Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருபது வருடங்களாக இல்லாத நவம்பர் மாவீரர் மாதம் தேவையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் 20 வருடத்திற்குப் போவான் முள்ளி வாய்க்கால் முடிந்தே 3 வருடம் முடிந்திட்டுது 2 மாவீரர் இடையில் வந்தும் போச்சுது அப்பவெல்லாம் இப்படியொரு சிந்தனை வரேல்ல போல :o

இப்பதானே நல்ல கால்லாக் கட்டுது அது தான் ரெண்டா பிரிச்சிட்டோம் மாவீரர் தினத்தை :(

  • Replies 55
  • Views 5k
  • Created
  • Last Reply

தலைவர் அறிவித்த மாவீரர் வாரத்தைமாற்றி மாவீரர் மாதமாக செல்வமணி மற்றும் சீமான்மூலம் அறிவித்தவர்கள் சில நாட்களிலேயே திரைப்பட வியாபாரத்தில் இறங்கிவிட்டார்கள். இப்போது அவர்களுக்கு கார்த்திகை மாதம் மாவீரர் மாதமாகத் தெரியல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாவீரர்களுக்கான புனித மாதம் என்பதை ஏற்றுக் கொண்ட மக்கள் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையில் எமது கருத்து...

நவம்பர் மாதம் எத்தனையாம் திகதி கார்த்திகை மாதம் ஆரம்பமாகிறது என்றும் டிசம்பர் மாதம் எத்தனையாம் திகதி கார்த்திகை மாதம் முடிகிறது என்றும் சொன்னால் பயனுள்ளதாக இருக்குமே?

அதோடு இது எந்த நாட்டு நேரப்படி (இலங்கை, கனடா, அவுஸ்திரேலியா என்று மாதம் தொடங்கும் நாள் வேறுபடுகிறதில்லையா?) என்றும் சொல்ல வேணும்.

மாவீரர் தினத்தை யாரும் நினைவு கொள்ளலாம். அது மாதமாக இருந்தால் என்ன ,வாராமா இருந்தால் என்ன. நற்பணிகளை செய்வதே மாவீரர் மாதத்தின் சிறம்பம்சம், தாயகத்தில் மாவீரர் மாதத்தில் பல சிரமதான பணிகள் இடம் பெறும். கடைசி வாரம் சிறப்பு வாரம் அவ்வளவுதான்

ஒரு காலத்தில் மாவீரர் குடும்பங்கள் வீடுகளுக்கு சென்று அவர்களின் சகல தேவைகளையும் போராளிகள் நிறைவேற்றினார்கள், அது மாவீரர் மாதத்தில் தான் நடை பெறும்

நான் யாழ்ப்பானத்தில் செய்த வேலை மாவீரர் வாரத்தில் பெற்றோரை கூட்டிச் சென்று பராமரிப்பது( பெரிய பாடசாலைகளில் வைத்து நன்றாக உபசரிப்பதும் மாவீரர்களின் நினைவுதூப்பிக்கு தீபம் ஏற்ற துயிலும் இல்லத்துக்கு பெற்றோர் உறவினரை கூட்டிச் செல்லவது போன செயற்படுகள்>

ஆனால் அதை நவம்பர் மாதம் செய்தேன் என்று எனக்கு நினவில்லை. :D

ஏன் 20 வருடத்திற்குப் போவான் முள்ளி வாய்க்கால் முடிந்தே 3 வருடம் முடிந்திட்டுது 2 மாவீரர் இடையில் வந்தும் போச்சுது அப்பவெல்லாம் இப்படியொரு சிந்தனை வரேல்ல போல :o

அப்போது இளையராஜா வரவில்லையே . சின்ன சின்ன கலைஞர்கள் தானே வந்தார்கள்.

நவம்பர் மாதம் எத்தனையாம் திகதி கார்த்திகை மாதம் ஆரம்பமாகிறது என்றும் டிசம்பர் மாதம் எத்தனையாம் திகதி கார்த்திகை மாதம் முடிகிறது என்றும் சொன்னால் பயனுள்ளதாக இருக்குமே?

அதோடு இது எந்த நாட்டு நேரப்படி (இலங்கை, கனடா, அவுஸ்திரேலியா என்று மாதம் தொடங்கும் நாள் வேறுபடுகிறதில்லையா?) என்றும் சொல்ல வேணும்.

ஆள் இப்போதைக்கு இந்த பக்கம் வராது.

சில நேரம் தமிழ் மாசம் டிசம்பர் வந்தாலும் வருவார் .

