Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…

Featured Replies

எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன. அவ்வாறே,

karu-226x300.jpg

விடப்படும் எல்லா அரசியற் தவறுகளும் மக்களின் மேலேயே வீழ்கின்றன…’ என்று ஒரு கவியுரைப்புண்டு.

ஈழத்தமிழர்களுடைய அரசியற் போராட்டத்தின் அத்தனை தவறுகளும் சிந்தனைக் குறைபாடுகளும் இன்று மக்களின் மீதே சுமையாக இறங்கியிருக்கின்றன. இந்தத் தவறுகள் மக்களை மிகக் கொடுமையான வரலாற்றுத் துயரத்திற் தள்ளியிருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தின் ஒவ்வொரு தவறுகளுக்கும் தொடரும் சிந்தனைக் குறைபாடுகளுக்கும் மக்களே விலை கொடுத்திருக்கிறார்கள், மக்களே பலியாடுகளாகியிருக்கின்றனர்.

இந்தத் தவறுகளை இழைத்ததில் கடந்த காலத்தில் இருந்த எந்தத் தமிழ்த் தலைமையும் விதிவிலக்கல்ல. வேண்டுமானால் விகித வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் இருக்கலாம். ஆனால், தலைமைத்துவத் தரப்புகளாக இருந்த சக்திகள் இழைத்த தவறுகள்தான் அதிக பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தின என்பதை யாரும் மறுக்க முடியாது.

வரலாற்றில் மிகப் பின்தங்கிய நிலையிலும் மிக நெருக்கடிக்குள்ளான நிலையிலும் மக்கள் இன்றிருப்பதற்கான காரணத்தில் சம பங்குக்கும் அதிகமான பொறுப்பு தமிழ்த்தலைமைகளுக்கு உண்டு. சிங்களத் தலைமைகள் தங்களின் நீதி மறுப்புகளை வெற்றியாக்கிக் கொள்வதற்கும் தமிழ்த்தலைமைகளே அதிக வாய்ப்பை அளித்துள்ளன.

இதற்கு முக்கிய காரணம் சிந்தனைக் குறைபாடும் சாதிய, குறுந்தேசிய மனப்பாங்குமே. தமிழ்த் தரப்பில் புரையோடிப் போயிருக்கும் சாதிய மனப்பாங்கின் மைய வடிவம் எந்தப் புதிய சிந்தனைக்கும் இடமளிப்பதில்லை. துரதிருஷ்ரவசமாக அதுவே நமது தேசியவாதமாகவும் உருக்கொண்டுள்ளது. பழமைவாதத்திலும் அதன் மிதப்புகளிலும் கிறங்கிக் கொண்டு நிகழ்காலத்தின் கொதிப்பை உணர முடியாமல் இந்தச் ‘சாதிய – தேசிய வாதம்’ இருக்கிறது.

இதன்காரணமாகவே அது முஸ்லிம் மக்களை இரண்டாந்தரப் பிரசைகளாகவும் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான பிரதேசங்களை குறைநிலைப் பிரதேசங்களாகவும் நடைமுறையில் வைத்திருக்கிறது. இத்தனை காலப் போராட்டங்களுக்குப் பிறகும் அவ்வாறான உணர்நிலை மாறவில்லை. போர்க்காலத்தில் மக்கள் இடம்பெயர்ந்து பிரதேச ஊடாட்டங்கள் நடந்தும் கூட நிலைமையில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படவேயில்லை. உருகிய பனிக்கட்டி மீண்டும் உறைந்ததைப்போலவே நிலைமை உள்ளது.

எனவே, ஒற்றுமை குறித்த அறைகூவல்களை விடவும் பிரிப்புகளின் – இடைவெளிகளின் – நிலைமைதான் அதிகமாக உள்ளதை நாம் நடைமுறையில் உணர்ந்து கொள்ளலாம். சிங்கள அதிகார வர்க்கத்தின் பிரிப்பு நடவடிக்கைகளை விடவும் தமிழ்பேசும் மக்களிடையே நிலவுகின்ற அல்லது பராமரிக்கப்படுகின்ற பிரிவுநிலை அதிகம். அது செயற்கையாகவே உருவாக்கப்படுவது என்றால் இது இயற்கையாகவே உருவாகியதைப்போல உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சாதிய – பிரபுத்துவச் சிந்தனையே.

எனவேதான் இத்தனை பெரிய தியாகங்களையும் போராட்டங்களையும் பெரும் அரசியல் முன்னெடுப்புகளையும் முன்னெடுத்த பின்னரும் தமிழ் மக்கள் இன்று வலியோடும் காயங்களோடும் வரலாற்றுக்கு முன்னே கூனிக்குறுகிக் கொண்டு தெருவில் நிற்கிறார்கள். யதார்த்தத்திற்கு முகம்கொடுக்க முடியாமற் திணறுகிறார்கள். உண்மையை நெருங்க முடியாத தொலைவில் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிங்கள அதிகாரத்தரப்பை வெற்றிகொள்ள முடியாத தமிழ் அரசியற் தலைமைகள், தங்கள் அதிகாரத்தின் ருஸியினாலும் அறிவீனத்தின் முரண்களாலும் அரசியற் தோல்விகளைச் சந்தித்தன. அதேவேளை அவை சர்வதேச சக்திகளின் கைகளிலும் பிராந்திய சக்திகளின் கால்களிலும் கிடந்து இன்னும் தடுமாறுகின்றன. இந்தச் சக்திகளால் இன்னும் தீர்வுக்கான ஒரு வழியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தெளிவான ஒரு பதிலை மக்களுக்குச் சொல்ல இயலவில்லை. இன்னும் தங்களின் அளவில் ஒரு தீர்மானத்துக்கு வரக்கூட முடியவில்லை. ஆனால், மக்களை மயக்கும் விதமாக இந்தத் தலைமைகள் இன்னும் எதையோவெல்லாம் சொல்ல மட்டும் தெரிந்திருக்கிறது.பலனற்ற விதமான கால நீட்சியின் காரணமாக ஏற்படும் அரசியற் தோல்விகள் அத்தனையும் மக்களின் தலைகளிலேயே வீழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதேவேளை கடந்த ஐம்பது ஆண்டுகால ஈழத்தமிழரின் அரசியற் போராட்டத்தில் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் மாற்றுப் பார்வைகளும் வைக்கப்பட்டிருப்பதையும் நாம் நோக்க வேண்டும். ஆனால், அந்த மறுபார்வைகளைப் பெரும்போக்கு நிலை நிராகரித்து வந்துள்ளது. மக்களை அந்தப் பக்கம் பார்க்க அது அனுமதிக்கவும் இல்லை. ஆனால், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கும் மாற்று அரசியல் முன்னெடுப்புகளுக்குமான அறைகூவலாக அந்த விமர்சனங்களும் பார்வைகளும் முன்வைக்கப்பட்டன. ஜனநாயகத்தை வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட கருத்துகளும் விமர்சனங்களும் இதில் முக்கியமானவை. ஆனால், அவை எதுவும் உரிய தரப்பினரால் பொருட்படுத்தப்படவில்லை.

முறையான ஜனநாயகச் சூழல் ஒன்று உருவாக்கப்படும்போது, சகல தரப்பினருடைய கருத்துகளுக்கும் இடமும் மதிப்பும் இருக்கும். அது நிகழாத வரையில் எத்தகைய பெறுமதியான உரைப்புகளும் பொருட்படுத்தப்படாமல் உதாசீனமே செய்யப்படும். முறையான ஜனநாயகத்துக்கான அங்கீகாரம் இருந்தாலே, பிரதேச வேறுபாடுகளும் இன மற்றும் மத, பால் வேறுபாடுகளும் மறைந்து போகும். அதிகாரத்தின் வலுவும் அற்றுப்போகும். அப்போதுதான் தேசியம் என்பதற்கான அர்த்தமும் நடைமுறையும் உரிய முறையில் அமையும்.

ஒடுக்குமுறைக்குள்ளாகிய சமூகங்களின் வலுவான ஆயுதம் ஜனநாயகமே. அந்த ஆயுதத்தின் மூலமே இன்றைய உலகை வெற்றி கொள்ள முடியும்.

ஆனால், இலங்கைத் தீவில் அது எதிர்மறையாகவே இருக்கிறது. இதனால் முன்வைக்கப்பட்ட அத்தனை விமர்சனங்களும் மாற்றுப் பார்வைகளும் நிராகரிப்புக்குள்ளாகின.மாற்றுப் பார்வைகளை எதிர்கொள்வதற்கு இலங்கையின் எத்தகைய அரசியற் சக்திகளும் தயாராக இல்லை. அதிலும் தமிழ், சிங்கள அதிகாரத்தரப்புகளிடம் இந்த மனப்பாங்கு துளியளவு கூட இல்லை. இப்போதும் இதுதான் நிலைமை.

vancouver-war2.jpg

போராட்டங்களை முன்னெடுத்த அத்தனை அரசியற் தலைமைகளும் விமர்சனங்களையும் மாற்றுப் பார்வைகளையும் புதிய சிந்தனைகளையும் நிராகரித்து விட்டன. தெற்கில் ஜே.வி.பி தொடக்கம் வடக்கில் செயற்பட்ட அத்தனை இயக்கங்களும் இதில் அடங்கும். பதிலாக அத்தகைய விமர்சனங்களை முன்வைத்தோர், மாற்றுப் பார்வைகளை வலியுறுத்தியோர் துரோகிகளாக்கப்பட்டனர். அல்லது பழிவாங்கப்பட்டனர். அல்லது களத்துக்கு வெளியே துரத்தப்பட்டனர். அல்லது முடக்கப்பட்டனர். அதுவுமல்லாவிடில் புறக்கணிக்கப்பட்டனர். உண்மையுரைப்போரின் வாய்களிலும் மூளையிலும் ஏதோ வகையில் பூட்டுகள் பூட்டப்பட்டன.

அதேவேளை, இத்தகைய அவல நிலையை தமிழ் மக்களின் அரசியல் வரலாறு மிகப் பெருமிதமாகக் கொண்டாடியது. சிங்களத்தரப்பில் இது கொண்டாட்டமாகக் கொள்ளப்படவில்லை என்றாலும் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது.

விமர்சன அரசியலுக்குப் பதிலாக கேள்விக்கிடமில்லாத விசுவாச அரசியலும் வழிபாட்டு நடைமுறைகளும் கண்மூடித்தனமான – கணிதங்கள் இல்லாத –விஞ்ஞானபூர்வமற்ற –நம்பிக்கைகளும் கொண்டாடப்பட்டன. இத்தகைய போக்கு இன்று தென்பகுதி அரசியலில் உருவாகி வருகின்றது.

ஈழத்தமிழரின் அரசியற் பொதுவெளியில், செல்வாக்குச் செலுத்திவரும் ‘விமர்சனங்களுக்கும் மாற்றுப் பார்வைகளுக்கும் இடமளிக்காத அரசியற் பாரம்பரியம்’ ஏற்படுத்திய விளைவுகள், இன்று கடந்த காலத்தை தயவு தாட்சண்யமின்றி மீள் பார்வைக்குட்படுத்தக் கோருகிறது. இதில் யாரும் விதிவிலக்கில்லை. இந்தப் பத்தியாளரும் இதற்கு உட்படுத்தப்படுகிறார்.

முக்கியமாக தமிழ் ஊடகங்களும் மக்களும் இந்த மாற்றுப்பார்வைகளற்ற, விமர்சனங்களற்ற ஒடுங்கிய பாதையில் பயணம் செய்ய நேர்ந்தமை பற்றிய முறையான – நேர்மையான - கவனத்திற்குரிய ஆய்வுகள் இன்று தேவை.

ஒடுக்கப்படும் மக்களின் அரசியற் போராட்டங்கள் எப்போதும் இலகுவானவையாக இருப்பதில்லை. அதிலும் பிராந்திய, சர்வதேசிய அரசியற் போட்டிகள், ஆதிக்கங்களின் மத்தியில் நடக்கும் போராட்டங்கள் எல்லாப்பக்கங்களாலும் நெருக்கடிக்குள்ளாகும். எந்த நிலையிலும் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும்.

இத்தகைய பிராந்திய, சர்வதேசிய நெருக்கடிகள் இருந்தாலும், ஈழத்தமிழர்களுக்கு வாய்த்திருந்த அனுகூலங்கள் இந்த நெருக்கடிகளையும் அபாயங்களையும் வென்றெடுக்கக்கூடியதாகவும் இருந்தன.

ஆனால், அதைப் புரிந்து கொள்ளக் கூடிய நுண்ணறிவும் அதற்கான அறிவை அங்கீகரிக்கக் கூடிய மனவிரிவும் வாய்ப்புகளைப் பயன்படுத்தக் கூடிய விவேகமும், தூரநோக்குப் பார்வையும் போராட்டத்தை முன்னெடுத்தோரிடையே இல்லாமற் போய்விட்டன என்பதே துக்கத்துக்குரியது.

இதில் விடுதலைப் புலிகள் இயக்கமும் உள்ளடங்கும்.

அறுபதாண்டுகால அரசியற் போராட்டங்களில் தமிழ் பேசும் மக்களில் ஒரு சிறிய குறிப்பிட்ட வர்க்கத்தினரைத் தவிர ஏனையோர் மிகவும் உச்சமான தியாகங்களைச் செய்திருக்கின்றனர். மக்கள் தமது வாழ்வுரிமைகளுக்காக மிகக் கடினமான நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறார்கள். பல இழப்புகளையும் ஏற்றிருக்கின்றனர்.

என்றபோதும் போராட்டங்களுக்குத் தலைமையேற்றோரிடையே இருந்த மக்கள் நலன் குறித்த, வரலாற்றுப் பார்வையற்ற பண்பியல் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிட்டன. போராடிய மக்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைமையே இறுதியில் ஏற்பட்டது.

இதன் விளைவுகளே இன்று தமிழ்மக்கள் அரசியல் அநாதைகளைப் போல தத்தளித்துக் கொண்டிருப்பதும் முடிவற்ற அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதுமாகும்.

00000

இந்தச் சந்தர்ப்பத்தில் அண்மைய கடந்த காலத்தில் (ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகளையும் இந்த அவல நிலை ஏற்படும் என்பதையிட்டு எச்சரிக்கப்பட்ட சில சம்பங்களையும் அதனோடிணைந்த சில உண்மைகளையும் – அப்போது விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்புகளையும், ஆலோசனைகளையும் அவை பாராமுகமாக்கப்பட்டதன் விளைவுகளையும் நாம் இப்போது பார்க்க வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தனியே நான்காம் கட்ட ஈழப்போரின்பொழுது ஏற்பட்ட ஒன்றல்ல. அல்லது தனியே இராணுவ ரீதியாக ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவும் அல்ல. அது பல வகைகளில், பல நிலைகளில், பல கட்டங்களில், பல முனைகளில் நடந்தது.

அரசியல் ரீதியான உபாயங்களை வகுப்பதிலும் பிராந்திய, சர்வதேச சக்திகளைக் கையாளக்கூடிய இராசதந்திரத்தைக் கையாள்வதிலும் பொருத்தமான வெளியுறவுக் கொள்கையை தேர்வு செய்வதிலும் ஏற்பட்ட தவறுகள் இதில் முக்கியமானவை.

vancouver-war-.jpgஇத்தகைய தொடர் தவறுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் விளைவே இறுதித்தோல்வியாகியது. முக்கியமாக ஜனநாயக வெறுமை மற்றும் ராஜதந்திர ரீதியாக ஏற்பட்ட குறைபாடுகளினதும் உலக நிகழ்ச்சிப் போக்குகளைப் பற்றிய தவறான மதிப்பிடல்களினதும் விளைவே இறுதித் தோல்வியாகும்.

ஆனால், இன்று ‘விடுதலைப் புலிகளின் தோல்வி’ என்பது இலங்கையிலுள்ள சிறுபான்மைச் சமூகங்களின் மத்தியில் எல்லாவகையிலான நெருக்கடிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. புலிகளைத் தோற்கடித்தமையை சிறுபான்மை மக்களைத் தோற்கடித்ததாக சிங்களத் தரப்பை உணர வைத்துள்ளது. இதனால் தமிழ் மக்கள் மட்டுமன்றி இலங்கையில் தமிழ் பேசும் அனைத்து மக்களும் உளரீதியாகப் பதற்றத்துக்குள்ளாகியுள்ளனர். தாம் பாதுகாப்பற்றதொரு நெருக்கடி நிலையில் இருப்பதாக அவர்கள் உணர்கின்றனர்.

