Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சமும் ராஜபக்க்ஷ வம்சமும் திருமணபந்தத்தில் இணைந்தன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ariyar-mahinthar-mix-wed-150.jpg

[size=4]இலங்கையில் யாழ்ப்பாண சுதந்திர இராச்சியத்தை ஆட்சி செய்த வர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள். இவர்களின் தலைநகரமாக நல்லூர் விளங் கியது. இந்த யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சத்து தோன்றல்களில் ஒருவர் துவாரகா விஜே நாதன். இவர் ரோரன்ரோ பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றவர்.[/size]

[size=4]இலங்கையில் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற செயல் திட்ட பணிப்பாளராக உயர் பதவி வகிப்பவர் மிலிந்த ராஜபக்க்ஷ .[/size]

[size=4]மிலிந்த ராஜபக்க்ஷவுக்கும் துவாரகா விஜேநாதனுக்கும் இடையில் மலர்ந்த காதல் இறை ஆசியுடனும், பெற்றோர், பெரியோர் ஆகியோரின் சம்மதத்துடனும் கொழும்பில் கடந்த ஜூலை 05 ஆம் திகதி வெகுவிமரிசையான திருமணமாக நடந்தேறியது. திருமண சடங்குகள் கொழும்பு கங்காராம விகாரையில் சிங்கள பௌத்த பாரம்பரியப முறையிலும், கொழும்பு தெகிவளை விஷ்ணு ஆலயத்தில் தமிழ் இந்து பாரம்பரிய முறையிலும் இடம்பெற்றன.[/size]

[size=4]சிறிலங்கா ஜனாபதி மஹிந்த ராஜபக்க்ஷ புதுமண தம்பதியை அலரி மாளிகைக்கு வரவழைத்து ஆசிகள் வழங்கி இருந்தார். 07 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரபல ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு வைபவம் ஒன்றும் புதுமண தம்பதியால் நடத்தப்பட்டது.[/size]

[size=4]யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சத்தில் தோன்றிய முடிக்கு உரிய இளவரசர் ரெமிஜியஸ் கனகராஜா நெதர்லாந்தில் இருந்தவாறு இத்தம்பதியை வாழ்த்தி உள்ளார். இளவரசர் ரெமிஜியஸ் கனகராஜாவுக்கு மருமகள் உறவு முறை உடையவர் துவாரகா விஜேநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]திருமணத்தை தொடர்ந்து பெயரை துவி விஜேநாதன் ராஜபக்க்ஷ என்று கையாண்டு வருகின்றார் துவாரகா விஜேநாதன்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ariyar-join-mahinda-family-1.jpg

Ariyar-join-mahinda-family-4.jpg

Ariyar-join-mahinda-family-3.jpg

Ariyar-join-mahinda-family-2.jpg

Ariyar-join-mahinda-family.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Ariyar-join-mahinda-family-1.jpg

மாப்பிளை ஆரு, தமிழரசு?

மகிந்த மாமாவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ariyar-join-mahinda-family-1.jpg

மாப்பிளை ஆரு, தமிழரசு?

மகிந்த மாமாவா?

படத்தில் அப்படித்தான் தெரிகின்றது .. :D

இப்போ வெள்ளைகார மருமகள்/காப்பிலி மருமகன்/சிங்கள மருமகன்/குஜராத்தி மருமகள்... போற போக்கில் ஈழத்தமிழர்களின் பிரட்சனைகளை ... ஒரேஅடியாக தீர்ந்து விடும்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ வெள்ளைகார மருமகள்/காப்பிலி மருமகன்/சிங்கள மருமகன்/குஜராத்தி மருமகள்... போற போக்கில் ஈழத்தமிழர்களின் பிரட்சனைகளை ... ஒரேஅடியாக தீர்ந்து விடும்!

தமிழனுக்கு பிரச்சனை இருந்தால்தானே தீர்வதற்கு ...டமிழ்ஸ்க்கு என்ன பிரச்சனை....தலித் பிரச்சனை மட்டும்தான் இருக்கு .....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரிடம் காசு செல்வாக்கு வாய்ப்பு வந்தா அவன் ஏலியனையும் கலியாணம் முடிப்பான்..!

1940.. களில் சிங்கள தமிழ் கலப்புத் திருமணங்கள்...

1987 களில்..

இந்திய ஜவான்.. யாழ்ப்பாணப் பெண்கள் காதல் கலியாணங்கள்...

மீண்டும் 1995..

