Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியவர்களே உங்கள் ஆலோசனை தேவை..

Featured Replies

இன்றுதான் இந்த பதிவை வாசிக்க நேரம் கிடைத்தது சுபேஸ் ..............இரும்பல்ல இளைஞ்சர் உள்ளம் ..துரும்பல்ல தூக்கியெறிய.............எதையோ கூற வருகிறீர்கள் என்று மட்டும் என்னால் புரிய முடிகிறது.................அதில் ஆரோக்கியமும் இருப்பதாக தெரிகிறது .......இனவாதமும் ,மதவாதமும் எமக்கு தேவையில்லை ...........அதை எம் தேசியமும் செய்யவில்லை ...........சொல்லிவிட்டு ,போதித்துவிட்டு மௌனமாய் இருக்கின்றது.................................................

[size=5]தமிழரின் இன்றைய நிலை மாறும்................மாற்றுவோம் [/size]

[size=5]மாறும் என்ற சொல்லை தவிர உலகில் எல்லாம் மாறும்...............[/size]

[size=5] [/size]

  • Replies 116
  • Views 7.7k
  • Created
  • Last Reply

உலக வெறுப்பை சிங்களத்தை நோக்கி குவியப் பண்ண வேண்டும் என்பதும் தமிழனுக்கு தமிழனே இணையத்தில் அறிவுரை கூறாமல் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும் என்பதும் நல்ல விடயம்.

புத்தனில் வெறுப்பிருந்தாலும், புத்த மதத்தை தீண்டுவதால் இது வெற்றி அளிக்காது. அவனின் மதம் வன்முறையைப் போதிக்கவில்லை. சிங்கள பேரினவாதம் தேவைக்காக அந்த மதத்தை பாவிக்கிறது. கிறிஸ்தவ சிங்களவர்கள் இதைவிட மோசம். டொன் ஸ்டீபன் சேனநாயகா, ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனா (வரலாற்றில் இவர் மொகமட் ஜெயவர்த்தனா) தமிழனுக்கு செய்த அழிவுகள் அதிகம்.

சிங்களப் பேரினவாதத்திற்கு மதம் ஒரு அடையாளம். அதைக் கிளறுவதால் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு உலக எதிர்ப்பை சம்பாதிக்க போவதில்லை.

இலங்கையில் இனி ஒரு போதும் இனக் கலவரமோ மதக் கலவரமோ வருவது மிகக் கடினம். மச்சி, இப்பிடி பப்ளிக்கா எழுதுறது கவனம். இதை கன கண்கள் பார்க்குக்கும் என்பதும் இதால யாழுக்கு பல சட்டச் சிக்கல்கள் வரும் என்பதும் நான் சொல்ல வேண்டியது இல்லை. யாழ் மோகன் அண்ணாவின் சொந்தப் பெயரில் பதியப் பட்டிருந்தால் மத ரீதியான தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக பெரிய அபராதமும் விதித்து ஆளையும் உள்ளுக்க போட்டிடுவாங்கள். இங்கு பல உளவு அமைப்புக்கள் அதியுயர் தொழில் நுட்பம் பாவிக்கிறார்கள். அமெரிக்கன் வல்லரசு, இஸ்ரேலுக்கு முண்டு குடுக்கிறாங்கள். அவங்கள் எங்க, நாங்கள் எங்க? முதலில ஒற்றுமையா என்னத்தை நாங்கள் செய்தம் எண்டு யோசிக்க வேணும்.

தும்பளையான் யாழின் அடிப்பகுதியிலுள்ள இந்த சமாச்சாரத்தை இன்னும் பார்க்கவில்லையோ?

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தும்பளையான் பயமுறுத்தின உடன ஒரு சனமும் இந்த பக்கம் வருதில்ல :D

