Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர் யார்..??! (வெள்ளிக்கிழமை கிசுகிசு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

79162_2.jpg

வெளியாள்: (யாழுக்கு வெளியில்..)

அநேகரும் அறிய..அதிகம் பிரபல்யம் இல்லாதவர்.. ஆனால் எல்லோராலும் மறைமுகமாகப் போற்றப்படுபவர்.. இவரின் ஒற்றைப் பேச்சில் உலகமே ஆடிப்போகும்.. இவருக்கும் நம்ம யாழிற்கும் நெருங்கிய தொடர்புண்டு.. இவர்.. மூன்று எழுத்துக்களின் சொந்தக்காரன்.. யார் இவர்?!

உள்ளாள்: (யாழுக்குள்..மட்டும்)

இவர் சிரிச்சால் பச்சையா சிரிப்பார்.. பச்சையா எழுதுவார்.. பச்சையா எழுதிறத அதிகம் விரும்புவார்.. பச்சைக்கும் இவருக்கு இருக்கும் தொடர்பு போல்.. ஆகாயத்தில் பறந்தடிக்கும் பச்சைக் கிளிக்கும் இவருக்கும் தொடர்பிருக்குது.. நம்மளில் ஒருவர்.. யார் இவர்..??!

(நீங்களும் இப்படி.. ஒரு சோடி.. வெளியாள்.. உள்ளாள் கிசுகிசு எழுதலாம். ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் படியான விமர்சனங்களாக அது அமையக் கூடாது.. பதிலில் உயர்திணைக்குரியவர்கள் தான் இருக்க வேண்டும். )

சரி இப்ப யார் அந்த வெளியாள்.. யார் அந்த உள்ளாள் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..

அடுத்த சோடி.. அடுத்த வெள்ளிக்கிழமைக்கு.. உங்களில் ஒருவரால் இடப்பட்டால் நன்று. அப்படி மாறி மாறி எல்லாரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்..இடுங்கள்... இதற்கு வெள்ளிக்கிழமை கிசுகிசு.. என்று காரணப்பெயர் இடப்படுகிறது..!)

இதற்கான உத்தியோகபூர்வ பதிலை கிசுகிசு எழுதிறவர் இட வேண்டும். எனது பதில் அடுத்த வெள்ளி தான் வரும்... அதற்கு முன் நீங்கள் இட்டால் உங்களில் முதன்மையானவருக்கு சிறப்புப் பாராட்டுக் கிடைக்கும்..மற்றவர்களுக்கு பாராட்டுக் கிடைக்கும்..!

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. :):icon_idea:

Edited by nedukkalapoovan

நல்லதொரு பொழுது போக்கான திரி.

இரண்டையும் என்னால் கண்டு பிடிக்க முடியல்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது, சாத்திரியார்! :D

kili+jothidam.jpg

முதலாவதற்கு, வாறன்!

முதலாவது 'விக்கி'???? :o

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருமே இன்னும் சரியாக கண்டுபிடிக்கல்ல..! :(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன்.

  • கருத்துக்கள உறவுகள்

2) Kiruban :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2) Kiruban :D

இசை எப்பவுமே இப்படியான விடயங்களில் விடை கண்டுபிடிப்பதில் சுழியன்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நான்அடுத்து வருகின்ற ஒரு மாத காலத்திக்கும் எந்த கிசு கிசு வும் வாசிப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதால் இன்னும் சில நாட்களே அதற்க்கு இருப்பதால் இப்பொழுதே என்னை தயார்படுத்தி கிட்டு அப்புறம் decrmber ல இருந்து கிசு கிசு படிக்க வாறன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்அடுத்து வருகின்ற ஒரு மாத காலத்திக்கும் எந்த கிசு கிசு வும் வாசிப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதால் இன்னும் சில நாட்களே அதற்க்கு இருப்பதால் இப்பொழுதே என்னை தயார்படுத்தி கிட்டு அப்புறம் december ல இருந்து கிசு கிசு படிக்க வாறன்.

