Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிகின்றதா எங்களை ?????????????

Featured Replies

  • தொடங்கியவர்

நான் கேட்கிறேன் என கோபிக்க வேண்டாம் த.சூ புலிகள் என்ன வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்களா?...அவர்களும் ரத்தமும்,சதையும் உள்ள மனிதர்கள் தான்...அவர்கள் தற்போது படும் கஸ்டம் அவர்களுக்குத் தான் தெரியும்.

கோமகன் நீங்கள் புலம் பெயர் மக்களை நோக்கி கவிதை எழுதாமல் யாழில் உள்ள சிலர் எழுதுவது மாதிரி பான்கீன்மூனையும்,பிரணாப் முகர்ஜியையும் நோக்கி கவிதை எழுதுங்கள்...புலம் பெயர் மக்கள் இக் கவிதையை படித்து ஆகப் போறது ஒன்றுமில்லை ஆனால் மூனோ,முகர்ஜியோ கவிதையை படித்துப் போட்டு ஏதாவது செய்வார்கள்

முயற்சி செய்கின்றேன்!!!!!!!! ஆனால் கோ வுக்கு கருத்துக்களத்தில் கிடைத்த பட்டங்கள் ( பட்டங்களுக்கு என்னால் ஆதாரம் தரமுடியும் ) மீளப்பெறப்படும் என்ற உறுதிமொழியை உங்களால் தரமுடியுமா ?? 48 மணித்தியாலங்கள் முடியாத நிலையில் 4 பக்கங்களையும் , 1400 பார்வையாளர்களையும் இந்தக்கவிதை பெற்றிருப்பது இந்தக்கவிதைக்கு கிடைத்த வெற்றியாகவே நினைக்கின்றேன் (இதை அடக்கத்தோடதான் சொல்லுறன்) . உங்கள் நேரத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ரதி அக்கா .

Edited by கோமகன்

  • Replies 98
  • Views 5.6k
  • Created
  • Last Reply

[size=4]தமிழிழ பங்களிப்புகளில் நான் என்ன செய்கிறேன்,என்ன செய்து கொண்டு இருக்கிறேன்,யாரோடு சேர்ந்து வேலை செய்கிறேன் என்பது உங்களுக்கு தேவையில்லாதது...உங்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை...யாழில் கொஞ்சப் பேர் இருக்கிறார்கள் அவர்கள் தான் நீங்கள்ள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள்[/size]

நீங்கள் எவருடன் சேர்ந்து என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஆனால் பொது பங்களிப்புகளில் நீங்களும் பங்கெடுக்க வேணும். யார் அழைக்கிறார்கள் என்பதை விடுத்து எதற்காக அழைக்கிறார்கள் என்பதை பார்க்க வேணும். நான் அழைத்ததும் ஓடி வருபவர்கள் எனக்காக வருவதில்லை. தமிழீழம் கிடைக்க வேண்டும் என்று எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுக்க வேணும் என்று நினைத்து ஓடி வருவார்கள். :)

உங்களை அழைத்து பேச்சு வாங்கிய பின் நான் உங்களை அழைப்பதில்லை தானே? அதன் பின்னாவது நீங்களாக பங்கெடுத்திருக்கலாமே. அதற்கும் முடியாதென்றால் மல்லையூரான் அண்ணா அழைத்த போதாவது கையொப்பமிட்டிருக்கலாமே....

நீங்கள் என்ன தான் வெளியில் இருந்து செய்தாலும் "தமிழீழம் வேண்டுமா" என்று ஒரு வாக்கெடுப்பு நடக்குமானால் அந்நேரம் நான் அழைத்ததுக்காக நீங்கள் வாக்களிக்காமல் விட்டால் உங்கள் எந்தவொரு தமிழீழ முயற்சிக்கும் பலன் கிடைக்காது.

தமிழீழ விடயங்களில் போட்டி பொறாமையை கொண்டிருக்காதீர்கள். உங்கள் எதிரி உங்களை அழைத்தாலும் எதற்கு அழைக்கிறார் என்று பார்த்து ஆதரவு வழங்குங்கள். ஏன் அர்ஜுன் அண்ணா புலி எதிர்ப்பாளராக இருந்தாலும் அவர் தமிழீழத்துக்கு ஆதரவான பங்களிப்புக்கு அழைத்தால் நாம் பங்குபெற வேண்டும்.

நீங்கள், கோமகன் அண்ணா, கிருபன் அண்ணா, நிழலி அண்ணா ஆகியோர் எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுத்ததை நான் காணவில்லை.

[size=4]விழுந்தும் மீசையில் மண் ஓட்டவில்லை[/size]

மீசை இருந்தால் தான் மேடம் மீசையில் மண் ஒட்டும். :D

Edited by துளசி

  • தொடங்கியவர்

இந்தக்கவிதை

எங்கள் செத்தவீட்டில்

எவரோ வந்து அழுது புரள்வது போலுள்ளது எனக்கு

ஏனோ தெரியவில்லை

இன்று

இதுவே விற்பனையும் ஆகிறது

எனக்கு

என்னை

இன்னொருவர் அறிமுகம் செய்த பரிதவிப்பு எனக்கு

தோளோடு

தோள் நின்றோர் எல்லாம்

தூக்கி எறியப்படும் அவலம்

தன்னை வருத்தி

தன் இளமை தந்து

தனக்காக வாழாதார் பலரும்

புலம் பெயர் வியாபாரிகள் இன்று

உழைப்பதில்

ஒரு பகுதியை

உறவுக்காக

ஒதுக்கிய பாரிகள் எல்லோரும்

திருடர் வரிசையில்.

