Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயார்: சம்பந்தன்

Featured Replies

[size=4]'ஊழலற்ற, நேர்மையாக செயற்படக்கூடிய முதலமைச்சர் ஒருவர்தான் எமக்குத்தேவை. அவர் முஸ்லிமா, தமிழரா என்பது முக்கியமல்ல. அத்துடன் தேவைப்பட்டால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்' என்று நேற்று நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் மாகாண சபை நிர்வாகத்தை அமைப்பது குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு இன்று மாலை கருத்துதெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்...

'மக்களால் எமக்குத்தரப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றவேண்டியது எமது கடமை. இந்த தேர்தல் வெற்றியை அரசாங்கம் களவாட நாம் அனுமதிக்கமாட்டோம். அரசாங்கத்தரப்பு இப்போது பெற்றுள்ள சாதாரண வெற்றியைக்கொண்டு அவர்கள் ஆட்சியமைக்க அனுமதிக்க முடியாது. மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் - ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மாகாண ஆட்சியை அமைக்க அழைத்தால் அதனை நாம் சட்டரீதியாக தடுப்போம்.

கிழக்கு மாகாண தேர்தலை நடத்திய முறை மூலம் எமக்கு கிடைக்கவேண்டிய வெற்றியை அரசாங்கம் சூறையாடியுள்ளது. இந்த தேர்தலில் அரசாங்கத்தை எதிர்த்த கட்சிகள் மூன்றும் வெற்றிபெற்றுள்ளது. மூன்று கட்சிகளினதும் மொத்த ஆசன எண்ணிக்கை 22. ஆனால் அரசாங்கம் மற்றும் அதனோடு இணைந்து செயற்படக்கூடிய இன்னுமொரு கட்சி ஆகிய இரண்டினதும் ஆசன எண்ணிக்கை 15. எனவே ஐ.ம.சு.மு. மாகாண ஆட்சியை அமைப்பதை நாம் அனுமதிக்கப்போவதில்லை.

'இன்று காலை கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் எமது கட்சிப் பொதுச் செயலாளர் - மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன 22 ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளன. எனவே கிழக்கு மாகாண ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மைப் பலம் எமக்கு உள்ளது. ஆகவே அத்தகைய ஆட்சியமைப்பதற்கும் அதற்கேதுவாக மாகாண முதலமைச்சரை நியமிக்கவும் எமக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கவும் என்று நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்'' என்று மேலும் குறிப்பிட்டார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/81--image/48308-2012-09-09-17-22-40.html

  • தொடங்கியவர்

[size=4]கூட்டமைப்பினர் சரியான தெளிவான செய்தியை முஸ்லீம் காங்கிரசிற்கு கூறியுள்ளனர். [/size]

[size=1]

[size=4]அவர்களால், அவர்கள் தலைமையால், தமது மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய விரும்பின், இதை ஏற்றுக்கொள்ளுவார்கள். [/size][/size][size=1]

[size=4]பட்டம், பணம், பதவி ... இவை தேவை என்றால், சிங்களத்துடன் இணைவார்கள். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் நாடுகளை வைத்து அரசு ஹக்கீமிற்கு அழுத்தம் கொடுக்கலாம்

[size=5]ஆதரவு யாருக்கு என விரைவில் அறிவிப்போம் : மு.கா. தலைவர் ஹக்கீம்[/size] face.jpg By AM. Rizath

[size=3]2012-09-09 23:34:50[/size]

[size=2]நடந்து முடிந்துள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மையினை பெறாதநிலையில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே யாருக்கு ஆதரவு வழங்குவதென இறுதியான தீர்மானம் எடுக்கப்படுமென கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Rauf-Hakeem.jpg[/size]

[size=2]இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் கூறுகையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றிபெற்றுள்ளோம். இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்மைப்பும் பேச்சுக்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார்.[/size]

-[size=2]வீரகேசரி[/size]

