Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கி சினிமா விமர்சனம்

Featured Replies

ஏஆர் முருகதாஸ் விஜய் காம்பினேஷன் துப்பாக்கி சரியாய் குறி பார்த்து சுட்டிருக்குமா ? ஆவலுடன் நுழைந்தோம் ..

நடிப்பு :

Vijay as Jagadish

Kajal Aggarwal as Nisha

Jayaram

Vidyut Jamwal

Akshara Gowda

Anupama Kumar

Sathyan

Manobala

Prashanth Nair

Mangala Radhakrishnan

Deepthi Nambiar

Gautham Kurup

Steven Clarke

A. R. Murugadoss in Cameo Appearance

Santhosh Sivan in Cameo Appearance

துப்பாக்கி தொழில்நுட்ப குழு :

Producer : S Thanu

Camera : Santoash Sivan

Music : Harris Jeyaraj

Story Screenplay Direction : AR Murugadoss

துப்பாக்கி கதை :

ராணுவத்திலிருந்து விடுப்பில் இருக்கும் விஜய் (ஜகதீஷ்) தன் வீடான மும்பைக்கு வருகிறார். எதை பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் தன்னிச்சையாக வாழ்வை எதிர்கொள்ளும் இளைஞன் விஜய். ஆனால் விதி அவரை விடுப்பில் இருக்க விடாமல் செய்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு குண்டு வெடிப்பை பார்க்க நேரிட அதிலிருந்து ஆரம்பிக்கிறது அவருக்கும் வில்லன் வித்யூத் ஜமாலுக்குமான சேசிங்க் ஆட்டம். தன்னையும் சேர்த்து 12 பேர் குழு வில்லனுக்கு ஆட்டம் காட்ட ஆரம்பிக்க, வில்லன் சுதாரிக்கிறார். யார் இந்த கேங்க் என அவரும் கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்த விஜயின் நண்பர்கள் ஆபத்தை சந்திக்கிறார்கள். தங்கையும் கடத்தப்பட, விஜய் தன் சாதுர்யத்தால் எப்படி தன்னை, நண்பர்களை , நாட்டை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை ! இடையிடையே தன் வீட்டில் தனக்காய் பெண் பார்த்த காஜல் அகர்வாலுடன் ரொமான்ஸ் பண்ணவும் மிஸ் பண்ணவில்லை இளைய தளபதி. கஜினிக்குப் பிறகு முருகதாஸ் படத்தில் ரொமான்ஸ் ட்ராக் பொர்க் அவுட் ஆனது இதில்தான் !

நடிப்பு :

விஜய் : துப்பாக்கி முழுக்க முழுக்க விஜய் படம் என்பதை முதல் சீன் முதல் இறுதி வரை நிரூபிக்கிறார் இளைய தளபதி. ஏ.ஆர் முருகதாஸ் விஜயை நினைத்துத்தான் துப்பாக்கி கதையை செய்திருக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. ஒரு தற்செயலான மிஷனில் சிக்கிய ஜாலி இளைஞனாய் விஜய் அசத்துகிறார்.

காஜல் அகர்வால்:இந்த முறை காஜல் கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார். முட்டை கண்களுடன் அவர் ஹாரிஸ் மெட்டுக்களுக்கு போடும் ஜாலி ஆட்டம் பைசா வசூல் மாமே !

சத்யான் : நண்பனுக்கு பிறகு சத்யனுக்கு இன்னொரு வெயிட்டான ரோல்… உணர்ந்து செய்திருக்கிறார்

ஜயராம் : ஜெயராமின் குணசித்ர நடிப்பு அடக்கி வாசிக்கும் அழுத்தமான நடிப்பு.

வித்யூத் ஜமால்: ஒரு நல்ல மசாலா படத்திற்கு ஒரு சூப்பர் வில்லன் தேவை. இந்தப் படத்தில் வித்யூத் காட்சிக்கு காட்சி இளைய தளபதிக்கு சவாலாய் பாய்கிறார். பாராட்டுக்கள் !

