Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்வி: 20 ஆண்டுகள்- வீழ்வோமாயினும்; வாழ்வோம்

Featured Replies

இதிலே வந்து செல்வியைப் பற்றி எழுதி இந்தத் திரியை சுடு பறக்கச் செய்யும்படி அர்ஜுன் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதிலே வந்து செல்வியைப் பற்றி எழுதி இந்தத் திரியை சுடு பறக்கச் செய்யும்படி அர்ஜுன் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.

மலாலாவை பற்றி தான் ஒரு சிறு கட்டுரை எழுதுவதற்காக தான் மலாலவை பற்றி வாசிக்க வாசிக்க தனக்கு செல்வியின் நினைவு வந்ததாக மனைவி சொன்னார் .

எனக்கு செல்வியை பழக்கமில்லை மனைவிக்கு பழக்கம்.

எப்படிபட்டவர்களாக இருந்தால் இவர்கள் செல்வியை கொலை செய்திருப்பார்கள் என்று மனைவி இன்றும் சொல்லுவார்கள் .எனது மனைவி இப்போ எமது நண்பர்கள் தொடங்கிய பத்திரிகையில் இடைக்கிடை எழுதுகின்றார் .

இணைப்புக்கு நன்றிகள். அபராஜீத்தன்

ஒரு மாலவுக்காக உலகமே கண்ணீர் வடிக்கிறது.பாடகி மடோனா மலாவுக்காக கண்ணிர் சிந்தி ஒரு பாடலை அர்ப்பணிக்கிறார்.பிரித்தானியா தனது விசேட விமானத்தில் மாலாவை பிரித்தானியா கொண்டு வந்து தனது தலை சிறந்த வைத்திய நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிக்கிறது.பி.பி.சி உடபட மேற்குலகின் ஊடகங்கள் எல்லாம் மாலாவைப் பற்றி தினசரி ஒருதடவையாவது பேசுகின்றன. ஓராயிரம் மாலாக்கள் கல்வித்தாகத்தை சுமந்த பிஞ்சுகள் படிக்க விரும்பிய அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு துடிக்க துடிக்க வன்னியில் கொன்றழிக்கப் பட்டார்கள்.எமது மாலாக்களுக்காக உலகின் எந்த விசேட விமானங்களும் வரவில்லை உதவிக்கு.மேற்குலகின் எந்தப்பாடகியும் கண்ணீர் சிந்தவில்லை.எந்த ஊடகம்களும் அவர்களின் கண்ணீரை பேச வரவிலை சனல் 4 ஜ தவிர. என்ன ஒரு டிஸ்கிரிமினேசன். தமக்குப் பிடிக்காதவர்களை எதிர்த்ததால் மாலாவுக்கு இந்தப் பரிசுகள் கிடைக்கின்றன உலகத்தால்.மாலாவின் பெயரால் தமது அரசியலை செய்கிறது மேற்கு.இடியட்ஸ்.சுத்த சுய நலவாதிகள்.

செல்வியின் பெயர் இத் திரியில் அடிபட்டது. அவரின் விடுதலைக்காக பல அமைப்புகள் பத்திரிகைகள் முயன்றது. குரல்கொடுத்தது. உலக சுயநல அரசியலை மறுப்பதற்கில்லை அதே நேரம் எமது செய்காரியங்களே எம்மை அந்தியப்படுத்திக்கொண்டதும் உண்மை.

செல்வி குறித்த பதிவு

http://inioru.com/?p=23040

  • தொடங்கியவர்

அர்ஜுன்!

எனக்கும் மலாலாவை பற்றி வாசித்த பொழுது ஏனோ செல்வி பற்றிய ஞாபகம் வந்து போனது. நாங்கள் போராட்டத்தில் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று.

ஆயினும் நானாக அவரைப் பற்றி இதில் ஆரம்பிக்கின்ற தைரியம் வரவில்லை. நவம்பர் மாதம் வேறு தொடங்குகிறது. கேபியிடம் பணம் வாங்கிக் கொண்டு நவம்பர் மாதத்தை குழப்புகிறேன் என்று சிலர் எழுதிவிடுவார்கள். அதனால்தான் உங்களை பலிக்கடா ஆக்குவதற்கு தீர்மானித்தேன்.

என்னுடைய கோழைத்தனம் எனக்கு வெட்கத்தை வரவழைக்கிறது.

தயங்காமல் கருத்தாடும் நீங்கள் இப்படி கோழையாக இருப்பீர்கள் என்று நான் எதிர்பாக்கலை. :(

  • தொடங்கியவர்

சில நேரங்களில் கோழையாக இருக்கிறேன் என்பதை வீரத்தோடு ஒத்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செல்விக்கு ஏன் இப்படி அழுகினம்.. அப்படின்னா.. பரியோவான் கல்லூரி.. அறிவுக்காகவும் அழுங்கோ..! நாய் மாதிரி சுட்டு வீதியில் போட்டவர்கள் இன்று வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழினம்..! மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் என்ற போர்வையில்...!

மேற்குலகம் பாகிஸ்தானில் மக்களிடம் இழந்து வரும் செல்வாக்கை சரிக்கட்ட காட்டும் மனிதாபிமானமே இது. இதே மேற்குலகம்.. வாரம் தோறும் ஆளில்லா விமானம் மூலம் அழிக்கும் பாகிஸ்தானியர்களின் உயிர்களுக்காக யார் தான் கட்டுரை வரைவரோ..???! எதுஎப்படி இருப்பினும்.. இந்தச் சிறுமி உயிராபத்தில் இருந்து விரைந்து குணம் பெற வேண்டுகிறோம்.

இதுக்குள்ள.. திட்டமிட்டு..செல்வி.. விஜிதரன்.. வரலாறுகள் புகுத்தப்படலாம் அதேவேளை ஒட்டுக்குழுக்கள் வேட்டையாடிய பள்ளி மாணவர்கள் குறித்தும் யாழ் மத்திய கல்லூரில் கடமையின் போது சிறீலங்காப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவன் விபுலானந்தன்.. போன்ற சிரேஸ்ட மாணவர்கள் குறித்தும் பேசுங்கள். இந்தப் போலி.. நியாயவாதிகள் அவற்றையும் பேச வேண்டும்..! உலகின் மனிதாபிமானம் அவர்களையும் மனிதர்களாக கணிக்க வேண்டும்..!

அவரவர் தங்கள் அறிவுக்கும் தேவைக்கு ஏற்ப வரலாறுகளை திரிப்பதை விடுத்து.. இதய சுத்தியோடு இயங்க எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்..!

1983 க்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் எமது போர்க்கால வரலாறு எழுதுவது தான் வேடிக்கை வினோதம்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்!

எனக்கும் மலாலாவை பற்றி வாசித்த பொழுது ஏனோ செல்வி பற்றிய ஞாபகம் வந்து போனது. நாங்கள் போராட்டத்தில் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று.

ஆயினும் நானாக அவரைப் பற்றி இதில் ஆரம்பிக்கின்ற தைரியம் வரவில்லை. நவம்பர் மாதம் வேறு தொடங்குகிறது. கேபியிடம் பணம் வாங்கிக் கொண்டு நவம்பர் மாதத்தை குழப்புகிறேன் என்று சிலர் எழுதிவிடுவார்கள். அதனால்தான் உங்களை பலிக்கடா ஆக்குவதற்கு தீர்மானித்தேன்.

என்னுடைய கோழைத்தனம் எனக்கு வெட்கத்தை வரவழைக்கிறது.

சபேசன். நீங்கள் காந்தியாக இருக்கலாம்!

ஆனால், நாங்கள் சாதாரண தமிழ் மக்கள்! உணர்ச்சிகளால் பாதிக்கப் படக் கூடியவர்கள்.

மற்றவர்களால் சீண்டப்படும்போது, கோபம் என்னும் உணர்ச்சிக்கு அடிமையாகக் கூடியவர்கள்!

உங்களைப் போன்றவர்கள், மாறிக்கொண்டு வரும் புண்ணைக் கீறிப் பார்ப்பதில், இன்பம் காண்பவர்கள்.

தவறுகளில் இருந்து பாடம் படிப்பதில் தவறில்லை என்பது எனது பணிவான கருத்து!

ஆனால் எதிலும், கடந்த காலத் தவறுகளையே தேடிப்பிடிப்பது, முன்னோக்கிச் செல்லும் மக்களைப் பின்னோக்கி இழுப்பது போன்றது எந்தப் பயனையும் தர மாட்டாது!

