Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணங்கள் முடிவதில்லை :)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் தொடருங்கள் அது சரி அந்த வேர என்ன செய்தநிங்கள்?

  • Replies 187
  • Views 21.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போத்திலைத் தந்து, 'என்யோய் மான்' என்றவுடனேயே விளங்கியிருக்க வேணுமே!

சுத்த 'டியுப் லைட்' போல! :icon_idea:

இது தான், உங்கள் கணவரின், நண்பர் சொன்ன சாமானாக்கும்!

தொடருங்கள், வல்வை!

அருமை அருமை அருமையான அனுபவங்கள் அழகான பாதங்கள் .............பிரமிக்க வைக்கும் எழுத்து நடை ,,,,,,,,,,,தொடருங்கள் ...அக்கா

தொடருங்கள் சகாறா அக்கா. ஊர்தியில் இருந்த மற்றவர்களும் கண் சிமிட்டுகிறார்கள். போத்தலைக் கொடுத்த மனிதனும் என்ஜாய் மான் என்கிறார்! அதுக்குள்ளே என்ன தான் இருந்தது?

உங்கள் எழுத்துக்கள் வழமை போலவே சுவாரஸ்யமாக இருக்கிறது.

எனக்கும் கடலில் வரும் அலைகளில் ஒரு விருப்பம். கடலுக்கு கிட்ட வளராத படியால் அதிகம் பரிச்சயம் இல்லை.

கடலும் அலைகளும் ஒரு சுகமான சிநேகிதத்தை தருவதென்பது ஆச்சரியம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]படங்களும் பகிர்வுமாய் ...........அசத்தல் தான் ........[/size]

[size=4].உங்கள் பதிவுகள் எங்களையும் மகிழ வைத்துள்ளது .[/size]

நன்றி நிலாக்கா

சூப்பர் தொடருங்கள் அது சரி அந்த வேர என்ன செய்தநிங்கள்?

இன்னும் என்ன செய்யிறது என்று தெரியாமல் அப்படியே கிடக்கு சுண்டல் :lol: :lol:

போத்திலைத் தந்து, 'என்யோய் மான்' என்றவுடனேயே விளங்கியிருக்க வேணுமே!

சுத்த 'டியுப் லைட்' போல! :icon_idea:

இது தான், உங்கள் கணவரின், நண்பர் சொன்ன சாமானாக்கும்!

தொடருங்கள், வல்வை!

நீங்கள் மட்டும் ஒழுங்காக இந்தத் தொடரை படிக்கிறீங்கள் என்று தெரியுது ரோமியோ... டியூப் லைட்டென்றாலும் பரவாயில்லையே.... அது பத்தினா அந்தமாதிரி எரியும். இது சுட்ட பல்ப் எப்படி ரோமியோ பத்தும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை அருமையான அனுபவங்கள் அழகான பாதங்கள் .............பிரமிக்க வைக்கும் எழுத்து நடை ,,,,,,,,,,,தொடருங்கள் ...அக்கா

நன்றி தமிழ் சூரியன்.

உங்களுடைய இக்கருத்தை சுண்டல் பார்க்கவில்லைப்போல் இருக்கிறது. ஏற்கனவே நான் எழுதுவது புரியவில்லை என்று தன்னுடைய தலையில் உள்ள முடியை பிய்த்து அரைவாசி சொட்டை ஆகிவிட்டாராம். உங்கள் கருத்தைப்பார்த்தால் அவருக்குக் கொலைவெறி வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது எதற்கும் அவதானமாக இருங்கள். :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சகாறா அக்கா. ஊர்தியில் இருந்த மற்றவர்களும் கண் சிமிட்டுகிறார்கள். போத்தலைக் கொடுத்த மனிதனும் என்ஜாய் மான் என்கிறார்! அதுக்குள்ளே என்ன தான் இருந்தது?

உங்கள் எழுத்துக்கள் வழமை போலவே சுவாரஸ்யமாக இருக்கிறது.

