருத்துகளத்திலே உண்டு . இதே இழிபிறவிகளான அகதிகளின் வலிகளையும் , கண்ணீரையும்தான் எல்லோருமே அறுவடை செய்தார்கள் , செய்கின்றார்கள் . வருகைக்கு நன்றிகள் சுபேஸ் .

  • தொடங்கியவர்

ஒரு வித்தியாசமான, ஆனால் நிதர்சனமான கதை கோமகன்!

கதையென்று கூடச் சொல்லமுடியாத அளவுக்கு, நிஜங்கள் கலந்துள்ளது!

எனக்குத் தெரிய, சிலர் விசாவுக்காகச் சொன்ன பொய்கள், நீங்கள் கூறியவற்றைக் கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடியவை!

இவ்வளவுக்கு, ஒரு சுயநலம் பிடித்த இனத்தில் நான் வந்து பிறந்தேனா, என வெட்கப் பட்ட நாட்கள் அதிகம்!

ஒரு பெண்ணால், தான் கெடுக்கப் பட்டதாக, அப்பட்டமாகப் பொய் கூடக் கூறமுடியுமா?

அவ்வளவுக்குக் கீழ்த்தரமான, முறையில், ஒரு ஆசிரியையால், எழுதப் பட்ட கடிதமொன்றை, நான் பார்க்க வேண்டி வந்தது!

எனது வாழ்க்கையில், அப்படியாக எழுதப்பட்ட விவரணத்தை, நான் பார்த்ததே கிடையாது!

பொய்கள் தான், எவ்வளவுக்கு அலங்கரிக்கப் படுகின்றன?

தொடர்ந்து எழுதுங்கள், கோமகன்! நன்றிகள்!!!

உங்களுக்கு வித்தியாசமான அனுபவம்தான் . இங்கு புலம்பெயர் நாடொன்றில் அகதி அந்தஸ்துக் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பவுள்ள நிலையில் , விண்ணப்பதாரிக்கு வினோதமான யோசனை உருவானது . மீண்டும் மீளாய்வுக்கு வழக்கறிஞரால் தனது வழக்கை அனுப்பினார் . அதில் தான் ஒரு தன்னினச்சேர்கையாளர் என்றும் , தனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு தன்னைக் கேவலமாகப் பார்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார் . நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்று அகதி அந்தஸ்து வழங்கியது . இது எப்படி இருக்கின்றது ?? உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் புங்கை .

Edited by கோமகன்

கதை மிக நன்றாக இருந்தது ,சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் தேவைகளும் மனிதர்களை எப்படியும் மாற்றிவிடும் தன்மை கொண்டது என்பதற்கு நல்ல உதாரணம் உந்த கதை.

எந்தவிதமான பரபரப்பை எதிர்பார்த்தீர்கள் ? உங்கள் வருகையும் விமர்சனங்களுமே என்னைத் திருத்தியமைக்கும் . வருகைக்கும் , உங்கள் நேரத்திற்கும் மிக்கநன்றிகள் .

உங்கள் கதை சென்ற விதத்தை பார்த்த போது முடிவு negative ஆக இருக்கும் என்று நினைத்தேன். (கெளதம் வாசுதேவ் மேனனின் பட முடிவு போல் :D).

நான் அப்படி எதிர்பார்த்ததுக்காக நீங்கள் அப்படி எழுத வேண்டுமென்று கூறவில்லை. இது மிக நன்றாக இருந்தது. நல்ல கருத்தை அழுத்தி கூறியுள்ளீர்கள். பாராட்டுகள். :)

Edited by துளசி

  • தொடங்கியவர்

எனக்கு தெரிஞ்ச பல ஆட்கள் கவுன்சிலில் வேலை செய்பவர்கள் அவர்களுக்கு எப்படி அரசை ஏமாத்துகிறது என்பது தெரிந்த படியால் அதை வைத்து கொண்டே கணவன்,மனைவி பிரிவு என சொல்லி காசை சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள்...அதிகமாய் இதை செய்வது 80,90 களில் வந்த ஆட்களாய்த் தான் இருக்கும்.

ஒரு குடும்பத்தில் கணவர் நல்ல வேலையில் இருந்தார் ஆனால் மனைவியோ கணவர் தன்னோட இல்லை என சொல்லி தனக்கும்,பிள்ளைகளுக்கும் அரச உதவிப் பணம் எடுத்து வந்தார் ஆனால் கணவர் அவர்களோட தான் இருந்தார்...ஒரு நாள் வேலை முடிந்து வந்து அவர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது இரு வெள்ளையல் வந்து கதவைத் தட்ட இவரோ சாப்பிட்ட அரை குரையில்,கட்டிய சாறத்தோட பின் பக்க தோட்ட கதவைத் திறந்து கொண்டு ஓடி விட்டார் :D ...கதவை தட்டியவர்கள் வந்ததோ வேறு அலுவலுக்காக ஆனால் இவர்கள் நினைத்ததோ அவர்கள் பெனிபிட் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் என்று :lol::rolleyes:

கதையை தந்த கோமகனுக்கு நன்றி

எனது கதையில் பிழைகளை உரிமையுடன் சொல்லி திருத்துபவர்கள் நீங்கள் . இதில நீங்களும் ஒரு சின்ன பிழை விட்டிருக்கிறியள் . வெறும் ஊகத்தில ஆண்டுகளை போடுறது பிழையல்லோ ? என்னைப் பொறுத்தவரையில இதுகள் இண்டைவரைக்கும் தொடருது . அப்பவந்த அகதிகளின் உளைப்புகள் , கண்ணீர்கள் , வலிகள் தாயகம்போய் , ஏறத்தாள பல லச்சம் ரூபாய் பெறுமதியான மாணவர் விசாவில் மீண்டும் வெள்ளையிடம் வருவதும் உறைக்கின்ற உண்மை . உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் ரதி அக்கா .