நீங்கள் கூறுவதுபோலப். பழைய வரலாறுகளைக் கிழறினால், கிருஷ்ணனைப் போல, ஒரு பொம்பிளை பொறுக்கி, உலகத்தில் கிடையாது!

ஆனால்,அதெல்லாம் தவறு என்று விமரிசிப்பவன்,'பகவத் கீதையைப்' படிக்க முடியாது!

நல்லதை எடுத்துக்கொண்டு, தீயவைகளை, மறப்பதுவே, எம்மை முன்னோக்கி நகர்த்தும்!

மாவீரர்களைத் தயவு செய்து, கேலிப் பொருளாக்காதீர்கள்!

நீங்கள் ஒரு முற்போக்குவாதி என்று கூறுகின்றார்கள். உங்கள் மீது மிகவும் மதிப்பு வைத்திருக்கிறேன்!

உங்களால், எரியும் போறணைக்குள் பாய்ந்து,இன்னொருவனுக்காக, உயிர் துறக்கமுடியுமானால், அவர்களை விமரிசனம் செய்யுங்கள்!

நான் பொதுவாக மற்றவர்கள் மனது புண்படும் வகையில், கருத்துக்களை எழுதுபவனல்ல!

நான் சாதாரண மனிதன் மட்டுமே!

ஒரு மாதத்திற்கு, உங்கள் நையாண்டிகளை, நிறுத்தி வையுங்கள். இது ஒரு தமிழன், சக தமிழனிடம் விடும் வேண்டுகோள் மட்டுமே!

உங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் உண்டு! அதே போல எனது, கருத்தை வைக்க எனக்கும் சுதந்திரம் உண்டு!

உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள், நன்றிகள்!

அருமை புங்கையூரான்.

இந்தக் கருத்தை... திரும்பத்,திரும்ப...வாசித்தேன்.smilie_gut.gif

கொலைகள் செய்தவன் எவனாயினும் அது பிழை தான் ,எக்காலமும் எவர் செய்த கொலையையும் நான் நியாயப்படுத்தவில்லை .கொலைக்கு எதிராகத்தான் அன்றும் இன்றும் போராடிவருகின்றோம் .

மற்றவனை கொல்லும் போது வராத உணர்ச்சி ,பலவந்தமாக சிறுவர்களை பிடித்து கையில் துவக்கை கொடுத்து முன்னரங்கில் விட்ட போது வராத உணர்ச்சி இறந்தவர்களை நேசிக்க மட்டும் (அதுவும் பலர் ஏன் ,எதற்கு , என்ன நடக்கின்றது என தெரியாமலே உயிரை விட்டார்கள்) பொத்துக்கொண்டு வருகின்றது .உதுக்கு பெயர் உணர்ச்சி இல்லை வேசம்.

அருமை புங்கை இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு, நாக்கல் நையண்டிகளுக்கு இவர்களிடமா பஞ்சம், காற்றடிக்கும் பக்கம் சாய்யும் புல்லுருவிகள்.

ஆறு இள மாணவர்கள் திருவடிநிலையில் அடித்தே கொன்று கை தெரிய தாட்ட பாவிகள் இப்ப செல்வியை பற்றி தங்கள் இணையத்தில் எழுதுகிறார்களாம், இதையும் எழுத வேண்டியதுதானே

  • கருத்துக்கள உறவுகள்

கொலைகள் செய்தவன் எவனாயினும் அது பிழை தான் ,எக்காலமும் எவர் செய்த கொலையையும் நான் நியாயப்படுத்தவில்லை .கொலைக்கு எதிராகத்தான் அன்றும் இன்றும் போராடிவருகின்றோம் .

மற்றவனை கொல்லும் போது வராத உணர்ச்சி ,பலவந்தமாக சிறுவர்களை பிடித்து கையில் துவக்கை கொடுத்து முன்னரங்கில் விட்ட போது வராத உணர்ச்சி இறந்தவர்களை நேசிக்க மட்டும் (அதுவும் பலர் ஏன் ,எதற்கு , என்ன நடக்கின்றது என தெரியாமலே உயிரை விட்டார்கள்) பொத்துக்கொண்டு வருகின்றது .உதுக்கு பெயர் உணர்ச்சி இல்லை வேசம்.

இதைத்தானே அந்தக்காலத்தில் இருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள், அர்ஜுன்!

நீங்கள் சார்ந்த இயக்கத்திற்கும், புலிகளுக்கும் இடையில் நடந்த பிரச்சனைகளில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம்! அந்தக் காழ்ப்புணர்ச்சியை, வைத்துக்கொண்டு, உண்மையான போராளிகளின் தியாகங்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.

உமா மகேஸ்வரனையும், சிறி சபாரத்தினத்தையும் கூட, மாவீரர்களாகவே நான் கருதுகின்றேன்!

நீங்கள் துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்தவர்கள்! நான் அப்படியல்ல!

சிறுவர்களைப் பலவந்தமாகப் பிடித்து, முன்னரங்கில் விட்டது எனக் கூறுகின்றீர்கள்?

என்ன அடிப்படையை வைத்து, இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்! உலகம் முழுக்கத் தெரிந்தது, எனக்குத் தெரியவில்லை என்ற 'கிணத்துத் தவளை' என்று மட்டும் கூறாதீர்கள்.

எனக்குத் தெரிய, இந்த விடயத்தில், புலிகள் சர்வதேச சமூகத்துடன், ஒத்துழைத்தார்கள் என எண்ணுகின்றேன்! முன் மாதிரியாகப் பல சிறுவர்களை, வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள்!

எனக்கு வேசம் போட வேண்டிய தேவை எதுவும் இல்லை! நான் எனது உணர்வைத் தான் வெளிப்படுத்துகின்றேன்!

நீங்கள், காங்கிரஸ் கட்சிக்குள், ஜின்னா மாதிரி!

சுக்கானையும் விட மாட்டீங்கள்! சூட்டையும் கழட்ட மாட்டீங்கள்!

எண்டாலும், காந்தியின் சுதந்திரப போராட்டத்தில் நானும், பங்காளி எண்டு. ஜின்னா சொல்லுற மாதிரி!

செல்வி: 20 ஆண்டுகள்- வீழ்வோமாயினும்; வாழ்வோம்…:யசோதா | மீள்பதிவு

selvi.jpg1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்.

புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப் போன்ற அதே தன்மையான ஒரு சூழ்நிலைக்கு செல்வியின் நிலமையும் இட்டுச் செல்லாதவாறு இருக்கும்படியாக புலிகள் வேறு முடிவை எடுத்தனர். அதுவே கைது செய்தலாக முடீவுற்றது. செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

செல்வி வவுனியாவில் உள்ள சேமமடு என்னும் கிராமத்தில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகம் அரங்கியலும் என்ற பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி. அத்தோடு இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். ‘தோழி’ இதழின் ஆசிரியரும் கூட. செல்வி தன் நாடகங்களினாலும் கவிதைகளினாலும் குறுகிய காலத்திலேயே மதிப்பிடக்கூடிய படைப்பாளியாக விளங்கினார். புலிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து சுயெற்சையாக சுதந்திரமாக இயங்குவதற்கு பல்கலைக்கழக சக மாணவர்களை செல்வி ஊக்குவித்தார் . அவர் பிரபல கவிஞராகவும், நாடகாசிரியராகவும் பணியாற்றியவர். பாலஸ்தீன கைதிகள் பற்றிய நாடகமொன்றையும் அவர் இக்காலத்தில் செய்திருந்தார். விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில இயக்கங்களின் மனித உரிமை மீறலை விமர்சிக்கின்ற நாட¬க¬மொன்றை அரங்கேற்றத் தயராகிக்¬கொண்டிருக்கையிலேயே அவர் கடத்தப்¬பட்டதாக நம்பப்படுகிறது. தமது படைப்புகளுக்கூடாக பெண் விடுதலை கருத்துக்களை பரப்பியவர். சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ் பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தார். பல்கலைக்-கழத்தில் பெண்கள் இயக்கத்தில் தீவரமாக செயற்பட்டிருந்தார். வடக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவராண உதவிகளை செய்வதில் ஈடுபட்டிருந்தார்.. யாழ்ப்பாணத்தில் அல்லல்படும் தாய்மார்களுடன் முன்னின்று செயல்பட்டதினால் அவர் சமூகத்திற்கு நன்கு அறியப்பட்டவராக இருந்தார். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கிய பங்கை வகித்தார்.

ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட “சொல்லாத சேதிகள்” என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன. அத்தோடு செல்வியின் கவிதைகளும் சிவரமணியின் கவிதைகளும் சேர்ந்த தொகுப்பொன்றை தாமரைச் செல்வி பதிப்பகம் தமிழகத்தில் வெளியிட்டிமிருந்தது. செல்வியின் கவிதைகள் தமிழகத்திலுள்ள சிறு பத்திரிகைகளான மனஓசை, மண் அரங்கேற்றம் இவை தவிர ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளது. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றுள்ளன.

செல்வியின் விடுதலையைக்கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு வழங்கப்பட்டது. International PEN என்று அழைக்கப்படும் சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான (Poets Essayists and Novelists) PEN அமைப்பு கார்ல்ஸ் வொர்த்தியால் தொடங்கப்பட்டதாகும். இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியத்திற்காகவும் எழுத்துத்தளத்திலும் கலைத் தளத்திலும் படைப்புக்களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்படுவதாகும். செல்வி ஈழத்தின் நெருக்கடியான போராட்ட சூழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ் விருது வழங்கப்பட்டது.

selvi2-300x204.jpg

பூரணி பெண்கள் இல்லத்தில் சகதோழிகளுடன் செல்வி

கருத்துச் சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கின்ற எதிரிகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்த அம்சங்களில் செல்வி கடத்தப்பட்டதும் ஒன்று. செல்வி உயிருடன் இருப்பதாக நம்பி வந்த அவருடன் நெருங்கிய அனைவருமே மனந் தளர்ந்து போயிருந்தனர் . அவரது தாயார் உட்பட எந்த உறவினரும் அவரை சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் தேகாரோக்கியம் குன்றிய நிலையில் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று றொட்டர்டாம் போயற்றி இன்டர்நெஷனல் 1994இல் அறிக்கை வெளியிட்டது.

1992இல் “”எழுதுவதற்கான சுதந்திரம்”” எனும் விருது “PEN” எனும் சர்வதேச அமைப்பின் விருது செல்விக்கு கிடைத்தது. இவ்விருதினை அதற்கு முன்னரே வழங்கத் தீர்மானித்திருந்தபோதும் இவ்விருதின் மூலம் சிறைவைக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஏதும் ஊறு நேரக்கூடும் என்றும் விருதினை அறிவிக்க வேணடாம் என்று செல்வியின் நண்பர்கள் பலர் அறிவித்திருந்ததாக “ PEN” அமைப்பின் தலைவர் எட்மண்ட் கீலி அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரது நிலை அல்லது அவரது இருப்பிடம் பற்றிய எதுவித தகவலையும் காணவில்லையென்பதால் விருதினை பகிரங்கப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாக 1992இல் “PEN “அமைப்பின் தலைவர் அறிவித்திருந்தார்.

சர்வதேச கவிதை அமைப்பு 1994க்கான International betry Sbciety award எனும் விருது வழங்கப்பட்டது. இது மானுட சுதந்திரத்திற்காகவும், அடிப்படை உரிமைக¬ளுக்காகவும் குரல் கொடுத்த ”சுதந்திரம் மறுக்கப்பட்ட” கவிஞர்களுக்காக வழங்கப்படுகின்ற விருதாகும். இவ்விருது வழங்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்ட சர்வதேச கவிஞர்களைப் போலவே செல்¬வியும் விடுதலை செய்யப்படவேண்டுமென இவ்வமைப்பு கேட்டுக்கொண்டது. இவ்விருது பற்றிய அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

“மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும் அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது “.

இந்த பிரசுரத்தின் இறுதிவரிகள் இவ்வாறு நிறைவுபெறுகின்றன. « மனித உயிருக்கும் உடலுக்கும் மரியாதை குன்றிப்போதல் மேலோங்கிவரும் இவ் உலகில் பலியாகிப்போன இன்னல்களுக்குள்ளான சகல கவிஞர்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான அறியப்படாத தனிநபர்களையும் அங்கீகரிக்கும் அதே நேரத்தில் இந்த வருடத்திற்கான விருதினை தமிழ் கவிஞையான செல்விக்கு வழங்குவதற்கு இவ் அமைப்பின் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளது. »

இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட விருதான இதனை பெற்றுக் கொள்ள செல்வி அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் விடுதலைப் புலிகளினால் சிறைவைக்கப்¬பட்¬ட¬படியே அப்போதும் இருந்தார். 1993 டிசம்பர் வெளியான சரிநிகர் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் (இப்பேட்டியில் மூலமானது Counterpoint எனும் ஆங்கில சஞ்சி¬கையாகும்) செல்வி தமது தடுப்புக் கைதியாகவே இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். செல்வியின் விடுதலைக்¬காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வந்தன.

மேலும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன.

தேசத்தை நேசித்தது தான் செல்வி செய்த குற்றம். மனிதத்தைக் கோரிய அவரது அர்ப்பணிப்பு தான் அவர் செய்த குற்றம். அவரது கவிதைகள் யுத்தத்தினால் நலிவுற்ற பெண்கள் பற்றியதும் யுத்தம் பற்றியதுமான சித்திரங்களையே வெளிப்படுத்தியது. இன்று அவர் எம்முடன் இல்லை.

விடுதலையின் பேரால் கருத்துச் சுதந்திரத்தின் குரல் நசுக்கப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்க¬ளிலும் நாங்கள் மீள எழுவோம். நாங்கள் மீளவும் உயிர்ப்போம். மானுட விடுதலைக்காக.

._._._._._.

செல்வியின் சில கடிதங்களும். சில கவிதைகளும்.

செல்வியின் கடிதங்கள்

letters-150x150.jpg

அன்பான அரசு,

அன்பு வந்தனங்கள்.

20-02-88 திகதியிட்ட உங்கள் கடிதம் 26-02-88 இல் எனக்குக் கிடைத்தது. நண்பர் ரஞ்சித் யாழில் நிற்பதால் நான் இன்னும் அவரைச் சந்திக்கவில்லை. mayயில் நான் சந்திக்கும்போது புத்தகங்கைளப் பெற்றுக் கொள்வேன். ரஞ்சித் இங்கே – வவுனியாவுக்கு வர சூழ்நிலைகள் சாதகமாக இல்லை…..

Drama and Theatre சம்பந்தமாக நீங்கள் தந்துள்ளவை பலவற்றை நான் வாசிக்கவில்லை. Brecht , Stanislawosky போன்றவர்களை பாடக்குறிப்புக்களாக விழுங்கியதை தவிரவும் Brecht பற்றி அண்மைய காலத்தில் தளிர்| , மல்லிகை| போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்த சிறு குறிப்புக்களும் நாடக கலை| என்கின்ற இராமசாமியின் தமிழ்மொழி பெயர்ப்பும் வாசிக்கக் கிடைத்தன. இவை நாடக உலகின் சிறு மண்துளிக்கையளவு தானுமில்லை. நமது சூழலில் சிங்கள நாடகத்துறை வளர்ச்சியுடன் தமிழினது வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் மண் – மடு வித்தியாசந்தான். ஒரு புறம் இயல்பாய் இங்குள்ள புறக்கணிப்பும் மறுபுறம் நமது சூழ்நிலைப் பாதிப்புக்களும் எங்களது கலை வடிவங்களை சிதைக்கின்றன. 83 களுக்கு முன்னர் தரமான நாடகங்கள் பலவற்றை தாசீயஸ், பாலேந்திரா, நா. சுந்தரலிங்கம் போன்றோர் நெறிப்படுத்தினர். கலவரம் இவர்களை அந்நிய தேசங்களில் சரணடைய வைத்துவிட்டது. எனினும் 84 களிலும் பின்னரும் குறிப்பிடக்கூடியதாக வீதி நாடகங்கள், கவிதா நிகழ்வுகள் , மண் சுமந்த மேனியர்- 1, 2 ஆகியவை இடம்பெற்றன. இன்னும் சொல்லப்போனால் கொழும்புத் தமிழ்ச் சூழலில் கோமாளிகள், ஏமாளிக(ள்)ளாக அல்லோலகல்லோலப்பட அடக்குமுறைக்குள்ளான யாழ் சூழலில் நல்ல தரமான படைப்புக்கள் வெளிவந்தன. அமைதி ஒப்பந்தம் – மீண்டும் வடகிழக்கில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எது செய்ய முயன்றாலும்….. அனுமதி தேவைப்படுகின்றது.