ஆனால், இந்தத் தோல்வி குறித்து ஏற்கனவே வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளில் இருந்த முக்கியமான அரசியல் ஆளுமையாளர்களிற் சிலரும் புலிகளின் உறுப்பினர்களிற் சிலரும் மக்களில் சிலரும் தமக்கு நேரக்கூடிய எல்லாவகையான நெருக்கடிகள், அழுத்தங்கள் எல்லாவற்றுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளிடமே பல ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.

அன்றைய நிலையில் அரசியல் அரங்கில் முதன்மைப் பாத்திரத்தை ஏற்றிருந்தவர்கள் விடுதலைப்புலிகளே. எனவே, அவர்களிடம் அந்த அபிப்பிராயங்களை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டமை தவிர்க்க முடியாத ஒன்று. அது அவசியமானதும் கூட.

இதேவேளை மிகச் சிலர் வெளியில் – புலம் பெயர் நாடுகளில் இருந்தும் தமது ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் தெரிவித்திருந்தனர்.

இந்த ஆலோசனைகள் பல வகையானவை.

1. உள்ளரங்கில் மக்களுடனான அரசியல் நடவடிக்கை சார்ந்தவை.

2. இராணுவ உபாயங்கள் தொடர்பானவை.

3. வெளியுறவுக்கொள்கை சம்மந்தப்பட்டவை.

4. சர்வதேச நிலைவரங்களை மையப்படுத்திய மதிப்பீட்டின் அடிப்படையிலானவை.

5. இராசதந்திர நகர்வுகள் தொடர்பானவை.

6. அரசியலையும் இராணுவ நடவடிக்கையையும் வெளியுறவையும் பேணும் முறைகளைப் பற்றியவை.

இப்படிப் பல.

பொதுவாகவே கடுமையான விமர்சனங்களையும் வெளிப்படையான ஆலோசனைகளையும் விரும்பாத ஒரு மரபை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் கொண்டிருந்தபோதும் அதைக் கடந்து, மக்களுக்கு ஏற்படவுள்ள பாதகமான நிலைமைகளைக் கருத்திற் கொண்டும் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காகவும் இந்த விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் இவர்கள் முன்னிறுத்தினர்.

அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மேற்கொள்ள

ba.jpg

வேண்டிய புதிய நடவடிக்கைகளைப் பற்றி அவர்கள் அழுத்தமாக வலியுறுத்தினர்.

குறிப்பாக, மக்களுடைய பிரச்சினைகளுக்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் அவற்றின் நிலைப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதைப் பற்றி, சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளைப் பற்றி, மாற்றமடைந்து வரும் புதிய உலக ஒழுங்கைப் பற்றி, பிராந்திய சக்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி, இலங்கைச் சமூகங்களின் யதார்த்தம் பற்றியெல்லாம் அவர்கள் புலிகளுக்கு விளக்க முற்பட்டனர்.

அதேவேளை கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளின் தவறுகளும் மதிப்பீட்டில் ஏற்பட்ட குறைபாடுகளும் போராட்டத்துக்குப் பாதகமான ஒரு சூழலை உருவாக்கியுள்ளன என்றும் இவர்கள் சுட்டிக்காட்டினர். ஆகவே தொடரும் போராட்டமானது அந்தத் தவறுகளைச் சீர் செய்யக்கூடிய வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே வெற்றியடையமுடியும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆய்வாளர் அன்ரன் பாலசிங்கம். மற்றவர் அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு. அடுத்தவர் ஈரோஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருந்தவருமான திரு. வே. பாலகுமாரன். இன்னொருவர் நிலாந்தன். மற்றவர் கவியழகன். மற்றொருவர் இடதுசாரிச் செயற்பாட்டளரான இராசேந்திரம். இன்னும் பெருமாள் கணேசன், கருணாகரன் எனச் சிலர்.

இதைத் தவிர, தனிப்பட்ட உரையாடல்களிலும் பொறுப்பு வாய்ந்தவர்களுடனான பேச்சுகளின் போதும் சந்திப்புகளின் போதும் பலர் தமது விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் விடுதலைப் புலிகளுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர். மேலும் பலர் விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் ஏனைய முக்கிய பொறுப்பாளர்களுக்கும் கடிதங்கள் வாயிலாகவும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்தனர்.

இதில் முக்கியமானது அன்ரன் பாலசிங்கத்தின் கருத்து. அவர் பிரபாகரனுக்கு என்ன சொன்னாரோ தெரியாது. ஆனால், சமாதானப் பேச்சுகள் நடந்த காலத்தில் அவர் வன்னிக்கு விஜயம் செய்திருந்த பொழுது சிலவிசயங்களைத் தனக்குத் தெரிந்தவர்களிடம் சொன்னார்.

அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி விஜயம் – —– நடந்தது. அவருடன் கூடவே இலங்கைக்கான நோர்வேத் தூதுவராக இருந்த ஹான்ஸ் பிரஸ்கரும் வந்திருந்தார். அன்று ஒரு சந்திப்பு கிளிநொச்சியில் புலிகளின் சமாதானச் செயலகத்தில் நடந்தது. அந்தச் சந்திப்பு முடிய, பிற்பகல் 2.00 மணியளவில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டது. சமாதானச் செயலகத்துக்கு அண்மையில் இருந்த புலிகளின் திட்டமிடற் செயலகத்தில் அந்தப் பத்திரிகையாளர் மாநாடு நடந்தது. அதுதான் அன்ரன் பாலசிங்கம் வன்னியில் கலந்து கொண்ட இறுதிப் பத்திரிகையாளர் சந்திப்பு.

அந்தச் சந்திப்பில் பல ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் வந்திருந்தனர். அந்த மாநாட்டின்போது வழமையைப் போல பலவிதமான கேள்வகளை ஊடகத்துறையினர் கேட்டனர். அது சமாதானத்தின் துளிர்கள் கருகக்கூடிய அறிகுறிகள் தெரியத் தொடங்கிய காலம் என்றபடியால் ஏராளம் கேள்விகள். அன்ரன் பாலசிங்கமும் ஹான்ஸ் பிரஸ்கரும் மாறிமாறிப் பதிலளித்தனர். அவையெல்லாம் அன்றைய ஊடகங்கள் வெளியாகியுமிருந்தன.

இந்த மாநாடு முடிந்த பிறகு, அங்கே பலரும் வெளியேறிச் சென்று விட்டனர். ஒரு சில ஊடகவியலாளர் மட்டும் தனியாக அன்ரன் பாலசிங்கத்தைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தனர். அந்த வளாகத்தில் சற்றுத் தள்ளி அடேல் பாலசிங்கம் சிலருடன் தனியாக உரையாடிக் கொண்டிருந்தார்.

இறுதியில் அன்ரன் பாலசிங்கத்துடன் உள்ளுர் ஊடகக்காரர்கள் ஒரு சிலரே மிஞ்சியிருந்தனர்.

அவர்களுடன் அன்ரன் பாலசிங்கம் பேசினார். முக்கியமாக உள்ளுர் நிலைமைகளைப் பற்றிக் கேட்டார். அப்பொழுது உள்ளுரில் சனங்களுக்கு பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. அதைப் பற்றி ஊடகவியலாளர்கள் சொன்னார்கள். ‘பிறகென்ன மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்று. பாலசிங்கம் சிரித்தார். அந்தக் கணத்திலேயே அவருடைய முகம் வாடிக் கறுத்தது. தலையைக் கவிழ்ந்து ஆழமாக எதைப்பற்றியோ யோசித்தார். அந்தச் செய்தி அவருக்கு இனிக்கவில்லை. அப்படியென்றால் அது கசக்கிறதா? அது கசப்பானதா? கசப்பானதேதானா?

(அடுத்த பகுதியில் தொடரும்)

http://eathuvarai.net/?p=2122

முக்கியமாக உள்ளுர் நிலைமைகளைப் பற்றிக் கேட்டார். அப்பொழுது உள்ளுரில் சனங்களுக்கு பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. அதைப் பற்றி ஊடகவியலாளர்கள் சொன்னார்கள். ‘பிறகென்ன மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்று. பாலசிங்கம் சிரித்தார். அந்தக் கணத்திலேயே அவருடைய முகம் வாடிக் கறுத்தது. தலையைக் கவிழ்ந்து ஆழமாக எதைப்பற்றியோ யோசித்தார். அந்தச் செய்தி அவருக்கு இனிக்கவில்லை. அப்படியென்றால் அது கசக்கிறதா? அது கசப்பானதா? கசப்பானதேதானா
?

அன்ரன் பாலசிங்கம் அப்படி சிந்திப்பவர் இல்லை மாறாக என்ன தான் தவறான நடவடிக்கை வந்து இயக்கம் சிக்கலுக்குள் மாட்டுப்பட்டாலும் தன் ராஜதந்திர திறமையால் காப்பாற்றி விடுவேன் என்று நம்பும் ஒருவர்( :D ) அதுக்கு மாறாக அவர் எதிர்பார்த்தது தான் துரோகி ஆகாது தேசத்தின் குரலாக மடிவதே.

நூற்றுக்கு நூறு உண்மை .இதைதான் இப்போ அடேலும் செய்கின்றார் .

Edited by BLUE BIRD

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
 
(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…02
 
ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன.

இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் பரவலாக எழுதப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. விக்கி லீக்ஸ், சனல் – 4 காட்சிகள் தொடக்கம், ஐ.நா அறிக்கை, karu-1.jpgகோடன் வைஸின்  The Gaje(கூண்டு), பிரான்ஸிஸ் ஹரிசனின் (Frances Harrison) Still Counting the Deadபோன்ற நூல்கள், வன்னிப்போர் நாட்கள் பற்றி அந்தப் போரிலே சிக்கியிருந்த பலரும் பத்திரிகைகளில் எழுதிய தொடர் கட்டுரைகள், காத் நோபிளின் கட்டுரை, கே.பி என்ற குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்,  அமைதிப்பேச்சுகளின் நாயகமாக இருந்த எரிக் சொல்கெய்ம் தெரிவித்த கருத்துகள், அண்மையில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. செயற்பட்ட விதம் தொடர்பாக சார்லஸ் பெட்றி தலைமையிலான குழு தயாரித்துள்ள அறிக்கை வரை ஏராளம் தரப்புப் பதிவுகளும் சாட்சியங்களும் வெளிப்படுத்தல்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ‘விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள், சாத்திரி எழுதிவரும் ‘பங்கு பிரிப்புகளும் படுகொலையும்’ போன்ற தொடர்களும்.

இவற்றை ஒட்டுமொத்தமாக அவதானிக்கும்போது பல உண்மைகள் நிரூபணமாகின்றன. ஈழப்போராட்டத்தில் என்ன நடந்தது, அவையெல்லாம் எப்படி நடந்தன என்ற உண்மைகள். இத்தகைய பல தரப்பு வெளிப்பாடுகள்தான் வரலாற்றின் சிறப்பாகவும் வடிவமாகவும் அமைகின்றன.

இறுதிப்போர்க் கால நிகழ்ச்சிகள், அவற்றின் பின்னணிகள் பற்றிச் சுருக்கமாக நானும் ஏற்கனவே காலச்சுவடு உள்ளிட்ட சில இதழ்களில் எழுதியிருக்கிறேன். நான் சம்மந்தப்பட்டவற்றையும் என்னால் அறியப்பட்டதையும் நாம் அனுபவித்ததையும் அந்தப் பதிவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இன்னும் அத்தகைய ஒரு வெளிப்படுத்தலையே தொடர்ந்தும் இங்கே ‘எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன’ என்ற இந்தச் சிறு தொடரில் எழுதி வருகிறேன். இது வரலாற்றுக்கு என் தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு சாட்சியமளித்தலே.

இத்தகைய அனுபவங்களும் அறிதல்களும் பலருக்கும் பலவிதமாக உண்டு. அவர்களுடைய சாட்சியங்கள் இன்னொரு விதமாக அமையும். அவர்களுடைய அறிதல்கள், அனுபவங்கள், அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளின் வழியாக. ஆனால், எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும் சாட்சியங்கள் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதே சரியான வரலாகும். பொய்களின் வரலாறு மீளவும் குருதி சிந்த வைப்பதிலும் இருண்ட யுகமொன்றை அந்த வரலாற்றைக் கொண்ட சமூகங்களுடைய மடியில் கொண்டு வந்து இறக்குவதாகவுமே அமையும்.

வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு அவசியமான பணியாகும். அவற்றை வெளிப்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான சங்கடங்கள் இருக்கலாம். காலநேரப் பொருத்தப்பாடுகள் குறித்த அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால், உரிய காலத்தில் சிகிச்சை செய்யப்படாத நோய் பேராபத்தையே விளைவிக்கும் என்பது பொது அனுபவம். அதைப்போல உரிய காலத்தில் உரிய விசயங்களைச் சொல்ல வேண்டியது காலக்கடமை. அதைச் சரியாகச் செய்யவேண்டியது அவசியப் பணி.
பலரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரியே எழுத வேண்டும் என விரும்புகிறார்கள். இது தவறு. நம் பிள்ளைகளுக்கு பொய்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களை வளர்த்தால் அவர்களின் பயணத்திசையும் பயணமும் வேறாகவே அமையும். அவர்கள் சென்றடைகின்ற புள்ளியும் வேறாகவே இருக்கும். அதைப்போலவே நாம் சமூகத்துக்கும் பொய்களைச் சொல்ல முடியாது. அல்லது உண்மைகளை மறைக்க முடியாது. அப்படி உண்மைகளை மறைத்து பொய்களையும் கற்பிதங்களையும் முன்னிலைப்படுத்தும்போது அந்தச் சமூகம் தவறான வழிகளிலேயே பயணித்து, பாதகமானதொரு புள்ளியைச் சென்றடையும்.
நமது அதீத கற்பிதங்களே நமது தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் காரணம் என்பது நமது அனுபவமாகவே உள்ளது. ஆகவேதான் சுயவிமர்சனங்கள் இன்று அவசியமாகப் படுகின்றன. அந்த உணர்வோடு எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அவற்றுக்கு ஒரு பெரும் பங்களிப்புள்ளது.

tamil-tiger.jpg

வரலாறு ஒரு போதும் தட்டையானதோ ஒற்றைப்படையானதோ அல்ல. யாருடைய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தும் இருப்பதில்லை. அது உள்ளபடி, உண்மையின் அடிப்படையில் இருக்கும். புனைவதும் மறைப்பதும் வரலாற்றுக்கு இழைக்கும் துரோகமாகும். அது வரலாற்றுக்கு மட்டுமல்ல அந்த வரலாற்றைப் புனைந்திருக்கும் சமூகத்துக்கும்தான்.

ஒற்றைப்படையான வரலாறாக இருந்தால் அது அதிகாரத்தின் வரலாறாகவே இருக்க முடியும். அல்லது வரலாற்றின் அதிகாரமாகவே அது அமையும். உண்மையில் வரலாறு என்பது பன்முகமுடையது. அது வௌ;வேறு நிலையிலான பல கலவைகளின் வெளிப்பாடு. பல தரப்பினர், பல்வேறு மனிதர்கள், பல நிகழ்ச்சிகள், பல நிலைமைகள் எனப் பலவற்றின் கலவையில் இருந்து உருவாகும் ஒரு வடிவம். ஆகவே தனி நபர் ஒருவர் எழுதுவது மட்டுமே வரலாறு என்று ஆகிவிடாது. அத்தகைய குறுகலான எண்ணத்தோடு எழுதும் வரலாற்றை நவீன அறிவியல் கேள்விக்குட்படுத்தியே பல காலமாயிற்று.
தவிர, என்னுடைய இந்தப் பதிவிலும் யாரையும் குற்றம்சாட்டுவதோ அல்லது எந்தத் தரப்பையும் தவறாக விமர்சிப்பதோ, கீழிறக்குவதோ நோக்கமல்ல. மிகப் பெரும் சேதங்களைத் தரும் இயற்கை அனர்த்தமாயினும் சரி, செயற்கையான போர் போன்ற நிகழ்ச்சிகளாயினும் சரி, அவற்றின் காரண காரியங்களை ஆராய்வது சமூக இயல்பும் தவிர்க்கவே முடியாத ஒரு பொறிமுறையும்கூட. அந்த வகையில் என்னுடைய பதிவும் ஒன்று. இது போல எதிர்காலத்தில் ஏராளம் பதிவுகள் வெளிவரப்போகின்றன.