கேமரா :

சந்தோஷ் சிவன் இந்த வேகமான ஆக்ஷன் த்ரில்லருக்கு உரிய மரியாதை செய்திருக்கிறார். ஃபாரின் பாடல் காட்சியாகட்டும் , திகில் சேஸ் சீன்களாகட்டும், சந்தோசின் காமரா அசத்துகிறது ! மும்பை சென்ட்ரலில் சந்தோஷ் காட்டியிருக்கும்

இசை :

மசாலா படத்திற்கு ஏற்ற வேகமான தாளகட்டை கொடுத்திருக்கிறார் ஹாரிஸ். விஜய்ஆண்ட்ரியா குரலில் கூகிள் கூகிள் அசத்துகிறது. ஒரு மாறுதலுக்காக பின்னணி இசையிலும் ஃபோகஸ் செய்திருக்கிறார் இந்த மெலடி மன்னர்.

இயக்கம் :

ஏ.ஆர் முருகதாஸ் வெகு அழகாக விஜய்க்கு கச்சிதமாய் பொருந்தும் கதை செய்து அதில் வேகமான திரைக்கதையை நுழைத்து கலக்கி விட்டார்… இது மாதிரி வேகமான ஆக்ஷன் கலந்த மசாலாவில் தான் மன்னன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

ப்ளஸ்:

1. அசாத்திய வேகத்துடன் நகரும் திரைக்கதை

2. ஜாலி ஜேம்ஸ்பாண்ட் விஜய்

3. ஆக்ஷன் ரொமான்ஸ் எல்லாம் சரி சதவிகிதத்தில் கலந்தது!

மைனஸ் :

1. காமெடி இல்லாத குறை

பார்க்கலாமா? :

கட்டாயம். இது ஜாலியான தீபாவளி தமாகா !

பிடித்த வசனம் :

1000 பேர கொல்ல நினைக்குறவனே உயிரப் பத்தி கவலப் படலே ! நாம் காப்பாத்த நெனக்கிறோம்.. நாம் ஏன் கவலப் படணும் ?

ஃபைனல் வெர்டிக்ட் :

துப்பாக்கி - புல்ஸ் ஐ !

Thuppakki Film Review from moonramkonam.com

  • தொடங்கியவர்

முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா? என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது.

மிலிட்டரியில் வேலை பார்க்கும் விஜய் மும்பையில் வசிக்கும் தன் குடும்பத்தினருடன் லீவைக் கழிக்க வருகிறார். வந்த இடத்தில் தீவிரவாதிகள் பாம் வைத்துவிட, அதை வைத்தவனை பிடித்து விசாரிக்கும் போது மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்கு ப்ளான் செய்யப்பட்டிருப்பது தெரிந்து அதை விஜய் முறியடிக்கிறார். யார் தன் மிஷனை இப்படி முறியடித்தான் என்று கண்டுபிடிக்க, வில்லன் விஜய்யை தேட, விஜய் வில்லனைத் தேட, முடிவு என்ன ஆனது என்ற சின்ன லைன் தான். அதை பரபர ஆக்‌ஷனில் பொறி பறக்க விட்டிருக்கிறார்கள்.

விஜய் படம் முழுக்க அண்டர்ப்ளே செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அநாவசிய பஞ்ச் டயலாக் கிடையாது. குத்துப் பாட்டு கிடையாது. ஆனால் படம் முழுவதும் பார்க்க அழகாகவும், ஒரு விதமான குதூகலத்தோடும் இருக்கிறார். தீவிரவாதிகளுடன் மோதும் இடங்களில் ஆக்‌ஷன் பொறி பறக்கிறது. காஜலுடன் காதல் செய்யும் போது கண்களில் குறும்பு கொப்பளிக்கிறது. ரொம்ப நாள் கழித்து விஜய்யின் நடிப்பை என்ஜாய் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை கூகுள் பாடல் உட்பட நடனத்தில் பெரிய அளவில் விஜய் ஸ்கோர் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