ஓம் சுண்டல்...கனபேர் கதையளவிலதான் இங்க தமிழ்தேசியம் பேசுறவை...இங்கு வந்து துணிவாக கருத்தெழுதிய அகூதாண்ணா,விசுகண்ணா,தமிழ்சூரியன் அண்ணா போன்ற ஒன்றிரண்டு தமிழ்தேசியத்தை நேசிக்கும் உறவுகளை தவிர மற்றவர்கள் எல்லாம் இதைப் பாத்திட்டு,வாசிச்சிட்டு போயிருப்பார்கள் எழுதாமல்...ஏனெண்டால் தமக்கும் தம் குடும்பத்திற்கும் ஆபத்து வந்துவிடும் என்பதால்...எல்லாம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் பிரச்சினை வராத இடத்திலை தமிழ்தேசியத்தை தள்ளிவச்சுக்கொண்டுதான் இவைகளின் வாய்வீரம்கள்...இந்த விடயத்தில் இங்கு வந்து தம் கருத்துக்களை கூறிய தமிழ் தேசிய வாதிகளைவிட மிதவாதிகளின் எண்ணிக்கை அதிகம்....தப்போ சரீயோ அவர்கள் தங்கள் கருத்துக்களை நேர்மையாக வைத்தார்கள்...தம் கருத்துக்களை நேர்மையாக வெளிப்படையாக வைத்த வைக்க இருக்கும் எல்லா உறவுகளுக்கும் நன்றி..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கப்பா வந்து பயபிடமா எழுதிங்க.... வெளிநாட்டு சட்ட புத்தகங்கள இருக்கிற ஓட்டைக்குள்ளால வெளில வந்திடலாம் இதுகெல்லாம் பயந்திட்டு இருக்கலாமா :D

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்... மனம் தளராதீர்கள்.

தமிழ் பொறுக்கித் தின்னியளுக்கு நாடு, ஒரு கேடா...

எங்காவது செத்துத் துலையட்டும்.

கட்டப் பொம்மனிலிருந்து... ஆனந்த சங்கரி, கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா..

என்னத்தை... கிளிச்சாங்கள், மூதேவிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி தும்ஸ் வெருட்டின உடன ஓடினவங்க தான் யாழ் பக்கமே வரினம் இல்லை எல்லாம் ரகசியமா வந்து பாத்திட்டு ஓடிபோஇனம் :D

  • கருத்துக்கள உறவுகள்

எவன் வெருட்டுறவன், அந்த நாயை... ஒட்டுக் குழுக்கள், ஸ்ரீலங்கா இராணுவத்துடன் ஒட்டி, உறவாடி, கூட்டிக்கொடுத்து, காட்டிக் கொடுத்து செய்யும் வேலைகளை ஒரு தாய்க்குப் பிறந்த வீரமகன் செய்ய மாட்டான்.

சுபேஸ் ,

உங்களின் கருத்து பரிசீலனைக்கே எடுக்க முடியாத ஒன்று. ஆகவே இதில் கருத்து சொல்வதற்கு பலருக்கு ஆர்வம் இருக்காது. மற்றையபடி பயம் என்று எல்லாம் இல்லை.

இங்கே ஏற்கனவே சொல்லப்பட்டது போன்று புத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு "இன்னொஸன்ஸ் ஒவ் முஸ்லீம்ஸ்" போன்று ஒரு படத்தை எடுக்க முடியாது. அரச வாழ்க்கை வாழ்ந்து பின்பு அனைத்தையும் துறந்து அகிம்ஸையை போதித்த ஒருவரைப் பற்றி சீண்டும் விதமாக என்ன படத்தை எடுக்க முடியும்?

சிங்களவர்களை சீண்டி அதன் ஊடாக சில ஆயிரம் தமிழர்களின் உயிர் போனால், தமிழீழம் எல்லாம் கிடைக்காது. கொழும்பில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள தமிழர்களின் பொருளாதாரம்தான் நாசமாகும்.

உலகம் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றால், இலங்கையில் தமிழர் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் மனித அவலம் நடக்க வேண்டும். இலட்சக்கணக்கான உயிர்கள் சில நாட்களுக்குள் போக வேண்டும். ஆனால் அப்படி நடந்துதான் தமிழீழம் கிடைக்கும் என்றால், அது எனக்குத் தேவையில்லை.

வெளிநாட்டில் பாதுகாப்பாக இருந்து கொண்டு "சிங்களவனை சீண்ட வேண்டும், அவன் ஈழத்தில் தமிழர்களைக் கொல்ல வேண்டும், அதனால் தமிழீழம் கிடைக்க வேண்டும்" என்று சிந்திப்பவர்களை எண்ணி வெட்கப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி ஊர்ல toilet பேப்பர் இல்லையாம் அதனால சனத்துக்கு ஊர்ல போய் இருக்க விருப்பம் இல்லையாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சி சொல்லு அங்க பிரச்னை தீர்த்தாலும் நாங்க அங்க போக போறமே? இங்க தாரமாதிரி காசு அங்க தருவாங்களே டா?