இது தவிர்க்கவே முடியாதது. இது விக்கி லீக்ஸ் யுகம்.
00

=========================================

எறியப்பட்ட எல்லாக் கற்களும்
பூமியை நோக்கியே வருகின்றன’

- கருணாகரன்

(02)

‘நிலைமை நல்லாயில்லை. இப்ப நாங்கள் சண்டையைத் தொடங்கினால், அது எங்களுக்கே பாதகமாக அமையும். சர்வதேச சமூகம் வேற மாதிரி யோசிக்குது. அது சண்டையை விரும்பேல்ல’ என்றார் அன்ரன் பாலசிங்கம்.

ஏறக்குறைய இத்தகைய விளங்குதல் வன்னியில் இருந்த ஒரு சாராரிடமும் இருந்தது. ஆனால், அவர்கள் சிறிய எண்ணைக்கையினர்.

வரலாற்று அனுபவங்களோடும் சர்வதேச அரசியற் போக்கின் அடிப்படையிலும் விளங்கிக் கொள்ள முற்படுவோர், நிலைமைகளை எளிதாக விளங்கிக் கொள்வர்.

im-02.jpgவிடுதலைப் புலிகளை ஜனநாயக மயப்படுத்தி, அவர்களை ஒரு மென் சக்தியாக்குவதே சர்வதேச சமூகத்தின் நோக்கம். குறிப்பாக மேற்குலகத்தின் விருப்பம். இதற்காக மேற்குலகும் யப்பானும் தென்னாபிரிக்காவும் புலிகளின் மைய உறுப்பினர்களை தங்கள் நாடுகளுக்கு வரவழைத்து, உபசரித்து, சிநேகத்தை வளர்க்க முயன்றன. அதாவது புலிகளுக்கு ஜனநாயக வழிமுறைகளை ஊட்டவும் அவற்றைப் புரிந்து கொள்ள வைக்கவும் முயற்சித்தன.

இதன் மறுபக்கம் போருக்கு எதிரான ஒரு மனப்பாங்கை உருவாக்குவதாகும்.

இந்த நோக்கோடு புலிகளின் தலைமைச் சக்திகள் வெளியுலகுக்கு அழைக்கப்பட்டன. ஆனால், வெளியுலகின் விருப்பத்துக்கு புலிகள் முழுமையாக இடமளிக்கவில்லை.

பதிலாக வெளியுலகத்துடன் முரண்பட்டுக் கொள்ளாமல், தமது இரண்டாம், மூன்றாம் வளையங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் சிலரைப் புலிகள் வெளியுலகப் பயணங்களுக்கு அனுப்பினர். இந்தப் பயணங்களில் அவர்கள் வெளியுலகம் கற்பிக்க முயன்றதை உள்வாங்கிக் கொள்வதையும் விட, இந்தப் பயணங்களில் இயக்கம் திட்டமிட்டிருந்த காரியங்களை எப்படிச் செய்வது என்பதிலேகே கூடிய கவனம் செலுத்தினர்.

புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், தமக்குரிய வேலைகளைச் செய்தனர். நிதித்துறையைச் சேர்ந்தவர்கள் தமது காரியத்தில் கண்ணாயிருந்தனர். அரசியற் செயற்பாட்டாளர்கள் தங்களுடைய வேர்களைப் பலப்படுத்த முயன்றனர். வெளிநாட்டுத் தொடர்பாளர்கள் கிளைகளைச் செழிப்பாக்க முயற்சித்தனர். இந்தக் குழுக்களுடன் பயணித்த புலிகளின் ஊடகத்துறையினர் தங்களின் ஊடக விரிவாக்கத்துக்குரிய ஏற்பாடுகளில் இறங்கினர்.

இப்படி ஒவ்வொரு துறையினரும் தத்தம் வேலைகளைச் செய்வதற்காக இந்தப் பயணங்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.

prabakaran17_.jpgசர்வதேச சமூகத்தின் விருப்பங்களுக்கு மாறாகவே இந்தப் பயணங்களின் பெறுபேறுகள் அமைந்தன. அப்படிப் பார்த்தால் சர்வதேச சமூகத்தின் முதற்தோல்வியே இந்தப் பயணங்களில் நிகழ்ந்து விட்டது.
இதை உணர்ந்ததாலோ என்னவோதான் மேற்குலம் சில சமிக்ஞைகளைக் காட்டியிருக்கிறது.

குறிப்பாக அன்று லண்டனில் இருந்த அன்ரன் பாலசிங்கம் தம்பதியினரிடம் தன்னுடைய உணர்வோட்டத்தை அது வெளிப்படுத்தியது.

செப்ரெம்பர் 11 க்குப் பிறகான உலகத்தில் விடுதலைப் புலிகளைப் போன்ற இயக்கங்களின் போருக்கும் தீவிர நடவடிக்கைகளுக்கும் இடமளிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்திருந்த மேற்குலகம், முரண்படாத நிலையில் புலிகளைக் கையாண்டு, அவர்களை மெதுமைப்படுத்துவதற்கே முயற்சித்தது.

இதற்காக அது பல மில்லியன் டொலர்களையும் பெருமளவு மூளை உழைப்பையும் செலவிட்டது.

இந்த நிலையில் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கை’ அது எப்படி ஏற்றுக்கொள்ளும்? எப்படி அங்கீகரிக்கும்?

எனவேதான் போருக்குரிய சூழல் சர்வதேச நிலைமையில் இல்லை எனவும் போர் ஒன்றை மீளவும் புலிகள் ஆரம்பித்தால் அது புலிகளுக்கே பேராபத்தாக அமையும் என்பதையும் மேற்குலகம் அன்ரன் பாலசிங்கத்திடம் சிநேகபூர்வ அழுத்தத்தோடு சொல்லியிருந்தது.

இதையே பாலசிங்கம் வன்னியில் சொன்னார்.

‘அப்பிடியெண்டால் இயக்கத்தின்ரை நிலைப்பாடு என்ன?’ என்ற கேள்வி பாலசிங்கத்திடம் கேட்கப்பட்டது.

‘இயக்கத்துக்கும் இது தெரியும்’ என்றார் பாலசிங்கம். ஆனால், இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்று அவர் சொல்லவில்லை.

‘இயக்கத்துக்கு நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீங்கள்?’ என்ற கேள்வி அடுத்து பாலசிங்கத்தை நோக்கி வந்தது.

‘நிலைமையை விளங்கப்படுத்தியிருக்கிறன்’ என்று முடித்துக் கொண்டார்.

பிறகு சனங்களின் நிலைமை, அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பொதுவாகவே உரையாடிய பிறகு அவர் விடைபெற்றுச் சென்று விட்டார்.

ஆனால், அவருடைய உரையாடலில் மகிழ்ச்சியும் உற்சாகமும் இருக்கவில்லை.

அன்ரன் பாலசிங்கத்தின் இந்தக் கூற்றுக்கு மாறாக இன்னொரு சாராரிடம் சண்டையைத் தவிர வேறு வழியே இல்லை என்ற எண்ணம் வலுப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற ஏமாற்றத்தோடு,  வரவர படைத்தரப்பு இறுக்கமான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தமை இந்த மாதிரிச் சண்டைக்குப் போகும் உள நிலையை அவர்களிடம் ஊக்கப்படுத்தியிருந்தது.

இதேவேளை அமைதிப் பேச்சுக் காலத்தில் இயக்கம் சண்டையில் மட்டுமல்ல அரசியலிலும் சர்வதேச அளவில் வளர்ந்திருக்கிறது என்ற எண்ணம் பலரிடம் ஏற்பட்டிருந்தது.

சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு வந்து புலிகளைச் சந்திப்பதையும் புலிகளை பல  நாடுகளும் அழைப்பதையும் அவர்கள் இந்த அடிப்படையிலேயே புரிந்திருந்தனர்.

இந்தக் காலத்தில் இயக்கம் இன்னொருபடி உச்ச வளமாகியிருந்தது. இந்த வளம் என்பது வாகனங்கள், வருவாய், கட்டுமானங்கள், தேவையான பொருட்களின் சேகரிப்பு எனப் பல வகையில் அமைந்தது.im-4.jpg

சனங்களின் வாழ்வில் மட்டுமல்ல, போராளி குடும்பங்களின் வாழ்விலும் நெருக்கடிகள் குறைந்திருந்தன.

ஆனால், இந்தக் காலத்தில் இயக்கத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கொண்டு வருவதில் இயக்கம் பல நெருக்கடிகளைச் சந்தித்தது.

சமாதானக் காலத்தில் வெளியே இருந்து வந்து கப்பல்களை இலங்கை அரசு கடலில் வைத்தே தகர்த்தழித்துக் கொண்டிருந்தது.

இது பெரும் நெருக்கடியை இயக்கத்துக்குக் கொடுத்தது.

ஒரு பக்கத்தில் பெரும் சிரமங்களின் மத்தியில் வெளியே இருந்து எடுத்து வரப்பட்ட ஆயுதங்கள் கை சேர முன்னரே கடலில் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இன்னொரு பக்கத்தில் சமாதானப் பேச்சுகளில் ஈடுபடும் புலிகள் எதற்காக ஆயுதங்களைக் கொண்டு வருகிறார்கள்? என்று எழுப்பப்படும் கேள்விகள்.

இப்படி இரண்டு பக்க நெருக்கடிகளை இயக்கம் அப்பொழுது சந்தித்துக் கொண்டிருந்தது.

என்றாலும் சண்டையைத்தான் பெரும்பாலானவர்கள் விரும்பியிருந்தனர். சண்டையின் மூலம் எதிரிக்குத் தக்க பாடம் படிப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.

இதற்குக் காரணமும் உண்டு.

முன்னரெல்லாம் எவ்வளவோ சொல்லியும் கேட்காத அரசும் படைகளும் புலிகளின் தாக்குதலின் மூலம் பின்னடைவைச் சந்தித்திருந்தன. வெற்றியடைந்த புலிகள் நினைத்ததெல்லாம் நிறைவேறியது.

ltte-1-300x199.jpgசண்டைக்கு முகம்கொடுக்க முடியாத படைகள் தப்பியோடின. படைகள் பின்னடையும்போது அரசு பேச்சுவார்த்தைக்கு வந்தது.

ஆகவே ‘அடியைப் போல அண்ணன் தம்பி உதவமாட்டான்’ என்ற எண்ணத்தில் பெரும்பாலான போராளிகள் உறுதியாக இருந்தனர். எனவே சண்டையை அவர்கள் விரும்பினர். இதில் பெரும் தளபதிகளும் உள்ளடங்குவர்.

அந்த நாட்களில் கிளிநொச்சி ஒரு தலைநகரமாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கையில் இரண்டு அதிகார மையங்கள் உள்ளன. ஒன்று கொழும்பு. மற்றது கிளிநொச்சி என்று ஈழநாதத்தில் நிலாந்தன் கட்டுரை எழுதினார்.

இந்த இரண்டு மையங்களும் போரையோ சமாதானத்தையோ தீர்மானிக்கும் அளவுக்கு வலுவுடன் இருக்கின்றன என்று சொல்லப்பட்டது. நிலைமையும் அப்படித்தான் இருந்தது.

வெளிநாடுகளின் பிரதிநிதிகளும் முக்கியத்தர்களும் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாக வந்து போய்க் கொண்டிருந்தனர்.

எனவே பலமான நிலையில் இருக்கும்போது மேலும் சண்டையைப்பிடித்து, இருக்கின்ற பலத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே பெரும்பாலான போராளிகளின் எண்ணம்.

சனங்களிலும் ஒரு சாரார் சண்டையை விரும்பினர். அவர்களுடைய பார்வையிலும் படைகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஆனால், இன்னொரு சாராருக்கு சண்டையே விருப்பமில்லை. மீண்டும் ஒரு போர் தொடங்கினால், அது மோசமான போராகவே அமையும் என்பது அவர்களுடைய எண்ணம். போரில் புலிகளோ தமிழர்களோ வெற்றியைப் பெற்றாலும் அதற்குப் பெரும் விலைகளைக் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய பார்வை. அப்படிப் போரொன்றை எதிர்கொள்ள வேண்டி வந்தாலும் அதை புலிகளாக ஆரம்பிக்காமல், அரசாங்கமே தொடங்க வேண்டும் என்று அவர்கள் கருதினர்.

இதேவேளை இனிமேல் போரே வேண்டாம் என்று கருதுவோரும் இருந்தனர். எப்படியாவது நோர்வையை நழுவ விடாமல் பேச்சுவார்த்தைக் களத்தில் வைத்திருக்க வேணும் என்று இவர்கள் விரும்பினர்.

கொழும்பு அரசு பேச்சுவார்த்தையைக் குலைக்க முயன்றாலும் மேற்குலகமோ நோர்வேயோ இலகுவில் கைவிடாது என்று இவர்கள் நம்பினர். சற்றுப் பொறுமை காத்தால் நல்லது என்பது இவர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு மாறாகவே நிலைமைகள் அமைந்தன.

புலிகளை பேச்சுமேசையில் இருந்து தள்ளிவிடவேண்டும் என்ற குறியில் கொழும்பு தந்திரோபாயங்களைப் பிரயோகித்தது. இதற்குத் தோதாக கொழும்பில் ஹெகலிய ரம்புக்வெல தன்னுடைய வார்த்தைகளுக்குச் சூடேற்றிக் கொண்டிருந்தார்.JVP_Protest_Sri_LAnka-238x300.jpg

நோர்வே புலிகளுக்குச் சார்பாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்று சொல்லி, எரிக் சொல்கெய்மின் கொடும்பாவியை எரித்தார் விமல் வீரவன்ச.

ஜே.வி.பி தெருவில் இறங்கிப் பகிரங்கமாகவே மேற்குலகத்துக்கும் எரிக் சொல்கெய்முக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்தியது.

படைகள் வடக்குக்கிழக்கில் தமது பிடியை இறுக்கின.

ஏட்டிக்குப் போட்டியாக புலிகளும் நடந்து கொண்டனர்.

2002 தொடக்கம் 2006 என நான்கு ஆண்டுகள் வரையில் மதிப்போடிருந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு இரண்டு தரப்புக்குமிடையில் கிடந்து நெரிபடத் தொடங்கியது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு போரை நிறுத்த முடியாத கண்காணிப்புக்குழுவாக மாறிக்கொண்டிருக்கிறது என்று அந்த நாட்களில் ஒரு நண்பர் பகிடியாகச் சொல்வார்.

அவர் சொன்னது பகிடியல்ல, உண்மையே.

புலிகள் மெல்ல மெல்ல பயற்சி நடவடிக்கைகளை பகிரங்கமாகவே ஆரம்பித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்தும் வவுனியாவிலிருந்தும் பொதுஅமைப்புகளை சேர்ந்த உடல் உழைப்பாளர்கள், அன்றாடம் காய்ச்சிகள் வன்னிக்கு வந்து பயிற்சிகளைப் பெற்றுச் சென்றனர்.

சர்வதேச – மேற்குலகின் விருப்பங்களுக்கு மாறாக ஒரு நிகழ்ச்சி நிரல் உருவாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலைமையை – மேற்கின் நாடியோட்டத்தையும் புலிகளின் இயல்பையும் புரிந்து கொண்டு கொழும்பு நிலைமைகளைக் கையாண்டது. அது மெல்ல மெல்ல அரசியல் ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தியது. அதேவேளை படைத்துறையின் நெருக்கடிகளையும் அதிகரித்தது.

புலிகளை ஒரு பொறிக்குள் சிக்கவைப்பதில் கொழும்பு தீவிரமாகியது.

யுத்தத்தைத் தவிர, புலிகளுக்கு வேறு வழிகள் இல்லையென்ற நிலை மெல்ல மெல்ல உருவாகியது.

