Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ரை தீபாவளி

Featured Replies

என்ரை தீபாவளி

swarm2.jpg

சின்னவயசிலை எங்கடை தீபாவளி சேட்டையளை எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு . உண்மையிலை இப்ப நினைச்சாலும் கண்ணுக்கை தண்ணி வரும் . நாங்கள் தீபாவளிக்கு முதல் நாளே லைற்றா தொடங்கீடுவம் , அடுத்தநாள் எந்தெந்த உடுப்புகள் போடுறது , ஆரோடை என்னென்ன விளையாட்டுகள் விளையாடிறது எண்டு . தீபாவளியை நினைச்சு அண்டு இரவே எங்களுக்கு நித்திரை வராது . அண்டிரவுதான் பலகாரச்சூடு அனல் பறத்தும் . எங்கடை அம்மாச்சி ஒரு கெட்டசாமன் . அந்தக் காலத்திலை அம்மாச்சி பிளவுஸ் போடாது . ரெண்டு காதிலையும் பெரிய தொக்கட்டான் தொங்கும் . என்னிலை செரியான பட்ச்சம் எண்டாலும் , எங்களை பலகாரச்சூட்டு நேரம் எதையாவது எடுத்து வாயிலை போட விடாது . நாங்கள்அதை உச்சிக்கொண்டு பலகாரங்களை லவட்டுவம் . மனிசி சிலநேரம் தூசணத்தாலை பேசும் . எங்களுக்கு அந்த நேரத்திலை உதெல்லாம் காதிக்கை ஏறாது .

அடுத்தநாள் விடியப்பறமே அம்மா எங்களை எழுப்பாமல் எழும்பீடுவம் . நல்லபிள்ளையளாய் உமிக்கரி எடுத்துக் கொண்டுபோய் , அண்டைக்கெண்டு பாத்து தேய் தேய் எண்டு தேய்ப்பம் . அம்மாச்சி அண்டைக்கெண்டு எங்களுக்கு வில்லியாய் நிக்கும் . சுடவைச்ச நல்லெண்ணையை தலையிலை வைச்சு கண் எரிய எரிய நல்லாய் தேச்சு மசாஜ் பண்ணிவிடும் . அதோடை இலுப்பை அரப்பை வைச்சு தேச்சு விட்டு எங்களைப் படாதபாடு படுத்தும் . நாங்கள் கண்எரிவிலை கத்தினாலும் மனிசி முன்னுக்கு வைச்சகாலை பின்னுக்கு வைக்காது . பக்கத்திலை அண்டாவிலை சுடுதண்ணி கொதிச்சு கொண்டு இருக்கும் . மனுசி கிணத்து தண்ணியை வாழியாலை கிள்ளி அண்டாவிலை விளாவும் . நல்ல இதமான சுடுதண்ணியாலை குளிப்பாட்ட தொடங்கத்தான் எங்களுக்கு போன உயிர் திரும்பிவரும் . இப்பிடி அல்லோல கல்லோலப்பட்டு குளிச்சுமுடிச்சு அம்மா தைச்ச உடுப்புகளை போடுவம் .

அந்த நேரம் எல்லா வீட்டிலையும் குறைஞ்சது ஐஞ்சு ரிக்கற்றுக்குளுக்கு மேலை . சிலவீட்டில பன்ரெண்டு ரிக்கற்றுகளும் பாத்திருக்கிறன் . இவ்வளவுபேருக்கும் உடுப்புகள் எடுக்கிறதெண்டால் லேசுப்பட்ட வேலையில்லை . அந்த நேரம் எங்கடை அப்பாமார் சீத்தை துணியள்தான் வண்ணம் வண்ணமாய் வாங்குவினம் . அப்ப லக்ஸசல சீத்தையும் , பூகொட சீத்தையும் தான் பேமஸ் . லைற்றான மண்ணெண்ணை வாசம் அடிச்சாலும் , நாங்கள் அதுகளின்ரை டிசைனுகளிலை மருண்டிடுவம் . நாங்கள் எல்லாரும் உடுப்புகளை போட்டுக்கொண்டு விடயப்பறமே கோயிலுக்கு ஓடிப்போவம் . அங்கை எங்களுக்கு வேலை ஆரார் என்ன உடுப்புகள் போட்டவந்தவை எண்டு பாக்கிறது . கோயில் மணிக்கூட்டு கோபுரத்திலை காண்டாமணியை பாஞ்சு பாஞ்சு அடிக்கிறது எண்டு ஏகப்பட்ட சோலியள் . பேந்து கோயிலாலை வந்த எங்களுக்கு அம்மாச்சி எல்லாருக்கும் பலகாரங்கள் பங்கிட்டு தரும். அதோடை சொந்தக்காறர் வீட்டுக்கு பலகாரம் குடுக்கச்சொல்லி தரும் .

