Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசின் பிரதிநிதிகள் லண்டன் பயணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசின் பிரதிநிதிகள் லண்டன் பயணம்!

[Thursday, 2012-10-25 09:13:15]

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று லண்டன் சென்றுள்ளது. நேற்றைய தினம் இந்த குழு இலங்கையில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெர்ணாண்டோ மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் தலைமையில் இந்த குழு அங்கு சென்றுள்ளது.

லண்டனில் முக்கிய புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளை சந்தித்து, இலங்கைக்கான உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தாங்கள் அங்கு செல்வதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.ஏற்கனவே கடந்த வருடமும் இவ்வாறான குழு ஒன்று அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://seithy.com/breifNews.php?newsID=68974&category=TamilNews&language=tamil

இந்த சிங்களப் பயங்கரவாதிகளை கைது செய்து சிறைகளில் அடைக்க வேண்டும்!

தமிழினப் படுகொலை செய்த ஐ. தே. கட்சி போர்குற்றவாளிகளுடன் லண்டனில் பேசும் தமிழர்கள் கைக்கூலிகளாக கருதப்படுவர்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிங்களப் பயங்கரவாதிகளை கைது செய்து சிறைகளில் அடைக்க வேண்டும்!

தமிழினப் படுகொலை செய்த ஐ. தே. கட்சி போர்குற்றவாளிகளுடன் லண்டனில் பேசும் தமிழர்கள் கைக்கூலிகளாக கருதப்படுவர்!

தங்களுக்கு ஆமா போடுகிற சிலரைச் சந்திச்சு அறிக்கை விடுவினம் அதை புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பென்று பிரச்சாரம் செய்வினம்.

  • கருத்துக்கள உறவுகள்

கேபியின் ஆதரவாளர்களைச் சந்திச்சு இப்ப இனப்பிரச்சினையைப் பற்றிப் பேச வேண்டிய தேவையில்லை.போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம்தான் முக்கியம்.ஆனபடியால் புலம்பெயர்தமிழர்கள் எல்லோரும் காசு குடுங்கோ என்று 2 பகுதியும் சேர்ந்து அறிக்கை விடுவாங்கள்.குடுக்கிற காசை கோத்தா கும்பல் முழுமையாய் விழுங்கி ஏப்பம் விடும்.இதுதான் நடக்கும்.முக்கிய புலம் பெயர் அமைப்புக்கள் இணைந்து இது தொடர்பான முழுமையான அறிக்கை ஒன்றை சர்வதேசத்திற்கு விட வேண்டும்.புலம்பெயர் பிரதிநிதிகளுடன் தாயகத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்து வெளிப்படையான பேச்சு வார்த்தை 3ம் தரப்பு மத்தியஸ்தத்துடன் நடக்க வேண்டும்.

புலம்பெயர் சமாதான வாதிகளை விட்டுவிட்டு சாப்பாட்டுக்கு வழியில்லாமல் காட்டுக்குள் கிடந்து தவிக்கும் ஏழைகளை மனத்தில் வைத்து சம்பந்தர் சரியான வழியில் நடக்கட்டும். அரசாங்கம் கூட்டமைப்பு மாறாது, புலம்பெயர் மக்கள் காசோடு போவார்கள் என்று நினைக்கிறது. அதை தட்டி கழிக்க கூடாது. மிக்க கவனத்துடன் தப்ப தெரிய வேண்டும்.

