Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அய் நா தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறியது -விசாரணை அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் மாத்திரமின்றி தேறு எந்த சக்தியாலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. அத்துடன் இது ஒரு கடினமான விடயம் என்பதால் உலகின் எந்தவொரு சக்தியும் இதனைத் தடுப்பதற்கு முன்வரவில்லை.

பிறகு ஏன் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு அலுவலகம் மக்கள் பணத்தில் உங்களுக்கு???????????ஈ

இதே நிலையை தமிழர் சார்ந்தும் எடுத்திருந்தால் நாங்கள் வென்றிருப்போமே..............

நாசமாப்போவார்

வீதி வீதியாய்

இரவு பகலாய்

நின்று அழுது கெஞ்சினோமே...............

தடுங்கள் என்று.......

அந்த மக்களை விட்டு நீங்கள் போகும் முதல்

கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதார்களே போகவேண்டாம்.

அழிவுக்கு துணை போகவேண்டாம்.

எங்கள் எல்லோரையும் அழிக்கப்போகின்றான் என.

எங்கள் கைகளைக்கட்டிவிட்டு

அழிவுக்கு தோள் கொடுத்து

முதுகால் அழித்துவிட்டு...........

அதுக்கும் மக்கள் பணத்தில் கூட்டம் போட்டு அறிக்கை விடுகிறார்கள்.

இந்த வாழ்க்கைக்கு நாக்கை புடுங்கிக்கொண்டு சாகலாம்...........

இதற்கு பரிகாரமாக எதையும் செய்யவேண்டாம்

ஐனநாயக முறைப்படி ஒரு தேர்தல்

நீங்கள் எப்படி வாழப்போகின்றீர்கள் என.

அதையாவது செய்வீர்களா???

Edited by விசுகு

  • Replies 83
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

bankemoon-seithy-20121017-150.jpg

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்பினை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளார். பிரித்தானியாவின் சார்ள்ஸ் பெற்றியினால் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டது.இந்த நிலையில் இது தொடர்பில் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தமது உள்ள குழு ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்புகளை சரிவர செயற்படுத்தவில்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.எதிர்வரும் காலங்களில் சர்வதேச மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை அற்றுப் போகாதிருக்க, போதிய அளவு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

என்ன விலை கொடுத்தேனும் விடுதலைப்புலிகளை ஒழிப்பது என இலங்கை அரசு திடமாக இருந்தது : ஜோன் ஹோம்ஸ்

2012-11-15 10:06:53

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது எத்தகைய விலையை கொடுத்தேனும் இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தேனும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது. அது மாத்திரமின்றி இத்திட்டத்தினை எவரும் தடுத்து விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இலங்கை அரசு செயற்பட்டது என்று ஐக்கிய நாடுகளின் மனித நேயப் பணிகளுக்கான முன்னாள் தலைவர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் கசிந்துள்ள நிலையிலேயே ஜோன் ஹோம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான விடயங்களை பகிரங்கப்படுத்தியிருந்தாலோ அல்லது அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவித்திருந்தாலோ மோதல்களை நிறுத்தியிருக்க முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்திருந்தாலும் கூட எந்தவித மாற்றத்தினையும் செய்திருக்க முடியாது.

மோதல் சம்பவத்தின்போது எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் எவருக்கும் உறுதியான தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேற்படி விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மீது மாத்திரமே முற்று முழுதான குற்றச்சாட்டுக்களை வைப்பதையும் ஏற்க முடியாது. ஆனாலும் இவ்விடயத்தில் சகல தரப்பினரும் குற்றம் இழைத்திருக்கின்றனர் என்பதை மட்டும் கூற முடியும்.