நமது பெரிய யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் ஓரளவுக்கு University Liberary பெரியதாக இருந்தது. வந்தவர்களும் மீண்டும் நம்மை அழிக்க (60,000 புத்தகங்கள் வரை எரிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் கூறுகிறது) முயன்றுள்ளனர். இதற்குள்ளும்,

…. ‘நாம் வாழவே பிறந்தோம் – சாவை உதைத்து’ என்ற ஜெயபாலனின் கவிதை வரிகள் எங்கள் தேடலையும் வாழ்தலையும் உங்களுக்குப் புரிய வைக்கும்.

…..

‘பயணம்’ இதழுக்காக இரு கவிதைகள் அனுப்பி வைக்கின்றேன். ‘தேடல்’ கவிதை எனது நண்பர் ஒருவருடையது… தமதூரில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குவது. நீங்கள் எதிர்பார்க்கின்ற கவித்துவம் இருக்கின்றதோ இல்லையோ இந்த நிகழ்வுகளின் மீதான கோபம், தாக்கங்கள் தான் இவை. மற்றது எனக்குள்ளே….. இது பற்றிய நேரடியான விமரிசனத்தை எனக்கு நீங்கள் எழுதுங்கள்.

படைப்பு – படைப்பாளி தொடர்பான சர்ச்சைகள் இங்கும் உள்ளன. என் கைக்கெட்டிய இந்திய தமிழ்க் கவிதைகளை விட சேரன், ஜெயபாலனின் கவிதைகள் மிக மிகத் தரமானவை. இவர்கள் இருவருக்குள்ளும் ஜெயபாலனின் மண் – மக்கள் தொடர்பான அனுபவம் ஆய்வுகள் இன்றுவரை மக்கள் கவிஞனாக அவனைக் காட்டுகின்றது. சேரனை நீங்கள் நுணுகி ஆராய்ந்தால் மண்ணில் கால் பதிக்காது வானத்திலிருந்து இறங்கி வருவதை நீங்கள் காணலாம். இரண்டாவது சூரிய உதயத்திலுள்ள உண்மையான இயல்பு,’ யமனின்’| இல்லை. ‘யமனை’ முதலில் நான் வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு – இப்போது இல்லை.

‘புழுதி படாது,

பொன்னிதழ் விரித்த சூரிய காந்தியாய்

நீர் தொடச் சூரிய இதழ்கள் விரியும்’

இப்படி ஒரு கவிதையில் வருகின்றது. யமனில் இதனுள் சில சொற்கள் பிழையோ தெரியவில்லை. என்னிடம் கைவசம் புத்தகம் இல்லை (யாழில் நான் இருந்த வீட்டினை….. ஆக்கிரமித்ததில் எனது சிறு நூலகத்தையும் இழந்து விட்டேன்) எனினும் ‘புழுதிபடாது, பொன்னிதழ் விரித்த’ அடிகள் ஞாபகத்திலுள்ளன. புழுதிபடாமலும் கூட பிரமிக்க வைக்க சேரனால் முடியும்.எனினும், படைப்பு – படைப்பாளிகள் தொடர்பாக என்ன முடிவுக்கு வருவதென்பது என் வரையில் கேள்விக்குறி தான்.

நாடகம் தொடர்பான ஆங்கில புத்தகங்களும் உவ்விடம் வாங்கக் கூடியவற்றை அசோக்கிடம் லிஸ்ற் கொடுக்கவும். அவற்றை எனக்கு இங்கு அனுப்ப முடியும் போது அனுப்புவார்.

நான் பதிலைத் தாமதித்ததால் உங்களை விரைவில் பதிலெழுதச் சொல்ல முடியாது. எனவே பதிலெழுதுங்கள்.

தங்கள்

அன்புடன்,

செல்வி

08-04-88

இரவு 11-53

._._._._._.

அன்பான அரசு,

உங்கள் இரண்டு கடிதங்களும் கிடைத்தது. நன்றி.

அனுசுயா இங்கு வந்துவிட்டார். அவரிடம் நண்பர் ஒருவர் மூலமாக விசாரித்ததில் நீங்கள் ‘பயணம்’ இதழ்களை அனுப்பவில்லையெனத் தெரிந்தது.

என்னுடைய கவிதைகள் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் நினைக்கிற அளவுக்கு புத்தகமாக வெளிவரும் தகுதி அவற்றுக்கில்லை. நீங்கள் விரும்பினாலும் கூட தொகுப்பாக்குகிற அவசரம் அவசியம் இப்போதைக்குக் கிடையாது. மன்னிக்கவும். ஆனால் இதற்குப் பதிலாக நான் உங்களிடம் வேறோர் உதவி கேட்கிறேன். நீங்கள் நாடகப் பிரதிகளை (Seript) நூலுருக் கொடுக்க முன்வருவீர்களெனில், தரமான ஈழத்து நாடகப் பிரதிகளை அனுப்பி வைப்போம். இன்றைய சூழலில் இங்கேயும் கவிதை, கதைகளைப் போட பலர் முன் வருகின்றனர். ஆனால், அந்தளவு கணிப்பை நாடகத்துக்கு கொடுக்கிறார்களில்லை.

அண்மையில் ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ தொகுதியை வாசித்தேன். ஆனால், அதைவிடவும் மேடைபற்றிய பூரண பிரக்ஞையுடன் எழுதப்பட்ட தரமான நாடகப் பிரதிகள் இங்குள்ளன. அப்படி ஒரு எண்ணம் உங்கள் நண்பர்களுக்கு இருக்குமாயின் எழுதுங்கள். இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். தொகுப்புக்கு வேண்டிய முன்னுரை, Cover Desige சகலமும் அனுப்புவோம். வெளியீடு உங்களுடையதாக இருக்கும். ஆலோசியுங்கள். புத்தகங்களின் பெயர்களைத் தயவு செய்து எழுதாதீர்கள். இவற்றை உங்களுக்கு வசதி கிடைத்து. அனுப்ப முடிந்ததால் அனுப்புங்கள். இவற்றை வாசிக்க முடியவில்லையென்ற ஆதங்கமும், பொறாமையுந்தான் வருகிறது. இங்கு சில புத்தகங்கள் உவ்விடமிருந்து வந்துள்ளன. ஆனால் அவற்றின் விலையைக் கேட்டால் தலை சுற்றும். எனக்கு இவற்றை வாங்குகிற வசதி இன்னும் 4 வருடங்களுக்கு இருக்காது. அப்படி இருந்தது உமா வரதராஜனின் ‘உள் மன யாத்திரை’ டானியலின் ‘தண்ணீர்’ வாங்கினேன்.

‘Journal of South Asian Literature’ என்ற ஒரு தொகுப்பு சிங்களவர் ஒருவரால் தொகுக்கப்பட்டுள்ளது.

இதில் யேசுராசா, நுஃமான், ஜெயபாலன், சேரன் போன்றோரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளது. நான் இன்னும் பார்க்கவில்லை. University Libraryலுள்ளதாக நண்பரொருவர் கூறினார். ஆனால் அதனை வாங்கி அனுப்ப எனக் முடியுமென நான் உறுதி கூறமாட்டேன். கொழும்பில் நண்பர்கள் உங்களுக்கு யாரேனுமிருப்பின் அவர்களுக்கு எழுதுங்கள்.மற்றும் சிறு சஞ்சிகைகளை யாராவது நம்பிக்கையான நண்பர்கள் வருவாரெனின் அவ்வப்போது அனுப்புவேன். English Poems ஐயும் Copy பண்ணி அனுப்ப முடிந்ததை அனுப்புகின்றேன்.

வேறென்ன, எழுதுங்கள்

அன்புடன்

செல்வி

18-09-88

._._._._._.

அன்பான அரசு,

நீங்கள் எழுதியதான எனது முன்னைய முகவரிக்கு அனுப்பிய கடிதம் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் அதிலே நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்களென எனக்குத் தெரியாது. இங்கு நாட்டு நிலைமைகள் ரொம்ப மோசம் அதுவும் இந்த திருநெல்வேலி பல்கலைக்கழக வட்டாரம் தினந்தோறும் வெடிச்சத்தங்களால் அதிர்ந்து கொண்டிருக்கின்றது. நாடகப்பிரதிகளை திரும்பவும் அவரிடம் எழுதும்படி கொடுத்துள்ளோம். பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் நாடு திரும்பிய பின் அவரிடம் ஒரு முன்னுரை கேட்டு அனுப்பலாமென்பது எண்ணம். அண்மையில் சித்ரலேகா அக்கா வீட்டுக்குப் போனபோது திரு.நுஃமான் சென்னை வந்துள்ளதாகக் கூறினார். அவர் தங்கியுள்ள முகவரி தெரியாத போதும் அவர் எஸ்.வி.ராஜதுரையை, பொதிய வெற்பனைச் சந்திப்பாரென்பதால் அவரை நீங்கள் சந்திக்க முடியுமாயின், அவருக்கும் முடிந்தால் வைத்திருக்கும் புத்தகங்களைக் கொடுத்துவிடவும். அசோக்கிடம் இதனைச் சொல்லவும்.