165816_451726088173121_1803629807_n.jpg

காஜல் அகர்வாலுக்கு தமிழ் சினிமாவின் வழக்கப்படி லூசுப் பெண் கேரக்டர். விஜய்யிடம் முத்தம் கேட்கும் போது லேசாய் கிரங்க வைக்கிறார். மற்றபடி வெறும் டான்ஸிங் டாலாய்த்தான் வருகிறார். சத்யன் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லனின் நடிப்பு பெரிதாய் இல்லாவிட்டாலும் திரைக்கதையில் அவருடய கேரக்டருக்கான முக்யத்துவத்தால் பெரிய இம்பாக்ட் கிடைத்துவிடுகிறது.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் புதிதாய் ஏதுமில்லாவிட்டாலும் படத்துக்கு தேவையான அளவிற்கு சிறப்பாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நல்ல வேகம். இசை ஹாரிஸ் ஜெயராஜ். இவரிடம் உள்ள இருபது பாடல்களின் டுயூன்களையே இன்னும் எத்தனை படத்திற்குத்தான் போடுவார் என்றே தெரியவில்லை. கூகுள்.. கூகுள் பாடலைத் தவிர சொல்லிக் கொள்கிறார் போல ஏதுமில்லை. குறிப்பாய் பின்னணியிசை வேறு யாரையாவது போட்டு பின்னணியிசை அமைத்திருக்கலாம் முடியலை.

75919_10151242942639239_2124175857_n.jpg

படத்தின் பலமே ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதைதான். ஒரு சின்ன லைனை படு சுவாரஸ்யமாய் சொன்னதுமில்லாமல் வழக்கமான விஜய்யை காட்டாமல் கொஞ்சம் அடக்கி வாசித்துள்ள விஜய்யை காட்டியிருப்பதில் ஜெயித்தும் இருக்கிறார். இடைவேளையில் பன்னிரெண்டு தீவிரவாதிகளை பிடித்துக் கொல்வதிலிருந்து படம் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல், மேக்கிங்கிலாகட்டும், திரைக்கதையிலாகட்டும் சுறு சுறு விறுவிறு பட்டாசாய் பறக்கிறது. தீவிரவாதிகளை பிடிக்கும் ஐடியா சுவாரஸ்யம். “உயிரை எடுக்கிற அவனுக்கே அவன் உயிரைப் பத்தி கவலப் படாதப்போ.. காப்பாத்துற நான் எதுக்கு ப்யப்படணும்” என்கிற வசனம் ஜிவ்வென இருக்கிறது.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால் ஆங்காங்கே ஸ்பீட்ப்ரேக்கராய் வரும் பாடல்களும், படத்தின் நீளமும்தான். நீளத்திற்கு காரணம் முதல் பாதியில் வரும் காதல் காட்சியும், ஜெயராமை வைத்து காமெடி என்று நினைத்து வைத்த காட்சிகளும் தான். கிட்டத்தட்ட அந்த காட்சிகளில் தூக்கமே வர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஹைஃஸ்பீடில் ஒரு மெலடி தேவையா? அதுவும் ஏற்கனவே கோவில் கேட்ட வெண்பனியே பாடல் ட்யூனில். லாஜிக்கலாய் நிறைய லூப் ஹோல்கள், க்ளைமாக்ஸ் டெம்ப்ளேட் சண்டைக்காட்சி, மோசமான EFX, ஆகியவை இருந்தாலும், வெறும் மசாலாவாய் ஒரு மாஸ் படத்தைக் கொடுக்காமல் வித்யாசமான விஜய்யையும், ஒரு சுவாரஸ்ய ஆக்‌ஷனையும் தந்திருக்கிற முருகதாஸுக்கு வாழ்த்துகள்

http://www.cablesankaronline.com/2012/11/blog-post_13.html?spref=fb

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி படம் செம ஹிட் போல இவளவு நாளும் விஜய் படம் என்றாலே சொதப்பல் என்று சொன்னவர்களுக்கு செம அடி அதுவும் பில்லா எல்லாம் ஜுஜுப்பி ஆகிடிச்சு..,,,,:D

[size=1]

[size=4]வருங்கால இளையராஜா. சில காலம் போக புலம்பெயர் தேசங்களுக்கு வந்து 'பிரமாண்ட நிகழ்வை நடாத்தி" மேலும்பல கோடிகளை சம்பாதிக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]நாட்டிற்கு இல்லை இனத்திற்கு என்ன செய்தாய் ? என கேட்க கூடாது. [/size][/size]

[size=1]

http://www.chinmayisripada.com/2009/05/what-i-would-like-to-see-in-my-country.html[/size]

நேற்று துப்பாக்கி படம் பார்க்கப் 07:30 இற்குப் போனேன், ரிக்கெட் கிடைக்கவில்லை. House full என்று அறிவிப்பு போட்டு இருந்தனர். 10:30 காட்சிக்கு அப்பவே ரிக்கெட் எடுக்க வரிசையில் மிச்சப் பேர் திரளாக நின்று கொண்டிருந்தனர். மக்களுக்கு எது Entertainment எதுக்கு போக வேண்டும் என்ற தெளிவு இருக்கின்றது.

