Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்கிழக்குச் சீமையிலே........... ( இறுதிப்பாகம் ) .

Featured Replies

வணக்கம் வாசகர்களே!! கள உறவுகளே!!!

இத்துடன் எனது தென்கிழக்குச்சீமையிலே வரலாற்றுத் தொடர் கதையை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . அதிகரித்துவிட்ட பணிச்சுமையினால் இந்தத்தொடர் அவ்வப்பொழுது தடங்கல்களைச் சந்தித்தது . அதற்கு நான் உங்கள் முன் மன்னிப்புக் கேட்கின்றேன் . ஒரு வரலாறையும் கதையும் சேர்ந்து சொல்லும்பொழுது , இருபக்கமும் சுவைகுன்றாமல் இருப்பதற்கும் எனக்குச் சிறிதுகால அவகாசம் தேவைப்பட்டது . உங்கள் எல்லோரையுமே என்னால் முடிந்த அளவிற்கு தென்கிழக்குச் சீமையை சுற்றிக்காட்டினேன் . இதில் வரலாற்றுத் தவறுகள் எங்காவது உங்கள் கண்ணில் தட்டுப்பட்டால் உரிமையுடன் சுட்டிக்காட்டுங்கள், திருத்திவிடுகின்றேன் . எனது முந்தைய தொடர்களை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் . உங்கள் விமர்சனங்களை நாடிநிற்கும் ,

நேசமுடன் கோமகன்

http://www.yarl.com/...howtopic=107444

************************************************************************

640px-St-Paul-de-Vence_%28Lunon%29.jpg

செயின்ற் போல் டு வன்ஸ் ( SAINT - PAUL - DE -VENCE ) கோட்டை நீசில் இருந்து ஏறத்தாள 5 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்றது . ஏறத்தாள 355 மீற்றர் உயரத்தில் உள்ள மலை உச்சி ஒன்றில் இந்தக் கோட்டை மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது . இந்தக் கோட்டையினுள்ளே நீசுவாசின் பழைய தலைநகரைப்போல ஒரு கிராமமே இருந்தது . இந்க் கிராமத்தின் மொத்த சனத்தொகையே வெறும் 3000 பேர்கள்தான் . இந்தக்கோட்டையின் உள்ளே இருக்கும் கிராமத்தவரை செயின்ற் போலுவாஸ் ( Saint-Paulois ) என்று அழைக்கப்படுகின்றனர் . கோட்டையின் நுளைவாயிலில் நாங்கள் நின்றபொழுது , எனக்கு யாழ்ப்பாணத்தின் சிதிலமான டச்சுக்கோட்டையே ஞாபகம் வந்தது . கோட்டை வாயிலும் அதன் சுற்று மதில்களும் கொத்தளங்களும் கண்ட கல்லினால் வைத்துக் கட்டப்பட்டிருந்தன.

கோட்டையின் தெரு

576px-Saint-Paul_de_Vence_II_-_Jean-Charles_GUILLO.JPG

நாங்கள் உள்ளே நுளைந்தபொழுது வெளியே எரித்த வெய்யிலின் உக்கிரம் , நீசுவாக்களின் கட்டிடக்கலையினால் குளிராகவும் , இதமான காற்றாகவும் வீசியது . கோட்டையின் மேலிருந்து கீழே பார்க்கும்பொழுது சுற்றிவர பச்சை போர்த்திய சிறிய மலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன . நாங்கள் உள்ளே நடந்து சென்றபொழுது முதலில் பலவிதமான " ஆர்ட் கலறி " கடைகள் காணப்பட்டன . அதன்பின்பு சிறிய கிராமம் என் கண்முன்னே விரிந்தது . நீசுவாக்களின் பழைய நகரைப்போலவே மிகவும் குறுகலான தெருக்களும் , அந்தத் தெருக்கள் சதுரக்கற்கள் ( பவே , pavé ) வைத்து நிர்மாணிக்கப்பட்டிருந்தன . இப்படிப்பட்ட தெருக்கள் றோமர்களின் கட்டிடக்கலையின் எச்சசொச்சங்களாகும் . இவைகள் நடப்பதற்கு சிறிது சிரமமானாலும் , மிகவும் உறுதி வாய்ந்தவை .