அவர்களை வெளிப்படையாக ஆதரிக்கவோ அரவணைத்துக் கொள்ளவோ மேற்குத் தயாராகவில்லை.

இதேவேளை அது யப்பான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளைப் பயன்படுத்திப் புலிகளைப் பதப்படுத்த யோசித்தது.

இதைப்பற்றி பின்னாளில் அமெரிக்காவின் தரப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

(தொடரும்)…………………………..

சமநிலையில் புலிகள் இருந்தார்கள் ஆகவே  சமனாக நடத்தி இருக்க வேண்டும்.

அது போக புலிகளை இலங்கை அரசு தோற்கடிக்கவில்லை புலிகளாகவே ஆயுதங்களை மெளனித்துள்ளார்கள்.

எரிமை எப்படி வெடிக்கும்?

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…03

karu-01.jpg

ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன.

இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் பரவலாக எழுதப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. விக்கி லீக்ஸ், சனல் – 4 காட்சிகள் தொடக்கம், ஐ.நா அறிக்கை,கோடன் வைஸின்  The Gaje(கூண்டு), பிரான்ஸிஸ் ஹரிசனின் (Frances Harrison) Still Counting the Deadபோன்ற நூல்கள், வன்னிப்போர் நாட்கள் பற்றி அந்தப் போரிலே சிக்கியிருந்த பலரும் பத்திரிகைகளில் எழுதிய தொடர் கட்டுரைகள், காத் நோபிளின் கட்டுரை, கே.பி என்ற குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்,  அமைதிப்பேச்சுகளின் நாயகமாக இருந்த எரிக் சொல்கெய்ம் தெரிவித்த கருத்துகள், அண்மையில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. செயற்பட்ட விதம் தொடர்பாக சார்லஸ் பெட்றி தலைமையிலான குழு தயாரித்துள்ள அறிக்கை வரை ஏராளம் தரப்புப் பதிவுகளும் சாட்சியங்களும் வெளிப்படுத்தல்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ‘விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள், சாத்திரி எழுதிவரும் ‘பங்கு பிரிப்புகளும் படுகொலையும்’ போன்ற தொடர்களும்.

இவற்றை ஒட்டுமொத்தமாக அவதானிக்கும்போது பல உண்மைகள் நிரூபணமாகின்றன. ஈழப்போராட்டத்தில் என்ன நடந்தது, அவையெல்லாம் எப்படி நடந்தன என்ற உண்மைகள். இத்தகைய பல தரப்பு வெளிப்பாடுகள்தான் வரலாற்றின் சிறப்பாகவும் வடிவமாகவும் அமைகின்றன.

இறுதிப்போர்க் கால நிகழ்ச்சிகள், அவற்றின் பின்னணிகள் பற்றிச் சுருக்கமாக நானும் ஏற்கனவே காலச்சுவடு உள்ளிட்ட சில இதழ்களில் எழுதியிருக்கிறேன். நான் சம்மந்தப்பட்டவற்றையும் என்னால் அறியப்பட்டதையும் நாம் அனுபவித்ததையும் அந்தப் பதிவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இன்னும் அத்தகைய ஒரு வெளிப்படுத்தலையே தொடர்ந்தும் இங்கே ‘எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன’ என்ற இந்தச் சிறு தொடரில் எழுதி வருகிறேன். இது வரலாற்றுக்கு என் தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு சாட்சியமளித்தலே.

இத்தகைய அனுபவங்களும் அறிதல்களும் பலருக்கும் பலவிதமாக உண்டு. அவர்களுடைய சாட்சியங்கள் இன்னொரு விதமாக அமையும். அவர்களுடைய அறிதல்கள், அனுபவங்கள், அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளின் வழியாக. ஆனால், எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும் சாட்சியங்கள் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதே சரியான வரலாகும். பொய்களின் வரலாறு மீளவும் குருதி சிந்த வைப்பதிலும் இருண்ட யுகமொன்றை அந்த வரலாற்றைக் கொண்ட சமூகங்களுடைய மடியில் கொண்டு வந்து இறக்குவதாகவுமே அமையும்.

வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு அவசியமான பணியாகும். அவற்றை வெளிப்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான சங்கடங்கள் இருக்கலாம். காலநேரப் பொருத்தப்பாடுகள் குறித்த அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால், உரிய காலத்தில் சிகிச்சை செய்யப்படாத நோய் பேராபத்தையே விளைவிக்கும் என்பது பொது அனுபவம். அதைப்போல உரிய காலத்தில் உரிய விசயங்களைச் சொல்ல வேண்டியது காலக்கடமை. அதைச் சரியாகச் செய்யவேண்டியது அவசியப் பணி.
பலரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரியே எழுத வேண்டும் என விரும்புகிறார்கள். இது தவறு. நம் பிள்ளைகளுக்கு பொய்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களை வளர்த்தால் அவர்களின் பயணத்திசையும் பயணமும் வேறாகவே அமையும். அவர்கள் சென்றடைகின்ற புள்ளியும் வேறாகவே இருக்கும். அதைப்போலவே நாம் சமூகத்துக்கும் பொய்களைச் சொல்ல முடியாது. அல்லது உண்மைகளை மறைக்க முடியாது. அப்படி உண்மைகளை மறைத்து பொய்களையும் கற்பிதங்களையும் முன்னிலைப்படுத்தும்போது அந்தச் சமூகம் தவறான வழிகளிலேயே பயணித்து, பாதகமானதொரு புள்ளியைச் சென்றடையும்.
நமது அதீத கற்பிதங்களே நமது தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் காரணம் என்பது நமது அனுபவமாகவே உள்ளது. ஆகவேதான் சுயவிமர்சனங்கள் இன்று அவசியமாகப் படுகின்றன. அந்த உணர்வோடு எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அவற்றுக்கு ஒரு பெரும் பங்களிப்புள்ளது.

வரலாறு ஒரு போதும் தட்டையானதோ ஒற்றைப்படையானதோ அல்ல. யாருடைய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தும் இருப்பதில்லை. அது உள்ளபடி, உண்மையின் அடிப்படையில் இருக்கும். புனைவதும் மறைப்பதும் வரலாற்றுக்கு இழைக்கும் துரோகமாகும். அது வரலாற்றுக்கு மட்டுமல்ல அந்த வரலாற்றைப் புனைந்திருக்கும் சமூகத்துக்கும்தான்.

ஒற்றைப்படையான வரலாறாக இருந்தால் அது அதிகாரத்தின் வரலாறாகவே இருக்க முடியும். அல்லது வரலாற்றின் அதிகாரமாகவே அது அமையும். உண்மையில் வரலாறு என்பது பன்முகமுடையது. அது வௌ;வேறு நிலையிலான பல கலவைகளின் வெளிப்பாடு. பல தரப்பினர், பல்வேறு மனிதர்கள், பல நிகழ்ச்சிகள், பல நிலைமைகள் எனப் பலவற்றின் கலவையில் இருந்து உருவாகும் ஒரு வடிவம். ஆகவே தனி நபர் ஒருவர் எழுதுவது மட்டுமே வரலாறு என்று ஆகிவிடாது. அத்தகைய குறுகலான எண்ணத்தோடு எழுதும் வரலாற்றை நவீன அறிவியல் கேள்விக்குட்படுத்தியே பல காலமாயிற்று.
தவிர, என்னுடைய இந்தப் பதிவிலும் யாரையும் குற்றம்சாட்டுவதோ அல்லது எந்தத் தரப்பையும் தவறாக விமர்சிப்பதோ, கீழிறக்குவதோ நோக்கமல்ல. மிகப் பெரும் சேதங்களைத் தரும் இயற்கை அனர்த்தமாயினும் சரி, செயற்கையான போர் போன்ற நிகழ்ச்சிகளாயினும் சரி, அவற்றின் காரண காரியங்களை ஆராய்வது சமூக இயல்பும் தவிர்க்கவே முடியாத ஒரு பொறிமுறையும்கூட. அந்த வகையில் என்னுடைய பதிவும் ஒன்று. இது போல எதிர்காலத்தில் ஏராளம் பதிவுகள் வெளிவரப்போகின்றன.

இது தவிர்க்கவே முடியாதது. இது விக்கி லீக்ஸ் யுகம்.
00

=========================================

எறியப்பட்ட எல்லாக் கற்களும்
பூமியை நோக்கியே வருகின்றன’

- கருணாகரன்

   ———————————————————————————————————————————————————————-

- 03 -

rogerjeffery2.jpg

இலங்கைக்கான அமெரிக்கத்  தூதுவராக (2003 – 2006) இருந்த ஜெப்ரி லூன்ரெட் என்பவரின் ஆய்வில் ஒரு அறிக்கையை அமெரிக்கத் தரப்பு வெளியிட்டது. அநேகமாக அது 2006 இன் இறுதிப் பகுதி என நினைவு. அந்த அறிக்கை புலிகளால் தமிழாக்கம் செய்யப்பட்டு உட்சுற்றில் முக்கியமானவர்களின் வாசிப்புக்கு விடப்பட்டிருந்தது. முப்பத்திஐந்து பக்கங்கள் வரையிலான அறிக்கை அது.

அந்த அறிக்கையின் முக்கிய கவனம், பேச்சுவார்த்தையின் முறிவுக்கு என்னென்ன காரணங்கள் அடிப்படையாக அமைந்தன என்பதைக் கண்டறிவதே. அத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைக் காலத்தில் இலங்கை  விசயங்களில் – குறிப்பாக புலிகளுடனான அமெரிக்காவின் அணுகுமுறைகள் எப்படி அமைந்தன? எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதைப்  பற்றிய மதிப்பீடாகவும் அது அமைந்திருந்தது.

2002 இல் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் அரசுப் பேச்சுவார்த்தை என்பது செம்ரெம்பர் 11 க்குப் பின்னரான அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் ஒரு நடவடிக்கையே. இதை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொண்டது. இந்தியாவுக்கும் இதில் அரைகுறை விருப்பம். இதற்குக் காரணம், தனியே புலிகளைக் கையாள முடியாத ஒரு யதார்த்தத்தில் இந்தியா சிக்கியிருந்தது. எனவே புலிகளைக் கையாளும் விசயத்தில் அது தன்னுடைய கூட்டாளிகளான மேற்குடன் ஒரு சமரசத்திற்கு வரவேண்டியிருந்தது. அதேவேளை இலங்கை தொடர்பான விசயத்தில் எந்த நிலையிலும் தன்னுடைய பிடி முற்றாகத் தளர்ந்து விடுவதையும் அது விரும்பவில்லை. எனவே, பேச்சுகளின்போதும் யுத்தத்தின்போதும் அது தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பியது. இதனால், பேச்சுகளில் மத்தியஸ்தப் பொறுப்பை வகித்த எரிக் சூல்கெய்ம் ஒஸ்லோவிலிருந்து டில்லி சென்று கொழும்புக்கு வருவார். அல்லது கொழும்பிலிருந்து டில்லி சென்று ஒஸ்லோ சேர்வார். இப்படியான ஒரு தவிர்க்க முடியாத பொறியமைப்பை இந்தியா பேணியது. இந்தியாவின் இந்த மறைமுகமான நிபந்தனையை நோர்வேயும் மேற்கும் ஏற்றுமிருந்தன.

images-02-1.jpg

இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் புலிகளை அவர்களின் போர்க்குணாம்சத்திலிருந்து தணித்து வெகுஜன அரசியல் நீரோட்டத்துடன் இணைத்து விடுவதே மேற்படி கூட்டணியின் பிரதான நோக்கம். சர்வதேசப் பார்வையில் அச்சுறுத்தலுக்குரிய அம்சங்களைத் தங்களுடைய போர் முறையிலும் அரசியல் முறைமையிலும் கொண்டிருந்த புலிகளை குணமாற்றம் செய்வதன் மூலம் செம்ரெம்பர் 11 இன் பின்னான நெருக்கடிகளை குறைக்கலாம் என்பதே இதன் அடிப்படை.

அதாவது ஜனநாயக வழிமுறைகளில் புலிகளை இணைத்து அந்த  நடைமுறைகளைப் பின்பற்றும் ஒரு அமைப்பாக மாற்றிவிடுவது. இப்படி மாற்றுவதன் மூலம் புலிகளைப்போன்ற அமைப்புகளுக்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவது.

இந்த நோக்கத்தில் இந்தக் கூட்டணி ஆரம்பத்தில் நம்பிக்கை வைக்குமளவுக்குச் சில சமிக்ஞைகளும் தென்பட்டன. பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை அற்றிருந்த அல்லது அதை முற்றாகவே நிராகரித்து வந்த புலிகள் முதற்தடவையாக ஒரு மெல்லிய நெகிழ்ச்சிக்குட்பட்டு தங்களின் சார்பாக ஒரு அணியைத் தேர்தலில் இறக்கினர். புலிகளின் குணாம்சத்திலும் அவர்களுடைய அரசியல் முறைமைகளிலும் மாற்றங்களை விரும்பிய மேற்கு அன்ரன் பாலசிங்கத்தின் மூலமாகவும் உள்ளுரில் உள்ள சில சக்திகளின் மூலமாகவும் இதற்காக முயன்றது. இந்த இருவழி முயற்சியின் விளைவாக உருவாகியதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

ஆனால், இந்தப் பெரிய ஏற்பாடுகளுடனும் வியூகங்களுடனும் நோக்கத்துடனும்  மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை எதிர்பார்த்ததற்கும் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கும் மாறாக இடையில் முறிவடையத்தொடங்கிவிட்டது. மேற்கு நாடுகளும் இந்தியாவும் என்ன மாதிரியான சிறப்பான விருப்பத்தைக் கொண்டிருந்தாலும் அரங்கிலே பேசுவதும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதும் புலிகளும் இலங்கை அரசுமே.

ஆனால், இரண்டு தரப்புகளும் தங்கள் மரபுரீதியான சந்தேகங்களிலிருந்தும் பிடிவாதங்களிலிருந்தும் மரபுரீதியான குணாம்சத்திலிருந்தும் வெளியேறவில்லை. அவற்றை விட்டுக்கொடுக்கவும் விரும்பவில்லை. எதையும் விட்டுக்கொடுக்க விரும்பாத ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருந்த கடும்போக்குடைய இரண்டு தரப்பையும் சமாளித்து வழிக்குக் கொண்டு வருவதற்கான பல கட்ட முயற்சிகள், பல வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை எல்லாமே பயனற்றுப்போயின.

எனவே போருக்கான ஆரம்ப முளைகள் கருக்கட்டத்தொடங்கின.

ஆனால், புலிகளை முற்றாக அழித்து விடும் ஒரு யோசனையை விட அவர்களைப் பதப்படுத்திக் கையாளலாம் என்பதே இறுதிவரையில் மேற்குலகத்தின் விருப்பமாக இருந்தது.

அது முடிந்த அளவுக்கு நோர்வேயினூடாகவும் பிற வழிகளிலும் முயற்சிக்கப்பட்டது.

ஏனெனில் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் எண்பதுகளின் நடுப்பகுதியில் இருந்து பல பேச்சுகள் நடந்துள்ளன. இந்தியாவின் மத்தியஸ்துவத்துடன் நடந்த பேச்சுகளும் சரி, இலங்கை இந்திய உடன்படிக்கையும் சரி நடைமுறையில் தோல்விகளையே தந்திருந்தன. இந்தத் தோல்விகள் அல்லது முறிவுகளின் பின்னான நிலைமை பெரும் பாதகமாகவே அமைந்தது. பேச்சுக்கள் முறியும்போது போர் உக்கிரமாக வெடிக்கும். உக்கிரமாக வெடிக்கும் போரினால் சனங்களின் வாழ்க்கை  மிக நெருக்கடிக்குள்ளாகும். முக்கியமாகச் சனங்கள் ஒவ்வொரு பேச்சுவார்த்தை முறியும்போதும் அல்லது உடன்படிக்கைகள் மீறப்படும்போதும் பெரும் சேதங்களையும் அழிவுகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தனர். அதேவேளை புலிகளின் எழுச்சி அல்லது அவர்களுடைய நடவடிக்கைகள் தீவிரமடையும்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒவ்வொரு அமைதிக்காலத்திலும் அல்லது பேச்சுவார்த்தைக் காலத்திலும் புலிகளின் தொடர்பாடல்களும் நடவடிக்கைப் பிராந்தியமும் வடக்குக் கிழக்குக்கு அப்பால் விரியும். இதன்மூலம் அவர்கள் அடுத்த கட்டப் போருக்கும் தமது அரசியலுக்கும் தாரளமான வளங்களையும் வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டு விடுவர். இது புலிகளின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும்.

