Jump to content

நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள்!!


Recommended Posts

Posted

யாழாலதான் சிறுவர் கெட்டு போவார்கள் என்ற கருத்துக்கள் நாம் எங்கே நிற்கின்றோம் ?? என்ற இன்னுமொரு கேள்வியையும் எழுப்புகின்றது .

[size=4]கோமகன், [/size][size=1]

[size=4]உங்கள் ஆதங்கம் நியாயமான புரிகின்றது. ஆனால், இதை செய்வதன் முன்னர் பலதரப்பு கருத்துக்களையும் உள்வாங்கி, நன்மை/தீமைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் நிர்வாகம் தான் முடிவெடுக்கவேண்டும் என்பதி[/size][size=4]னை [/size][size=4]ஏற்பீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]அந்த அடிப்படையில் இதற்கு சார்பாகவும் சற்று அவதானமாயும் வரும் கருத்துக்களை ஏற்றால் நல்ல முடிவுக்கு வரலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கு சிறுவர் என சொல்லிக் கொண்டு பெரியாட்கள் தான் வந்து எழுதப் போயினம்

Posted

கோமகன்,

உங்கள் ஆதங்கம் நியாயமான புரிகின்றது. ஆனால், இதை செய்வதன் முன்னர் பலதரப்பு கருத்துக்களையும் உள்வாங்கி, நன்மை/தீமைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் நிர்வாகம் தான் முடிவெடுக்கவேண்டும் என்பதினை ஏற்பீர்கள்.

[size=1][size=4]அந்த அடிப்படையில் இதற்கு சார்பாகவும் சற்று அவதானமாயும் வரும் கருத்துக்களை ஏற்றால் நல்ல முடிவுக்கு வரலாம். [/size][/size]

நிட்சயமாக ........... நிர்வாகம்தான் இறுதிமுடிவுகளை எடுக்கவேண்டும் . என்னால் பரிந்துரை மட்டுமே செய்யமுடியும் அகூதா.

Posted

[size=4] கனடாவில் உள்ள ஒரு எப்.எம். வானொலி[size=5] (CMR FM 101.3 ) [/size]பிரதி ஞாயிறு தோறும் பகல் பன்னிரண்டு மணிக்கு ஒரு சிறுவர் நிகழ்வை நடாத்துவதுண்டு. அதில் தமிழ் , கணிதம் , பாட்டு, பொது அறிவு போன்ற நிகழ்வுகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்படும். [/size]

[size=4]கடந்த இரு மாதங்களாக சிறுவர்களையே தொகுத்தும் வழங்க ஊக்குவித்து அதை நிறைவேற்றியும் வருகின்றார்கள். [/size]

[size=4]வானொலிக்கும் இணையத்தளத்திகும் இடையே உள்ள இடைவெளி பெரிது என்றாலும் சில வேளைகளில் சில அனுகூலங்களை மற்றையவர்களின் அனுபவத்தில் இருந்து பெறலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழுக்குள் சிறுவர் பகுதி இணைக்கும் பட்சத்தில் தாயக நிலவரங்களை மட்டும் அவர்கள் புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும்..நாங்களாகவே பிள்ளைகளுக்கு புரிய வைகக்ககலாம்...ஏற்கனவே சிறுவர் பகுதியும் இணைக்கபட்டு இருந்தால் பெரிதாக ஒன்றும் தெரியாது...திடீர் என்று சேர்க்கபடும் பட்சத்தில் யாழின் சட்ட திட்டங்களை இன்னும் இறுக்கமாக கொண்டு வர வேண்டி வரும்...அதை தவிர்த்து இப்போதுள்ள சிறுவர்கள் போதிய அளவு தமிழ்,சமய வகுப்புக்களுக்கு போய் வருகிறார்கள் ஆகவே இங்கே வந்து தான் சிறுவர் ஆக்கங்களைப் படிச்சு கற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று சொல்லி விட முடியாது... சிறுவர் பகுதி சேர்க்கும் போது இன்னும் மட்டுறுத்தினர்மாருக்கு பிரசர் கூடும்...இருக்கும் மூவரும் எத்தனை விடையங்களைக் கவனிக்க முடியும்..அவர்களும் நிறைய பொறுப்புக்களோடு இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் இன்னும்,இன்னும் வியைடங்களை சேர்க்கும் போது சிரமங்களை சந்திக்க போகிறவர்கள் மட்டுறுத்தினர்மாரே...

