Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் – அதை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

Featured Replies

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் – அதை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

Published on September 18, 2012-6:34 pm

hakkem-and-mahinda-150x150.jpg

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைத்ததை இன்றையதினம் பகிரங்கமாக ஊடகங்களில் அறிவித்த முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சினேகபூர்வமான அழைப்பினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதையிட்டு நான் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். என்று கூறியது சம்பந்தமாக கேட்டபோதே இவ்வாறு பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்

முஸ்லீம் காங்கிரஸின் இந்த முடிவு நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்த விடயம்தான் ஏனெனில் தமிழர்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் அஸ்ரப் அவர்களுக்கு பின்னர் எந்த முஸ்லீம் தலைமைகளும் தமிழர்களுடன் இணைந்து செயற்பட்ட வரலாறு கிடையாது.

இது முஸ்லீம் கட்சிகளுக்கேயான தனித்துவம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தனித்துவம் என்பது வேறு. முஸ்லீம் கட்சிகளின் தனித்துவம் என்பது வேறு.

நாங்கள் எங்களுடைய மக்களின் தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை பெற்று எங்களுடைய தாயகத்தை நாங்களே ஆட்சிசெய்ய வேண்டும் என்பதற்காக கடந்த 60ஆண்டுகளுக்கு மேல் போராடிவரும் இனம். ஆனால் முஸ்லீம் தலைமைகளோ தங்களது இனமானத்தையும், உரிமைகளையும், நிலத்தையும் அரசாங்கத்திடம் அடகுவைத்து காலாகாலமாக சலுகைகளை பெற்றுவந்த இனம்.

முஸ்லீம் தலைமைகள் தமிழர்களின் போராட்டத்தை பார்த்து தன்மானத்தை கற்றுக்கொண்டார்களே தவிர இயல்பாக அவர்களுக்கு போராடும் குணமோ அல்லது தனித்துவமோ கிடையாது அதைத்தான் இன்று மீண்டும் முஸ்லீம் காங்கிரஸ் செய்துள்ளது. எனவே அவர்கள் எங்களுடன் இணையமாட்டார்கள்.

எங்களைப் பொருத்தமட்டில் இது புதிய விடயமில்லை தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இதுபோன்ற எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளது அவற்றையெல்லாம் தாண்டியே இன்றும் தமிழர்களின் உரிமைப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது தமிழ் மக்களுக்கான உரிமையை பெறும் வரைக்கும் எங்களது போராட்டம் தொடரும் அதற்கான ஆணையை கிழக்குமாகாண மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

கிழக்குமாகாண சபையில் அரசுடன் இணைந்து வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் கூட இன்று அரசாங்கத்தால் தூக்கியெறியப்பட்டுள்ளார்.; எனவே அரசாங்கத்தை பொறுத்தமட்டிலும் சரி முஸ்லீம் காங்கிரசை பொருத்தமட்டிலும் சரி தமிழர் ஒருவர் இம்முறை முதலமைச்சராக வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள் அதை அவர்கள் செய்து காட்டியுள்ளார்கள் இதற்கான பொறுப்பை அரசாங்கத்திற்கு வாக்குச்சேர்த்து கொடுத்த தமிழர்கள் ஏற்கவேண்டும்.

எங்களை பொறுத்தமட்டில் மாறிவரும் சர்வதேச ஒழுங்குமுறைக்கு ஏற்ப நாங்களும் ஒருநாள் முஸ்லீம் காங்கிரசிடம் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

http://www.thinakkathir.com/?p=41622

Edited by மல்லையூரான்

எங்களை பொறுத்தமட்டில் மாறிவரும் சர்வதேச ஒழுங்குமுறைக்கு ஏற்ப நாங்களும் ஒருநாள் முஸ்லீம் காங்கிரசிடம் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

ஒரு விதத்தில் இவர்கள் எம்மோடு சேராததும் நன்மைக்கே என்று நம்புவோம்.

  • தொடங்கியவர்

கொஞ்சம் கூடக்கதைபட்டு போச்சு. போனால் போகுது. முஸ்லீம் காங்கிரசின் தலைமை மீது ஒரு தடவை தன்னும் ஆத்திரத்தையும் காட்ட வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

||நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.||

முஸ்லிம்,சிங்கள சுயலநல அரசியல்வாதிகள் தமிழர்களை ஓரம் கட்டுவது ஒன்றும் புதிமையானதல்ல.

