Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3] ரத்த அழுத்தம் என்றால் என்ன?[/size]

[size=3][size=2]டாக்டர் ப.உ. லெனின் [/size][/size]

hypertension-729.jpg

[size=3]இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்![/size]

[size=3]ரத்த அழுத்தம் என்றால் என்ன?[/size]

[size=3]ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'ரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.[/size]

[size=3]இந்நோய் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?[/size]

[size=3]1732-ல் 'ஸ்டீபன் ஹேல்ஸ்' என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண 'மானோ மீட்டர்' என்ற கருவியை வைத்து அளந்தார். 1896-ல் 'சிவரோசி' என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் 'ஸ்பிக்மோ மேனோ மீட்டரை' கண்டு பிடித்தார். 1905-ல்தான் ரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன் பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.[/size]

[size=3]உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?[/size]

[size=3]மருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை 'ரத்த அழுத்த நோயாளி' எனக் கூறலாம்.[/size]

[size=3]ரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:[/size]

[size=3]1. கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வரை.[/size]

[size=3]2. 106 முதல் 115 வரை.[/size]

[size=3]3. 115-க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.[/size]

[size=3]எதனால் ரத்த அழுத்தம அதிகமாகிறது?[/size]

[size=3]1. காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.[/size]

[size=3]2. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.[/size]

[size=3]இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந்நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.[/size]

[size=3]ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?[/size]

[size=3]முதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். 'ஈ.சி.ஜி.' என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய 'எக்ஸ்ரே' பரிசோதனை உதவும். 'எக்கோ', 'ஆஞ்சியோகிராம்' போன்ற பரிசோதனைகளைக்கூட செய்து பார்க்கலாம்.[/size]

[size=3]கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?[/size]

[size=3]கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் 'பிரி-எக்லாம்சியா' என்பதாகும். இது முதன் முறையாக கர்ப்பமடைபவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட குழந்தையே பெறாமல் முதல் முறையாக கர்ப்பமடைந்த பெண்களுக்கு 6 முதல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவர்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக-கால்வீக்கம், ரத்தக்கொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளியேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருந்துவத்தின் மூலம் சரி செய்யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்து விடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கிறார்கள்.[/size]

[size=3]ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை:[/size]

[size=3]நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத்தாவிடில் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகள் வீங்க வைக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை சாப்பிடாதீர்கள். கொழுப்பு சத்து ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக் கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் அழுத்தத்தையும் குறைக்கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்துங்கள். புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும்! மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிச் செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. உடல் எடையை குறையுங்கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.[/size]

[size=3]ஹோமியோ மருந்துகள்:[/size]

[size=3]RAUWOLFIA Q, CRATAE-GUS Q, ADONISVER Q போன்ற சொட்டு மருந்துகளை ரத்த அழுத்த அடிப்படையில், அதாவது ரத்த அழுத்தமிகுதி அல்லது குறைவின் அடிப்படையில், நீரில் கலந்து குடிக்கலாம். DIGITALIS, CACTUS BERBERIS VULGARIS போன்ற மாத்திரைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். பக்க -பின் விளைவுகள் ஏற்பட்டால் ஹோமியோபதி நிபுணரை நேரில் அணுகி அவரது பரிந்துரையின்படி மருந்துகளை சாப்பிட வேண்டும். பயோகெமிக் மருந்துகளும், கூட்டுக்கலவை மருந்துகளும், சில வகை தாய்திரவங்களின் (MOTHER TINCTURES) கலவைகளும் இதற்க மிகவும் உதவும். இவை எல்லாம் வாழ்க்கை முறை நோய்களாகிப் போனதால் உடற்பயிற்சி, உணவு, உறக்கம் ஆகியவற்றிலும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டும்.[/size]

[size=3]http://www.koodal.co...on-in-teenagers[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு, நன்றி நுணாவிலான்.

யாழ்களத்தில் அங்கத்துவராக இருக்கும், அனைவரும்... கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை.

இணைப்பிற்கு, நன்றி நுணாவிலான்.

யாழ்களத்தில் அங்கத்துவராக இருக்கும், அனைவரும்... கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை.