[size=5]இசை நிகழ்ச்சியை எதிர்க்கவே மாவீரர் மாதம் என்ற கருத்து பரப்பப்பட்டுள்ளது - என நம்பலாம்.

சாதாரண மக்கள் எதையுமே மிக நீண்டகாலம் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது அதன் மகத்துவம் குறைவது இயல்பு.

விடுதலைப் புலிகள் எதையுமே அலசி ஆராய்ந்து காரணத்துடன் தான் செய்வார்கள். ஓரிரு நாட்கள் என்பது போதாது - மிக மிகக் குறைவு. குறித்த ஒரு நாளில் சிலருக்கு (குறிப்பாக மாவீரர் குடும்பங்களுக்கு) வசதியீனங்கள் வந்தால் சிரமமாகிவிடும். பத்து நாட்கள் என்றால் சிறிது அதிகம். எனவே வார அமைப்பு முறையை பயன்படுத்தி மாவீரர் வாரம் என்று கடைப்பிடித்தது - மிகவும் உணர்வுபூர்வமான அர்த்தமுள்ள ஒரு சூழலை உருவாகியது கண்கூடு.

எனவே பல காரணங்களினால் நடைமுறையில் சாத்தியமான மாவீரர் வாரம் தொடர்ந்து கடைப்பிட்டிக்கப்பட்டு வந்தது.

இதை விவாதித்து பிரச்சனைகளை கிளப்புவது தேவையற்ற விடயம்.

தமது இனத்துக்காக, இனத்தின் உரிமைகளுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமது இன்னுயிரை வழங்கிய கொடையாளிகளை மதிக்காதவர்கள் ஒருசிலர் இருக்கலாம். அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று இங்கு சொல்ல வேண்டியதில்லை.[/size]

ஒரு விடயம் மட்டும் தெளிவாக புரிகிறது. இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறதோ இல்லையோ. மாவீரர் தினத்திற்க்கு ஆப்பு வைப்பதற்க்கு கொஞ்சப்பேர் கொடுக்கு கட்டிக்கொண்டு மும்மரமாக திரியினம்........

ஒரு விடயம் மட்டும் தெளிவாக புரிகிறது. இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறதோ இல்லையோ. மாவீரர் தினத்திற்க்கு ஆப்பு வைப்பதற்க்கு கொஞ்சப்பேர் கொடுக்கு கட்டிக்கொண்டு மும்மரமாக திரியினம்........

உண்மைதான் மாவீரரை நேசிப்போர் இப்பிடியான கருத்துக்களை தெளிக்க மாட்டார்கள். மாவீரருக்காக ஒரு மாதம் ஒதுக்கினால் தமிழன் என்ன கவுண்டா போவான்?

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் மீதும் தலைவர்மீதும் மதிப்பு வைத்திருப்பவன் இன்னும் இன்னும் அதிகமாகவே செய்ய விளைவான்.

ஆகக்கூடுதலாக அப்படி செய்ய முயல்வோரை கேலி செய்யாமலாவது இருப்பான்.

தலைமையும் தேசமும் இருந்தபோது தாயகத்திலேயே எல்லாமே நடந்தன. புலம் என்பது ஒரு பங்னளிப்பு சக்தியாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று நிலமை தலை கீழாகிவிட்டது. புலத்தில் தான் எல்லாமே தங்கியுள்ளநிலையில் தலைவரும் அது புலத்தில் அதிகரிக்கப்படுவதையே விரும்புவார். தேவையைப்பொறுத்தே காலமும் நேரமும் தீர்மானிக்கப்படும். அது புலிகளைப்பொறுத்தவரையும் மாவீரர்களைப்பொறுத்தவரையும் மாற்றத்துக்குள்ளாகியே வந்துள்ளது. வரணும்.

முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான பணிகளும் மாவீரர்களது எண்ணிக்கையும் பின்னரான பணிகளும் வேலைத்திட்டங்களும் ஒன்றல்ல. அவை அனைத்தும் புலம் பெயர் மக்களிடையே கொண்டு செல்லப்படணும்.

இங்கு முழுநேரப்போராளிகள் இல்லாதநிலையில் இப்படி ஒரு காலத்தை பயன்படுத்தமுடியுமா என எல்லோரும் யோசிக்கணும் என்பதே எனது அவா.