என்ன விலையை கொடுத்தாவது இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தாவது தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது. அது மாத்திரமின்றி இத்திட்டத்தினை எவரும் தடுத்து விட கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இலங்கை அரசு செயற்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் மாத்திரமின்றி தேறு எந்த சக்தியாலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. அத்துடன் இது ஒரு கடினமான விடயம் என்பதால் உலகின் எந்தவொரு சக்தியும் இதனைத் தடுப்பதற்கு முன்வரவில்லை. ஆகையால் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த நிலைமைக்கு ஐ.நா.தே முழுப் பொறுப்பு என்று கூறுவதை ஏற்க முடியாது. அந்த சந்தர்ப்பத்தில் மிகவும் சங்கடமான ஒரு நிலைமைக்கு முகம் கொடுக்க தேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

அத்தருணத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் எம்மால் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க முடியும். இல்லாவிட்டால் ஏற்றுக் கொள்ளவும் முடியும். ஆனாலும் நாம் தேறுவிதமாக செயற்பட்டிருந்தால் இலங்கை அரசும் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் என்று அறிக்கை கூறுவதையும் எம்மால் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

http://www.virakesar...al.php?vid=1629

இது முற்றிலும் உண்மையான விடயம் .இப்படி ஒன்று நடந்துவிடுமோ என்று அஞ்சித்தான் காலம் காலமாக பயங்கரவாத செயல்களை (கொலை கொலை கொலை ) நிற்பாட்டுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி எழுதி வந்தோம் ,கெடு குடி சொற்கேளாது .

யுத்தம் தொடங்கமுன்னரே அந்த யுத்தத்தை நியாய படுத்துவதற்கான ஏற்பாடுகளை உலகம் முழுக்க சிறிலங்கா அரசு தொடங்கிவிட்டிருந்தது .இவ்வளவு அழிவும் ஒருநாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ நடக்கவில்லை ,ஒரு வருடங்கள் நடந்த யுத்தம் .பொது மக்கள் அழிவுகளை தடுக்க விரும்பியிருந்தால் அதற்கு எத்தனையோ வசதிகள் இருந்தன ஆனால் அத்தனையும் புறம் தள்ளிவிட்டு கடைசிவரை நாங்கள் தான் வெல்லுவம் என்று நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலும் புலிகள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் .

அதைவிட கொடுமை உலகம் எங்கும் வீதியில் நின்று மக்களை காப்பற்ற சொல்லி எவனும் கத்தவில்லை புலிகளை அங்கீகரிக்க சொல்லி தலைவரின் படத்துடன் போய் நின்றார்கள் ,உலகம் திரும்பியும் பார்க்கவில்லை .இன்றும் அதே கதைதான் தொடருது இலங்கையில் ஒரு தீர்வு கிடைப்பதோ அல்லது அங்கு அல்லாடும் மக்கள் பற்றியோ எதுவித கரிசனையுமில்லை நாங்கள் செய்தது சரி செய்வதும் சரி என்று அடாவடித்தனமான சிந்தனயில் தான் அனைத்து போராட்டங்களும் தொடருது .

[size=4]சிந்திக்கவும்: ஐ.நா. என்று ஒரு அமைப்பு தேவையா? இதனால் யாருக்கு லாபம். சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, இவைகள் உலகில் வீட்டோ என்கிற சர்வாதிகார அதிகாரம் பெற்ற நாடுகள். இவர்கள் இந்த அதிகாரத்தை தங்களது வல்லாதிக்கத்தை பரவலாக்க பயன்படுத்துகிறார்களே தவிர மற்றபடி இந்த வீட்டோ அதிகாரத்தால் எந்த நன்மையையும் இல்லை.

வீட்டோ அதிகாரம் பெற்றவர்கள் உலக ரவுடிகள், தாதாக்கள் மற்ற நாடுகள் எல்லாம் இவர்களுக்கு அடிபணித்து நடக்க வேண்டும். இவர்கள் நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும் போர் தொடுப்பார்கள். இவர்களுக்கு வேண்டியவர்கள் போர் தொடுத்தால் வேடிக்கை பார்ப்பார்கள் வேண்டாதவர்கள் போர் தொடுத்தால் வீட்டோ அதிகாரத்தோடு ஓடி வருவார்கள். உலக ரவுடிகளுக்கு சேவகம் செய்யும் பொம்மைதான் இந்த ஐ.நா மன்றம்.[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111301

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலைகள் நடந்துகொண்டிருந்தபோது, இதே ஜோன் ஹோம்ஸ் தமிழர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களைப் பார்க்காமலே அழித்துவிடுவேன் என்று சொல்லியிருந்தவர்.