எனக்கு ஐஞ்சாறு மச்சாளவை இருந்தவை . ஆனால் எல்லாரும் என்னைவிட வயசு கூடினவை. அவைக்கு குட்டிமச்சான் எண்டு என்னிலை செரியான பட்சம் . எல்லாரும் என்னை தங்கடை மடியிலை தூக்கி வைச்சு தாங்கள் சுட்ட பலகாரங்களை தருவினம் . நான் நல்ல புழுகமாய் சாப்பிடுவன் . பேந்து எல்லாரும் விளையாடுவம் . அப்ப கீ அடிக்கிறது , கிட்டி புள்ளு , ஒப்பு , கிளித்தட்டு இப்பிடியான விளையாட்டுகள்தான் பேமஸ் . கிளித்தட்டிலை பெட்டையள் அளாப்புவாளவை . சிலநேரம் அடிபாடு முத்தி முகத்திலை காயங்கள் வந்து ரணகளமாய் போடும் . அம்மாச்சி எங்கடை அசுமாத்தங்களை கேட்டு ஓடியந்து எல்லோருக்கும் முதுகிலை நல்ல போடு போட்டு வீட்டை கூட்டிக் கொண்டு போவா . நாங்கள் அங்கபோனால் நல்ல மரக்கறியோடை ஆட்டுப்பங்கு கறியும் சேத்து , சோத்தை ஒரு பெரிய பாத்திரத்துக்குள்ளை போட்டு குளைஞ்சு , அம்மாச்சி எல்லாருக்கும் பூவரசம் இலையிலை வைச்சு தருவா . நாங்கள் அப்பவும் விளையாடி விளையாடித்தான் சாப்பிடுவம் . பேந்து கொஞ்ச நேரம் எல்லாரும் நித்திரை கொண்டுபோட்டு , திரும்பவும் கிட்டி புள்ளு விளையாடப் போவம் . இந்தக் கூத்துகள் சின்னவயசிலை .

பேந்து வெடிவால் முளைக்க , நியூமார்கற் நானா ரெயலரிட்டை தைச்ச பெல்பொட்டமும் , உடம்பை இறுக்கின சேர்ட்டும் போட்டுக்கொண்டு ரவுணுக்கு, தீபாவளியளுக்கு வந்த படங்களை பாக்கப் போவம் . அப்ப வின்ஸர் தியேட்டரும் , ரீகல் தியேட்டரும் தான் எங்கடை முதல் தெரிவு . இதிலை ரிக்கற் கிடைக்காட்டில்தான் ராஜா தியேட்டருக்கும் , ராணி தியேட்டருக்கும் போவம் . இதுக்குள்ளை அவனவன் தங்கடை சரக்குகளையைம் விக்னா ரியூட்டரியிலை ஸ்பெசல் கிளாஸ் எண்டு வீட்டிலை டிமிக்கி குடத்துப்போட்டு கூட்டியருவாங்கள் . இப்பிடியெல்லாம் எங்கடை தீபாவளி கொண்டாட்டங்கள் அப்ப போச்சுது . ஆனால் இப்ப இந்த தேன் கூடுகள் இல்லை . எல்லாம் திக்குதிக்காய் கலைஞ்சு போச்சுது . என்ரை அம்மாச்சியும் போய்சேந்திட்டா . எந்தக்காலத்திலையும் எங்கடை அனுபவங்களை இப்பத்தையான் குஞ்சுகுருமனுகள் எடுக்கப்போறேலை . கிட்டிபுள்ளு , கிளித்தட்டு எண்டால் இப்பத்தையான் யாழ்ப்பாணத்து பிள்ளையளுக்கு தெரியுதில்லை .......... சிலநேரம் நாங்கள் தான் லூசுகளோ ????????????????