தமிழர் நிலத்தை மீட்டோம்

தரணிக்கு வழி காட்டியாய் வளர்த்தோம்

பிச்சைக்காரர்

வலது குறைந்தோர்

பெண்கள் பிள்ளைகள்

எல்லோரையும் பராமரித்தோம்.

வீதியில் எவராவது

கைநீட்டியதைக்கண்டீரா?

காப்பாற்றி

கஞ்சியூற்றியது யார்?

நாட்டைக்காக்க

எமது உறவை மீட்க

அவரை வாழ வைக்க

நாம் தயார்

தடுப்பவன் எவன்???

அவனை விலத்துங்கள்

தடையை தகருங்கள்

சுதந்திரமாக

எம்மவரை நாம் காண வழி செய்யுங்கள்.........

இதைத்தான் நான் எனது மொழியில் சொன்னேன் . மிக்க நன்றிகள் உங்கள் கவிதைக்கும் நேரத்துக்கும் கருத்துகளுக்கும் விசுகர் .

  • தொடங்கியவர்

எனக்கு இந்த கவிதையிலோ அல்லது வரிகளிலோ மாவீரர்களையோ,புலிகளையோ கொச்சைப்படுத்திற மாதிரி வசனம் இருப்பதாக படவில்லை...நானும் சில திரிகளில் கோமகனோடு பிரச்சனைப்பட்டு உள்ளேன் ஆனால் இந்தத் திரியில் அப்படி இருப்பதாகப்படவில்லை...ஒவ்வொருவரும் பார்க்கும் விதத்தில் தான் உள்ளது

ஒருமுறையா ரெண்டு முறையா பிரச்சனைப்பட்டம் அக்கை :lol: :lol: . ஆனால் ஒருக்காலும் நான் உங்களுக்கு இலவசபட்டங்கள் தரேலை :( :( நீங்களோ நானோ ஆளை ஆள் பாத்து பொறாமைப்படேலை அக்கை :) :) :icon_idea: .

முயற்சி செய்கின்றேன்!!!!!!!! ஆனால் கோ வுக்கு கருத்துக்களத்தில் கிடைத்த பட்டங்கள் ( பட்டங்களுக்கு என்னால் ஆதாரம் தரமுடியும் ) மீளப்பெறப்படும் என்ற உறுதிமொழியை உங்களால் தரமுடியுமா ?? 48 மணித்தியாலங்கள் முடியாத நிலையில் 4 பக்கங்களையும் , 1400 பார்வையாளர்களையும் இந்தக்கவிதை பெற்றிருப்பது இந்தக்கவிதைக்கு கிடைத்த வெற்றியாகவே நினைக்கின்றேன் (இதை அடக்கத்தோடதான் சொல்லுறன்) . உங்கள் நேரத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ரதி அக்கா .

கோமகன் அண்ணா எப்ப சின்னபிள்ளைத்தனமாக யோசிக்க ஆரம்பித்தீர்கள்? :D

பலர் கருத்து எழுதியிருப்பதால் hot topic ஆக வந்தவுடன் என்ன இருக்கிறது அப்படி என்று நினைத்தும் பார்க்க வந்திருக்கலாம் தானே? வந்த பின்னர் அறிந்திருப்பார்கள் எதிர் கருத்து தான் அதிகளவில் உள்ளது என்பதை. :D

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் உங்களுக்கு 1990ல் யோகியண்ணை சொன்னவர் தம்பி நந்து உனக்கு அரசியல் வராது போய் பலாலியபிடியடா எண்டு கேட்டியளா....கேட்டியளா..... :lol:

மட்டுவில் அரசியல் பாசறையின் 600அரசியல் மாணவர்களில ஒரு சூரியன் அப்பவே மின்னினது. :mellow:

நந்து பலாலியை பிடிக்க வந்து நிக்கதெண்டு கேள்விப்பட்டுத்தான் பலாலி ஆமிக்காரன் பயத்திலை தீபாவளியண்டு பின்பக்கத்தாலை வளலாய் றோட்டாலை போய் அச்சுவேலி சந்தியிலை நிண்டவன். :lol:

  • தொடங்கியவர்

கோமகன் ஒரு விடுதலைப் போராளியாக இருந்திருக்கவில்லை என்று கவிதை மூலம் தெரிகின்றது. அர்ப்பணிப்புடன் தமிழீழ இலட்சியத்திற்காக உயிரைத் துச்சமென மதித்துப் போராடப் புறப்பட்டவர்கள் எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கமாட்டார்கள். மக்களின் விடுதலைக்காக எத்தகைய கொடூரங்களையும், அவலங்களையும் போராட்டத்தின்போது தாங்கியவர்கள், தற்போது அடிமையாக, கைதியாக இருந்தபோதிலும் தமது வைராக்கியத்தை சற்றும் குறைக்காமல் துயரங்களைத் தாங்கிப் போராளிகள் போன்றே இருப்பார்கள். சாதாரண மனிதர்களாக அவர்கள் வாழமுற்படும்போது அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், பராமரித்துக் கொள்ளவும் முனைவார்கள். மற்றையவர்களுக்குப் பாரமாக ஒருபோதும் இருக்க விரும்பமாட்டார்கள்.