38% முஸ்லிம், 36% தமிழர் , 26% சிங்களவரை கொண்ட கிழக்கில் கூட்டாட்சி அமைப்பது தான் சாத்தியமானது.தனிப்பெரும்பான்மை வேண்டுமெனில் முஸ்லிம்களின் வாக்கை கூட்டமைப்பு பெறவேண்டும்.அடுத்த தேர்த்தலிலாவது அதனை சாதிக்க இப்போ தொடக்கம் முயற்சிக்கலாமே!!!

[size=4]முஸ்லீம் தலைமைகள் தமிழர்களின் போராட்டத்தை பார்த்து தன்மானத்தை கற்றுக்கொண்டார்களே தவிர இயல்பாக அவர்களுக்கு போராடும் குணமோ அல்லது தனித்துவமோ கிடையாது அதைத்தான் இன்று மீண்டும் முஸ்லீம் காங்கிரஸ் செய்துள்ளது. [/size]

[size=4] புத்தளம் பகுதியில் இப்படி ஒரு கதை சொல்வார்கள் " எவன் பொண்டாட்டி எவனோடு போனால் என்ன லெப்பைக்கு நாலு பணம்"என்று.... யார் முதலமைச்சரால் என்ன ஹக்கீமுக்கு பெட்டி கைமாறியிருக்கும். [/size]

Edited by thanga

  • தொடங்கியவர்

சிக்கல் எண்கள் நிறைந்த இலங்கை அரசியல் சமன்பாட்டை, மேற்குநாட்டு நேர்கோட்டு அரசியல் சமன்பாடாக சோனியாவும், அமெரிக்க, ஐரோப்பிய ராஜதந்திரிகளும் நினைத்ததால் இந்த இடியப்ப சிக்கள்கள் தோன்றியிருக்கு.

கக்கீம் ஜெனிவா போனது ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடிக்க. 1.மகிந்தாவை தாஜாபண்ணி மந்திரிப்பதவிகளை நிரந்தரமாக்கி கொள்ள. 2. புலிகள் மீதிருந்த வெறுப்பை கூட்டமைப்பில் காட்ட 3. அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிராக போர்க்கொடி தூக்க. அவர் கூட்டமைப்பு வெளிநாட்டு அப்பிப்பிராயங்களை வைத்து செய்ய முயலும் அரசியல் தீர்வில் பங்கு ஏற்க வரமாட்டார். எனவே இது " [size=4]நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்" [/size] இப்போதைக்கு நாம் மு.கா. மீது காட்டும் கோபம் மட்டுமாகவே இருக்கும்

கக்கீமுக்கு நன்றாக தெரியும் தமிழரசுக்கட்சியுடன் எந்த ஒப்பந்தம் தான் எழுதினாலும் அதை பின்னர் கிழித்துவிடலாம் என்று. இதை அவர் தனது சிங்கள எஜமானர்களிடம் நன்றாக படித்திருக்கிறார். இதனால் 2 கிழமைகளாக கூட்டமைப்பை கையில் வைத்துக்கொண்டு மகிந்தாவுடன் தனது பேரங்களை முடித்திருக்கிறார். கக்கீம் கூட்டமைப்பை தந்திரமாக சுத்தி விட்டேன் என்று மனதுக்குள் இன்று நாளை புளுக்கப்படலாம்.ஆனால் இங்கே நாம் கவனிக்கத்தக்கது என்னவென்றல். மகிந்த முதல் அமைச்சரையும் நியமித்த பின்னர்தான் கூட்டமைபை பேச்சு வார்த்தைக்கு கூப்பிட்டவர். இதன் கருத்து வரவிருக்கும் நாட்களில் அவரிடம் கக்கீமை அடக்கி பிடிக்க நிறைய சாதனங்களை தன் கையில் ஆயத்தமாக வைத்திருக்கிறார் எனபது. கக்கீம் மகிந்தாவுக்கு கூட்டமைப்பை கையில் வைத்துகொண்டு பேரம் பேச முடிந்தது. மகிந்த அடுத்துவரும் மாதங்களில் செய்ய போவது, பேச்சுவார்த்தை என்ற பெயரில், கிருஸ்ணா, அசோக்மேத்தா, அக்காசி, பிளேக் இவர்கள் எல்லோரையும் ஒன்றாக இழுத்து வந்து கூட்டமைப்பை பேச்சுவார்தை என்று கையில் வைத்துகொண்டு கக்கீமுக்கு வேடிக்கை காட்ட போகிறார். எவ்வளவுக்கு எவ்வளவு தமிழர்களுடனான ஒப்பந்தகளை கிழிக்க அவர்களுக்கு வலு இருக்கோ அதேயளவு வலு முஸ்லீம்களுடனான ஒபந்தங்களையும் கிழிக்க இருப்பதாக கக்கீமுக்கு செய்து காட்ட போகிறார்.