[size=6]Propaganda won’t save GoSL at UPR, UNHRC sessions [/size]

[size=6]GTF, Norwegian Tamils warn:[/size]

[size=5]The Global Tamil Forum (GTF) yesterday urged the Sri Lankan government not to engage in futile propaganda exercises to deceive the international community ahead of the forthcoming Universal Periodic Review (UPR) at the United Nations Human Rights Council (UNHRC) in Geneva.[/size]

[size=5]UK based GTF spokesman Suren Surendiran told The Island that there was absolutely no basis for recent GoSL claim that it was in touch with Tamil Diaspora organizations and a meeting between them and President Rajapaksa was likely in Colombo soon.[/size]

[size=5]Asked whether the GTF was concerned about losing its clout among the overseas Tamil community, Surendiran emphasized that the GoSL was not in contact with what he called credible Diaspora organizations.[/size]

[size=5]The GTF was responding to GoSL spokesperson, Minister Keheliya Rambukwella’s declaration last Friday (19) that a meeting between senior representatives of Tamil Diaspora and President Rajapaksa was now a possibility.[/size]

[size=5]Surendiran said that the GTF had made representations to the UPR.[/size]

[size=5]He stressed that the GoSL had no option but to engage in a genuine dialogue with the Tamil National Alliance (TNA). The GoSL should realize that the TNA represented Tamil speaking people at parliamentary, Provincial Council and Local Government level and there couldn’t be a substitute, Surendiran said.[/size]

[size=5]The GTF official accused the government of failing to make a genuine effort to address grievances of Tamil speaking people even three years after the conclusion of the conflict. The Tamil community wouldn’t under any circumstances give up its demand for an international war crimes inquiry, he said. Responding to a query, the GTF spokesman said that they wouldn’t quit their ongoing campaign for war crimes inquiry in return for resumption of political negotiations or some sort of understanding with the GoSL. "We want to know the circumstances, under which over 40,000 people perished on the Vanni east front during the final phase of the war," Surendiran said.[/size]

[size=5]He stressed that the GoSL accepts that there was also a Tamil Nation in the island. Asked whether the GTF was ready to work with Kumaran Pathmanathan, alias KP, the GTF spokesman said the former top LTTEer was now a captured man in GoSL custody. But the GTF wouldn’t see anything wrong in Pathmanathan providing some relief to those affected by the conflict.[/size]

[size=5]Dr. Panchakulasingam Kandiah, the president of the Norwegian Council of Eezham Tamils (NCET) and a director on the board of the GTF, told The Island that the GoSL was making an effort to give legitimacy to its propaganda campaign by arranging a meeting between a handful of Tamils living overseas and the President.[/size]

[size=5]Kandiah described the recent GoSL announcement as a deceptive move timed for UPR process on Nov 1 in Geneva and four months before the UNHRC was due to review progress on the US sponsored resolution that was passed last March targeting Sri Lanka.[/size]

[size=5]"Majority of the Tamil Diaspora is very clear on a few matters, we as an organization pro-actively promote non-violence to achieve our rights and political aspirations in Sri Lanka," he said.[/size]

[size=5]Commenting on war crimes, Kandiah said those responsible for atrocities should be held accountable. "No government or group should be allowed to breach international laws and conventions and get away with it. That will set the wrong precedent and that’s plainly wrong."[/size]

[size=5]Kandiah, too, said that their push for international war crimes inquiry wouldn’t be given up to facilitate a negotiated political settlement.[/size]

[size=5]"Tamils have lived in the North and East of the island for many centuries and historically have established those parts as their homeland just as the Sinhalese in the rest of the island except the ‘up-country’ where Tamils from Indian decent have lived. Just as we Tamils, respect this historic fact that there is a Sinhala nation in that island, we want the Sinhalese to acknowledge and respect that there is a Tamil nation in that island too," he said.[/size]

[size=5]"Finally, in any genuine negotiations with the will to deliver a lasting solution there shouldn’t be any pre-conditions imposed by either party. This must mean that everything including the right to self determination for Tamils be part of that conversation. When we formed the organization NCET, I stood for elections in Norway and won an overwhelming majority, with a clear mandate calling for a separate state for Tamils in Sri Lanka," he added.[/size]

[size=5]The Eelam official called for resumption of genuine negotiations without conditions or restrictions. But proposed talks should be monitored by relevant international stakeholders such as the co-chairs established during the Norwegian-arranged failed ceasefire agreement (US, Japan, EU and Norway), India, China and other well meaning countries like for example Republic of South Africa.[/size]

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=64500

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது – அரசாங்கம்

26 அக்டோபர் 2012

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநான் முக்கிய பங்காற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயில் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84717/language/ta-IN/article.aspx

ஒவ்வொரு தமிழரையும் சந்திப்பினமோ?