அசோக் தவநாதனிடம் கொடுத்துவிட்ட கடிதம் கிடைத்தது. ஆனால் புத்தகங்களைத் தவநாதன் இன்னமும் கொண்டு வந்து தரவில்லை. அதன் பின்னர் இது வரை நான் தவநாதனைச் சந்திக்காததால் வேறு எந்த விபரமும் தெரியாது. அசோக்கின் திருச்சி முகவரி எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் அனுப்புங்கள்.

அண்மைக்கால நிகழ்வுகளில் பெண்கள் மீதான வன்முறைகளை வைத்து ஒரு நாடகமொன்றை April 29th மேடையேற்றவுள்ளோம். இது ஒரு பரீட்சார்த்த முயற்சி தான். இதற்கு எவ்வாறு அரசு தரப்பிலான ஒடுக்குமுறை இருக்குமோ தெரியாது. முயன்று பார்க்கின்றோம். வெற்றியளித்தல் பின்னர் எழுதுகின்றேன். இத்துடன் வீர. சந்தானம் அவர்களுக்கு ஒரு கடிதம் வைத்துள்ளேன். அவரிடம் கொடுத்துவிடுங்கள். அவரை எனக்கு கடிதம் அனுப்பச் சொல்லுங்கள். நுஃமான் Sir இடம் ‘இனி’ Magazene தொகுப்பும் ‘நாடகக்கலை|’ மு.இராமசாமி அவர்களின் மொழிபெயர்ப்பு நூலையும் மனதில் பதிஞ்ச காலடிச்சுவடுகள் – சாமிநாதன் எழுதிய Drama Work shop பற்றிய புத்தகத்தையும் அனுப்ப மறக்கவேண்டாம். முன்னர், அசோக்கிடம் தஞ்சாவூர் University Drama Theatre arts Syllabusஐ எடுத்து அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தேன். உங்களால் முடியுமாயின் அனுப்பி வைக்கவும்.

‘Crying Asia’ எனும் நிகழ்ச்சியொன்று வரும் Octoberஇல் மணிலா பிலிப்பீன்ஸில் நடைபெற இருப்பதாக அறிந்தேன். உங்கள் குழுவினரில் யாராவது போகிறீர்களா?

நுஃமான் Sir ‘வியூகம்’, ‘திசை|’ கொண்டு வந்தாரா? அவர் உவ்விடம் வருவது தெரிந்தருந்தால் இவற்றைக் கொடுத்துவிட்டிருக்கலாம். தவநாதன் திரும்பவும் இந்தியா வரவிருப்பதாகச் சொன்னான். வந்தால் – என்னைச் சந்தித்தால் கொடுத்து விடுகிறேன்.

உங்களது சூழ்நிலைகள் முயற்சிகளை எழுதுங்கள். எனக்கு பரீஷ ‘ஞாநி’, வீதி நாடக இயக்கம், கூத்துப் பட்டறையினருடன் பரிச்சயம் ஏற்படுத்தித் தருவீர்களா? அவர்களது வெளியீடுகள், முயற்சிகள், அனுபவங்கள் எங்களுக்கு உதவலாம் தானே.

பி.கு. நீங்கள், அசோக், பொதியவெற்பனுடன் சேர்ந்த Photo அனுப்பி வைக்கிறீர்களா?

அன்புடன்

செல்வி

20-04-89

._._._._._.

செல்வியின் கவிதைககள்

ipoem-99x150.jpg

மீளாத பொழுதுகள்

அமைதியான காலைப் பொழுது

காலைச் செம்மை கண்களைக் கவரும்

காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்

நீண்டு பரந்த தோட்ட வெளிகளில்

தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவும்

எங்கும் அமைதி! எதிலும் இனிமை!

நேற்று வரையும்

அமைதியான காலைப்பொழுது

பொழுது புலராக் கருமை வேளையில்

தட தடத்துறுமின வண்டிகள்

அவலக் குரல்கள்: ஐயோ!அம்மா!|

தோட்ட வெளிகள் அதிர்ந்து நடுங்கின

அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்…

ஆட்கள் வெருண்டனர்

அள்ளி ஏற்றிய இளைஞர்கள்

மூச்சுத் திணறினர்.

தாய்மையின் அழுகையும்

தங்கையின் விம்மலும்

பொழுது புலர்தலின்

அவலமாய்க் கேட்டன.

காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது

மெல்லிய ஒலிக்கும் பயத்தையே தூண்டின -

எங்கும் அச்சம்: எதிலும் அமைதி,

தென்றல் சிலிர்ப்பில் உணர்வே இல்லை

காலைச் செம்மையை ரசிப்பதை மறந்தோம்…

நேற்று வரையும்

அமைதியான காலைப்பொழுது!

._._._._._.

கோடை

அந்திவானம்

செம்மையை விழுங்கும்

அலைகள் பெரிதாய்

கரையைத் தழுவும்

குளத்தோரத்துப் புற்களின்

கருகிய நுனி

நடக்கையில்… காலை நெருடும்

மேற்கே விரிந்த

வயல்கள் வெறுமையாய்

வானத்தைப் பார்த்து

மௌனித்திருக்கும்

வெம்மை கலந்த

மென் காற்று

மேனியை வருடும்.

புதிதாய் பரவிய

சாலையில் செம்மண்

கண்களை உறுத்தும்

காய் நிறைந்த மாவில்

குயிலொன்று

இடையிடை குரலெழுப்பும்.

வீதியில் கிடந்த கல்லை

கால் தட்டிச் செல்ல

அதன் கூரிய நுனி

குருதியின் சுவையறியும்.

ஒதுங்கிப் போனகல்

ஏளனமாய் இனிக்கும்.

இதயத்தின் நினைவுகள் விரிந்து

சர்ரென்று வலியெடுக்கும்

வாடைக்காற்றின் சிலிர்ப்பும்

வரப்போரத்தில் நெடி துயர்ந்த

கூழாமரத்தின் பசுமையும்

நிறைந்த குளத்தின் மதகினூடு

திமிறிப்பாயும் நீரினழகுமாய்

ஒதுங்கிப்போன இனிய பொழுதுகள்

ஊமையாய் மனதுள் அழுத்தும்.

._._._._._.

விடை பெற்ற நண்பனுக்கு

மின் குமிழ்கள் ஒளியுமிழ

நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில்

விரைவில் வருவதாய்

உனது நண்பனுடன் விடைபெற்றாய்

உன்னிடம் பகிர

எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன.

முகவரி இல்லாது தவிக்கின்றேன் நண்ப.

செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து

வசந்தம் பாடிய குயில்களும்

நீயும் நானும் பார்த்து இரசித்த

கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது

தலையை அசைத்தும்

எனது செய்தியை உனக்குச் சொல்லும்.

பருந்தும், வல்லூறும், வானவெளியை மறைப்பதாக

இறக்கையை வலிந்து விரித்தன நண்பா

கோழிக்குஞ்சுகள் குதறப்பட்டன:

கூடவே சில கோழிகளும்..

இந்தப் பருந்தின் இறக்கையைக் கிழிக்க

எஞ்சி நின்ற குஞ்சுகள் வளர்ந்தன.

நடந்து நடந்து வலித்துப் போகும்

கால்களின் மீது படியும் என்

மண்ணின் புழுதியை

முகர்ந்து

வீதியிலன்றி வீட்டினுள்ளும்

முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்கி

குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடு…..

இறையைத் தேட,

இறக்கையைக் கிழிக்க……

வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த

கொடுமைகட் கெதிராய் கோபம் மிகுந்து

குமுறும் உனது குரலுடன்

குழந்தைச் சிரிப்புடன் விரைந்து வா

நண்பா!

._._._._._.

சிலிர்க்கும் மழைச்சாரல் தெறிக்க

தவளைகள் பின்னணி இசைக்கும் இரவு

குளிர் மிகுந்து கொடுகு மென்னுடல்

உனது இனிய அணைப்புக் கேங்கும்

பிரிதலின்றி கழிந்த பொழுதுகள்

கனவாய் மட்டுமே உணர்த்தும் கொடுமையை

எப்படி உன்னிடம் சொல்வேன்?

