Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டன்றி வேறில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்[/size]

[size=3]தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்[/size]

[size=3]பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்[/size]

[size=3]கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்[/size]

kaathalar+1.jpg

[size=3]குனிந்தோடியவள் குறுக்கே அவள் தந்தை வர[/size]

[size=3]தனித்தே நடந்தாள் மயிலொத்த மென் நடையாள்[/size]

[size=3]இனித்தே மகளை நோக்கி இன்முறுவல் புரிந்த தந்தை[/size]

[size=3]கனித்தேனே இவ்விடம் நும்பணி என்னென்றார்[/size]

love+1.jpg[size=3]அன்னை இவ்விடம் ஏவினாள் என்னை என[/size]

[size=3]கண்ணை சிமிட்டி கதை எதோ கூறி மகள்[/size]

[size=3]பெண்மை நாணம் காட்டி பேதை மீண்டும்[/size]

[size=3]தன்னை உள் மறைத்து தையல் மீண்டும் மறைந்தாள்[/size]

[size=3]தந்தைக்கு தாயிற்கு உற்றதுக்கு மறைத்த காதல்[/size]

[size=3]எந்தை நீ என்றாள் என்னவனே மன்னவனே என்றாள்[/size]

pen.jpg[size=3]முந்தை வினை நான் உன்னை கண்டது என்றும்[/size]

[size=3]கந்தையான என் வாழ்வை களிப்பிக்க வந்தவன் நீ என்றாள்[/size]

[size=3]சித்திரமே சிறு பெண்ணே சிங்காரக் கண்ணே[/size]

[size=3]எத்திறமும் கொண்டவளே என்னை நெஞ்சில் சுமந்தவளே[/size]

[size=3]நித்திரை கொள்ள விடாது என்னில் நீக்கமற நிற்பவளே[/size]

pechchu.jpg[size=3]உத்தரத்தெழும் மூச்சு காற்றனவளே என்றான் அவன்[/size]

[size=3]கற்பனையில் பிறந்த காதல் கண்கள் வழி நுழைந்த காதல்[/size]

[size=3]தற்பெருமை கொள்ளாக் காதல் தரணிக்கு தெரியாக் காதல்[/size]

[size=3]சிற்றின்ப ஆசை இல்லாக் காதல் சிறுக சிறுக வெளியே வந்தது[/size]

[size=3]உற்பத்தி ஆனது உபத்திரவம் உலகக் கண்கள் ஊடுருவியதாலே[/size]

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg[size=3]எத்தனை கண் கொண்டு பார்த்தாலும் ஏந்திழை யிவள்[/size]

[size=3]பத்தரை மாற்று பசும்தங்கம் தான் மாசொன்றும் இல்லை[/size]

[size=3]சித்தத்தை குளிர்விக்கும் அழகு சிந்தையில் நிர்பாளிவள்[/size]

[size=3]இத்தனை இருந்து என்ன இவளோர் கீழ்சாதியாம்.[/size]

[size=3]வெண் சீர் பற்கள் கண் சீர் அழகுள்ளாள்[/size]

[size=3]பண் சேர் பேச்சுள்ளாள் பகட்டேதும் இல்லாதாள்[/size]

images+%25281%2529pechchu.jpg[size=3]மண் பார்த்த நடைகொண்டாள் மங்கைக்குள் அரசொத்தாள்[/size]

[size=3]விண் சேர் தேவரெல்லாம் வியந்து பார்க்கும் வித்தகிதான்[/size]

[size=3]அற்புதப் பெருமைகள் அத்தனையும் தன்னகத்தே கொண்டவள்[/size]

[size=3]நற் பண்புகளின் உறைவிடம் என்றேநன் றானவள்[/size]

[size=3]சிற்பத்தை ஒத்தநிலை யழகு நிறைந்தே உள்ளவள் - இவள்[/size]

[size=3]உற்பத்தி ஆனது தான் ஊர் ஒதுக்கும் சாதியாம்[/size]

[size=3]ஊரவர் பார்த்தாதால் காதல் உருவாகியது புயலாக[/size]

[size=3]பாரவர் பார்த்ததால் காதல் பயப்படத்தான் செய்தது[/size]

[size=3]சீராக சென்ற காதலை சிதைக்க சிலர் வந்தனர்[/size]

makan.jpg[size=3]சேராது சேர விடோமென்று செகத்தினில் கூறி நின்றனர்[/size]

[size=3]தனயனின் வீடு சேர்ந்து தந்தையைக் கலந்து அங்கே[/size]

[size=3]தினமொரு வகையாக் கூறி சீற்றத்தைத் தீயாய் மூட்டி[/size]