பெரிய பிள்ளைகளாக இருக்க கூடிய நாங்களே நிறைய விடையங்களில் சொல்வளி கேக்கிறது இல்லை.நாங்களே நின்று குளப்படி செய்து, சண்டை போட்டுட்டு கடசியில் நியாயம் கேட்க நிர்வாகத்தில் இருப்பவர்களைத் தான் தேடி ஓடுகிறோம்...அப்போ சின்னப் பிள்ளைகள் வந்தால் எப்படி இருக்கும்...வேறை,வேறை இடங்களில் சின்னப் பிள்ளைகள் நிறைய பார்க்க கூடாத விடையங்களை பார்க்கிறார்கள் தான் கற்றுக் கொள்கிறார்கள் தான்.....அதற்காக எங்கள் கண் முன்னாடியே தேவை அற்ற விடையங்களை பார்க்க அதைப் பற்றி அலசி ஆராய அனுமதிக்க முடியுமா..சிறுவர் பகுதி சேர்க்கபடும் போது அந்த பகுதியை பார்வையிட்டுக் கொண்டு இருக்கவே தனி ஒருவர் தேவை..அதாவது மட்டுறுத்தினர்...பிள்ளைகள் இணையத்திற்கு வந்தால் கூடவே இருந்து கவனிப்பதற்கு எத்தனை பேற்றோரால் முடியும்.....அல்லது அவர்கள் சிறுவர் ஆக்கங்களைத் தான் பார்க்கிறார்கள் அவற்றைத் தான் கற்றுக் கொள்கிறார்கள் என்று எப்படி நம்ப முடியும்...என்ட அறிவுக்கு எட்டியது இது தான்...எது எப்படியோ சிறுவர் பகுதி தேவை இல்லை என்று சொல்ல வர இல்லை நிறைய யோசிச்சு எடுக்கப்பட வேண்டிய விசயம்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில், சிறுவர்களை இணைத்தால்...

அவர்கள் எங்களைப்பார்த்து.... மாமா, மாமி, அங்கிள், அன்ரி, பெரியப்பு, குஞ்சியப்பு, குஞ்சியாச்சி.... என்று கூப்பிட வெளிக்கிட்டால்....

அதை.. இன்முகத்துடன் தாங்கும்.... மனத்தைரியம், எல்லா கருத்தாளர்களுக்கும் உள்ளதா? :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் கலைஞனும்... யாழ்களத்தின் சகோதர இணையமாக சிறுவர்களுக்கு என்று... ஒரு இணையத்தை தொடங்க ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தவர், பின்பு ஏனோ... தெரியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட போங்கப்பா அதுகள் தமிழ் பள்ளிக்கு போறதெண்டாலே என்னமோ கொல்ல கொண்டு போறாங்கள் எண்டு நினைக்கினம் சிக் வேற அடிச்சிட்டு நிக்கினம் வீட்ட இதுக்குள்ள சிறுவர் பகுதியாம் யாழ் களத்த நடத்தவே மட்டுஸ்க்கு நேரம் இல்லை .....,

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த தமிழ் படிக்க பஞ்சிப்படுற கூட்டம் மட்டும் தானா குழந்தைள்.. தாயகம்.. தமிழகம்.. மலேசியா.. சிங்கப்பூர்...மொரீசியஸ்.. என்றும் தமிழ் குழந்தைகள் இருக்கின்றன தானே..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட போங்கப்பா அதுகள் தமிழ் பள்ளிக்கு போறதெண்டாலே என்னமோ கொல்ல கொண்டு போறாங்கள் எண்டு நினைக்கினம் சிக் வேற அடிச்சிட்டு நிக்கினம் வீட்ட இதுக்குள்ள சிறுவர் பகுதியாம் யாழ் களத்த நடத்தவே மட்டுஸ்க்கு நேரம் இல்லை .....,

சுண்டு, நீங்கள் நடத்தும் பள்ளிகளுக்கு.... வடிவாவன ரீச்சரை போடுங்கள்.

