Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகைச்சுவை நாடகம்.

Featured Replies

எல்லாளன் மீது இவ்வளவு கோபமா ??????

அக்கா கோபத்தில்

எழுதவில்லைத்தானே

??? :D :D

அருமை அருமை ............மீண்டும் வருவேன் பச்சையுடன்

Edited by தமிழ்சூரியன்

கடுகுபோல் வெடிக்கும் சுமேரியருக்கு இவ்வளவு நகைச்சுவையா :) ??? நான் எதிர்பார்க்கவில்லை . அதோடை இந்த எழுத்தை நல்லாய் பாத்திருக்கிறன் :rolleyes::unsure: . எதுக்கும் விட்டுப் பிடிப்பம் :lol::D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல நான் சுண்டலின் பெயரைத்தான் போட இருந்தேன். பிறகும் பாவமென்று விட்டுவிட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலக்கல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ... சூப்ப‌ராயிருக்குது.

ஆரிய‌குள‌த்தையும், மூத்திர‌க் குள‌த்தையும்... வைச்சு, நாற‌டிக்க‌ வைச்சிட்டீங்க‌. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :icon_idea:

சுமே எழுதினதோடை நகைச்சுவை நாடகம் அரக்கேலை :lol: ..எல்லாளன் வந்து சரண்டையும் வரைக்கும் ஆராவது ஒராள் நாடகம் தொடர கைகுடுங்கோப்பா :unsure::) நகைச்சுவைக்கு யாழிலை அவ்வளவு பஞ்சமாய் போட்டுதே :D :D :icon_idea: ??

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேணுமெண்டு எல்லாளனின் பெயரைப் போடவில்லை.சாத்திரி மிகுதியை தொடரச் சொன்னதால் போட்டேன்.எல்லாளன் பாத்தால் சாத்திரியுடன் தான் சண்டைக்குப் போகவேணும்

இதை ஏன் வித்தியாசமாய் எடுக்கிறியள் ?? நகைச்சுவைப்பகுதிதானே . எல்லாளனை ஏரியாவிலை வரப்பண்ணவேணும் அம்புட்டுதேன் :lol::D :D .

:D :D

என்ன அதுக்குள்ளே முடிச்சாச்சு கல்யனதிக்கு அப்புறம் சொப்னாவ விட்டிட்டு எல்லாளன் கஜவல்லிய சைட் அடிச்சா கதையையும் எழுதுங்க சொப்ஸ் :D

அட ஆமா........... கஜவல்லிய ரூட்டு போடுவாரா என்ன அந்த மவாரசனு :o ?? ஏனுங்க சுண்டலு நீங்க காமடியா ட்றை பணுங்களேன் :) ?? நான் உங்க காமடிக்கு ஃபேனுங்க :lol::D .

ம்... அது.. அங்கை நிக்குறிங்கள்.. :rolleyes::icon_idea:

டவுட் கிளியர்::

ஏனுங்க ஜீவா அண்ணன் நான் எதில நிக்குறேன் :o ?? நான் யாதார்த்தமா ரீசனா ஒரு சீன வரலாற்று போர்கலைங்கள வாசிச்சப்போ திங் செஞ்சு எழுதினேங்க :) . ஆமா நீங்க என்ன டவுட்டு வைச்சிருந்தீங்க அண்ணன் :D ??

என்னோட டிராமாவ லைக்செஞ்சு ஜாலியா காமன்ட்ஸ் போட்ட அலை அக்காளு , நந்தன் அண்ணனு , தமிழ்சூரியன் அண்ணனு உங்களுக்கெல்லாம் ரெம்பதாங்கஸ்சுங்க :) :) .

[size=5]சபாஷ் சாத்து, சொப்னா , மொ.தே.சு.மோ நகைச்சுவையை அள்ளிவிட்டிருக்கீங்க வாழ்த்துக்கள் ஏதோ நம்மலால முடிஞ்சது. கள உறவுகளின் பெயரெல்லாம் சேர்த்திருக்கேன் நகைச்சுவைக்காக .. நகைச்சுவைக்காக மட்டுமே... :D :D [/size]இப்போது தான் பார்த்தேன். அதற்குள் இவ்வளவு ஓடிவிட்டதா?