121113163833_sri_lanka_war_civilians_killed_304x171_humanrightswatch_nocredit.jpg

சிங்களவருக்கு ஆதரவு கொடுத்த தமிழர்கள் நேரடியானகவும், இந்தியாவிற்க்கு சேவகம் செய்த தமிழர்கள் மறைமுகமாகவும், இந்த மீழமுடியாத எம்மின அழிவிற்க்கு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்னும் உண்மை உறைக்கும் போது.. இது மாதிரி செய்திகளை பார்த்து வெதும்பத்தன் முடிகிறது....

இந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் ICCல் விசாரிக்கபடவேண்டியவர்.

[size=4]வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது எத்தகைய விலையை கொடுத்தேனும் இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தேனும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது.- [/size][size=4]இதை அவர் ஐ.நாவுக்கு அறிவித்தாரா?[/size]

[size=4]வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான விடயங்களை பகிரங்கப்படுத்தியிருந்தாலோ அல்லது அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவித்திருந்தாலோ மோதல்களை நிறுத்தியிருக்க முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்திருந்தாலும் கூட எந்தவித மாற்றத்தினையும் செய்திருக்க முடியாது. - [/size][size=4]இலங்கை மாறுமோ இல்லையோ ஐ.நா வெளியே அறிவிக்காத்து இந்த அதிகாரியின் குற்றம். அதாவது தான் வேண்டுமென்றேதான் விபரங்களை மறைத்தேன் என்கிறார்.[/size]

[size=4]மோதல் சம்பவத்தின்போது எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் எவருக்கும் உறுதியான தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. [/size][size=4]- ஐ நா உண்மையை கண்டு பிடிக்க உதவ போகிறாரா அல்லது இலங்கையை காப்பாற்ற இன்னமும் தொடந்து மறுப்புக்களில் ஈடுபட போகிறாரா. ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று நினத்து இவர் எப்படி இலங்கையின் கொலைகளுக்கு உதவ முடியும்?[/size]

[size=4]மேற்படி விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மீது மாத்திரமே முற்று முழுதான குற்றச்சாட்டுக்களை வைப்பதையும் ஏற்க முடியாது. ஆனாலும் இவ்விடயத்தில் சகல தரப்பினரும் குற்றம் இழைத்திருக்கின்றனர் என்பதை மட்டும் கூற முடியும். - [/size][size=4]குற்றம் இழைப்போரை தெரிந்த்திருவர் அவற்றை ஐ.நா வில் ஆவணப்படுத்தியிருக்கிறாரா? இல்லை இது வரையில் அவற்றை வெளிவிட என்ன தங்களால் பொறுத்து இருக்கிறார்?[/size]

[size=4]என்ன விலையை கொடுத்தாவது இல்லாவிட்டால் பொது மக்களை பலி கொடுத்தாவது தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவில் இலங்கை அரசு திடமாகதே இருந்தது. அது மாத்திரமின்றி இத்திட்டத்தினை எவரும் தடுத்து விட கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இலங்கை அரசு செயற்பட்டது. - [/size][size=4]இதை அவர் வந்த முடிவுக்கான சம்பவங்களை, அவரின் நாட் குறிப்பை உடனே ஐ.நா விடன் கையளிக்க வேண்டும். இவர் இலங்கைக்கு எதிராக களத்து அதிகாரிகள் மாதிரி புத்தகம் எழுத தன் நேரத்தை செல்விட வேண்டும் என்று நாம் எதிர் பார்க்கவில்லை. நேரம் தாமதிக்காமல் ஐ.நாவில் கூட்டத்தை கூட்டி தான் அறிந்தவற்றை வெளியிட வேண்டும். [/size]

[size=4]இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் மாத்திரமின்றி தேறு எந்த சக்தியாலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டது. அத்துடன் இது ஒரு கடினமான விடயம் என்பதால் உலகின் எந்தவொரு சக்தியும் இதனைத் தடுப்பதற்கு முன்வரவில்லை. - [/size][size=4]இந்த நிலைமை பற்றி பொது காரிய தரிசிக்கு இவர் தெரியப்படுத்தினாரா?. பொது காரியதரிசி மாற்று உத்திகள் பற்றி இவரிடம் பேசினாரா அல்லது இவருக்கு நிலைமைகளை சரிசெய்யதக்க ஆலோசனை குழு அமைக்க முயற்சித்தாரா?[/size]