[size=3]தனத்தினை அழித் தாயினும் தையலை அழிக்க வேணுமென்று[/size]

saathi.jpg[size=3]மனமதை உருவாய் ஏற்றினர் மக்கட் பண்பிலாதார்[/size]

[size=3]தந்தையின் மன மறிந்த தனையனும் வெகுண் டெழுந்து[/size]

[size=3]எந்தையே இங்கே இருப்பது இரு சாதியே[/size]

[size=3]மந்தையைப் போல இங்கே மதிகேட்டவர் வந்து[/size]

[size=3]முந்தைத் தவமதழிக்க உரைத்தனர் கேளாதீர் என்றான்[/size]

[size=3]பெண்களில் நல்லாள் அவள் பேதையை விரும்பினேன்[/size]

narasinkam.jpg[size=3]கண்களைப் போல அவளைக் காப்பதாய் வாக்குரைத்தேன்[/size]

[size=3]எண்களில் அடங்காது எந்தன் ஏந்திழையாள் பெருமைசொல்ல[/size]

[size=3]எண்ணங்களில் அவளே என்னுள் ஏகமாய் நிறைந்துமுள்ளாள்[/size]

[size=3]சாதி என்ற ஒன்று இங்கே சதிராடி எமைப் பிரித்தல்[/size]

[size=3]நீதி இல்லை நிம்மதியுமில்லை உங்களுக்கும் எங்களுக்கும்[/size]

[size=3]ஆதியான இறைவன் அளித்தது ஆண்பெண்சாதி இரண்டுமே[/size]

[size=3]ஓதி உங்களை உருவேற்றினார் ஓரம் போங்க ளேன்றான்[/size]

[size=3]மகன் எவ்வளவுதான் மதியுரை பகர்ந்த போதிலும்[/size]

[size=3]அகம் முழுவதும் அடுக்கினர் மொழி கேட்டதால்[/size]

[size=3]முகம் மலராது சிந்தையில் சினம் கொண்டு தீப்பறக்க[/size]

[size=3]நகம் கொண்டுடல் கிழித்த நரசிங்க மொத்தான்[/size]

[size=3]இங்கு மட்டு மல்ல அங்கும் அதே தான்[/size]

[size=3]சங் கறுப்பேன் என்று கண்கள் குருதி யொக்க[/size]

[size=3]பொங்கிய சினத்தோடு பேதையை அடித்த தந்தை[/size]

[size=3]அங்கவள் தாயையும் ஆக்கினைகள் செய்தார்[/size]

[size=3]இப்படி ஆனது இவர்கள் காதல் கதை[/size]

[size=3]எப்படி நாங்கள் இங்கே வாழ்ந்திடல் கூடுமென்றே[/size]

[size=3]செப்படி வித்தை செய்யும் செகத்தினில் இருந்துநாமும்[/size]

[size=3]இப்படி என்னுமுன்னே மறைந்திடலே தகுமென்றாய்ந்தனர்[/size]

burn.jpg[size=3]தகுமேன் றாய்ந்து தமக்குள்ளே தனித்தொரு முடிவு கண்டு[/size]

[size=3]வேகு மிந்த உடல் மட்டுமே கொண்டது சாதி[/size]

[size=3]ஆகுமோ அது வந்தெம் ஆருயிர் ஆத்மா பிரித்திடலென்றே[/size]

[size=3]ஆகுதியாக்கினர் தம்முடல் இருவரும் தீக்குள்ளே[/size]

pei.jpg

[size=3]தீயினில் இருவரும் கருகிய பின்னரே வந்தனர்[/size]

[size=3]வாயிலும் தலையிலுமடித்தே புலம்பினர் பெற்றோ ருற்றோர்[/size]

[size=3]ஆயினும் அன்னவர் இருவர் மீண்டுதான் வருவாரோ யில்லையே[/size]

[size=3]உயிரது போனபின் தான் உருவாகியதோ இந்தவறிவு[/size]

[size=3]செகத்தினில் இருந்து சாதிய மொழியட்டும்[/size]

[size=3]அகத்தினில் இருந்து அன்புமலர் மலரட்டும்[/size]

[size=3]முகத்தினில் இருந்து முறுவல் தானரும்பட்டும்[/size]

[size=3]தேகத்தினால் இருந்து சாதிப்பேய் தொலைந்தே போகட்டும்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வல்வையூரான்!

சின்ன ஒரு அறிமுகம், தாருங்களேன்! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நான் ஒரு அறிவிப்பாளர். தமிழில் சற்று பற்று அதிகம். ஏதோ சில கிறுக்கல்களை கிறுக்கி இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் குடும்பம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வல்வையூரான்!