இனி கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அது வடக்கு தமிழரும் கிழக்குக்காக வோட்டு போட்டால் மட்டுமே.

அதுக்கிடையில் முஸ்லிம் எப்படி தன் இனத்தை பெருக்கி விடுவார்கள் இருந்து பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் பதவியில் தமிழன்,சிங்களவன்,முஸ்லிம் எவனிருக்கிறான் என்பது முக்கியமில்லை ...மாகாணசபைக்கு என்ன அதிகாரம் இருக்கு என்பதுதான் முக்கியம்.

முதலமைச்சர் பதவியில் தமிழன்,சிங்களவன்,முஸ்லிம் எவனிருக்கிறான் என்பது முக்கியமில்லை ...மாகாணசபைக்கு என்ன அதிகாரம் இருக்கு என்பதுதான் முக்கியம்.

ஒரு பாடசாலைக்கு முஸ்லிமை அதிபராக போட்டாலே அந்த பாடசாலை பியோனில் இருந்து வாச்சர்வரைக்கும் தன் இனத்தையே போடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு இனத்திடம் முதலமைச்சர் பதவியை கொடுத்து விட்டு ஒண்டும் செய்ய மாட்டார்கள் என்றும் பவர் இல்லாத அதிகாரம் என்று இந்தபழமும் புளிக்கும் என்ற கதை தான்.

முஸ்லிமை பொறுத்த மட்டில் ஒரு தமிழன் கிழக்குக்கு முதலமைச்சராகவில்லை என்பதே வெற்றி தான்.

"நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்"

[size=5]நாங்கள் இப்போதே வருத்தமாயிருக்கின்றோம் ..கையாலாகத கூட்டமைப்பை எண்ணி - தமிழ் மக்கள்[/size]:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள ஜனனாயகம் டக்ளஸ், கருணா போன்ற அரசியளாரரைத்தான் ஆட்பட வைக்கும்! இவர்களின் அரசியல் பாரம்பரியத்துக்கு நிகராக முஸ்லீம் தலைமைகளும் உருவாகிவிட்டார்கள் என்பது கண்கூடு. எனவே இங்கே எந்த ஆச்சரிய வருத்தமும் கிடையாது! இந்த வகைக்குள் கூட்டணியின் எதிர்காலத்தைக் கூட போகாது தடுப்பது கடினமானதாகவே இருக்கும்!

அதிகாரம் போடும் எலும்புத்துண்டுக்கு ஆடாதவனை வெள்ளை வான் கொண்டுபோகும்.

மக்களின் எச்சில் மூஞ்சையில் வாங்கியவன் அமைச்சன் ஆவான், இதுதான் மகிந்தாவின் மாயாயாலம்!

ஒரு பாடசாலைக்கு முஸ்லிமை அதிபராக போட்டாலே அந்த பாடசாலை பியோனில் இருந்து வாச்சர்வரைக்கும் தன் இனத்தையே போடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு இனத்திடம் முதலமைச்சர் பதவியை கொடுத்து விட்டு ஒண்டும் செய்ய மாட்டார்கள் என்றும் பவர் இல்லாத அதிகாரம் என்று இந்தபழமும் புளிக்கும் என்ற கதை தான்.