  • கருத்துக்கள உறவுகள்

சில முகங்கள் தெரியவரலாம்...............???

பலர் கனகாலமாக டபிள் ரோல் தான் பிளே பண்ணினார்கள் .

தமிழனை விலைக்கு வாங்குவது மிக சுலபம் என்று சிங்களவனுக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ரொம்ப வென்று எடுத்து விடாதீங்கப்பா.. பாவம் அவஙுங்களே நொந்து போய் இருக்கிறார்கள்...

http://www.youtube.com/watch?v=ojnYjKh2xAU

டிஸ்கி:

கன்னி வெடி அகற்றுறம் .. வீடு கட்டி குடுக்கறம் உதவி செய்யுங்கோ என்று வர போகிறார்கள்..

எவன் வந்தாலும் அரசியல் தீர்வு என்ன ? என்று முதல் கேள்வியை வையுங்கோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசுடன் பேசுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளை இலங்கை அரசு நிராகரிப்பு.

[saturday, 2012-10-27 09:44:56]

சுயநிர்ணய ஆட்சியை ஏற்றுக்கொள்வது, தமிழ் மக்கள் ஈழத் தமிழர்கள் என ஏற்றுக்கொள்வது, போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை இணங்குவது ஆகிய விடயங்களை நிறைவேற்றுமாறு புலம்பெயர் தமிழர்கள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

நோர்வேயில் உள்ள தமிழீழ குழுவின் சார்பில் பஞ்சகுலசிங்கம் கந்தையா இந்த கோரிக்கை விடுத்திருந்தார். அரசாங்கம், புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக கடந்த 19 ஆம் திகதி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

எனினும் தமது இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், சர்வதேச தலையீட்டுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தாம் தயாராக இருப்பதாக புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

http://seithy.com/breifNews.php?newsID=69092&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பலத்த்துக்கு வரும் இரகசிய நகர்வு: தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டியுள்ள நபர்கள் யார்?

October 27, 2012, 6:28 pm[views: 354]

சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான இனஅழிப்பு குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாவது ஒரு திருப்புமுனையான கட்டத்தை அடைந்துள்ள தருணத்தில், சிறீலங்காவின் பொருளாதாரமும் இன்று இரண்டு தொடக்கம் மூன்று வருடங்களுக்குள் பெரும் அதாளபாதாளத்தை நோக்கி செல்லப்போகிறது.

இவ்விரண்டுக்குமான பிரதான காரணகர்த்தாக்களாக புலம்பெயர் தளத்தில் மிகத் தீவிரமாக செயற்பட்டு வருகின்ற செயற்பாட்டாளர்களே காரணம். இது சிறீலங்கா அரசுக்கு பெரும் தலையிடியை கொடுத்து வருவதோடு, அவர்களுக்கு பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் உருவாக்கியுள்ளது.