இங்கு மாவீரர்மீதும் தலைவர்மீதும் பாசம் காட்டுவோர்

இந்த மாதத்தில் பல சந்திப்புக்களையும் ஒன்று கூடல்களையும் போர்க்குற்ற ஆவணத்தேடுதல் மற்றும் சேகரிப்புக்களையும் செய்யமுடியும். அதைவிடுத்து வீணாக மற்றவர் மீது மலமடிப்பது மட்டுமே இங்கு நடக்கிறது.

இது தமிழரின் தாகத்துக்கு இடைஞ்சல் தரும்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதை எல்லாம் பார்க்கும் பொழுது முருகப்பெருமானுக்கு அந்த காலத்தில் நடந்தாக கூறும் சில சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது....

கந்தசஷ்டி...6 நாள்

கெளரிகாப்பு ..41 நாள்{சந்தேகம்}

அந்த காலத்திலயே தமிழன் ஜனநாயகத்தை கடைப்பிடித்திருக்கிறான்.....

விசுகு, புத்தன் உங்களுக்கு ஒரு பச்சை.

ஐம்பது, அறுபது நாள்கள் (சரஸ்வதி பூசை, கௌரி காப்பு, கந்த சஸ்டி, திருவெம்பாவை) பட்டினி கிடந்து விரதம் பிடிக்கும் மக்களுக்கு முப்பது நாட்கள் மாவீரர் மாதத்தைக் கடைப்பிடிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. எல்லாவற்றிற்கும் மனம்தான் முக்கியம். சமூக மாற்றங்கள் எல்லாமே ஒரு துளியில் அல்லது ஒருவரது பொறியில் உருவாகியவைதான். மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதுகூட ஒருவரின் பொறியிலிருந்து உருவாகியதுதான். அது ஒரு நாளிலிருந்து ஒரு வாரமாக மாற்றப்படவில்லையா? அதேபோல் ஒரு வாரம் ஒரு மாதமாக நீட்டிப்பதில் என்ன தவறு? 1998, 1999 காலப்பகுதிகளில் மாவீரர் நினைவு 21 நாட்கள் கடைப்பிடித்ததாக ஞாபகம்.

[size=4]முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.[/size]

என்ன தெரியாதமாதிரி அக்ற் பண்ணுறீங்க.வேறயார்.நீங்க ஓடி ஒடி முண்டு கொடுக்குரவங்கதான். :lol: :lol:

உங்களுக்கு பிடிக்காதவர்கள், தேசியத்துக்கு ஆதரவானவர்கள் எல்லோரையும் போலிகள் என்று நீங்கள் கூறி அவர்கள் மேல் சேறு பூச விளையாமல் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுங்கள்.

மாவீரர் வாரமே போதுமானது . இங்கு என்ன சிரமதானம் செய்யப்போறியாலா அல்லது மாவீரர் குடும்பத்தை கூப்பிட்டு மரியாதை செய்யப்போறியலா ஒண்ணுமே இல்ல மாவீரர் தினம் முடிந்ததவுடன் கல்லாவைத்தான் பாக்கப் போறியல் .புலத்தில் தலைவர்கள் கூடிப்போனதால் வந்த வினை இது .

நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதற்காக மற்றவனும் செய்யமாட்டான் என்று ஏன் நினைக்கிறீர்கள்?

தேசியத் தலைவர் முடிவு எடுத்த ஒவ்வொன்றாக இப்பிடியே மாற்றிக்கொண்டு வாருங்கள் ஒரு காலத்தில் அவரையே யார் என்று கேட்க உதவும்

தலைவர் இருக்கும் வரை மாவீரர்கள் மேல் மற்றவர்கள் வைக்கும் அன்பை யாராலும் குழப்ப முடியாத சூழ்நிலை தான் இருந்தது. ஏனென்றால் தலைவரை பார்த்ததும் மக்கள் கட்டுண்டு விடுவார்கள்.

ஆனால் இன்றைய நிலையில் போர் முடிவடைந்த பின் பெரும்பாலான மக்கள் மத்தியில் "எல்லாம் முடிந்து விட்டதே, இனி என்ன செய்வது" என்ற எண்ணம் மட்டும் நிலைகொள்வதால் பலர் புலிகளையும் மாவீரர்களையும் காலப்போக்கில் மறந்து விடும் தன்மை உள்ளது. (மாவீரர்கள் மேல் அளவுகடந்த பற்று வைத்திருப்பவர்களை தவிர)

அது தவிர மாவீரர்களை மறக்க வைக்க பலராலும் பல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வேளையில் மாவீரர் வாரத்தை மாவீரர் மாதமாக நீட்டிப்பதில் எந்த தவறும் இல்லை.

முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்த பின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவரும் இன்றைய நிலையறிந்து மாவீரர் வாரத்தை மாவீரர் மாதமாக்கி இருக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்?

தலைவர் சொன்னால் தான் எதையும் செய்வேன் என்றால், தலைவர் இல்லாத இன்றைய காலப்பகுதியில் சிங்களவனுடன் கூட்டு சேர்ந்து விட்டு தலைவர் மறுப்பு சொல்லவில்லை தானே என்றும் சொல்ல வெளிக்கிட்டிடுவார்கள். சேனல் 4 இல் காணொளிகளை போடுமாறு தலைவர் சொல்லவில்லை தானே... ஐ.நா க்கு மனு அனுப்ப சொல்லி தலைவர் சொல்லவில்லை தானே.. என்று தலைவர் சொல்லாத பலவற்றையும் அதையே சாட்டா வைத்து கைவிடுவீர்கள் போலிருக்கே...

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் மாதம் அறிவிக்கப்படுவது தவறில்லை. மற்றவரைக் கட்டாயப்படுத்தாமல் இருக்கும்வரை. மாவீரர் மாதம் கொண்டாடுவதுடன் அவர்கள் நின்றுவிடாது தேசத்துக்கும் மக்களுக்கும் பயன் தரும் ஏதாவது ஒன்றையாவது செய்வார்களானால் அதுவே தற்போது தேவையானது.

எமக்காக உயிர் நீத்தவர்களுக்கு நாம் ஒரு மாதம் துக்கம் அனுஸ்டிப்பதில் தப்பில்லை. அந்த மாதத்தில் பல நல்ல காரியங்களை செய்யலாம். தொடர்ச்சியா எழுச்சி நிகழ்வுகளை செய்யலாம். இலங்கைக்கு எதிரா பரப்புரைகளை பாரிய அளவில் பலமொழிகள் ஊடாக செய்யலாம். ஒரு இனம் ஒரு மாதத்தையே துக்கமாக அனுஸ்டிக்கும் போது கண்டிப்பா வெளிநாட்டவர் நம்மை உயர்வாயே பார்ப்பார்கள். வானொலிகள் தொலைக்காட்சிகள் தொடர்ச்சியா தேசியம் சம்மந்தமான நிகழ்வுகளை ஒலி ஒளி பரப்பலாம். ஆனால் இதெல்லாம் ஒவ்வொருவரின் மனதில் இருந்து வரணும். இல்லை எண்டா பல கேள்விகள் கருத்துக்கள் வரும் தலைவர் சொன்னவரா எண்டு. என்னமோ தலைவர் சொன்னா மட்டும் செய்து முடித்து விட்டு வந்தவர்கள் போல. கடவுள் வந்து சொல்லியா எம் மக்கள் தம்மை வருத்தி காவடி எடுக்குறார்கள் இல்லை பிரதட்டை செய்கிறார்கள்? இல்லை எண்டா உபவாசம் விரதம் என்று வருத்துகிரார்கள்? நம்பிக்கை இருந்து தங்கள் மனப்படி எப்பிடி இதுகளை செய்கிறார்களோ அதே போல மாவீரர் சார்ந்தும் செய்யலாம். அதை விட்டு மேதாவி கதைகள் பேசினால் யாரும் யாருக்கும் பதில் சொல்ல முடியாது.

இறந்த மாவீரர் வந்து கனவில் என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா எண்டு கேட்காமல் விட்டால் சரி.

மாவீரர் தினத்தை கடைப்பிடிப்பது எம் கடமை.

அது போக, வாரம்/மாதம் என தம் வசதிக்கேற்ப செய்யலாம்.

ஆனாலும், எம்மினத்துக்கான விடியலுக்கான உதவிகளையும், பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளையும் செய்ய நாள் கோள் தேவையில்லை. வருடம் பூராகவும் செய்யலாம். அதற்கு பெயரெல்லாம் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சாட்டையடி எண்டா இது தான் மெசோ அக்கா மற்றும் ஈஸ் அண்ணா சுபெர்ப்

மாவீரர் தினத்தை கடைப்பிடிப்பது எம் கடமை.

அது போக, வாரம்/மாதம் என தம் வசதிக்கேற்ப செய்யலாம்.

ஆனாலும், எம்மினத்துக்கான விடியலுக்கான உதவிகளையும், பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளையும் செய்ய நாள் கோள் தேவையில்லை. வருடம் பூராகவும் செய்யலாம். அதற்கு பெயரெல்லாம் தேவையில்லை.