மற்றது இங்க இருந்து palakina எங்கட பிள்ளையால் அங்க வர ஒம்மாமே? அதுகள் இங்க pizza burger எண்டு சாபிடதுகள் புட்டும் இடியப்பமும் சாபிடுவினமே?

நாங்கள் எங்கட பிள்ளையளுக்கு தமிழும் சொல்லி கொடுக்காம அதுகளுக்கு வெள்ளையளையும் சீனதியளையும் கட்டிக்கொடுத்து பல் தேசியம் வளக்கிறம் வெளிநாட்டில எங்களுக்கு எதுக்கு தேசியம் சுயநிர்ணயம் எல்லாம் அது அங்க இருக்கிறவைக்கு மட்டும் நாங்கள் அகதியா இருந்து அகதியாவே சாவம் :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு, கடந்த 35 வருசமாய்... புலி தான், பிரச்சினையாயிருந்தது.

இப்ப புலி, இல்லை... உங்களால்.. செய்யக் கூடியதை.. செய்யுங்களேன்....

ஏன்... சும்மா, மற்றவனை சீண்டி விட்டுக் கொண்டு, தமிழில் பற்று மாதிரி... பம்மாத்து விளையாட்டு காட்டுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை முடிஞ்சு நாலு வருஷமும் ஆக போது தமிழனுக்கு ஒரு தீர்வு வாங்கி கொடுக்க முடியல்ல இந்த பன்னாடை தமிழ் அரசியல் வாதிகளால

வடக்கிற்கு ஒரு தமிழ் ஆளுநர கூடா போடா முடியல்ல இந்த கூட்டத்தால

தமிழ் பாராளுமன்ற உருபினர்களும் அரசியல் வாதிகளும் ஒட்டு மொத்தமா கடல்ல போய் விழுந்து போராடனும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கருத்து பரிசீலனைக்கே எடுக்க முடியாத ஒன்று. ஆகவே இதில் கருத்து சொல்வதற்கு பலருக்கு ஆர்வம் இருக்காது. மற்றையபடி பயம் என்று எல்லாம் இல்லை.

இது உங்கள் கருத்து...பரிசீலிக்கவே முடியாது என்று முடிவெடுத்தால நீங்கள் பதில் எழுதவில்லை..ஓகே...ஆனால் இலங்கையில் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கவேண்டும்...என்று எழுதியவர்கள் எமக்கு விடுதலை தேவை என்று எழுதுபவர்கள் ஒருபோராட்டத்தின் மூலம் எமக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்று எழுதுபவர்கள் ஏன் இங்கு வந்து போராட்டம் இதைவிடுத்து வேறு என்ன வழியில் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கலாம்,எமக்கு எப்படி ஒரு தீர்வை கொடுக்கும்படி சிங்களத்தை உலகம் நிர்ப்பந்திக்கும் வகையில் என்ன செய்யலாம் என்று எழுதவில்லை..? ஏன் அவர்களிடம் ஜடியா எதுவுமே இல்லை..?பிரபாகரன் வரவேண்டும் அல்லது பிரபாகரன் மாதிரி யாராவ்து ஒருவர் வந்து செய்யட்டும் நாம சும்மா இணையத்தில் எழுதிவிட்டுக் கிடப்பம் ஏதாவது திட்டங்களைப் பற்றி நாம எழுதப்போன ஊருக்குப் போகேலா பிரச்சினை வரும் என்ற சுய நல சிந்தனைதானே இதற்குபின் மறைந்துகிட

இங்கே ஏற்கனவே சொல்லப்பட்டது போன்று புத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு "இன்னொஸன்ஸ் ஒவ் முஸ்லீம்ஸ்" போன்று ஒரு படத்தை எடுக்க முடியாது. அரச வாழ்க்கை வாழ்ந்து பின்பு அனைத்தையும் துறந்து அகிம்ஸையை போதித்த ஒருவரைப் பற்றி சீண்டும் விதமாக என்ன படத்தை எடுக்க முடியும்?