ஆதலால், உணர்வுபூர்வமாக அர்ப்பணிப்புடன் செயற்படும் புலம்பெயர் தளத்திலுள்ள செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளை சிதைக்கும் முகமாக, சிறீலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழர்கள் சிலருடன், கே.பி ஊடாக தொடர்பினை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக சிறீலங்கா காடியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், தமிழ்மக்களை இனஅழிப்புக்கு உட்படுத்தி வரும் சிறீலங்கா அரசாங்கத்துடன் இங்கிலாந்திலுள்ள இன்பம், கனடாவிலுள்ள இன்பம் (இருவருக்கும் ஒரேn பெயர் என்பது குறிப்பிடத்தக்கது) பிரித்தானியாவின் தொழில்கட்சியை சேர்ந்த தமிழ் கவுன்சிலரான கணா ஈடுபட்டுள்ளதாகவும் சிறீலங்கா காடியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கான தொடர்பாளராக, ஜி.ரி.வி தொலைக்காட்சியின் உரிமையாளர் செல்வி திகழ்வதோடு, நாடுகடந்த அரசாங்கத்தை சேர்ந்த, இளையதம்பி செல்வநாதன், பொன் பாலராஜன் மற்றும் நோர்வே நாட்டில் வசித்து வரும் சர்வே என்பவரும் இந்த பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களிலில் ஒரு தரப்பினர் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தமிழர்களின் எதிர்காலத்தை மேலும் ஆபத்தான பாதைக்குள் தள்ளுவதோடு, எமது மக்களின் அவலங்களை மேலும் அதிகரிக்கும் என பரிஸ்தமிழ்.கொம்மின் அரசியல் ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா காடியன் ஆங்கில கட்டுரையை பின்வரும் இணைப்பினுடாக வாசிக்கலாம்.

KP’s secret diaspora Tamil contacts revealed

http://www.srilankag...l-contacts.html

http://www.paristami...jI3Mjk2MTQw.htm

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லா ஊரில் பூனைகளுக்கு கொண்டாட்டமாம்! போராட்டத்தின் பேரால் பொய்களை உற்பத்தி செய்பவர் யார்? - சர்வே

'புலிகள் இல்லா ஊரில் பூனைகளுக்கு கொண்டாட்டம்' என கனடா நக்கீரன் முன்னர் ஒரு கட்டுரையில் எழுதி இருந்தமையினைப் படித்திருக்கிறேன்.

இப்போது புலத்தில் நடைபெறும் சில விடயங்களைப் பார்க்கும்போது நக்கீரனின் கூற்றுத்தான் நினைவில் வருகிறது.

அறநெறி அற்ற மனிதர்களால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் உற்பத்தி செய்யும், பரப்பும் பொய்கள் குறித்து அவற்றை உதாசீனம் செய்வதே உகந்தவழி எனக் கருதி வந்தமையால் என் தொடர்பாக பரப்பப்படும் பொய்களை மறுத்து எதனையும் இதுவரை நான் எழுதியதில்லை.

பொய்களைப் பரப்புவது ஒரு திட்டமிட்ட செயற்திட்டமாக, அதுவும் போராட்டத்தின் பேரால் மேற்கொள்ளப்படும் நிலை வளர்ச்சிகண்டு வருவதால் தொடர்ந்தும் அமைதி காப்பது நன்மையானதுதானா என நான் எனக்குள் எண்ணியதுண்டு.

பொய்களை மறுத்துரைக்காவிட்டால் உண்மைகளை அறிய விரும்பவர்களுக்குக்கூட உண்மைத் தகவல்கள் போய்ச் சேராது விட்டு விடக்கூடிய ஆபத்தும் உண்டு.

இதனால் நேற்று (27.10.2012) 'சிறிலங்கா கார்டியன்' இணையத்தளத்தில் என்னைத் தொடர்புபடுத்தி வெளிவந்த செய்தியொன்று தொடர்பாக எனது மறுப்பினைப் பதிவு செய்தல் அவசியம் எனக் கருதுகிறேன்

சிறிலங்கா கார்டியன் இணையமும் ஊடகஅறம் பிறழ்ந்துதான் அந்தச் செய்தியினை வெளியிட்டிருக்கிறது.

சிறிலங்கா கார்டியன் இணையத்துக்கு கே.பியுடன் நெருக்கமான ஒருவரிடம் இருந்து மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப்பெற்றதாம். இம்மின்னஞ்சலை அனுப்பிவர் தமது விபரத்தை இரகசியமாகப் பேணுமாறு மின்னஞ்சலில் கோரியிருந்தாராம். இம் மின்னஞ்சலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்கு முக்கியஸ்தர்களுடன் கே.பி தொடர்புகளை பேணி சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இச் செய்தியில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நான்கு பெயர்களில், GTV இயக்குனர் செல்வி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகர் பொன் பாலராஜன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர்களில் ஓருவரும் நிதி அமைச்சருமான பேராசிரியர் செல்வநாதன் ஆகியோருடன் எனது பெயரும் இருந்தது.