இனி என் பங்குக்கு.....

**************************************************************************

எல்லாள மஹாராஜா அரண்மனை உப்பரிகையில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார். யோசனையில் முகம் இறுகிப்போய் இருந்தது. மந்திரி சட்டபிம்ம சாத்திரி ஒரு மூலையில் பவ்வியமாக நின்று கொண்டிருந்தார். மஹாராஜாவின் "மூட்" அறியமுடியாத குழப்பத்தில் வாய் திறக்கவே பயந்து கொண்டிருந்தார். எந்த நேரத்தில் எந்த மூட்டில் இருப்பார் என்பது அறியமுடியாத "முசுடு" இந்த எல்லாள மஹாராஜா என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்.

இல்லாவிட்டால் இன்றும் பின்பக்கத்தால் இருக்க முடியாது அரையால் இருந்து "அரைக்கால் தமிழ்ச்சூரியக் கோனார்" என்று பட்டப்பெயரோடு கிடந்து அல்லாடிக்கொண்டிருக்கும் அமைச்சர் தமிழ்ச் சூரியனைப் பார்த்தும் வாயைத் திறப்பேனா ? - - தைப் புண்னாக்குவேனா? என்று கிடந்தது. மந்திரி தமிழ்ச்சூரியனுக்கு நடந்தது ஒரு கிளைக்கதை .அது பின்னொரு சந்தர்ப்பத்தில் வரும்.

ஆனாலும் நமக்கேன் வம்பென்று சும்மாவும் இருந்து விட முடியாது. அப்புறம் எப்படி மதியூக்கி மந்திரி சட்டபிம்ம சாத்திரி என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வது. எப்படா இவர் எழும்புவார் கதிரையைப் புரட்டிப்போட்டு ஏறிக்குந்தலாம் என்று காத்திருக்கும் கொன்றாக்ரர் முருகனும் அழுகிய வாழைப்பழத்திற்கே ஆலாய்ப்பரந்து மயிர்பிடி சண்டை போடும் ஆதிவாசியும் இரவில் நித்திரை கொள்ளவே விடுகிறார்களில்லை. கொல்லைப் புறத்தால் பூந்தாவது மந்திரியாகி விடவேண்டுமென்ற கொலவெறியில் அலைகின்றார்கள்.

நாடு எப்பிடிப்போனாலும் கவலைப் படாத இந்த கிழட்டு மஹாராஜாவுக்கு ஏதோ ஒரு நாட்டிலிருந்து ஓலை ஒன்று வந்திருக்க வேண்டும். நேறறே புறாக்கறி வறுவல் நாற்றம் அரண்மனை நடு மண்டபம் வரை வந்தபோதே ஊகித்து விட்டிருந்தார்.ஆனாலும் என்னவென்று அறியாது எப்படி ஆரம்பிப்பது என்று தான் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அவரை அதிகம் சோதிக்காமலே சொப்பன சுந்தரியின் மற்போர் அறைகூவலைப் போட்டுடைத்தார் எல்லாள மஹாராஜா. அது தானே பார்த்தன்.. கிழடுக்கு மீசை நரைச்சாலும் இன்னும் ஆசை நரைக்க இல்லை.கிழடு வீசியெறியும் நாலைஞ்சு பொற்காசுகளுக்காக 'இந்த மாமா' வேலையெல்லாம் செய்ய வேண்டியிருக்கின்றது.

இந்த மந்திரிப் பதவியை வைச்சுத்தான் கெளரதையாக காலத்தை ஓட்ட முடிகின்றது. இல்லாவிட்டால் ... அவரை யோசனையிலிருந்து வெட்டி இழுத்தது மஹாராஜாவின் குரல்.