அதேவேளை தொடர் அழுத்தங்களுக்குள்ளாகியிருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மக்களுடைய வாழ்க்கை நெருக்கடிகளை இந்தப் பேச்சுவார்த்தைக் காலம் சற்றுத் தணித்து, மூச்சுவிடக் கூடிய நிலைமையைத் தந்திருக்கும்.

ஆகவே மீண்டும் ஒரு போரை முழு வேகத்தோடு தொடங்குவதற்கு புலிகளுக்கு பேச்சுவார்த்தைக் காலங்கள் ஏதோவகையில் உதவியிருக்கின்றன.  இந்த வளர்ச்சி நிலையானது புலிகளை உள்நாட்டுக்கு அப்பால், பிராந்தியத்துக்கு அப்பால், சர்வதேச அளவில் கவனம் பெற வைத்தது. ஆனால், புலிகளின் இந்த வளர்ச்சி, செப்ரெம்பர் 11 க்குப் பின்னரான அமெரிக்க உளவியலிலும் அரசியலிலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்ததே பிரச்சினைக்குரியதாகியது. ஆகவே அது புலிகளுக்கு எதிரான தடையையும் தீவிரப்படுத்தியது.

இங்கே நாம் இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும். செப்ரெம்பர் 11 க்குப் பிந்திய மேற்கின் அணுகுமுறையானது ஆயுதமேந்திய அமைப்புகளை முடிவுக்குக் கொண்டு வரும் தீர்மானத்தை எடுத்திருந்தபோதும் புலிகள் தொடர்பாக அது அப்படிச் செய்யவில்லை. இதற்குக்காரணம், புலிகளின் ஆதரவாளர்களில் வலுவான ஒரு தரப்பினராகிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் மேற்குலகுடன் இசைவாக்கம் கொண்டிருந்தமையாகும்.

நடந்த பேச்சுகளிலும் அத்தகையவர்களின் பங்கேற்பிருந்தது. உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் உள்ளிட்ட பலரின் பங்கேற்பை இந்த வகையில் நினைவு கூரலாம்.   அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களை ஒரு காலத்தில் விமர்சித்த, பெரிய அளவில் பொருட்படுத்தாது விட்ட நிலையை மாற்றி, அவர்களுடைய தேவை புலிகளுக்கு அவசியம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இயக்கத்தின் விரிவாக்கத்துக்கு புலம்பெயர் மக்களின் பொருளாதாரப் பங்களிப்பு தவிர்க்க முடியாதது,முக்கியமானது என்ற நிலை உருவானபோது அவர்களுடன் அனுசரித்துப் போவதும் புலிகளைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாததாகியது. இந்த நிலைமையை மதிப்பிட்ட மேற்குலகம், புலம்பெயர் தமிழ்ச் சக்திகளின் மூலமும் காய்களை நகர்த்தியது. புலிகளை மென்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்திகளின் மூலமாகவும் முயற்சித்தது.

image01.jpg

பேச்சுகளின் போது புலிகளின் அணிகள் பல நாடுகளுக்குப் பயணிக்கக் கூடிய ஏற்பாட்டைச் செய்ததும் இந்த நோக்கத்தில்தான். ஆனால், இதற்கு இலங்கை அரசின் ஒப்புதலோ ஆதரவோ விருப்பமோ இருக்கவில்லை. அதை ஒருவாறு சமாளித்து, ஜனநாயகத்துக்குப் புலிகளை அழைத்து வரவேண்டுமானால், அந்த வழிமுறைகளைப் பழக்க வேண்டுமானால், தவிர்க்க முடியாமல் அவர்களை இப்படி வெளியுலகத் தொடர்பாடலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது மேற்கு. ஆனால், இதனை இந்தியா பெரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. மட்டுமல்ல, எந்தச் சந்தர்ப்பதிலும் புலிகளின் அணிகளை இந்தியா தன்னிடம் வரவழைத்துக் கொள்ளவோ, தொடர்புறுத்திக் கொள்ளவோ விரும்பவில்லை. இந்த விசயத்தில் அது உச்ச எச்சரிக்கையோடிருந்தது. என்றாலும் நடக்கும் நிகழ்ச்சிகளை, நிலைமைகளை அது உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது.

ஆகவே மொத்தத்தில் புலிகளைப் பதப்படுத்தும் முயற்சிகள்தான் 2002 க்குப் பிந்திய நோர்வே அரசு தலைமையிலான பேச்சுவார்த்தையாக அமைந்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை முறியத் தொடங்கியபோதுதான் முன்னர் குறிப்பிட்டவாறு அவசர அவசரமாக அமெரிக்கா ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஏனெனில் பேச்சுக்கள் முறியும்போது நிச்சயமாக ஒரு யுத்தம் வெடிக்கும் என்பது அதற்குத் தெளிவாகவே தெரியும். அந்த யுத்தமானது சாதாரணமாக அமையாது. அது பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அது கருதியது.

ஆகவே முடிந்தவரையில் யுத்தத்தத்தை தவிர்ப்பது. முடியாதபோது அதை எதிர்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், யுத்தத்துக்குச் செல்லாமற் தடுப்பதே முதற்குறி என்றபடியால் நடந்த நிகழ்ச்சிகளில் என்ன தவறுகள் நடந்தன என்பதை அறியும் அவசியம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.

இதேவேளை புலிகளை ஜனநாயகப்படுத்துவதை – பண்புமாற்றத்துக்குட்படுத்துவதை ஒரு பரிசோதனை நடவடிக்கையாகவும் மேற்குலகம் செய்து பார்த்தது. அப்படி அது அமைதியை நோக்கியதாகச் சாத்தியப்படுமானால், போர் வீரர்களைத் தயார்ப்படுத்துவதை விடவும் சமாதானத்தூதர்களைத் தயார்ப்படுத்தலாம் என்று யோசித்தது.

ஆகவே யுத்தத்தை நோக்கியதாக நிலைமை இறுகிச் செல்வதற்கான காரணங்கள் என்ன? அதில் அமெரிக்கத்தரப்பின் குறைபாடுகள் எவை என்ற பார்வை முக்கியப்படுத்தப்பட்டது.

நேரடியாகப் புலிகளுக்கும் அமெரிக்காவுக்கும் முரண்பாடுகளோ பகையோ இல்லாதபோதும் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் அமெரிக்காவில் புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு. ஆகவே நேரடியாக அமெரிக்கா புலிகளுடன் தொடர்பு கொள்ள முடியாது. வெளிப்படையாக தொடர்பாடல் எதனையும் பேணவும் முடியாது.

இந்த நிலையில் அது குறிப்பால், வெவ்வேறு உணர்நிலைகளால், இடைநிலைத் தொடர்பாடல்களால் என மாற்று வழிகளினாலேயே அதனுடைய தொடர்புகளும் உறவும் இருந்தது.

இது புலிகளிடம் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர்களிடம் குறிப்பிட்ட திருப்தியையும் உருவாக்கவில்லை. குறிப்பாக லண்டனில் இருந்த அன்ரன் பாலசிங்கத்துடன் வெவ்வேறு வழிகளின் மூலமாக உணர்த்தப்பட்ட எந்த விசயங்களும் பிரபாகரனைத் திருப்திப்படுத்தக் கூடியதாக ,அவர் வேறுவிதமாகச் சிந்திக்கக் கூடியதாக அமையவில்லை. பாலசிங்கத்திடம் கூடிய நெருக்கத்தை பிரபாகரன் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் பாலசிங்கம் உறுதிபட எதையாவது பிரபாகரனுக்கு எடுத்துரைத்திருக்க முடியும் என்ற சாரப்பட சற்று வருத்தத்தோடு ஜெப்ரி தன்னுடைய அறிக்கையில் விவரித்திருந்தார்.

இதேவேளை புலிகளின் மீதான தடையைக் கூட இடையில் சற்றுத் தளர்த்தியிருக்கலாமோ என்றும் ஜெப்ரி ஐயம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இந்தத் தவறை ஈடுசெய்யக் கூடியவாறும் பின்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலையை உச்ச நிலை அடையாதவாறும் மேற்குப் பார்த்துக் கொண்டது. இதற்காக அது ஒரு தந்திரோபாயத்தையும் வகுத்துக் கொண்டது.

யுத்தம் உச்சமாக நடந்தபோது அந்த யுத்தத்தில் மேற்குலகத்தின் பங்கு அதிகமாக உள்ளது என்று புலிகளுக்குத் தெரிந்தபோதும் புலிகள் மேற்கின் பக்கம் எதிர்நிலை எடுக்காதிருக்குமாறு மேற்கு கவனமாக இருந்தது. புலிகள் மீதான தடையைப் பேணிக்கொண்டே புலிகளுக்கான ஆதரவை அது வெளிப்படையாக ஆதரித்தது. புலிகளின் மீதான யுத்தத்தை நடத்திக் கொண்டே புலிகளுக்கு ஆதரவான – யுத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்தது.

இது உண்மையில் புலிகளை முட்டாளாக்கும் நடவடிக்கையே. ஆனால், இத்தகைய ஒரு தந்திரோபாயத்தைக் கையாண்டு, புலிகளின் எதிர்ப்பைச் சந்திக்காமல் இறுதிவரையில் மேற்கு வெற்றியடைந்தது. (இதனைப் பற்றிப் பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்).

ஆகவே, யுத்தத்தின் முளைகள் கருக்கொள்ளத் தொடங்கிய கட்டத்தில் ஜெப்ரியின் அறிக்கை வந்திருந்தபோது அந்த அறிக்கையைப் படித்திருந்த புலிகளின் மேல்மட்ட உறுப்பினர்களில் சிலருக்கு ஆச்சரியம். சிலருக்கு அச்சம். சிலருக்கு சிரிப்பு. சிலருக்கு அது ஒரு கவனிக்கத் தக்க அறிக்கை என்ற புரிதல்.

இந்த நிலையில் அந்த அறிக்கை எப்படி இரகசியமாகக் கசிய விடப்பட்டது என்ற கேள்வியும் புலிகளில் சிலரிடம் எழுந்தது. அது கூட ஒரு உத்திதான். அறிக்கையின் தயாரிப்பு என்பது அமெரிக்காவுக்குத் தேவையான ஒன்றாக இருந்தாலும் தன்னுடைய தரப்பில் குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்காக, தன் தரப்பில் தவறுகள் நடந்தன என்று ஏற்றுக்கொள்ளும் குறிப்புகளை அந்த அறிக்கையின் மூலமாக வெளிப்படுத்துவதன் மூலமாக புலிகளிடம் உருவாகியருந்த கடும்போக்கைத் தணிப்பதாகவே அந்த இறுதி முயற்சி நடந்தது.

ஆனால், அறிக்கையை வாசித்த புலிகள் யுத்தத்தை நோக்கிச் செல்லும் முடிவை மாற்றிக் கொள்ளவேயில்லை. பலருக்கு அது விருப்பமாக இல்லாதிருந்தபோதும் அதை வெளிப்படையாகச் சொல்லி, பிரபாகரனிடம் எதிர்ப்பைச் சந்திக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை.

௦௦௦௦௦

இந்தக் கட்டத்தில் புலிகளின் ஊடகங்களில் நடக்கும் அரசியல் விவாதங்களில் அப்போது வன்னியில் இருந்த அரசியல் ஆய்வாளர்கள் பங்கேற்று நிலைமைகளை விளக்க முயற்சித்தனர். இதில் சுவாரஷ்யமான சங்கதிகள் பலவுண்டு.

புலிகளைப் பொறுத்தவரையில் தங்களின் அரசியலுக்குச் சாதகமான – சார்பான அரசியல் நிலைவரமொன்றை உருவாக்க முயற்சிப்பது வழமை. அது அவர்களுக்குத் தவிர்க்க முடியாததும் கூட. மட்டுமல்ல, தேவையான ஒன்றுமாகும். புலிகள் மட்டுமல்ல எந்த ஒரு அரசியற் சக்தியும் தன்னை, தன்னுடைய நோக்கை நியாயப்படுத்த அல்லது அதற்கு ஆதரவு சேர்ப்பதற்காக ஊடகங்களைக் கையாள்வது இயல்பு. அப்படியான ஒரு நிலையில் முடிந்த அளவுக்கு அதற்குள் நின்று கொண்டு தங்களின் கருத்துகளை முன்வைக்க முயன்றனர் சிலர்.

இதில் முக்கியமானது நிலாந்தன் தெரிவித்த கருத்து.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நடந்த நிலவரம் என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் 2007 இல் நிலாந்தன் தெரிவித்திருந்த கருத்து முக்கியமானது.

அந்த நிகழ்ச்சியை நடத்தும் மையவாளரின் கேள்வி இப்படி அமைந்தது. தமிழீழம் அமையக் கூடிய சாத்தியப்பாடுகள் இன்றைய நிலையில் எந்த அளவில் உள்ளன?

இதற்கு நிலாந்தனின் பதில் – தென்னாசியப் பிராந்திய யதார்த்தத்தின்படி நடைபெற்ற ஆயுதப்போராட்டங்கள் அத்தனையும் குருதி சிந்தச் சிந்த ஒடுக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதில் ஒரு கூட்டுநிலை அல்லது ஒருங்கிணைந்த நிலை காணப்படுகிறது. இதை மீறி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சாத்தியப்படுத்த வேண்டுமானால் சவாலாக உள்ள அக, புற நிலைமைகளை விளங்கிக் கொண்டு போராட்டத்தைத் தீர்க்கதரிசனமாக முன்னெடுக்கக் கூடிய தூரநோக்குப் பார்வையும் அனுபவச்  செறிவும் முக்கியமாகும். அதற்குரிய பண்பை வளர்ப்பது அவசியம் என்ற வகையில் அமைந்தது.

இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் விட்டது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளுடைய ஊடகங்களின் வழியாகவும் வெளியாகியிருந்தது.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த புலிகளின் தலைமைப் பீடம் உடனடியாகவே நிகழ்ச்சித் தயாரிப்பாளரை அழைத்து இதைப்பற்றிய விளக்கத்தைக் கேட்டது. விளைவு பதில் நிகழ்ச்சி ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்தப் பதில் நிகழ்ச்சியில் மக்கள் நம்பிக்கை இழக்காத வகையில் தமிழீழம் என்பது நம்பிக்கையான ஒன்று எனவும் அதை அடைவதற்கான வழிகள் சிறப்பாகவே உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இதேவேளை நிலாந்தன் ஈழநாதம் பத்திரிகையில் வாராவாரம் எழுதி வந்த அரசியற்பத்தி இடைநிறுத்தப்பட்டது.

00

குறிப்பு…

 அடுத்த பகுதி (04)சற்று விரிவானது. அதில் திருநாவுக்கரசு, பாலகுமாரன் போன்றோரின் உரைகளும் கடிதங்களின் பதிவுகளும் வரும்….
 
http://eathuvarai.net/?p=2738

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04

ஈழநாதத்தில் வெளிவந்த நிலாந்தனின் அரசியல் பத்தி இடைநிறுத்தப்பட்டது மட்டுமல்ல, அதற்குப் பின்னர் தமிழீழத் தொலைக் காட்சியில் அவர் அரசியல் விவாத நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கவும் அழைக்கப்படவில்லை. பதிலாக அவர் தெரிவித்த கருத்துகளை மறுதலிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன.