[spoiler]புலம்பெயர் தமிழ்த் தேசியவாதியான நான் இப்படித்தான் சிந்திப்பேன்.[/spoiler]

என்ன செய்யிறது கிருபன்ஜி , நான் புலம்பெயர் தேசியவாதியாய் இல்லாமல் போட்டன் . அதாலதான் என்ரை கவிதையளில கொஞ்சம் உப்பு புளி கூடவாய் கிடக்கு . உங்கடை நேரத்துக்கு மிக்க நன்றிகள் ஜி .

நந்து பலாலியை பிடிக்க வந்து நிக்கதெண்டு கேள்விப்பட்டுத்தான் பலாலி ஆமிக்காரன் பயத்திலை தீபாவளியண்டு பின்பக்கத்தாலை வளலாய் றோட்டாலை போய் அச்சுவேலி சந்தியிலை நிண்டவன். :lol:

சாத்து,

நீங்கள் நந்துவின் ஒபெரசன் ஜெயசக்தியை தான் சொல்லுறீங்கள் எண்டு நான் யாருக்கும் சொல்ல மாட்டன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்து,

நீங்கள் நந்துவின் ஒபெரசன் ஜெயசக்தியை தான் சொல்லுறீங்கள் எண்டு நான் யாருக்கும் சொல்ல மாட்டன். :lol:

யாரது ஜெயசக்தி ..... குடும்பத்தை குழப்பிப்போடாதீங்க :(

  • தொடங்கியவர்

புரியவில்லை துளசி அந்தக் கவிதையில் என்ன பிழை என்று தெளிவாகச் சொல்லுங்கள் .போராளிகள் ,விடுதலைப் புலிகள் ,தேசியம் ,இதைப் பற்றி இங்கு கதைப்பவர்களை விட எனக்கு இங்கு 100 வீதம் உரிமை உண்டு கதைப்பதற்கு இங்கு இதுவல்ல பிரச்சனை . சிறையில் உள்ள போராளிகள் பற்றியே என் கவலை அவர்களின் விடுதலை பற்றியே

என்ன எதிர் பார்க்கின்றீர்கள் அவர்கள் உள்ளேயே இருந்து தாங்கள் உண்மையான போராளிகள் தான் என்று உங்களுக்கும் உங்களைப் போன்ன்றவர்களுக்கும் நிருபிக்கவேண்டும் என்றா ..............

நந்தன்......... புலத்து தமிழ்தேசியவாதிகள் பிளஸ் வியாபாரிகள் பார்வையில போராளிகள் எண்டால் ரேர்மினேற்ரர் சீரியலுகள் . அதுகளுக்கு மறந்தும் பாலியல் உறுப்புகள் வேலை செய்யக்கூடாது . றிமோற்றால சொல்லுற வேலையளை செய்யிறதுதான் அதுகள் . ஆனால் நான் சொல்லுறன் போராளியள் ரேமினேற்றர் இல்லை எங்களைபோல சாதாராண மனுசர் எண்டு . புறொவிளம் இஸ் கியர் . நீங்கள் எங்காலைப் பக்கம் எண்டதை நீங்கள் தான் முடிவு செய்யவேணும் . சும்மா சின்னப்பிள்ளையள் மாதிரி விதானைமாரிட்டை கேள்வியள் கேட்கக்கூடாது . பேந்து விதானைமார் ரென்சானாகி யாப்புகள் வரைஞ்சு போடுவினம் அப்பு.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எவருடன் சேர்ந்து என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஆனால் பொது பங்களிப்புகளில் நீங்களும் பங்கெடுக்க வேணும். யார் அழைக்கிறார்கள் என்பதை விடுத்து எதற்காக அழைக்கிறார்கள் என்பதை பார்க்க வேணும். நான் அழைத்ததும் ஓடி வருபவர்கள் எனக்காக வருவதில்லை. தமிழீழம் கிடைக்க வேண்டும் என்று எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுக்க வேணும் என்று நினைத்து ஓடி வருவார்கள். :)

உங்களை அழைத்து பேச்சு வாங்கிய பின் நான் உங்களை அழைப்பதில்லை தானே? அதன் பின்னாவது நீங்களாக பங்கெடுத்திருக்கலாமே. அதற்கும் முடியாதென்றால் மல்லையூரான் அண்ணா அழைத்த போதாவது கையொப்பமிட்டிருக்கலாமே....