கோட்டையிலுள்ள வீடுகளில் ஒன்று

473px-Saint-Paul%28Vence%29.jpg

கோட்டையின் கொத்தளங்களில் ஒன்று

nicevisit2012286.jpg

அந்தக்கிராமத்தின் வீடுகள் கூடுதலாக இரட்டை மாடிகளைக் கொண்டதாகவே இருந்தன . அதில் ரோமர்களின் கலைவண்ணமும் , நீசுவாக்களின் கலைவண்ணமும் போட்டிபோட்டு மிளர்ந்தன . நாங்கள் அந்தகிராமத்தின் சந்தபொந்துகளில் எல்லாம் நுளைந்து வந்தோம் . கோட்டையின் நான்கு புறக் கொத்தளங்கள் சிதிலமடைந்த்து இருந்தாலும் , பீரங்கிகள் பொருத்தியதற்கான மேடைகள் அங்கே காணப்பட்டன . நாங்கள் அங்கிருந்து கீழே பார்கும் பொழுது கோட்டையை நோக்கி வரும் பிரதான வீதி தெளிவாகவே எங்களுக்குத் தெரிந்தது . அப்பொழுது எனது கற்பனைக்குதிரையோ , இந்தக் கோட்டையின் கொத்தளங்களில் நின்று கோட்டைக்கு வரும் எதிரிகளின் படைகளை எப்படியெல்லாம் தகர்த்திருப்பார்கள் என்று சிறகு கட்டிப் பறந்தது . நாங்கள் கோட்டையை விட்டு வெளியேறும் பொழுது மதியம் இரண்டு மணியைத் தாண்டியிருந்தது . இதுவரை நேரமும் கோட்டைக்குள் குளிர்மையை அனுபவித்த நான் , வெளியே கோடை வெய்யிலின் அகோரத்தை உணரத் தொடங்கினேன் . எனது உடலெல்லாம் வியர்வையில் குளித்தது . சாத்தர் காரின் குளிரூட்டியைப் போட்டதின் பின்பே எனது வியர்வை என் சொல் கேட்டது .

எனக்கு வயிறு சுடத்தொடங்கீட்டிது . கார் கொஞ்சத்தூரம் போய் இருக்கும் பின்னாலை இருந்த என்ரை மனிசி காறை நிப்பாட்டுங்கோ சாத்தர் எண்டு கத்தீச்சிது . சாத்தர் காறை குத்தி அடிச்சுப்போட்டு பின்னாலை தலையை திரும்ப , சாத்தற்ரை மனுசி,

" ஏங்க......... பஞ்சுமிட்டாய் வாங்கலாங்க......... " .

எண்டு தொடங்க . என்ரையாள் ,

" இண்டைக்கு தும்பு முட்டாஸ் இலாட்டிக்கி கார் அரக்காது " .

எண்டுசொல்லிக் கொண்டு ரெண்டு பேரும் காறை விட்டு இறங்கீச்சினம் .

காருக்குப் பக்கத்திலை ஒருத்தன் தும்பு முட்டாஸ் கடை போட்டிருந்தாலை வந்த வினை . நான் எனக்கு வந்த விசருக்கு ஒரு சிகரட்டைப் பத்திக்கொண்டு இவையள் மூண்டு பேரையும் விடுப்பு பாத்தன் . எனக்கும் சிவசத்தியமாய் உண்மையிலை தும்பு முட்டாஸ் எப்பிடி செய்யிறதெண்டு தெரியாது . என்ரை மனிசி மூண்டு பேருக்கு தும்பு முட்டாஸ் ஓடர் குடுக்க , கடைக்காறன் தன்ரை ஆட்டுக்கல்லு மாதிரி இருந்த மிசினுக்குள்ளை சீனியை போட்டிட்டு மிசனை ஸ்ராட் பண்ணினான் . நான் இவன் என்ன குறளி வித்தை காட்டிறான் எண்டு கிட்டப் போய் பாத்தன் . மிசின் நல்லாய் சுத்தி சீனி றோஸ் கலரிலை தும்பு தும்பாய் வந்திது . ஒவ்வொரு தடியிலை அதை பெரிய உறுண்டையாய் சுத்தி கடைக்கறான் இவையிட்டை குடுத்தான் . என்னை விட்டிட்டு மூண்டு பேரும் தும்பு முட்டாஸை மேஞ்சினம் . சாதருக்கு தும்பு முட்டாஸ் மேஞ்சு வாயெல்லாம் ஒரே றோஸ் கலராய் இருந்திது .