[size=4]ஆகையால் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்த நிலைமைக்கு ஐ.நா.தே முழுப் பொறுப்பு என்று கூறுவதை ஏற்க முடியாது. - இவர் ஐ.நாவுடன் சேர்ந்து பொறுப்பு ஏர்கவேண்டியவர்களின் நாடு, பெயர், விபரங்களை உடனே வெளியிடவேண்டும்.[/size]

[size=4]ஆனாலும் நாம் தேறுவிதமாக செயற்பட்டிருந்தால் இலங்கை அரசும் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் என்று அறிக்கை கூறுவதையும் எம்மால் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். - இலங்கையின் முடிவுகளை இலங்கைக்காக தான் எடுத்தேன் என்பது போல பேசுவது பொறுப்பற்ற தன்மை. இவர் செயல் நேரம் பொறுப்பை மறுத்திருப்பத்தால் இவரின் சம்பளப்பணம் மீளபெற்றப்பட்வேண்டும். [/size]

Edited by மல்லையூரான்

121113163833_sri_lanka_war_civilians_killed_304x171_humanrightswatch_nocredit.jpg

சிங்களவருக்கு ஆதரவு கொடுத்த தமிழர்கள் நேரடியானகவும், இந்தியாவிற்க்கு சேவகம் செய்த தமிழர்கள் மறைமுகமாகவும், இந்த மீழமுடியாத எம்மின அழிவிற்க்கு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்னும் உண்மை உறைக்கும் போது.. இது மாதிரி செய்திகளை பார்த்து வெதும்பத்தன் முடிகிறது....

பி கு.. எமது சுதந்திரப்போரின் போது ஜனநாயகம் வேண்டும் என‌ நிண்டோரும், எப்படி எண்டு தெரியாது ஆனால் சமாதானம் வேண்டும் என இருந்தவர்களும்.. இந்த கொடூரத்துக்கு துனை கொடுத்த தூன்கள் எண்டால் மிகையாகாது...

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களை யுத்த பிரதேசத்தில் இடுந்து வெளியேற்ற இலஞ்சம் மற்றும் உல்லாசமாக இருப்பதற்கு பெண்கள் மற்றும் இலவச விடுமுறை ஏற்பாடுகள் கூட இலங்கை அரசால் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]சர்வதேச மூன்றாம் தர விசாரணையை கோரும் இலங்கை தமிழ் கட்சி [/size]

[size=6]Tamils demand foreign probe after Sri Lanka war report[/size]

[size=5]"Now that the UN has come with this report we want action," party spokesman M. A. Sumanthiran said.[/size]

[size=5]"There should be an international inquiry. The government as the main accused party cannot be involved in the investigation."

Sri Lanka has resisted previous calls for an independent probe and instead appointed a domestic commission to recommend measures to prevent Sri Lanka from slipping back into ethnic war.

"We would like to see reparations, restitution and justice for the people who suffered," Sumanthiran said.

"No one can say that these allegations should not be investigated."[/size]

http://www.ndtv.com/article/world/tamils-demand-foreign-probe-after-sri-lanka-war-report-292827

[size=5]தான் முதலில் விட்ட பிழைகளை இலங்கையில் திருத்தும் இரண்டாம் சந்தர்ப்பம் ஐ.நா.வுக்கு உள்ளது [/size]

[size=6]UN has a second chance to right wrongs on Sri Lanka[/size]

[size=5]THERE is little doubt that in 2009 the government of Sri Lanka pulled off one of the nastiest episodes of mass killing since the Rwandan genocide - and got away with it. Tens of thousands of civilians were massacred, with barely a trickle of Syria-like imagery emerging from the battle zone.[/size]

[size=5]In a new report released in New York, the UN has shouldered its portion of responsibility for this bloody catastrophe. It is a heavy burden indeed.[/size]

http://www.theaustralian.com.au/opinion/world-commentary/un-has-a-second-chance-to-right-wrongs-on-sri-lanka/story-e6frg6ux-1226517687166

  • கருத்துக்கள உறவுகள்

இதே வேலை அறிக்கையின் பல பகுதிகள் கருப்பு மையினால் அழிக்க பட்டிருக்காம்

[size=4]சிந்திக்கவும்: ஐ.நா. என்று ஒரு அமைப்பு தேவையா? இதனால் யாருக்கு லாபம். சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, இவைகள் உலகில் வீட்டோ என்கிற சர்வாதிகார அதிகாரம் பெற்ற நாடுகள். இவர்கள் இந்த அதிகாரத்தை தங்களது வல்லாதிக்கத்தை பரவலாக்க பயன்படுத்துகிறார்களே தவிர மற்றபடி இந்த வீட்டோ அதிகாரத்தால் எந்த நன்மையையும் இல்லை.

