Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன் பிள்ளை என்றால்..............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அநேகமானவர்கள் குடும்பத்தவர்தானே. ஒரு சீரியசான விடயத்தை பதிவோம் என விளைகின்றேன்.

திருமணமாகி கனநாளாகி விட்டது. அதற்கு முதலே தெரிந்த மனைவிதானே. அந்த 3 நாட்கள் வந்தால் வயித்தைப்பிடித்தபடி துடிக்கும். சிலவேளை அது ஒரு கிழமையும் எடுக்கும். நமக்கு எப்படி அதன் வலி புரியும். அதைக்குடி இதைச்சாப்பிடு. வைத்தியரைப்போய்ப்பார் என்றதுடன் நமது ஆலோசனையும் நடவடிக்கையும் நின்றுவிடும். ஆனால் அதன்முடிவை மனம் விரும்பும். அது அவரது வலிக்கான முடிவுக்காக அல்லாது எமது தேவைக்கான தேடலாகவே இருக்கும். இது பலவருடங்கள் தொடரும் கதை. இதில் எனக்கும் அவருக்கும் பெரிதாக வில்லங்கங்கள் கிடையாது. இருவருக்கும் இந்த நடைமுறை பழகிப்போனது. (ஆற்றாமைகள் இருந்தாலும்). பல குடும்பங்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதேநிலை ஒரு நாள் எனது மகளுக்கு வந்தபோது...........

வயிற்றுக்குள் நோகுது அம்மா என்று அவள் சொன்னபோது......

துடித்துப்போனேன். கண்களில் ரத்தக்கோடுகள்.

லா சப்பலுக்கு ஓடினேன்.

சின்ன வெங்காயம் அதிலும் நல்ல கொழு கொழு என்று சிவந்ததாகப்பார்த்து

(வாழ்நாளில் இப்படி நான் பார்த்து வாங்கியதே இல்லை)

சிறிய கத்தரிக்காய்

திறமான நல்லெண்ணெய்

வயிற்றில் பூச மஞ்சல்

தடவிவிட வேப்பிலை

குடிக்காத நான் வாங்கியது திறமான பிரண்டி...........

எல்லாம் கொண்டுவந்து போட்டதும் மனைவிக்கும் சந்தோசம்.

ஆனால் கண்ணில் கலக்கம்.

என்ப்பா எனக்கேட்டேன்.

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

பதில் சொல்ல ஏதுமில்லை.

உண்மை எப்போதும் சுணைக்கும்.

  • Replies 81
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அலை மோதும் மனித வேட்கைகளுகுள்ளே,

தலையை மறைத்துக் கொள்கிறதா, மனிதம்?

மனம் திறந்த, உங்கள் பகிர்வுக்கு நன்றிகள், விசுகர்!

இதனை வாசித்ததும் எனக்கு கண்கலங்குகிறது..... இனி எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உங்கள் மனைவியையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முட்டை, சீரகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே......சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் முட்டையை எடுத்துக்கொள்வதில்லை... பிராண்டியையும் அனைவரும் எடுப்பார்கள் என்றில்லை..

சீரகம் என்பது மிகவும் முக்கியமானது... சில வருடங்கள் கழிந்த நிலையிலும் வயிற்றுவலி இருக்குமானால் இடைக்கிட சீரக கறி (அரைத்த கறி என்றும் சொல்வார்கள்) செய்து உண்டால் வலி குறைவாக இருக்கும். சிலருக்கு அதனை உண்டாலும் வலி குறையாது...

ஆனால் வலிக்காக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல..... சிலர் ponstan மருந்தை எடுப்பார்கள். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது...

பதிவுக்கு நன்றி..

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தாயுமானவன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..! குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்..! இந்த மாதிரி கேள்வி வரும்படியாக நடந்துகொள்ளக் கூடாது என மனம் சொல்கிறது..!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள்[/size]

  • தொடங்கியவர்

எம்மை நாம் தீட்டவேண்டும்

அதுவே இப்பதிவின் நோக்கம்

அதைப்புரிந்து எழுதியுள்ளீர்

நன்றி ஐயா

இதனை வாசித்ததும் எனக்கு கண்கலங்குகிறது..... இனி எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உங்கள் மனைவியையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முட்டை, சீரகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே......சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் முட்டையை எடுத்துக்கொள்வதில்லை... பிராண்டியையும் அனைவரும் எடுப்பார்கள் என்றில்லை..