Edited by மல்லையூரான்

ஏன்??? தமிழ் கூட்டமைப்பு 2 வருசமும் முஸ்லிம் காங்கிரஸ் 2 வருசமும் ஐ.தே.கட்சி 1 வருசமும் பங்கிட்டு ஆட்சி அமைக்கலாம். இது ஒரு முன்மாதிரியாவும் இருக்கும். கிழக்கில் 3 இனங்களும் இருக்குற படியால் இதையே எதிர் காலத்திலும் பின்பற்றலாம். தொடர்ச்சியாக 2 துணை முதலமைச்சர்களையும் வைக்கலாம். ஒரு முஸ்லிம் முதலமைச்சரா இப்ப வந்தால் கிழக்கு வடக்கோடு ஒரு காலமும் இணையாது. ஆகவே பங்கீட்டு அடிப்படையில் வந்தால் நல்லம். வடக்கு கிழக்கு இணைவின் பின்னரும் முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவியில் பங்கு கொடுக்கலாம். இல்லை என்றால் கிழக்கில் முஸ்லிம்களுக்கு அம்பாறை, மூதுரை அடிப்படையா வச்சு முஸ்லிம் மாகாணம் உருவாக்கி கொடுத்தால் அவர்களை அவர்களே ஆழ்வார்கள் வடக்கு கிழக்கு இணைவிட்கு குறுக்கை நிற்க மாட்டார்கள்.அதை விட்டு முஸ்லிமே முதலமைச்சர் என்றால் பிறகு ஏன் தமிழ் கூட்டமைப்பு தேர்தலில் நிண்டது?

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் முதலமைச்சரா இருக்கிறதை விட முஸ்லீம் என்ன.. ஒரு சிங்களவனுக்கே அதை கொடுக்கலாம். மாகாண சபைகளே வேஸ்டு. அதுக்கு முதலமைச்சர் வேற..! கொடுவினை..!

முதலில இந்த உப்புசப்பற்ற உலகத்தை ஏமாற்றிற மாகாண சபைகளை இல்லாமல் செய்து சம்ஸ்டி அலகை நிறுவுறதைப் பற்றி பேசுங்க. இந்த மாகாண சபையால.. தமிழ் மக்களின் எல்லா அரசியல் கோரிக்கைகளும் உலக அரங்கில் நசுக்கப்படுகிறது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் காங்கிரஸ் மகிந்த அரசுடைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நிலையில்

மாகாண சபையில் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்திருந்தால் .......

இந்த மனநிலை சம்பந்தருக்கும் அவரின் கூட்டமைப்புக்கும் இப்போது வந்திருக்கும்

[size=4][size=5]அத்துடன் தேவைப்பட்டால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்' [/size]என்று நேற்று நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் மாகாண சபை நிர்வாகத்தை அமைப்பது குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு இன்று மாலை கருத்துதெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.[/size]

என்ன கொடும சரவணா?

தமிழன் பெரும்பான்மையாய் இருந்த ஒரு மாகாணத்தில் இந்நிலமை ஏற்பட்டதற்கு கிழக்கு வாழ் தமிழர்கள் அல்ல வடக்கில் வாழ்ந்த தமிழர்களும் பொறுப்பேற்க வேண்டும். வட மாகாண மேல் சாதியினரின் ஆதிக்க அடக்கு முறை அரசியலின் பின் விளைவுகள் தான் இது...

சம்பந்தர் ரவூப் ஹக்கீமின் காலில் விழுந்து கெஞ்சினாலும் ரவூப் மகிந்தவிடம் இருந்து பெறப்போகும் குறைந்தது இரண்டு மத்திய ....குறைந்து பிரதி அமைச்சரவை மந்திரிப் பதவிக்கும் சில பல மாகாண அமைச்சு... பிரதியமைச்சு பதவிகளுக்கும் ஈடாகாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்...

பிறகு அவர்களை சும்மா தொப்பி பிரட்டிகள் என்று தூற்றுவதில் பயனில்லை..... :icon_mrgreen: :icon_mrgreen:

அனைத்துக் கட்சிகளிலும் வென்றவர்களின் இனப் பிரதிநிதித்துவத்தை வைத்துப் பார்க்கின்ற பொழுது, அதிகமானவர்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் கிழக்கின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இனமாக முஸ்லீம்கள் மாறிவிட்டார்கள் என்பது வெளிப்படையாகிறது.

ஏனப்பு எல்லாள மவராசா இதுக்கும் வடக்கு மேல்சாதி தானா??? சாதி அழிய நீங்க விட மாட்டீங்க போல

அனைத்துக் கட்சிகளிலும் வென்றவர்களின் இனப் பிரதிநிதித்துவத்தை வைத்துப் பார்க்கின்ற பொழுது, அதிகமானவர்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் கிழக்கின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இனமாக முஸ்லீம்கள் மாறிவிட்டார்கள் என்பது வெளிப்படையாகிறது.