சிங்களச் சிப்பாய்கள்.. யாப்பாணப் பெண்கள் கவர்ச்சிக் கலியாணங்கள்..

2009 மே க்குப் பின்..

பல பிள்ளைகளின் தாய்மார்.. ஆமிக்காரனோட கள்ளக் காதல்.. ஓட்டம்...

2012...

யாழ்ப்பாண... ஆரிய வம்ச.. அரச பிரதானிகள்.. கரையோரச் சிங்கள அரச பிரதானி மகிந்த ராஜபக்சவோடு.. இனக்கலப்பு...

இதோட புலம்பெயர்ந்த தமிழர்கள்..

கனடியன்.. டானிஸ்.. பிரிட்டிஷ்.. பிரஞ்ச்.. அவுஸி.. நியூஸி.. நோர்வேயி.. டொச்... சுவிஸ்.. என்று அலாக்கா பறக்கினம்....

ஆக..

பிரபாகரனுக்கும் சுமார் 10,000 பயங்கரவாதிகளுக்கும் தான் கடுப்பு... அவைக்கு தான் தனி ஈழம்....! :(

அப்ப.. உலகம்.. முள்ளிவாய்க்காலில் அழிச்சது...???! பயங்கரவாதிகளா இருக்குமோ..???! ராஜபக்சவோட கலியாண சம்பந்தம் வைக்கிறவை தான் தமிழரா இருக்குமோ...???! எனக்கே டவுட்டா இருக்குது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு பிரச்சனை இருந்தால்தானே தீர்வதற்கு ...டமிழ்ஸ்க்கு என்ன பிரச்சனை....தலித் பிரச்சனை மட்டும்தான் இருக்கு .....

தலித் பிரச்சனையும்.. தங்களுக்க தான்.

ஊத்த வெள்ளை.. காப்பிலி தாதாக்கள்.... வட இந்திய ரவுடிங்க.. கரையோரச் சிங்கள இனவெறியங்க.. கண்டிச் சிங்கள இனவெறியங்க.. ஊத்த முஸ்லீம்... இவங்கள கலியாணம் முடிக்கேக்க.. தலித்து கிலித்து ஒன்றும் தெரியாது.. நம்ம கண்ணுக்கு..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையளுக்கு ஒழுங்கா தமிழ்லே கதைக்க தெரியா உதுகள் போய் யாரை கல்யாணம் முடிச்சா தான் என்ன கோவிந்தா கோவிந்தா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது சில தமிழர் நினைக்கினம் தமிழர் அல்லாதவர்களை கலியாணம் கட்டுறதுதான் பெருமை என்று .... :D

நடேசன் அண்ணையின் மனைவியும் ஒரு சிங்களப் பெண்மணிதான் பாருங்கோ...!!

பாலா அண்ணையின் மனைவியும் தமிழ் இல்லை.

காதலுக்கும் இன உணர்வுகளுக்கும் இடையில் சம்பந்தப் படுத்தி பார்ப்பது சின்னப் பிள்ளைத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமா வரும் காதலும் குலம் கோத்திரம் பார்த்து வாற காதலும் ஒன்று என்றீங்க..!

அப்ப சிங்களவனுக்கு தமிழர் நிலத்தின் மேல வந்த காதலையும் நடேசன் அண்ணா.. அன்ரன் அண்ணாவை சாட்டி விட்டுக் கொடுத்திட்டாப் போச்சு..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமா வரும் காதலும் குலம் கோத்திரம் பார்த்து வாற காதலும் ஒன்று என்றீங்க..!

அப்ப சிங்களவனுக்கு தமிழர் நிலத்தின் மேல வந்த காதலையும் நடேசன் அண்ணா.. அன்ரன் அண்ணாவை சாட்டி விட்டுக் கொடுத்திட்டாப் போச்சு..! :lol::icon_idea:

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற புதுவருடப்பிறப்பின் போது.. ஒருவர் யாழ்ப்பாண மன்னரின் வாரிசு என்று கூறி,

தமிழ்மக்களுக்கு மன்னரின் புத்தாண்டுச் செய்தி என்னும்... பொருள்பட‌ ஒரு ஒளிப்பதிவு ஒன்றை இணைத்திருந்தார்.

அந்தக் கிறுக்கனா.. இந்த ஆரியச் சக்கரவர்த்தியின் வாரிசு.