Edited by கோமகன்

கோமகன்.என்ன மனுசன்யா...?? எங்கைய்யா இதை எல்லாம் வச்சிருந்த்காய்ப்பா..? சா.சத்தியமாய் அழுதிட்டன்.எழுதுங்கைய்யா.இன்னும் இன்னும்.வாசிச்சு முடிக்க இழந்ததை நெனைச்சு இன்னுமொருக்க செத்துப்போனன்.கலைஞ்சுபோனது எங்கட தேன்கூடு மட்டுமா? எங்கட கனவுகளும்தான....வெறுமையாக்கக் கிடக்கும் அந்தக்கூட்டில் இருந்து இன்னமும்நம்ம கண்ணீர் வடிகிறது. :( :( :( :( :(

Edited by வண்டுமுருகன்

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்ட நல்ல பதிவு.. :rolleyes: ஆக்கத்திற்கு நன்றிகள் கோமகன்..!

தீபாவளிக்கு எடுத்த புது பான்ற்ஸ் ஓட விழுந்து புல்லுச் சாயம் பட்டு.. கவலைப்பட்டது ஞாபகம் இருக்கு..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தநாள் ஞாபகம் வந்தததே

நன்றி கோ

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் தீபாவளி என்பது, என்னளவில் என்மனதில் உருவகப்படுத்திக்கொண்டது. ஆடு அடிப்பது, பெரியவர்கள் கள்ளுச்சாராயம் குடித்து நல்லா ஏறினதும் தெருவில கட்டிப்புரண்டு, இடுப்பில உள்ளது அவிழ்ந்து அம்மணக்குண்டியாய் நிற்பது இவைதான்.

ஒருசில ஏழை வீட்டில் கடன் வாங்கி வருசத்தில் ஒருநாளைக்கேனும் புத்துதுணி உடுப்பது.

எனது வாழ்நாளில் இதுவரை தீபாவளிக்குப் புதுத்துணி உடுத்தி அறியேன். எனது தந்தையின் ஒருவரின் உழைப்பில் நிறயப்பேருக்கு அன்றாடம் ஒருவேளையேனும் உணவுபோடவே போதாது. தட்டுத் தடுமாறி வளர்ந்து ஆளாகியதும் கொண்டாட வசதியிருந்தும் இளமையில் வறுமையின் நினைவுகள் இன்னமும் மனதிலிருந்து துடைத்தெறியப்படவில்லை. மாறாக நான் இளமையில் ஒரு நல்ல மகிழ்சியான தீபாவளிக்கு ஏங்கியதுபோல் இப்போதும் எத்தனை இளம்சிறார்கள் ஏங்குவர் எனும் மனத்தவிப்பு. தவிர யாரோ ஒருத்தர் எமக்குள் புகுத்திய இறக்குமதிச் சரக்கை நாம் எதற்கு தலையில்வைத்துக் கொண்டாடவேண்டும் எனும் எண்ணமும் ஒன்றுசேர இனிமேல் எப்போதுமில்லை தீபாவளியும், வாழ்த்துக்களும்.

உண்மை எழுஞாயிறு.எல்லொரும் புது உடுப்பு போட்டுக்கொண்டுபோகும்போது வாழ்க்கை என்றால் எதென்று அறியா என் சிறுவயதுகளில் தீபாவளி என்பதுகூட நமக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கு என்பதை அறியா வயதுகளில் வீட்டில் வாட்டிய வறுமைக்கு நடுவில் மற்றைய குழந்தைகளின் புது உடுப்பையும் சந்தோசத்தையும் கலகலப்பையும் பாத்து ஏங்கிய நாட்களை நானும் கடந்து வந்திருக்கன்.அந்த வலி ரணம் ஏழ்மையின் கொடுமையான முகம்கள் இப்பொழுதும் ந்நெஞ்சின் அடித்தலத்தில் மாறாவடுவாய் பதிந்திருக்கிறது.என் அன்ரைய வயதுகளில் இன்று வன்னியில் இருக்கும் குழந்தைகளின் நினைவுகள் வந்து போகின்றன.அன்று நான் ஏங்கிய அந்த வாழ்க்கைக்காக அந்த பிஞ்சுகள் ஏங்கும்.என்னை தாக்கிய அந்த கொடிய ஏழ்மையின் கரங்கள் அந்தப் பிஞ்சுகளின் நெஞ்சிலும் கொடும் வலியாய் பதிந்து அவர்கல் வாழ்நால்முழுக்க நெஞ்சில் தங்கிவிடும்.ஆற்றுப்படுத்தமுடியா கொடும் றணம் குழந்தைக்காலத்தில் வறுமை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், 'பெல் பொட்டம்' தலை முறையா? கோமகன்!