சின்ன ஒரு அறிமுகம், தாருங்களேன்! :o

என்னை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நான் ஒரு அறிவிப்பாளர். தமிழில் சற்று பற்று அதிகம். ஏதோ சில கிறுக்கல்களை கிறுக்கி இருக்கிறேன்.

அறிவிப்பாளர் என்றால்... வானொலி அறிவிப்பாளரா, மேடைநிகழ்ச்சி அறிவிப்பாளரா?

வழமையாக அறிவிப்பாளர் தான்... மற்ற‌வர்களை பேட்டி எடுப்பார்கள்.

சற்று வித்தியாசமாக... நாம் உங்களை பேட்டி எடுக்கப் போகின்றோம் :lol::D:icon_idea:

ஸ்ரார்ட் மியூசிக்....smiley-music021.gif

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் யாழ் குடும்பம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது :D

நன்றிகள் சுந்தல் வரவேற்புக்கு.

அறிவிப்பாளர் என்றால்... வானொலி அறிவிப்பாளரா, மேடைநிகழ்ச்சி அறிவிப்பாளரா?

வழமையாக அறிவிப்பாளர் தான்... மற்ற‌வர்களை பேட்டி எடுப்பார்கள்.

சற்று வித்தியாசமாக... நாம் உங்களை பேட்டி எடுக்கப் போகின்றோம் :lol::D:icon_idea:

ஸ்ரார்ட் மியூசிக்....smiley-music021.gif

நான் ஒரு வானொலி மற்றும் தொலைக்க்காட்சி அறிவிப்பாளர் தமிழ் சிறி

வணக்கம் வல்வையூரான். வாருங்கள். தாங்கள் ஒரு அறிவிப்பாளர் என்பதால், தங்களை இனம் காட்டலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்வையூரான்,

வருக .... வருகவென வரவேற்கின்றோம். :)

நல்வரவு வல்வையூரான் .............

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையூறான் நீங்கள் எந்த ஊர் வானலையில் இருக்கிறீகள் :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ வல்வை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ.. :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நான் ஒரு அறிவிப்பாளர். தமிழில் சற்று பற்று அதிகம். ஏதோ சில கிறுக்கல்களை கிறுக்கி இருக்கிறேன்.

வணக்கம் வாங்கோ வாங்கோ.

தன்னடக்கமாய் மலர்ந்த உங்கள் அறிமுகம்............ மேலும் அறியும் ஆவலுடன்.

உங்களின் கவிதை வளம் அழகாய் இருக்கிறது.

வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை

நன்றிகள் வந்தியத்தேவன்.

வணக்கம் வல்வையூரான். வாருங்கள். தாங்கள் ஒரு அறிவிப்பாளர் என்பதால், தங்களை இனம் காட்டலாமே?

வணக்கம் Eas. நன்றிகள் உங்கள் வரவேற்பிற்கு. என்னை இனங்காட்ட என் ஒப்பத்தின் கீழ் உள்ள இணைப்புக்களைச் சொடுக்கலாமே.

வணக்கம் வல்வையூரான்,

வருக .... வருகவென வரவேற்கின்றோம். :)

வணக்கம் தமிழரசு. நன்றிகள் உங்கள் வரவேற்பில உளம் குளிர்ந்தேன்.

நல்வரவு வல்வையூரான் .............

நன்றிகள் தமிழ்சூரியன்.

வல்வையூறான் நீங்கள் எந்த ஊர் வானலையில் இருக்கிறீகள் :D

நான் தமிழ்த்தாய் வானொலியில் (ttrlive) இருக்கின்றேன்.

வணக்கம் வாங்கோ

வணக்கம் நந்தன். நன்றிகள் உங்கள் அழைப்புக்கு.

வணக்கம் வாங்கோ வல்வை

வணக்கம். நன்றிகள் உங்கள் வரவேற்பிற்கு வரணியான்.

வணக்கம் வாங்கோ.. :)

வணக்கம் ஜீவா. வரவேற்பிற்கு நன்றிகள்.

வணக்கம் வாங்கோ வாங்கோ.

தன்னடக்கமாய் மலர்ந்த உங்கள் அறிமுகம்............ மேலும் அறியும் ஆவலுடன்.

உங்களின் கவிதை வளம் அழகாய் இருக்கிறது.

வாழ்த்துகள்.

வணக்கம் கறுப்பி. என்னை பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. கவி சற்று நீண்டுவிட்டது என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வல்வை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாருங்கள் வல்வையூரான்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வல்வை.

வணக்கம் குமாரசாமி

வணக்கம்.. வாருங்கள் வல்வையூரான்..!

வணக்கம் இசைக்கலைஞன். மகிழ்ந்தேன் உங்கள் வரவேற்பால்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வனக்கம், வருக வருக வல்வையூரான்

வணக்கம், வாருங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.