தும்பு முட்டாசும் மெசினும்

Cotton-Candy.png

நாங்கள் போற வழியிலை சாத்தர் தூரத்திலை ஒரு தெரிஞ்ச மூண்டு அடுக்குமாடிக் கட்டிடத்தை காட்டினார் . அதுகள் ஒரு பெரிய கப்பல் போலை இருந்திதுகள் . இதுகள் என்னவெண்டு சாத்தற்ரை வாயைக் கிண்டினன் . அவர் சொன்னார் , முக்கியமாய் எண்ணை கோஸ்ரியளுக்கு கட்டினதாம் . அவையள் எப்பாவது இருந்துட்டு இங்கை வருவினமாம் . அதுகளின்ரை பராமரிப்புகள் முழுக்க லோக்கல் ஆக்கள் தானாம் எண்டு சொன்னார் . எனக்கு அதுகளைப்பாக்க எலிசபெத் 2 கப்பலின்ரை ஞாபகம்தான் வந்தீச்சிது .

நாங்கள் வீட்டை சாப்பிட போய் இறங்க சாத்தற்ரை பொடிகார்ட் எங்களைக் காணாத கவலையிலை வீட்டு வாசலிலை நிண்டார் . நாங்கள் சாப்பிட்டுப்போட்டு வீட்டுக்கு பின்னாலை இருக்கிற சாத்தற்ரை தோட்டத்தை பாத்துக்கொண்டிருந்தம் . சாத்தர் மிளகாய் , வெங்காயம் தக்காளி , கத்தரி , தேசிக்காய் எண்டு எக்கச்சக்கம் காய்பிஞ்சுகள் வைச்சிருந்தார் . தான் வீட்டுச்சமையலுக்கு இதிலை இருந்துதான் காய்கறியள் எடுக்கிறவராம் . எனக்கு சாப்பிட்ட மயக்கம் கண்ணை சுத்தீச்சிது . சாத்தர் சொன்னர் ,

"கோ கொஞ்சத்தாலை உங்களுக்கு மொஸ்கோ காட்டப்போறன் எண்டு ".

நான் நினைச்சன் இவருக்கு என்னைக் கண்டபுழுகத்திலை உண்மையிலையே மரைகழண்டு போச்சுதோ எண்டு . நானும் மனிசியும் பின்னேரம் ஐஞ்சு மணி போலை மொஸ்கோ பாக்கப் போனம் .

சாத்திரி உண்மையிலேயே எங்களை மொஸ்கோவிற்க்குத்தான் அழைத்துச்செல்கின்றாரா என்ற சந்தேகம் என்னை வாட்டியபடி இருக்க நான் காரினுள் இருந்தேன் . எங்களது கார் ஒருசில நிமிடங்களை உள்வாங்கி ஓர் கதீட்ரலின் முன்னே நின்றது . அங்கே நான் கண்ட காட்சியை என் கண்கள் நம்ப மறுத்தன . அங்கே ஓர் செஞ்சதுக்கத்தைக் கண்டேன் . நான் உண்மையிலேயே செயின்ற் பீற்றேர்ஸ் பேர்க்கில் நிற்பது போலவே உணர்ந்தேன் .