எங்கட காலத்தில பெல் போட்டம், இல்லாமல் போட்டுது! :D

இந்தத் தீபாவளிக்கு உடுப்பு வாங்கிறதில, எனக்குப் பிடிக்காத ஒண்டு, முழுக்குடும்பத்துக்கும், யூனிபோர்ம் மாதிரி, ஒரே கலரில, வாங்கிப் போடுறது தான்!

நல்ல ஒரு நினைவு மீட்டல்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏக்கங்கள் தான் வாட்டுகிறது,எல்லாம் ஒருகாலம்., கடந்து வந்த பாதைகளை இரைமீட்ட முடியுமே தவிர காலத்திற்கு ஏற்ப வாழ்க்கையில் ஓடித்தானே ஆக வேண்டும். வழி வழி வந்ததைக்கொண்டாடினோமே தவிர காரணம் அறிந்து கொண்டாடும் வயதும்,பக்குவமும் இல்லையே. ஒவ்வொரு வயதில் ஒரு அனுபவம் எனக்கு..

சின்ன வயதில் புது உடுப்பு அணிந்து கோவிலுக்கு போட்டு வந்து வீட்டை பலகாரம் சுட்டிருக்கும் சாப்பிட்டு இரவு பக்கத்து வீட்டை போய் படம் பார்க்கிறதோடை சரி, சொந்தங்கள் என்று இருந்தும் யாரோடும் பழகாததால் எல்லாருடனும் சேர்ந்து கொண்டாடும் பாக்கியம் கிடைக்கவில்லை.

கொஞ்சம் பெருசானதும் தான் சைக்கிள்கம்பி,வால்(வு)கட்டை யிலை வெடி செய்து நெருப்புகுச்சி மருந்தை போட்டு வெடிவிடுவம்,அப்ப சீனாவெடி எல்லாம் இல்லை தடைசெய்ததாலை எங்கண்டை சொந்த தயாரிப்புக்கள் தான். அப்படியும் இல்லாட்டி ஈயப்பேப்பரிலை நெருப்புகுச்சி மருந்தை போட்டு நல்லா உருட்டிபோட்டு கல்லாலை குத்த மெல்லிசா வெடிக்கும் அப்படித்தான் எங்கண்டை வெடி ஆசை தீரும். ஆனால் எல்லாரையும் போல உடுப்பு போட்டு,கோவிலுக்கு போறது வளமை.

ஓ/எல் க்கு பிறகு தான் ரோட்டில் நிற்பது அதிகம் ஆனாலும் தீபாவளி ஏதும் விஷேசநாள் என்றால் தான் வீட்டில் பொடியளோடு நாள் முழுக்க நிக்க வீட்டை விடுங்கள் ஆனால் நாங்கள் தான் பிஞ்சிலையே பழுத்திட்டமே :rolleyes: அப்பவே ஒரு தலைக்காதல்

அண்டைக்கு ஸ்பெசலா வெளிக்கிட்டு பட்டை எல்லாம் அடிச்சு மதகிலையும் , கோயிலடியிலையும்,சைக்கிள் பார்க்கிலையும் சுத்தி சுத்தி நிக்கிறது கண்டால் தான் அண்டைக்கு தீபாவளி இல்லாட்டி தேடி தம்பசிட்டி,பண்டத்தரிப்பு,ஓராங்கட்டை,பருத்தித்துறை என்டு நாயா அலைஞ்சு போட்டு முகத்தை தொங்கவிட்டு இருக்கிறது தான் வேலை. :(