சீரகம் என்பது மிகவும் முக்கியமானது... சில வருடங்கள் கழிந்த நிலையிலும் வயிற்றுவலி இருக்குமானால் இடைக்கிட சீரக கறி (அரைத்த கறி என்றும் சொல்வார்கள்) செய்து உண்டால் வலி குறைவாக இருக்கும். சிலருக்கு அதனை உண்டாலும் வலி குறையாது...

ஆனால் வலிக்காக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல..... சிலர் ponstan மருந்தை எடுப்பார்கள். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது...

பதிவுக்கு நன்றி..

நன்றி துளசி

பெண்கள் இதற்குள் வரமாட்டார்கள் என்று நினைத்தேன்.

முதலிலேயே வந்து ஆறுதலும் தந்துள்ளீர்.

இது ஆண்களைத்தொடவேண்டும் என்பதால் திறந்த திரி.

பார்க்கலாம்

பதிவுக்கு நன்றி வி அண்ணா ............உண்மையில் இப்படி எத்தனை விடயங்களில் நாங்கள் அயண்டை தனமாக இருக்கிறோம்......எமக்கு துணையாய் வந்தவர்களுடைய அருமையை அறியாமல் இருந்திருக்கிறோம்........இது வேணும் என்று நாம் செய்வதில்லை .ஆனாலும் அதனால்தான் அயண்டையீனமாய் [சரியான தமிழோ தெரியவில்லை] என்று குறிப்பிட்டேன்.

வேலைக்கு போகும்போது காலையில் எனக்கு முன் துயிலேழும்பி தேநீர், ..........வேலையில் சாப்பிடுவதற்கு சண்ட்விச் தயார்.............

வேலைக்குப்போனபின் குழந்தைகளை எழுப்பி அவர்களுடைய காலைக்கடன் முடித்து உணவு கொடுத்து ,பாடசாலைக்கு ஆடையணிந்து அவர்களை குளிரிலும் மழையிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு சென்று கூட்டி வந்து ...........அப்புறம் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட சாப்பாடு தயார்..........இன்னும் எத்தனையோ எத்தனையோ ......இவையெல்லாம்,இந்த மகத்துவம் எல்லாம் எனக்கு அப்போ தெரியவில்லை ...........இந்த கடந்த இரண்டு நாட்களும்தான் அந்த மகத்தான சேவையும்,தேவையும் எனக்கு புரியவைத்தது................இந்தக்கிழமை இங்கே விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகிவிட்டது ...............என் மனைவியும் இந்த நாட்டு பாசையை மேற்கொண்டு படிப்பதற்காக பாடசாலைக்கு செல்ல தொடங்கி விட்டார்............உண்மையில் என்னை ஒரு வெறுமை,ஏக்கம்,[பயம் என்று கூட சொல்லலாம்].........ஆட்கொண்டது ......இந்த இரண்டு நாட்களிலும் தான் அந்த மனைவி எனப்படும் தாயின் தெய்வீகத்தை புரிந்துகொண்டேன்.........நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்தும் .............இந்தப்பாடல்தான் எனக்கு நினைவு வருது............

மன்னிக்கவும் வி. அண்ணா உங்களால் ஓர் படிப்பினையாக கொடுக்கப்பட்ட இந்த திரிக்குள் நான் இவற்றை எழுதியதற்கு ...........இப்போ எனக்கு எழுதக்கூட நேரமில்லை .........அந்த சூழ்நிலையில் இருந்து கொண்டும் இதை இங்கே எழுத வேண்டும் என்று மனம் உறுத்தியதாலேயே எழுதினேன் ...........நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான். :(

வெளிய சொல்ல முடியவில்லை.....

நிச்சயமாக இது ஒரு நல்ல படிப்பினையாக எமக்கு இருக்கும். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயுமானவன்

உண்மைதான் நந்தன்.

அதுவும் அடக்கம்.