"மந்திரியாரே ..எனக்கு அந்த சொப்பன சுந்தரி வேண்டும்..மஞ்சத்தில் கட்டிப்புரளவேண்டிய நேரத்தில் மற்போருக்கு என்ன தேவை வந்தது. கடங்காரி ..சந்தணத்தைப் பூசி பன்னீரில் குளிக்க வேண்டிய என்னை சேற்றில் போட்டு புரட்டி எடுக்க ஏன் நினைக்கின்றாள். அதை நினைக்கத் தான் ஆற்றாமையாக இருக்கின்றது.நேற்றிலிருந்து நித்திரையில்லாது குறுக்கும் நெடுக்கும் நடந்து கால்முட்டிதான் தேய்ந்து விட்டது. ஏற்கனவே குந்தியிருந்து எழும்பும் போது "கிறீச் புறீச் 'சென்று எலும்புக்கூடு சத்தம் போட்டு வயதின் முதிர்ச்சியை பறைசாற்ற்க் கொண்டிருக்கின்றது.

இந்த நினைவு வந்தபோது தான் மருத்துவனப் பிடித்து மிளகாய்ச்சாக்கில் போட்டுக்கட்டி நாலு நாள் காயவிட வேண்டுமென்று நினைத்தது கூட மறந்து போய் விட்டது ஞாபகம் வந்தது. பின்னே என்ன சிலநாள் முதல் நாட்டியக்காரி அல்லைமங்கையின் வீட்டிற்குப்போய் மூக்குடைந்து திரும்பியதுசொல்ல முடியாத அவமானமாக மனதைக் குடைந்து கொண்டிருந்தது. இந்த மருத்துவன் கொடுத்த சூரணத்தைச் சாப்பிட்டால் சொர்க்கம் தெரியுமென்பது பொய்யாகிப் போய் கொடிக்கம்பம் நட்டு வெற்றிக்கொடி ஏத்தலாம் என்பதில் மண்விழுந்து விட்டது. கொக்கைச்சத்தகம் போல் வளைந்து நின்றதைப் பார்த்து அவள் கொடுப்புக்குள் சிரித்தது போல் ஒரு நினைப்பு.

காசாசை பிடித்த பேராசைக் கார மருத்துவன் . கொடுத்த காசிற்கு மருந்துவாங்கி சூரணம் செய்யாது கலப்படம் செய்ததால் வந்த அவமானம் அல்லவா அது? நாட்டு வைத்தியத்தை நம்பி வேலையில்லையென்று பறங்கிக்காரன் பெர்ணாண்டஸுடம் குதிரைப் படையை வித்து வயாக்ரா குளிகைகள் கொள்வனவு செய்திருந்தார். சண்டையே விரும்பாத மஹாராஜாவிடம் இருந்து சண்டையே போடாது திண்டு கொழுத்து கஜானாவையே காலியாககும் இவர்கள் இருந்தென்ன? இல்லாது விட்டென்ன? இதில் கோவணமே கட்டத்தெரியாத குதிரைகளுக்கு கொள்ளு வேறு.

சிறு வயதிலிருந்தே குதிரைகளின் இதைப்பார்த்துத் தானே தானும் இப்படி ஆகிவிட்டதாக மஹாராஜாவிற்கு மனதில் ஒரு குற்ற உணர்வு. இப்படி உள்ளூருக்குள்ளேயே உழுது கொண்டுதிரிய வேண்டியிருக்கின்றது. இல்லாவிட்டால் தானும் ஒரு மஹா அலெக்ஸாண்டராகவோ ஒரு ராஜராஜசோழனாகவோ பெரும் சக்கரவர்த்தியாகி சீன மலேய கீழைத்தேச சவுந்தரியங்களையும் பாரசீக அராபிய ஆங்கில மேலைத்தேய சொர்க்கங்களையும் அனுபவித்திருக்கலாம் என்ற குறை காலாகாலத்திற்கும் மனதில் நெருடிக்கொண்டிருக்கின்றது.