புத்தமத்தைத்தை பின்பற்றும் சிங்களவர்கள்,புத்ததுறவிகளின் கேவலமான இனவாத நடவடிக்கைகளை எடுக்கலாம்தானே...ஏன் நாங்கள் "இன்னொஸென்ஸ் ஒவ் முஸ்லீம்ஸ்" படத்தை பிரதி பண்ணவேண்டும்..? நாம் எமது சொந்தவிடயங்களை நுழைத்து எடுக்கவேண்டியதுதானே..படம் மட்டும்தான் எடுத்து கலவரத்தை தூண்டவேண்டும் என்று நான் சொல்லவில்லை...வேறுவழிகளிலும் தூண்டலாம்...அவைபற்றியும் ஜடியா கேட்டிருந்தன்...

சிங்களவர்களை சீண்டி அதன் ஊடாக சில ஆயிரம் தமிழர்களின் உயிர் போனால், தமிழீழம் எல்லாம் கிடைக்காது. கொழும்பில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள தமிழர்களின் பொருளாதாரம்தான் நாசமாகும்.

வன்னியில் பலநூறாயிரம் தமிழர்களின் வாழ்வாதாரம்,பொருளாதாரம் சிதையபோர் நடந்து கொண்டிருந்தபோது யாராவது அந்த ஏழைமக்களின் பொருளாதரம்,வாழ்வு சிதைக்கப் படும்போது எதிர்த்து எழுதீனீர்களா;;? போரை ஆதரிக்கும் கட்டுரைகள்தானே எழுதிக்குவிக்கப்பட்டன...உசுப்பேத்தல்கள்தானே நிகழ்ந்தன..இப வன்னி மக்களின் ரேன்..இனி அவர்கள் கஸ்ரப்படமுடியாது...கொழும்பில் இருக்கும் கொழுத்த பணமுதலைகளின் அழிவுக்கு ரத்தக்கண்ணீர் வடிப்பதும் வன்னி மக்களின் அழிவில் உசுப்பேத்தல் செய்ததும் சுத்த சுயநலம்...எமக்கு தீர்வு தேவை...

அதன்மூலம் தமிழீழம் கிடைக்காவிட்டாலும் எமக்கு தீர்வொன்று கிடைத்தால் மகிழ்ச்சியே..

உலகம் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றால், இலங்கையில் தமிழர் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் மனித அவலம் நடக்க வேண்டும். இலட்சக்கணக்கான உயிர்கள் சில நாட்களுக்குள் போக வேண்டும். ஆனால் அப்படி நடந்துதான் தமிழீழம் கிடைக்கும் என்றால், அது எனக்குத் தேவையில்லை.

இந்த நேர்மை போரின்போதும் அதை ஆதரித்தவர்களுக்கு இருந்திருக்கவேண்டும்..உங்களுக்கு அந்த நேர்மை அப்பொழுதும் இருந்திருந்தால் பாராட்டுகிறேன்..இதை எழுதும் தார்மீக உங்களுக்கு இருக்கிறது..இல்லை என்றால் இல்லை...

வெளிநாட்டில் பாதுகாப்பாக இருந்து கொண்டு "சிங்களவனை சீண்ட வேண்டும், அவன் ஈழத்தில் தமிழர்களைக் கொல்ல வேண்டும், அதனால் தமிழீழம் கிடைக்க வேண்டும்" என்று சிந்திப்பவர்களை எண்ணி வெட்கப்படுகிறேன்.

நானும் வெட்கப்படுகிறேன்... :) அதையேதான் நாங்களும் கேக்கிறம்......இவ்வளவுகாலமும் வெளிநாட்டில் இருந்து கொண்டு போருக்கு ஆதரவுகொடுத்தது சரியென்றால் நாங்கள் சீண்ட நினைப்பதும் சரியே...ஆனால் நாங்கள் மனசாட்சி இல்லாமல் இருக்க மாட்டம்....முன்னர் செய்த தப்பை செய்யமாட்டம்...இனிமேல் அப்பிடி ஒண்டு நடந்தால் நானும் சுண்டலும் ஊரிலதான் நிப்பம் எண்டதையும் சொல்லிக்கொள்ளுறம்...