நாங்க இதனை வரும் புதன்கிழமையில் இருந்து நான்கு கிழமைகளுக்கு ஒத்திவைப்பதாக இருக்கிறம். கள உறவுகள் விரும்பினால் தொடரலாம். அதனால் தான் பதிலையும் இனங்காட்டிச் செல்கிறோம். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான்அடுத்து வருகின்ற ஒரு மாத காலத்திக்கும் எந்த கிசு கிசு வும் வாசிப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதால் இன்னும் சில நாட்களே அதற்க்கு இருப்பதால் இப்பொழுதே என்னை தயார்படுத்தி கிட்டு அப்புறம் decrmber ல இருந்து கிசு கிசு படிக்க வாறன்

எல்லாரும்... இப்பிடிச் சொன்னா....

யாழை ஒரு மாதகாலத்துக்கு, பூட்டி விடுங்க.

நாங்களும், வீட்டிலை... ஏதாவது உருப்படியாய்... செய்யலாம்.

யாசீர்

கிருபன்

எல்லாரும்... இப்பிடிச் சொன்னா....

யாழை ஒரு மாதகாலத்துக்கு, பூட்டி விடுங்க.

நாங்களும், வீட்டிலை... ஏதாவது உருப்படியாய்... செய்யலாம்.

சிறிஅண்ணா உண்மையான ,சிந்திக்க வேண்டிய கருத்து ..........மறுபக்கம் பார்த்தோமானால் .....உண்மையில் இன்றைய தமிழனின் நிலையையும்,தமிழீழ போராட்டத்தின் நிலையையும் ,உங்களுக்கு நான் சொல்லத்தேவயில்லை ..............பிசைக்காரநிலைக்கு ஈழத்தமிழர்களை தள்ளிவிட்டு ,ஒரே அடியாய் அழிக்க நினைக்கும் எதிர் சக்திகளும் , இந்த பாழாய்ப்போன உலம்கமும் ,இன்று தமிழர்களாகிய நாம் எம் விடுதலை சார்ந்த நிகழ்வுகளில் ஒன்றிணைவதை தடுக்கும் பாரிய முயற்சிகளை நாம் அறிவோம்.அந்த வகையில் முள்ளிவாய்க்காலுக்கு பின் இங்கு நடக்கும் மாவீரர் நினைவுகளை எடுத்துக்கொண்டோம் ஆனால் எப்படி எப்படி எம்மை உளவியல் ரீதியில் குழப்புகிறார்கள் ...........எமக்கிடையில் வாதங்களையும்,விவாதங்களையும் உருவாக்கி எமக்குள்ளேயே பிரிவுகளை உருவாக்கும் ஒரு அபூர்வமான ,உண்மையான நிலையை காண்கிறோம்............ இந்த ஒரே ஒரு நிகழ்வுதான் எம்மை எப்போதும் ஒருங்கிணைத்து எம் எதிர்கால சந்ததியினருக்கு எம் விடுதலை சரித்திரத்தையும்,விடுதலைக்கான தேவையையும் உணர்த்தும் நிகழ்வென்பதால் .நாம் எத்தனை சவால்கள் வந்தாலும் அதை துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும் ......அதன் வெளிப்பாடே நெடுக்சின் கருத்தும் .........அதற்கு பல உறவுகள் ஆதரவு கூறிய கருத்துக்க்களுமாகும் ,,,,,,,,,,,நாம் நிழலி கூறியது போல் இந்த மாதத்தில் மாவீரர்களின் சரித்திரம் ,அவர்களின் திறமைகளை பதிவாக்குவோம்..............இது எம் வரலாற்று கடமையுமாகும் ..........