Edited by தமிழ் சிறி

[size=4]திருமணங்கள் ஒற்றுமையை தரமாட்டா என்பது பல இடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4] [/size]

[size=4]படத்திற்கு ஓ.கே. நிஜத்திற்கு ... விரைவில் விவாகரத்தாகலாம்.[/size]

[size=5]பி.கு. குடும்ப மரம்.. இதில்பல கிளைகளில் தமிழே இல்லை[/size]

[size=5]http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen5000b.html[/size]

தனிப்பட்ட பெண் ஒருவரின் திருமணம் ஒற்றுமையை வளர்க்காது. இதுபற்றி யாழில் நாம் ஒரு திரியில் விவாதித்திருக்கிறோம். அதேநேரம், நோக்கம் எதுவாக இருந்தாலும் நாம் தனிப்பட்ட ஒரு திருமணத்தை எதிர்ப்பதும் சரியல்ல. தேவைப்பட்டால் தமிழ்நாடு செல்லும் போது அங்கே திருக்குமார் நடேசனுக்கு கொடுத்தமாதிரி கொடுத்தனுப்ப இன்னமும் உறவுகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவரைக்கும் இதையும் நடேசன் அண்ணவின் திருமணம் போன்றதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சென்ற புதுவருடப்பிறப்பின் போது.. ஒருவர் யாழ்ப்பாண மன்னரின் வாரிசு என்று கூறி,

தமிழ்மக்களுக்கு மன்னரின் புத்தாண்டுச் செய்தி என்னும்... பொருள்பட‌ ஒரு ஒளிப்பதிவு ஒன்றை இணைத்திருந்தார்.

அந்தக் கிறுக்கனா.. இந்த ஆரியச் சக்கரவர்த்தியின் வாரிசு.

யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் 'சங்கிலியன்' எண்டுதான் சனத்திற்குத் தெரியும். ஆனா முப்பது வருசமாய் இவ்வளவு சண்டையும் நடக்கக்க இவர் ஒருத்தர்தான் ஓரமா இருந்து அரசு புரிந்திருக்கிறார். இதை ஒருத்தரும் கண்டுபிடிக்கல்லை.

இந்தக் கொடுமையை என்னெண்டு சொல்ல.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் 'சங்கிலியன்' எண்டுதான் சனத்திற்குத் தெரியும். ஆனா முப்பது வருசமாய் இவ்வளவு சண்டையும் நடக்கக்க இவர் ஒருத்தர்தான் ஓரமா இருந்து அரசு புரிந்திருக்கிறார். இதை ஒருத்தரும் கண்டுபிடிக்கல்லை.

இந்தக் கொடுமையை என்னெண்டு சொல்ல.

இந்த மன்னரின் வாரிசு என்று சொல்பவரை... அங்கோடை, கீழ்ப்பாக்கம் போன்ற வைத்தியசாலைகளில் சேர்த்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.

அது சரி வராவிட்டால்... வேப்பிலை அடியும், சவுக்கடியும் கொடுக்க.. ஆட்கள் திருந்துவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மன்னரின் வாரிசு என்று சொல்பவரை... அங்கோடை, கீழ்ப்பாக்கம் போன்ற வைத்தியசாலைகளில் சேர்த்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.

அது சரி வராவிட்டால்... வேப்பிலை அடியும், சவுக்கடியும் கொடுக்க.. ஆட்கள் திருந்துவினம்.

கொடுமை என்னவென்றால் போனவருடம் அந்த மன்னர் டிஸ்கவறி சனலிலும் தோன்றினார்..!

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை என்னவென்றால் போனவருடம் அந்த மன்னர் டிஸ்கவறி சனலிலும் தோன்றினார்..!

இசை,

அசைலம் அடிச்ச சனம் எல்லாம்.... அரச பரம்பரை என்று, வெளிக்கிட்டுள்ளதை நினைக்க...

இவர்களுக்கு விசர் பிடித்து விட்டது என்று தான்... நினைக்க வேண்டியுள்ளது.

இவர்கள் ஆரையாவது கலியாணம் கட்டி விட்டுப் போகட்டும்.

ஆனால்... அரச பரம்பரை என்று... தமிழரை கேவலப் படுத்தாமல் இருந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு அகதியா வந்த சோத்து ஆன்டி மாருக்கும் uncle மாருக்கும் தங்கட பிள்ளையள் வேற்று இனத்தவர கட்டினா ஒரு பெருமை

அதெல்லாம் இருக்கட்டும் யாழ்பாணத்து அரசன் போன வருஷம் வாடைகைக்கு எடுத்த ட்ரெஸ்ஸ இன்னும் திருப்பி கொடுகலயாம் கொடுத்தவன் தேடி திறிறான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.