ரஷ்சிய ஒர்தடொக்ஸ் கதீட்ரல்

480px-Nice_Cath%C3%A9drale_Saint-Nicolas.jpg

செயின்ற் நிக்கோலஸ் ஓர்த்தடொக்ஸ் கதீட்ரல் நிக்கோலாஸ் அலக்ஸாண்ட்றோவிச் அரசகுடும்பத்தின் நினைவாக 19 ம் நூற்றாண்டில் ரிசார் நிக்கோலா 2 னால் கட்டப்பட்டதாகும் . இந்தக் கதீட்றல் மேற்கு ஐரோப்பாவின் முதலாவது மிகப்பெரிய ஓர்த்தடொக்ஸ் கதீட்ரலாகும் . இது அச்சு அசலாக செஞ்சதுக்கத்தின் கட்டிடக்கலையையே கொண்டிருந்தது . அதனால்தான் சாத்திரி எங்களை வெறுப்பேற்றினாரோ தெரியவில்லை . மாலை நேரத்து சூரியன் தேவாலையத்தின் கோபுரத்தில் பட்டுத் தகதகத்தது . நாங்கள் ஆசைதீர மொஸ்கோவில் நின்று படங்களை சுட்டுத்தள்ளினோம் . நாங்கள் மறுநாள் பாரிஸ் செல்ல வேண்டியதால் அன்று இரவு எங்களைத் தங்களுடன் நிற்குமாறு சாத்திரி வற்புறுத்தினார் . நாங்கள் மூவரும் நாங்கள் தங்கியிருந்த மேர்க்கியூர் கொட்டேலுக்குச்சென்று எமது அறையை காலி செய்தோம் . அங்கும் சாத்திரி தனது தொலைபேசி இலக்கத்தை வாரவேற்பாளினியிடம் கொடுக்கத் தவறவில்லை . நாங்கள் மீண்டும் வீட்டை அடைந்தபொழுது சயந்தன் படையணி தங்களது சுற்றை முடித்துக் கொண்டு எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் .

நான் சாத்திரி சயந்தன் வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் மீண்டும் இலக்கியத்திற்காக ஒன்று கூடினோம் . 1664 உம் இலக்கியமும் நன்றாகவே பற்றி எரிந்தன . இந்தப் பற்றி எரிதல் எனக்கு நன்றாகவே பயன்பட்டது . இலக்கியம் சம்பந்தமாகப் பல புரிதல்களை இந்த சந்திப்பு எனக்கு ஏற்படுத்தியது . அவர்கள் இருவரும் கறுப்பு வெள்ளை சாம்பலைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்கள் . நேரம் நள்ளிரவைத்த் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது . வெக்கை குறைந்து குளிர்மை எங்களின் வியர்வையைச் சுகப்படுத்தியது . நான் நித்திரை சொக்க நெளிந்து கொண்டிருந்தேன் . வீட்டின் நடுவே இருந்து சயந்தனுக்கு எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டிருந்தது . நாங்கள் சாப்பிட்டுவிட்டு சயந்தனை அவர் நிற்கும் கொட்டேலில் கொண்டுபோய் விட்டோம் . நாங்கள் எல்லோரும் படுக்க அதிகாலை இரண்டு மணியாகிவிட்டிருந்தது .

எங்களுக்கு மதியம் 1 மணிக்கே எங்களது ரீ ஜீ வி பரிசுக்குப் புறப்பட இருந்தது . நான் படுத்த உடனேயே உடல் அசதியினால் தூங்கி விட்டாலும் , காலை எழுமணிக்கே எழுந்து விட்டேன் . சாத்திரி அந்த அதிகாலை வேளையிலேயே அருகேயுள்ள பேக்கறியில் குறசோண்ஸ்களை வாங்கி தோட்டத்து மேசையில் அடிக்கியிருந்தார் . அவைகளின் வாசம் என் நாடிநரம்பையெல்லாம் சூடேற்றியது . நான் ஓரு கபேயை போட்டுக்கொண்டு எனது சிகரட்பெட்டியை எடுத்துக் கொண்டு சாத்திரியிடம் வந்தேன் . சாத்திரி தான் போட்ட தேனீரை உறிஞ்சியவாறு ஒரு பேப்பறை உறிஞ்சிக்கொண்டிருந்தார் . அந்த அதிகாலைவேளை அதற்கே உரிய குணாம்சங்களைக் கொண்டு எனது கபேயுடன் என்னைச் சிலிர்க்க வைத்தது . கடிகரத்த்த்தில் நேரம் நகரநகர என்மனமோ நீஸை விட்டு நகரமறுத்து அடம்பிடித்தது . நாங்கள் மதியம்சாப்பிட்டு விட்டு புகையிரதநிலையம் செல்ல வெளிக்கிட்டோம் .