நீங்கள் என்ன தான் வெளியில் இருந்து செய்தாலும் "தமிழீழம் வேண்டுமா" என்று ஒரு வாக்கெடுப்பு நடக்குமானால் அந்நேரம் நான் அழைத்ததுக்காக நீங்கள் வாக்களிக்காமல் விட்டால் உங்கள் எந்தவொரு தமிழீழ முயற்சிக்கும் பலன் கிடைக்காது.

தமிழீழ விடயங்களில் போட்டி பொறாமையை கொண்டிருக்காதீர்கள். உங்கள் எதிரி உங்களை அழைத்தாலும் எதற்கு அழைக்கிறார் என்று பார்த்து ஆதரவு வழங்குங்கள். ஏன் அர்ஜுன் அண்ணா புலி எதிர்ப்பாளராக இருந்தாலும் அவர் தமிழீழத்துக்கு ஆதரவான பங்களிப்புக்கு அழைத்தால் நாம் பங்குபெற வேண்டும்.

நீங்கள், கோமகன் அண்ணா, கிருபன் அண்ணா, நிழலி அண்ணா ஆகியோர் எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுத்ததை நான் காணவில்லை.

மீசை இருந்தால் தான் மேடம் மீசையில் மண் ஒட்டும். :D

மற்றவர் என்ன செய்கிறார்கள் என்பதை விடுப்பு பார்ப்பதைத் தவிர வேறு வேலை உங்களுக்கு இல்லையா...அகூதாவைப் போன்று செயற்படுபவர்கள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விடுப்பு பார்ப்பதில்லை தங்களுடைய வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...மற்றவருக்கு அறிவுரை சொல்ல முதல் நீங்கள் ஒழுங்காய் நடவுங்கோ...யாழில் இருப்பவர்களுக்கு எதை செய்ய வேண்டும்/செய்யக் கூடாது மற்றவர் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை ...எல்லோரும் தாயகத்தை நேசிப்பதால் யாழில் ஒன்றினைந்து இருக்கிறார்கள்...இப்பத் தான் புதிசாய் தாயகம் சம்மந்தமாக செயற்பட தொடங்கியுள்ளீர்கள் போல இருக்குது அதான் இந்த துள்ளு துள்ளுகிறீர்கள்...இன்னொரு தடவை நீங்கள் தான் ஏதோ வெட்டி முறிக்கிறது போலவும் மற்றவர் ஏதோ சும்மா இருப்பது போலவும் எழுதினால் நிர்வாகத்திடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

இக் கவிதை திரியில் சம்மந்தமில்லாமல் எழுதியதிற்கு கோமகனிட‌ம் மன்னிப்பு கேட்கிறேன்

இதில் ஏன் நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் ?? உங்கள் கருத்தும் ஆராயப்படவேண்டியதே . ஆழ்கடல் என்றும் அமைதியாகவே இருக்கும் . இங்கு எல்லோருமே ஏதோவகையில் தமது பங்களிப்புகளை செய்பவர்கள் . தங்களை இனங்காட்டவேண்டும் என்ற எந்தவிதமான அவசியமும் இல்லாதவர்கள் . எனது கவிதைக்கும் அது சொன்ன செய்திகளுக்கும் உண்மையான நீதிபதிகள் வெளிப்புற வாசகர்களே . நீங்கள் தட்டவேண்டிய இடத்தில் தட்டி , நிமித்த வேண்டிய இடத்தில் நிமர்த்தலாம் அதுதான் சிறந்த விமர்சகருக்கு அழகுங்கூட .

முதலில் தமிழீழ உறவுகளுக்கு வணக்கம் .................நான் எழுதும் இந்த வசனங்கள் யாரையும் குவாட் பண்ணி எழுதவில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன் ஆளை ஆள் கடித்து தின்று ,உங்கள் ஒருவர் மேல் ஒருவருக்குள்ள பகைமைகளை ஒரு புறம் வையுங்கள்... கோ அண்ணா என்னும் படைப்பாளர் எல்லோராலும் [நான் உட்பட]பெரிய படைப்பாளர் என எதிர்பார்க்கப்படும் ஒரு கவியாளர் அவரின் கவிதைக்கு பின்னூட்டம் அழிப்பதில் ஏற்பட்ட சில கருத்துக்களால் வந்த பிரச்சனை என்ன ...........இது கோ அண்ணா அவர்கள் முழுமையாக சம்பந்தப்பட்ட விடயம் [அதற்காக மற்றவர்கள் அல்ல கூறவில்லை ] நான் அவருடைய எத்தனையோ படைப்புக்கள் ,கவிதைகள்,கட்டுரைகள் பார்த்து அகமகிழ்ந்து பாராட்டு தெரிவித்தவன் .படைப்புக்கள் படைப்பவனுக்குத்தான் தெரியும்...............ஆனால் இந்தக்கவிதைக்கு என் மனம் ஒத்துப்போகவில்லை .அதனாலேயே நானே முதலில் எனது எதிர்க்கருத்தை கூறினேன் ...........படைப்பாளி கோ அண்ணாவுக்கு ஒன்று கூறுகிறேன்..........[ஆணவத்துடன் அல்ல பணிவுடன்] இன்றைய சூழலில் ஒரு படைப்பாளி எப்படி எப்படி எல்லாம் படைப்புக்களை படைக்க வேணும் என்று இந்த காலம் எதிர்பார்க்கிறது........அதற்கமையவே விடுதலை சார்ந்து ,மாவீரர் சார்ந்து,போராளிகள் சார்ந்து ,எம் தாயகமும்,அதன் இன்றைய நிலவரமும் சார்ந்து அமைய வேணும் என்பதே முக்கியம்........நீங்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர் உங்கள் எழுத்துக்கள் மூலம் நான் அறிந்து கொண்ட விடயம் ........ஒரு படைப்பை படைக்கும் போது அதற்கு வரும் விமர்சனத்தால் ஒரு கலைஞ்சன் எப்படி பாதிக்கப்படுவான் என்ற மனநிலை தெரியும்...........இந்தக்கவிதைக்கு ஏன் இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்தது என்று ஆராயவேண்டிய தார்மீக பொறுப்பு உங்களிடமே உள்ளது ..........மேற்கொண்டு விதண்டாவாதம் எனக்கு பிடிக்காது நேரே கூறுபவன் .........உங்கள் மனதில் உள்ள விடயத்தை தாராளமாக பகிருங்கள் ..........நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நந்து பலாலியை பிடிக்க வந்து நிக்கதெண்டு கேள்விப்பட்டுத்தான் பலாலி ஆமிக்காரன் பயத்திலை தீபாவளியண்டு பின்பக்கத்தாலை வளலாய் றோட்டாலை போய் அச்சுவேலி சந்தியிலை நிண்டவன். :lol:

சக்கைகாறர் அச்சுவேலியில இன்ரவெல் எடுத்ததை ஆமிக்காறனுக்கு ஆரோ உள்ளால தகவல் குடுத்திட்டினம். அதுதான் பலாலி ஆமி பட்டெண்டு ஊருக்கை வந்திட்டான். :icon_idea:

யாரது ஜெயசக்தி ..... குடும்பத்தை குழப்பிப்போடாதீங்க :(

அந்தநேரம் அப்பிடியொரு ஜெயசக்தியும் அந்த லைனில நிண்டதில்லையே ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் நாங்க நிண்டது கடமை , கண்ணியம் , கட்டுப்பாட்டுக்குள்ள , சத்தியமா நான் ஜெயசக்தி லைனுக்குள்ள போகவேயில்லை :(

  • தொடங்கியவர்

முதலில் தமிழீழ உறவுகளுக்கு வணக்கம் .................நான் எழுதும் இந்த வசனங்கள் யாரையும் குவாட் பண்ணி எழுதவில்லை என்பதை தெளிவாக கூற விரும்புகிறேன் ஆளை ஆள் கடித்து தின்று ,உங்கள் ஒருவர் மேல் ஒருவருக்குள்ள பகைமைகளை ஒரு புறம் வையுங்கள்... கோ அண்ணா என்னும் படைப்பாளர் எல்லோராலும் [நான் உட்பட]பெரிய படைப்பாளர் என எதிர்பார்க்கப்படும் ஒரு கவியாளர் அவரின் கவிதைக்கு பின்னூட்டம் அழிப்பதில் ஏற்பட்ட சில கருத்துக்களால் வந்த பிரச்சனை என்ன ...........இது கோ அண்ணா அவர்கள் முழுமையாக சம்பந்தப்பட்ட விடயம் [அதற்காக மற்றவர்கள் அல்ல கூறவில்லை ] நான் அவருடைய எத்தனையோ படைப்புக்கள் ,கவிதைகள்,கட்டுரைகள் பார்த்து அகமகிழ்ந்து பாராட்டு தெரிவித்தவன் .படைப்புக்கள் படைப்பவனுக்குத்தான் தெரியும்...............ஆனால் இந்தக்கவிதைக்கு என் மனம் ஒத்துப்போகவில்லை .அதனாலேயே நானே முதலில் எனது எதிர்க்கருத்தை கூறினேன் ...........படைப்பாளி கோ அண்ணாவுக்கு ஒன்று கூறுகிறேன்..........[ஆணவத்துடன் அல்ல பணிவுடன்] இன்றைய சூழலில் ஒரு படைப்பாளி எப்படி எப்படி எல்லாம் படைப்புக்களை படைக்க வேணும் என்று இந்த காலம் எதிர்பார்க்கிறது........அதற்கமையவே விடுதலை சார்ந்து ,மாவீரர் சார்ந்து,போராளிகள் சார்ந்து ,எம் தாயகமும்,அதன் இன்றைய நிலவரமும் சார்ந்து அமைய வேணும் என்பதே முக்கியம்........நீங்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர் உங்கள் எழுத்துக்கள் மூலம் நான் அறிந்து கொண்ட விடயம் ........ஒரு படைப்பை படைக்கும் போது அதற்கு வரும் விமர்சனத்தால் ஒரு கலைஞ்சன் எப்படி பாதிக்கப்படுவான் என்ற மனநிலை தெரியும்...........இந்தக்கவிதைக்கு ஏன் இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்தது என்று ஆராயவேண்டிய தார்மீக பொறுப்பு உங்களிடமே உள்ளது ..........மேற்கொண்டு விதண்டாவாதம் எனக்கு பிடிக்காது நேரே கூறுபவன் .........உங்கள் மனதில் உள்ள விடயத்தை தாராளமாக பகிருங்கள் ..........நன்றி

