Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்கிழக்கு சீமையிலே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் மச்ச கன்னிகளோடு நிற்கும் படம் ஒண்டு நானும் எடுத்தனான் போட்டு விடவோ?

நீங்க போடுங்க ஆனா நாங்க தொடர்ந்து இங்க இருக்க வேணாம் :) கற்பனையில யோசிச்சு பார்த்தன் :lol::D:icon_idea:

  • Replies 196
  • Views 18.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சொறி :icon_mrgreen:

வெறி........... :o :o :o எழுதினால்தானே விழங்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

சதாமுடையது மட்டுமல்ல லிபியா கடாபியின் மகனின் ஆடம்பர கப்பலொன்றும் இங்குதான் நிறுத்தி வைக்கபட்டிருந்தது அதுவும் பின்னர் நீஸ் நகரசபையால் கையகப் படுத்தி ஏலத்தில் விற்கப்பட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களும் எழுத்து நடையும் அருமை. :)

மிகவும் மனதைக்கவர்கிறது கோமகன் அண்ணா. உயிரோடு இருந்தால் அடுத்த வருடம் நீஸ் நகரை உங்களுடன் சேர்ந்து குடும்ப சமேதராய்ப்பார்ப்போம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோமகன், வாழ்த்துக்கள்...

நேற்றுத்தான் வாசித்தனான்...அதற்கு பிறகு கொஞ்சம் கூகுள் தேடலும் செய்தேன். ஓரிடத்தில் புங்கைஊரோன் மணியனை பற்றி சொன்ன கருத்தை வாசித்தேன்/ ரசித்தேன், ஆனால் உங்கள் பதில் மிகவும் பெறுப்பனதாக, பெருத்தமானதாக இருந்தது. மனதும் எழுத்தும் பக்குவப்பட்டநிலையில் வரும் என்று நினைக்கிறன். பிற்காலங்களில் லேனா தமிழ் வாணனும் இப்படி பயணக்கதைகள் எழுதுகிறவர். அப்போது அவை எல்லாம் எட்டகனிகள், ஆனால் அது இன்று வாழ்வின் "முன்னுர்மை" குறைந்த பகுதிக்கு சென்றதால், நீங்கள்,உங்களை போன்றவர்கள் எழுதும் பயணக்கதைகளை வாசிப்பதோடு எங்கள் பெரும்பாலான பயண தேடல்கள் நிறைவு பெறுகின்றன.

அவர்களை சிறந்த முறையில் வரவேற்ற சாத்திரிக்கும், இணைந்து சிறப்பிக்கும் சயந்தனுக்கும் நன்றிகள்.

வெறி........... எழுதினால்தானே விழங்கும் .

:lol: இல்லை விக்கிப்பீடியாவைக் கொப்பிபண்ணின மாதிரி இருக்கு, அது தான்........ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீ்ஸ் துறை முகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் சதாமின் ஆடம்பர கப்பல் இது 23.5 மில்லியன் ஈரோக்களிற்கு நீஸ் நகரசபை 2008 ல் ஏலத்தில் விற்றது. இரண்டு பெரிய மற்றும் ஒரு சிறிய நீச்சல் குளங்கள். பன்னிரண்டு அறைகள் .ஒரு ஆவிக்குளியல் அறை. தொழுகை நடத்தும் மண்டபம். அதே நேரம் நவீன கண்ணகாணிப்பு கருவிகள் ராடர்களும் அடங்கியது

nm-photo-220011.jpg

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இத்தொடர் நன்றாகப்போகிறது [/size][size=1]

[size=4]பல விடயங்களை அறியக்கூடியதாய் உள்ளது [/size][/size][size=1]

[size=4]கோமகன்,சாத்திரி ,சயந்தனுக்கு நன்றிகள்.[/size][/size][size=1]

[size=4]தொடருங்கள் [/size][/size]

  • தொடங்கியவர்

:lol: இல்லை விக்கிப்பீடியாவைக் கொப்பிபண்ணின மாதிரி இருக்கு, அது தான்........ :lol:

மகளே அலை......... :lol::D !! நான் முதலே விளப்பமாய்த்தான் சொல்லியிருக்கிறன் , இருவேறுபட்ட பாணியில எழுதிறன் எண்டு . அதோடை பாருங்கோ நீங்கள் வரலாற்று ஆதாரங்கள் எண்டு எங்கை போனாலும் இதேமாதிரித்தான் இருக்கும் :) . வேணுமெண்டால் சொல்லுங்கோ நீஸ் வரலாற்ரை இயற்றி இயற்றி எழுதிறன் :lol: . வசதி எப்பிடி :icon_idea: ??