நெரிசல் நிறைந்த சென்னை நகரில்

எனது உணர்வை எனது கிளர்வை

எனது நேசத்தை எனது காதலை

எனது விரல்களின் மெல்லிய வருடலை

எங்ஙனம் உனக்கு உணர்த்த முடியும்?

புறாவும் அன்னமும் தூது செல்லும்

காலமா இது….

தென்றல கூட இளமையிழந்து

மௌனமாய்……

மானுட நேயம் நோக்கிய வாழ்வை

படைத்திட முயல்கையில் எத்தனை தடைகள்

கொடூரம் மிகுந்த விழிகள் தொடர

வாழ்தலின் கசப்பு நெஞ்சை நெருடும்.

மனிதம் மறந்து சவமாய் கிடந்து

வாழ்தலில் எனக்கு பிரியமே யில்லை!

._._._._._.

அர்த்தமற்ற நாள்களில்

வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்

அவலத்திலும் அச்சத்திலும்

உறைந்து போன நாள்கள்…..

காலைப் பொழுதுகளில்

பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட

பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்

தொட்டாற் சிறுணுங்கி|யில்

கண்கள் மொய்க்கின்றன

இன்னுமெப்படி களையெடுப்பவன்

இதனைக் காணாது போனான்?

கேள்வியில் கனக்கும் மனது

விரிவுரைக்காய் வகுப்பறைக்குப் போனால்

அவிழ்க்கப்படும் பொய்கள்

விசிறிகளில் தொங்கிச் சுழல்கின்றன

அவை என் மீது விழுந்து விடும் பயத்தில்

அடிக்கடி மேலே பார்த்துக் கொள்கின்றேன்

மின்சாரம் அடிக்கடி நின்று போவதும்

நன்மைக்குத் தான்

செவிப்பறைமென் சவ்வுகள்

கொஞ்சம் ஓய்வெடுக்கின்றன.

திட்டங்களில் புதைந்து போன மூளைகள்

திட்டமிட்டுத் திட்டமிட்டே

களைத்த மூளைகள்

முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன…

மூச்சுத் திணறும் இரத்தவாடை பற்றிய

சிந்தனையில்லாதது

நான் களைத்துப் போனேன்

புகை படிந்த முகத்துடன்

வாழும் நாள்கள் இது.

._._._._._.

பனியில் கலந்து கரைந்து போன இரவு…

பக்கத்து வீட்டுப் பெண்ணின் மூச்சிழுப்புப் போல

இந்த வாழ்க்கையும்…

நாய்களின் ஊளையும்

மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்

செத்துப் போய்க் கொண்டிருக்கும்

வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன.

எனக்குள்,

பனிக்காக அணிந்த உடைகளின் கதகதப்பை மீறி

இரவின் தனிமையில்

என்னைத் தூங்கவிடாது துரத்துகின்ற நினைவுகள்…

குழந்தையொன்று வீறிட்டழுகின்றது

போர்வை விலகிப்போய் குளிர் உறுத்துகிறதோ…..

அறையிலே,

தூங்கும் எனது தோழியின் கனவிலே

சூரியத் தேரேறி கந்தர்வன் ஒருவன் வரக்கூடும்.

இப்போது,

தூரத்தே கேட்கும் துவக்குச் சன்னங்கள் பட்டு

பரிச்சைக்காய்

புத்தகங்களை முத்தமிட்டபடி

முதிரா இளைஞனொருவன் இறக்கவும் கூடும்.

நிகழ்தகவுகளே இங்கு நிகழ்வுகளானதில்

அதிகாலைப் பனிதடவும் செம்மையும் கூட

தன் அர்த்தத்தை இன்று இழந்துபோனது.

._._._._._.

இராமனே இராவணனாய்

நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.

என்னை யாரும் கேள்வி கேட்டுத்

தொந்தரவு செய்யாதீர்கள்

றூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது எனது இதயம்.

எந்த நேரமும்

விழுந்து வெடித்து விடக்கூடும்.

அசோகவனங்கள் அழிந்து போய்விடவில்லை.

இந்த வீடே

எனக்கான அசோகவனமாயுள்ளது.

ஆனால்

சிறைப்பிடித்தது இராவணனல்ல, இராமனே தான்.

இராமனே இராவணனாய்

தனது அரசிருக்கையின் முதுகுப்புறமாய்

முக மூடிகளை மாற்றிக் கொண்டதை

பார்க்க நேர்ந்த கணங்கள்..

இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.

இந்தச் சீதையைச் சிறை மீள வருவது யார்?

அசோக வனங்கள்

இன்னும்

எத்தனை காலத்திற்கு?

http://inioru.com/?p=23040

ஒரு செல்விக்கு ஏன் இப்படி அழுகினம்.. அப்படின்னா.. பரியோவான் கல்லூரி.. அறிவுக்காகவும் அழுங்கோ..! நாய் மாதிரி சுட்டு வீதியில் போட்டவர்கள் இன்று வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழினம்..! மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் என்ற போர்வையில்...!

மேற்குலகம் பாகிஸ்தானில் மக்களிடம் இழந்து வரும் செல்வாக்கை சரிக்கட்ட காட்டும் மனிதாபிமானமே இது. இதே மேற்குலகம்.. வாரம் தோறும் ஆளில்லா விமானம் மூலம் அழிக்கும் பாகிஸ்தானியர்களின் உயிர்களுக்காக யார் தான் கட்டுரை வரைவரோ..???! எதுஎப்படி இருப்பினும்.. இந்தச் சிறுமி உயிராபத்தில் இருந்து விரைந்து குணம் பெற வேண்டுகிறோம்.

இதுக்குள்ள.. திட்டமிட்டு..செல்வி.. விஜிதரன்.. வரலாறுகள் புகுத்தப்படலாம் அதேவேளை ஒட்டுக்குழுக்கள் வேட்டையாடிய பள்ளி மாணவர்கள் குறித்தும் யாழ் மத்திய கல்லூரில் கடமையின் போது சிறீலங்காப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவன் விபுலானந்தன்.. போன்ற சிரேஸ்ட மாணவர்கள் குறித்தும் பேசுங்கள். இந்தப் போலி.. நியாயவாதிகள் அவற்றையும் பேச வேண்டும்..! உலகின் மனிதாபிமானம் அவர்களையும் மனிதர்களாக கணிக்க வேண்டும்..!

அவரவர் தங்கள் அறிவுக்கும் தேவைக்கு ஏற்ப வரலாறுகளை திரிப்பதை விடுத்து.. இதய சுத்தியோடு இயங்க எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்..!

1983 க்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் எமது போர்க்கால வரலாறு எழுதுவது தான் வேடிக்கை வினோதம்..! :icon_idea::)

1963 முன்னம் நாட்டை விட்டு ஓடிவந்தவர்களை விட எல்லா துன்பங்களையும் கண்ணால் பார்த்து வன்னி மக்களின் தலையில் பாரத்தை துக்கி வைத்து விட்டு ஓடிவந்தவர்களை என்ன என்று சொல்லுவது?

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

உமா மகேஸ்வரனையும், சிறி சபாரத்தினத்தையும் கூட, மாவீரர்களாகவே நான் கருதுகின்றேன்!

நீங்கள் துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்தவர்கள்! நான் அப்படியல்ல!

சிறுவர்களைப் பலவந்தமாகப் பிடித்து, முன்னரங்கில் விட்டது எனக் கூறுகின்றீர்கள்

15 வயது சிறுமியுடன் அவள் விருப்பத்துடன் உடல் உறவு கொள்வதற்க்கும் விருப்பமில்லாது உடல் உறவு செய்வதற்கும் உள்ள வேறு படு என்ன?

?

  • கருத்துக்கள உறவுகள்

15 வயது சிறுமியுடன் அவள் விருப்பத்துடன் உடல் உறவு கொள்வதற்க்கும் விருப்பமில்லாது உடல் உறவு செய்வதற்கும் உள்ள வேறு படு என்ன?

?

இரண்டிலும், சட்டம் என்ற கோட்டைத் தாண்டுகின்றீர்கள்!

இதைத்தானே அந்தக்காலத்தில் இருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள், அர்ஜுன்!

நீங்கள் சார்ந்த இயக்கத்திற்கும், புலிகளுக்கும் இடையில் நடந்த பிரச்சனைகளில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம்! அந்தக் காழ்ப்புணர்ச்சியை, வைத்துக்கொண்டு, உண்மையான போராளிகளின் தியாகங்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.

உமா மகேஸ்வரனையும், சிறி சபாரத்தினத்தையும் கூட, மாவீரர்களாகவே நான் கருதுகின்றேன்!

நீங்கள் துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்தவர்கள்! நான் அப்படியல்ல!

