Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்!

Featured Replies

ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையாகவுள்ள தமிழீழத்தினை கைவிடுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில சர்வதேச நாடுகள் கொடுக்கப்பட்ட அழுத்தம் தோல்வியில் முடிந்துள்ளது.

இலங்கைத் தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாணும் பொருட்டு தமிழீழம் எனும் நிலைப்பாட்டினை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வாருங்கள் இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் குறித்த இவ்விரு நாடுகளுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அழுத்தத்தினை கொடுத்ததாக தெரியவருகின்றது.

தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கான இறுதித்தீர்வாக அமையுமென்பதனை குறித்த நாடுகளுக்கு உறுதிபடத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு சுதந்திர தமிழீழத்தினை வென்றெடுப்பதற்கான விடுதலைப்பாதையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர்களின் பேராதரவுடன் செல்லுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தனது உத்தியோகபூர்வ அரச அமர்வுகளில் தமிழீழத் தேசியக் கொடியினை வெளிக்கொண்டுள்ளதோடு தமிழர் தாயகத்தில் அன்று நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசின் தொடர்சியாக உருப்பெற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்க சனநாயக வழிமுறையூடாக சர்வதேச அங்கீகாரத்தினை கோரியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=67569&category=TamilNews&language=tamil#.UGc2UPK46Ks.facebook

  • Replies 167
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

]தென்னாபிரிக்கா மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் உலகத் தமிழர் பேரவையுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் குறித்த இவ்விரு நாடுகளுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அழுத்தத்தினை கொடுத்ததாக தெரியவருகின்றது.

நம்பக்கூடிய செய்தியாக தெரியவில்லை.

இது மிகைப்படுத்தப்பட்ட செய்தியாகவே தெரிகிறது. வெளிநாட்டு புத்திஜீவிகள், ராஜதந்திரிகளுடன் நடக்கின்ற கலந்துரையாடல்களில் தமிழீழத்திற்கு மாற்று யோசனைகள் பற்றி பேசுவது வழக்கம்தான்.

புலிகள் பலமாக இருந்த காலத்தில் நடந்த இது போன்ற சந்திப்புக்களில் நாங்களும் உதார் விட்டுக் கொண்டு, தமிழீழமே இறுதி முடிவு என்று கொள்கைக் குன்றுகளாக நிற்போம்.

இப்பொழுது மகாண சபைக்கான அதிகாரங்களுக்கு கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.

எந்த நாடும் இன்றைக்கு தமிழர்களிடம் தமிழீழத்தை கைவிடும்படி அழுத்தத்தை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை.

செய்தின் தோற்றுவாய் எதுவாக இருக்கும்?

சபேசன்,

தமீழீழம் என்னும் தமிழரின் அரசியல் அபிலாசை இராணுவ ரீதியாக மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதனை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கும் எத்தனம் பல்வேறு முனைகளில் பல்வேறு சக்திகளால் முன்னெடுக்கப் படுகிறது.இது பல்வேறு அமைக்களில் உள்ள நபர்களை தமது ஆளுமைக்குள் கொண்டு வருதல் என்னும் பல்வேறு முயற்ச்சிகள் புலத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது பல்வேறு அமைக்குள்ளும் அன்றாடம் நடை பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.இதனை பலரும் பல்வேறு தருணங்களில் முறையைட்டுத்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

[size=4]"கைவிடுங்கள் என கேட்கும்பொழுது" ஏன் கைவிட வேண்டும்? என்ன மாற்றீடு தரப்படும்? போன்ற பல தரப்பட்ட கேள்விகள் அலசப்படுவதும் நன்மையே. [/size]

எமது போராட்டம் இராணுவரீதியான போராட்டமாகவே இருந்தது. மக்கள் போராட்டம் என்பது எல்லாம் நாம் சும்மா எழுதுவது. மக்கள்மயப்படுத்தப்படுவதே அரசியல்ரீதியான போராட்டம்.

இராணுவரீதியான தோல்வியோடு தமிழீழம் என்பதும் பல தமிழர்களின் குறிக்கொளில் இருந்து மறைந்து விட்டது. இன்றைக்கு பெரும்பாலான தமிழர்களிடம் தமிழீழம் பற்றி வெறும் "ஆசை" மட்டுமே மிச்சம் இருக்கிறது. கருணாநிதி ஒரு காலத்தில் சொன்னது போன்று "கிடைத்தால் மகிழ்ச்சி". அவ்வளவுதான்.

இது தாங்கள் இன்னும் உயிரோட இருக்கின்றம் என்று நா.க .அரசு காட்டவிட்ட அறிக்கை.