எனக்கும் கடலில் வரும் அலைகளில் ஒரு விருப்பம். கடலுக்கு கிட்ட வளராத படியால் அதிகம் பரிச்சயம் இல்லை.

கடலும் அலைகளும் ஒரு சுகமான சிநேகிதத்தை தருவதென்பது ஆச்சரியம் தான்.

நன்றி Eas

அலை ஒவ்வொருமுறையும் பொங்கிக் கிளம்பி தரையில் மோதி மீண்டும் கடலுக்குள் புகுந்து அடுத்த சில வினாடிகளில் மீள உருவம் பெற்று வருவது பூகோள ரீதியல் 23அரைப் பாகை சாய்ந்த நிலையில் நிகழும் பூமியின் சுழற்சியால் என்பதைக்காட்டிலும் மீள மீள எழுவதும் விழுவதுமாக அதனைப்பார்க்கும்போது போராட்டமே வாழ்க்கை என்ற தத்துவம் கண்முன்னால் நிற்கிறது. வாழ்க்கையில் போராட்டமே இல்லாத மனிதர்கள் உண்டா?

அத்தோடு நான் சிறு வயதிலிருந்தே கடல்பார்த்தே வளர்ந்திருக்கிறேன். எங்கள் வீட்டு கூரையின்மேல் ஏறியிருந்து கடலை மணிக்கணக்காக பார்த்து ரசித்த அனுபவங்கள் சிறுவயதில் அதிகம். நிலம், நீர், காற்று நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுக்கும் நம்மை வாழவைக்கும் சிருட்டிப்புக்கள். அவற்றை எல்லோருமே நேசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்... ஆனால் நேசிக்கும் அனைவரும் அதனை வெளிக்காண்பிப்பது இல்லை. அவ்வளவுதான்.. இதில் ஆச்சரியப்படும் நீங்களே இவற்றுடனான உங்கள் வாழ்வின் பிணைப்பை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்குள் நீங்களே வியப்படைவீர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்ன செய்யிறது என்று தெரியாமல் அப்படியே கிடக்கு சுண்டல் :lol: :lol:

M

அது இனிமே உங்களுக்கு தேவைப்படா அதனால எனக்கு அனுப்புங்க......:D

சகாரா சுண்டுவிடம் கொடுங்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

M

அது இனிமே உங்களுக்கு தேவைப்படா அதனால எனக்கு அனுப்புங்க...... :D

ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குத் தேவைப்படாதுதான் :icon_mrgreen:

சகாரா சுண்டுவிடம் கொடுங்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

சுண்டுவிடம் கொடுத்து ?..உங்களுக்குப் பிரயோசனப்படாது அலை :D

என்னிடம் கொடுக்க சிபாரிசு செய்யுங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாக்கா

இன்னும் என்ன செய்யிறது என்று தெரியாமல் அப்படியே கிடக்கு சுண்டல் :lol: :lol:

நீங்கள் மட்டும் ஒழுங்காக இந்தத் தொடரை படிக்கிறீங்கள் என்று தெரியுது ரோமியோ... டியூப் லைட்டென்றாலும் பரவாயில்லையே.... அது பத்தினா அந்தமாதிரி எரியும். இது சுட்ட பல்ப் எப்படி ரோமியோ பத்தும்?

சிகரெட் & மது அதிகம் பாவித்தால் இதுதான் நடக்கும்,,

தொடருங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பயணங்கள் முடிவதில்லை - 7[/size]

நீண்ட இடைவெளியை விட்டுத் தொடர்களை எழுதும்போது அது வாசிப்பவர்களுக்கு அலுப்பைக் கொடுக்கும். அதனைத் தவிர்க்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. முன்பைப்போல எழுத்துக்கள் வசப்பட மறுக்கின்றன. பயணங்கள் முடிவதில்லையை எதிர்பார்க்கும் நண்பர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய முடியாமல் காலமும் கடமைகளும் அலைக்கழிக்கின்றன. ஒரே மூச்சில் எழுதிவிட்டு அமர முடியவில்லை. பயணக்குறிப்பைத் தொலைத்த ஒரு பேனாவிற்கு மீண்டும் மீண்டும் அத்தருணங்களை நினைவு கூறுதல் கொஞ்சம் கடினமாகவே உள்ளது.