என்மனது என்னிடத்தில் இல்லை . சிலவேளைகளில் பிரிவுகள் என்றுமே என்மனதில் கோடுகிழித்தால் போல ஆழ உழப்பட்டுவிடுகின்றன . இந்த தென்கிழக்குச் சீமைப்பயணமும் அவ்வாறே எனக்குத் தோன்றியது . சாத்திரியிடம் ஏற்கனவே எனக்குப் பழக்கம் இருந்தாலும் , இந்தப் பயணமே சாத்திரி என்ற மனிதனை எனக்கு அறிமுகப்படுத்தியது . என்னால் பலவிடையங்களை கிரகிக்க இந்தப்பயணம் உதவியது . எமது கார் புகையிரதநிலையத்தில் நுளைந்தபொழுது பெரிய கூட்டம் இருக்கவில்லை . சிறிது நேரத்தில் ரீ ஜீ வி ஆடிஅசைந்து வளைந்து நெளிந்து புகையிரத நிலைத்திற்குள் நுளைந்தது . சாத்திரியின் முகம் என்னைப்போலவே இறுகிக் காணப்படது . நாங்கள் ஏறிய ரீஜீவி மெதுவாக நகர்ந்து வேகமெடுக்கத் தொடங்கியது . எனது மனமோ தென்கிழக்குச் சீமையின் இனிய நாட்களை அசைபோட்டுக் கொண்டிருந்தது .

பட இணைப்பு

மொஸ்கோவில் ஒரு காட்சி

576px-La_Cathedrale_Orthodoxe_Russe_Saint-Nicolas_2.jpg

கிராமத்தின் வீடுகளின் காட்சி

nicevisit2012274.jpg

கோட்டை கொத்தளத்தின் வெளிப்பார்வை

nicevisit2012285.jpg

கோட்டை சுவரும் கிராமத் தெருவும்

nicevisit2012281.jpg

எண்ணை கோஸ்ரியளுக்கு கட்டின கப்பல் அடுக்குமாடி தொடர்

nicevisit2012262.jpg

முற்றும் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோ

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கடைசிப் பந்தியை வாசித்தவுடன் நானும் உங்களுடன் வந்தது போலவும் பிரிவின் சுமை என்னை அழுத்தியது போலவும் உணர்ந்தேன் கோமகன். இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று எண்ணியிருந்தேன்.முடிந்துவிட்டது என்னும் போது இனிமேல் இத்தொடர் வராது என்று கவலை இக்கணம் வந்தது.நன்றி.

வாஅழ்க்கையே ஒரு பயணம்தான கோமகன்.அதில் மிகவும் மனதைப் பாதிக்கும் விடயம் பிரிவுகள்.மனம்கனக்க வைத்தௌ இருத்திப்பகுதி.இன்னொரு தொடருடன் விரைவில் வாருங்கள்.மிக நல்ல ஒரு எழுத்தாளன் நீங்கள்.எனக்கு உங்கல் எழுத்துக்கல் மிகவும் பிடிக்கும்.

  • தொடங்கியவர்

நன்றி கோ

உங்கள் வருகைக்கு நன்றி நந்தன் .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருந்தது, உங்கள் சீமைப்பயணம் கோமகன்!

உங்கள் மாதிரி ஒரு பதிவாளரும், சாத்திரியைப் போன்ற ஒருவரும், நான் பிரான்ஸ் வந்த காலங்களில் இருக்கவில்லையே என்ற ஒரு ஆதங்கம், எனக்கு ஏற்படுமாறு, உங்கள் பதிவும், சாத்திரியின் விருந்தோம்பும் பண்புகளும் இருக்கின்றன!

இப்போதெல்லாம், ஐரோப்பா என்னை ஈர்ப்பது குறைந்து விட்டது!

நாம் பிறந்து வளர்ந்த, வெம்மை கலந்த காற்றும், பரந்த வெளிகளும், இயல்பாகவே என்னை ஈர்க்கும் கடல்களும், என்னை, இங்கே நங்கூரமிட வைத்துவிட்டன!

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திக்கும்வரை, நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு தந்த கோவுக்கு நன்றிகள்....மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இன்னும் அதிகம் எழுதச்சொல்லித்தான் கேட்பேன். ஆனால் உங்கள் நேரப்பிரச்சனை தெரியும் என்பதால் இந்தளவு சுவாரசியத்துடன் மிகத்தேர்ந்த,இலகுநடையில், அழகான படங்களுடன் கிழக்குச்சீமையை தரிசிக்க வைத்தமைக்கு நன்றிகள் கோமகன் அண்ணா. :)

தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ திரைப்படம் பற்றியதோ என்று ஆரம்பத்தில் நினைத்தேன். இன்று முழுமையாக எல்லாப்பகுதிகளையும் வாசித்தேன். சயந்தன், சாத்திரி ஆகியோரும் இணைந்திருந்தமை கதையின் எல்லாப்பகுதிகளையும் வாசிக்க ஆர்வத்தை தூண்டியது. சாத்திரியின் வீட்டிற்கும், சாத்திரி வாழும் நகரிற்கும் நானும் சென்றுவந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.