சான்ஸ் போன நடிககைகள் கூட அடிக்கடி இப்படி அறிக்கைகள் விடுவார்கள்

[size=4]எந்த ஒரு இனத்திற்கும் ஐ.நா. சாசனப்படி 'சுயநிர்ணய உரிமை' உள்ளது. எமது இனம் அதற்குரிய சகல அம்சங்களையும் கொண்டுள்ளது.

இரண்டையும் இணைப்பது எம்மால் சாத்தியமாக்கப்படல் வேண்டும். [/size]

எமது போராட்டம் இராணுவரீதியான போராட்டமாகவே இருந்தது. மக்கள் போராட்டம் என்பது எல்லாம் நாம் சும்மா எழுதுவது. மக்கள்மயப்படுத்தப்படுவதே அரசியல்ரீதியான போராட்டம்.

இராணுவரீதியான தோல்வியோடு தமிழீழம் என்பதும் பல தமிழர்களின் குறிக்கொளில் இருந்து மறைந்து விட்டது. இன்றைக்கு பெரும்பாலான தமிழர்களிடம் தமிழீழம் பற்றி வெறும் "ஆசை" மட்டுமே மிச்சம் இருக்கிறது. கருணாநிதி ஒரு காலத்தில் சொன்னது போன்று "கிடைத்தால் மகிழ்ச்சி". அவ்வளவுதான்.

சிலருக்கு ஆசை மட்டுமே இருக்கலாம், அவர்கள் பேசாமல் வீட்டில் இருந்து கனவு காண்பார்கள்.ஆசையை செயலில் காட்ட சிலரால் அமைக்கப்பட்ட நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் உங்களைப் போல `தோல்வி` மனப்பான்மையில் அவ்வாரான அமைப்புக்களைக் கட்டவும் இல்லை, செயற்படவும் இல்லை. அதி தீவிரமான தோல்வி மனப் பான்மை உங்களைப் பீடித்திருக்கிறது. இந்த அரசுகளின் இலக்கு தீவிரமாக இயங்குபவர்களும் அவர்களின் அமைப்புக்க்குளும் மட்டுமே. உங்களைப் போன்ரவர்கள் தோல்வி கண்டவர்கள், உங்களிடம் உண்மையில் பேரம் பேச ஒன்றும் இல்லை.

ஏனினில் ஏற்கனவே இத்தகைய அரசியற் போக்குடையோர் பலரை தமிழ்த்தேசிய விடுதலைப் போர் கண்டுள்ளது.

தமிழருக்கு இவர்கள் கொடுப்பதானால் ஏற்கனவே சமர்சம் செய்தவர்களைக் கூப்பிட்டுக் கொடுக்கலாம் தானே, ஏன் நாடு கடந்த அரசு, உலகத் தமிழர் பேரவை என நாடிச் செல்ல வேண்டும்?

இன்று புலம் பெயர் அரசியலில் எந்த அமைப்புக்கள் தொடர்ச்சியாக சர்வதேச விசாரணையைக் கோரி வருகின்றனவோ அவற்றை எல்லாம் குறி வைத்துத் தான் இந்த நகர்வுகள் இடம் பெறுகின்றன.

உலகத் தமிழர் பேரவையில் சிலர் தடம் பிரண்ட போது, பலரது செயற்பாட்டின் விளைவாக நிகழ இருந்த சதி முறையடிக்கப்பட்டது.அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் எதிர்பார்க்கலாம். நாம் தொடர்ச்சியாகச் செயற்படுவோம்.

தோல்வி கண்டவர்கள் எதனையும் செய்யப் போவதில்லை. வெல்ல நினைப்பவர்களாலேயே எதைனையும் செய்ய முடியும்.தோல்வியின் முதற்படி வெல்ல முடியாது என்னும் மன நிலையே. இதனைப் பரப்பாதீர்கள்.

எமது போராட்டம் இராணுவரீதியான போராட்டமாகவே இருந்தது. மக்கள் போராட்டம் என்பது எல்லாம் நாம் சும்மா எழுதுவது. மக்கள்மயப்படுத்தப்படுவதே அரசியல்ரீதியான போராட்டம்.

இராணுவரீதியான தோல்வியோடு தமிழீழம் என்பதும் பல தமிழர்களின் குறிக்கொளில் இருந்து மறைந்து விட்டது. இன்றைக்கு பெரும்பாலான தமிழர்களிடம் தமிழீழம் பற்றி வெறும் "ஆசை" மட்டுமே மிச்சம் இருக்கிறது. கருணாநிதி ஒரு காலத்தில் சொன்னது போன்று "கிடைத்தால் மகிழ்ச்சி". அவ்வளவுதான்.