our-room-on-the-ground.jpg

மதிய உணவை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக நாங்கள் தங்கியிருக்கும் அறையை மாற்ற மீண்டும் நாங்கள் நேற்றிரவு சாவிகளைப் பெற்றுக் கொண்ட அலுவலகத்திற்கு சென்று ஒருவழியாக அறையை மாற்றிக் கொண்டோம். எமக்காக ஒதுக்கப்பட்ட அந்த அறையும் கடற்கரைக்கு அண்மையாக இல்லாமல் அமைந்திருந்தது. அதில் துணைவருக்கு பூரண திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் போய் அலுவலகத்தில் பேசியபோது கடற்கரைக்கு அண்மையாக அறைவேண்டுமென்றால் சிறிது பணம் அதிகம் கட்டவேண்டும் என்று கூறினார்கள் சரி எதற்கும் பணம் கட்டுவதற்கு முன்பு அறைகளை பார்வையிட்டுவிட்டு அதனை மேற்கொள்ளலாம் என்று அறைகளைக்காட்டும்படி கேட்டோம். அறைகளைக் காட்டினார்கள் எனக்கு பிடிக்கவில்லை.. வேண்டாம் என்று ஒரேயடியாக மறுத்துவிட்டேன். நாம் தற்போது இருக்கும் அறையின் வசதியளவுக்கு அந்த கடற்கரையை அண்மித்த அறை இருக்கவில்லை. இது தொடர்பில் நம்ம மச்சிக்கு பெரிய ஏமாற்றம் நிலைகொண்டது. கடலலையின் ஓசையும் ஏகாந்த இரவும் அவர் ஆசைப்படும் விடயங்களில் எப்போதும் முன் நிற்கும். திருப்தியின்றி ஏற்றுக் கொண்டார். நாளை எங்களுடைய boogie ride முடித்து வந்து அங்குள்ள வேறு விடுதிக்கு மாறுவது பற்றிக் கதைக்கவேண்டுமென்று முடிவு கட்டிக் கொண்டார். இப்போது நாங்கள் இருக்கும் அறையின் பால்கனி வழியாக வெளியே நீச்சல் தடாகத்தைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. பொதுவாக அங்குள்ள எல்லா நீச்சல் தடாகத்துடனும் Barகளும் ஒட்டியே இருந்தன. ஆனால் எங்களுக்கு அண்மையில் உள்ள தடாகம் நாலரை அடி ஆழத்துடன் பிரத்தியேகமாக அமைந்திருந்தது. இதற்குள் பார் இல்லை பிள்ளைகளின் ஆர்வம் நீச்சல்தடாகத்தை நோக்கியிருந்தது உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்களுடன் ஒவ்வொரு மணித்துளிகளும் கடந்தன. நீந்தவேண்டும் புறப்பட்டாயிற்று. நாம் தங்கியிருந்த கட்டடத்தை விட்டு கீழே இறங்கி நீச்சல்தடாகத்தை நோக்கி நடக்கும்போது மேலே இரண்டாவது மாடி பல்கனியில் இருந்து ஏகமாக தூசனைச் சொல்லாடல்கள் தமிழில் கேட்டன. சிறிது நடந்திருப்போம் ஒரு குரல் “ அண்ணே நீங்கள் தமிழோ” என்று மேலேயிருந்து ஒலித்தது. நிமிர்ந்து பார்த்து “ஓம் தம்பி” என்று இவரும் கதைக்க மெல்ல மெல்லமாக நான்கு இளைஞர்கள் அந்தப்பல்கனியில் இருந்து எட்டிப்பார்த்து மேலும் கதைக்க ஆரம்பித்தார்கள். சரியாப் போச்சு…… என்னுடைய வீட்டுக்காரனுக்கு கதை கண்ட இடம் கைலாசம்… இனி என்ன இவரைப்பார்த்துக் கொண்டிருந்தால் அப்படியே ஆவென்று கொண்டுதான் நிற்கவேண்டும்… முடிவெடுத்துக் கொண்டு நாங்கள் நீச்சல்குளத்திற்கு சென்று விட்டோம். எங்களைக் காணுமுன் சத்தமாகக் கேட்ட தூசனைகள் பின்னர் ஒலிக்கவில்லை. அந்த இடத்தில் நாம் இருக்கும் வரை அந்த நான்கு தமிழ் இளைஞர்களைத் தவிர வேறு தமிழர்களைச் சந்திக்கவில்லை.