நன்றிகள் கருத்துக்கும் நேரத்திற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வெளில சொல்கிற செய்தியா....... :lol: பச்சை இல்லாமல் போச்சு...இருவருக்கு போட பச்சை வேணும்...இன்று இரவு 12 க்கு மேல் வந்து போடுறன்...நல்லவேளை பெண்களின் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் இயற்றையான மாற்றங்கள் பற்றி ஒரு ஆண் எடுத்து வந்ததால் நிறைய கருத்துக்களை ஆண்களே வந்து எழுதுகிறார்கள்..

இதையே பெண்களாகிய நாங்கள் எடுத்து வந்தால் சொல்ல வேண்டியதில்லை...பெண்கள் என்றால் மெசின் போன்று வேலை செய்பவர்கள் என்ற உணர்வுகளே அனேகரின் மனங்களில் உண்டு...ஆனால் அவற்றையும் கடந்து பெண் என்பளுக்குள்ளும் பல வித சொல்லிக் கொள்ள முடியாது ஏக்கங்கள் இருக்கிறது என்பதை இனிமேல் காலத்திலவாது ஆண்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்பிறன்..இந்த கருத்தை எனக்காக மட்டும் சொல்ல இல்லை...நான் பெற்றோருடன் இருக்கும் பிள்ளை..என் உணர்வுகள் வேறு பட்டதாக இருக்கும்..சில பிள்ளைகள் வளர்ந்து தன் அறிவு என்று வந்த பின் வெளியில் எல்லா விடையங்களையும் சொல்ல விரும்ப மாட்டார்கள்...ஆனால் ஒரு திருமணம் செய்த பெண்ணின் உணர்வுகள் விச்சு அண்ணா பகிர்ந்து கொண்டது போல் வேறு பட்டதாக இருக்கும்....நான் நிறைய,நிறைய எழுதிக் கொள்ள விரும்ப இல்லை...அனைத்து ஆண்களும் உங்கள் வீடுகளில் உள்ள பெண்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பீர்கள் என்று நம்பிறன்..

உண்மையில் எனக்கு இது ஆச்சரியமான விடயமாக தெரியவில்லை. பிள்ளைப் பாசத்துக்கும், துணையுடனான அன்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். மனைவி மீது வைப்பது அன்பு , பிள்ளைகள் மீது வைப்பது பாசம். பாசம் என்றுமே வலிமை கூடியது.

பொதுவாக மனைவிகள் கூட கணவனுக்கு ஒரு வலி வரும் போது துடிப்பதை விட பிள்ளைக்கு வரும் போது மிகவும் துடிப்பார்கள். வாழ்வில் எமக்கு இருக்கும் அனுபவங்களினூடாக வலியை பழகியிருப்போம் என்ற நம்பிக்கைதான் கரிசனை காட்டுவதில் வேறுபாடுகளை உருவாக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை என்றால் என்ற தலைப்பிற்குள் விசுகு அண்ணா என்னதான் எழுதியிருக்கிறார் என்று வந்து எட்டிப்பார்த்தேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அனுபவமும் வயதும் இவற்றை பொதுத்தளத்தில் எழுதும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. நன்றியுடன் மனந்திறந்து எழுதியதற்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

யாழ்போதனா வைத்தியசாலையில் இதற்கு மருத்துவ உதவியை நாடினால் பனடோல் தான் கொடுப்பார்கள். தனியார் மருத்துவர்களிடம் போனால் அவர்கள் வழங்குவது சாதாரணமாக அனைத்து வலிகளுக்கும் வலி நிவாரணியாக இருக்கும் ponstan. (இது ஒரு antibiotic). இதனை பயன்படுத்துவதால் வலி குறைவடையாது.

இஞ்சி தேநீர் குடித்தோ அல்லது சுட்ட உள்ளி சாப்பிட்டோ எதுவும் ஆகாது.

வெளிநாடுகளில் பல மருந்துகள் உள்ளன. இல்லை என்று கூறவில்லை. ponstan ஐ விட சிறந்தவை. ஆனால் அவை கூட போட்டவுடன் வலியை குறைக்காது. சிறிது நேரத்தில் வலி குறைவது போல் இருக்கும். பின்னர் குறிப்பிட்ட மணித்தியாலத்தின் பின் மீண்டும் வலிக்கும். மருந்தை பயன்படுத்தாமல் விட்டால் ஒரு நாளில் வலி போய்விடுமாக இருப்பவர்களுக்கு மருந்தை பயன்படுத்தினால் விட்டு விட்டு 3 நாளுக்கு கூட தொடரலாம். அது கூட பல மருந்துகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். (சிலருக்கு இப்படி நடப்பதில்லை...)