வீட்டோ அதிகாரம் பெற்றவர்கள் உலக ரவுடிகள், தாதாக்கள் மற்ற நாடுகள் எல்லாம் இவர்களுக்கு அடிபணித்து நடக்க வேண்டும். இவர்கள் நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும் போர் தொடுப்பார்கள். இவர்களுக்கு வேண்டியவர்கள் போர் தொடுத்தால் வேடிக்கை பார்ப்பார்கள் வேண்டாதவர்கள் போர் தொடுத்தால் வீட்டோ அதிகாரத்தோடு ஓடி வருவார்கள். உலக ரவுடிகளுக்கு சேவகம் செய்யும் பொம்மைதான் இந்த ஐ.நா மன்றம்.[/size]

http://www.yarl.com/...howtopic=111301

ஐ.நா என்ற அமைப்பு தேவையில்லை என்று நாம் கூறி எதுவும் நடக்க போவதில்லை. ஐ.நா எமது பிரச்சினையில் தலையிடுவதும் அதற்கு ஆதரவாக உலக நாடுகள் நடப்பதும் தவிர்க்க முடியாதது.

ஆனால் அமெரிக்கா எல்லா நேரமும் ஐ.நா வின் பதிலை பார்த்துக்கொண்டிருப்பதில்லை. தமக்கு தேவை ஏற்படின் ஐ.நா வை மீறி தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கும். அமெரிக்காவின் ஆதரவு கூட தனிப்பட்ட முறையில் எமக்கு இல்லை. :( எண்ணெய் வளம் எமது நாட்டில் இருந்திருந்தால் ஏற்கனவே ஐ. நாவை மீறி அமெரிக்கா எமது நாட்டு பிரச்சினையில் தலையிட்டிருக்கும். :(

இது ஐ.நாவின் அரசியல் சாரா அதிகாரிகளின் அறிக்கை. இதில் சீன, ருசிய எதிர்ப்பு இல்லை. எனவே, கூட்டமைப்பு, (தமிழ் நாட்டு, ஈழ, இலங்கை) கம்யூனிஸ்கட்சிகள், சீனா-ரூஸ்சியாவை எம்மீது அக்கறை கொள்ள வைக்க முடியும் என்று நப்புவோர் ஆகியோர் ஒன்று சேர்ந்து இப்பொது தமிழ் மக்களுக்கு சேவையாற்ற நல்ல சந்தர்ப்பம். இவர்கள் இந்த அறிக்கையின்பால் இரு நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து, பாதுகாப்பு சபையில் இலங்கைமீது ICC விசாரணை நடத்த தேவையான பிரேரணைகளை கொண்டுவர உதவும் படி அழுத்த வேண்டும். இவர்களிடன் நேரடி தொடர்ப் இல்லாத எம்மை போன்ற யாழ் உறுப்பினர்கள், சீனா-ரூசியாவின் கவனத்தில் இந்த அறிக்கைபட இவர்களின் ராஜதந்திர அலுவலகங்களுக்கு மின்னல் அஞ்சல் அனுப்ப வேண்டும்.

அகுத்தாவுக்கு தேவையான சீனா, ருசியா அலுவலக தொடர்புகளை எடுத்துத்தர முடியுமாயின் நாம் மின்னல் அஞ்சல்கள் அனுப்பி வைக்கலாம். எமது நோக்கம் புதிய அறிக்கையில் தெளிவாக்கியிருப்பதன் படி, இலங்கை விசாரணை செய்யும் அங்கத்தவர்களை மிரட்டி தனது பக்கம் தீர்ப்புகளை கொண்டு செல்லாமல் இருப்பதற்கு, சர்வதேச விசாரணை ஒன்றுக்கு உதவும் படி அவர்களை கேட்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது முற்றிலும் உண்மையான விடயம் .இப்படி ஒன்று நடந்துவிடுமோ என்று அஞ்சித்தான் காலம் காலமாக பயங்கரவாத செயல்களை (கொலை கொலை கொலை ) நிற்பாட்டுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி எழுதி வந்தோம் ,கெடு குடி சொற்கேளாது .