[ சிறி அண்ணா இது உங்களுக்கு புத்தி கூறுகிறேன் என்று தவறாய் நினைக்க வேண்டாம் ...........நீங்கள் எல்லாம் தெரிந்தவர் என்பதையும் நான் அறிவேன் ,,,,,,,,,,,,,,,,,,பொதுவான எனது ஒரு சிறிய சிந்தனை,,,,,,,,,,,,நன்றி ]

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது : சீமான்? :unsure:

இரண்டாவது: முதலில் என்னைத்தான் குறிக்கின்றது என்று நினைத்தேன் :wub: . ஆனாலும்...

வளர்ந்த பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் வசதிகள் இருந்தும் வாய்ப்புக்கள் இன்றி அவதிப்படும் யாழ்கள பெரிசுகள் சிலரில் ஒருவராக இருப்பார் என்று எண்ணினேன் :lol: . இப்படியானவர்கள்தான் படங்களில் அதிகம் நீலத்தையும், வாசிப்பில் அதிகம் மஞ்சளையும் விரும்புகின்றவர்கள் :wub: . இரண்டும் கலந்து உள்ளே எப்போதும் சதா பச்சையாகவே சிந்திப்பதால் அதையே இங்கும் பச்சை பச்சையாகவே தருகின்றவர்கள் :icon_mrgreen: . ஆயினும் வெளியே சிவப்பும் மஞ்சளும்தான் தங்கள் நிறங்கள் என்று பறை சாற்றுவார்கள். :lol:

நான் இலக்கியங்களில் பச்சையை நிறையவே படித்திருக்கின்றேன் :icon_mrgreen: . அதற்காக பச்சையை மட்டும்தான் பார்ப்பதில்லை ^_^ . எப்போதும் சிவப்புக்கு பிறகுதான் பச்சை :) . ஆனால் இச்சைக்கு வடிகாலை எழுத்தில் தேடுபவனில்லை. :icon_idea:

[size=5]நியானி[/size]

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த திரியை திசை திருப்ப விருப்பம் இல்லை...ஏற்கனவே கருத்து வந்துள்ளதால் சொல்கிறன்.குறிப்பிட்ட தினம் அன்று யாழும் எங்களோடு ஒத்துளைச்சு நிற்கிறது தானே..அப்படிப் இருக்கையில் மௌன விரதம் தேவையா என்றும் நினைக்க தோன்கிறது..முதலில் எனக்கும் இதில் ஆர்வம் இருந்தாலும்....நாங்கள் செய்வது எங்களுக்குள்ளயே தான் நிற்கப் போகிறது..அகில உலகத்திற்குமே எங்கள் மௌனம் பற்றி தெரியப்போகிறதா,...அல்லது தெரியப்படுத்த முடியுமா..மாறாக எங்களை நாங்களே முடக்கி கொள்கிறோம்.

பி.கு.எனது கருத்து பிழையாக இருந்தால் இடத்தை விட்டு நீக்குவதற்கு அனுமதி அளிக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த திரியை திசை திருப்ப விருப்பம் இல்லை...ஏற்கனவே கருத்து வந்துள்ளதால் சொல்கிறன்.குறிப்பிட்ட தினம் அன்று யாழும் எங்களோடு ஒத்துளைச்சு நிற்கிறது தானே..அப்படிப் இருக்கையில் மௌன விரதம் தேவையா என்றும் நினைக்க தோன்கிறது..முதலில் எனக்கும் இதில் ஆர்வம் இருந்தாலும்....நாங்கள் செய்வது எங்களுக்குள்ளயே தான் நிற்கப் போகிறது..அகில உலகத்திற்குமே எங்கள் மௌனம் பற்றி தெரியப்போகிறதா,...அல்லது தெரியப்படுத்த முடியுமா..மாறாக எங்களை நாங்களே முடக்கி கொள்கிறோம்.

பி.கு.எனது கருத்து பிழையாக இருந்தால் இடத்தை விட்டு நீக்குவதற்கு அனுமதி அளிக்கிறேன்.