[size=4]ஒரு நாள் சாகத்தான் போகின்றோம் என்பதற்காக எமது ஆசைகளை என்ன பூட்டியா வைத்திருக்கின்றோம்? [/size]

[size=4]மக்கள் போராட்ட துடிப்பு நிறையவே உள்ளது, ஆனால் அது இராணுவ ஆட்சியால் அடக்கி வைக்கப்பட்டுள்ளது. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டம் இராணுவரீதியான போராட்டமாகவே இருந்தது. மக்கள் போராட்டம் என்பது எல்லாம் நாம் சும்மா எழுதுவது. மக்கள்மயப்படுத்தப்படுவதே அரசியல்ரீதியான போராட்டம்.

இராணுவரீதியான தோல்வியோடு தமிழீழம் என்பதும் பல தமிழர்களின் குறிக்கொளில் இருந்து மறைந்து விட்டது. இன்றைக்கு பெரும்பாலான தமிழர்களிடம் தமிழீழம் பற்றி வெறும் "ஆசை" மட்டுமே மிச்சம் இருக்கிறது. கருணாநிதி ஒரு காலத்தில் சொன்னது போன்று "கிடைத்தால் மகிழ்ச்சி". அவ்வளவுதான்.

மக்கள்மயப்படுத்தப்பட்ட போராட்டம் அல்ல எம்முடையது என்பது சரியான தரவு அல்ல..!

எந்த ஒரு விடயத்திலுமே நூறுவீதமான பங்களிப்பு இருக்கமாட்டாது என்பது புள்ளியியலில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. வியாபாரத்தில் 80/20 முறையும் இதை ஒத்ததே..

ஒரு நிறுவனத்தின் இலாபத்திற்கு உழைப்பவர்கள் அதில் 20வீதமான வேலையாட்கள் மட்டுமே.. கிட்டத்தட்ட இன்னொரு 20 வீதம் நட்டம் விளைவிப்பார்கள்.. அதுபோல எமது போராட்டத்திற்கும் நிச்சயம் 20 வீத ஆதரவு இருந்தது.. 20 வீதம் எதிர்ப்பும் இருந்தது.. மீதி உள்ளவர்கள் நிச்சயம் எதிர்த்திருக்க மாட்டார்கள்.. இது புள்ளியியல்.. :D

ஆகவே எமது போராட்டமும் ஆயுதப் போர் என்கிற கட்டத்தைத் தாண்டி இப்போது அரசியல் போரில் நின்றுகொண்டிருக்கிறது.. இதற்கும் 80/20 முறைமை வேலைசெய்யும்.. :rolleyes:

ஒரு சிறிய இனம் தனது சக்திக்கு அப்பாற்பட்ட மிகப் பெரும் சக்திகளுடன் மோதி இருக்கிறது. அதனை ஒரு சில தனி நபர்கள் தான் செய்தனர் என்பது நம்பும் படியான கருத்தா சபேசன்? போராட்டம் மக்கள் மயப்பட்டே இருந்தது. எல்லோரும் வெல்வோம் என்று நினைத்துத் தான் புலிகளுடன் இடம் பெயர்ந்தனர். அந்த்த மக்கள் நினைதிருந்த்தால் என்றோ புலிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்திருக்க முடியும்.புலிகளிடம் ரவைகள் இல்லாத போதும், மூன்று இலட்ச்சம் சனமும் இத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டும் புலிகளுடனெயே ஒரு சிறிய நிலப்பரப்புக்ககுள் இருந்தனர். ஏன் என்று யோசித்துப் பார்த்தீர்களா?

நான் அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன், புலிகள் விட்ட தவறு சர்வதேச அங்கீகாரம் என்னும் மாய மானைத் தேடி அழிந்து போனதே.

பலம் பொருந்திய எதிரிகளுக்கு கால அவகாசாத்தைக் கொடுத்து , சிறிலங்கா அரசைப் பலப்படுத்த அவர்களுக்கு அவகாசம் கொடுத்தது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர்.. அப்போது (2000 ஆம் ஆண்டு) ஆள் பற்றாக்குறையால் கிளாலியை கைப்பற்றமுடியவில்லை (ஆமிக்காரன் ஓடிவிட்ட பிறகும்) என்று பால்ராஜ் அண்ணா ஒரு செவ்வியில் சொல்லியிருந்தார்.. இதுபோல பல உள்விடயங்கள் இருந்திருக்கலாம்..