யுத்தம் தொடங்கமுன்னரே அந்த யுத்தத்தை நியாய படுத்துவதற்கான ஏற்பாடுகளை உலகம் முழுக்க சிறிலங்கா அரசு தொடங்கிவிட்டிருந்தது .இவ்வளவு அழிவும் ஒருநாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ நடக்கவில்லை ,ஒரு வருடங்கள் நடந்த யுத்தம் .பொது மக்கள் அழிவுகளை தடுக்க விரும்பியிருந்தால் அதற்கு எத்தனையோ வசதிகள் இருந்தன ஆனால் அத்தனையும் புறம் தள்ளிவிட்டு கடைசிவரை நாங்கள் தான் வெல்லுவம் என்று நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலும் புலிகள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் .

அதைவிட கொடுமை உலகம் எங்கும் வீதியில் நின்று மக்களை காப்பற்ற சொல்லி எவனும் கத்தவில்லை புலிகளை அங்கீகரிக்க சொல்லி தலைவரின் படத்துடன் போய் நின்றார்கள் ,உலகம் திரும்பியும் பார்க்கவில்லை .இன்றும் அதே கதைதான் தொடருது இலங்கையில் ஒரு தீர்வு கிடைப்பதோ அல்லது அங்கு அல்லாடும் மக்கள் பற்றியோ எதுவித கரிசனையுமில்லை நாங்கள் செய்தது சரி செய்வதும் சரி என்று அடாவடித்தனமான சிந்தனயில் தான் அனைத்து போராட்டங்களும் தொடருது .

100% படித்த மேற்கத்தையவர்களுக்கு மேற்கூறிய பதாகைகளில் சொல்வது விளங்கவில்லை என்று நீங்கள் யாருக்கு பூ சுத்துகிறீர்கள்?? ஒரு ஊர்வலமோ பிரச்சாரமோ செய்யாத சிரியாவில் உள்ள கரிசனை ஏன் தமிழ் மக்கள் மீது ஏற்படவில்லை என யோசித்திர்களா? அரசு பிழை விட்டதோ பிரபாகரன் பிழை விட்டதோ என்பது இரண்டாம் பட்சம். 9/11 ல் அமெரிக்காவுக்கு அடித்தவுடன் ஐ.நாவின் படையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப முடிகிறது. லிபிய மக்களை காப்பாற்ற பின்புலத்தில் ஆயுதங்கள் கொடுக்க முடிகிறது. ஆனால் வன்னி மக்களை காப்பாற்ற மட்டும் இதோ கப்பல் வருகிறது என படம் காட்டத்தான் முடிந்ததா?

புலிகள் தான் பிழை விட்டார்கள் எனும் குறுகிய, கருகிய மனநிலையில் நிற்காமல் உலக மக்களுக்கு உதவும் நிறுவனமாக இருக்கும் ஐ.நா வின் பாரபட்சத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் சுயநலத்தையும் சுட்டிக்காட்ட முனையுங்கள்.சொந்த மக்களுக்கு உலகம் செய்த அநியாயங்களை கேட்க முயலுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/VgLpT2s64cI

http://youtu.be/fIxR2J4KbMg

சரி தமிழர் வீதியில் நின்று போராடியது தான் மேற்குலகுக்கு விளங்கவில்லை என்றால் MIA சொன்னது கூடவா விளங்கவில்லை.

இன்றும் அதே கதைதான் தொடருது இலங்கையில் ஒரு தீர்வு கிடைப்பதோ அல்லது அங்கு அல்லாடும் மக்கள் பற்றியோ எதுவித கரிசனையுமில்லை நாங்கள் செய்தது சரி செய்வதும் சரி என்று அடாவடித்தனமான சிந்தனயில் தான் அனைத்து போராட்டங்களும் தொடருது .