இதேகாலப்பகுதியில் அமரதாஸின் ஒளிப்படங்களின் தொகுதி ஒன்று ‘வாழும்கணங்கள்’ என்ற பெயரில் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இந்தப் தொகுதியை வெளியிட்டது தமிழீழ நுண்கலைப் பிரிவு. இந்த நிகழ்வில் நிலாந்தன் விமர்சன உரையாற்றினார். ஒளிப்படங்களைப் பற்றித் தன்னுடைய கண்ணோட்டத்தை அவர் முன்வைக்கும்போது ‘கருவி முக்கியமல்ல. கலைஞனின் திறனே முக்கியமானது. நல்ல ஒளிப்படங்களுக்கு அதைப்பற்றிய அழகியல் உணர்வும் சமூக அக்கறையும் முக்கியமானது. படங்களின் செய்தியும் அதைச் சொல்லும் விதமும் ஒருங்கிணையும்போதே படங்கள் சிறக்கின்றன. அவையே கலையாகின்றன…..’ என்று தெரிவித்தார்.

ni-fin-p2-280x300.png

இது நடந்து இரண்டு நாட்களில் நிலாந்தனுக்கு ஒரு கடிதம் வந்தது. தமிழீழப் புகைப்படப் பிரிவுக்குரிய கடிதத் தலைப்பில், அதனுடைய பொறுப்பாளர் செந்தோழன் கையொப்பமிட்டு அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். அதுவொரு கண்டனக் கடிதம். ஆனால், உண்மையான அர்த்தத்தில் அது அச்சுறுத்தற் கடிதமே. ‘புகைப்படத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டுக்கார்கள் தொடக்கம் புலம்பெயர் மக்கள் வரையில் புகைப்படப்பிரிவின் படங்களைப் பார்த்துப் பாராட்டுகிறார்கள். தலைவரும் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதையெல்லாம் பொருட்படுத்தாமல், புகைப்படங்களைப் பற்றி வியாக்கியானம் செய்திருக்கிறீர்கள். போராளிகள் எடுத்த புகைப்படங்கள் உங்களுடைய கண்ணுக்கும் கவனத்திற்கும் தெரியாமல்போனது கண்டிக்கத்தக்கது…..’ என்றெல்லாம் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

சந்தேகமில்லை, அதுவொரு எச்சரிக்கைக்கடிதம்தான். மட்டுமல்ல, புகைப்படத்தைப் பற்றிக் கதைப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றும் அதில் கேட்கப்பட்டிருந்தது. ஒரு பொது இடத்தில் பகிரங்கமாக வைக்கப்பட்ட ஒரு கருத்துக்கு இப்படி அளிக்கப்பட்ட எதிர்வினையை நிலாந்தன் நண்பர்களிடம் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தைப் பிரதியெடுத்துப் புலிகளின் முக்கியதஸ்தர்களாக இருந்த அனைவருக்கும் நிலாந்தன் அனுப்பினார். எல்லா இடங்களிலும் மௌனம் வேர்விட்டது.

நிலாந்தனின் அபிப்பிராயங்கள் தொடர்பாக புலிகள் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு மேலும் சில பின்னணிகள் இருந்தன. அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தை அடுத்து அவரை முன்வைத்து ஈழநாதத்தில் நிலாந்தன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு பிதாமகன். அதில் பாலசிங்கம், அவருடைய அணுமுறைகள் தொடர்பாக ஒரு மென்னிலையான மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இன்னொன்று, சதாம் ஹுசைன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் எழுதப்பட்ட கட்டுரையில் சதாமை முன்னிறுத்தி, புலிகளின், பிரபாகரனின் அரசியலை நிலாந்தன் எழுதியிருந்தார். கதவுகளை இறுக மூட மூட அதைத் திறக்கும் முயற்சிகளே நடக்கும். அப்படியான ஒரு நிலையில், ஜனநாய வெளியற்ற நிலையிற்தான் சதாமின் வீழ்ச்சி ஏற்பட்டது. எதிரிகளுக்கான வாசலை இலகுவாக தானே திறந்து வைத்தார் சதாம் என்று அந்தக் கட்டுரை கூறியது.

இதெல்லாம் புலிகளுக்கு உவப்பான விசயங்களாக இருக்கவில்லை. ஆனால், தான் உணரும் விசயங்களையும் கண்ணுக்கு முன்னே நிகழ்கின்ற நிகழ்ச்சிப்போக்கினையும் வெளிப்படுத்துவது அவசியம் என்பது நிலாந்தனின் நிலைப்பாடு.

அவருடைய இத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக முன்னரும் ஒரு தடவை அவர் எழுதும் பத்தி இடைநிறுத்தப்பட்டது. அது 1993 இல்.  அப்பொழுது ஈழநாதத்தில் வாரப்பத்தி எழுதி வந்தார் நிலாந்தன். அந்த நாட்களில் யாழ்ப்பாண முற்றுகையைப்பற்றி கொழும்பில் தீவிரமாக யோசிக்கப்பட்டது. கொழும்பின் சிந்தனை எப்படியாக உள்ளதென தன்னுடைய ஆய்வை முன்வைத்திருந்தார் நிலாந்தன். விளைவு, அவர் எழுதுவதற்கான வெளி இழுத்து மூடப்பட்டது.

பிடிக்காத அபிப்பிராயங்களை அடக்குவதற்கு குரல்வளையை நெரிக்கும் வழிமுறை இலங்கையில் பிரசித்தம். அதற்கொரு பாரம்பரியமே உண்டு. குரல்வளையை நெரித்ததில் எல்லாக் கைகளுக்கும் பங்குண்டு. இப்பொழுதும் இதுதான் நிலை.

மாற்றுச் சிந்தனை, மாற்று அபிப்பிராயம் போன்றவற்றை ஏற்கும் பண்பும் பக்குவமும் பலரிடமும் கிடையாது. ஆகவே அடிப்படையில் இவர்கள் எல்லாரும் ஒன்றே. ஆளாளுக்கு, தரப்புகளுக்கிடையில் விகித வேறுபாடுகள் இருக்கலாம். மற்றபடி வித்தியாசங்கள், வேறுபாடுகள் எல்லாம் பெரிய அளவில் கிடையாது. துப்பாக்கியுடன் நின்றால் மட்டும்தான் ஜனநாயக விரோதம். துப்பாக்கியைக் கைவிட்டு விட்டால் ஜனநாயகம் தளைத்தோங்கி விடும், புதிதாக அது செழித்துப் பூக்கும் என்று சிலர் நம்பலாம். அவர்களுடைய புரிதல் அந்தளவுக்கு இருந்தால் அதற்கான தண்டனையை நாம்தான் பெற வேண்டும். இப்பொழுது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

பிறருடைய கருத்துகளைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக அவர்களைப்பற்றிப் பழிசொல்வது, அவர்களுடைய பின்னணி, முன்னணியைப்பற்றிப் பேசி,  முன்வைக்கப்பட்ட கருத்தை, நியாயத்தை, நிலைப்பாட்டைத் திசை திருப்புவது அல்லது அதை மூடித்திரையை விரித்து விடுவது. இது முழு  அயோக்கியத்தனமே.

மாற்று அபிப்பிராயத்தை அங்கீகரிக்காத சூழலும் மனமும் ஏதேச்சாதிகாரத்தின் அசல் வடிவமே. இதைப் பற்றிப் பல கோடி வார்த்தைகளைப் பலரும் எழுதியும் பேசியும் விட்டார்கள். இதைச் சொல்லிச் சொல்லியே வரலாறும் களைத்துச் சலிப்படைந்து விட்டதது. தமிழ்ச் சூழலிலும் அரிச்சுவடி தொடக்கம் பல வகுப்புகள் இதைப் பற்றி போதித்து விட்டாயிற்று. ஆனாலும் நிலைமையில் ஒரு படிகூட முன்னேற்றமில்லை.

வெறியோடு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்து ஆணைகளை மற்றவர் மீது பிரயோகிக்கவே, ஏற்றிவிடவே முயற்சிக்கின்றனர். தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர வேறொன்று இல்லை, இருக்கக் கூடாது என்பதே பலருடைய விருப்பமும். அந்த விருப்பத்தை நடைமுறைப்படுத்தவே மற்றவர்களுடைய குரல்வளையை நெரிக்கிறார்கள். அது முடியாதபோது எதிராளியை விலக்குவது, குற்றம்சாட்டுவது, வசைபாடுவது, தூற்றுவது எல்லாம் நடக்கின்றன. இதெல்லாம் அதிகாரத்தின் பாற்பட்ட விசயங்கள்.

ranil.jpg

அரசொன்றிடம்தான் அதிகாரம் இருக்கும் என்றில்லை. அரசுக்கு அப்பால் சாதாரண தரப்புகளிடமும் அதிகாரம் குவிந்துள்ளது.  அரசிடம் இருக்கும் அதிகாரத்தையும் விட இந்த மாதிரியான போக்கை வைத்திருக்கும் உளவியலில், கருத்தியலில் இருக்கும் அதிகாரம் பெரிது. இதைக் கடைப்பிடிக்கும் தரப்பினரிடம் உள்ள அதிகாரம், இத்தகைய போக்கினை நடைமுறைப்படுத்துகின்ற ஊடகங்களிடம் – ஊடகவியலாளர்களிடம் இருக்கும் அதிகாரம் போன்றன இன்னும் வலியன. அரசின் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கால எல்லையைக் கொண்டது. அது ஆட்சி மாற்றமொன்றின் போது அல்லது ஆட்சிக் கவிழ்ப்பொன்றின் மூலம் மாற்றி விடக்கூடியது. அல்லது தலைமைத்துவ மாற்றங்களில் நெகிழ்ந்து கரைந்து விடக்கூடியது. அதற்கப்பால் நீடித்தாலும் அதை மக்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தோற்கடிக்க முடியும். ஆனால், வெளியே ஒரு சமூக நோயாகப் பரவியிருக்கும் இந்த நிலை எளிதில் மாறிவிடக் கூடியதல்ல. இதனுடைய வேர்கள் பல முனைகளில் நீண்டு ஓடிவிடக்கூடியன. பல தளங்களில் ஊடுரூவிப் பின்னிப் பிணைந்து விடக்கூடியன.

இத்தகைய பாரம்பரியத்தை உடைய தமிழ் அரசியல் தளத்தில், இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றும் புலிகள், நெருக்கடிக் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தங்களுக்கு உவப்பில்லாத விசயங்களையிட்டு எச்சரிக்கையடைந்தனர். இடைக்காலத்தில் அவர்களிடமிருந்த நெகிழ்ச்சி, நெருக்கடிக் காலத்தில் சுருங்கி இறுகியது.

ஆரம்ப காலப் புலிகளிடத்தில்  கடும்போக்கும் தீவிரத்தன்மையும் நிறைந்திருந்தது. ஆனால், 1990 களுக்குப் பின்னர் மாற்று அபிப்பிராயங்களை உடனடியாக எதிர்க்காமல், அவற்றுக்கு உடனடித் தண்டனை, பகிரங்க நடவடிக்கை என்ற வகையில் காரியமாற்றாமல், விட்டுப்பிடித்தல், ஓரளவுக்கு அபிப்பிராயங்களுக்குச் செவிமடுத்தல் என்றவகையில் அவர்களுடைய அணுகுமுறைகள் இருந்தன.

புலிகளிடம் ஏற்பட்டிருந்த மெல்லிய நெகிழ்ச்சியான போக்கு அல்லது தந்திரோபாயம் இது எனலாம். இதனால்,  முன்னரைப்போலன்றி, பின்னர் பல வகையான அபிப்பிராயமுடையவர்கள் புலிகளுக்கிசைவாக ஆதரவு நிலையெடுக்கவும் இணைந்து பங்காற்றவும் முயன்றனர்.

t-b-fi1-194x300.png

இது சற்று விரிவடைந்து பல்வேறு தரப்பினரும் மாற்றுக் கருத்து நிலையோடும் புலிகளில் இணையவும் தொடங்கினர். இடதுசாரிகள், முற்போக்காளர்கள், ஆன்மீகவாதிகள், தேசியவாதிகள், கடும் தேசியவாதிகள், ஜனநாயகவிரும்பிகள், மனிதநேயிகள், பெண்விடுதலையாளர்கள், ஆணாதிக்கர்கள், சாதிவெறியர்கள், சாதியத்துக்கெதிரானோர், பிரதேசவாதிகள், இயக்கப்பற்றாளர்கள், தலைமை விசுவாசிகள் எனப்பல தரப்பினர். இவ்வாறு பல வகையான அபிப்பிராயங்களைக்கொண்டிருந்தோரின் ஒருகூட்டமைப்பாக பிந்திய புலிகள் அமைப்பு இருந்தது. குறிப்பாக 1990 களுக்கு பிந்திய புலிகள். 2000 க்குப் பின்னர் இந்த நிலைமையில் மேலும் நெகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனையிறவு வெற்றிக்குப் பின்னர் இது இன்னும் விரிவடைந்தது. 2002இல் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் இந்த நெகிழ்ச்சி மேலும் அதிகரித்து, பரஸ்பரம் எதையும் பேசலாம் என்ற அளவுக்கு ‘தோற்றம்’ காட்டியது.இதற்கெல்லாம் காரணம், அவர்கள் ஒரு அரசாக வளர்ச்சியடைந்து வந்தமையே. அரசொன்றாக வளர்ச்சியடையும்பொழுது, அதனுடைய கட்டமைப்புகள், பரிபாலனங்கள் என்றெல்லாம் ஏராளம் விவகாரங்கள் முன்னே நிற்கும். இவை கடும்போக்கிற்கு அல்லது தீவிரத்தன்மைக்கு முற்று முழுதாக இடமளிக்காது. எனவே விட்டுக்கொடுப்பும் சமரசமும் தவிர்க்க முடியாதாக இருந்தன. விருப்பமில்லாது விட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், நிலை, கட்டம்.

எனவே விருப்பமில்லாத விசயங்களாக இருந்தாலும் அவற்றைக் கேட்பது, சிலவற்றைப் பொருட்படுத்தாததைப்போல விடுதல், எதையும் மறுக்காமல் கேட்டல்(காதுகொடுத்தல்), ஆனால் அதைப் பற்றிக் கவனத்தில் எடுக்காது விடுதல் (இது ஒரு வகையில் அவமானப்படுத்தல்தான்) என்ற வகையில் இதனைக் கையாண்டனர்.

ஆனால், இந்தக்காலத்தில் பல வகையான கருத்துக்களையும் ஓரளவு விவாதிக்கக்கூடிய, பேசக்கூடிய நிலை உருவானது. அப்பொழுது தடைசெய்யப்பட்டிருந்த பல விசயங்கள் தளர்வுக்குள்ளாகின. புலிகளைக்கடுமையாக விமர்சிக்கின்ற பத்திரிகைகள், புத்தகங்கள் கூட புலிகளால் நடத்தப்பட்ட அறிவு அமுது போன்ற புத்தகக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. வன்னிக்கு வரவே அஞ்சியவர்கள் புலிகளின் முகாமில் படுத்துறங்கினார்கள். அவர்களுடைய வண்டிகள், வாகனங்களில் ஏறித்திரிந்தனர்.

2002 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப்பின்னர் கிளிநொச்சிக்கு வந்திருந்த தராகி டி.சிவராம் அறிவு அமுது புத்தகக்கடையில் இருந்த புத்தகங்களைப்பார்த்துவிட்டு ஆச்சரியம் தாளமுடியாமல் சொன்னார், ‘நாங்கள் நினைத்த புலிகள் வேறு, இங்கே (வன்னியில்) இப்போதுள்ள புலிகள் வேறு’ என்று. அறிவு அமுதுவில் கால் மாக்ஸில் இருந்து பெரியார் வரையில், அல்தூசர், கிராம்சி, ழான் போல் சாத்தர், காம்யு எனச் சகலருடைய புத்தகங்களும் இருந்தன. அசோகமித்தினும் இருந்தார். சுந்தர ராமசாமியும் இருந்தார். ஷோபா சக்தியும் சக்கரவர்த்தியும் ஜெயமோகனும் இன்குலாப்பும் அறிவுமதியும் காசி. ஆனந்தனும் பா.செயப்பிரகாசமும் இருந்தனர்.

அந்தளவுக்கு தாராளவாதம் நிலவியது. இந்த தாராளவாதத்தின் எல்லை எந்தளவு? அதனுடைய வகை எப்படியானது? என்பதெல்லாவற்றுக்கும் சரியான பதிலோ முறையான விளக்கமோ இல்லை. ஆனால், நீளக்கயிற்றில் உலாத்தக் கூடிய அளவுக்கு உலாத்தலாம். இதனால்தான் சிவராம் போன்றோர் காந்த விசையால் கவரப்பட்டவர்கள் போல பிறகெல்லாம் வன்னிக்குத் தொடர்ச்சியாகப் படையெடுத்தனர். பின்னாட்களில் கொழும்பிலிருந்ததை விட வடக்கிலும் கிழக்கிலும் சிவராம் நின்ற நாட்களே அதிகம். அதிலும் கிளிநொச்சியிலும் படுவான்கரையிலும் சிவராம் சைக்கிளில் அல்லது மோட்டார் சைக்கிளில் தனிக்காட்டு ராஜா போல் உலாத்தித்திரிந்தார். சிவராம் மட்டுமல்ல, அவரைப் போலப் பலருக்கும் வன்னி இனித்தது. ஆனால், வன்னியிலிருந்தவர்களுக்கு….. இதையெல்லாம் பார்க்கச் சிரிப்புத்தான் வந்தது.

சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சம்மந்தன், ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம் போன்றோர் கிளிநொச்சிக்கு துணிந்துவரக்கூடிய தெம்பு வந்ததற்கும் காரணம் சிவராம் போன்றோர் வன்னிவாசிகளைப்போல் கிளிநொச்சியில் சுற்றித்திரியக்கூடியதாக இருந்ததே.புலிகளின் இந்த நெகிழ்ச்சி அல்லது இந்தத் தந்திரோபாயம் பலரையும் வளைத்துப்போட வாய்த்தது. அதேவேளை புலிகளிடம் ஏற்பட்டுள்ள குணமாற்றம் அல்லது பண்பு மாற்றம் இது என்று பலராலும் கருதப்பட்டது. புலிகள் ஜனநாயகத்தளத்தை நோக்கி மெல்ல மெல்ல விரிவடைந்து வருகின்றார்கள் என்ற அபிப்பிராயங்கள் உருவாகின. சரித்திரத்திலேயே எதிர்பாராத பல சம்பவங்கள் இந்தக்காலத்தில் நடந்தன. ஒருபோதுமே பிரபாகரன் தான் சந்திக்க விரும்பாத மனிதர்களையெல்லாம் சந்தித்தார். அதைப்போல தாங்கள் ஒருபோதுமே பிரபாகரனைச் சந்திக்கமாட்டோம் என்றிருந்தோர் பிரபாகரனுடன் கைகுலுக்கினார்கள்@ விருந்துண்டார்கள். பலதையும் பத்தையும் பேசினார்கள். சிலர் பிரபாகரனுக்கு ஆலோசனைகளைக்(?) கூட வழங்கினார்கள். இதெல்லாம் உள்ளேயும் வெளியேயும் பல அதிர்வலைகளை – புரியாத புதிர்களை உருவாக்கின.

இத்தகையதொரு நிலையில் இயக்கம் பற்றி –  அதனுடைய போராட்ட நடைமுறை பற்றி – போராளிகள் பற்றி – கட்டமைப்புக்கள் பற்றி – இயக்கத்தின் அரசியல் பற்றி – தலைமையைப் பற்றி – பொறுப்பாளர்கள், தளபதிகளைப் பற்றி சர்வதேச அரசியற்ச+ழல் பற்றியெல்லாம் பல மட்டங்களிலும் விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் பகிரப்பட்டன. கடுந்தொனியில் இல்லையென்றபோதும் பரவலாக இந்த விமர்சனங்கள் இருந்தன. அபிப்பிராயங்களைப் பகிரும் போக்கு மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து வந்தது.

tna-mp1.jpg

இது அடுத்த கட்ட வளர்ச்சியடைந்து, பொது மேடைகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கூட மெல்லிய அளவில் மாற்று அபிப்பிராயங்களைப் பகிரக்கூடிய நிலைக்குச் சென்றது. ஆனால், இந்த நிலையை இயக்க விசுவாசிகளாக இருந்தோராலும் தலைமைப்பீடத்துக்கு நெருக்கமாக தங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்போராலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இயக்கத்தின் இந்த மாதிரியான நெகழ்ச்சியை எதிர்த்தார்கள். பதிலாக பேசப்படும் விசயங்களைத் திரிப்பதிலும் அதற்கெதிராகத் தலைமைப்பீடம் நிலைப்பாடு எடுக்கும் விதமாகவும் நடந்து கொண்டார்கள். புலிகள் இயக்கத்தின் மரபார்ந்த நிலைப்பாடான கடும்பிடியைத் தளர விடுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அது இயக்கத்தையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்தும் என்று நம்பினார்கள். கண்ட விசயங்களையும் கண்டநிண்ட தரப்பினரையும் சேர்த்தால் அது எல்லாவற்றையும் பாழடிக்கும் என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

இதேவேளை, முந்திய காலம் வேறு. அதனுடைய நிலைமைகளும் தேவைகளும் வேறு. இன்றைய நிலைமையும் தேவைகளும் பிரச்சினைகளும் வேறு. ஆகவே கால நிலவரங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றங்கள் செய்யப்படுவது அவசியம் என்ற அபிப்பிராயங்களும் வலுவாக முன்வைக்கப்பட்டன.

எல்லாத் தரப்பையும் சமாளித்து, ஒரு சமனிலையைப் பேண விரும்பினார் பிரபாகரன். தனித்தமிழ் பேணப்பட வேண்டும் என்று சொல்லும் தமிழேந்தியையும் அவர் அங்கீகரித்தார். தனித்தமிழில் எல்லாவற்றையும் எழுத முடியாது என்று சொன்ன புதுவை இரத்தினதுரையையும் ஏற்றுக்கொண்டார். புதிய விருந்தாளிகளாக வந்திருக்கும் அரசியல்வாதிகளையும் ஊடகவியலாளர்களையும் நம்ப முடியாது என்று ஒரு தரப்புச் சொல்ல, அவர்களை அரவணைத்து, அரசியல், ஊடகப் பலத்தைப் பெருக்க வேண்டும் என்று இன்னொரு தரப்புச் சொன்னது. இரண்டின் அபிப்பிராயங்களையும் ஏற்று, இரண்டு தரப்புக்கும் சமாதானம் சொல்லி புதிய விருந்தாளிகளைக் கைளாள்வோம் என்று வைத்திருந்தார். இப்படியே எல்லாவற்றையும் அனுசரித்துச் செல்லவேண்டிய ஒரு நிலையை மெல்ல மெல்ல புலிகள் ஏற்றுக்கொண்டிருந்தபோதே நான்காம் கட்ட யுத்தம் கருக்கொண்டது.

sivaram1.jpg

ரணிலுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர முடியாத ஒரு கட்டத்துக்குச் சென்றன. ரணில் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியிருந்தபோது அவருடைய அரசாங்கத்தைக் கலைத்தார் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க.

தன்னுடைய அதிகாரத்தைப் பிரயோகித்து, ரணில் அரசாங்கத்தில் இருந்து சில முக்கிய அமைச்சுகளைப் பறித்து, அந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளினார்சந்திரிகா குமாரதுங்க.  பிறகு புலிகளுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை செல்லுபடியற்றது என்றார். இதையெல்லாம் எதிர்த்து தன்னை நிறுவ முடியாத நிலையில் அன்று பலவீனமான நிலையில் இருந்தார் ரணில்.

எனவே அவரை இலகுவாகத் தள்ளிவிழுத்தி விட்டு, ஆட்சியைப் பறித்தார் சந்திரிகா. அந்தநேரம் ரணிலைக் காப்பாற்றுவதற்கு புலிகள் தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கொழும்பிலும் யாரும் இருக்கவில்லை. இந்தியாவோ, அமெரிக்கா உள்ளடங்கிய மேற்குலகோ முயற்சிக்கவில்லை. திரைமறைவில் சில முயற்சிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், பகிரங்கத்தளத்தில் ரணில் தனித்து விடப்பட்டார். தனித்து விடப்பட்ட ரணில் தோற்றுப்போனார்.  இதனால், நிலைமைகள் மேலும் சிக்கலடைந்தன.

இதேவேளை, இந்த நிலைமையானது, பெரும் நெருக்கடியை எதிர்காலத்தில் உருவாக்கப்போகிறது என அடித்துக்கூறினார் மு. திருநாவுக்கரசு. கொழும்பில் பலவீனமான ஒரு தலைமை இருக்கும்போதே தமிழர்கள் தமக்குச் சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது அவருடைய அபிப்பிராயம்.  இதை அவர் பலரிடமும் விளக்கினார். எந்தத்தரப்பில் இருந்தாவது, எந்த வழியின் ஊடாகவும் உரிய தரப்பிடம் சேதி போகட்டும் என்பதே அவருடைய நோக்கம்.

மாறியுள்ள உலக ஒழுங்கில் ஜனநாயகத்தை உள்ளடக்கமாகக் கொள்ளாத எத்தகைய அரசியற் போராட்டங்களும் நல்விளைவைத் தராது என்பது அவருடைய கருத்து. முறையான ராசதந்திரமும் வெளியுறவுக் கொள்கையும் அவசியம் என்றார். உள்நாட்டில் ஜனநாயக ரீதியில் மக்களையும் சமூகங்களையும் வளர்த்தெடுக்கும்போதே மக்கள் போராடும் திறனையும் துணிவையும் நியாயத்தையும் தார்மீக பலத்தையும் பெறுவர் என்று சொன்னார். இந்தக் கருத்துகளை மையப்படுத்தி அவர் பலருடனும் உரையாடல்களைச் செய்தார். எழுதினார். சமஷ்டியா தனிநாடா, ஒற்றை மைய உலகில் போரும் சமாதானமும் போன்ற புத்தகங்கள் இந்த அடிப்படைகளை வலியுறுத்தி அல்லது மையப்படுத்தி அவரால் எழுதப்பட்டன. கருத்தரங்கங்களையும் ஏற்பாடு செய்து அதிலே பேசினார்.

000000

(தொடரும்………..)

http://eathuvarai.net/?p=3018

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…05

ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன.

இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் பரவலாக எழுதப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. விக்கி லீக்ஸ், சனல் – 4 காட்சிகள் தொடக்கம், ஐ.நா அறிக்கை, கோடன் வைஸின்  The Gaje(கூண்டு), பிரான்ஸிஸ் ஹரிசனின்     (Frances Harrison) Still Counting the Dead  போன்ற நூல்கள், வன்னிப்போர் நாட்கள் பற்றி அந்தப் போரிலே சிக்கியிருந்த பலரும் பத்திரிகைகளில் எழுதிய தொடர் கட்டுரைகள், காத் நோபிளின் கட்டுரை, கே.பி என்ற குமரன் பத்மநாதனின் நேர்காணல்கள்,  அமைதிப்பேச்சுகளின் நாயகமாக இருந்த எரிக் சொல்கெய்ம் தெரிவித்த கருத்துகள், அண்மையில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. செயற்பட்ட விதம் தொடர்பாக சார்லஸ் பெட்றி தலைமையிலான குழு தயாரித்துள்ள அறிக்கை, இறுதி நாட்களில் என்ன நடந்தது என விறுவிறுப்பில் ரிஷி எழுதிவரும் தொடர் வரை ஏராளம் தரப்புப் பதிவுகளும் சாட்சியங்களும் வெளிப்படுத்தல்களும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மேலும் அர்ச்சுனன் எழுதிவரும் ‘விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள், சாத்திரி எழுதிவரும் ‘பங்கு பிரிப்புகளும் படுகொலையும்’ போன்ற தொடர்களும்.

aaa-227x300.jpg

இவற்றை ஒட்டுமொத்தமாக அவதானிக்கும்போது பல உண்மைகள் நிரூபணமாகின்றன. ஈழப்போராட்டத்தில் என்ன நடந்தது, அவையெல்லாம் எப்படி நடந்தன என்ற உண்மைகள். இத்தகைய பல தரப்பு வெளிப்பாடுகள்தான் வரலாற்றின் சிறப்பாகவும் வடிவமாகவும் அமைகின்றன. மட்டுமல்ல நிகழ்காலத்தை நெறிப்படுத்தி, எதிகாலத்தை வளமூட்டவும் உதவுகின்றன.

இறுதிப்போர்க் கால நிகழ்ச்சிகள், அவற்றின் பின்னணிகள் பற்றிச் சுருக்கமாக நானும் ஏற்கனவே காலச்சுவடு உள்ளிட்ட சில இதழ்களில் எழுதியிருக்கிறேன். நான் சம்மந்தப்பட்டவற்றையும் என்னால் அறியப்பட்டதையும் நாம் அனுபவித்ததையும் அந்தப் பதிவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இங்கும் அத்தகைய ஒரு வெளிப்படுத்தலே ‘எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன’ என்ற இச் சிறு தொடரும். இது வரலாற்றுக்கு என் தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு சாட்சியமளித்தலே.

இத்தகைய அனுபவங்களும் அறிதல்களும் பலருக்கும் பலவிதமாக உண்டு. அவர்களுடைய சாட்சியங்கள் இன்னொரு விதமாக அமையலாம். அவர்களுடைய அறிதல்கள், அனுபவங்கள், அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளின் வழியாக. ஆனால், எந்தத் தரப்பிலிருந்து வெளிப்பட்டாலும் சாட்சியங்கள் உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதே சரியான வரலாறாகும். பொய்களின் வரலாறு மீளவும் குருதி சிந்த வைப்பதிலும் இருண்ட யுகமொன்றை அந்த வரலாற்றைக் கொண்ட சமூகங்களுடைய மடியில் கொண்டு வந்து இறக்குவதாகவுமே அமையும்.

வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு அவசியமான பணி. அவற்றை வெளிப்படுத்துவதில் பலருக்கும் பலவிதமான சங்கடங்கள் இருக்கலாம். காலநேரப் பொருத்தப்பாடுகள் குறித்த அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால், உரிய காலத்தில் சிகிச்சை செய்யப்படாத நோய் பேராபத்தையே விளைவிக்கும் என்பது பொது அனுபவம். அதைப்போல உரிய காலத்தில் உரிய விசயங்களைச் சொல்ல வேண்டியது காலக்கடமை. அதைச் சரியாகச் செய்யவேண்டியது அவசியப் பணி.

பலரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரியே எழுத வேண்டும் என விரும்புகிறார்கள். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. நம் பிள்ளைகளுக்கு பொய்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களை வளர்த்தால் அவர்களின் பயணத்திசையும் பயணமும் வேறாகவே அமையும். அவர்கள் சென்றடைகின்ற புள்ளி வேறாகவே இருக்கும். அதைப்போலவே நாம் சமூகத்துக்கும் பொய்களைச் சொல்ல முடியாது. அல்லது உண்மைகளை மறைக்க முடியாது. அப்படி உண்மைகளை மறைத்துப் பொய்களையும் கற்பிதங்களையும் முன்னிலைப்படுத்தும்போது அந்தச் சமூகம் தவறான வழிகளிலே பயணித்து, பாதகமானதொரு புள்ளியைச் சென்றடையும்.

நமது அதீத கற்பிதங்களே நமது தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் காரணம் என்பது நமது அனுபவம். எனவேதான் சுயவிமர்சனங்கள் அவசியமாகப் படுகின்றன. அந்த உணர்வோடு எழுதப்படும் வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அவற்றுக்கு ஒரு பெரும் பங்களிப்புள்ளது.

வரலாறு ஒரு போதும் தட்டையானதோ ஒற்றைப்படையானதோ அல்ல. யாருடைய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தும் இருப்பதில்லை. அது உள்ளபடி, உண்மையின் அடிப்படையில் இருக்கும். புனைவதும் மறைப்பதும் வரலாற்றுக்கு இழைக்கும் துரோகமாகும். அது வரலாற்றுக்கு மட்டுமல்ல அந்த வரலாற்றைப் புனைந்திருக்கும் சமூகத்துக்கும்தான்.

என்னுடைய இந்தப் பதிவில் யாரையும் குற்றம்சாட்டுவதோ அல்லது எந்தத் தரப்பையும் தவறாக விமர்சிப்பதோ, கீழிறக்குவதோ நோக்கமல்ல. மிகப் பெரும் சேதங்களைத் தரும் இயற்கை அனர்த்தமாயினும் சரி, செயற்கையான போர் போன்ற நிகழ்ச்சிகளாயினும் சரி, அவற்றின் காரண காரியங்களை ஆராய்வது சமூக இயல்பும் தவிர்க்கவே முடியாத ஒரு பொறிமுறையும்கூட. அந்த வகையில் என்னுடைய பதிவும் ஒன்று. இது போல எதிர்காலத்தில் ஏராளம் பதிவுகள் வெளிவரப்போகின்றன.