இதைப்பற்றியெல்லாம் இப்போது கவலைப்பட நேரமில்லை. மற்போருக்கு அழைத்த சொபன சுந்தரியை மஞ்சத்தில் போட்டுப் புரட்டியெடுக்க என்ன வழி? அது தான் மந்திரி சட்ட பிம்ம சாத்திரியை இங்கு வரவழைத்திருந்தார். மந்திரியும் லேசுப்பட்ட ஆள் இல்லை.

முதலில் என் சொப்பனத்தை அதுதான் சொப்பன சுந்தரியோடு மஞ்சத்தில் விளையாடுவதை நிறைவேத்திவிட்டு பின்னர் இந்த விடயத்தைப் பார்ப்போம் என்று அந்த யோசனையைத் தள்ளி வைத்தார்.

வயது போகின்றது மருமகனே இரத்தம் குத்தி முறிக்கப் போகின்றது.. இந்தப் பெண்ணாசையைக் கைவிடு என்று ஒரே ரோதனையாக இருக்கின்றது.சொப்பன சுந்தரி வருவதற்குள் அத்தையை இங்கிருந்து கிளப்பி விடவேண்டும். காசி ராமேஸ்வரம் என்று போக வேண்டிய நேரத்தில் என்னைக் காசி ராமேஸ்வரம் என்று அனுப்பப்பார்க்கின்றது. ம்..பார்க்கலாம் நம்ம மதியூக்கி மந்திரி சட்டபிம்ம சாத்திரி ஏதாவது ஐடியா வைத்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் மந்திரியைத் திரும்பிப் பார்த்தார். மந்திரியோ இன்னும் பம்மிக் குழைந்து தன் ராஜ விசுவாசத்தை மெய்ப்பித்துக் கொண்டிருந்தார். நல்ல வேளை ஆண்டவன் வாலை மட்டும் வைக்கவில்லை. இந்த நினைப்போடு அடக்க முடியாது வெடித்துக் கிளம்பிய சிரிப்பில் முகத்தின் இறுக்கம் தளர்ந்தது.

(பீடிகை பலமாகப் போட்டாச்சு ..இனித் தான் நாடகம் தொடரும்)

[size=1]நியானி: தணிக்கை[/size]

[size=1]களவிதி: சக உறுப்பினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ தரமற்ற முறையிலும், அநாகரீகமான முறையிலும் விமர்சிப்பதும், அவர்களின் அனுமதி இல்லாமல் நையாண்டி செய்வதற்கு அவர்களது பெயர்களைப் பயன்படுத்துவதும் கூடாது[/size]

Edited by நியானி

:lol:

நான் எழுதின பிறகு நியானி எழுதியிருக்கா... இப்போ நான் என்ன எழுதினேன் எண்டு எனக்கே விளங்கவில்லை... உங்களை நினைத்தால் தான் இன்னும் பாவமாயிருக்கு.. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]எல்லாளன் உங்களைக் காணவில்லையே என்றுதான் எல்லோரும் தேடிக்கொண்டிருந்தோம். வந்திறங்கி எல்லாரெயும் தூக்கிச் சாப்பிட்டு விடுவீர்கள் போல் இருக்கே.தொடருங்கள் நாளை என்ன எழுதுவீர்களோ என்று பார்த்திருக்கிறேன்[/size].

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

[size=5]எல்லாளன் உங்களைக் காணவில்லையே என்றுதான் எல்லோரும் தேடிக்கொண்டிருந்தோம். வந்திறங்கி எல்லாரெயும் தூக்கிச் சாப்பிட்டு விடுவீர்கள் போல் இருக்கே.தொடருங்கள் நாளை என்ன எழுதுவீர்களோ என்று பார்த்திருக்கிறேன்[/size].