  • தொடங்கியவர்

கோமகன், வாழ்த்துக்கள்...

நேற்றுத்தான் வாசித்தனான்...அதற்கு பிறகு கொஞ்சம் கூகுள் தேடலும் செய்தேன். ஓரிடத்தில் புங்கைஊரோன் மணியனை பற்றி சொன்ன கருத்தை வாசித்தேன்/ ரசித்தேன், ஆனால் உங்கள் பதில் மிகவும் பெறுப்பனதாக, பெருத்தமானதாக இருந்தது. மனதும் எழுத்தும் பக்குவப்பட்டநிலையில் வரும் என்று நினைக்கிறன். பிற்காலங்களில் லேனா தமிழ் வாணனும் இப்படி பயணக்கதைகள் எழுதுகிறவர். அப்போது அவை எல்லாம் எட்டகனிகள், ஆனால் அது இன்று வாழ்வின் "முன்னுர்மை" குறைந்த பகுதிக்கு சென்றதால், நீங்கள்,உங்களை போன்றவர்கள் எழுதும் பயணக்கதைகளை வாசிப்பதோடு எங்கள் பெரும்பாலான பயண தேடல்கள் நிறைவு பெறுகின்றன.

அவர்களை சிறந்த முறையில் வரவேற்ற சாத்திரிக்கும், இணைந்து சிறப்பிக்கும் சயந்தனுக்கும் நன்றிகள்.

நான் என்றுமே மாணவன் எரிமலை . அப்பொழுதுதான் தேடலும் அறிதலும் அதிகரிக்கும் . இடங்கள் மாறினால் எதையுமே அறியவும் முடியாது , தேடவும் முடியாது . உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

கருத்துகளையும் தங்களது பொன்னான நேரங்களையும் எனக்காக செலவு செய்த தமிழ் சூரியன் , துளசி , சாத்திரி அலைமகள் , நந்தன் 26 , சயந்தன் , நுணாவிலான் , நவீனன் , ஜீவா , லியோ ஆகியோருக்கு எனது மனங்கனிந்த நன்றிகள் .

  • தொடங்கியவர்

எனக்கு நடந்து நடந்து கால்நோகத்தொடங்கீட்டிது . ஒரு கபே குடிச்சால் நல்லாயிருக்கும் எண்டு நினைச்சன் சாத்தரிட்டை சொன்னன்.

நாங்கள் கபே குடிச்ச பார் .

brasserie.jpg?1296332275

« சாத்தர் ஒரு பிறேக் அடிப்பம் எனக்கு கபே குடிக்கவேணும் எண்டு «

நாங்கள் ஒரு பாரின்ரை முன்பக்கத்தில போய் இருந்தம் . சாத்தர் தனக்கு தெமி வேணுமெண்டார் . மனுசி தனக்கு ஒறேஞ்ஜினா வேணுமெண்டா . நாங்கள் ஓடர் பண்ணிப்போட்டு இருக்க மனுசி முன்னாலை இருந்த வாடகை சைக்கிளுகளை பாத்திட்டு இரவிலை சைக்கிளில போனால் நல்லாயிருக்கும் எண்டு சொல்லீச்சுது . நாங்கள் கபேயை குடிச்சுப்போட்டு சைக்கிள் எடுக்கப்போனம் . நான் புழுகத்தில சைக்கிளை எல்லாம் தொட்டு தொட்டு பாத்தன். இதுக்கு பேர் புளூ விசிக்களற் எண்டு சாத்தர் சொல்லி சைக்கிள் லொக் எடுக்கிற மெசினை , ஊரில மினிகாம்புகளை ஒர றெக்கி எடுக்கிற மாதிரி சுத்தி சுழண்டு உத்து உத்து பாத்தார் .