'டொச்சடா'.... இப்பதான இது தெரிந்தது. :D

இதை தேசியத் தலைமையிடம் அப்பவே சொல்லியிருக்கலாம். அதைக்கூட சிந்திக்காமலா ஆய்வுகள் எழுதினீர்கள்.

சபேசன் நீங்க முஸ்லிம்களுக்காக மிகவும் கஷ்டப்படுகிற மாதிரிக் கிடக்கு.

அங்குள்ள சனத்தை விட்டா அவங்களே முடிவெடுப்பார்கள்.

சிங்கள இராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பத்தில் தொடங்கி வைத்தவர்களும் அவர்கள்தான். என்ன, சந்தர்ப்பவாதங்கள் அவர்களின் வாழ்க்கையை காவு கொண்டு விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.scotsman.com/news/international/setback-for-tamil-party-in-sri-lanka-local-election-1-2516219

1330748756.png

2.7376

Setback for Tamil party in Sri Lanka local election

Published on Monday 10 September 2012 02:12

Sri Lanka’s ruling party has defeated the country’s main ethnic Tamil party in a provincial election seen as a test of whether Tamils still want self-rule or are satisfied with government-led development programmes in a region devastated by decades of civil war.

President Mahinda Rajapaksa’s United People’s Freedom Alliance won 14 seats in the Eastern Provincial Council, while the Tamil National Alliance (TNA) secured 11, the department of elections said yesterday.

  • தொடங்கியவர்

http://www.scotsman....ction-1-2516219

1330748756.png

2.7376

Setback for Tamil party in Sri Lanka local election

Published on Monday 10 September 2012 02:12

Sri Lanka’s ruling party has defeated the country’s main ethnic Tamil party in a provincial election seen as a test of whether Tamils still want self-rule or are satisfied with government-led development programmes in a region devastated by decades of civil war.

President Mahinda Rajapaksa’s United People’s Freedom Alliance won 14 seats in the Eastern Provincial Council, while the Tamil National Alliance (TNA) secured 11, the department of elections said yesterday.

[size=4]நேற்று வந்த ஒரு செய்தியை இந்த சோம்பல் ஊடகங்கள் பிரதி எடுத்து போட்டவண்ணம் உள்ளன.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ததமிழர் இனவழிப்பு சிங்கள மகிந்தவுக்கு முஸ்லீம்கள் தங்களது ஆதரவைத் தருவதையே நான் விரும்புகிறேன். இதன்மூல அவர்களை ஒரு வரலாற்றுத் தவறிற்கு உட்படுத்துவதே நல்லது. தமிழில் ஒரு பழமொழி இருக்கு "நக்குண்டார் நாவிழந்தார்" என இவர்கள் சிங்களவனிடம் நக்குவதே நல்லது, அப்போதுதான் எம்மைத் தூற்றி அரசியல் செய்யும் அருகதையை அவர்கள் இழப்பார்கள்.

'டொச்சடா'.... இப்பதான இது தெரிந்தது. :D

இதை தேசியத் தலைமையிடம் அப்பவே சொல்லியிருக்கலாம். அதைக்கூட சிந்திக்காமலா ஆய்வுகள் எழுதினீர்கள்.

தப்பிலி,கிழக்கில் முஸ்லீம்களின் ஆதரவு இல்லாமல் தமிழர் தாயகத்தை அமைக்க முடியாது என்பதை உணர்ந்தே ஆரம்பத்தில் இருந்து இரு இனங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றோம். வருந்தத்தக்க வகையில் எமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தானே தன்னைப் பற்றி உயர்வா நினைச்சுக்கிட்டு திரியுறாரூ. இவர் பெரிய அரசியல்வாதி... இவர் சொல்லி ஒருத்தரும் கேக்கல்லையாமில்ல..! :lol:

முஸ்லீம் காங்கிரஸ் தோற்றம் முதல் இன்று வரை தமிழர்களின் எல்லா அரசியல்.. போராட்ட நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டையாகவும்.. சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு ஆதரவாகவும் இருந்து வரும் ஒரு தீவிர மதப் பயங்கரவாத அமைப்பு.