எந்த இனத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையினரே ஆயுதம் ஏந்துவர்.இது கியூபப் புரட்சி ஆகட்டும் இன்று நடைபெறும் போராட்டங்கள் ஆகட்டும்.உலகில் எங்கும் நூறு சதவீத மக்களும் ஆயுதம் தரித்தது கிடையாது. ஆனால் எமது மக்கள் தமது சக்திகளுக்கு மீறாக போராட்டத்துக்கு உதவி செய்தனர். சர்வதேச பூகோள அரசியல் நகர்வுகள் இராணுவ வலிமை பற்றிய சரியான ஆய்வுகள் இன்றி, கால அவகாசம் கொடுத்தது எல்லாம் இப்போது தவறுகளாக இருக்கலாம்.அதற்காக மக்கள் போராடவில்லை என்று சொல்ல முடியாது.

குறிப்பிட்ட வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் உலகில் எந்தப் போராட்டங்களிலும் பங்கு பற்றுவதில்லை. இழப்பதற்க்கு எதுவும் அற்றவர்கள் போராடுவதைத் தவிர வேறு வழி அற்ற மக்கள் இவர்கள் தான் உலகில் போராடி இருக்கிறார்கள்.

மக்கள் போராட்டம் பற்றிக் கதைக்கலாம் ஆனால் அதனை நிகழ்த்தக் கூடியவர்கள் போராடும் மக்களுடன் செயற்படுபவர்கள் மட்டுமே. மக்களில் எல்லா வர்க்கத்தினரும் போராடுவர் என்பது உலகில் எங்கேயும் நிகழ்ந்திராத அதிசயம்.

இது தாங்கள் இன்னும் உயிரோட இருக்கின்றம் என்று நா.க .அரசு காட்டவிட்ட அறிக்கை.

சான்ஸ் போன நடிககைகள் கூட அடிக்கடி இப்படி அறிக்கைகள் விடுவார்கள்

யாழிலும் சில பழைய நடிகைகளின் அறிக்கைகளுக்கு மவுசு குறைஞ்சு போச்சு. பிரபல நாட்களிலும் அவர்களின் படங்கள் சக்கை போடு போட்டதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களிற்கு என்ன அருகதை உண்டு தமிழ் ஈழக்கோரிக்கையை கை விடும்படி கேட்க்க இது எமக்கான பிரச்சனை இதில் முடிவெடுக்கும் முழு உரிமை தமிழீழ மக்களுக்கே உண்டு இதில் மற்றவர்களின் அழுத்தங்களால் தமிழ் ஈழக்கோரிகையை கைவிட்டால் நாடுகடந்த தமிழீழ அரசும் மக்களால் நிராகரிக்கும் நிலை ஏற்படும் ஆகவே நாடுகடந்த தமிழீழ அரசு இப்படியான அழுத்தங்களிற்கு அடிபணியாது இருக்கவேண்டும்.

எமது போராட்டம் இராணுவரீதியான போராட்டமாகவே இருந்தது. மக்கள் போராட்டம் என்பது எல்லாம் நாம் சும்மா எழுதுவது. மக்கள்மயப்படுத்தப்படுவதே அரசியல்ரீதியான போராட்டம்.

இராணுவரீதியான தோல்வியோடு தமிழீழம் என்பதும் பல தமிழர்களின் குறிக்கொளில் இருந்து மறைந்து விட்டது. இன்றைக்கு பெரும்பாலான தமிழர்களிடம் தமிழீழம் பற்றி வெறும் "ஆசை" மட்டுமே மிச்சம் இருக்கிறது. கருணாநிதி ஒரு காலத்தில் சொன்னது போன்று "கிடைத்தால் மகிழ்ச்சி". அவ்வளவுதான்.

போராட்டம் அகிம்சை வழி அரசியல், இராணுவ, ராஜதந்திர வழிகளில் வந்திருக்கு. தமிழரசு கட்சி "குண்டான் தடிக்கும் அஞ்சமாட்டோம் " என்று போராடியிருக்கு.

மக்கள்மயப்படுத்தப்படுவதே அரசியல்ரீதியான போராட்டம்.
ஆயுத காலத்தில் இது இருப்பதில்லை. நமது முதல் 30 வருடம் இப்படித்தான் கழிந்தது. மக்கள் எப்போதும் தமது பங்காக தமிழரசுகட்சிக்கும் கூட்டணியிக்கும் முழு ஆதரவு தந்திருக்கிரார்கள். சிரியா, லிபியா எங்குமே புரட்சி ஆயுதக்குழுக்களிடம் தான் இருந்திருக்கு. வங்காளதேசம் இரண்டும் கலந்தது.

Edited by மல்லையூரான்

எல்லோரும் ஆயுதம் தூக்குவது அல்ல மக்கள் போராட்டம் என்பது. சிலர் ஆயதம் ஏந்த மற்றவர்கள் அவர்களுக்கு பக்க பலமாக நின்றாலே போதும், அதை மக்கள் போராட்டம் என்று சொல்லலாம்.