[size=4]நீங்கள் கூறுவது கொள்கையளவில் மிகச்சரியானது. ஆனால் இதுவரை காலத்திலும் யதார்த்தத்தில் அப்படி நடக்கவும் இல்லை நடக்கப்போவதும் இல்லை. [/size]

[size=4]இந்த கசப்பான உண்மை காரணமாகத்தான் [/size][size=4]சிலர் [/size][size=4] கார்த்திகை மாதத்தை இல்லை வாரத்தை ஆவது நினைவூட்டி எம்மை ஒருங்கிணைக்க முயற்சிக்கின்றார்கள் என எண்ணுகிறேன். [/size]

Edited by akootha

எனக்கு இதை எல்லாம் பார்க்கும் பொழுது முருகப்பெருமானுக்கு அந்த காலத்தில் நடந்தாக கூறும் சில சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது....

கந்தசஷ்டி...6 நாள்

கெளரிகாப்பு ..41 நாள்{சந்தேகம்}

அந்த காலத்திலயே தமிழன் ஜனநாயகத்தை கடைப்பிடித்திருக்கிறான்.....

இது ஒருவாறு முருகன் அம்மனோடு இணைக்கப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

இரண்டு பிரதான காரணங்கள் கடவுளுக்கு விரதமிருப்பதில் இருக்கின்றது, ஒன்று எதிர்பார்க்கப்படும் ஒரு காரியம் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடனான விரதம். இரண்டாவது நான் நல்லவன் என்பதை சமூகத்தில் நிலைநாட்ட மிக இலகுவான வழி கோயில் விரதங்களுடன் கலந்திருப்பது. (அடிப்படையில் இது ஆன்மீகத்துக்கு சம்மந்தமில்லாதது என்பது வேறுவிசயம்.)

இதே போல் மாவீரர் நினைவு என்பதை அணுக முற்படும்போது எனக்கு நாடு ஒன்று வேணும் அதற்கா என்னுமொருவன் உயிர்விடவேண்டும் என்பதும் நான் மாவீரர் தினத்துக்குப் போறன் நான் நல்லவன் என்பதும் முதன்மையாகி நிற்கின்றது. தேசியத்துக்காக நான் எனது பங்களிப்பு என்பதும் எனது அடயாளத்துக்காக தேசியம் என்பதும் தெளிவாக இனங்காணப்படக்கூடியது.

(அடிப்படையில் மாவீரர் வீழ்ந்தபோது தனது ஆயுதத்தை என்னுமொருவன் எடுத்து தொடர்ந்து போராடுவான் என்ற நம்பிக்கையில்தான் வீழ்ந்தார்கள். அந்த நம்பிக்கையை புதிப்பித்துக்கொள்வதே மாவீரர் துயிலுமில்லங்களுக்குச் செல்வதும் அந்த நாளை ஒரு உன்னத நாளாக நடைமுறைப்படுத்துவதும். இது முழுக்க முழுக்க பங்களிப்ப்பு நோக்கிய நகர்வு. நாம் தான் வீழ்ந்தபோது ஆயுதத்தை எடுத்து தொடர்ந்து செல்வோம் என்ற நம்பிக்கைக்கு எப்போதோ அல்வா கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்துவிட்டோம், இப்போது விடுதலை நோக்கிய பயணத்தக்கு தயாரவதையும் எம்மை புதுப்பித்துக்கொள்வதையும் கூட வேறு விதமாக பயன்படுத்துகின்றோம். )

நவம்பர் 27 ஒரு வேலைக்குப் போவேன் வாய்ப்பிருந்தால் இரண்டுவேலைக்குப்பேவேன். அன்றய தினம் எனது ஊதியத்தை போரால் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு அனுப்பிவைப்பேன். இதுதான் என்னுடைய மாவீரர் தினம்.

மாவீரர் மாதம் அறிவிக்கப்படுவது தவறில்லை. மற்றவரைக் கட்டாயப்படுத்தாமல் இருக்கும்வரை.

மாவீரர் மாதம் கொண்டாடுவதுடன் அவர்கள் நின்றுவிடாது தேசத்துக்கும் மக்களுக்கும் பயன் தரும் ஏதாவது ஒன்றையாவது செய்வார்களானால் அதுவே தற்போது தேவையானது.