மாகாண சபைகளில் மக்களின் நாட்டமின்மை... கிழக்கின் திட்டமிட்ட சிங்கள.. முஸ்லீம் குடியேற்றங்கள்.. தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள்.. இராணுவ பிரசன்னம்.. கூலிக் குழுக்களின் பிரசன்னம்.. தமிழ் மக்கள் விரும்பத் தக்க வகையில் தேர்தல்கள் நடத்தப்பாடாமை.. தமிழ் மக்கள் விரும்புகின்ற கட்சிகள் அல்லது பிரதிநிதிகள் தேர்தலில் இல்லாமை.. மக்களின் கோரிக்கைகள் விருப்பங்களை தொடர்ந்து நிராகரித்துச் செயற்படும் அரசியல் தலைமைகள்.. தேர்தல் முறைகேடுகள்.. வன்முறைகள்.. சிங்கள.. ஆளும் கட்சியின் அடக்குமுறைகள் அராஜகங்கள்.. பண நாயகங்கள்.. இவை அனைத்துமே தான் முஸ்லீம் காங்கிரஸின் பலம்..!

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்கள்.. புத்தளத்தில் வாக்களிக்க முடியும்.. ஆனால் யாழ்ப்பாணத்தில்.. வன்னியில்.. அம்பாறையில்.. மட்டக்களப்பில்.. திருமலையில்.. மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த.. அல்லது துரத்தி அடிக்கப்பட்ட மக்கள் அவ்வாறு வாக்களிக்க முடியாது. மேலும் கடந்த கால போர் நடவடிக்கையால் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் வாழும் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களும் வாக்களிப்புகளில் கலந்து கொள்ள முடிவதில்லை..!

மூதூரில்.. தமிழ் மக்களின் வாக்கு அங்கிருந்து அவர்கள் முஸ்லீம் பயங்கரவாதிகளால் துரத்தி அடிக்கப்பட்டதில் இருந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. 1980 களின் ஆரம்பத்தில்.. மூதூரின் பெரும்பான்மை சமூகமாக இருந்த தமிழர்கள்.. இன்று சிறுபான்மையினராகி உள்ளனர். கல்முனையில் நிலைமை அப்படி. கிண்ணியாவில் நிலைமை அப்படி..!

திருமலை.. அம்பாறை மாவட்டங்கள் திட்டமிட்ட சிங்கள.. முஸ்லிம்.. குடியேற்றங்களால்.. தமிழர்களின் பிரதிநித்துவத்தை இழக்கும் நிலையை அடைந்துள்ளன. அதே நிலை மட்டக்களப்பில்.. முஸ்லிம் குடியேற்றங்களால்.

வடக்கில்.. மன்னார்.. வவுனியா.. யாழ்ப்பாணம்.. மிக விரைவில் இந்த நிலைக்கு ஆளாகும்..! அந்தளவுக்கு சிங்கள முஸ்லீம் குடியேற்றங்கள் அங்கு நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில்.. தமிழர்களோ.. அகதிகளாக மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விடுகின்றனர்.

மேற்கு நாடுகளில் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட.. சுமார் 10 தொடக்கம் 12 இலட்சம் தமிழர்கள் வாழ்க்கிறார்கள். இவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்படுவதோடு.. கிழக்கைச் சேர்ந்த பலர் தமிழக முகாம்களில் வாழ்க்கின்றனர். அவர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.

முஸ்லீம் அடாவடிகளுக்கு.. மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு முந்தைய கால இன விகிதாசாரப்படி.. தேர்தல் விதிகள் வடக்குக் கிழக்கிற்கு என்று தனித்துவமாக தீர்மானிக்கப்பட்டு.. ஐநா கண்காணிப்பின் கீழ்.. வடக்குக் கிழக்கில் தேர்தல்கள் நடத்தப்படுதல் வேண்டும்..! அப்போதுதான்.. யார் யாரின் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்படும்..! முதலில் முஸ்லீம்களுக்கு வக்காளத்து வாங்கும் கூட்டம் இதை வலியுறுத்தி செயற்படுத்திட்டு வந்து இங்கு கருத்துச் சொல்லட்டும் யார் கேட்காமல் அதை புறக்கணிக்கினம் என்றும் பார்க்கலாம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானும் அரசிட ஆள்,முஸ்லீம் ஆட்களும் அரசிட ஆள்...ஒரு தமிழழான பிள்ளையானை ஏற்க மாட்டினமாம் ஆனால் மூஸ்லீம்களை ஏற்பினமாம்

தேர்தலில் 15 முஸ்லீம்களும், 12 தமிழர்களும், 8 சிங்களவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு கிடைத்த 2 போனஸ் இடங்களில் யாரை அமர்த்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

கிழக்கு மக்களின் வாக்குக்காக ஜனநாயக முறையையும் இன்றைய நிலையையும் புரிந்து கொண்டே தமிழர் தரப்பு தேர்தலில் நின்றது. அதிகமாக முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றியீட்டியிருப்பதால்,ஒரு முஸ்லீம் முதலமைச்சரை ஏற்பதில் தவறு என்ன இருக்க முடியும்?