அங்கு ஒவ்வொரு நாளும் இரவு 9 மணியிலிருந்து 11 மணிவரை அரங்க நிகழ்வுகள் நடைபெறும். சிறுபிள்ளைகளுக்கான வேடிக்கைப்போட்டிகளில் ஆரம்பித்து சல்சா நடனங்கள் மியூசிக்கல் நாடகங்கள் என பல்வகையான நிகழ்வுகள் நாளாந்தம் வெவ்வேறாக நடைபெறும்.

PuntaCanadec2008+116.jpg?lang=en

இன்று இந்த நிகழ்வுகளைச் சென்று பார்ப்பது என்று பகலில் போட்டிருந்த திட்டத்தை நீண்ட நேர நீச்சல் மூழ்கடித்துவிட்டது. நாளாந்தம் நீச்சலை அரை மணிநேரம் செய்தால் அது உடற்பயிற்சி அதையே திடீரென்று ஒரு நாளில் 4 மணிநேரம் அடித்தால் எப்படி இருக்கும்?. இதை வாசிக்கும்போது சரியான எருமைகள் என்று நீங்கள் நினைப்பது விளங்குகிறது. :) நீண்டநேர நீர் விளையாட்டு உடலுக்கு அசதியைக் கொடுக்க ஏற்பட்ட அகோரபசிக்கு உணவுச்சாலையில் அகப்பட்டதை உண்டுவிட்டு சென்று உறங்கியவர்கள்தான் அடுத்த நாட்காலையில்தான் கண் விழித்தோம். அட இன்று boogie ride இற்குப் போகவேண்டுமே எழுந்து அரக்கப்பறக்க காலைக்கடன்களை முடித்துவிட்டு உணவருந்திக் கொண்டோம். நாம் buggie ride இற்கு பதிவுசெய்யும்போது அவர்கள் எம்மை 10 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கும்படி கூறி தாம் அவ்விடத்தில் எம்மைப் பிக்கப் பண்ணுவதாகவும் எம்மை அழைத்துச் செல்பவர்கள் கூறியிருந்தார்கள். அதன்படி நாம் அவ்விடத்தில் 10 மணிக்கு தயாராக நின்றோம் ஒன்றரை மணிநேரக் காத்திருப்பிற்குப் பின் எம்மை ஏற்றிச் செல்ல ஒரு வாகனம் வந்து நின்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அசப்பில் நம்மூர் தட்டிவான்தான். என்ன கொஞ்சம் பெரிதாகவும் நல்ல வர்ணம் பூசப்பட்டும் இருந்த்து. மர இருக்கைகளில் அமர்ந்து மேடுபள்ளமுள்ள ரோட்டில் பயணிப்பது என்னுடைய பிள்ளைகளுக்குப் புதிய அனுபவம். அந்த அனுபவம் அவர்களுக்கு நகைச்சுவை மிகுந்த சுவார்சியமான பொழுதாகவும் அமைந்தது. முக்கால் மணிநேரத்திற்கு அதிகமாகப் பயணித்து- buggie தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தோம் எங்களுக்கு முன்னராகவே பல வெளிநாட்டவர்கள் அங்கு கூடியிருந்தனர். எல்லோரும் கெல்மெட் சகிதம் கறுப்புக்கண்ணாடி அணிந்து மூக்கு வாய் ஆகியவற்றை கைக்குட்டையால் மூடிக்கட்டி முகமூடிக்கும்பல்போல் காட்சி அளித்தார்கள்.