சாத்தர் ஃபிலிம் காட்டின சைக்கிள் ஸ்ராண்ட்.

nicevisit2012171.jpg

« என்ன சாத்தர் ? » எண்டு கேட்டன் .

சாத்தர் « பொறுங்கோ « எண்டு சொல்லிப் போட்டு மெசினில கிடந்த நம்பருகளை தன்ரை ரெலிபோனில அடிச்சார் . பேந்து லொக் எடுக்க நம்பருகளை மெசினிலை அடிச்சார். ஆனால் லொக் திறக்கேல இப்பிடி ஒரு கால் மணித்தியாலம் சாத்தர் ஃபிலிம் காட்ட எனக்கு விசர் பத்தி,

கட்டிடத்தில் நெரிஞ்ச கன்னிகை .

nicevisit2012176.jpg

« வாங்கோ சாத்தர் நாங்கள் நடப்பம் எண்டு « சொல்லி நடக்க வெளிக்கிட்டன்.

" சிலநேரம் உங்களை ஏத்த சைக்கிளுக்கு விருப்பமில்லையோ தெரியாது " எண்டு சாத்தர் சொன்னார் .அதுக்குளையும் சாத்தற்றை லொள்ளு கதையள் தாங்கேலாமல் கிடந்திது . நாங்கள் பழைய நீஸ் ரவுணைப் பாக்கப் போனம்.

தொடரும்.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நல்லா இல்லைச் சொல்லிப்புட்டன். இப்படி 2வரியிலை நிறுத்துறிங்களே? :o

கொஞ்சம் நீட்டி முழக்குங்கோ.. :rolleyes::icon_idea:

கூட எழுதுங்கள்!!

உந்தக் கன்நி எப்பிடி நசிந்தா?

  • கருத்துக்கள உறவுகள்

கூட எழுதுங்கள்!!

உந்தக் கன்நி எப்பிடி நசிந்தா?

கோவுக்கே வெளிச்சம் :rolleyes:

  • தொடங்கியவர்

ஜீவா , அலை , நந்தன் , உங்கடை வருகைக்கு நன்றி . இனி கனக்க எழுதிறன் . ரெண்டு நாளாய் ஏரியாவில இல்லை அதாலதான் ஒரெப்பன் :):lol::D .

இரண்டு பதிவுகளை மட்டும் தான் வசித்தென், நன்றாக இருக்கிறது. மிகுதி வாசிக்க வேண்டும்.

வாழ்த்துகள் கோ அண்ணா, எனக்கு உங்கள் கவிதையை விட கதை அல்லது பயணக்கட்டுரை ரொம்ப பிடிக்கும். :) தொடர்ந்து எழுதுங்கள். நானும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.... :) மற்றவர்கள் கேட்பதற்காக அவசரப்பட்டு எழுதாமல் நிதானமாக சுவாரஸ்யமாக எழுதுங்கள்.

பச்சை முடிந்து விட்டது. பின்னர் வந்து போடுறன்.... :)

நெருடிய நெருஞ்சி நல்ல கதை என்று பலர் வேறு திரிகளில் உங்களை பாராட்டியிருப்பதையும் பார்த்தேன். நான் இன்னும் வாசிக்கவில்லை.. பின்னர் வாசிக்கிறேன். :) இந்த திரியில் இணைப்பை தந்திருந்தமைக்கு நன்றி. :)

[size=5]கோம்ஸ் இனி கவித எழுத வேண்டாம்னு துளசி சொல்லியாயிட்டுது....இனி அந்தப் பக்கமே தலை வச்சி ..மூச்...[/size] :D :D

நான் இன்னும் இதற்குள் வரவில்லை. ... இதற்குள் வந்து நீங்கள் "திசை திருப்பி " விட்ட படிக்கு "நெருஞ்சி முள்" ளுக்குள் சிக்குப்பட்டு இப்போ தான் மீண்டு வருகின்றேன்.

ஒரு தாழ்மையான அபிப்பிராயம் : இன்னும் சில பல சித்து வேலைகள் .. உங்கள் அக வெளி சிந்தனைகளையும் அதனுடன் சேர்த்து பொதிந்து கொண்டு வரவேண்டும்... அதிக நேரம் சிகரட் பிடிப்பதில் ..யோசிக்க நேரம் ஒதுக்குகின்றீர்கள் என்று புரிகின்றது.. யோசித்த பின் என்ன கண்டுபிடித்தீர்கள் என்பது வரவில்லை. சரியோ பிழையோ உங்கள் பார்வையை சிந்தனையை எழுதும் போது ஜனரஞ்சகம் வந்து விடும்.