முஸ்லிமை பொறுத்த மட்டில் ஒரு தமிழன் கிழக்குக்கு முதலமைச்சராகவில்லை என்பதே வெற்றி தான்.

என்கே காணவில்லை என்று நினைத்தேன்.. வந்துட்டார்!

பிள்ளையான் வரவில்லை என்று இவர் அழமாட்டார். தமிழன் முதலமைச்ச ஆகவில்லையே என்றுதான் அழுவார்!

சிங்கள ஜனனாயகம் டக்ளஸ், கருணா போன்ற அரசியளாரரைத்தான் ஆட்பட வைக்கும்! இவர்களின் அரசியல் பாரம்பரியத்துக்கு நிகராக முஸ்லீம் தலைமைகளும் உருவாகிவிட்டார்கள் என்பது கண்கூடு. எனவே இங்கே எந்த ஆச்சரிய வருத்தமும் கிடையாது! இந்த வகைக்குள் கூட்டணியின் எதிர்காலத்தைக் கூட போகாது தடுப்பது கடினமானதாகவே இருக்கும்!

அதிகாரம் போடும் எலும்புத்துண்டுக்கு ஆடாதவனை வெள்ளை வான் கொண்டுபோகும்.

மக்களின் எச்சில் மூஞ்சையில் வாங்கியவன் அமைச்சன் ஆவான், இதுதான் மகிந்தாவின் மாயாயாலம்!

என்கே காணவில்லை என்று நினைத்தேன்.. வந்துட்டார்!

பிள்ளையான் வரவில்லை என்று இவர் அழமாட்டார். தமிழன் முதலமைச்ச ஆகவில்லையே என்றுதான் அழுவார்!

ஒரு மாதிரி பிள்ளையானின் ஆள் என்பதை கண்டுபிடித்த்வீட்டீர்கள்..........

ரனில் நரியன் நரிக்குணத்தால் அழித்து போடுவான் ஆனால் மகிந்த நேர்மயான எதிரி எதையும் நேராகச் சொல்லி தான் செய்வான் அவனை எத்ர்கொள்வது இலகு அவன் வந்தால் போராட்டம் வலும்பெறும்................ இது தான் என் பதில் .

பிள்ளையான் எதுவரைக்கும் துரோகி???????????

நாளைக்கே மகிந்தாவை விட்டு விட்டு வந்தால் ஏற்றுக் கொள்வீரா?

  • கருத்துக்கள உறவுகள்

'தினக்கதிர்' இணையத்தளம் தனது கருத்தாகவே இதனைப் பதிவு செய்துள்ளதாக கருத வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார் எனில், அவருடைய பெயரை செய்தியில் குறிப்பிட்டிருக்க வேண்டும். எப்போதும் செய்திக்கு ஆதாரத்தினை வெளியிடுங்கள். (இவர் கூறினார், அவர் கூறினார் என்று குறிப்பிட்டே தங்கள் கருத்துக்களை தற்போதைய இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன)

உண்மையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி கருத்தினை குறிப்பிட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது.

முன்னரும் இவ்வாறுதான் விடுதலைப் புலிகளும் உசுப்பேத்தல் உரைகளை நிகழ்த்தினர். கடைசியில் நடைபெற்றது யாவரும் அறிந்த விடயம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் விட்ட தவறுகளைத் திருத்தி நாடாளுமன்றத் தேர்தலில் புத்துணர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.

உதாரணத்துக்கு, மாணவர் அணி- இளைஞர்களை அணிதிரட்டல்- தமது அரசியல் பரப்புரைகளை அடிமட்ட மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவரும் கருத்துக் கூறுவதும் ஆபத்தில்தான் கொண்டு சென்று முடிக்கும். இன்று வரை அவர்களின் ஊடகப் பேச்சாளர் யார் என்பதே பல ஊடகவியலாளர்களுக்கும் தெரியாத விடயம்.

என்னைப் பொறுத்த வரை முஸ்லிம் காங்கிரஸ் தனது பார்வையில் செய்தது சரி என்றே கூறுவேன். எதிர்ப்பு அரசியல் செய்து பழகிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி செய்தால் எதுவும் கிடைக்காது என்பது முஸ்லிம் காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும்.