ஆனால் புலம்பெயர்ந்ததில் இருந்து தீபாவளி கொண்டாடியதும் இல்லை எப்ப வருகுது என்று கூட தெரியாது, ஆனால் இந்த வருடம் ஏனோ இந்த தீபாவளி சிறு வருத்தத்தையே கொண்டுவந்துள்ளது. எங்களது தலைதீபாவளி நான் கூட இல்லையே என்று அவளுக்கு கவலை, அவளுடைய கவலை தான் எனக்கு வருத்தமே தவிர தீபாவளி அல்ல,

இப்படி ஒவ்வொரு வயசுக்கு ஒரு அனுபவம். :rolleyes:

  • தொடங்கியவர்

கோமகன்.என்ன மனுசன்யா...?? எங்கைய்யா இதை எல்லாம் வச்சிருந்த்காய்ப்பா..? சா.சத்தியமாய் அழுதிட்டன்.எழுதுங்கைய்யா.இன்னும் இன்னும்.வாசிச்சு முடிக்க இழந்ததை நெனைச்சு இன்னுமொருக்க செத்துப்போனன்.கலைஞ்சுபோனது எங்கட தேன்கூடு மட்டுமா? எங்கட கனவுகளும்தான....வெறுமையாக்கக் கிடக்கும் அந்தக்கூட்டில் இருந்து இன்னமும்நம்ம கண்ணீர் வடிகிறது.

உங்களை எனக்குப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாகவுள்ளது . எனது எழுத்துக்கள் உங்களை வசீகரிப்பதாகச் சொல்கின்றீர்கள் , சிலாகிக்கின்றீர்கள் . பல வேளைகளில் :rolleyes: :rolleyes: ???????? நீங்கள் கட்டுமரமா இல்லை டோராப்படகா :lol: :lol: :D:icon_idea:

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அழகான அனுபவபகிர்வு வாழ்த்துகள் ம் அதெல்லாம் ஒரு காலம் இப்பெல்லாம் சொந்த சகோதரங்களே ஒவொரு நாட்டில ஒவொரு இடத்தில சொந்தம் ஊர் நினைவுகள் எல்லாமே தொலைந்து போய்ட்டுது

[size=4]பல உறவுகள் கூறியது போன்று பழைய இனிமையான நினைவுகளை மீட்ட உதவியுள்ளீர்கள். நன்றிகள். [/size]

  • தொடங்கியவர்

பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்ட நல்ல பதிவு.. ஆக்கத்திற்கு நன்றிகள் கோமகன்..!

தீபாவளிக்கு எடுத்த புது பான்ற்ஸ் ஓட விழுந்து புல்லுச் சாயம் பட்டு.. கவலைப்பட்டது ஞாபகம் இருக்கு..!

கூட்டமாய் நிண்டு பெட்டையள் பாத்திட்டாளவையோ :lol: :lol: ?? சோ சாட் :icon_idea: .வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் இசைக்கலைஞன் :) :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன்.

[size=4]எனக்கு வந்திருந்த தோர் வாழ்த்து. [/size]

[size=4]கள்ளடித்து[/size]

[size=3][size=3][size=3][size=3]களி[/size][size=3] [/size][size=3]மாமிசம்[/size][size=3] [/size][size=3]புசித்து[/size]

[size=3]மெல்லப்[/size][size=3] [/size][size=3]பிரித்துப்[/size][size=3] [/size]

[size=3]புதுக்[/size][size=3] [/size][size=3]கோடியுடுத்து[/size]

[size=3]வெள்ளனப்[/size][size=3] [/size][size=3]போய்க்[/size][size=3] [/size]

[size=3]கியூ[/size][size=3] [/size][size=3]வரிசையில்[/size][size=3] [/size][size=3]நின்று[/size][size=3] [/size]

[size=3]முண்டியடித்து[/size][size=3] [/size]

[size=3]முதல்[/size][size=3] [/size][size=3]ஷோ[/size][size=3] [/size][size=3]பார்த்து[/size][size=3] [/size]

[size=3]அடித்துப்[/size][size=3] [/size][size=3]பிடித்து[/size][size=3] [/size][size=3]விளையாடி[/size][size=3] [/size]