203FR.jpg

அந்தத் தரிப்பிடத்தில் இருந்த கடைக்காரன் எங்களிடம் கறுப்புக் கண்ணாடி, கைக்குட்டையை வாங்கும்படி கூறினான். விலையோ எங்களை விலைபேசிவிடும்போன்று இருந்தது. அத்தோடு ஏற்கனவே எம்மிடம் அவை இருந்தன… என்ன காலையில் வெளிக்கிடும் அவசரத்தில் தொப்பிகளைத் தவிர மற்றவற்றை எடுக்கவில்லை. பக்கத்தில் நின்ற துணைவர் கண்ணாடியையும் கைக்குட்டையையும் வாங்க எத்தனித்தபோது நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன் அடுத்து வந்த 15 நிமிடத்திலேயே அது எவ்வளவு தவறு என்பதைப்புரிந்து கொண்டேன். நானும் மகளும் ஒரு ரைட்டிலும் அப்பாவும் மகனும் இன்னொன்றிலும் ஏறிக் கொண்டோம். நூற்றுக்கணக்கான boogie வாகனங்கள் ரோட்டில் வரிசையாக அணிவகுத்து ஓடி கடற்கரையை அடைந்தன இங்கே அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தக்கடற்கரையின் அழகை இரசிக்க ஆரம்பித்தார்கள்.

Punta-Cana-Beach-02.jpg

greenhat.jpg?w=584

பச்சைத் தென்னை ஓலையில் பின்னப்பட்ட தொப்பிகள், சீத்தைத்துணியில் வரையப்பட்ட வர்ண ஓவியங்கள், மரங்களை மணிகளாக அரவி எடுத்து கோர்க்கப்பட்ட மாலைகள் என கைப்பணிப் பொருட்களை அக்கடற்கரையை அண்டிவாழும் மக்கள் ஒவ்வொரு வெளிநாட்டவர்களையும் அணுகி விற்பனை செய்தார்கள். சுமார் ஒரு மணிநேரம் அவ்விடத்தில் நின்றுவிட்டு மறுபடியும் இந்த வாகனஅணி புறப்பட்ட்து. இப்போது முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம்.

Dune_Buggy3.jpg?1308854294

மேடு பள்ளங்கள்,பாறைகள், மணற்காடுகள், புழுதிநிலங்கள், சேற்றுமடைகள் எனச் சமாந்தரம் அற்ற வெளிகளில் த்ரிலிங்கான ரைவிங் செய்துகொண்டு சுற்றிவரும்போது ஓரிடத்தில் கொக்கோ, கோப்பி, மாமக்குவா போன்றவற்றைப்பரப்பி ஒரு கொட்டகைக்குள் கொக்கோ,கோப்பி போன்றவை பெறப்படும் விதங்கள் பற்றி விளக்கம் கொடுத்தார்கள். அந்த இடத்தில்தான் இந்த மூலிகை வேர்களின் உபயோகத்தையும் கூறினார்கள். சோடி சோடியாக வந்தவர்கள் மூலிகை வேர்களை ஊறவைத்த ‘ரம்” ஐ ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டிருக்க அவ்விடத்தை விட்டு விலகி வெளியே வந்த எமக்கு ஒரு விளாட் மாமரத்தின் காய்கள் கண்களை உறுத்தின.

different-species-of-mango.jpg

வேறு சிலரும் சில மாங்காய்களைப் பறிக்க முயற்சித்து விலக…என்னுடைய வீட்டுக்காரன் தன்னுடைய வீரத்தைத் திரட்டி இரண்டு மாங்காய்களை வீழ்த்தி எனது கைகளில் தந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார். அவருக்கு என்வீட்டில் இருக்கும் மாமரங்களில்தான் சிறுவயதில் மட்டுமல்ல பதின்ம வயதுகளிலும் என் பொழுதுகள் கழிந்தனவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாதித்த திமிரில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திய அவரிடம் மாமரக்கிளைகளில் அசையாமல் இருந்து அணில்களை இரசித்த கதைகளைச் சொல்லி அவரின் நிமிர்வை அடக்க விரும்பாமல் இரசித்துக் கொண்டிருக்கும்போது……. அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……

வளரும். :lol::rolleyes:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……

நமப் பார்வதி, பதயே!!!