[size=1]

[size=4]அழகான கருத்து. [/size][/size]

[size=1]

[size=4]புலம்பெயர் தேசங்களில் இப்படி அல்லது அப்படி செய்யுங்கள் என கேட்கலாம், ஆனால் வற்புறுத்த முடியாது. காரணம் இங்குள்ள சட்டங்கள். [/size][/size]

[size=1]

[size=4]இப்படி நம்மவர்கள் பலர் ஒரு நாளுமே மாவீரர் தினங்களுக்கு செல்லாதவர்கள் உள்ளனர். அதேபோன்று அவர்களும் மற்றையவர்களை வற்புறுத்த முடியாது. [/size][/size]

[size=1]

[size=4]நாம் ஒவ்வொருவரும் தாயக மக்களுக்கு பயன்தரும் விடயம் ஒன்றை வருடாந்தம் செய்தாலே பெருமளவிலான பிரச்சனைகள் தீர்ந்துவிடலாம். அவ்வாறு நாம் செய்வதில்லை என்பதை கூட இன்றைய கால மாவீரர் காலம் எமக்கு சொல்லி நிற்கின்றது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதற்காக மற்றவனும் செய்யமாட்டான் என்று ஏன் நினைக்கிறீர்கள்?

தலைவர் இருக்கும் வரை மாவீரர்கள் மேல் மற்றவர்கள் வைக்கும் அன்பை யாராலும் குழப்ப முடியாத சூழ்நிலை தான் இருந்தது. ஏனென்றால் தலைவரை பார்த்ததும் மக்கள் கட்டுண்டு விடுவார்கள்.

ஆனால் இன்றைய நிலையில் போர் முடிவடைந்த பின் பெரும்பாலான மக்கள் மத்தியில் "எல்லாம் முடிந்து விட்டதே, இனி என்ன செய்வது" என்ற எண்ணம் மட்டும் நிலைகொள்வதால் பலர் புலிகளையும் மாவீரர்களையும் காலப்போக்கில் மறந்து விடும் தன்மை உள்ளது. (மாவீரர்கள் மேல் அளவுகடந்த பற்று வைத்திருப்பவர்களை தவிர)

அது தவிர மாவீரர்களை மறக்க வைக்க பலராலும் பல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வேளையில் மாவீரர் வாரத்தை மாவீரர் மாதமாக நீட்டிப்பதில் எந்த தவறும் இல்லை.

முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்த பின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவரும் இன்றைய நிலையறிந்து மாவீரர் வாரத்தை மாவீரர் மாதமாக்கி இருக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்?

தலைவர் சொன்னால் தான் எதையும் செய்வேன் என்றால், தலைவர் இல்லாத இன்றைய காலப்பகுதியில் சிங்களவனுடன் கூட்டு சேர்ந்து விட்டு தலைவர் மறுப்பு சொல்லவில்லை தானே என்றும் சொல்ல வெளிக்கிட்டிடுவார்கள். சேனல் 4 இல் காணொளிகளை போடுமாறு தலைவர் சொல்லவில்லை தானே... ஐ.நா க்கு மனு அனுப்ப சொல்லி தலைவர் சொல்லவில்லை தானே.. என்று தலைவர் சொல்லாத பலவற்றையும் அதையே சாட்டா வைத்து கைவிடுவீர்கள் போலிருக்கே...

தலைவர் இருக்கும் போதே என்ற கருத்தின் ஊடாக தலைவர் இல்லை என்பதனை சொல்ல விளையும் நீங்கள் அதற்க்கான ஆதரத்தை மக்கள் மன்றின் முன் வைக்க வேண்டும்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தொடர்ந்தது கருத்தை திசை திருப்பும் உரையாடல்களில் நான் ஈடுபட விரும்பவில்லை அனால் இது ஒரு கருத்துக்களம் பேசுபவற்றுக்கு எல்லாம் ஆதாரத்தை கொடுக்க முடியாது துளசி அவர்கள் ஆதாரத்தை தருமாறு கேட்டார் அப்பிடி ஆதாரம் கொடுத்தால் கொடுப்பவரின் முழுப் பாதுகாபிர்க்கும் நீங்கள் உத்தரவாதம் கொடுக்க தயாரா என்று கேட்டு? ஏற்க்கனவே கருத்துகளை திசை தயுப்பவதாக என் மேல் குற்றச்சாட்டு எழுப்ப பட்டு அன்பு உறவுகள் பலர் தனிமடலில் சுட்டிகாட்டியதற்கு இணங்க இதில் இருந்து கருத்துகளை எழுதுவதை நிறுத்துகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இத் திரியில் மாவீர‌ர் மாதம் அனுஸ்டிக்கப் போறம் என சொன்னவர்கள் விசேச‌மாக இந்த கிழமை என்ன செய்தவர்கள் என எழுதினால் அவர்களை பின் பற்றுபவர்களுக்கு வச‌தியாக இருக்கும்...உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்டோ அல்லது வழமையாய் அனுப்பிற மாதிரி காசு அனுப்பிற உதவிகளை பற்றி எழுத மாட்டீங்கள் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒருவாறு முருகன் அம்மனோடு இணைக்கப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