அதேவேளையில், அரசுடன் இணைந்து ஆட்சி செய்தால் தனது சமூகத்துக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பெற முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு பெற்று தனது சமூகத்தினை முன்னேற்றப் பாதைக்கே கொண்டு செல்வார்கள்.

ஆனால், கிழக்கில் உள்ள தமிழர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருப்பர்.

புலத்தில் நின்று கத்துபவர்களுக்கு படுவான்கரை உள்ளிட்ட எத்தனையோ கிராமங்கள் இன்று இருக்கின்ற நிலமை தெரியுமா? அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட எதுவும் இதுவரை கிடைக்கவில்லை; அது கூடத் தெரியுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அந்த மக்களிடம் சர்வதேசம் வரும் சர்வதேசம் வரும் என்று கத்தியிருக்கின்றனர். அந்த மக்கள் இவர்களின் பசப்பு வார்த்தைகளையா கேட்கின்ற நிலையில் உள்ளனர்?

போருக்கு முண்டுகொடுத்த கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மக்களை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலத்தில் உள்ளவர்களும் அரசியல் செய்கின்றனரே தவிர- அந்த மக்களின் மீள் வாழ்வாதாரத்துக்கு உதவி பெற்றுக் கொடுப்பதில் எந்தவித முயற்சிகளும் செய்யவில்லை என்பதே உண்மை.

Edited by nirmalan

  • தொடங்கியவர்

பிரத்தியேக வசனத்தை பற்றி நான் எனது கருத்திலும் கூறியிருக்கிறேன். ஆனால் இவற்றிலிருந்து தெளிந்து மிதந்து வருவது யதார்த்தம். "முஸ்லீம்களும் கூட்டமைப்பும்" என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்பட வேண்டியது. அந்த விவாதத்தின் கீழ் இது பதிவு செய்ய படவேண்டிய அறிக்கை. இது உசுபேத்தும் வசனமா, தினக்கதிர் சொல்வதா, அல்லது கூட்டமைப்பு சொன்னதா என்பது இங்கே பெரிதாக கொள்ளப்பட தேவை இல்லை. கூட்டமைப்பு தன்னிடம் இருக்கத்தக்க பலம் ஒன்றை வைத்து மு.கா வுடன் பேரத்தில் இறங்கியது. அது என்ன என்பதை இந்த அறிக்கை வெளிக்கொண்டு வருகிறது. பலம் ஒன்றும் இல்லாவிட்டால், கூட்டமைப்பு மு.கா.வுக்கு நேரத்திற்கே சரணாகதி சொல்லி அங்கே இணைந்திருக்க வேண்டும்.

இதை யாரும் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சொல்லாவிட்டாலும் சம்பந்தர் அரசியல் நாகரிகத்துடன், மு.கா. தனது ஆணையை மீறி யிருக்கிறது என்று அறிக்கை விட்டிருக்கிறார். அந்த பரந்து பட்ட அறிக்கை இந்த ஒடுக்கமான கருத்தையும் உள்ளடக்குகிறது என்பது அரசியல் ஆய்வு.

மேலும் சர்வதேச தற்கால நிலை எங்கேயிருக்கென்றதை பிளேக், அக்காசி, நிருபம்மா ரவோ போன்றவர்களின் கடைசி அறிக்கைகளை வைத்து விவாதிக்காலாம். ஆனால் அது தலைப்பை விலத்தி செல்லும்.

பேரம் பேச போன கூட்டமைப்பிடம் ஒரு பிடி இருக்கின்றதென்பதுதான் அறிக்கை. அதில் கொஞ்சம் நாகரீகக் குறைவிருக்கலாம். உண்மை பிறளவில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைத் தேர்தலை நீட்டி முழக்கிறது இலங்கையில் தீர்வு வந்திட்டமாதிரியும், ஜனநாயகம் வந்தமாதிரியும் காட்டவே.. இந்தச் சதிவலையில் விழுந்துவிடாமல் இலக்கில் உறூதியாக இருக்கவேண்டும்.

கூத்தமைப்பு: வேணாம் அழுதிடுவன்

(தேர்தல்கள் வரும்போதுதான் மட்டும் மக்கள் நினைவுக்கு வந்தால் இதுதான் நடக்கும்.)