மருந்து எடுப்பதால் நிச்சயம் பக்க விளைவுகள் உருவாகும். எடுப்பவர்களுக்கு குறைவாக பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு பக்க விளைவுகள் அதிகளவில் உருவாகும்.

உடற்பயிற்சி தொடர்ச்சியாக எடுத்து வருபவர்களுக்கு வலிக்காது என்பது பற்றி தெரியாது.

வெள்ளைக்காரிகளுக்கு பெரிதாக வலிப்பதில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து தொடர்ச்சியாக வைன் குடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வலிக்காது அல்லது வலி தெரியாது...

Edited by துளசி

நன்றி விசுகு அண்ணா, அன்பு உணர்வுகளுக்குள் பாகுபாடு கூடாது என்பதற்கான இன்னுமொரு அனுபவபகிர்வு.

இன்றைக்காவது நாங்கள் திருந்த ஒரு பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் இந்த பதிவிற்கு பிறகு அவளுக்கு வலிக்கும் நாட்கள் இனி எங்களுக்கும் வலிக்கும் (மனசில்).

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

துளசி இந்த வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை அத்தோடு வலிக்காதவர்கள் எல்லோரும் வைன் அருந்துவதில்லை. உங்களுடைய விட்டுக் கொடுக்காமல் ஆடும் வாதாட்டத்தை மிகவும் இரசிக்கிறேன். சில சமயங்களில் உங்களுடைய குழந்தைத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது. கவனத்தில் கொள்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிது கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..! குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்..! இந்த மாதிரி கேள்வி வரும்படியாக நடந்துகொள்ளக் கூடாது என மனம் சொல்கிறது..!!

இதை எழுதும் போது நான் என்ன நினைத்தேனோ அது தங்கள் கருத்தில் இருக்கு இசை.

இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்.

உங்களுக்கு விழுந்து கொண்டிருக்கும் விருப்பு வாக்குகளும் அதைத்தான் சொல்கின்றன.

கண்ணுக்குத்தெரியாத உறவுகளுக்காகவே பரிதவிப்போர் நாம்.

எம்மில் பாதியாகிய துணையை விட்டுவிடுவோமா?

ஆனாலும் எம்மை அறியாது விட்டுள்ளது உறைத்தது.

அதை என் தம்பிகளும் உறவுகளும் கவனிக்கணும் என்பதற்காகவே இந்தப்பதிவு.

உங்கள் கருத்து இனி இந்தக்கேள்வி எம்மை நோக்கி வராது என்ற உறுதி தருகிறது.

அதுவே இந்தத்திரியின் நோக்கம்.

நன்றி சகோதரா.

நேரத்துக்கும் கருத்துக்கும் உறுதிக்கும்.

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள்[/size]

உங்களுக்குமா?

நன்றி

நேரத்திற்கும் கருத்துக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி வி அண்ணா ............உண்மையில் இப்படி எத்தனை விடயங்களில் நாங்கள் அயண்டை தனமாக இருக்கிறோம்......எமக்கு துணையாய் வந்தவர்களுடைய அருமையை அறியாமல் இருந்திருக்கிறோம்........இது வேணும் என்று நாம் செய்வதில்லை .ஆனாலும் அதனால்தான் அயண்டையீனமாய் [சரியான தமிழோ தெரியவில்லை] என்று குறிப்பிட்டேன்.

வேலைக்கு போகும்போது காலையில் எனக்கு முன் துயிலேழும்பி தேநீர், ..........வேலையில் சாப்பிடுவதற்கு சண்ட்விச் தயார்.............

