Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வான்வெளியில் சீன விமானங்கள் அத்துமீறல் - இந்தியா குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jets-261012-150.jpg

இந்திய வான்வெளியில் சீன விமானங்கள் அத்துமீறி பறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எஸ்.புர்ஜி தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் வருடாந்திர கருத்தரங்குக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் எம்.எஸ்.புர்ஜி பேசியதாவது- கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 3 முறை இதுபோன்ற அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டுள்ளது. ஆனால், அந்நாட்டின் விமானங்கள் மிகவும் உயரமாகப் பறந்ததால், எவ்வளவு தூரம் அவை நம் நாட்டு எல்லைக்குள் வந்தன என்பதை கணக்கிட முடியவில்லை. எனினும், அவர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர் என்பதை ஊகிக்கிறோம்'' என்றார்.

இது தொடர்பாக இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் ரஞ்சித் சின்ஹா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது-

"இந்திய - சீன எல்லைப் பகுதி தெளிவாக வரையறை செய்யப்படவில்லை. சில நேரங்களில் இந்திய எல்லை என நாம் கருதும் பகுதிக்குள் நமது விமானங்கள் பறந்து செல்வதை சீனத் தரப்பில் அத்துமீறல் என்கின்றனர். எல்லைப் பகுதியை நிர்ணயிக்காததால், சீன ராணுவத்தினர் மேற்கொள்ளும் ரோந்துப் பணிகளில் சில சமயங்களில் அத்துமீறல் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவ்வப்போது அறிக்கை அளித்து வருகிறோம்.

இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படைக்கு வான் பிரிவு ஒன்றை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது. இப்போதைக்கு எங்களுக்குத் தேவைப்படும்போது விமானப் படையை உதவிக்கு அழைக்கிறோம். மற்ற படையினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினருடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். 1962ஆம் ஆண்டு இந்திய - சீன போருக்கு பின், நமது படை வலிமை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற ராணுவத்தின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு முடிவு ஏதும் எடுக்கவில்லை'' என்றார் ரஞ்சித் சின்ஹா.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், அந்நாட்டின் விமானங்கள் மிகவும் உயரமாகப் பறந்ததால், எவ்வளவு தூரம் அவை நம் நாட்டு எல்லைக்குள் வந்தன என்பதை கணக்கிட முடியவில்லை. எனினும், அவர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர் என்பதை ஊகிக்கிறோம்'' என்றார்.

நீங்கள் ஊகிச்சு முடிக்கிறதுக்கிடயில, சீனாக்காரன் செங்கோட்டையில, நிண்டு உங்களுக்குக் 'ஹாய்' சொல்லப் போறான்.. கவனம்! :wub:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புலம்பல்

இப்படி அவன் எல்லைக்குள் நீங்கள் போயிருந்தால்

சீனன் சுட்டு வீழ்த்திவிட்டு

கம்மென்று இருந்திருப்பான்.............. :lol:

ஈழத்தில் மட்டுந்தான் ஹிந்தியனின் சண்டித்தனம் :D

  • கருத்துக்கள உறவுகள்

கீழே நின்றுகொண்டு சவுண்ட் குடுக்கலாம்.. :rolleyes: மேலே அவனுக்குக் கேட்குமா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீழே நின்றுகொண்டு சவுண்ட் குடுக்கலாம்.. :rolleyes: மேலே அவனுக்குக் கேட்குமா? :D

:D :D இதுக்கெல்லாம் முகக்குறியை தவிர என்னப்பா போட..? :rolleyes:

(சிரிப்பு வாறதுக்கு .. சிரிக்கிறேன் என்று எழுத முடியுமா? :unsure: )

டெல்லிக்கு வந்துட்டுப் போனாலும் நீங்கள் ஊகித்துத் தான் அறியவேண்டும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படகில மும்பைக்கு வந்து வந்து போறான், சீனன் பறந்து வந்துட்டு பறந்து போறான். உங்கட எல்லைக்குள வந்து சிங்களவன் மீனவர்களை சுட்டுப்போட்டு போறான்.

ஆனால் நீங்கள் கலாம் சொன்னமாதிரி சூப்பர் பவராக வருமெண்டு கனவு கானுகிரிங்கள்.

முதல்ல தேவையான அளவு கக்கூஸ் கட்டுங்கோ பிறகு வேலிகளை சரியாக அடியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா விமானம் அத்து மீறினாலும் இந்தியாவால ஒண்டும் புடுங்க ஏலாது.இந்தியக் கடற் பரப்பில் அத்து மீறி தமிழகத்தமிழனை சுடுற சிறிலங்காவைத் தட்டிக் கேட்க வக்கில்ல சீனாவோட மோதப் போகினமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Lessons of the China-India War

http://www.project-syndicate.org/commentary/why-china-india-tensions-are-growing-by-brahma-chellaney

Asian Defense Spending, 2000–2011

[size=3]

T[size=4]his report analyzes the defense budgets of the five countries with the largest defense budgets in Asia: China, India, Japan, South Korea, and Taiwan. Unlike defense budgets in many other regions, defense spending in these five countries has been on the rise for over a decade. For each country, the report examines overall defense spending for the years 2000 to 2011 as well as spending on acquisition, personnel, operations and maintenance (O&M) and research and development (R&D). It closes with several key findings and suggestions for further research.[/size][/size][size=3]

[size=4]Publisher CSIS[/size][/size][size=3]

[size=4]ISBN 978-0-89206-753-4 (pb)[/size][/size][size=3]

http://csis.org/publication/asian-defense-spending-2000-2011[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய.. செவிழித் தகவல்களின் படி,

இந்திய விமானம் தான், இந்தியாவின் எல்லைக்குள் பறந்தது என்றும், அதைச் சீன விமானம் என்று ஆரோ... கதை கட்டி விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

இந்தியாவா... கொக்கா..., சீன விமானம் பறந்தால்... சுட்டு விழுத்தியிருப்பார்கள். :D

பிந்திய.. செவிழித் தகவல்களின் படி,

இந்திய விமானம் தான், இந்தியாவின் எல்லைக்குள் பறந்தது என்றும், அதைச் சீன விமானம் என்று ஆரோ... கதை கட்டி விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

இந்தியாவா... கொக்கா..., சீன விமானம் பறந்தால்... சுட்டு விழுத்தியிருப்பார்கள். :D

வயிறு நோக சிரிக்கிறேன் அண்ணா :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே 1962 இல் நடந்த போரில் 1383 இந்தியச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். 1700 பேர் காணாமல் போயினர். மேலும் 4000 பேர் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இன்னும் 1050 பேர் காயப்பட்டனர். சீனத்தரப்பில் கொல்லப்பட்டவர்கள் 700 பேர் மட்டுமே. காயப்பட்டவர்கள் 1600 பேர். பெருமளவு நிலப்பரப்பையும் இந்தியா இப்போரில் சீனாவிடம் பறிகொடுத்தது. சீனா தனது பகுதி என்று சொல்லிவந்த இடங்களைக் கைப்பற்றியபின்னர்தான் யுத்தத்தை நிறுத்தியது. கொல்லப்பட்டு தமது இராணுவத்தால் கைவிடப்பட்ட இந்தியா ராணுவ வீரர்களின் சடலங்களை சீன ராணுவம் பூரண இராணுவ மரியாதைகளுடன் தகனம் செய்ததை தப்பியோடி வந்த இந்திய வீரர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.