எவர் அனுப்பியதென்ற விபரம் எதுவும் வெளியிடப்படாத ஒரு மொட்டை மின்னஞ்சல்தான் இச் செய்தியின் ஆதார அடிப்படை.

இச் செய்தி தொடர்பாக எனது மறுப்பினை இரு அடிப்படையில் பதிவு செய்கிறேன்.

முதலாவது இச் செய்தியில் குறிப்பிடப்பட்டவாறு கே.பியுடன் எந்தவகையான தொடர்புகளையும் நான் பேணிக் கொள்ளவில்லை. இரண்டாவது, நான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு முக்கியஸ்தரும் கிடையாது.

இப்போது மட்டுமல்ல, கே.பி மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஒரு தடவை கூட அவருடன் நான் தொடர்புகளைப் பேணிக் கொண்டதில்லை.

இது நானாக எடுத்துக் கொண்ட ஒரு முடிவு. கே.பி இப்போது இருக்கும் இடத்தில் இருந்து இவரால் சுயாதீனமான இயங்க முடியாது என்பதனை நான் உணர்ந்து கொண்டதால் நானாக எடுத்துக் கொண்ட ஒரு முடிவு.

புலத்தில் நாம் போராட்டத்துக்காகச் செயற்பட்டகாலத்தில் தலைமை எவரைப் பொறுப்பாளராக அடையாளம் காட்டியதோ அவரை நாம் பொறுப்பாளர்களாக ஏற்றுச் செயற்பட்டோம். இதில் தளபதி கிட்டுவும் ஒருவர். திலகரும் ஒருவர். கேபியும் ஒருவர். எமக்கு இவர்கள் இயக்கத்தின் சார்பில் பொறுப்பாளர்களாக இருந்தார்கள். நாங்கள் எவருக்கும் தனிப்பட்ட விசுவாசிகளாக இருந்ததில்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எனது பங்கு ஒரு போதும் தனிமனித விசுவாசத்தில் இருந்து கட்டப்பட்டதல்ல. கொள்கை நிலைப்பாடு வழிவகையில் இருந்துதான் நான் எனது பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறேன். இந்த வகையில் சிறிலங்காவின் பிடியில் இருக்கும் கே.பியுடன் தொடர்புகளைப் பேணிக் கொள்வதில்லை என்ற எனது முடிவும் எனது கொள்கை வழி நிலைப்பாட்டின் அடிப்படையில் அமைந்ததுதான். எனது இந்த மறுப்பை மறுத்துரைப்பவர் எவரையும் உரிய ஆதாரங்களுடன் பேசுமாறு கோருகிறேன். பொய்ச்செய்திகைளத் துணைக்கழைப்பது ஆதாராம் அல்ல என்பதனையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா கார்டியன் இணையத்தளத்தில் இச் செய்தி வெளிவந்திருக்கக்கூடிய பின்னணி தொடர்பாக எனது சந்தேகத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

புலத்தில் போராட்டம் தொடர்பான ஏகபோகச் சிந்தனைக் காய்ச்சல் சிலரைப் பீடித்திருக்கிறது. தமது ஏகபோகத்துக்குத் தடையாக இருப்பவர்கள் மீதெல்லாம் சேறடித்து அவர்களை மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்படுத்தி விடலாம் என இவர்கள் நம்புகிறார்கள்.

சிறிலங்கா கார்டியன் செய்தியில் இந்த ஏகபோகச் சிந்தனைக்காரரின் ஏகபோகத்துக்கு சவாலாக அமைபவர்கள்தான் இலக்கு வைக்கப்பட்டிக்கிறார்கள்.