[size=3]உண்டு[/size][size=3] [/size][size=3]குடித்து[/size][size=3] [/size][size=3]வெடித்து[/size][size=3] [/size][size=3]இனித்து[/size][size=3]க்[/size][size=3] [/size][size=3] [/size]

[size=3]களித்த[/size][size=3] [/size]

[size=3]தீபாவளி[/size][size=3] [/size][size=3]எங்கே[/size][size=3]...... [/size]

[size=3]பத்துக்கும்[/size][size=3] [/size][size=3]பலதுக்கும்[/size]

[size=3]மெத்த[/size][size=3] [/size]வழியுண்டேனினும்

[size=3]பத்தாது[/size][size=3] [/size][size=3]பத்தாதென்று[/size][size=3] [/size]

[size=3]டிக்கெட்[/size][size=3] [/size][size=3]எடுத்து[/size][size=3] [/size]

[size=3]வரிசையில்[/size][size=3] [/size][size=3]நின்று[/size][size=3] [/size]

[size=3]நட்சத்திரம்[/size][size=3] [/size][size=3]சொல்லி[/size][size=3] [/size]

[size=3]'[/size][size=3]தன[/size][size=3], [/size][size=3]வாகன[/size][size=3], [/size][size=3]உத்தியோக[/size][size=3], [/size][size=3]சகல[/size][size=3] [/size][size=3]சம்பத்து[/size][size=3]...'[/size]

[size=3]வேண்டி[/size][size=3], [/size][size=3]வணங்கி[/size][size=3], [/size][size=3]வலித்துக்[/size][size=3] [/size][size=3] [/size]

[size=3]கழிக்கும்[/size][size=3] [/size]

[size=3]தீபாவலி[/size][size=3] [/size][size=3]எங்கே[/size][size=3]?[/size]

[size=3]இருந்தாலும்[/size][size=3] [/size]

[size=3]பழையதை[/size][size=3] [/size][size=3]நினைத்து[/size][size=3] [/size]

[size=3]வாழ்வோம்[/size][size=3] [/size]

[size=3]வாழ்த்துவோம்[/size][size=3] [/size]

[size=3]இனிய[/size][size=3] [/size][size=3]தீபாவளி[/size][size=3] [/size][size=3]நல்[/size][size=3] [/size][size=3]வாழ்த்துக்கள்[/size][size=3].[/size]

[size=3]([/size][size=1]அன்புடன் [/size][size=2]கவிஞர் [/size][size=1]விக்கி)[/size][/size][/size][/size]

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

[size=4]அந்தநாள் ஞாபகம் வந்தததே

நன்றி கோ[/size]

மிக்க நன்றிகள் நந்தன்.

  • தொடங்கியவர்

சிறுவயதில் தீபாவளி என்பது, என்னளவில் என்மனதில் உருவகப்படுத்திக்கொண்டது. ஆடு அடிப்பது, பெரியவர்கள் கள்ளுச்சாராயம் குடித்து நல்லா ஏறினதும் தெருவில கட்டிப்புரண்டு, இடுப்பில உள்ளது அவிழ்ந்து அம்மணக்குண்டியாய் நிற்பது இவைதான்.

ஒருசில ஏழை வீட்டில் கடன் வாங்கி வருசத்தில் ஒருநாளைக்கேனும் புத்துதுணி உடுப்பது.

எனது வாழ்நாளில் இதுவரை தீபாவளிக்குப் புதுத்துணி உடுத்தி அறியேன். எனது தந்தையின் ஒருவரின் உழைப்பில் நிறயப்பேருக்கு அன்றாடம் ஒருவேளையேனும் உணவுபோடவே போதாது. தட்டுத் தடுமாறி வளர்ந்து ஆளாகியதும் கொண்டாட வசதியிருந்தும் இளமையில் வறுமையின் நினைவுகள் இன்னமும் மனதிலிருந்து துடைத்தெறியப்படவில்லை. மாறாக நான் இளமையில் ஒரு நல்ல மகிழ்சியான தீபாவளிக்கு ஏங்கியதுபோல் இப்போதும் எத்தனை இளம்சிறார்கள் ஏங்குவர் எனும் மனத்தவிப்பு. தவிர யாரோ ஒருத்தர் எமக்குள் புகுத்திய இறக்குமதிச் சரக்கை நாம் எதற்கு தலையில்வைத்துக் கொண்டாடவேண்டும் எனும் எண்ணமும் ஒன்றுசேர இனிமேல் எப்போதுமில்லை தீபாவளியும், வாழ்த்துக்களும்.