நான் இன்று மாலை 4:30 காட்சிக்கு ரிக்கெட் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

[size=4]நான் கிந்தியில் வந்ததன் பின்பு பார்க்கலாம் என உள்ளேன் :wub:[/size]

நான் கிந்தியில் வந்ததன் பின்பு பார்க்கலாம் என உள்ளேன் :wub:

சமஸ்கிருதத்தில் வருவதாக ஒரு தகவல் இருக்கு.. :)

சமஸ்கிருதத்தில் வருவதாக ஒரு தகவல் இருக்கு.. :)

[size=4]அதன் மூலம் தலையில் சக்கரை வைக்க முடியாதே (பிராமணர்கள் யூதர்களை போன்றவர்கள்) :D[/size]

[size=6]எனது திரைப்பட விசனம் [/size]

[size=6]----------------------------------------[/size]

[size=5]துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை[/size]

[size=4]காபி உறிஞ்சல்:

(துப்பு = பொருள்)[/size]

[size=4]துப்பு இல்லாதவன், துப்பு துலக்குதல்[/size]

[size=4]-ன்னு இன்னிக்கும் பல Context-இல் இச் செந்தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தறோம்![/size]

[size=4]துப்பு இஸ்தாவா? என்பது தான் டப்பு இஸ்தாவா -ன்னு ஆச்சா? யாம் அறியோம் :))[/size]

[size=4]ஆனா துப்பு-ன்னா பொருள்;

செல்வமோ, அறிவோ, உணவோ… ஒரு சிறப்பான பொருள்!

துப்பார்க்கு = பொருளை உட்கொள்வார்க்கு (உண்பவர்க்கு)[/size]

[size=4]துப்பாய துப்பாக்கி = தக்க பொருளாக, உணவுப் பொருளை விளைவித்து…

துப்பார்க்கு = பொருளை உட்கொள்வார்க்கு

துப்பாய = தானே ஒரு உணவுப் பொருளாகவும்

தூஉம் மழை = மழை தூவுகிறது![/size]

ஈழத்தில் தமிழர்களை வேட்டையாடிய, இன்றும் காஸ்மீரில் பாலியல் வல்லுறவுகளையும் படுகொலைகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் கொலைவெறி இந்திய இராணவத்தை புனிதர்களாக காட்டியுள்ளார்கள். படம் விஜயின் இன்னொரு குப்பை.

போதிதர்மன், வரலாற்றில் தமிழர்களின் வலிமை, விடுதலை போராளிகள் பற்றிய நல்ல விதமான பார்வை என்று எல்லாம் ஏழாம் அறிவில் போதித்த முருகதாசின் இன்னொரு வியாபாரி முகம் இது.

ஈழத்தில் தமிழர்களை வேட்டையாடிய, இன்றும் காஸ்மீரில் பாலியல் வல்லுறவுகளையும் படுகொலைகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் கொலைவெறி இந்திய இராணவத்தை புனிதர்களாக காட்டியுள்ளார்கள். படம் விஜயின் இன்னொரு குப்பை.

போதிதர்மன், வரலாற்றில் தமிழர்களின் வலிமை, விடுதலை போராளிகள் பற்றிய நல்ல விதமான பார்வை என்று எல்லாம் ஏழாம் அறிவில் போதித்த முருகதாசின் இன்னொரு வியாபாரி முகம் இது.

அவர்கள் வியாபாரிகளாக இருந்தாலும் நாம் தானே தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். படத்தை தியேட்டருக்கு போய் பார்த்து அவர்களுக்கு ஆதரவை வழங்கி விட்டு இங்காலை வந்து அவர்களை திட்டக்கூடாது. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் தமிழர்களை வேட்டையாடிய, இன்றும் காஸ்மீரில் பாலியல் வல்லுறவுகளையும் படுகொலைகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் கொலைவெறி இந்திய இராணவத்தை புனிதர்களாக காட்டியுள்ளார்கள். படம் விஜயின் இன்னொரு குப்பை.

போதிதர்மன், வரலாற்றில் தமிழர்களின் வலிமை, விடுதலை போராளிகள் பற்றிய நல்ல விதமான பார்வை என்று எல்லாம் ஏழாம் அறிவில் போதித்த முருகதாசின் இன்னொரு வியாபாரி முகம் இது.