தமிழர்களும் முஸ்லீம்களும் நெருங்கி வருவதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பார்க்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கலாம்............

[size=4]தேர்தலில் 15 முஸ்லீம்களும், 12 தமிழர்களும்[/size]

ஊழலற்ற, நேர்மையாக செயற்படக்கூடிய முதலமைச்சர் ஒருவர்தான் எமக்குத்தேவை. அவர் முஸ்லிமா, தமிழரா

சம்பந்தர் சந்தேகப்படுகிறார்.

பதவிக்காக சம்பந்தர் இவ்வளவு தூரம் இறங்கியிருக்க வேண்டாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் இந்தமாதிரியான பேச்சினாலையே முஸ்லிம்களும் சிங்களவர்களும் கூட்டமைப்பை ஒருபொருட்டாக கருதுவதில்லை ....

உங்களால் முடியாது போனால் பதவியை இராஜனாம செய்துவிட்டு புதியவருக்கு வளிவிடலாம் .

கூட்டமைப்பில் சிறந்த தலைமைத்துவம் ???????????? :rolleyes:

தேர்தலில் 15 முஸ்லீம்களும், 12 தமிழர்களும், 8 சிங்களவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு கிடைத்த 2 போனஸ் இடங்களில் யாரை அமர்த்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கிழக்கு மக்களின் வாக்குக்காக ஜனநாயக முறையையும் இன்றைய நிலையையும் புரிந்து கொண்டே தமிழர் தரப்பு தேர்தலில் நின்றது. அதிகமாக முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றியீட்டியிருப்பதால்,ஒரு முஸ்லீம் முதலமைச்சரை ஏற்பதில் தவறு என்ன இருக்க முடியும்? தமிழர்களும் முஸ்லீம்களும் நெருங்கி வருவதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பார்க்கலாமே.

கட்சி ரீதியா த.கூ 11 , மு.கா- 7 , ஐ.தே.க-4 இடம் பிறகு ஏன் முஸ்லிம் முஸ்லிம் எண்டு அழுகிறிங்க?

பதவிக்காக சம்பந்தர் இவ்வளவு தூரம் இறங்கியிருக்க வேண்டாம்!

ஏன் அப்படி எடுக்கிறீர்கள்?

எல்லோருக்கும் தெரியும் சோனிக் கூட்டம் பதவிக்காக என்னவும் செய்யும் என்று அதே போல சம்ந்தருக்கும் தெரியும் சோனிக் கூட்டம் மகிந்தாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் இருந்தாலும் ஒரு போடு போட்டுவைக்கிறது நாளைக்கு சொல்வார்கள் தமிழர் தரப்பு இறங்கி வந்தும் சோனிகள் பதவிக்காக சிங்களவனிடம் ஓடினார்காளே என்று.

ஏன் அப்படி எடுக்கிறீர்கள்?

எல்லோருக்கும் தெரியும் சோனிக் கூட்டம் பதவிக்காக என்னவும் செய்யும் என்று அதே போல சம்ந்தருக்கும் தெரியும் சோனிக் கூட்டம் மகிந்தாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் இருந்தாலும் ஒரு போடு போட்டுவைக்கிறது நாளைக்கு சொல்வார்கள் தமிழர் தரப்பு இறங்கி வந்தும் சோனிகள் பதவிக்காக சிங்களவனிடம் ஓடினார்காளே என்று.

என்னதான் கதைத்தாலும் 'சோனி' இன்னொரு சோனியை அழித்ததில்லை.

பதியுதீன் ஆகட்டும், அஸ்ரப் ஆகட்டும், அதன் பிறகு வந்தவர்கள் ஆகட்டும் ஒருவனை ஒருவன் கொன்றதில்லை. அவர்களுக்குள் அடிபட்டதில்லை. பதவியில் இருக்கும் மட்டும் தங்களால் முடிந்ததைச் செய்துள்ளார்கள். அதனை அத்திவாரமாக வைத்து முன்பு அம்பாறை........இன்று கிழக்கு அவர்கள் கையில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.