வணக்கம் தமிழ்சூரியன் மற்றும் எனது கள உறவுகளுக்கு . தமிழ்சூரியன் உண்மையிலேயே மனச்சாட்சிக்கு மதிப்புத்தருபவர் எனபதால் இந்தக்கவிதை சம்பந்தமாக எனது விளக்கத்தை கேட்டள்ளார் . நானும் பதில் தருவதற்கு இதுவே தருணம் என நினைக்கின்றேன் . நான் இந்தக்கவிதை எழுதக்காரணம் மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு தொண்டர் அமைப்பினால் வெளிவந்த மரண ஓலமே http://www.yarl.com/...howtopic=107184 .அது படைப்பாளி என்ற நிலையில் என்னை மிகவும் பாதித்தது . இதுசம்பந்தமான அறிவிப்பு திண்ணையிலும் வந்தது . அன்றையதினம் தேசியம் சார்பான கூச்சல்கள் காதைப்பிளந்தன !!!!!!! அறிவிப்பு வெளியான நேரம் இந்தப் போலி விசைப்பலகை தேசியங்கள் ஓடி ஒழித்துக்கொண்டன . அது தந்த வலியும் சமூகக் கோபமுமே இந்தக்கவிதை வெளிவரக்காரணம் தமிழ்சூரியன் . மேலும் உங்கள் வாதங்களை ஏற்றுக்கொள்ளாததிற்கு மனம் வருந்துகின்றேன் . ஏனெனில் எனது செய்தி போராளி ( ஆயுதம் + சமூகம் ) என்பவன் ஆசாபாசங்களை உள்ளடக்கிய உணர்வாளன் என்கின்றேன் . நீங்களும் , உங்களைச் சார்ந்தவர்களும் இல்லை என்கின்றீர்கள் . ஆனால் உலக யதார்த்தங்களும் , சரித்திரங்களும் எங்களுக்கு வேறு ஒரு செய்தியை இடித்து உரைக்கின்றன . அதாவது சே இல் இருந்து எமது தலைவர் பிராபாகரன் வரை ஆசாபாசங்களுடன் வாழ்ந்தே உலகசரித்திரத்தை மாற்றியமைத்தார்கள் . இதை நாங்கள் மறுத்தால் மீண்டும் ஒரு அவலத்தை சந்திப்பது தவிர்க்கமுடியாது . ஒரு போராளி உயிருக்கு போராடி மரண ஓலம் எழுப்பும் பொழுது , நாங்கள் இங்கு வெற்றுவேட்டு தேசியம் கதைக்கின்றோம் ...... அது தந்த கோபத்திலேயே " எங்களைத் தெரிகின்றதா " என்று புலத்து தமிழ் தேசியவாதிகள் முகத்தில் எட்டி உதைத்தேன் . இந்தத் திரி நீண்டதிற்கு இன்னுமொரு காரணம் கோமகன் என்ற படைப்பாளிமீது உள்ள பொறாமை, எரிச்சல் , குழும அரசியல்கள் பிளஸ் கோமகனுக்கு அரசியல் சாயம் பூசுவதற்கான முன்னெடுப்புகள் போன்றன . இந்த எதிர்விளைவுகள் ஒருசிலரால் இந்தப் பதிவிலேயே கொட்டப்பட்டுள்ளதை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகின்றேன் . ஒரு படைப்பாளி இவைகளுக்குப் பயந்தால் அவனால் காத்திரமான படைப்புளை செய்யமுடியாது . நான் அரசியலில் இல்லாதவன் ஆனால் சமூகரீதியாக அரசியல் கேலிப்பொருளாகும் பொழுது எனது குரல் ஓங்கி ஒலிக்கும் . இறுதியாக இந்தக் கவிதையில் எனது செய்தி தெளிவானது . வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்த பொதுமக்கள் , போராளிக்கைதிகளுக்கு தேள்வையான மனிதாபிமான உதவிகளே புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படவேண்டியது . மாறாக விசைப்பலகை தேசியம் அல்ல . நீங்கள் எனது நண்பர் ,வாசகர் இரண்டையும் இதில் போட்டுக் குளப்பாதீர்கள் தமிழ்சூரியன் . நன்றி வணக்கம் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், கோமகன் அண்ணா, கிருபன் அண்ணா, நிழலி அண்ணா ஆகியோர் எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுத்ததை நான் காணவில்லை.

மற்றையவர்களைப் பற்றி நான் சொல்லமுடியாது. என்றாலும் என்னைப் பற்றிச் சொல்லலாம்தானே..

தமிழீழ விடயங்களில் நிறையப் பேர் பங்கெடுப்பதால் எனது பங்களிப்பில்லாவிட்டால் ஒன்றும் குறைந்து விடாது என்று கருதி நான் பங்கெடுப்பதில்லை என்பது உண்மைதான்.