வேலாயுதம் போன வருடம் பார்த்தபோது இனி விஜயின் படங்களை திரையில் பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தேன். துப்பாக்கி நன்றாக இருக்கின்றது என்று சில விமர்சனங்களைப் பார்த்தபோது முடிவை மாற்றலாமா என்று யோசித்தேன். நல்லவேளை உங்கள் விமர்சனம் காசைக் கரியாக்காமல் இருக்க உதவியுள்ளது :)

[size=3]படத்தில் "வாவ்" என்று சொல்லும்படி ஒன்றுமில்லை. அதே பழைய கரு "தீவிரவாத ஒழிப்பு" அப்புறம் தீவிரவாதிகளாக முஸ்லீம்கள் தீவிரவாதிகளை கொல்லும் கதாநாயகன் பாடல்கள் சுமார்தான். [/size]

[size=3]விஜய் கையை நீட்டி பஞ்ச் டயலாக் பேசாமல் இயல்பாக நடித்துள்ளார். கஜல் அகர்வால் "இளமை என்னும் பூங்காற்று...." புதுசா "sleeper Cell" என்ற வார்த்தை பிரயோகம் படம் முழுவதும் உண்டு. எந்தவிதமான லாஜிக் பார்க்காமல் மூன்று மணி நேரம் உங்களது நேரத்தை போக்க நினைத்தால் இந்த படத்தை பார்க்கலாம். Good presentation by Muragadoss [/size]

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

வேலாயுதம் போன வருடம் பார்த்தபோது இனி விஜயின் படங்களை திரையில் பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தேன். துப்பாக்கி நன்றாக இருக்கின்றது என்று சில விமர்சனங்களைப் பார்த்தபோது முடிவை மாற்றலாமா என்று யோசித்தேன். நல்லவேளை உங்கள் விமர்சனம் காசைக் கரியாக்காமல் இருக்க உதவியுள்ளது :)

கிருபன், நிழலி என்ன சொன்னாலும் அது உங்களுக்கு வேதவாக்கா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் துப்பாக்கி வசூலில் சாதனை படைத்துக்கொண்டிருக்கு நல்லதோர் பொழுது போக்குப்படம்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நிழலி என்ன சொன்னாலும் அது உங்களுக்கு வேதவாக்கா :lol:

யார் சொல்லுவது என்பது முக்கியமல்ல. என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதுதான் முக்கியம். என்றாலும் நம்பகத்தன்மையுள்ளவர்கள் சொல்லும்போது கொஞ்சம் மதிப்பு வரும்தானே!

மேலும் படம் பார்த்துவிட்டு வரும்போது ஏன் காசைத் தொலைத்தோம் என்று அடிக்கடி நடப்பதால் இப்போது உசாராகத்தான் இருக்கின்றேன்!

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இதை 1 பவுண் கொப்பியில் பார்த்தேன்.

 

துப்பாக்கி உலகில் மிகமோசமான மனித உரிமை மீறல்களைச் செய்யும் இந்திய மற்றும் அதன் ஒத்துழைப்போடு இயங்கும் சிங்கள இராணுவம் உட்பட்ட பிராந்திய இராணுவங்களுக்கு வெள்ளைச் சாயம் பூசும்.. நடவடிக்கை..!

 

விஜய்யின் சுத்த போக்கிரித்தனம்..! பகலவன் வாய்ப்பை உதறி.. துப்பாக்கியில் விஜய் இணைந்ததன் தார்ப்பரியம்.. இதுதான் போல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் தியேட்டரில் போய் படம் பார்தில்லை.1 பவுண் கொப்பிதான்.திடே;டரில் போய் பார்ப்பதற்கு ஒர காலத்தில்(தாயகத்தில்) முதல் வரிசையில் நிற்பேன்.புலம் பெயர்ந்தபின் விரல் விட்டு எண்ணக் கூடிய கணக்குதான்.1 பவுண் கொப்பி என்றால் படம் துவங்கி 20 நிமிடங்களில் படம் மேலும் பார்க்கும் அவலைத் தூண்டாவிட்டால் நிறுத்தி விட்டு வேறு வேலை பார்ப்பேன்.தியேட்டருக்குப் போய் காசைக் குடுத்து விட்டு அழுவதை விட இது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.