நான் வாசித்துக் கொண்டிருந்த போது இடையிடை நூலறுந்த பட்டமாக தொங்கிக் கொண்டிருந்தேன்.

அந்த இடங்களில் சொல்லக் கூடாத இரகசியங்கள் புதைந்திருந்ததோ நானறியேன்.

ஆனாலும் கதைசொல்லியின் தேர்ந்த திறன் உங்களுக்கும் வாய்த்திருக்கின்றது. இன்னும் கொஞ்சம் திட்டமிடல் இன்னும் மெருகூட்டும் என நினைக்கின்றேன்.

சயந்தன் குறிப்பிட்டதைப் போல சந்தைப்படுத்தலுக்கு இதுவும் யாழில் வாசித்த அதனால் ஈர்க்கப்பட்ட யாழ் வாசிகளின் வாய் வழி சந்தைப்படுத்தலாக உதவும் என நினைக்கின்றேன்.

மற்றது பயணக் கட்டுரையில் படங்களின் பங்கு அளப்பரியது. பலமுக்கிய இடங்களில் அவற்றின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. அதிலும் கவனம் செலுத்தவும். எங்களுக்கு தெரிந்த யாழ்ப்பாணமே ஆயினும் அதன் தற்போதைய நிலையைப் பார்க்க விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது...

இனி இதை வாசித்து விட்டு மிச்சத்தை எழுதுகின்றேன் ... அதுவும் சாத் கிளாசைத் தூக்கி எறிந்த படத்தைப் போட்டால் மட்டுமே இதை வாசிப்பதாக இருக்கின்றேன்... :D :D

Edited by எல்லாள மகாராஜா

அவருடைய கவிதையை விட கதை, பயணக்கட்டுரை அதிகளவில் பிடித்திருக்கு என்று கூறினேன். கவிதையையே பிடிக்கவில்லை என்றோ அவரை கவிதை எழுத வேண்டாம் என்றோ கூறவில்லை. :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தற்ரை சிறப்பு பாதுகாப்பு படைத்தளபதிக்கு ஒரு ஆள் ஓ........... பிச்சி........... பிச்சி........... பிச்சி............. ஓடியா............. ஓடியா............. பருத்துறைவடையும் முறுக்கும் சாப்பிடுடா எண்டு போக்கு காட்ட , படைத்தளபதி ரென்சனாகி மூஞ்சையைபொத்தி ஒரு அறை விட சேதாரத்தோட பிச்சி........ பிச்சி........... பிச்சி............. பே முழி முழிச்சிது :lol: :lol: :D:D .

நல்ல, சூப்பராய்.... இருக்குது. தொடருங்கோ......

  • தொடங்கியவர்

[size=5]கோம்ஸ் இனி கவித எழுத வேண்டாம்னு துளசி சொல்லியாயிட்டுது....இனி அந்தப் பக்கமே தலை வச்சி ..மூச்...[/size] :D :D

நான் இன்னும் இதற்குள் வரவில்லை. ... இதற்குள் வந்து நீங்கள் "திசை திருப்பி " விட்ட படிக்கு "நெருஞ்சி முள்" ளுக்குள் சிக்குப்பட்டு இப்போ தான் மீண்டு வருகின்றேன்.

ஒரு தாழ்மையான அபிப்பிராயம் : இன்னும் சில பல சித்து வேலைகள் .. உங்கள் அக வெளி சிந்தனைகளையும் அதனுடன் சேர்த்து பொதிந்து கொண்டு வரவேண்டும்... அதிக நேரம் சிகரட் பிடிப்பதில் ..யோசிக்க நேரம் ஒதுக்குகின்றீர்கள் என்று புரிகின்றது.. யோசித்த பின் என்ன கண்டுபிடித்தீர்கள் என்பது வரவில்லை. சரியோ பிழையோ உங்கள் பார்வையை சிந்தனையை எழுதும் போது ஜனரஞ்சகம் வந்து விடும்.