மச்சி ஊர்ல toilet பேப்பர் இல்லையாம் அதனால சனத்துக்கு ஊர்ல போய் இருக்க விருப்பம் இல்லையாம் :D

ஏன் சுண்டல் உதயன் பேப்பர் ரொம்ப தடிப்பாய் இருக்குமாமோ..? :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உருப்படியான திட்டமும் கைல இல்லை பேசி பேசியே தமிழ் சனத்த பேக்காடுதுகள்...,, எல்லாம் வயசு போன கூட்டங்கள்..... முஸ்லிம் காங்கிரச பாத்தாவது பழகுங்க எப்பிடி அரசியல் செய்றதெண்டு தாக்கி மாமாவால தனித்து தேர்தலில போட்டி போடா முடியுமா? வேற்றில சின்னத்தில தான் போட்டி போடலாம் ஆனா Muslim காங்கிரஸ் தங்களால முடியும் எண்டு செய்து காட்டி இருக்கான் உங்களுக்கு என்னத்துக்கு அரசியல்

சுபேஸ்;,

போர் நடந்து கொண்டிருந்த பொழுது இருந்த நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கின்றது. அன்றைக்கு நாங்கள் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கையில் போரை நடத்தினோம்.

இன்றைக்கு இருப்பதை தக்க வைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எம்மிடம் மிச்சம் உள்ள நிலத்தையோ, பொருளாதார வளத்தையோ, உயிர்களையோ இழக்காது போராடுகின்ற வழி வகைகளைப் பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சண்டை முடிஞ்சு நாலு வருஷமும் ஆக போது தமிழனுக்கு ஒரு தீர்வு வாங்கி கொடுக்க முடியல்ல இந்த பன்னாடை தமிழ் அரசியல் வாதிகளால

வடக்கிற்கு ஒரு தமிழ் ஆளுநர கூடா போடா முடியல்ல இந்த கூட்டத்தால

தமிழ் பாராளுமன்ற உருபினர்களும் அரசியல் வாதிகளும் ஒட்டு மொத்தமா கடல்ல போய் விழுந்து போராடனும்

ஏன் சுண்டல் அவங்கபொண்டாட்டி புள்ளைங்க ஊரிலா இருக்கினம் தீர்வுக்கு போராட...?எல்லாற்றை மனிசி பிள்ளைங்களையும் அள்ளிக்கொண்டுபோய் வன்னியில கட்டாயக் கொட்டில்போட்டு நிவாரணக்காசிலை வாழவிடவேணும்..அப்பதான் தீர்வுக்கு வேட்டி உரிஞ்சுவிழ வெளிநாடுகளுக்கு ஓடுவாங்க நம்ம அரசியல்வாதீங்க...

  • கருத்துக்கள உறவுகள்

கரெக்டா சொன்னே மச்சி பல்லக்காடிட்டு அரசாங்க விருந்துகளுக்கு போக தெரிது ஒரு ரோடு போட கூட முடியல்ல இந்த சம்மந்தன் கூட்டத்தால

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி தும்ஸ் வெருட்டின உடன ஓடினவங்க தான் யாழ் பக்கமே வரினம் இல்லை எல்லாம் ரகசியமா வந்து பாத்திட்டு ஓடிபோஇனம் :D

நான் இங்கு இரு இடங்கு இரு இடங்களில் இருவிதமான கருத்தை வைத்தேன்.

முதலாவது உங்களைப்போன்ற இளைஞர்கள்தான் இனி போராட்டத்தை நகர்த்தணும் என்ற ரீதியில் பின்னால் இருப்பேன் என்று. இதற்கு காரணம் இருக்கு.

நான் என்றுமே புலி. அவர்களது முழுவகை நடவடிக்கைகளையும் ஆதரித்தவன். ஆதரிப்பவன். காரணம் சிங்களத்தை புரிந்து கொண்டமை. சிங்களம் எதையும் தானாகத்தராது என்று அனுபவத்தின் ஊடாகவும் வரலாற்றினூடாகவும் உணர்ந்ததால் வந்த முடிவு இது. இன்றல்ல என்றும் அது தான் எனது முடிவு. சிலரது சுயநலக்கருத்துக்களுக்காக வரலாற்றுப்பாடத்தை மாற்றமுடியாது.

அடுத்த கருத்து.

அங்குள்ளவர்களை இனக்கலவரம் மூலம் பலி கொடுப்பதை வரவேற்கவில்லை என்ற கருத்து.

இதுவும் புலியாக இருந்து வந்ததால் வந்த கருத்துத்தான். நாம் தோற்றுவிட்டோம்.

தலைவர் பல இடங்களில் சொல்லியிருந்தார். 2009இல் நாம் வென்றிருப்போம் அல்லது இல்லாதிருப்போம் என்று.