இதேகதைகளைத்தான் நம்பியார், கொம்ஸ், பூனே வரைக்கும் பேசி புலிகளை அரக்கர்களாக காட்டி இலங்கை கொடுத்த பணத்துக்காக உழைத்தவர்கள்.

ஒரு தடவை ஒரு வேலைக்கு மட்டும், இலங்கை 50,000 யூரொ வரை கொடுக்கிறது. நம்ம எலிப்புழுக்கை சும்மா காயுது.

621269_474745065909772_1875196084_o.jpg

[size=4]கையெழுத்து போடுவதால் இல்லை கடிதங்கள் எழுதுவதால் என்ன பயன் ? என பொதுவாக நாம் கேட்பதுண்டு. [/size]

[size=1]

[size=4]இந்த அறிக்கையை வெளியில் விட கேட்டும் நாம் கையெழுத்து / கடித வேட்டைகள் செய்தோம். எனவே எமது பரப்புரைக்கு கிடைத்த வெற்றியாக எண்ணி அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

d_2098-01.jpg

ஐநாவாவது கொய்னாவாவது..? ஒரு சோப்பு போட கோஸ்றியலுக்கு கைவலிக்க 4 திரி வரைக்கும் நீட்டித்த கள உறவுகளை நினைத்தால் ரொம்ப வேதனையா கிடக்கு... <_< <_<

டிஸ்கி:

போகட்டும் சிங்களத்தின்ட எதிர்வினைய பார்ப்பம்..

30 வருட கால பயங்கரவாதத்தினை முறியடித்து உலக நாடுகளுக்கெல்லாம் முன்னுதரணமாக இருக்கும் எமது நாட்டை எதிர்த்து பல புலம் பெயர் புலி பயங்கரவாதிகளுக்கும் அவர் அதரவாளர்களுக்கும் ஐநா செவி சாய்த்து விட்டதற் போலவே எமது இலங்கையர் கருதுகிறார்கள்..பயங்கரவாதத்தினை முறியடித்து நாட்டை அபிவிருத்தி பணியில் சென்று கொண்டு இருப்பதை சகிக்க முடியாத புலி ஆதரவாளர்களின் பிடிக்குள் ஐ.நா சபை வந்து விட்டதையே இதை காட்டுகிறது..ஆயினினும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முறியடிக்க எமது மக்கள் தயாராக உள்ளனர்.. ஐநா உட்பட ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் எமது

220px-A._gigantea_Aldabra_Giant_Tortoise.jpg

நாடு சுதந்திரமான இறை ஆமை உள்ள நாடு இதில் வெளி சக்திகள் தலையிட முடியாது (அது எந்த ஆமை என்று தெரிந்தால் நானே அடித்து தின்று போடுவன்)

இப்படிக்கு ...

விமல் வீர(கோவண) வம்ச.. :lol: :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கொடி படுகொலை சூத்திரதாரி நம்பியார் பற்றி ஐ.நா.அறிக்கையில் இல்லை

Published on November 15, 2012-5:20 pm · No Comments

ஐநா உள்ளக அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் பற்றி எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. இது தொடர்பில், இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் பான் கீ மூனின் பேச்சாளர் நழுவியுள்ளார்.

சிறிலங்காவில், போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது ஐநா பொதுச் செயலாளரின் பிரதிநிதியாக சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார் ஆவார்.

போரின் முடிவில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டது தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் அவர் முக்கியப் பங்கு வகித்திருந்தார். ஆனால், விஜய் நம்பியாரின் உத்தரவாதத்தின் பேரில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் பலர், படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுடன் கூட வந்த குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் அச்சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குத் துணைபோனதாக விஜய் நம்பியார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், ஐநா உள்ளக அறிக்கையின் அவர் தொடர்பிலான குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.