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இதில் விட்ட தவறுகள்.... முஸ்லீம் காங்கிரஸை தமிழ் மக்கள் மத்தியில் உயர்த்திப்பிடிச்சது மேலும் கூட்டமைப்பு சம்பந்தன்.. சுமந்திரனின் வாய்கள்.. சும்மா சும்மா உளறுவது.. மக்களை தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்திட்டு கைவிடும் கூட்டமைப்பின் தலைமைகளின் போக்கும் முக்கியனவாகும்...!

காட்டிக்கொடுப்பாளர்கள்.. மக்களுக்காக சேவை செய்வினம் என்று நம்பிற கிழக்கு மாகாண.. மக்களில் கொஞ்சப் பேர் இருக்கினம். அவைக்கும்.. மகிந்தவின் கிழக்கிலும் சிங்களம் என்ற.. இந்தச் சிந்தனை மூலம் நல்ல பலாபலன்கள் கிடைத்துள்ளன.

பிரதேசவாதத்தை வைச்சு தமிழ் மக்களைப் பலவீனப்படுத்தி சிங்களவனோடு ஒட்டலாம் என்று கனவு காணும் கிழக்கு புத்திசீவிகள் சிலருக்கும் இது நல்ல படிப்பினையாகும்..!

அடிப்படையில்.. தமிழர்களிடம்.. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதில் உள்ள ஆர்வம்.. உள்ளூர் அரசியலில் இல்லை. அந்த வகையில்.. கிழக்கில்.. இராஜதந்திர அரசியல் செயற்பாடும் வெற்றி என்பதும் தமிழர்களைப் பொறுத்தவரை நிச்சயம் கடினமானவையாகவே இருக்கும்..!

இவ்வளவுக்கு மத்தியில் மக்களின் வெற்றிக்காக கடுமையாக அர்ப்பணிப்போடு உழைக்கக் கூடிய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கொள்கைப் பற்றாளர்களும் குறைந்து கொண்டே வருகிறார்கள். மதில் மேல் பூனைகளே கூட்டமைப்பிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போருக்கு முண்டுகொடுத்த கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மக்களை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலத்தில் உள்ளவர்களும் அரசியல் செய்கின்றனரே தவிர- அந்த மக்களின் மீள் வாழ்வாதாரத்துக்கு உதவி பெற்றுக் கொடுப்பதில் எந்தவித முயற்சிகளும் செய்யவில்லை என்பதே உண்மை.

போருக்கு முண்டு கொடுத்த.. கிழக்கு.. இது தங்களின் வழமையான வாய்ப்பாடு.

ஈழ விடுதலைப் போரில் அதிகம் மக்களையும் போராளிகளையும் இழந்த மண் வட தமிழீழம். அதிகம் நிலங்களை இழந்த மண் தென் தமிழீழம். இரண்டு பகுதி மக்களும் இந்தப் போராட்டத்தால் இழந்தவை அதிகம்.

மேலும்.. 2004 ல் பிரதேசவாதத்தை முன்னிறுத்தி தங்களின் சொந்தத் தவறுகளுக்காக நலன்களுக்காக மக்களையும் மண்ணையும் காட்டிக் கொடுத்தவர்கள் போட்ட கூச்சலையே தாங்களும் போடுகிறீர்கள். அன்று அவர்கள் போட்ட கூச்சலுக்காக.. புலிகள் இருந்த போது.. அவர்களுக்கு மந்திரி பதவிகளும்.. முதலமைச்சர் பதவிகளும்.. இல்லாத போது.. படி இறங்கிய.. பிரதி அமைச்சர் பதவிகளும்.. ஆலோசகர்கள் பதவிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றை வைத்து அவர்கள் போட்ட கூச்சல்களையாவது அதாவது கிழக்கு மக்கள் அபிவிருத்தி இன்றி இருக்க வடக்கு வன்னிப் புலிகள் தான் காரணம் என்பதை.. புலிகள் அற்ற இன்றைய நிலையிலாவது நிவர்த்தி செய்யலாமே..??! ஏன் செய்கிறார்கள் இல்லை..????!