இரண்டு பிரதான காரணங்கள் கடவுளுக்கு விரதமிருப்பதில் இருக்கின்றது, ஒன்று எதிர்பார்க்கப்படும் ஒரு காரியம் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடனான விரதம். இரண்டாவது நான் நல்லவன் என்பதை சமூகத்தில் நிலைநாட்ட மிக இலகுவான வழி கோயில் விரதங்களுடன் கலந்திருப்பது. (அடிப்படையில் இது ஆன்மீகத்துக்கு சம்மந்தமில்லாதது என்பது வேறுவிசயம்.)

இதே போல் மாவீரர் நினைவு என்பதை அணுக முற்படும்போது எனக்கு நாடு ஒன்று வேணும் அதற்கா என்னுமொருவன் உயிர்விடவேண்டும் என்பதும் நான் மாவீரர் தினத்துக்குப் போறன் நான் நல்லவன் என்பதும் முதன்மையாகி நிற்கின்றது. தேசியத்துக்காக நான் எனது பங்களிப்பு என்பதும் எனது அடயாளத்துக்காக தேசியம் என்பதும் தெளிவாக இனங்காணப்படக்கூடியது.

(அடிப்படையில் மாவீரர் வீழ்ந்தபோது தனது ஆயுதத்தை என்னுமொருவன் எடுத்து தொடர்ந்து போராடுவான் என்ற நம்பிக்கையில்தான் வீழ்ந்தார்கள். அந்த நம்பிக்கையை புதிப்பித்துக்கொள்வதே மாவீரர் துயிலுமில்லங்களுக்குச் செல்வதும் அந்த நாளை ஒரு உன்னத நாளாக நடைமுறைப்படுத்துவதும். இது முழுக்க முழுக்க பங்களிப்ப்பு நோக்கிய நகர்வு. நாம் தான் வீழ்ந்தபோது ஆயுதத்தை எடுத்து தொடர்ந்து செல்வோம் என்ற நம்பிக்கைக்கு எப்போதோ அல்வா கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்துவிட்டோம், இப்போது விடுதலை நோக்கிய பயணத்தக்கு தயாரவதையும் எம்மை புதுப்பித்துக்கொள்வதையும் கூட வேறு விதமாக பயன்படுத்துகின்றோம். )

நவம்பர் 27 ஒரு வேலைக்குப் போவேன் வாய்ப்பிருந்தால் இரண்டுவேலைக்குப்பேவேன். அன்றய தினம் எனது ஊதியத்தை போரால் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு அனுப்பிவைப்பேன். இதுதான் என்னுடைய மாவீரர் தினம்.

பங்களிப்பு செய்யாமல் மாவீரர் தினம் அனுஸ்டிக்க முடியாதா?மாவோயிஸ்ட்களே அல்வா கொடுக்கும் பொழுது நான் ஈழத்தமிழன் அல்வா கொடுத்தா தப்பா?:Dஒரு இனத்திற்காக போராடிய மாவீர்களை நாம் மதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் அதற்காக அந்த இனத்தில் உள்ளவர்கள் சில முயற்சிகளை செய்கிறார்கள் அதில் பிழை இருக்கு என்று சொல்ல எமக்கு உரிமையில்லை தானே

பங்களிப்பு செய்யாமல் மாவீரர் தினம் அனுஸ்டிக்க முடியாதா?மாவோயிஸ்ட்களே அல்வா கொடுக்கும் பொழுது நான் ஈழத்தமிழன் அல்வா கொடுத்தா தப்பா? :Dஒரு இனத்திற்காக போராடிய மாவீர்களை நாம் மதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம் அதற்காக அந்த இனத்தில் உள்ளவர்கள் சில முயற்சிகளை செய்கிறார்கள் அதில் பிழை இருக்கு என்று சொல்ல எமக்கு உரிமையில்லை தானே

கருத்தை சொல்லும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது அந்தவகையில் சொல்லவேண்டியதுதான்.