நான் வாசித்துக் கொண்டிருந்த போது இடையிடை நூலறுந்த பட்டமாக தொங்கிக் கொண்டிருந்தேன்.

அந்த இடங்களில் சொல்லக் கூடாத இரகசியங்கள் புதைந்திருந்ததோ நானறியேன்.

ஆனாலும் கதைசொல்லியின் தேர்ந்த திறன் உங்களுக்கும் வாய்த்திருக்கின்றது. இன்னும் கொஞ்சம் திட்டமிடல் இன்னும் மெருகூட்டும் என நினைக்கின்றேன்.

சயந்தன் குறிப்பிட்டதைப் போல சந்தைப்படுத்தலுக்கு இதுவும் யாழில் வாசித்த அதனால் ஈர்க்கப்பட்ட யாழ் வாசிகளின் வாய் வழி சந்தைப்படுத்தலாக உதவும் என நினைக்கின்றேன்.

மற்றது பயணக் கட்டுரையில் படங்களின் பங்கு அளப்பரியது. பலமுக்கிய இடங்களில் அவற்றின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. அதிலும் கவனம் செலுத்தவும். எங்களுக்கு தெரிந்த யாழ்ப்பாணமே ஆயினும் அதன் தற்போதைய நிலையைப் பார்க்க விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது...

இனி இதை வாசித்து விட்டு மிச்சத்தை எழுதுகின்றேன் ... அதுவும் சாத் கிளாசைத் தூக்கி எறிந்த படத்தைப் போட்டால் மட்டுமே இதை வாசிப்பதாக இருக்கின்றேன்... :D :D

எல்லாள மகாறாஜவிற்கு அரசவை உறுப்பினரின் அன்பான வந்தனங்கள் . அதிகாலை தாங்கள் அனுப்பிய நெடுஞ்செய்தி தாங்கள் ஒற்றன் மூலம் பெற்றுக்கொண்டேன் . தங்களின் நெடுஞ்செய்தியைத் தாங்கிய நறுக்கோலை என்னுடன் நன்றாகப் பழகிய ஒரு எழுதுகோலாக தெரிந்தது . மன்னர்கள் அடிக்கடி சுயம்வரங்களுக்காகவும் , அஸ்வமேக யாகப் புரவிகளைக் கட்டிபோட்டு படைஎடுப்பதும் வளமையானதொன்றுதானே . எதுஎப்படியோ நட்பு நாடி வந்த மகாறாஜாவை புறந்தள்ளுவது அரசமகன் வம்சத்திலே கிடையாது . தங்களது நெடுஞ்செய்தியின் சாரம்சங்கள் ஆயிரங் குடுவை சோம்பானம் அருந்திய உற்சாகத்தை அரசமகனுக்கு கொடுத்ததில் வியப்பேதும் இல்லை . தாங்களை எனது அரசசபைக்கு அரசவிருந்தினராக வருமாறு எனது தலமை மந்திரி மூலம் உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுக்கின்றேன் . மேலும் நெருடிய நெருஞ்சி பற்றிய அரசமகனின் பார்வை இதுதான் மகாறாஜா !

நான் இப்பொழுது இந்த நெருடிய நெருஞ்சியைப் பார்க்கும்பொழுது அனுபவம் தந்த முதிர்ச்சியால் பல பிழைகளை திருத்த கைகள் துறுதுறுத்தாலும் , ஒரு அம்மாவுக்கு தனது சிறுவயதுப் பிள்ளையைப் பார்ப்பதும் ஒருவகையான சந்தோசம் இருக்கின்றதல்லவா ??

தங்கள் பட்டத்து ராணிக்கும் , இளவரசிக்கும் எமது வந்தனங்களைத் தெரிவித்து விடுங்கள் .