அதுதான் நியானி கொஞ்சம் சாப்பிட்டு விட்டாரே... நான் சாப்பிட என்ன மிச்சம் இருக்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதின பிறகு நியானி எழுதியிருக்கா... இப்போ நான் என்ன எழுதினேன் எண்டு எனக்கே விளங்கவில்லை... உங்களை நினைத்தால் தான் இன்னும் பாவமாயிருக்கு.. :rolleyes: :rolleyes:

போர் களம், சாறி அக்கபோர் களம் பல கண்ட உங்களுக்கு, வெட்டுக்களத்தில் என்ன நடக்கிறது என விளங்கவில்லையா, ஆச்சரியமாயிருக்கு :rolleyes:

ஆச்சரியப்பட என்ன இருக்கு ,பலருக்கு அதிர்ச்சியா இருக்கு ..என் வீட்டுக்கொல்லையில் எருக்கமரம் முளைக்குதென்னு.. :icon_mrgreen:

  • 5 weeks later...

அண்ணனுங்களா !! அக்களுங்களா !!! இது என்னோட முதல் காமடி டிறாமா . என்னய கேனடாவுக்கல்லாம் இன்வைற் செஞ்சு அசத்துனீங்க . நான் இதில யாரோட மனசையும் நோகடிக்கல . ஏதாச்சும் நான் சைல்டிஷ் ஆ செஞ்சா மன்னிச்சுக்கோங்க . ஓக்கேயா.....

கொங்கு நாட்டு இளவரசி சொப்னா அரன்மனை மாடத்தில் தன்னந்தனியே தனது பஞ்சவர்ணக்கிளியுடன் நின்றிருந்தாள் . அன்றய இரவும் வானத்தில் தோன்றிய முழுமதியும் அவளைப்பாடாய்படுத்தின . பஞ்சவர்ணக்கிளி அடிக்கடி "எல்லாளன் எல்லாளன்" என்று வேறு அழைத்து அவளைக் கடுப்பேத்தியது . கையில் இருந்த திராட்சை ரசத்தை மெதுவாக சிப்பினாள் . அவளது அந்தரங்க தோழி கஜவல்லியின் பதட்டமான வருகையும் குரலும் சொப்னாவை கலைத்தது.

கஜவல்லி : இளவரசி .....இளவரசி ........எல்லாள மகாராசா எங்கள் நாட்டின் மீது படையெடுத்து வருகின்றாராம் . தளபதி உங்களை காண வருகின்றார் .

சொப்னா : என்னடி சொல்றே.......... ஐயோ நான் என்னடி பண்ணுவேன் ? எங்க டாடி ராகவன் IPS கூட குண்டஸை என்கவுண்டர்ல போட ரெய்டு போய்ட்டாரே . நான் சும்மாச்சும் பீலா விட்டேன்டி . அத்தை அவன் நம்பீண்டானாடி . இப்போ என்னடி செய்றது ?

கஜவல்லி : அட சீ ….. நிப்பாட்டுங்க . இளவரசி உள்ளத சொல்லுங்க உங்களுக்கும் அவருக்கும் ஒரு இது தானே ??

சொப்னா : எது ??

கஜவல்லி : ஆசை தோசை.......... கிளி வேற அவுங்க பேர கூப்பிடுதே ??

சொப்னா : அட போடி அவரோட ஃபோட்டோவை நீ வரைஞ்சப்புறம் என்னோட மனசு என்கிட்ட இல்லடி.

கொங்குநாட்டு இளவரசியின் தளபதி வந்து அவளை வணங்கி நின்றான் .

சொப்னா : ஹாய் தளபதியாரே என்னா மாற்றர் ?

தளபதி : எல்லாளன் படையெடுத்துவருவதாக தகவல் வந்துள்ளது இளவரசி .

சொப்னா : ஓ ........... அந்த ஓல்டு கிங்க் இங்க வர்றானா ? இருடி என்கையாலதான் அவனுக்கு கைமா . ஆமா.... எப்பிடி போர்ஸ்சுங்களை மூவ் பண்ணப்போறிங்க ??