ஆனால் வன்னியில் பெரும் மனித அவலம் நடந்து கொண்டிருக்க, அதிலேயிருந்த சில பத்து மைல்கள் தள்ளி நல்லூரில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. கடைசியில் முள்ளிவாய்க்காலின் போதும் கூட யாழ்ப்பாணத்திலோ, மட்டக்களப்பிலோ மக்கள் வீதிக்கு வரவில்லை.

இராணுவ அச்சுறத்தல் என்று எல்லாம் பேசாதீர்கள். பாலஸ்தீனத்திலும் இராணுவ அச்சுறுத்தல் இருக்கின்றது. ஆனால் பெரியவரில் இருந்து சிறியவர் வரை கற்களைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு இறங்கி விடுவார்கள். அதை உலகமும் மக்கள் போராட்டம் என்றுதான் சொல்கின்றது.

தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தமக்கு வலிக்காத முறையிலேயே போராடுவதற்கு தயாரானவர்கள்.

நிச்சயமாக இவர்களக்கு தமிழீழம் பற்றிய ஆசை இருக்கிறது. இந்த ஆசை ஒரு நூறு ஆண்டுகள் கழித்து தமிழீழத்தை உருவாக்கித் தரக்கூடும்.

நான் நூறு ஆண்டுகள் கழித்து வரக் கூடிய தமிழீழம் பற்றியே சிந்திக்கிறேன். அது அமைவதற்கான நிலத்தையும் மக்கள் கூட்டத்தையும் தக்க வைப்பது எப்படி என்றே சிந்திக்கிறேன்.

Edited by சபேசன்

அதுதான் உண்மை, அன்று மக்கள் யாழ்ப்பாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ போராட்டங்கள் நடத்தியிருந்தால் போராட்டத்தின் நிலை மாறி இருக்கும்.

[size=4]எல்லோரும் ஆயுதம் தூக்குவது அல்ல மக்கள் போராட்டம் என்பது[/size][size=4]. சிலர் ஆயதம் ஏந்த மற்றவர்கள் அவர்களுக்கு பக்க பலமாக நின்றாலே போதும், அதை மக்கள் போராட்டம் என்று சொல்லலாம்.[/size]

[size=4]ஆனால் வன்னியில் பெரும் மனித அவலம் நடந்து கொண்டிருக்க, அதிலேயிருந்த சில பத்து மைல்கள் தள்ளி நல்லூரில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது[/size][size=4]. கடைசியில் முள்ளிவாய்க்காலின் போதும் கூட யாழ்ப்பாணத்திலோ, மட்டக்களப்பிலோ மக்கள் வீதிக்கு வரவில்லை.[/size]

இதன் கருத்து எழுத மட்டும்தான் முடியும். யோசிக்க முடிவதில்லை என்பதாகும். முன்னுக்கு பின் முரணாக எழுதியிருப்பதெல்லாம் இதையும் விட குப்பை.

இராணுவ அச்சுறத்தல் என்று எல்லாம் பேசாதீர்கள். பாலஸ்தீனத்திலும் இராணுவ அச்சுறுத்தல் இருக்கின்றது. ஆனால் பெரியவரில் இருந்து சிறியவர் வரை கற்களைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு இறங்கி விடுவார்கள். அதை உலகமும் மக்கள் போராட்டம் என்றுதான் சொல்கின்றது.

பலஸ்தீனில் இஸ்ரேல் சுடுவது ரப்பர் குண்டுகளால். இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் வன்னியில் பாவித்தது கிளஸ்டர் குண்டுகள்.

பலஸ்தீன் என்று பெயர் தெரிந்த சிறுவர் வரைக்கும் இப்படி மட்டரகமாக எழுதமாட்டார்கள். ஐ.நா வரையிலும் ஏற்கப்பட்டிருக்கும் பலஸ்தீன் தமக்கு என்ன நெத்தினியாகு என்ன செய்கிறார் என்பதை ஐ.நா.வில் வந்து கூறிவிட்டு போகிறார்கள். இங்கு சொல்லும் போராடத்தை ஆரம்பித்து வைத்த அரபாத் நோபல் பரிசு வாங்கத்தக்க சமாதன வாதியாக உலகம் கருதுகிறது. சம்பந்தர் ஐ.நா பிரேரணைக்கு போக்கக் கூடாது; ஏன் எனில் அவரை பயங்கரவாத இயக்கமான புலிகளின் அடையாளமாக உலகம் காண்கிறது என்று யாழில் செயபாலன் விவாதித்த போது அதற்கு யாழில் ஆதரவு அழித்தவர்கள் பலர் யாழில் இருக்கிறார்கள். அவ்வளவு பயங்கரமாகத்தான் தமிழர்கள் கருதப்பட்டார்கள். இதை செய்பவர்கள் கதிர்காமர் போன்ற துரோகிகளே.