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் கதை நன்றாக இருந்தது.

குகனுடைய நிலமை கொஞ்சம் கவலைக்கிடம்

ஆனாலும் பெரிய பிரச்சனை இல்லைத் தானே

இது உண்மைக் கதையாக இருந்தால்

அவர்கள் இருவரும் மீண்டும் திருமணம் செய்தால் என்ன?

  • தொடங்கியவர்

கதை மிக நன்றாக இருந்தது ,சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் தேவைகளும் மனிதர்களை எப்படியும் மாற்றிவிடும் தன்மை கொண்டது என்பதற்கு நல்ல உதாரணம் உந்த கதை.

மனிதன் எப்பொழுதும் சூழ்நிலைக் கைதி தானே . வருகைக்கு நன்றி அர்ஜுன் . நீங்களும் கதை எழுதுங்கோ உங்களால் அது முடியும் .

  • தொடங்கியவர்

பாவம் குகன். இதுவே அதிகளவு தமிழர்களின் கலாச்சாரம் ஆகிவிட்டது தெரியாமல், விவரம் தெரியாத கிணற்றுத் தவளையாக இருக்கிறார்.

அரச உதவி வழங்கும் அலுவலகத்தில் வேலை செய்யும் தெரிந்த வேற்றினப் பெண், எங்கட ஆக்கள் 'பிச்சைச் சம்பளம்' பெறுவதற்காக என்னென தகிடுதத்தமெல்லாம் செய்கிறார்கள் என்று சொன்னார். பிடிபடாமல் இருக்க கணவன், மனைவி இருவரும் ஒரே குடும்பப் பெயர் வைக்காமல் வேறு வேறு பெயர்கள் வைப்பார்களாம். அதிலும் மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து லண்டணிற்கு வரும் அதிகமான எங்கட ஆக்கள், பிச்சைச் சம்பளத்தையே குறி வைத்து வருகிறார்கள் என்றும் சொன்னார்.

என்னைக் கேட்டால் இந்த சமூகக் கொடுப்பனவுகள் சிலவற்றை நிப்பாட்டுவது நல்லது என்பேன் . முன்னைய காலத்தில் சனத்தொகையை ஊக்குவிக்க கொடுக்கப்பட்ட குடும்ப ஊக்கத்தொகையை அதிகளவு பெறுவது வேற்றின நாட்டவர்களே . இதில் நாங்களும் அடக்கம் என்பதும் கசப்பானது . 3 ஆவது பிள்ளைக்கு காசு கூட .இதர வாய்புகள் படிகளும் கூட . இதை நாங்கள் முதலாவது அப்பாவிற்கு , இரண்டாவது அம்மாவிற்கு , மூன்றாவது அரசாங்கத்திற்கு என்று பகிடியாக சொல்வதுண்டு . எனக்குத்தெரிய பிள்ளைகளின் கொடுப்பனவு காசுகளை எடுத்து அவர்களுக்கு ஒழுங்கான உடுப்புகள் , சாப்பாடுகள் வாங்காமல் சீட்டு கட்டி அல்லது வட்டிக்கு விட்டு கொழும்பில் வீடு வாங்கினவர்களும் இருக்கின்றார்கள் . சனத்தொகையில் மூன்றில் ஒருபகுதி வருமானவரி கட்டி காலம் முழுக்க உளைக்க , மிச்சம் இரண்டு பகுதியும் , சோம்பேறிகளாக முதல் சொன்ன ஓருபகுதியின் வருமானவரிகளை உறிஞ்சி வாழும் அட்டைகளாகவே இருக்கின்றார்கள் . மிக்க நன்றிகள் உங்கள் கருத்திற்கு தப்பிலி .

  • தொடங்கியவர்

மனிதனுக்கு மனச்சாட்சி ஒன்று உண்டு ....அது நேர்மையானது,உண்மையானது என்பதை இந்தக்கதை மூலம் உணரக்கூடியதாக உள்ளது...........எம் வாழ்க்கையை இலகுபடுத்துவதர்காகவும்,சரிப்படுத்துவதர்காகவும்

நாம் எப்படி எப்படி எல்லாம் பொய்களைகூறி நல்ல இடத்திற்கு சென்றாலும்.............ஒரு நாள் அந்த பொய்களுக்கு உண்மையாக பதில் கூறும்போது அல்லது அதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும்போது நாம் எந்தக்கேட்டவர்கள் ஆனாலும் எமக்குள் இருக்கும் நல்ல மனச்சாட்சி எம்மை வாட்டி வதைத்து விடும்............உங்கள் நல்ல மனம் கொண்ட அந்த நண்பரின் வாழ்க்கை சுபீட்சமாக அமைய எனது வாழ்த்துக்கள் கோ அண்ணா..........உங்களைப்போல் நல்ல நண்பன் அவருக்கு இருக்கும் வரை அவர் கவலைப்படத்தேவயில்லை என்பதே என் கருத்து ....

ஒருவன் என்றாவது ஒரு நாள் மனச்சாட்சிக்குப் பதில் சொல்லியாக வேண்டும் . அப்பொழுது ஒருசிலர் தற்கொலைக்கும் மனப்பிறள்வுக்கும் ஆழாவார்கள் . காரணம் மனச்சாட்சி அவ்வளவு கொடுமையானது . உங்கள் வருகைக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றிகள் தமிழ்சூரியன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.