மற்றவர் என்ன செய்கிறார்கள் என்பதை விடுப்பு பார்ப்பதைத் தவிர வேறு வேலை உங்களுக்கு இல்லையா...அகூதாவைப் போன்று செயற்படுபவர்கள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விடுப்பு பார்ப்பதில்லை தங்களுடைய வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்...மற்றவருக்கு அறிவுரை சொல்ல முதல் நீங்கள் ஒழுங்காய் நடவுங்கோ...யாழில் இருப்பவர்களுக்கு எதை செய்ய வேண்டும்/செய்யக் கூடாது மற்றவர் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை ...எல்லோரும் தாயகத்தை நேசிப்பதால் யாழில் ஒன்றினைந்து இருக்கிறார்கள்...இப்பத் தான் புதிசாய் தாயகம் சம்மந்தமாக செயற்பட தொடங்கியுள்ளீர்கள் போல இருக்குது அதான் இந்த துள்ளு துள்ளுகிறீர்கள்...இன்னொரு தடவை நீங்கள் தான் ஏதோ வெட்டி முறிக்கிறது போலவும் மற்றவர் ஏதோ சும்மா இருப்பது போலவும் எழுதினால் நிர்வாகத்திடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

இக் கவிதை திரியில் சம்மந்தமில்லாமல் எழுதியதிற்கு கோமகனிட‌ம் மன்னிப்பு கேட்கிறேன்

அட இவ்வளவு கோவம் வருதோ மேடம் ரதி அக்காவுக்கு? :D

உங்களை விட அதிகமாக நான் விடுப்பு பார்ப்பதில்லை. :D அதோட நான் விடுப்பு பார்க்க என்றும் வருவதில்லை. ஆனால் நான் காணும் விடயங்கள் மனதில் பதிவதை நான் நினைத்தாலும் தடுக்க முடியாது. அகூதா அண்ணா போன்றவர்களும் விடுப்பு பார்ப்பார்கள். ஆனால் திரியில் எழுதுவதில்லை. :D

பாராமுகமாக இருப்பவர்களுக்கு எந்த கவிதையும் மண்டைக்குள் ஏறாது என்று மட்டும் தான் அக்கோய் நான் சொன்னன். அதுக்கு நீங்கள் வெளியிருந்து என்ன செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியாதென்று நீங்கள் தான் தேவையில்லாமல் நீங்கள் வெளியிலிருந்து ஏதோ வெட்டி முறிப்பது போல் பதிலளித்தீர்கள். :o அதற்கு நான் பதிலளித்தன்.

நான் வெட்டி முறிப்பதாகவும் நீங்கள் சும்மா இருப்பதாகவும் நான் ஒரு இடமும் கருத்து எழுதவில்லை. :D நான் அப்படி நினைப்பதாக நீங்கள் தான் நினைக்கிறீர்கள். அப்படியிருக்க நீங்கள் நிர்வாகத்திடம் சொல்லி நிர்வாகம் என்மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

அதோட நான் இப்ப தான் புதுசா தாயகம் சம்பந்தமா செயற்படுறன் என்று கூட நீங்கள் தான் சொல்லுறீங்கள். இன்னொரு தடவை நீங்கள் எனக்கு இப்படி எழுதினால் நானும் நிர்வாகத்திடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்க சொல்லுவன் அக்கோய்.... :D (but கள விதியில் எதுவும் இல்லாமல் அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. இல்லை, முடியும் என்றால் நான் ஏற்கனவே கூறிய விடயத்தை மீண்டும் தூசு தட்டுவன்...... :rolleyes:)

திரிக்கு சம்பந்தமில்லாமல் கருத்து எழுதுவதற்கு என்னையும் மன்னிச்சு கொள்ளுங்கோ கோம்ஸ் அண்ணா. :)

மற்றையவர்களைப் பற்றி நான் சொல்லமுடியாது. என்றாலும் என்னைப் பற்றிச் சொல்லலாம்தானே..

தமிழீழ விடயங்களில் நிறையப் பேர் பங்கெடுப்பதால் எனது பங்களிப்பில்லாவிட்டால் ஒன்றும் குறைந்து விடாது என்று கருதி நான் பங்கெடுப்பதில்லை என்பது உண்மைதான்.

இங்கு கூட நக்கல் நையாண்டி தான் கிருமி அண்ணாவுக்கு...... :D

ஆனால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கும் நிழலி அண்ணாவுக்கும் உள்ளது என்பதால் உங்கள் இருவர் பெயரையும் குறிப்பிட்டேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

சூதிலும் சூழ்ச்சியிலும்

வெள்ளைக்கொடி பிடித்தவர்கள் நாங்கள்

தெரிகின்றதா எங்களை ??

மகசீன் சிறை என்றும்

காலி சிறை என்றும் வருடங்கள்

காறித் துப்பியதே எங்களை!!

தெரிகின்றதா எங்களை ??

சிறையில் இருக்கும் நாங்கள்

வாழக்கூடாதாம் என்று ஒருகூட்டம் ,

வாழவேண்டும் என்று

இன்னுமொருகூட்டம் !!

தெரிகின்கிறதா எங்களை ??