தளபதி : " பத்ம வியூகம் " போடலாம் என்று இருக்கின்றேன் இளவரசியாரே .

சொப்னா : நோ........... நோ அதல்லாம் ஓல்டு ஸ்ரைலுப்பா . " கருந்தேள் வியூகத்த " போடு . அவன் கடலால இறங்குறப்போ ஒன்னும் செய்யாத . கொங்கு நாடு வரை தற்காப்பு அற்றாக் மட்டும் இருந்தா போறும் . என்னோட சற்றலைற் ரெலிபோனை எடுத்திட்டுபோ . கொங்கு நாட்டு செய்மதிய அவன் பக்கம் திருப்பு . அவன் சாம்சுங் கலக்ஸி கூட வர்றதா ஒற்றன் தகவல் அனுப்பியிருக்கான் . ஆள ஊடறுத்து பாயிற படையணிங்கள அவனோட சேனைங்களில கலக்கவிடு . அப்பப்போ ஐ பாட்ல இருக்கிற ஸ்கைப்பால என்கூட தொர்பில இரு . இதோட கோர்ட் வேர்டு " ஒப்பரேஷன் சொப்எல்லா " .

தளபதி : உத்தரவு இளவரசி .

சொப்னா : ஏன்டி கஜவல்லி ஏதாச்சும் உளறீட்டேனா ??

கஜவல்லி : அதென்னங்க " ஒப்பறஷன் சொப் எல்லா " ??

சொப்னா : போடி கள்ளி...........

கொங்கு நாட்டு போர்களத்தில் எல்லாளன் " கருந்தேள் வியூகத்தால் " சின்னாபின்னமாகி தன்னியனாக வெறிப்பிடித்தவனாக நிலத்தில் நிற்க , கொங்குநாட்டு இளவரசி சொப்னா பட்டத்து யானைமேல் கம்பீரமாக உட்கார்ந்து இருந்தாள் .

சொப்னா : அனுராதபுரத்து அறிவுகெட்ட எல்லாளனே !!!!! மற்போருக்கு றெடியா ??

எல்லாளன் : ஏன் இப்பிடி அடம்பிடிக்கிறாய் ?? சொல்வளி கேள் பிள்ளை .

சொப்னா : என்னா மப்படிச்சியா உளர்றே மேன் ??

கமோன் யா வந்து ஃபைற்று பண்ணு அப்புறம் ஜாலிதானே .

எல்லாளன்: எனக்கு நீதான் வேணுமடி ராசாத்தி சண்டையெல்லாம் வேண்டாம் .

சொப்னா : என்ன நீ டோன்ற் பீ ஸில்லி கமோன் .நான் இப்போ ஃபைற்றுக்கு விசில் அடிக்கிறேன் .

கஜவல்லி ஓடிவந்து எல்லாளனிடம் ஒரு எஸ் எம் எஸ் காட்டுகிறாள் .

எல்லாளன்: வாடி .......... சொப்னா உனக்கு என்னாலைதான் சாவு ( எக்கோ சவுண்ட் ) .

மற்போர் உக்கிரமாக நடந்தது எல்லாளன் வெற்றிவாகை சூடி இளவரசி சொப்னாவை திருமணம் செய்தான் . கொங்கு நாடு எல்லாளன் ஆட்சியில் பூரித்தது .

பி கு :

எஸ் எம் எஸ் ல் வந்த செய்தி , " எல்லாளரே மற்போரில் நான் நடிக்கின்றேன் எனக்கு நீங்கள் வேண்டும் " .

யாவும் கற்பனையே

நகைச்சுவையை சற்றும் சுவை குன்றாது தந்த சொப்னா உண்மையில் பாராட்டப்பட வேண்டியவரே . நீங்கள் தொடர்ந்தும் இதுபோன்ற ஆக்கங்களைத்தரவேண்டும் . உங்களுக்கு எனது வாழ்த்துகள் சொப்னா :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.