சயந்தனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லவா? இசைக்கலைஞன் கேட்டதுபோல் சாத்திரி, மற்றும் உங்கள் பிள்ளைகள் பற்றியெதுவும் விபரணம் காணாதது கண்டு அவர்களை வேறொங்கோ விட்டு வந்தீர்களோ என்று நினைத்தேன் (கோமகனின் வயது தெரியவில்லை, குழந்தைகள் இன்னும் இல்லையானால் மன்னிக்கவும்).

கதையை வாசித்தபோது அதில் ஒருநிலையில் நீங்கள் மழையில் நனைந்தபோது நானும் நனைந்தது போன்ற பிரமை ஏற்பட்டது.

பல அரிய தகவல்களும் கதையில் உள்ளன. Formula Honda போட்டிபற்றி இணையவனும் முன்பு எழுதினார். சயந்தன், சாத்திரியின் மேலதிக கதைநீட்சிகளும் சுவாரசியமாய் உள்ளன. கதையில்வரும் புகையிரதப்பயணம் அதிகம் பிடித்தது. கனடா, அமெரிக்காவைவிட ஐரோப்பா சற்று வித்தியாசமானது. வாய்ப்புக்கிடைத்தால் சாத்திரியின் இடத்திற்கு நானும் சென்றுவரவிரும்புகின்றேன். துறைமுகப்பட்டிணம் அழகாய் உள்ளது.

வாழ்த்துகள்!

  • தொடங்கியவர்

உங்கள் கடைசிப் பந்தியை வாசித்தவுடன் நானும் உங்களுடன் வந்தது போலவும் பிரிவின் சுமை என்னை அழுத்தியது போலவும் உணர்ந்தேன் கோமகன். இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று எண்ணியிருந்தேன்.முடிந்துவிட்டது என்னும் போது இனிமேல் இத்தொடர் வராது என்று கவலை இக்கணம் வந்தது.நன்றி.

பிரிவுகள் என்றுமே கனதியானவை . அதுவும் நேர்அலைவரிசையில் இருப்பவர்களது பிரிவுக்கு வீரியம் கூட . உங்கள் நேரத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுமே :) :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லவா?

இது எப்ப..

--

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசையிருந்தது. சிறுவயதில் கடலோடு கிடந்தாலும் அப்பொழுது தோன்றியதில்லை. ஆனால் கடலை விட்டு விலக விலக.. அந்த ஆசை பூதாகாரமாக வளர்ந்து விட்டது. ஒரு நள்ளிரவில் கடற்கரையில் அலைகளை அளைந்து கொண்டு படுக்க வேண்டும் (தனியத்தான்) என்பதுதான் அது. அந்த ஆசை நீஸில் நிறைவேறியது. கூடவே இலேசான மழையும்.. மேலேயும் தண்ணீர், அருகேயும் தண்ணீர்..... உள்ளேயும் தண்ணீர்...

நன்றி சாத்திரி, நன்றி கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் இவ்வளவு நாளும் தொடரை பொறுமையாக எழுதி முடித்ததற்கு நன்றி[சகாறா அக்கா மாதிரி இடையில் விடாமல் :lol: ] ஆனால் முடிவை அவசரப்பட்டு முடித்த மாதிரி எனக்குத் தெரிகின்றது

Edited by ரதி

இது எப்ப..

--

ஒன்று சற்று வளர்ந்ததும் எனக்கு இரண்டாய் தெரிந்துவிட்டதுபோல, மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

வாஅழ்க்கையே ஒரு பயணம்தான கோமகன்.அதில் மிகவும் மனதைப் பாதிக்கும் விடயம் பிரிவுகள்.மனம்கனக்க வைத்தௌ இருத்திப்பகுதி.இன்னொரு தொடருடன் விரைவில் வாருங்கள்.மிக நல்ல ஒரு எழுத்தாளன் நீங்கள்.எனக்கு உங்கல் எழுத்துக்கல் மிகவும் பிடிக்கும்.