நலமா சிறிஅண்ணா

:D :D :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நலமா சிறிஅண்ணா

:D :D :D:icon_idea:

ஆ.... இந்த, நலம் விசாரிக்கிற ஆக்களாலை தான்... பிரசர் ஏறுகிறது. :D:lol::icon_mrgreen:

எனக்கு இருக்கும் பிரச்சனை இதுதான். கொஞ்சம் வெயிட்டை குறைத்து பார்த்தேன்..நிறைய முன்னேற்றம் தெரிகின்றது

அத்துடன், ஒரு பெண் துணை (அல்லது ஆண் துணை) இருந்தால், பிரசரை குறைக்க சிறந்த ஒரு உடற்பயிற்சியை நாள் தவறாமல் செய்யலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்

எனக்கு இருக்கும் பிரச்சனை இதுதான். கொஞ்சம் வெயிட்டை குறைத்து பார்த்தேன்..நிறைய முன்னேற்றம் தெரிகின்றது

அத்துடன், ஒரு பெண் துணை (அல்லது ஆண் துணை) இருந்தால், பிரசரை குறைக்க சிறந்த ஒரு உடற்பயிற்சியை நாள் தவறாமல் செய்யலாம் :)

அருமையான தகவலை தந்த நிழலிக்கு மிக்க நன்றி.................. :D:icon_idea:

ஆனாலும் ....ஒரு டவுட் ..........ஐயோ வேண்டாம் இங்க ...........இன்னொரு சந்தர்ப்பத்தில் கேட்கிறேன் :lol: :lol: :icon_idea:

ஆனாலும் ....ஒரு டவுட் ..........ஐயோ வேண்டாம் இங்க ...........இன்னொரு சந்தர்ப்பத்தில் கேட்கிறேன் :lol: :lol: :icon_idea:

கேட்க என்று இவ்வளவு தூரம் வந்து விட்டு கேட்காமல் போறது சரியில்லை...மோசமானது என்றால் நான் வாசித்து மகிழ்ந்து விட்டு பின் நீக்குகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

உந்த விசயத்திலை நான் பழம்திண்டு கொட்டை போட்டுட்டு இருக்கிறன்......சாப்பாட்டுவிசயத்திலை அமத்திப்பிடிக்க கொஞ்சப்பிரச்சனை வழிக்குவரும்....நாலுநாளைக்கு இரவிலை சாப்பிடாமல் படுத்துப்பாருங்கோ.......உடம்பிலை ஒரு வித்தியாசம் தெரியும்.

நூறு வீதம் உண்மை.

அண்ணா நீங்கள் இரவில் பழங்கள் கூட சாப்பிடுவதில்லையா அப்படியாயின் எப்படி நித்திரை வரும்?...இரவில் வெறும் வயிற்றோடு படுக்கக் கூடாது என சொல்வார்கள் இல்லையா :unsure:

நீங்க அனுபவசாலி . உங்கள் கருத்தோடு 100 % உடன்படுகிறேன்.

http://www.youtube.com/watch?v=Pfna7nV7WaM

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நீங்கள் இரவில் பழங்கள் கூட சாப்பிடுவதில்லையா அப்படியாயின் எப்படி நித்திரை வரும்?...இரவில் வெறும் வயிற்றோடு படுக்கக் கூடாது என சொல்வார்கள் இல்லையா :unsure:

அண்ணா நான் சீரியசாகத் தான் கேட்டேன் உங்கள் பதில் இன்னும் வரவில்லை?

அத்துடன், ஒரு பெண் துணை (அல்லது ஆண் துணை) இருந்தால், பிரசரை குறைக்க சிறந்த ஒரு உடற்பயிற்சியை நாள் தவறாமல் செய்யலாம் :)

அல்லது அவசியம் இல்லாயா? :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா நான் சீரியசாகத் தான் கேட்டேன் உங்கள் பதில் இன்னும் வரவில்லை?