சிறுவர்களைப் பலவந்தமாகப் பிடித்து, முன்னரங்கில் விட்டது எனக் கூறுகின்றீர்கள்?

என்ன அடிப்படையை வைத்து, இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்! உலகம் முழுக்கத் தெரிந்தது, எனக்குத் தெரியவில்லை என்ற 'கிணத்துத் தவளை' என்று மட்டும் கூறாதீர்கள்.

எனக்குத் தெரிய, இந்த விடயத்தில், புலிகள் சர்வதேச சமூகத்துடன், ஒத்துழைத்தார்கள் என எண்ணுகின்றேன்! முன் மாதிரியாகப் பல சிறுவர்களை, வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள்!

எனக்கு வேசம் போட வேண்டிய தேவை எதுவும் இல்லை! நான் எனது உணர்வைத் தான் வெளிப்படுத்துகின்றேன்!

நீங்கள், காங்கிரஸ் கட்சிக்குள், ஜின்னா மாதிரி!

சுக்கானையும் விட மாட்டீங்கள்! சூட்டையும் கழட்ட மாட்டீங்கள்!

எண்டாலும், காந்தியின் சுதந்திரப போராட்டத்தில் நானும், பங்காளி எண்டு. ஜின்னா சொல்லுற மாதிரி!

உங்களில் தனிப்பட மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றேன் ,ஆனால் எமது அரசியல் பார்வை மிக வித்தியாசம் ஆனது .போராளிகளில் உண்மை போராளிகள் பொய் போராளிகள் என்ற வேறுபாடு இல்லை .அரசியல் செய்ய போன போராளிக்கு கொலை செய்ய வேண்டிய தேவை வந்திருக்காது புலனாய்வில் இருந்தவன் சித்திரவதை,கொலையே தொழிலாக இருப்பவன் .

என் கோவம் எப்பொழுதும் அநியாயத்திற்கு துணை போனவர்களிலும் மௌனமாக இருந்தவர்களின் மீதுதான் .

தமிழ்நெட்டில் போனவாரம் பிராங் கரிசனின் பேட்டி பார்த்திருந்த்திருப்பீர்கள் ,பேட்டி எடுத்தவரால் கதைக்க முடியாமல் போய்விட்டது .புத்தகம் எழுதிய பெண் யுத்தம் முடிந்ததும் பல தமிழர்களை சந்தித்து அவர்கள் அன்றும் இன்றும் படும் துன்பங்கள் பற்றி தமிழர்க்கு ஆதராவாக எழுதிய புத்தகம் .ஆனால் அதில் புலிகளையும் அவர் விமர்சித்திருந்தார் .அதை ஏற்க முடியாமல் பேட்டி எடுத்தவர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அழித்த பதில்கள் பேட்டி எடுத்தவரை வாய் மூட வைத்துவிட்டது .போர்க்குற்ற அறிக்கையில் கூட சிங்கள அரசிற்கு சரிசமமாக புலிகளும் போர்குற்றம் புரிந்தார்கள் என்று இருக்கு.விசாரணை என்று ஒன்று வந்தால் அது இருவருக்கும் எதிரானதுதான் .நீங்கள் அரசை பற்றி சொல்வது சரி எங்களை பற்றி சொல்வது பிழை என்று சொல்லமுடியாது .தொண்ணுறுகளில்இருந்து மனித உரிமை அமைப்புகளும் ,உலகமும் சொல்லி வருவது உங்களுக்கு நம்மமுடியாமல் இருப்பதுதான் வியப்பு .

இங்கு வந்து எழுதும் பலரின் கருத்துக்கள் போல் நாங்கள் தர்மயுத்தம் செய்தோம் உலகம் வஞ்சமாக எம்மை அழித்துவிட்டது என்பது உண்மையல்ல ,உலகம் புலிகளை பயங்கரவாதத்தை நிற்பாட்ட சொல்லி பலமுறை கேட்டது அது முடியாமல் போக சிங்கள அரசிற்கு உதவி புலிகளை அழித்தது .

இதனால் எவ்வளவு தமிழர்களை அழியவைத்தீர்கள் அகதியாக்கினீர்கள் அடிமையும் ஆக்கிவிட்டீர்கள் .

அதனால் தான் புலிகளில் கோவம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.வி. சசிக்கோ, அர்ஜுனுக்கோ...எப்பவும்... புலிகள் மேல் குற்றம் சுமத்துவதே.... முதல் கடமையாகக் கொண்டவர்கள்.

இவர்களுக்கு.. அது தான்.. வருத்தம். இதுக்கு, மருந்து.. இல்லை.

ஆனால்.... இவர்களிடம், தமிழ்மண் பறி போகுது... என்று, கேட்டால்... பதில் இல்லை.

அதுக்கும்... மேதகு பிரபாகரன் தான்... பதில் சொல்ல வேணும்... என்று... எதிர் பார்க்கும்... கோஸ்டி.

[size=1]நியானி: சொல் ஒன்று நீக்கம்[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் தனிப்பட மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றேன் ,ஆனால் எமது அரசியல் பார்வை மிக வித்தியாசம் ஆனது .போராளிகளில் உண்மை போராளிகள் பொய் போராளிகள் என்ற வேறுபாடு இல்லை .அரசியல் செய்ய போன போராளிக்கு கொலை செய்ய வேண்டிய தேவை வந்திருக்காது புலனாய்வில் இருந்தவன் சித்திரவதை,கொலையே தொழிலாக இருப்பவன் .

என் கோவம் எப்பொழுதும் அநியாயத்திற்கு துணை போனவர்களிலும் மௌனமாக இருந்தவர்களின் மீதுதான் .

தமிழ்நெட்டில் போனவாரம் பிராங் கரிசனின் பேட்டி பார்த்திருந்த்திருப்பீர்கள் ,பேட்டி எடுத்தவரால் கதைக்க முடியாமல் போய்விட்டது .புத்தகம் எழுதிய பெண் யுத்தம் முடிந்ததும் பல தமிழர்களை சந்தித்து அவர்கள் அன்றும் இன்றும் படும் துன்பங்கள் பற்றி தமிழர்க்கு ஆதராவாக எழுதிய புத்தகம் .ஆனால் அதில் புலிகளையும் அவர் விமர்சித்திருந்தார் .அதை ஏற்க முடியாமல் பேட்டி எடுத்தவர் கேட்ட கேள்விகளுக்கு அவர் அழித்த பதில்கள் பேட்டி எடுத்தவரை வாய் மூட வைத்துவிட்டது .போர்க்குற்ற அறிக்கையில் கூட சிங்கள அரசிற்கு சரிசமமாக புலிகளும் போர்குற்றம் புரிந்தார்கள் என்று இருக்கு.விசாரணை என்று ஒன்று வந்தால் அது இருவருக்கும் எதிரானதுதான் .நீங்கள் அரசை பற்றி சொல்வது சரி எங்களை பற்றி சொல்வது பிழை என்று சொல்லமுடியாது .தொண்ணுறுகளில்இருந்து மனித உரிமை அமைப்புகளும் ,உலகமும் சொல்லி வருவது உங்களுக்கு நம்மமுடியாமல் இருப்பதுதான் வியப்பு .

இங்கு வந்து எழுதும் பலரின் கருத்துக்கள் போல் நாங்கள் தர்மயுத்தம் செய்தோம் உலகம் வஞ்சமாக எம்மை அழித்துவிட்டது என்பது உண்மையல்ல ,உலகம் புலிகளை பயங்கரவாதத்தை நிற்பாட்ட சொல்லி பலமுறை கேட்டது அது முடியாமல் போக சிங்கள அரசிற்கு உதவி புலிகளை அழித்தது .

இதனால் எவ்வளவு தமிழர்களை அழியவைத்தீர்கள் அகதியாக்கினீர்கள் அடிமையும் ஆக்கிவிட்டீர்கள் .

அதனால் தான் புலிகளில் கோவம் .

நன்றிகள்,அர்ஜுன்!

எங்களிடையேயுள்ள இடைவெளிகள் அதிகமில்லை!

புலிகள் செய்த எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடில்லை!

ஆனாலும், மாவீரர்கள் என்று வரும்போது, அவர்கள் எந்த இயக்கத்தில் இருந்து தோன்றியிருந்தாலும், அவர்கள் வாழ்வில் ஒரு தடவையாவது, தாயக விடுதலையைக் கொள்கையை ஏற்றிருப்பார்கள்! பின்பு, சூழ்நிலை, அரசியல் மாற்றங்களால், அணுகுமுறைகள் மாறியிருந்தாலும், அவர்கள் உயிர்கள், சுதந்திரம் என்ற அவர்களின், ஆரம்பத் தாகத்தினாலேயே, இறுதியில் பறிக்கப் பட்டன! அது போராக இருக்கலாம். அல்லது உட்பூசல்களாக இருக்கலாம்!