உண்மையைச் சொன்னால் எமக்கிருக்கும் சில தெரிவுகள் ஒருபுறம் போர்க்குற்றம் என்ற ஒரு பிடிமானம் என்னுமொருபுறம் மண்ணுக்காக மடிந்தவர்களின் நினைவு நாள். இதுதான் எமது அடிப்படையான இயங்குசக்தி. இந்தப் பிடிமானம் கைநழுவிப்போகும்போது தேசியம் சார்ந்த மக்கள் சக்தி தனது வலுவை முற்றாக இழக்கும்.

நடக்கும் செயற்பாடுகள் எதிர்வரும் ஆண்டுகளில் மாவீரர் நிகழ்வை பல நாடுகள் தடைசெய்யும் சாத்தியக்கூறுகள் அதிகம். போட்டிகள் திணிப்புகள் புதுப் புது ஏற்பாடுகள் எல்லாம் மக்களை பலதரப்பாகப் பிரிக்கும். மாவீரர் மாதம் வாரம் என்பதை வைத்து ஒரு நிகழ்வை குழப்புகின்றோம் அல்லது கேள்வி எழுப்புகின்றோம் என்றால் அங்கே இருதரப்புக்கும் முரண்பாடு ஆரம்பிக்கின்றது. அதற்கு என்னுமொரு பின்விழைவு இருக்கின்றது. எமது குழப்பங்களையும் அதன் விழைவுகளையும் நாம் வாழும் நாட்டு அரசுகள் தீர்த்துவைக்கவேண்டுமாயின் அதற்கு ஒரே ஒரு தெரிவுதான் அதுவானது இவ்வாறான நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது தான். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்பது நிலுவையில்தான் இருக்கின்றது. பிரான்ஸில் நடந்த கொலைச் சம்பவம் கேபி என்றார்கள் வினாயகம் என்றார்கள் பின்னர் சிங்கள புலனாய்வு என்றார்கள். யாரோ எவரோ செய்த பாதகம் ஆனால் இவ்வாறான செயற்பாட்டை மேற்கு நாட்டு அரசுகள் தடுப்பது என்பதின் ஒரு அம்சம் தேசியம் சார்ந்த நிகழ்வுகளை முடக்குவதும்தான்.

நாம் எமது காரியத்தை செய்வோம். எமக்குப் பிடித்ததை பற்றுடன் செய்வோம். விரும்பியவர்கள் காலப்போக்கில் எம் பின்னால் வருவார்கள். இரண்டாம்தரப் பிரஜைகளாக மேற்குநாடுகளில் வாழும் சுழலை கருத்தில்கொண்டு இவற்றை செய்வோம் என்பதே முன்வைக்கப்படும் அடிப்படைக் கருத்து. ஆனால் இங்கே நடப்பது நீ அப்படிச் செய்யாதே இப்படிச் செய்யாதே எப்படிச் செய்யமுடியும் என்ற கேள்விகளை எழுப்புவது. இவ்வாறான எதிர்மறை நடவடிக்கை மூலம் எதையும் சாதிக்கமுடியாது. காலப்போக்கில் நீங்கள் விரும்பியதையும் செய்யமுடியாது.

எமக்குள் நாம் துப்பாக்கிகளை நீட்டினோம் எமக்குள் நாம் சுட்டுவிரலை இப்போது காட்டுகின்றோம். விழைவு என்னவாக இருக்கும் இறுதியில்? தமிழீழத்தை அல்ல எமது அடயாளத்தை தக்கவைப்பதே முடியாத காரியம்.

இத் திரியில் மாவீர‌ர் மாதம் அனுஸ்டிக்கப் போறம் என சொன்னவர்கள் விசேச‌மாக இந்த கிழமை என்ன செய்தவர்கள் என எழுதினால் அவர்களை பின் பற்றுபவர்களுக்கு வச‌தியாக இருக்கும்...உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்டோ அல்லது வழமையாய் அனுப்பிற மாதிரி காசு அனுப்பிற உதவிகளை பற்றி எழுத மாட்டீங்கள் என நினைக்கிறேன்

[size=4]சில பரப்புரை வேலைகளுக்கு உதவி செய்யலாம்: [/size]

[size=4]#1 : http://www.yarl.com/forum3/index.php?showtopic=110982[/size]

அமெரிக்க உறவுகள் இந்த கையெழுத்து வேட்டைக்கு உதவி கேட்டு நிற்கின்றன

#2: [size=4]http://www.yarl.com/forum3/index.php?showtopic=110857[/size]

[size=4]புறக்கணி சிறிலங்கா பிரச்சாரத்திற்கு உதவலாம்.[/size]

[size=4] [/size]http://twitter.com/slcampaign

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.