ஆனால் வன்னியில் பெரும் மனித அவலம் நடந்து கொண்டிருக்க, அதிலேயிருந்த சில பத்து மைல்கள் தள்ளி நல்லூரில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. கடைசியில் முள்ளிவாய்க்காலின் போதும் கூட யாழ்ப்பாணத்திலோ, மட்டக்களப்பிலோ மக்கள் வீதிக்கு வரவில்லை. ....[size=4]இராணுவ அச்சுறத்தல் என்று எல்லாம் பேசாதீர்கள். பாலஸ்தீனத்திலும் இராணுவ அச்சுறுத்தல் இருக்கின்றது.[/size]

கேள்விகளை மட்டரகமாக கேட்பதால் ஒரு பலனுமில்லை. இதற்கு சில கேள்விகளை தமக்குள்தான் கேட்டுப்பார்த்தால் பதில் வரும்.

நாம் ஏன் போராட்டம் பற்றி கதைக்கிறோம்? இராணுவ அடக்குமுறை என்று ஒன்று இருக்கா? அது எப்படி எட்டப்படுகிறது? அது எங்கே வெற்றி அளிக்கிறது. ஏன் தமிழர் 1956,1977, 1981, 1983.. ல் திருப்பி அடிக்க இல்லை? ஏன் 1961 இல் சத்தியாக்கிரகத்தை கைவிட்டார்கள்? ஏன் குடும்பி மலையில் அடிக்கும் போது வன்னியில் ஆயுதங்களுடன் இருந்த புலிகள் திரும்ப அடிக்கவில்லை? புலிகள், வன்னியில் அவலம் நடக்கும் போது ஏன் யாழ்ப்பாணத்தில், மட்டக்களப்பில் நிலை கொண்டிருக்கவில்லை?

பலஸ்தீனை சுற்றியிருக்கும் நாடுகள் யாவை? 1956, 1967 ல் நடந்தவை என்ன? இன்று சிரியாவில் ஏன் கலவரம் தூண்டப்பட்டிருக்கு? லெபனான் எங்கே? வன்னியில் குண்டுகள் போட்டமாதிரி கசா, வெஸ்ட் பாங்கில் குண்டு போட்டு 140,000 பலஸ்தீனியர்களை ஒருதடவையில் அழிக்க இஸ்ரேலால் முடியுமா?ஏன் மெனிக் பாம் அகதிகள் காடுகளுக்கு போனார்கள். இதை ஏன் மட்டக்களப்பு, யாழ்ப்பாண மக்கள் எதிர்க்கவில்லை. சென்ற கிழமை வன்னிக்கு போன விக்கிரமாகுபாகு, சுரேசின் காருக்குகளுக்கு நடந்ததென்ன?

ஏன் வடக்கு மாகணத்தில் தேர்தல் வைக்கமால் இரண்டு தடவை அரசு கிழக்கு மாகாணத்தில் வைத்தது?

வன்னியில் நடந்த கொலைகளை நிறுத்த யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தவில்லைஎன்று வாதாடுவது அடிமட்ட வாதாட்டம். இலங்கை அரசு எப்படியானது என்று ஒத்துகொள்ள மறுப்பது தான் இது. இதை எழுதும் எழுத்தாளர்கள் சரியாக வன்னியில் என்ன நடந்தது என்று இன்னும் தெரிந்து கொண்டிருக்கவில்லை. மன்னர் ஆயர் 146,000 இறப்பு என்று கணக்கு போடுகிறார். ஐ,நா 40,000 என்று கணக்கு போடுகிறது. இந்த வித்தியாசத்திற்கு காரணம் என்னவாக இருக்க முடியும் என்று சிந்திப்பவர் ஒருவர் ஏன் வன்னி அவலத்தை நிறுத்த யாழ்ப்பாணத்தில் போராடவில்லை என்று அறிந்து கொள்வார்கள். இவரகள் யாழ்ப்பணத்தில் போராடுவதால் மெனிக் பாம் மக்களை காடுகளுக்குள் இருந்து மீட்கமுடியும் என்று நம்பினால் அதை திரிக்கு திரி தொடர்ந்து எழுதவேண்டும்.