பெடியள், பள்ளிக் கூடத்துக்கு.... சிக் அடிக்காமல், பிச்சுக்கொண்டு போவாங்கள். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுண்டு, நீங்கள் நடத்தும் பள்ளிகளுக்கு.... வடிவாவன ரீச்சரை போடுங்கள்.

பெடியள், பள்ளிக் கூடத்துக்கு.... சிக் அடிக்காமல், பிச்சுக்கொண்டு போவாங்கள். :D:lol:

ஐயோ

ஐயோ

சிறி

ரீச்சர் வடிவாக இருந்தால் வேறு ஆட்களை சுண்டல் உள்ள விடுமே.......... :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த தமிழ் படிக்க பஞ்சிப்படுற கூட்டம் மட்டும் தானா குழந்தைள்.. தாயகம்.. தமிழகம்.. மலேசியா.. சிங்கப்பூர்...மொரீசியஸ்.. என்றும் தமிழ் குழந்தைகள் இருக்கின்றன தானே..! :lol:

அவர்கள் ஊரிலுள்ள, பள்ளிக்கூடத்தில்... தமிழ் படிக்காமல், யாழ் இணையத்திலா? தமிழ் படிக்க வரப்போகின்றார்கள் நெடுக்ஸ். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயோ

ஐயோ

சிறி

ரீச்சர் வடிவாக இருந்தால் வேறு ஆட்களை சுண்டல் உள்ள விடுமே.......... :lol::D :D

:rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த தமிழ் படிக்க பஞ்சிப்படுற கூட்டம் மட்டும் தானா குழந்தைள்.. தாயகம்.. தமிழகம்.. மலேசியா.. சிங்கப்பூர்...மொரீசியஸ்.. என்றும் தமிழ் குழந்தைகள் இருக்கின்றன தானே..! :lol:

தாயகம் தவிர மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தமிழை இணையத்தில் தேடி படிக்கவேண்டிய அவசியம் இருக்கலாம்..ஆனால் தாய் மடியில் பிறந்து தமிழ் தமிழ் மடியில் தவழ்ந்து தமிழையேஉயிர் மூச்சாக விடும் எங்கள் தாயக, உறவுகளுக்கு இணையத்தில் தமிழ் தேட வேண்டிய அவசிமே இல்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யாழில், சிறுவர்களை இணைத்தால்...

அவர்கள் எங்களைப்பார்த்து.... மாமா, மாமி, அங்கிள், அன்ரி, பெரியப்பு, குஞ்சியப்பு, குஞ்சியாச்சி.... என்று கூப்பிட வெளிக்கிட்டால்....

அதை.. இன்முகத்துடன் தாங்கும்.... மனத்தைரியம், எல்லா கருத்தாளர்களுக்கும் உள்ளதா? :icon_idea::D

சிறியண்ணை இது எனக்கு வச்ச வெடி போல இருக்கு.. :unsure::icon_idea:

Posted

நல்ல முயற்சி.