சாதாரணமாக எனக்கு தெரிந்த பலர் மாலை 6 மணிக்குப்பின் சாப்பிடுவதில்லை.சிலர் பின்னேரம் 4 மணிக்குப்பின் சாப்பிடுவதில்லை.பின்னர் எல்லாம் நீராகாரம் மட்டுமே.மெதுவான சுடுநீர் நல்லதென சொல்லக்கேள்வி எனக்கு சரியாக தெரியாது. காலையிலும் மதியமும் இவர்கள் சாப்பிடுவதை பார்த்தால் மயங்கி விழுந்துவிடுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விசயத்திலை நான் பழம்திண்டு கொட்டை போட்டுட்டு இருக்கிறன்......சாப்பாட்டுவிசயத்திலை அமத்திப்பிடிக்க கொஞ்சப்பிரச்சனை வழிக்குவரும்....நாலுநாளைக்கு இரவிலை சாப்பிடாமல் படுத்துப்பாருங்கோ.......உடம்பிலை ஒரு வித்தியாசம் தெரியும்.

நான் அனுபவத்தில் அறிந்த உண்மை :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இரத்த அழுத்தம்.... ஒருவருக்கு, உள்ளது எனும் போது... என்ன, அறிகுறி தெரியும்?

எனக்குத் தெரிந்த நண்பர் சொன்னார்...

ஒருவர், இரத்த அழுத்தத்துக்கு... தொடர்ந்து குளிசை மாத்திரை பாவித்தவராம்...

இரண்டு நாள், அதனைப் பாவிக்காமல் விட்டதால்... செத்துப் போனாராம். இது, உண்மையாக இருக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக எனக்கு தெரிந்த பலர் மாலை 6 மணிக்குப்பின் சாப்பிடுவதில்லை.சிலர் பின்னேரம் 4 மணிக்குப்பின் சாப்பிடுவதில்லை.பின்னர் எல்லாம் நீராகாரம் மட்டுமே.மெதுவான சுடுநீர் நல்லதென சொல்லக்கேள்வி எனக்கு சரியாக தெரியாது. காலையிலும் மதியமும் இவர்கள் சாப்பிடுவதை பார்த்தால் மயங்கி விழுந்துவிடுவீர்கள்.

:D :D :D

இரத்த அழுத்தம்.... ஒருவருக்கு, உள்ளது எனும் போது... என்ன, அறிகுறி தெரியும்?

எனக்குத் தெரிந்த நண்பர் சொன்னார்...

ஒருவர், இரத்த அழுத்தத்துக்கு... தொடர்ந்து குளிசை மாத்திரை பாவித்தவராம்...

இரண்டு நாள், அதனைப் பாவிக்காமல் விட்டதால்... செத்துப் போனாராம். இது, உண்மையாக இருக்க முடியுமா?

இரத்த அழுத்தம் இருந்தால் எதற்கெடுத்தாலும் கோபம் வரும்,ரென்சனில் கத்திக் கொண்டே இருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

இரத்த அழுத்தம் இருந்தால் எதற்கெடுத்தாலும் கோபம் வரும்,ரென்சனில் கத்திக் கொண்டே இருப்பார்கள்

இரத்த அழுத்தத்தை... மூலக் கொதி என்று, சொல்லலாமா? :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இரத்த அழுத்தத்தை... மூலக் கொதி என்று, சொல்லலாமா? :lol::icon_idea:

விடி காலைப் பொழுதின் அமைதியில், நல்லூரின் மணி அய்யர் மடத்தின், குளத்தின் கீழ்ப்படியில். தண்ணீருடன், பட்டும் படாமலும், குந்தியிருப்பவர்கள், மூல வியாதி, உள்ளவர் என்று அறிக!

ஆதாரம்: நல்லூர் நிகண்டு

இது அதிக மிளகாய்த்தூள் உபயோகிப்பதாலும், கோடாவில் நனைந்த கனகலிங்கம் சுருட்டுப் புகைப்பதாலும், கடும் வெய்யிலில் இருப்பதாலும் ஏற்படுகின்றது!

இதற்கும், இரத்த அழுத்தத்திற்கும் எந்தத் தொடர்பும், இருப்பதாக, இதுவரை அறியப் படவில்லை!

கனகலிங்கம் சுருட்டு, உலகப் பிரசித்தி பெற்றுவிட்டதா?

ஆ.... எனக்கு, மயக்கம் வருது.....

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.