உங்கள் ஆழமான கருத்துகளுக்கு மிக்கநன்றிகள் இளஞாயிறு . ஒப்பீட்டளவில் நாங்கள் கொண்டாடிய பண்டிகைகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் , அன்பு பாசத்திலும் பழக்கவழக்கங்களிலும் ஒன்றாகவே இருந்தன . இந்தத்தொலைத்த உணர்வுகளையே இந்தப் பதிவின்மூலம் சொன்னேன் . ஒரு தீபாவழி கொண்டாடப்படக்கூடாது என்றால் எமது இனம் எந்தப் பண்டிகையையுமே கொண்டாடாமல் விடட்டுமே ??? ஜிப்ஸ்சிகள் மாதிரி!!!!!

பழைய இனிமையான நினைவுகளை மீட்ட உதவியுள்ளீர்கள். நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு நினைவுப்பதிவு ......வணக்கம் கோமகன்.

  • தொடங்கியவர்

நீங்கள், 'பெல் பொட்டம்' தலை முறையா? கோமகன்!

எங்கட காலத்தில பெல் போட்டம், இல்லாமல் போட்டுது! :D

இந்தத் தீபாவளிக்கு உடுப்பு வாங்கிறதில, எனக்குப் பிடிக்காத ஒண்டு, முழுக்குடும்பத்துக்கும், யூனிபோர்ம் மாதிரி, ஒரே கலரில, வாங்கிப் போடுறது தான்!

நல்ல ஒரு நினைவு மீட்டல்!

ஐயோ நான் சின்னப்பொடியன்.............. :o . சின்ன வயசில இந்த பெல்பொட்டம் காயளை பாத்திருக்கிறன் . அவையின்ரை சேர்ட் ஆட்டு கொலர் தான் வைச்சு தைப்பினம் :lol: . பெல்பொட்டம் பின்பக்கம் யூ கட் அல்லது வீ கட் இருக்கும் :lol: :lol: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புங்கையூரான் :) :) .

  • தொடங்கியவர்

ஏக்கங்கள் தான் வாட்டுகிறது,எல்லாம் ஒருகாலம்., கடந்து வந்த பாதைகளை இரைமீட்ட முடியுமே தவிர காலத்திற்கு ஏற்ப வாழ்க்கையில் ஓடித்தானே ஆக வேண்டும். வழி வழி வந்ததைக்கொண்டாடினோமே தவிர காரணம் அறிந்து கொண்டாடும் வயதும்,பக்குவமும் இல்லையே. ஒவ்வொரு வயதில் ஒரு அனுபவம் எனக்கு..

சின்ன வயதில் புது உடுப்பு அணிந்து கோவிலுக்கு போட்டு வந்து வீட்டை பலகாரம் சுட்டிருக்கும் சாப்பிட்டு இரவு பக்கத்து வீட்டை போய் படம் பார்க்கிறதோடை சரி, சொந்தங்கள் என்று இருந்தும் யாரோடும் பழகாததால் எல்லாருடனும் சேர்ந்து கொண்டாடும் பாக்கியம் கிடைக்கவில்லை.

கொஞ்சம் பெருசானதும் தான் சைக்கிள்கம்பி,வால்(வு)கட்டை யிலை வெடி செய்து நெருப்புகுச்சி மருந்தை போட்டு வெடிவிடுவம்,அப்ப சீனாவெடி எல்லாம் இல்லை தடைசெய்ததாலை எங்கண்டை சொந்த தயாரிப்புக்கள் தான். அப்படியும் இல்லாட்டி ஈயப்பேப்பரிலை நெருப்புகுச்சி மருந்தை போட்டு நல்லா உருட்டிபோட்டு கல்லாலை குத்த மெல்லிசா வெடிக்கும் அப்படித்தான் எங்கண்டை வெடி ஆசை தீரும். ஆனால் எல்லாரையும் போல உடுப்பு போட்டு,கோவிலுக்கு போறது வளமை.