எனக்குள்ள ஒரு சின்ன நெருடல்.. உந்தப் பொம்பிளையள் 20.. 21 நாளை கெளரிகாப்புன்னு.. விரதம் இருந்து கழிக்கினமே.. அப்போ எல்லாம்.. ஏன் எதைப்பற்றியும் கவலைப்படுறதில்ல. 25 நாளுக்கு அரோகரான்னுகிட்டு.. முருகன் சந்திதானத்தில்.. பசன் சோ காட்டினமே.. அதைப்பற்றி எவருமே எதுவும் சொல்ல முனையுறதில்ல. ஆனா.. ஒரு மனிதன்.. தான் கூட வாழ்ந்த சொந்தங்களை நினைச்சுக்கிட்டு.. அவங்க உணர்வுகளை.. அவங்க நிஜங்களை.. உலகிற்கு உணர்த்த ஒரு 30 நாளில அதனை கொஞ்சம் உரமாச் சொல்ல.. காட்ட.. அதனைப் பயன்படுத்திறதில என்ன பெரிசா இழக்கப்பட்டுப் போகப் போகுது. நாங்க என்ன எங்கட அன்றாடக் கடமைகளை கெளரிக்கு அர்ப்பணிக்கிறமா.. விரதமுன்னு. இல்லையே..! இல்ல உண்ணாம இருந்து செத்தா போறம் இல்லையே..??! இல்ல 21x24x7 சதா கெளரியையா நினைச்சிக்கிட்டா இருக்கிறம்... அதுவும் இல்ல..!

எதுஎதுக்கோ எல்லாம் கொமிட் பண்ணுறமாம்.. ஒரு கேட்டுக் கேள்வி இல்லையாம்.. ஆனால்.. மாவீரர்கள் என்று வரும் போது..????! எனக்கு எம்மவரின் இந்த மனநிலையையே விளங்கிக்கொள்ள முடியல்ல..!!!

ஆனா ஒன்னு.. எனக்கு என்ன சரின்னு தோனுதோ அதை நான் செய்வன். அவன்.. இவன் சொல்லுறான்னு நான் எனக்கு விளக்கமற்ற அல்லது நான் விளங்க முடியாத முடிவுகளை எடுத்துக்க மாட்டன்..!

இத்தோட தயவுசெய்து..இந்தத் திரிக்க அந்த மாற்றரை விட்டிடுங்க..! :):icon_idea:

யாசீர்

கிருபன்

கடவுள் பாதி.. மிருகம்.. பாதி... கலந்து செய்த கலவை நான் என்பது போன்றான பதில்..! :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து நாங்கள் எமது தேசப் புதல்வர்களின் புதல்விகளின் நினைவேந்தலுடன் (ஒவ்வொரு நாளும் சாமி கும்பிட நாங்கள்.. கோவில் திருவிழாக்களையும் செய்யுறம் இல்லையா. விரதங்களையும் பிடிக்கிறம் இல்லையா. காணாத கடவுளுக்கே இருக்கிறார் என்ற நம்பிக்கையில் என்னென்னவோ முறைகளில் எல்லாம்.. மதிப்பளிக்கிற நாங்கள்.. கண் முன் வாழ்ந்த தியாகிகளுக்கு மதிப்பளிக்க ஆயிரம் வியாக்கியாணங்களை முன் வைப்பதை தவிர்த்து) கார்த்திகை 27 - மாவீரர் நாள் வரை பயணிக்க உள்ளதால் இந்தத் தலைப்பு உட்பட அனைத்துப் பொழுதுபோக்கு மற்றும் அவசியமற்ற தலைப்புக்களில் இருந்தும் எம்மை விடுவித்துக் கொள்ள உள்ளதால்.. வெள்ளிக்கிழமை கிசுகிசுவின் எமது கிசுகிசுக்களுக்கான விடையை இன்றே தருகின்றோம். தவிர்க்க முடியாத சூழல் என்பதால்.