தாங்களே வெளியில் ஒடி வந்தவர்கள் உள்ளெ இருக்கும் மக்கள் போரடவில்லை என்று தூண்டிவிட்டு கூத்து பார்க்க எழுதுவது சுத்த பேடித்தனம். பலஸ்தீனில் இஸ்ரேல் சுடுவது ரப்பர் குண்டுகளால். இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில், வன்னியில் பாவித்தது கிளஸ்டர் குண்டுகள். யாழ்ப்பாணத்தை அடித்த போது வன்னிக்கு போன்னர்கள். வன்னியை மூடி அடித்த போது ஒட்டுமொத்தமாக் அழிந்தார்கள்.

[size=4]தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தமக்கு வலிக்காத முறையிலேயே போராடுவதற்கு தயாரானவர்கள்[/size]

இந்த வம்பை தொடந்து எழுதுபவர்கள் இலங்கையில் வடக்கும், கிழக்கும் தான் பொருளாதாதார கல்வி, கலாசசார் மேம்பாடுகளில் மிக பின் தங்கின மாகாணங்களாக அரசின் அறிக்கைகள் தெரிவித்த பின்னரும் இதை தொடர்ந்து எழுதிறார்கள். என்ன பொறமையோ? அநாதைகளாய், அகதிகளாய் போய்விட்ட மக்களுக்கு ஒரு துரும்பு தூக்கி போடாத பலர் பணத்திமிர் பிடித்த தமிழரால் போராட முடியவில்லை என்று முதுகில் வலியில்லாமல் எழுதிகிறார்கள். கிட்டத்தட்ட எல்லாக்குடும்பங்களிலும் பலர் காணாமல் போவிட்ட பின்னரும் பணத்திமிர் பிடித்தவர்கள் போராடுகிறார்கள் இல்லை என்று எழுதுகிறார்கள். வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் பற்றித்தான் பீத்துகிறார்கள். முடிவில் தாங்கள் மக்களைக்காக்க முயல்வதாக நடிக்கிறார்கள்.

கிழக்கில் முஸ்லீம்கள் 15 பேர் வென்றதால் அது முஸ்லீம் மாகாணம் என்று அடித்துகூறியவர்கள் வடக்கை அரசு கையடக்க தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று கவலைப்பட்டு இப்படியும் எழுதுகிறார்கள். இது முன்னுக்கு பின் முரண் எழுதுவதின் அதி உச்ச நிலை.

நான் நூறு ஆண்டுகள் கழித்து வரக் கூடிய தமிழீழம் பற்றியே சிந்திக்கிறேன். அது அமைவதற்கான நிலத்தையும் மக்கள் கூட்டத்தையும் தக்க வைப்பது எப்படி என்றே சிந்திக்கிறேன்.
இதை எழுதுபவர்களுக்கு வெக்கம் இல்லை. 65 ஆண்டுகளில் இரண்டு மாகணங்களையும் தமிழர் இழந்த சரித்திரத்தை இவர்கள் படிக்காமல் அரசியல் ஆய்வு எழுதுகிறார்கள்.

Edited by மல்லையூரான்

அதுதான் உண்மை, அன்று மக்கள் யாழ்ப்பாணத்திலோ கிழக்கு மாகாணத்திலோ போராட்டங்கள் நடத்தியிருந்தால் போராட்டத்தின் நிலை மாறி இருக்கும்.

[size=4]அன்று அவர்கள் போராடாவிட்டாலும் இன்று அவர்கள் வீடுவரை பிரச்சனைகள் வந்து நிற்கின்றன. சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் பலத்த இராணுவ புலனாய்வு நடவடிக்கைகளுக்கும் மத்தியில் சில அரசியல்வாதிகள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். அதை ஒரு மக்கள் போராட்ட ஆரம்பமாக பார்க்கலாம். ஆனால் எமது மக்கள் போராட்டம் இரண்டு - மூன்று இலட்சம் ஆக்கிரமிப்பு இராணுவம் மத்தியில் சாத்தியமாக பலமான பின்புலம் தேவை. அதற்கு மேற்குலக / இந்திய ஆதரவு தேவை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஆயுதம் தூக்குவது அல்ல மக்கள் போராட்டம் என்பது. சிலர் ஆயதம் ஏந்த மற்றவர்கள் அவர்களுக்கு பக்க பலமாக நின்றாலே போதும், அதை மக்கள் போராட்டம் என்று சொல்லலாம்.

ஆனால் வன்னியில் பெரும் மனித அவலம் நடந்து கொண்டிருக்க, அதிலேயிருந்த சில பத்து மைல்கள் தள்ளி நல்லூரில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. கடைசியில் முள்ளிவாய்க்காலின் போதும் கூட யாழ்ப்பாணத்திலோ, மட்டக்களப்பிலோ மக்கள் வீதிக்கு வரவில்லை.