இந்த முடிவுக்கு காரணம் மக்களை இனியும் பலி கொடுக்கவோ சுமைகளையும் இழப்புக்களையும் கொடுக்கவோ முடியாது. அவர்களாலும் இனி ஏலாது என்பதாகும். எனவே அதை நான் பின்பற்றுகின்றேன். மதிக்கின்றேன்.

அதிலும் புலம் பெயர் நாட்டிலிருந்து இதை உத்தரவிட மனம் இடம் தரவில்லை.

அதே நேரம் தாயகத்திலிருந்து இப்படியொரு அழைப்பு வருமாயின் அதற்கும் முதலாவது ஆதரவு எனதாகவே இருக்கும்.

நீங்கள் தொடருங்கள். தமிழருக்கு என்ன தேவை. செய்யணும். விவாதிப்போம். நல்லதைக்கண்டறிந்து செயற்படுத்துவோம். நிச்சயம் உங்களோடு நான் நிற்பேன்.

பயம் என்ற சொல் எனக்குப்பிடிக்காதது.

[size=4]பெரியவர்களின் மௌனம் அங்கே கெரில்லா பாணி அறிவுரைகள் இந்த திரியில் :D[/size]

[size=4]போப்பிலவு மக்கள் நிர்க்கதியில் - மௌனம் [/size][size=1]

[size=4]உங்களுக்கென்ன நீங்கள் பாதுகாப்பாக இங்கே இருந்து கொண்டு .. - அறிவுரை [/size][/size]

[size=1]

[size=4]எமது நிலைமைகளை புலம்பெயர்மக்கள் தான் எடுத்து சொல்லவேண்டும் - மௌனம் [/size][/size][size=1]

[size=4]வெளிநாடுகளில் குரல் கொடுப்பவன் எல்லோரும் கள்ளர்கள் - புத்தகமாக எழுதலாம் நேரம் இல்லை [/size][/size]

[size=1]

[size=4]தாயகம் எங்கும் புத்த சின்னங்கள் - செய்தி [/size][/size][size=1]

[size=4]எல்லா மதமும் சம்மதம் - பெரிய மனப்பான்மை [/size][/size]

[size=1]

[size=4]அமெரிக்கரின் இஸ்லாம் படம், உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்... நாம் என்ன செய்யலாம் ? [/size][/size][size=1]

[size=4]சிறு பிள்ளை வேளாண்மை வீடு போய் சேராது - முற்றும், சுபம் ![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்.. இதுக்கெல்லாம் ஆலோசனை கேட்கக் கூடாது.. கேட்டால் அட்வைஸ்தான் வரும்.. :D பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் சிந்திக்கக்கூடியவர்கள்.. உங்களுக்கு சரியெனப் படுவதைச் செய்யவேண்டியதுதான்.. :rolleyes:

சுபேஸ் ,நாங்கள் எவ்வளவு திறமாக விளையாடினாலும் மத்தியஸ்தர்கள் அவர்கள் பக்கம் நிற்கின்றார்கள் .அப்ப தொடர்ந்தும் அவன் தான் வெல்ல போகின்றான் .

ஒண்டில மத்தியஸ்தனை எங்கட பக்கம் கொண்டுவரவேண்டும் அல்லது அவனை நடுநிலையானவனாக ஆவது இருக்க சொல்லவேண்டும் .நாங்கள் அழாப்பி ஆட்டம் ஆடிப்போட்டு வெற்றியை எதிர்பார்க்க முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்.. இதுக்கெல்லாம் ஆலோசனை கேட்கக் கூடாது.. கேட்டால் அட்வைஸ்தான் வரும்.. :D பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் சிந்திக்கக்கூடியவர்கள்.. உங்களுக்கு சரியெனப் படுவதைச் செய்யவேண்டியதுதான்.. :rolleyes:

ஆம்

அடுத்த தமிழரின் வழி காட்டி

உங்களுக்குள் தான் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்.. இதுக்கெல்லாம் ஆலோசனை கேட்கக் கூடாது.. கேட்டால் அட்வைஸ்தான் வரும்.. :D பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் சிந்திக்கக்கூடியவர்கள்.. உங்களுக்கு சரியெனப் படுவதைச் செய்யவேண்டியதுதான்.. :rolleyes:

நல்ல, கருத்து. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:unsure::o

Edited by ஜீவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.