1.2001-europaeum-eighth.jpg

[size=1]Sir[/size] Tim Berners-Lee - www என்றும் 3 எழுத்துக்களின் சொந்தக்காரர். நம்ம யாழிற்கு செல்ல வழிசொல்லும்.. யாழின் முகவரில் புதைந்து நிற்கிறார்.. அந்த 3 எழுத்துக்கள் மூலம் இவரும் யாழோடு நெருங்கி உறவாடுகிறார். இவரை நேரடியாகப் போற்றாவிட்டாலும் www போற்றுவோர் பலர். அந்த வகையில் மறைமுகமாகப் போற்றப்படுபவர். இவரின் இந்த www என்ற பேச்சே உலகத்தை இன்று ஆட்டிப்படைக்கிறது. அதுமட்டுமன்றி.. www எழுதித் தட்டினாலே இணைய உலாவியில் உள்ள பூமி கூட ஆடிப் போகிறது.. அந்த இணைய முகவரிக்கு எம்மை அழைத்துச் செல்ல..!

2. photo-321.jpg.. இவர் தான் அவர்.

இசைக்கலைஞன்.. ஈசன் போன்றவர்கள் கிசுகிசு 2ற்கு விடை தந்திருதார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

இசைக்கலைஞனுக்கு..

%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AF%2582.jpg

கார்த்திகைப் பூ பரிசளிக்கப்படுகிறது. ஈசனுக்கு பாராட்டுக்கள்.

முயற்சித்த உறவுகளுக்கும் கருத்துச் சொன்ன உறவுகளுக்கும் நன்றி.

இது முற்றிலும் ஒரு பொழுதுபோக்கு படைப்பு. யார் மனதையும் துன்பப்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல. தப்பித்தவறி அது நிகழ்ந்திருந்தால் அதற்கு வருந்திச் செல்கிறோம்.

:):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

2. photo-321.jpg.. இவர் தான் அவர்.

பச்சை மகுடத்திற்கு நன்றி :icon_mrgreen: . புதிதாக வந்த பச்சை (வண்டு) முருகன் என்னை விஞ்சிவிடுவார் என்பதால் பச்சை மகுடம் நிலைக்காது :(

சி.கு. தவளை இரை தேடும்போது அதன் கண்ணுக்கு இரை மட்டும்தான் தெரியுமாம். அதுபோல நான் பதியும் பல்வேறு விடயங்களில் பச்சைகளை :icon_mrgreen: மட்டும் தேடும் தவளைக் கண்காரர்களுக்கு :wub: வேறு எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்பது வாஸ்தவம்தான். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சை மகுடத்திற்கு நன்றி :icon_mrgreen: . புதிதாக வந்த பச்சை (வண்டு) முருகன் என்னை விஞ்சிவிடுவார் என்பதால் பச்சை மகுடம் நிலைக்காது :(

சி.கு. தவளை இரை தேடும்போது அதன் கண்ணுக்கு இரை மட்டும்தான் தெரியுமாம். அதுபோல நான் பதியும் பல்வேறு விடயங்களில் பச்சைகளை :icon_mrgreen: மட்டும் தேடும் தவளைக் கண்காரர்களுக்கு :wub: வேறு எதுவும் தெரிய வாய்ப்பில்லை என்பது வாஸ்தவம்தான். :lol:

யாழில எல்லாருக்கும் ஒரு highlight இருக்குது. உங்களுக்கு பச்சை தானே.. ஒரு highlight. எத்தனையையோ பதியுறீங்க ஆனா.. பச்சைக்கு மட்டும் தானே நீங்களே அதிகம் பச்சையில பதில் போடுறீங்க.. அது முகக்குறியா இருப்பினும். பச்சையா ஒரு பதிவு முழுக்க.. கடவுளைத் தீட்டிறன் என்று நீங்க எழுதினதுதான் யாழில் உங்க highlight டே. எல்லோருக்கும் அந்தத் துணிவு வராது. ரேக் இற் ஈசி.. கிருபண்ணா. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மலர் பரிசுக்கு நன்றிகள் நெடுக்காலபோவான். நாட்டிலும் அனைவருக்கும் இதே பரிசு கிடைக்க வேண்டும் என்பதே என் அவா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.