எல்லாள மகாறாஜவிற்கு அரசவை உறுப்பினரின் அன்பான வந்தனங்கள் . அதிகாலை தாங்கள் அனுப்பிய நெடுஞ்செய்தி தாங்கள் ஒற்றன் மூலம் பெற்றுக்கொண்டேன் . தங்களின் நெடுஞ்செய்தியைத் தாங்கிய நறுக்கோலை என்னுடன் நன்றாகப் பழகிய ஒரு எழுதுகோலாக தெரிந்தது . மன்னர்கள் அடிக்கடி சுயம்வரங்களுக்காகவும் , அஸ்வமேக யாகப் புரவிகளைக் கட்டிபோட்டு படைஎடுப்பதும் வளமையானதொன்றுதானே . எதுஎப்படியோஅரசவை உறுப்பினரின் அன்பான வந்தனங்கள். தங்களது நெடுஞ்செய்தியின் சாரம்சங்கள் ஆயிரங் குடுவை சோம்பானம் அருந்திய உற்சாகத்தை அரசமகனுக்கு கொடுத்ததில் வியப்பேதும் இல்லை . தாங்களை எனது அரசசபைக்கு அரசவிருந்தினராக வருமாறு எனது தலமை மந்திரி மூலம் உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுக்கின்றேன் . மேலும் நெருடிய நெருஞ்சி பற்றிய அரசமகனின் பார்வை இதுதான் மகாறாஜா !

நான் இப்பொழுது இந்த நெருடிய நெருஞ்சியைப் பார்க்கும்பொழுது அனுபவம் தந்த முதிர்ச்சியால் பல பிழைகளை திருத்த கைகள் துறுதுறுத்தாலும் , ஒரு அம்மாவுக்கு தனது சிறுவயதுப் பிள்ளையைப் பார்ப்பதும் ஒருவகையான சந்தோசம் இருக்கின்றதல்லவா ??

தங்கள் பட்டத்து ராணிக்கும் , இளவரசிக்கும் எமது வந்தனங்களைத் தெரிவித்து விடுங்கள் .

நான் இப்பொழுது இந்த நெருடிய நெருஞ்சியைப் பார்க்கும்பொழுது அனுபவம் தந்த முதிர்ச்சியால் பல பிழைகளை திருத்த கைகள் துறுதுறுத்தாலும் , ஒரு அம்மாவுக்கு தனது சிறுவயதுப் பிள்ளையைப் பார்ப்பதும் ஒருவகையான சந்தோசம் இருக்கின்றதல்லவா ??

[size=5]நீங்கள் சொல்வது வாஸ்தவமேயானாலும் பிள்ளை வளர வளர அழகழகாக விதம் விதமாக ஆடைகள் அணிவித்துப் பார்ப்பது அம்மாவின் கடமை தானே? [/size]

[size=5]அப்படிச் செய்தால் தானே பிள்ளை வளர்ந்து விட்டதை உணரமுடியும்... :D[/size][size=5] :D[/size][size=5] [/size]

"அரசவை உறுப்பினரின் அன்பான வந்தனங்கள் " இல் தொடங்கி " "நட்பு நாடி வந்த மகாறாஜாவை புறந்தள்ளுவது அரசமகன் வம்சத்திலே "வரை வளர்ந்த உங்கள் குறுகிய கால வளர்ச்சி என்னைப் புல்லரிக்க வைக்கின்றது :D :D

[size=5]உங்கள் முப்பாட்டன் கோப்பாய் கோமகன் கு. வன்னியசிங்கத்தையும் சுகம் கேட்டதாகச் சொல்லி விடுங்கள்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நான் பதில் ஏதும் எழுதாவிட்டாலும் இந்த திரியைப்பாத்து வீணி வடிப்பவர்களில் நானும் ஒருவன். :lol:

என்னவிருந்தாலும் மகாறாஜா அல்லவா ? சொல்லால் சிலம்பம் கட்டுகின்றீர்கள் :lol: :lol: :D . தங்கள் ஆலோசனைள் கவனத்தில் எடுக்கப்படும் :) :) .

நான் பதில் ஏதும் எழுதாவிட்டாலும் இந்த திரியைப்பாத்து வீணி வடிப்பவர்களில் நானும் ஒருவன். :lol:

நீங்கள் ஏதாவது எழுதினால் தானே நான் என்னைத் திருத்த முடியும் சஜீவன் .

வாழ்த்துக்கள் கோமகன். உங்களின் பயணக் கட்டுரையை இன்றுதான் வாசித்தேன். நானும் சேர்ந்து பயணமாவதுபொல் ஒரு பிரமை. பணி தொடரட்டும். அழைத்துச் செல்லுங்கள். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.