விடுதலைப்புலிகளின் தளபதிகளையும் அரசியல் பிரிவு தலைவர்களையும் சரணடையுமாறு கூறி அவர்களை படுகொலை செய்த சூழ்ச்சியில் விஜய் நம்பியார் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு ஆகியோருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்னர் சிற்றி பிரஸ் விஜய் நம்பியார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, அக்குற்றச்சாட்டு இந்த அறிக்கையில் இடம்பெறாமை பற்றி ஐநா பொதுச் செயலாளரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் கேள்வி எழுப்பியிருந்தது. ஆனால், அவரோ இதுபற்றி இன்னொரு சந்திப்பில் பதிலளிப்பதாகக் கூறி நழுவியுள்ளார். இதேவேளை, நேற்று இடம்பெற்ற உள்ளக அறிக்கை கையளிப்பு நிகழ்வில் விஜய் நம்பியார் பங்குபற்றவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.thinakkathir.com/?p=43471

ஐ.நா வின் வரலாற்றை எடுத்துப்பார்த்தா தெரியும் என்னத்தை வெட்டி கிழித்தவர்கள் என்று .ஏன் வரலாறு எமது கண் முன்பே நடந்த அநியாயங்கள் எத்தனை எத்தனை ,ஐ ,நா கை கட்டிக்கொண்டு நின்று வேடிக்கை பார்த்ததுதான் அனைத்தும் .(ருவாண்டா ,போஸ்னிய ,ஈராக், பட்டியல் வெகு நீளம் )

இவர்கள் வந்து எங்களை காப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயா புலிகள் போரை தொடங்கினார்கள் ?.மற்றவன் பிடித்துவிடுவான் என்ற நம்பிக்கையில் நான் அடிபிடிக்கு இறங்கலாமா ?

இப்போ வரும் அறிக்கை ஐ .நா சொல்ல முதல் நாம் அறிந்ததுதானே .

இப்ப ஏன் வருகின்றது .போரை முடித்து ஏதாவது தீர்வை கொடுக்கும் என்று உலகம் எதிர்பார்த்தது .சிறிலங்கா கேட்பதாக இல்லை .இனி இப்படியான அறிக்கைகள் மூலம் அடக்க பார்ப்பார்கள் ,அடுத்து சில தடைகளை கொண்டுவருவார்கள் .அதற்கும் சிங்களம் முரண்டுபிடித்தால் தான் அடுத்து நாம் கேட்கும் இன அழிப்பு ,போர் குற்றம் எல்லாம் .

"எல்லாம் எல்லாருக்கும் தெரியும் அதை புரிந்துகொள்ளுங்கள் "

[size=4]"எமது ஆயுதப்போராட்டம் சாதிக்கவேண்டியதை 2002 இல் சாதித்து விட்டது" - திருமுருகன்.

'முழு சிங்கள ஆயுத இராணுவத்தை அழுத்தாலும் எம்மை ஒரு நாடாக உலகம் அங்கீகரித்து இருக்காது" - திருமுருகன்[/size]

[size=4]"2009 ஆம் சமாதான பேச்சு வார்த்தை இருந்திருக்காவிட்டால் முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்திருக்காது" - திருமுருகன் [/size]

[size=4]'உலக மயமாக்கல் என்பதில் பேச்சுவார்த்தை என்பது போராடும் இனங்களை நசுக்கும் ஆயுதம்" - திருமுருகன்[/size]

http://www.yarl.com/...howtopic=111341

Edited by akootha

[size=4]எமது அகிம்சை போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியது ஒரு வரலாற்று நிகழ்வு. காரணம், அதுவரை நடந்து வந்த படுகொலைகள், இனவழிப்பு கொள்கைகள். [/size]

[size=1]

[size=4]வெற்றிகரமாக ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேச்சுவார்த்தை என்ற சமநிலை வரை வந்து வென்று நின்றது. நியாயமான கௌரவமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிங்களமும் சர்வதேசமும் அதை எம்மை எமது மக்களை அழிக்கும் நகர்வாக கொண்டனர். [/size][/size]

[size=1]

[size=4]இன்றுவரை ஐ.நா. தொடக்கம் உலக தலைநகரங்கள் எல்லாம் எமது மக்களின் பிரச்சனை பிரஸ்தாபிக்கப்படுகின்றது என்றால், அதற்கும் அந்த முள்ளிவாய்க்காலும் ஆயுதப்போராட்டமும் தான் காரணம். இதுவரை எமது மக்கள் போராட்டம் ஓயாமல் உள்ளது என்றால் அதற்கும் அந்த முள்ளிவாய்க்காலும் ஆயுதப்போராட்டமும் தான் காரணம். அவைகள் இருந்திருக்காவிட்டால் இதை எழுத நானும் இருந்திருக்க மாட்டேன். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.