இராணுவ அச்சுறத்தல் என்று எல்லாம் பேசாதீர்கள். பாலஸ்தீனத்திலும் இராணுவ அச்சுறுத்தல் இருக்கின்றது. ஆனால் பெரியவரில் இருந்து சிறியவர் வரை கற்களைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு இறங்கி விடுவார்கள். அதை உலகமும் மக்கள் போராட்டம் என்றுதான் சொல்கின்றது.

தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தமக்கு வலிக்காத முறையிலேயே போராடுவதற்கு தயாரானவர்கள்.

நிச்சயமாக இவர்களக்கு தமிழீழம் பற்றிய ஆசை இருக்கிறது. இந்த ஆசை ஒரு நூறு ஆண்டுகள் கழித்து தமிழீழத்தை உருவாக்கித் தரக்கூடும்.

நான் நூறு ஆண்டுகள் கழித்து வரக் கூடிய தமிழீழம் பற்றியே சிந்திக்கிறேன். அது அமைவதற்கான நிலத்தையும் மக்கள் கூட்டத்தையும் தக்க வைப்பது எப்படி என்றே சிந்திக்கிறேன்.

உண்மை தான் மக்கள் நினைத்திருந்தால் வீதிக்கு வந்திருக்க முடியும் ஒரு ஐந்து லட்சம் இருந்த குடாநாட்டில் ஒரு ஒரு லட்சமாவது வீதிக்கு வந்திருக்கலாம். இன்றைக்கு யாழில் 90 ஆம் ஆண்டுக்கு பிறந்தவர்களை எது சுதந்திரம் எண்டு கேளுங்கள் உடனே சொல்லுவான் கோயில் திருவிழாக்கு இரவில் போகின்றோம் படம் நைட் ஷோ பாகிரம் இத விட எங்களுக்கு என்ன வேணும் எண்டு அவன் சிந்தனை அப்பிடி இருக்கு ஒரு போராட்டம் நடந்ததையே மறந்திட்டாங்க இல்லை அவங்களுக்கு சொல்லி கொடுக்க படேல்ல....

மல்லையூரான்,

மன்னிக்க வேண்டும். நீங்கள் வேறு வேறு விவாதங்களில் வேறு வேறு காரணங்களின் அடிப்படையில் நான் முன்வைக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு, நான் எழுதுகின்ற அனைத்து இடங்களிலும் எல்லாவற்றையும் கலந்தடித்து பதில் எழுதுவதனால், உங்களுடைய கருத்துக்கள் பதில் அளிப்பதற்கான தரத்தை இழக்கின்றன.

வருந்தத்தக்க வகையில் என்னோடு விவாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாது, என்னை தாக்க வேண்டும் என்கின்ற நோக்கமே உங்களின் என் மீதான அனைத்துக் கருத்துக்களிலும் தென்படுகின்றன.

நீங்கள் ஆவேசமாக எழுதுவதாலோ என்னவோ தெரியவில்லை, நீங்கள் எழுதுவதை இரண்டு மூன்று தடவை படித்து, தேவையான இடங்களில் "கொம" போன்ற அடையாளங்களைப் போட்டு புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மனதில் வெறுப்பினை தவிர்த்து ஒரு கள உறவுடன் கருத்தாடுகிறேன் என்ற சிந்தனையோடு உரையாடுங்கள். நல்ல முறையில் விவாதிப்போம்.

உண்மை தான் மக்கள் நினைத்திருந்தால் வீதிக்கு வந்திருக்க முடியும் ஒரு ஐந்து லட்சம் இருந்த குடாநாட்டில் ஒரு ஒரு லட்சமாவது வீதிக்கு வந்திருக்கலாம். இன்றைக்கு யாழில் 90 ஆம் ஆண்டுக்கு பிறந்தவர்களை எது சுதந்திரம் எண்டு கேளுங்கள் உடனே சொல்லுவான் கோயில் திருவிழாக்கு இரவில் போகின்றோம் படம் நைட் ஷோ பாகிரம் இத விட எங்களுக்கு என்ன வேணும் எண்டு அவன் சிந்தனை அப்பிடி இருக்கு ஒரு போராட்டம் நடந்ததையே மறந்திட்டாங்க இல்லை அவங்களுக்கு சொல்லி கொடுக்க படேல்ல....

இது முழுமையான உண்மை அல்ல. மக்கள் இன்றும் போராட தயாராக உள்ளார்கள், ஆயுதம் ஏந்தி அல்ல.

[size=4]ஆனால், அங்கு அவர்களை சுற்றி உள்ள கெடுபிடிகள், சரியான தலைமை இல்லாமை என்பன முக்கிய காரணிகள். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.