சிங்களம் அடித்த அடி வலிக்கவில்லை

உங்கள் அடியின் வலி.........

குப்பிக்கடியின் வலியைவிட கொடுமை ஐயா!!

கொட்டும் மழையும்

பாம்புக் கடியும் பயிற்சிக் கடுமையும்

ஒருநாள் இனித்தது எங்களுக்கு,

எங்களைப் போல் பலர் களத்தில்

பகைவருடன் பொருதி நின்றபொழுது

அடித்த விசில்களால் குளம்பித்தான் போனோம்.......

எல்லா மக்களும் எங்களுடன் தான் என்று,

இன்றுதான் தெரிகிறது அடித்த விசில்

பந்தயக் குதிரைகளுக்கு என்று .

பந்தயக் குதிரைகள் நொண்டியானபோது

கோவேறு கழுதைகளாகப் போய்விட்டது........

தெரிகின்றதா எங்களை ??

நாங்களும் உங்களைப்போல்

ரத்தமும் சதையும்

ஆசாபாசங்களும் உடைய மனிதப்பிறவிகள் .

சிங்களத்தின் கையில் சிக்கினாலும்,

உங்களைச் சிக்கவைக்காத

மனிதர்கள் ஐயா!!

நாங்கள் வாழவேண்டும்.....

உங்களைப்போல

நாங்களும் வாழவேண்டும் .

தெரிகின்றதா எங்களை ???

***எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன

ஒற்றுமையாக ஒருகுடையின் கீழிருந்த எங்களைத் தான்சிங்களமும் எட்டப்பரும் எட்டாக்கி உங்களுக்கு உதவமுடியாமல்எட்டத்தில் வைத்திருக்கின்றார்கள்..........இங்கு இப்போது எங்களுக்கு பதவியும் பாழாப்போன அரசியல் அந்தஸ்த்தும் தான் முக்கியம்.........மற்றைய பிரச்சனைகளில் இடைக்கிடை தலையிட்டாலும்தலையாரி தடுத்துவிடுவார்........நாம் என் செய்வோம்.........எங்கள் இயலாமையையிட்டு வருந்துகின்றோம்......

நீங்கள், கோமகன் அண்ணா, கிருபன் அண்ணா, நிழலி அண்ணா ஆகியோர் எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுத்ததை நான் காணவில்லை.

எப்ப உங்களை உதுகளைப் பாக்கிற விதானையாப் போட்டவங்கள்? யாழிலை நாலு கருத்தை எழுதிப்போட்டு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு கிடக்கிற உங்களுக்கு தெரியுமா நிழலியைப் பற்றி? சரிநிகர் எண்டு ஒரு பத்திரிகை வந்திருந்தது அறிஞ்சிருக்கிறியளா?

நீங்கள், கோமகன் அண்ணா, கிருபன் அண்ணா, நிழலி அண்ணா ஆகியோர் எந்த ஒரு தமிழீழ விடயத்திலும் பங்கெடுத்ததை நான் காணவில்லை.

ஒரு முட்டை இட்ட கோழி ஊர் முழுக்க தான் முட்டையிட்டதைப் பற்றி கூவித் திரியும். ஆயிரம் முட்டை இட்ட ஆமை அமைதியாக இருக்கும்.

எப்ப உங்களை உதுகளைப் பாக்கிற விதானையாப் போட்டவங்கள்? யாழிலை நாலு கருத்தை எழுதிப்போட்டு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு கிடக்கிற உங்களுக்கு தெரியுமா நிழலியைப் பற்றி? சரிநிகர் எண்டு ஒரு பத்திரிகை வந்திருந்தது அறிஞ்சிருக்கிறியளா?

வணக்கம் கோமகன் அண்ணா, நீங்கள் கோமகன் என்ற பெயரிலேயே கருத்து எழுதலாம். இந்த பெயரில் எதற்கு?

ஒரு முட்டை இட்ட கோழி ஊர் முழுக்க தான் முட்டையிட்டதைப் பற்றி கூவித் திரியும். ஆயிரம் முட்டை இட்ட ஆமை அமைதியாக இருக்கும்.

நான் கோழியும் அல்ல நீங்கள் ஆமையும் அல்ல. இருவரும் மனிதர்கள் தான். அதோட பெருமையடிச்சு திரியுமளவுக்கு நான் எதுவும் செய்யேல்லை....

வணக்கம் கோமகன் அண்ணா, நீங்கள் கோமகன் என்ற பெயரிலேயே கருத்து எழுதலாம். இந்த பெயரில் எதற்கு?

என்னைக் கோமகனின் பெயர் சொல்லி திட்டியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நான் கோழியும் அல்ல நீங்கள் ஆமையும் அல்ல. இருவரும் மனிதர்கள் தான். அதோட பெருமையடிச்சு திரியுமளவுக்கு நான் எதுவும் செய்யேல்லை....

அப்ப பிறகேன் அடுத்தாக்களிலை பிழைபிடிக்கிறியள்?? உங்க வேலையைச் செய்துகொண்டு கம்மெண்டு போகவேண்டியதுதான?

Edited by நீலமேகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.