GTV இவர்களின் ஏகபோகத்துக்கு ஒரு சவால். GTV செல்வி சிறிலங்கா கார்டியனுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இலக்கு வைக்கப்பட்ருக்கிறார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இவர்களது ஏகபோகத்துக்குச் ஒரு சவால். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் பிரதமர் ருத்ரகுமாரனுக்குத் தெரியாமல் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கேபியுடன் தொடர்புகளைப் பேணுவதாக மின்னஞ்சலில் கதையொன்று புனையப்பட்டிருக்கிறது. என் போன்ற கருத்தியலாளர்களும் இவர்களது ஏகபோகத்துக்கு சவாலாகத் தெரிகிறார்கள் போலும். என் மீதும் குறி வைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு எனது கேள்வியும் சந்தேகமும் இதுதான். சிறிலங்கா கார்டியனுக்கு கேபிக்கு நெருக்கமானவர்கள் என்று தெரிவித்து இந்த மின்னஞ்சலை அனுப்பி வைத்தவர்கள் யார்? ஏன் இவர்கள் ஏகபோகச் சிந்தனையாளர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது? தாம் சேறுபூச விரும்புவர்கள் மீது சேறு பூச இன்னொரு இணையத்தளத்தை ஆதாரம் காட்டுவதற்காக இவர்கள் வகுத்துக் கொண்ட ஒரு புதிய உத்தியாக ஏன் இருக்கக்கூடாது?

நம் முன்னால் பெரும் சவால்கள் மிகுந்திருக்கும் காலத்தில் பொய்கள் குறித்து மறுத்தெழுதி நேரத்தை செலவிடும் நிலை ஏற்பட்டிருப்பது ஒரு சோகம்தான். என்ன செய்வது? புலிகள் பெயரில் பூனைகள் உலவும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம்!

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=514b4af6-4804-4215-a7d4-2187c3f1a1c0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களை இலக்குவைத்து சிங்கள தேசத்தின் இன்னொரு பேச்சுவார்த்தை நாடகம்!

சிறீலங்கா | ADMIN | OCTOBER 31, 2012 AT 09:03

சிங்கள தேசத்தின் தமிழினத்தின் மீதான வெற்றிப் பெருமிதமும் பௌத்த சிங்கள சிறிலங்கா இலக்கும் முள்ளிவாய்க்காலின் பின்னரும் நிறைவேறாத கனவாகவே தொடர்வதற்குப் புலம்பெயர் தமிழர்களது இலட்சிய உறுதியே முக்கிய காரணியாக உள்ளது.

முள்ளிவாய்க்காலில் நடாத்தி முடித்த தமிழின அழிப்பின் தொடர்ச்சியாக சிங்கள தேசத்தின் அடுத்த இலக்காகவும் புலம்பெயர் தமிழர்களே குறி வைக்கப்பட்டார்கள். பல நூற்றுக்கணக்கான சதிகாரர்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் களம் இறக்கப்பட்டார்கள். இதற்காக சிங்கள ஆட்சியாளர்களது பெருத்த வளங்களும் தாராளமாகவே திறந்து விடப்பட்டது.

இருந்த போதிலும் புலம்பெயர் தமிழர்களது இலட்சிய உறுதியைச் சிதைத்து விட சிங்களத்தால் முடியாமலேயே போய்விட்டது. சிறு சிறு குழப்பங்களையும் சில குழுக்களையும் உருவாக்க முடிந்ததே தவிர தமிழீழம் நோக்கிய புலம்பெயர் தமிழ் மக்களது இலட்சிய உறுதியில் உடைவினை ஏற்படுத்திவிட முடியவில்லை.

அரச பயங்கரவாதத்தை முழுமையாகப் பாவித்து ஈழத் தமிழர்களை மௌனத்திற்குள் புதைத்து வைத்திருக்கும் சிங்கள தேசத்தின் எந்த வன்முறையும் எத்தகைய வற்புறுத்தல்களும் புலத்தின் பலத்திற்குச் சவாலாக அமையவில்லை. சிங்களக் கொடுங் கரங்களுக்கு எட்டாத தொலைவில்இ மேற்குலகின் ஜனநாயகச் சிறகுகளின் நிழலில் அடைக்கலம் தேடிக்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் சிங்களத்திற்குத் தொடர்ந்தும் புலிச் சொர்ப்பனமாகவே உள்ளார்கள்.