இங்கையும் எனக்கு அதே குழப்பம்தான் வருது :lol: . நீங்கள் கட்டுமரமா டோரா படகா :lol: ?? வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் வண்டுமுருகன் :) :) .

  • தொடங்கியவர்

நன்றாக இருந்தது, உங்கள் சீமைப்பயணம் கோமகன்!

உங்கள் மாதிரி ஒரு பதிவாளரும், சாத்திரியைப் போன்ற ஒருவரும், நான் பிரான்ஸ் வந்த காலங்களில் இருக்கவில்லையே என்ற ஒரு ஆதங்கம், எனக்கு ஏற்படுமாறு, உங்கள் பதிவும், சாத்திரியின் விருந்தோம்பும் பண்புகளும் இருக்கின்றன!

இப்போதெல்லாம், ஐரோப்பா என்னை ஈர்ப்பது குறைந்து விட்டது!

நாம் பிறந்து வளர்ந்த, வெம்மை கலந்த காற்றும், பரந்த வெளிகளும், இயல்பாகவே என்னை ஈர்க்கும் கடல்களும், என்னை, இங்கே நங்கூரமிட வைத்துவிட்டன!

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திக்கும்வரை, நன்றிகள்!

எந்தத்துறையில் நங்கூரம் பாய்ச்சினாலும் , எண்ணங்களால் நாங்கள் ஒன்றுபட்டவர்கள்தானே . உங்கள் சத்தான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் புங்கையூரான் .

  • தொடங்கியவர்

நல்ல பதிவு தந்த கோவுக்கு நன்றிகள்....மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம்...

நன்றி புத்தா . உங்கடை சிட்ணி கோசிப்பை விடவா எனது பதிவுகள் நல்லது :D ?? அதைப்போல ஒரு தொடர் ஒன்று வேண்டும் புத்தா :) :) :) .

முடிச்சுட்ட்டீங்களா கோமகன் அண்ணன் :o ?? ரொம்ப சாட் ஆ இருக்குங்க அண்ணன் :( . எங்க ஆளுங்கெல்லாம் ரெம்ப மொக்கையா பயணக்கதைன்னு பிளேடு போடுவாங்க :lol: . பட் நீங்க ஒரு டாக்கடர் மாதிரி காமடியையும் வரலாற்றையும் நன்னா மிக்ஸ் செய்ஞ்சு அசத்தீட்டீங்க :) . நீங்க சொன்னபுறம்தான் சாத்திரி அண்ணனை நேரில பாக்கணும் போல இருக்குங்க :lol: உங்க கிறியேட்டிவிட்க்கு என்னோட வாழத்துங்க அண்ணன் :) .

Edited by சொப்னா

  • தொடங்கியவர்

நான் இன்னும் அதிகம் எழுதச்சொல்லித்தான் கேட்பேன். ஆனால் உங்கள் நேரப்பிரச்சனை தெரியும் என்பதால் இந்தளவு சுவாரசியத்துடன் மிகத்தேர்ந்த,இலகுநடையில், அழகான படங்களுடன் கிழக்குச்சீமையை தரிசிக்க வைத்தமைக்கு நன்றிகள் கோமகன் அண்ணா. :)

நான் மனச்சோர்வடைகின்ற நேரங்களில் எல்லாம் தனிப்பட்டமுறையில் உங்கள் கள அனுபவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி என்னைத் தூக்கி விடுபவர்களில் நீங்களும் ஒருவர் . உங்கள் நேரத்திற்கு மிக்கநன்றிகள் ஜீவா :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் பாகத்தை வாசித்து முடித்தேன்.. ஒரு அழகான அனுபவத்தொடராக இருந்தது.. ஆக்கத்திற்கு நன்றிகள் கோம்ஸ்.. :D

  • தொடங்கியவர்

தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ திரைப்படம் பற்றியதோ என்று ஆரம்பத்தில் நினைத்தேன். இன்று முழுமையாக எல்லாப்பகுதிகளையும் வாசித்தேன். சயந்தன், சாத்திரி ஆகியோரும் இணைந்திருந்தமை கதையின் எல்லாப்பகுதிகளையும் வாசிக்க ஆர்வத்தை தூண்டியது. சாத்திரியின் வீட்டிற்கும், சாத்திரி வாழும் நகரிற்கும் நானும் சென்றுவந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.