ஓ/எல் க்கு பிறகு தான் ரோட்டில் நிற்பது அதிகம் ஆனாலும் தீபாவளி ஏதும் விஷேசநாள் என்றால் தான் வீட்டில் பொடியளோடு நாள் முழுக்க நிக்க வீட்டை விடுங்கள் ஆனால் நாங்கள் தான் பிஞ்சிலையே பழுத்திட்டமே :rolleyes: அப்பவே ஒரு தலைக்காதல்

அண்டைக்கு ஸ்பெசலா வெளிக்கிட்டு பட்டை எல்லாம் அடிச்சு மதகிலையும் , கோயிலடியிலையும்,சைக்கிள் பார்க்கிலையும் சுத்தி சுத்தி நிக்கிறது கண்டால் தான் அண்டைக்கு தீபாவளி இல்லாட்டி தேடி தம்பசிட்டி,பண்டத்தரிப்பு,ஓராங்கட்டை,பருத்தித்துறை என்டு நாயா அலைஞ்சு போட்டு முகத்தை தொங்கவிட்டு இருக்கிறது தான் வேலை. :(

ஆனால் புலம்பெயர்ந்ததில் இருந்து தீபாவளி கொண்டாடியதும் இல்லை எப்ப வருகுது என்று கூட தெரியாது, ஆனால் இந்த வருடம் ஏனோ இந்த தீபாவளி சிறு வருத்தத்தையே கொண்டுவந்துள்ளது. எங்களது தலைதீபாவளி நான் கூட இல்லையே என்று அவளுக்கு கவலை, அவளுடைய கவலை தான் எனக்கு வருத்தமே தவிர தீபாவளி அல்ல,

இப்படி ஒவ்வொரு வயசுக்கு ஒரு அனுபவம். :rolleyes:

பண்டத்தரிப்பு எங்கை கிடக்கு மிச்சம் எங்கை கிடக்கு கூட்டிக்கழிச்சு பாத்தாலும் லொஜிக் இடிக்குதே :lol: ??

ஏன் இவ்வளவு வாட்டம் :o ? ஆத்து வெள்ளத்தை வந்த வெள்ளமா அள்ளப்போகுது ? எல்லாமே இருகோட்டு தத்துவமே ஜீவா . என்னைப் பொறுத்தவரையில் , காத்திருப்புக் கூடப் பல வாழ்க்கைப் படிமானங்களை கொடுக்கவல்லது . அதிலிருந்தும் கிடைக்கின்ற அனுபவங்கள் வருங்காலத்தை செழுமைப்படுத்தும் . வருகைக்கும் சத்தான கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள் :) :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்டத்தரிப்பு எங்கை கிடக்கு மிச்சம் எங்கை கிடக்கு கூட்டிக்கழிச்சு பாத்தாலும் லொஜிக் இடிக்குதே :lol: ??

தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி கோமகன் அண்ணா.

பண்டாரி அம்மன் கோவில் தான் மாறி பண்டத்தரிப்பு என்று எழுதிவிட்டேன். :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி என்ரா

ஊர் ஞாவகம் தான் வரும்..

வெளி நாட்டு தீபாளி வாரதும் தெரியா போரதும் தெரியா...

பழைய நினைவுக்கு எங்களை கொண்டு போன கோமகன் அண்ணாக்கு நன்றி...

எத்தனை தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாடி மகிழ்ந்திருப்போம் அந்த நாட்களில்...

  • தொடங்கியவர்

பல உறவுகள் கூறியது போன்று பழைய இனிமையான நினைவுகளை மீட்ட உதவியுள்ளீர்கள். நன்றிகள்.

மிக்க நன்றிகள் அகூதா உங்கள் கருத்திற்கு .

  • தொடங்கியவர்

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து கருத்துக்களை இட்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது சிரம் தாழ்கின்றது .

  • 11 months later...
  • தொடங்கியவர்

இது நான் போன வரிசம் உங்களுக்காக எழுதினது . நாளைக்கு தீபாவளி எண்டு சனம் சன்னதம் ஆடுது . இந்த பதிவு அப்பத்தையான் சின்னனுகள் கொம்  இப்பத்ததையான் ஹீரோக்களுக்கு சமர்ப்பணம் :)  :)  :(  :(   .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.