இதனால் கருணாக்களை உருவாக்கிச் சிதைக்க முடியாத புலம்பெயர் தளங்களை கே.பி.கள் மூலமாகச் சிதைக்கும் ஒரு அணுகுமுறையைத் தற்போது சிங்கள ஆட்சியாளர்கள் பரீட்சித்துப் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவேஇ கே.பி.யால் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம் புலம்பெயர் சமூகத்தில் நிலை எடுக்க முடியாத நிலையை அடைந்துவிட்டது. உருத்திரகுமாரனைக் கதாநாயகனாகப் போட்டு கே.பி.யால் இயக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் சேடம் இழுக்கும் நிலையை அடைந்துவிட்டது. ‘எண்ணைச் செலவொழிய பிள்ளை வளர்த்தியில்லை என்பது போலவே சிங்கள தேசத்தின் அத்தனை முயற்சிகளும் வீணாகிப் போன நிலையில் புதியதொரு திட்டத்துடன் சிங்கள தேசம் புலம்பெயர் தமிழர்களை வழைத்துப் போட முயற்சிக்கின்றது.

புலம்பெயர் தமிழர்களை நோக்கியும் பேச்சுவார்த்தை என்ற தூண்டில் போடப்படுகின்றது. ஏற்கனவே சிங்களத்தின் ஆசையூட்டல்களுக்குள் அகப்பட்டுக்கொண்டுள்ள சில புலம்பெயர் மீன்கள் இந்தத் தூண்டில்களில் கொழுவப்பட்டுள்ளனர். இதில் கே.பி.யின் பினாமி என நம்பப்படும் ஜி.ரி.வி. உரிமையாளர் செல்வின் முள்ளிவாய்க்காலின் பின்னர் பெரும் செல்வந்தராகிப்போன கனடா நாட்டில் தங்க நகைச் சாம்ராஜ்யம் நடாத்தும் விடுதலைப் முன்னாள் நிதி சேகரிப்பாளர் இன்பம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை கே.பி. சார்பான திசையில் வழிநடாத்திச் செல்லும் பொன் பால்ராஜன் ஆகியோரது தலைகள் இந்தத் தூண்டில்களில் தென்படுவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

எது எப்படியிருந்தாலும் புலம்பெயர் தமிழர்கள்மீது பலப் பிரயோகம் செய்ய முடியாத நிலையில் சிங்கள தேசம் சாதிக்க விரும்புவது எதுவும் புலம்பெயர் தேசங்களில் கைகூடப் போவதில்லை. கிழக்கை முஸ்லீம் காங்கிரஸ் ஊடாகக் கையகப்படுத்திக் கொண்டுள்ள சிங்கள ஆட்சியாளர்களுக்கு வடக்கையும் அந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கான கால அவகாசம் தேவைப்படுகின்றது. அதுவரை புலம்பெயர் போர்க் களத்தை ஆற்றுப் படுத்துவதற்கான அவசிய தேவை சிங்களத்திற்கு உள்ளது. அதற்கு இன்னொரு பேச்சுவார்த்தைத் தளம் ஒன்று தேவைப்படுகின்றது. அது இன்னொரு முள்ளிவாய்க்கால்வரை நகர்த்தப்படும்.

இந்தச் சதிக்குள் புலம்பெயர் சமூகம் சிக்கிக்கொண்டால் தமிழீழம் அல்ல ஒரு தமிழ்க் கிராமம் கூட தமிழர்களுக்கு மிச்சமாக இருக்கப் போவதில்லை.

- இசைப்பிரியா

http://thaaitamil.com/?p=37103

யாரப்பா அந்த புலம்பெர் பிரதிநிகள், அவர்களை யார் புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளாக்கியது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.