வேலைக்குப்போனபின் குழந்தைகளை எழுப்பி அவர்களுடைய காலைக்கடன் முடித்து உணவு கொடுத்து ,பாடசாலைக்கு ஆடையணிந்து அவர்களை குளிரிலும் மழையிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு சென்று கூட்டி வந்து ...........அப்புறம் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட சாப்பாடு தயார்..........இன்னும் எத்தனையோ எத்தனையோ ......இவையெல்லாம்,இந்த மகத்துவம் எல்லாம் எனக்கு அப்போ தெரியவில்லை ...........இந்த கடந்த இரண்டு நாட்களும்தான் அந்த மகத்தான சேவையும்,தேவையும் எனக்கு புரியவைத்தது................இந்தக்கிழமை இங்கே விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகிவிட்டது ...............என் மனைவியும் இந்த நாட்டு பாசையை மேற்கொண்டு படிப்பதற்காக பாடசாலைக்கு செல்ல தொடங்கி விட்டார்............உண்மையில் என்னை ஒரு வெறுமை,ஏக்கம்,[பயம் என்று கூட சொல்லலாம்].........ஆட்கொண்டது ......இந்த இரண்டு நாட்களிலும் தான் அந்த மனைவி எனப்படும் தாயின் தெய்வீகத்தை புரிந்துகொண்டேன்.........நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்தும் .............இந்தப்பாடல்தான் எனக்கு நினைவு வருது............

மன்னிக்கவும் வி. அண்ணா உங்களால் ஓர் படிப்பினையாக கொடுக்கப்பட்ட இந்த திரிக்குள் நான் இவற்றை எழுதியதற்கு ...........இப்போ எனக்கு எழுதக்கூட நேரமில்லை .........அந்த சூழ்நிலையில் இருந்து கொண்டும் இதை இங்கே எழுத வேண்டும் என்று மனம் உறுத்தியதாலேயே எழுதினேன் ...........நன்றி

உண்மைதான் தம்பி தமிழ் சூரியன்

உப்பை எவரும் கணக்கெடுப்பதில்லை.

அது இல்லாதபோது...............???

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும்..........

உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான். :(

வெளிய சொல்ல முடியவில்லை.....

நிச்சயமாக இது ஒரு நல்ல படிப்பினையாக எமக்கு இருக்கும். :icon_idea:

இது தான் வேண்டும்.

நன்றி தம்பி

நேரத்துக்கும் கருத்துக்கும் உறுதிக்கும்....

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

நன்றி தங்களது கருத்துக்கும் நேரத்திற்கும் ஆலோசனைக்கும்.

எவருக்காவது பிரயோசனப்பட்டால் மிக மிகச்சந்தோசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வெளில சொல்கிற செய்தியா....... :lol: பச்சை இல்லாமல் போச்சு...இருவருக்கு போட பச்சை வேணும்...இன்று இரவு 12 க்கு மேல் வந்து போடுறன்...நல்லவேளை பெண்களின் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் இயற்றையான மாற்றங்கள் பற்றி ஒரு ஆண் எடுத்து வந்ததால் நிறைய கருத்துக்களை ஆண்களே வந்து எழுதுகிறார்கள்..

இதையே பெண்களாகிய நாங்கள் எடுத்து வந்தால் சொல்ல வேண்டியதில்லை...

சாதாரணமாக எழுதினாலும்

இந்த திரியில் நான் எதிர் பார்த்ததை பதிந்துள்ளீர்கள்.

அதற்காகத்தான் நான்(ஆண்) இதை இங்கு கொண்டு வந்தேன்.

வெளியில் சொல்லும் செய்தியா இது என நீங்கள் பகிடியாக எழுதினாலும்..........

அதை என் போன்றவர்களால்தான் சொல்ல முடியும் என்பதும்

யாழ் கள உறவுகளுடன் கன நாட்களாக பழகுபவன் என்ற முறையில் அவர்கள் எதில் விளையாடுவார்கள் எதில் விளையாட மாடட்டார்கள் என்பதை அறிவேன். இந்த திரி அதற்கு சான்றாக அமையும். அமைந்துள்ளது.

துளசி இந்த வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை அத்தோடு வலிக்காதவர்கள் எல்லோரும் வைன் அருந்துவதில்லை. உங்களுடைய விட்டுக் கொடுக்காமல் ஆடும் வாதாட்டத்தை மிகவும் இரசிக்கிறேன். சில சமயங்களில் உங்களுடைய குழந்தைத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது. கவனத்தில் கொள்க.