சயந்தனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லவா? இசைக்கலைஞன் கேட்டதுபோல் சாத்திரி, மற்றும் உங்கள் பிள்ளைகள் பற்றியெதுவும் விபரணம் காணாதது கண்டு அவர்களை வேறொங்கோ விட்டு வந்தீர்களோ என்று நினைத்தேன் (கோமகனின் வயது தெரியவில்லை, குழந்தைகள் இன்னும் இல்லையானால் மன்னிக்கவும்).

கதையை வாசித்தபோது அதில் ஒருநிலையில் நீங்கள் மழையில் நனைந்தபோது நானும் நனைந்தது போன்ற பிரமை ஏற்பட்டது.

பல அரிய தகவல்களும் கதையில் உள்ளன. Formula Honda போட்டிபற்றி இணையவனும் முன்பு எழுதினார். சயந்தன், சாத்திரியின் மேலதிக கதைநீட்சிகளும் சுவாரசியமாய் உள்ளன. கதையில்வரும் புகையிரதப்பயணம் அதிகம் பிடித்தது. கனடா, அமெரிக்காவைவிட ஐரோப்பா சற்று வித்தியாசமானது. வாய்ப்புக்கிடைத்தால் சாத்திரியின் இடத்திற்கு நானும் சென்றுவரவிரும்புகின்றேன். துறைமுகப்பட்டிணம் அழகாய் உள்ளது.

வாழ்த்துகள்!

உங்கள் கருத்து முற்றிலும் உண்மை . ஆரம்பத்தில் சினிமாப்பாணியிலான தலைப்பாக இருக்கின்றதே என்ற உணர்வு எனக்கும் ஏற்பட்டது . ஆனாலும் பிறான்சின் தென்கிழக்கு கோடியில் இருக்கும் இந்த துறைமுகபட்டினமும் , அதனை அண்டியுள்ள நகரங்களும் , உலகத்துச் செலவந்தர்களது உல்லாசபுரிதான் . அதனால் அதை ஊர்வழக்கில் " சீமையாக " உருவகித்து தொடரை நகர்த்தினேன் . இறுதியில் வாசகர் மனதில் " நெருடிய நெருஞ்சி " போல இந்தத்தலைப்பும் சென்றடைந்துள்ளதை என்னால் அனுமானிக்கக் கூடியதாக உள்ளது . உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் கலைஞன் :) :) .

  • தொடங்கியவர்

கோமகன் இவ்வளவு நாளும் தொடரை பொறுமையாக எழுதி முடித்ததற்கு நன்றி[சகாறா அக்கா மாதிரி இடையில் விடாமல் :lol: ] ஆனால் முடிவை அவசரப்பட்டு முடித்த மாதிரி எனக்குத் தெரிகின்றது

நான் உந்த விழையாட்டுக்கு வரேலை :lol: . நான் தொடர் எண்டு சொல்லி உங்கள் எல்லாரையும் செரியாக் கஸ்ரப்படுத்திப் போட்டன் . உங்கடை கருத்துக்கு நன்றி அக்கை :) :) .

இன்று தான் கோவின் கடைசித் தொடரை வாசித்தேன். கோ ஒரு தொடரை எழுதி முடிக்க ஒரு மெலனியம் எடுக்கும் எண்டாலும் பறுவாயில்லை நன்றாக எழுதியிருக்கின்றீர்கள், நன்றியும் வாழ்த்துக்களும்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரினதும் வேண்டுகோளுக்கிணங்க, நடு இரவில் கடற்கரையில் சாத்திரி நிற்கும் படத்தை வெளியிடுகிறேன்

photo.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1) இது சாத்திரியில்ல

2) நாடு ரோட்டில உச்சா போறமாதிரி இருக்கு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கணும். அது கோமகன். ஏதோ நினைப்பில சாத்திரி என எழுதிட்டேன். மற்றது, அது நடுரோட்டு இல்ல. பக்கத்தில பாருங்கோ, அலையடிக்குது :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.