அரகர மகாதேவா! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமப் பார்வதி, பதயே!!!

அரகர மகாதேவா! :D

:blink::o

  • கருத்துக்கள உறவுகள்

:blink::o

நான் நினைச்சன் வல்வை, அது ஒரு LOVE NOTE ஆக்கும் எண்டு!

அது தான் கடவுளைத் துணைக்குக் கூப்பிட்டனான்! வேற ஒண்டுமில்லை! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:blink::o

இந்த ஸ்மைலி யிலையே தெரியுது.. மேட்டர் கொஞ்சம் மார்க்கமானது தான் என்று.. :unsure::rolleyes:

'அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……'

ஆண்களை இப்படி விழுந்தடித்துக் கவனிப்பதன் தார்ப்பரியம் என்ன? :D அவர்கள் அசடுகள் என்பதாலா? :D அல்லது இழிச்ச வாயர்கள் என்பதாலா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஸ்மைலி யிலையே தெரியுது.. மேட்டர் கொஞ்சம் மார்க்கமானது தான் என்று.. :unsure::rolleyes:

ஏற்கனவே சிமைலி தனியாகப் போடுவதை அனுமதிக்கலாமா என்று வாக்கெடுப்பு நடக்கிறது. :unsure:

இப்பிடி எதையாவது எழுதி கவனிக்காமல் இருக்கும் மட்டுக்களையும் கூப்பிட்டு இவா தனியா சிமைலி போட்டிருக்கா :icon_mrgreen: என்று காட்டுவது நல்லா இல்லை சொல்லிட்டேன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……'

ஆண்களை இப்படி விழுந்தடித்துக் கவனிப்பதன் தார்ப்பரியம் என்ன? :D அவர்கள் அசடுகள் என்பதாலா? :D அல்லது இழிச்ச வாயர்கள் என்பதாலா? :lol:

என்னை வம்பில் மாட்டி விடுவதற்குத்தான் உங்களுக்கு எவ்வளவு ஆசை!!! :icon_mrgreen:

ஆமா உங்கள் வீட்டில் கவனிப்பு ரொம்ப அதிகம்போல... உங்கள் ராணி உங்களை அசடு என்கிறாரா? இழிச்ச வாயர் என்கிறாரா? :lol:

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் முடிவதில்லை - 7

நூற்றுக்கணக்கான boogie வாகனங்கள் ரோட்டில் வரிசையாக அணிவகுத்து ஓடி கடற்கரையை அடைந்தன இங்கே அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தக்கடற்கரையின் அழகை இரசிக்க ஆரம்பித்தார்கள்.

Punta-Cana-Beach-02.jpg

greenhat.jpg?w=584

பச்சைத் தென்னை ஓலையில் பின்னப்பட்ட தொப்பிகள், சீத்தைத்துணியில் வரையப்பட்ட வர்ண ஓவியங்கள், மரங்களை மணிகளாக அரவி எடுத்து கோர்க்கப்பட்ட மாலைகள் என கைப்பணிப் பொருட்களை அக்கடற்கரையை அண்டிவாழும் மக்கள் ஒவ்வொரு வெளிநாட்டவர்களையும் அணுகி விற்பனை செய்தார்கள். சுமார் ஒரு மணிநேரம் அவ்விடத்தில் நின்றுவிட்டு மறுபடியும் இந்த வாகனஅணி புறப்பட்ட்து. இப்போது முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம்.