இங்கு சிறுவர் என சொல்லிக் கொண்டு பெரியாட்கள் தான் வந்து எழுதப் போயினம்

:lol: :lol: :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்கள் ஊரிலுள்ள, பள்ளிக்கூடத்தில்... தமிழ் படிக்காமல், யாழ் இணையத்திலா? தமிழ் படிக்க வரப்போகின்றார்கள் நெடுக்ஸ். :D

அநேக ஆங்கில போறம்கள்.. ஆங்கிலேயர்களால் தான் நடத்தப்படுகின்றன. ஏன் ஆங்கிலம் படிக்க வேறு இடம் இல்லாமலா. போறம் என்பது தொடர்பாடல் வழிமுறைகளில் ஒன்று. தமிழ் குழந்தைகள் போறம் மூலம் தமிழில் தொடர்பாடலை வளர்க்க இதனையும் ஒரு மார்க்கமாக பயன்படுத்த வழிகாட்டலாம் இல்லையா..!! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்களத்தில் சிறுவர் பகுதி தேவையில்லை என நினைக்கின்றேன். இப்போது யாழ்களம் தேசிய விடுதலை தொடர்பான சிந்தனையில் இருந்து விலத்தி, பாலியல்தளமாகவும், தங்களின் பாலியல் சிந்தனைகளை வடிப்பதற்கான தளமே ஆகிக் கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு இங்கே இடம் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் தேசியத்துக்காக மிகவும் உழைத்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்திலும் கூட.. பேசாப் பொருள்.. என்ற பகுதிக்காகவே.. பல்வேறு பாலியல் ஆக்கங்கள் செருகப்பட்டன. அதனை முற்போக்கு என்று சிலர் சொன்னார்கள். ஏன்.. கவிதைப் பகுதிகளில் பச்சை பச்சையா கொச்சை தமிழில் எழுதிய கவிதைகள் ஆகோ ஓகோ.. புரட்சி என்று புகழப்பட்டன. ஏன் இன்னொரு முக்கிய யாழ் உறுப்பினர்.. பிள்ளை பெறுவது எப்படி.. என்பதை காதலிப்பதில் இருந்து போட்டுக்காட்டினார். அவர் உங்களின் நண்பரும் கூட..!

யாழ் நிர்வாகமும் அதனை ஏற்றுக் கொண்டு.. பேசாப் பொருள் என்ற பகுதியை திறந்து கொண்டது. இன்று அது சமூகம் சார்ந்த.. ஒளிப்பு மறைப்பு செய்யப்படும்.. பல்வேறு அம்சங்களையும் பேசும் பகுதியாக மாற்றம் கண்டும் உள்ளது.

யாழில் மட்டுப்படுத்திய பாலியல் சார்ந்த விடயங்கள் பகிரப்படுவது ஒன்றும் புதிதல்லவே. தேசியத்துக்காக உழைத்துக் கொண்டிருந்த போதும் அது நடந்தது தானே..!

ஏதோ இப்பதான் யாழ் கொட்டுப்போனதா..???????! :lol::icon_idea:

உ+ம்:

[size=3]பருத்து நிமிர்ந்த மார்புகளும், கட்டுடலும்:ஆய்வுக்களமாகும் நவீனப் பெண்[/size]

Oct 13 2008 11:25 PM

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெருங்காய ரசம் வைத்து சாப்பிட்டால் சாப்பிட்டது அனைத்து எளிதில் சீரணமாகிவிடும் என்று நம் முன்னோர்கள் எடுத்து இயம்பியுள்ளார்கள்... அதற்கான செய்முறை விளக்கம் இங்கிட்டு..

டிஸ்கி:

http://myiyerreceipes.blogspot.in/

யாரையும் புண்படுத்தும் நோக்கம் இந்த சிறியவனுக்கு கிடையாது...

Posted

உங்களின் ஆக்கபூர்வமான ஜோசனைக்கு எனது நன்றிகள் சகோதார

Posted

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் கலைஞனும்... யாழ்களத்தின் சகோதர இணையமாக சிறுவர்களுக்கு என்று... ஒரு இணையத்தை தொடங்க ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தவர், பின்பு ஏனோ... தெரியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார்.

இணையத்தளமும் பதிவு செய்து ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டேன். நேரப்பற்றாக்குறை காரணமாக முயற்சி கைகூடவில்லை. ஏற்கனவே சுட்டி பொறுப்பில் மோகன் சிறுவர் பகுதியை அமைத்துகொடுத்தார். அந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.