மீண்டும் மீண்டும்.. தமிழ் மக்களை வஞ்சிக்கும்.. சிங்கள அரசோடு அரசியல் ரீதியில் முரண்பட்டுக் கொண்டு மக்களின் அரசியல் நலனை கொஞ்சம் என்றாலும் முன்னிறுத்தி நிற்கும் கூட்டமைப்பு மீது மட்டும் குற்றம்சாட்டும் உங்களின் போக்கும்.. காட்டிக்கொடுப்பாளர்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் மக்களை ஏய்த்தது.. மறக்கப்பட்டு மறைக்கப்பட்டதும்.. உங்கள் போன்றவர்கள் போர்த்தி உள்ள போர்வைகள் கிழிந்து தொங்க வழிவகுக்கிறதே தவிர.. மக்கள் விமோசனம் பெறுவதல்ல.. உங்கள் கருத்துக்களின் உண்மையான அக்கறை.. என்பதும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதுரை.பொத்துவில் கனகரத்தினம்,தேவநாயகம்,கருணா,பிள்ளையான் எல்லோரும் அரசாங்கத்துடன் சேர்ந்து இணக்க அரசியல் செய்தும் கிழக்கு மாகாணம் முன்னேறவில்லையா?என்ன கொடுமை சரவணா?

அந்த நாளைத்தான் ஐய்யா கேட்டு கொண்டிருக்கிறோம்.

எப்போ ஐய்யா அந்த நாள் வரும் என்றும் சொல்லுங்கோ ஐய்யா ....

  • தொடங்கியவர்

கூத்தமைப்பு: வேணாம் அழுதிடுவன்

(தேர்தல்கள் வரும்போதுதான் மட்டும் மக்கள் நினைவுக்கு வந்தால் இதுதான் நடக்கும்.)

தேர்தலில் கூட்டமைப்பு தோற்றுவிடும் என்று தேர்தல் முடியும் வரை கருத்து எழுத காத்திருந்தோர், ஒவ்வொரு தமிழனும் கூட்டமைப்புக்கு வாக்களித்ததால் எழுத ஒன்றும் இல்லாமல் மொக்கை எழுதி தமது ஏமாற்றத்தைத்தான் வெளிக்காட்டுகிறார்கள்.

இருந்தாலும் தொடர்ந்து கூட்டமைப்பை மட்டும் வைத்தகண் எடுக்காமல் பார்த்து கண்ணீர்விட்டு கொண்டிருக்காமால் இடை இடை மு.கா பக்கமும் திரும்பி பார்த்து, அது உள்ளே, மகிந்தாவுக்கு முன்னால் போடும் தோப்புகரணங்களையும், வெளியில் வந்து மக்களின் முன்னால் போடும் குத்துக்கரணங்களையும் பார்த்து, கனமான மனத்தை ஆற்றி, இலகுவாகி இனிமையான புன்முறுவல் ஒன்று கூட பூக்கலாமே.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எப்போதும் உண்மையான புரிந்துணர்வு இருந்தது இல்லை இருபகுதியுமே சந்தர்ப்பவாத அரசியல் நோக்குடனையே சில சமயங்களின் கூட்டு வைத்து அரசியல் செய்துள்ளனர் இருந்தபோது சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் காலைவாருவதும் அதன்பின்னர் தமிழர்கள் அணைத்து கொள்வதுமாக இருதாலும் முஸ்லிம்கள் தங்களின் குணத்தை காட்டியே வந்துள்ளனர் இதை புரியாது கூட்டமைப்பு நடந்துகொண்டது இப்போது ஏற்பட்ட இந்தநிலை காலம் கடந்த ஞானம் எனலாம்.

  • தொடங்கியவர்

விளைவை விரைவில் அனுபவிப்பார் ஹக்கீம் - இரா.சம்பந்தன்

[ புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, 01:44 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, சுயநலத்துக்காகவும் சுய லாபத்திற்காகவும் செயற்பட்ட, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்- இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமைக்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு தொடர்பாக, “தமிழ்மிரர்” இணையத்துக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், மக்கள் வழங்கிய ஆணையையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதாசீனம் செய்து சுயநலமாக செயற்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்த பின்னரும், முஸ்லிம் மக்கள் பல விடயங்களை வலியுறுத்தி வந்தனர்.