Dune_Buggy3.jpg?1308854294

மேடு பள்ளங்கள்,பாறைகள், மணற்காடுகள், புழுதிநிலங்கள், சேற்றுமடைகள் எனச் சமாந்தரம் அற்ற வெளிகளில் த்ரிலிங்கான ரைவிங் செய்துகொண்டு சுற்றிவரும்போது ஓரிடத்தில் கொக்கோ, கோப்பி, மாமக்குவா போன்றவற்றைப்பரப்பி ஒரு கொட்டகைக்குள் கொக்கோ,கோப்பி போன்றவை பெறப்படும் விதங்கள் பற்றி விளக்கம் கொடுத்தார்கள். அந்த இடத்தில்தான் இந்த மூலிகை வேர்களின் உபயோகத்தையும் கூறினார்கள். சோடி சோடியாக வந்தவர்கள் மூலிகை வேர்களை ஊறவைத்த ‘ரம்” ஐ ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டிருக்க அவ்விடத்தை விட்டு விலகி வெளியே வந்த எமக்கு ஒரு விளாட் மாமரத்தின் காய்கள் கண்களை உறுத்தின.

different-species-of-mango.jpg

வேறு சிலரும் சில மாங்காய்களைப் பறிக்க முயற்சித்து விலக…என்னுடைய வீட்டுக்காரன் தன்னுடைய வீரத்தைத் திரட்டி இரண்டு மாங்காய்களை வீழ்த்தி எனது கைகளில் தந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார். அவருக்கு என்வீட்டில் இருக்கும் மாமரங்களில்தான் சிறுவயதில் மட்டுமல்ல பதின்ம வயதுகளிலும் என் பொழுதுகள் கழிந்தனவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாதித்த திமிரில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்திய அவரிடம் மாமரக்கிளைகளில் அசையாமல் இருந்து அணில்களை இரசித்த கதைகளைச் சொல்லி அவரின் நிமிர்வை அடக்க விரும்பாமல் இரசித்துக் கொண்டிருக்கும்போது……. அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே ஓடிவந்து ஒரு சிறு காகிதத்துண்டை துணைவர் கையில் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கொடுத்த காகிதத் துண்டில் என்னதான் இருக்கிறது என்று பார்த்த எனக்கு அதில் கீறியிருந்த பூவும் அந்த ஒற்றைச் சொல்லும்….. தூக்கிவாரிப்போட்டது……

வளரும். :rolleyes:

தூசு தட்டி மீள்கிறது பயணங்கள் முடிவதில்லை. :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்பு காண்பதில் மகிழ்ச்சி

தொடரட்டும் பயணங்கள் ..............

  • கருத்துக்கள உறவுகள்

Quote "வேறு சிலரும் சில மாங்காய்களைப் பறிக்க முயற்சித்து விலக…என்னுடைய வீட்டுக்காரன் தன்னுடைய வீரத்தைத் திரட்டி இரண்டு மாங்காய்களை வீழ்த்தி எனது கைகளில் தந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார்." :lol:

தொடருங்கள் ...

Quote: "அவ்விடத்தை விட்டு விலகி வெளியே வந்த எமக்கு ஒரு விளாட் மாமரத்தின் காய்கள் கண்களை உறுத்தின.
different-species-of-mango.jpg

வேறு சிலரும் சில மாங்காய்களைப் பறிக்க முயற்சித்து விலக…என்னுடைய வீட்டுக்காரன் தன்னுடைய வீரத்தைத் திரட்டி இரண்டு மாங்காய்களை வீழ்த்தி எனது கைகளில் தந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார்"

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள், இது உங்களால் வெளியில் சொல்லக்கூடிய விடயாமா? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே ஊக்குவிக்கின்ற மாதிரியான செயல் மாதிரி தெரியவில்லையா? 

நல்ல தொடர் தொடருங்கள், இந்த இடத்திற்க்கு போக ஆசையை தூண்டுகின்றூர்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.