அந்த ஒரு காரணத்துக்காகவே, நான் அவர்களை மதிக்கின்றேன்!

மற்றது, இறந்து போனவர்களை, விமரிசிப்பதும் அவ்வளவு அழகல்ல! ஏனெனில் அவர்களால் திரும்ப வந்து, தங்கள் பக்கத்துக்கு நியாயங்களைச் சொல்லமுடியாது!

மீண்டும் நன்றிகள், அர்ஜுன்!

  • தொடங்கியவர்

செல்வியை கொலை செய்தது முதலாவது தவறு என்றால், அவற்றைப் பற்றி இன்றைக்கும் பேசாதே என்பது இரண்டாவது தவறு.

நாங்கள் பல நியாயங்களோடும், பல தவறுகளோடும் தான் எமது போராட்டத்தை நடத்தினோம்.

ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது, போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீதான விமர்சனங்களை தவிர்க்கும்படி விடப்பட்ட கோரிக்கைகளில் ஓரளவு நியாயங்கள் இருக்கச் செய்தன.

விமர்சனங்களை தவிர்த்ததன் ஊடாகவும் போராட்டத்திற்கான பங்களிப்பை நாம் செய்தோம். பங்களிப்புச் செய்ததனால் தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் நாம் பொறுப்பாளிகளாகவும் உள்ளோம்.

ஆயுதப் போராட்டம் முடிந்த பிற்பாடும் தவறுகளைப் பற்றிப் பேசாதே என்பது மிகத்தவறானது.

மீண்டும் அதே தவறுகள் நடக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் இண்டைக்கு பேசி? என்னத்த செய்ய போறிங்க? ஏன் புலிகள் இருக்க்க எழுதி இருக்கலாமே? ஆக உங்களை தக்க வைக்கிறதில ஏதாவது ஒண்டு தேவை படுது? புலிகள் இருக்கும் போது எப்பிடி அடிக்க போறாங்கள் எண்டு எழுதி உங்களை ஒரு எழுத்தளர காட்டிக்கனும் இப்போ இல்லாத பொழுது பழசுகள எல்லாம் எடுத்து கிளறி இன்னும் நீங்க எழுத்து துறையில இருக்கிங்க எண்டு காட்டிக்கனும்? உங்களுக்கு நெஞ்சிலே உரம் இருந்தா நேர்மை திறன் இருந்தா உண்மையிலையே நீங்க ஒரு எழுத்தாலான சமுக நோக்கோடு இருந்தா புலிகள் இருக்கும் போதே எழுதி இருக்கலாமே? உங்களை போருய்ஹ்தவரை சமுகத்தில் உங்களை ஒரு சீர்திருத்த வாதியா காட்டிக்கனும் அதுக்காக உங்களை அடிக்கடி சந்தையில விக்கணும்.......

அதுவும் மாவீரர் நாள் நடக்க போகும் இந்த மாதத்தில் உங்களுடையா வாந்திகள் எல்லாம் நீங்கள் ஒரு போலியானவர் என்பதையே எமது இனத்திற்கு காட்டி நிற்கின்றது

இதுக்கும் நீங்க ஏதாவது காரணத்தோட வருவிங்க உங்களுக்கு தான் புரட்டி புரட்டி எழுதுவது கை வந்த கலை ஆச்சே வாங்க வந்து எழுதுங்க

என்னமோ ஆயுத போராட்டம் முடிந்தா பிறகும் இத பற்றி பேசக்கூடாது என்று சொல்லுவது தவறு என்று சொல்லுரிங்க என் ஆயுத போடட்டம் நடக்கும் போது எழுதி இருக்கலாமே எவன் வேண்டாம் எண்டு சொன்னது? வெளிநாட்டில தானே இருந்திங்க எவன் மிரட்டினது? தமிழ் ஈழம் கிடைச்சா ஹீரோ மாதிரி போகலாம் எண்டு நினைச்சு எழுதிறது இப்போ இல்லை ஏன்டா உடன மற்ற மாதிரி எழுதி இதுலயும் ஹீரோ ஆகலாம் எண்டு மொத்தத்தில நீங்க ஒரு zero

  • தொடங்கியவர்

<p>சுண்டல்,

நீங்கள் இரண்டு விடயங்களை இலகுவில் மறந்து விட்டுப் பேசுகிறீர்கள்

முதலாவது...

போராட்டம் மிகப் பலமாக நடந்து கொண்டிருக்கிறது. எமது தரப்பு வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் நடக்கின்ற தவறுகளை பகிரங்கமாக விமர்சிக்க வேண்டாம் என்று வைக்கப்பட்ட கோரிக்கைகளை நாம் ஏற்றுக் கொண்டோம்.

வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பவர்களை எங்களின் விமர்சனங்கள் பாதித்து விடக் கூடாது என்கின்ற சிந்தனைதான் இதில் முக்கிய காரணம்.

இரண்டாவது...

ஈழத்திலோ புலம்பெயர் தேசங்களிலோ பகிரங்கமாக விமர்சனங்களை வைக்கக் கூடிய ஆரோக்கிய சூழ்நிலை இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இங்கே எழுத்தாளர் மீதான கொலைத் தாக்குதல்கள் கூட நடந்தன. யார் உங்களை தடுத்தது என்று அவ்வளவு சாதரணமாகக் கேட்கிறீர்களே!!

அடி வாங்கியவர்களிடம் போய் இதைக் கேட்டுப் பாருங்கள்

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி பயன்தநிங்க அப்புறம் எதுக்கு எழுத்து துறைக்கு வந்திங்க? :D

  • தொடங்கியவர்

இங்கே நான் அதிகம் எழுதக் கூடாது என்றுதான் விரும்புகிறேன். சிலர் எழுதுகின்ற கருத்துக்களே என்னை தொடர்ந்து பேசத் தூண்டுகின்றன.

நாங்கள் சில தவறுகளை விட்டிருக்கிறோம். அதில் மறைப்பதற்கு ஏதும் இல்லை. போராட்டத்தை நிபந்தனை அற்ற விதத்தில் ஆதரித்த எமக்கும் அந்தத் தவறுகளில் பொறுப்பு உண்டு.

அந்தத் தவறுகளை ஏற்றுக் கொண்டு நாம் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும். தவறுகள் பற்றி பேசுபவனை தடுப்பதும், அவன் மீது வசைகளை பொழிவதும் அன்றைக்கும் போலவே இன்றைக்கும் இருக்கிறீர்கள் என்பதைதான் காட்டுகிறது.

ஆகவே தொடர்ந்து பேச வேண்டி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சோ உங்க எழுத்து துறையில் ஒவொரு காலமும் ஒவோருவர் செல்வாக்கு செலுத்தி இருக்காங்க அவங்க எழுத வேண்டாம் எண்டாங்க நீங்க எழுதலா இப்போ யாரோ எழுத சொல்லுராங்கோ நீங்க எழுதுரிங்கோ.....நன்னா இருக்குன்னா பாவம் தமிழர் அம்புட்டு தா

சரி தவறு விடப்பட்டிருக்கு தான் இப்போ பேசி என்ன ஆகபோது? அதுவும் மாவீரர் நாள் நடக்க போகும் மாதத்தில் அவர்களுக்கு உணர்வுபூரவமா மரியாத செளுத்திட்டு தவறுகளை December மாதத்திற்கு தள்ளி போட்டா என்ன?

  • தொடங்கியவர்

சுண்டல்,

உங்களுக்கு நான் எந்த வகைக்குள் அடங்குகிறேன் என்பதை சொல்லியிருக்கிறேன். நான் முதலாவது வகைக்குள்ளேயே இருந்தேன். வெற்றிகளை குவித்து வரும் போராளிகளுக்கு என்னுடைய எழுத்துக்கள் உத்வேகத்தை கொடுக்க வேண்டும், என்னுடைய விமர்சனங்கள் அவர்களை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என்கின்ற வகைக்குள் இருந்தேன்.

முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டிய போது மட்டும்தான் நான் வெளிப்படையாக அதை விமர்சித்தேன். அதற்கே நிறைய பிரச்சனைகளை ஜேர்மனியில் சந்தித்தேன். ஆனால் அந்த விமர்சனத்தில் இருந்து நான் ஒரு போதும் பின்வாங்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.