இல்லை. வலி ஏற்படுவோரை பற்றி தான் கருத்து எழுதியிருக்கிறேன். :D

அத்துடன் வைன் குடிக்கும் வெள்ளைக்காரிகளை பற்றி மட்டும் தான் எழுதியிருக்கிறேன். எம்மவர்களை எழுதவில்லை. :D

இப்பவும் குழந்தைப்பிள்ளை மாதிரி இருக்கா.... :D:):icon_idea:

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு இது ஆச்சரியமான விடயமாக தெரியவில்லை. பிள்ளைப் பாசத்துக்கும், துணையுடனான அன்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். மனைவி மீது வைப்பது அன்பு , பிள்ளைகள் மீது வைப்பது பாசம். பாசம் என்றுமே வலிமை கூடியது.

பொதுவாக மனைவிகள் கூட கணவனுக்கு ஒரு வலி வரும் போது துடிப்பதை விட பிள்ளைக்கு வரும் போது மிகவும் துடிப்பார்கள். வாழ்வில் எமக்கு இருக்கும் அனுபவங்களினூடாக வலியை பழகியிருப்போம் என்ற நம்பிக்கைதான் கரிசனை காட்டுவதில் வேறுபாடுகளை உருவாக்கின்றது.

கிட்டத்தட்ட

உங்கள் நிலையே எனதும்.

ஆனால் அவர் சொன்னது உண்மை. அதுவே சுட்டது.

அது எனக்கு என் மாமனாரை ஞாபகப்படுத்தியது. இன்னொருவரின் பிள்ளையை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற பரிதவிப்பு எனக்கு. என் பிள்ளை என் பிள்ளை என்பது இன்னொருவரை காயப்படுத்துவது புரிந்தது.

நீங்கள் அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு இனிப்புக்கொடுத்தநிலைதான் இதுவும்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் நிழலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை என்றால் என்ற தலைப்பிற்குள் விசுகு அண்ணா என்னதான் எழுதியிருக்கிறார் என்று வந்து எட்டிப்பார்த்தேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அனுபவமும் வயதும் இவற்றை பொதுத்தளத்தில் எழுதும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. நன்றியுடன் மனந்திறந்து எழுதியதற்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

உங்களைப்போன்றோர் இருக்கும் பொதுத்தளத்தில் எழுத எனக்கென்ன அச்சம்?

தங்களது நன்றியும் பாராட்டும் பெரும் வெகுமதி எனக்கும் இந்த திரிக்கும்.

நன்றி சகோதரி.

எதைச்செய்தாலும் நாலு பேர் நன்மையடையக்கடவது.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரிகளுக்கு பெரிதாக வலிப்பதில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து தொடர்ச்சியாக வைன் குடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வலிக்காது அல்லது வலி தெரியாது...

வெள்ளை காரிகளுக்கு வலியில்லாததன் காரணம் வைன் இல்லை.

அவர்கள் சிறு வயதில் இருந்தே கற்பத்தடை மருந்துகளை பாவிக்கிறார்கள்.

வாயிற்று வலி என்று இவர்கள் மருத்துவரை நாடியதும் அவர்கள் கருத்தடை மாத்திரைகளையே பரிந்துரைக்கிறார்கள். அவை பின்பு பக்க விளைவுகளை கொடுக்கலாம். கருத்தடை மாத்திரைகளை பாவித்தால் வயிற்றுவலி இருக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா, அன்பு உணர்வுகளுக்குள் பாகுபாடு கூடாது என்பதற்கான இன்னுமொரு அனுபவபகிர்வு.

இன்றைக்காவது நாங்கள் திருந்த ஒரு பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் இந்த பதிவிற்கு பிறகு அவளுக்கு வலிக்கும் நாட்கள் இனி எங்களுக்கும் வலிக்கும் (மனசில்).

நன்றி தம்பி பகலவன்

இதை எழுதியதன் வெற்றி இந்த வரிகள்.

நாங்கள் எவரும் கெட்டவர்கள் கிடையாது. ரொம்ப நல்லவர்கள்.

சந்தோசமாக

அன்பாக

பண்பாக

ஆசையாக

குடும்பம் நடாத்தும் ......

எம்மைப்போன்று கணவன்மார் கூட அறியாமல் செய்யும் பிழையையே இங்கு கொண்டு வந்தேன்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் உறுதிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.