அந்த மக்களின் ஆணைக்கு மாறாக, விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமும், கட்சியும் சுயநலமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விடயத்தில் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. பல விடயங்களை எதிர்பார்த்துத் தான் நாங்களும் இருந்தோம்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து, தனித்து போட்டியிட்டதால் தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

தமது தனித்துவ கட்சியின் மீது கொண்டிருந்த நம்பிக்கையினால் தான் முஸ்லிம் மக்கள் ஈடுபாட்டுடன் வாக்களித்தனர் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் மறந்துவிடக் கூடாது.

மக்களின் ஆணையைப் புறந்தள்ளி முடிவெடுத்து விட்டு, முஸ்லிம் மக்களின் நலன்கருதியே அவ்வாறு செயற்பட்டதாக ஹக்கீம் கூறியிருக்கிறார்.

இது முஸ்லிம்களின் நலன்கருதிய தீர்மானமல்ல, சுயநலமான தீர்மானமாகவே எங்களுக்குப் படுகிறது.

தங்களுடைய சொந்த தேவைகளுக்காகவும் பதவிகளுக்காகவுமே அவர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

பேரம் பேசும் சக்தி பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அதிகமாக பேசியது.

ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டு அவர்களின் நலனுக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்கள் கிடைத்தன.

எங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காகத் தான் இப்பொழுதும் பொறுமையாகக் காத்திருந்தோம்.

ஆனால், முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறித்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் எதனை வைத்து பேரம் பேசுகிறது என்று புரியவில்லை.

தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற கூட்டான தமிழ் பேசும் மக்களின் அதிகாரங்களுக்காக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் தமிழ்பேசும் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரசுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.

ஆனால், அதனைக்கூட தட்டிக்யொதுக்கி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் ஒருவருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறார் ஹக்கீம்.

இதுதான் அவரது பேரம் பேசும் திறமையா?

கட்சியை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, சுயநலத்துக்காகவும் சுய லாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்.” எனறு அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20120919107009

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மாதிரி பிள்ளையானின் ஆள் என்பதை கண்டுபிடித்த்வீட்டீர்கள்..........

ரனில் நரியன் நரிக்குணத்தால் அழித்து போடுவான் ஆனால் மகிந்த நேர்மயான எதிரி எதையும் நேராகச் சொல்லி தான் செய்வான் அவனை எத்ர்கொள்வது இலகு அவன் வந்தால் போராட்டம் வலும்பெறும்................ இது தான் என் பதில் .

பிள்ளையான் எதுவரைக்கும் துரோகி???????????

நாளைக்கே மகிந்தாவை விட்டு விட்டு வந்தால் ஏற்றுக் கொள்வீரா?

வகை ஒன்றும் இல்லாமல் போனால் மகிந்தா தாழ்பணிதல் வழி என்று உடன் பட இடம் உண்டு. ஆனால் பதிலாக காட்டிக்கொடுப்புவாத்திடமோ அல்ல இந்தியவாத்திடமோ பணியும் முயற்சி மகா மகா முட்டாள்த்தன சிந்தனை!

பிள்ளையான் திருந்திவந்தால்; மாடென்றால் ஆவது எருவுக்கு ஆவது கட்டி வளர்க்கலாம்!

இந்த தொல்லையான் என்ன அரசியல் மாமேதையா?

இல்லை மக்கள் சக்தியின் ஒரு முகமா?

கூலிக்கு தலையைக் கொய்துவா என்றால் தாய் என்றும் பாராது அதை நிறைவேற்றும் ஒரு நாய்தான் எதிரிக்கு பயன்படும் ஒரே தகுதி! அந்தத் தகுதியே எமக்கும் பயன் படும் என்ற தங்கள் சிந்தனையின் வெளிப்பாடு பிள்ளையான் அருளின் பாதிப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் – அதை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

இந்த காங்கிரஸ் என்று பேர் வச்சுத்து எல்லாமே 420 .. போர்ஜரி.. முடிச்செருக்கி .. அப்ப ஒன்று சொல்வது இப்ப ஒன்று செய்றது.. பேரே சரி கிடையாது... இனிமேல் யாரும் இந்த பேரில் கட்சி தொடங்காதீங்கப்பா.. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.