இது தவிர்க்கவே முடியாதது. ஏனென்றால், இது விக்கி லீக்ஸ் யுகம்.

-0000————————————————————————————————00 00

2007 யூன் 01 மாலை கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழீழ நுண்கலைக் கல்லூரி மண்டபத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது.மு. திருநாவுக்கரசுவின் உரை. தலைப்பு – “தமிழீழ விடுதலைப் போராட்டமும் சமகால அரசியலும்“.

கருத்தரங்கிற்கு கிளிநொச்சியில் அப்போதிருந்த அரசியல் விசயங்களில் ஆர்வம் காட்டுகின்ற பலரும் வந்திருந்தனர். போராளிகளின் தரப்பில் அல்லது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தரப்பில் மகளிர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழினி, பரப்புரைப் பொறுப்பாளர் ரமேஸ், நீதி நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பரா, முக்கிய உறுப்பினர் பாலகுமாரன், யோகரட்ணம் யோகி, தயா மாஸ்டர், இளம்பரிதி, புலிகளி்ன் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள், நிதித்துறை, அரசியல்துறை, புலனாய்வுத்துறை போன்றவற்றின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 100 க்கு மேற்பட்டவர்கள்.

அங்கே மு.தி விரிவாக தன்னுடைய உரையை ஆற்றினார். சமகால (2007) அரசியல் நிலவரம் என்பது கொழும்புக்கு எத்தகைய சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்றும், பிராந்திய, சர்வதேச சக்திகள் கொழும்புடன் கொண்டுள்ள உறவைப் பற்றியும் அவர் தன்னுடைய உரையில் தெளிவாகக் குறிப்பிட்டார்.மேற்கு முன்னெடுத்து வரும் சமாதான முயற்சிகளின் நோக்கத்தை தமிழர்கள் விளங்கிச் செயற்படுவது அவசியமானது? சரியான விளக்கத்துடன் செயற்படவில்லை என்றால் எதிர்காலத்தில் எப்படியான விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் விளக்கினார்.

குறிப்பாக இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைக் கொண்ட அரசியல் அணுகுமுறை இந்தியாவுக்கும் தமிழீழப்போராட்டத்துக்கும் இடையில் ஏற்படுத்திய கதவடைப்பையும் அதன் பாதிப்பையும் திருநாவுக்கரசு எடுத்துரைத்தார்.அதில் ராஜீவ் காந்தியின் படுகொலை மிகப் பெரும் வரலாற்றுத் தவறு என்றார். இந்தத் தவறின் விளைவை 15 ஆண்டுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் அனுபவிக்க வேண்டிருக்கிறது. இன்னும் இந்தத் தவறே பாரிய நெருக்கடிகளைத் தரும் விடயமாக கையாளப்படுகிறது எனச் சொன்னார்.

செப்ரெம்பர் 11 க்குப் பிந்திய உலக அரசியல் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் செலுத்தப்போகும் தாக்கங்கள் எப்படியாக அமையலாம் என்பதையும்  அவர் எடுத்துரைத்தார்.பிராந்திய சக்தியான இந்தியாவின் நிலைப்பாடுகளும் தந்திரோபயமும், சீனா செயற்பட்டு வரும் முறை, அதனுடைய விரிவாக்கம், அதனால் இலங்கை மற்றும் தென்னாசிய அரசியலில் ஏற்பட்டு வரும் அதிர்வுகள், மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரல் போன்றவற்றின் மத்தியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைப் பற்றி அவர் பேசினார்.

முக்கியமாக இந்த அசைவியக்கத்தை மதிநுட்பத்துடன் அணுகி, அதற்கேற்ப அரசியற் பொறிமுறைகளையும் ராசதந்திரச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவது அவசியம் என்பது அவருடைய உரையின் சாராம்சத்தில் ஒரு பகுதியாக இருந்தது.அதேவேளை உள்நாட்டு அரசியலைக் கையாள்வதிலும் அதை முன்னெடுப்பதிலும் உள்ள முக்கியத்துவத்துவத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.சமாந்திரமாக இவற்றை முன்னெடுக்காதவிடத்து, பாதிப்புகளும் பின்னடைவுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதை அவர் மறைபொருளில் வலியுறுத்தினார்.

ஒரு போராட்டத்தில் அரசியலின் முக்கியத்துவமே எதையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என்பது அந்த உரையின் அழுத்தமாக இருந்தது.இதற்கு அவர் பல வரலாற்று ஆதாரங்களை உதாரணப்படுத்தினார். ஜனநாயகத்தின் உள்ளடக்கம் பலவீனமடைந்திருக்கும் சூழலில் எத்தகைய வலிமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பயனற்றுப் போகும். எந்தப் பெரிய ராஜ்ஜியமும் எளிதில் தோற்கடிக்கப்பட்டு விடும் என்றும் உரைத்தார்.

அவர் தனது உரையில் ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹசைனின் நகர்வுகள் எவ்வாறு அவருக்கு பாதகமான சூழலையும் ஈற்றில் அவருக்கும் நாட்டுக்கும் அழிவையும் கொண்டுபோய்ச்சேர்த்தது என்பதை செப்ரெம்பர் 11க்கு பின்னரான நிலைமையில் வைத்து எடுத்து விளக்கினார். அவரது உரையில், இப்போதுள்ள அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வராவிட்டால் புலிகளின் தலைமைக்கும் அத்தகைய நிலையையே ஏற்படலாம் என்பது சூசகமாக எடுத்துரைக்கப்பட்டது.

அவரின் உரையில் அவர் கோடிகாட்டிய இன்னொரு விடயம் இலங்கையின் ஆட்சி பீடத்திலிருந்து உடனடியாக மகிந்த ராஜபக்சவை அகற்றினாலன்றி இந்த விடுதலைப்போராட்டத்தை முன்னகர்த்த முடியாது. மாறாக அது பின்நோக்கி அழிவையே எதிர்கொள்ளும் என்பதாகும். போராட்டத்தைப் பாதுகாக்க வேணும் – அதை முன்னோக்கி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பரிந்துரையாகவே, அவர் தன்னுடைய உரையை ஆற்றினார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக மகிந்த ராஜபக்ஷ அரசியல் தலைமைக்கு வந்திருப்பது பெரும் நெருக்கடியையே ஏற்படுத்தும். ஒப்பீட்டளவில் ரணில் பலவீனமான தலைமைத்துவத்தைக் கொண்டவர். மேலும் சுயமாக முடிவுகளை எடுக்க முடியாத சூழலைக் கொண்டுள்ளவர். மேற்கின் நிகழ்ச்சி நிரலைத் தாண்டிச் சிந்திக்க முடியாதவர். அப்படியான ஒருவரைத் தேர்வு செய்திருந்தால் நெருக்கடிகளில் பலதும் அவரின் கழுத்தையே சுற்றியிருக்கும்.பதிலாக மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்திருப்பது கடுமையான நிலைமையை உருவாக்கும். தீவிர நிலைப்பாட்டைத் தன்னுடைய அரசியற் பாராம்பரியமாகக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷவை கொழும்பு அந்த வழியிலேயே மேலும் பலப்படுத்தும். அதற்கமைவாக தமிழர்களின் வாக்குகளும் மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்திருக்கிறது.இந்த மாதிரியான ஒரு சூழலுக்கு – நிலைமைக்கு, இடமளித்த – வாய்ப்பளித்த முறையை மு. தி தவறு என்றார்.

புலிகளின் தலைமைப்பீடம், குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரன் எடுத்திருந்த வரலாற்று ரீதியான இந்த முடிவுகள் தவறென்று பகிரங்க மேடையில் சொல்லப்பட்டது வன்னியில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அதுவே முதற்தடவை என எண்ணுகிறேன்.அந்த முடிவுகளின் விளைவுகள் வரலாற்று ரீதியில் எவ்வளவு பாதகமான நிலைமையை உருவாக்கியுள்ளன என்பதை விளக்கி, அந்த முடிவுகளின் பாதகங்களில் இருந்து எப்படி மீள வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அப்பொழுது மகிந்த ராஜபக்ஷ முதல்தடவையாக ஜனதிபதித்தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றியடைந்திருந்தார். மகிந்த ராஜபக்ஷவின் அந்த வெற்றிக்கு தமிழர்களின் வாக்குகள் கணிசமான அளவில் பங்களித்திருந்தன.புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்து நடத்திய பேச்சுவார்த்தையில் ரணில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. தம்மைப் பலவீனப்படுத்தும் உள்நோக்கத்துடன் ரணில் விக்கரமசிங்க செயற்பட்டிருக்கிறார். அதன் அடிப்படையிலேயே அவர் உடன்படிக்கையில் எட்டப்பட்ட விடயங்களை நிறைவேற்றாமல் விட்டதுடன், கிழக்கில் தமது தளபதியாக இருந்த கருணாவைப் பிரித்தெடுத்து அரசுடன் இணைத்துக் கொண்டார். இதெல்லாம் திட்டமிட்ட முறையில் ரணில் தமக்கு ஏற்படுத்திய நெருக்கடிகள் என புலிகள் கருதினர். இதன் விளைவாக ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாட்டை அவர்கள் அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தினர்.

இந்தச் சந்தர்ப்பத்தை  மகிந்த ராஜபக்ஷ தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கு மேலும் வாய்ப்பாக புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் தமது உத்தியாகவும் உபாயமாகவும் கையாண்ட வழிமுறையையும் மகிந்த ராஜபக்ஷவுக்கு உதவியது.நான்காம் கட்ட ஈழப்போருக்கு முந்திய சமாதானக் காலத்தில் புலிகளிடம் ஒரு போக்கு துரிதமாக வளர்ச்சியடைந்திருந்தது. அது எவரையும் கையாள்வது என்பது. ஏற்கனவே ஆயுத விநியோகம், மற்றும் பொருட்கொள்வனவு, பொருட்களை உள்ளே எடுத்து வருவது போன்றவற்றுக்கு இந்த உத்தி கையாளப்பட்ட ஒன்றுதான். ஆனால், சமாதான காலத்தில் இது இன்னும் விரிவடைந்து பல மட்டங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு முறைமையாகியது.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலின்போது அதையொட்டி ஒரு கையாளும் முறை (டீல்) கடைப்பிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் உண்டு. அது பகிரங்கமான தகவலும் கூட. மகிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது என்ற உறுதியளிப்புடன்  சிங்கப்புரி்ல் வைத்து புலிகள் ஒரு தொகுதி பணத்தைப் பெற்றனர் என்று வந்த தகவல்களை இங்கே நினைவு கூரலாம்.அப்படி நிதிப் பரிமாற்றம் நடந்ததோ இல்லையோ, புலிகள் ரணிலுக்கு எதிராக எடுத்த தீர்மானமும் அதனையொட்டி அவர்கள் கோரிய தேர்தல் பகிஸ்கரிப்பும் மகிந்த ராஜபக்ஷவை இலகுவாக ஆட்சியில் அமர்த்தியது.

ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ அரசு உடனடியாகவே களத்தில் – காரியத்தில் இறங்கியது. மகிந்த ராஜபக்ஷ ஒரு பக்கத்தில் சந்திரிகா குமாரதுங்கவை ஓரங்கட்டினார். தொலைவுக்குத் தள்ளினார். அதேவேளை ரணிலை மேலும் பலவீனப்படுத்தினார். புலிகளின் அணுகுமுறைகளைப் பின்பற்றி மிக வேகமாக நடவடிக்கைகளில் இறங்கினார்.

பேச்சுவார்த்தையின் முறிவை அடுத்து அவர் உடனடியாகவே யுத்தத்தில் இறங்கினார். புலிகள் அளித்த வாய்ப்புகளை இழப்பதற்கு அவர் விரும்பவி்ல்லை. எப்படி ஆட்சியில் அமர்வதற்கு, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு புலிகள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தனரோ அப்படியே யுத்தத்திற்கும் அவர்கள் வாய்ப்பொன்றை உருவாக்கித் தந்துள்ளனர் என அவர் நினைத்திருக்கலாம். (இறுதியில் புலிகளைத் தோற்கடித்து வெற்றியடைந்தபோதும் அவர் அப்படி யோசித்திருக்கக் கூடும்).எப்படியோ சமாதானப் பேச்சுகளை அடுத்து உருவாகியிருந்த நெருக்கடி நிலை போராக உருவாகியபோது அதை முழு அளவில் விஸ்தரிப்பதில் அரசாங்கம் கருத்தாக இருந்தது.

இதற்குக் காரணம், சர்வதேச, பிராந்திய நிலைப்பாடுகளும் நிலைவரங்களும் கொழும்புக்கு ஆதரவாகவும் புலிகளுக்கு எதிராகவும் இருந்தமையே. பிராந்திய, சர்வதேச நிலைப்பாட்டை நன்றாக அறிந்திருந்த கொழும்பு அதற்கேற்ற வகையில் தன்னைத் தயார்ப்படுத்தி, புலிகளுக்கு எதிரான வியுகத்தை வகுத்தது.மு.திருநாவுக்கரசு இதனையே தன்னுடைய உரையில் விளக்கிக் குறிப்பிட்டார்.

lttetraininginjanuary20ul2.jpg

ஏறக்குறைய ஒரு வலிமையான தீர்மானத்துடன் அவர் கடுந்தொனியில் இந்த உரையை ஆற்றினார் எனலாம். இந்த உரை அங்கே இருந்த பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. எப்படி இவ்வாறு வெளிப்படையாக மு. தி இந்த விசயங்களையெல்லாம் பேசுகிறார்? இது ஏற்படுத்தப் போகும் எதிர்விளைவுகள் என்ன? சாதகமான விளைவுகள் என்ன? என அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதை அறியும் ஆவலும் அவர்களிடம் இருந்தது.

சிலருக்கு அந்த உரை மகிழ்ச்சியை அளித்தது. அவர்களும் ஏறக்குறைய அத்தகைய புரிதலுடன் இருந்தவர்கள். அரசியல் ரீதியான முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கங்களையும் விளைவுகளையும் அவர்கள் வரலாற்றறிவுடன் உணர்ந்து கொண்டவர்கள். இந்த நிலையில் இப்படி மு.தி வெளிப்படையாகத் துணிச்சலுடன் பொது அரங்கில் இந்த விசயங்களைப் பேசியது ஒரு முக்கியமான தொடக்கம். ஒரு காலப்பணி. அவசியமான விசயம். அந்தக் கட்டத்திலாவது எடுத்துரைக்கப்பட வேணும் என அவர்கள் கருதினர்.

சிலருக்கு அந்தப் பேச்சு அதிக சங்கடத்தை அளித்தது. இப்படிச் சங்கடப்பட்டவர்களில் அநேகர் புலிகளி்ன் உறுப்பினர்கள் மற்றும் அதி தீவிர நிலைப்பாட்டையுடையோர். இந்தத் தரப்பினரைப்  பொறுத்தவரையில் மு.திருநாவுக்கரசு முன்வைத்த கருத்துகளை மறுக்கவும் முடியாது, ஆனால் அதைப் பகிரங்க நிலையில் ஏற்கவும் இயலாது. காரணம், இயக்கத்தை, தலைமையை, அதன் முடிவுகளை இப்படிப் பகிரங்க அரங்கில் விமர்ச்சிக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு இருந்ததாக இயக்கம் கருதும் என்ற அச்சம். அது அவர்களுக்கு பல நெருக்கடிகளைக் கொடுக்கும் என அவர்கள் பயந்தனர். அதேவேளை அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவும் அவர்களால் முடியவில்லை. இந்த நிலையில் மெல்லச் சிலர் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கினர்.

சிலருக்கு கடுமையான முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. சிலரை அது கடுப்பாக்கியது. இவர்கள் இயக்கத்தின் அதிதீவிர விசுவாசிகள். தலைமையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காதர்கள். இவர்களிலும் சிலர் சட்டென அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றனர். அந்த உரைக்கும் அந்தக் கருத்தரங்குக்கும் எதிர்ப்புக் காட்டும் விதமாக அப்படி அவர்கள் நடந்து கொண்டனர். ஏனையோர் இறுதிவரையில் என்ன நடக்கிறது என்று அறிவதற்காகக் காத்திருந்தனர். தகவலறியும் துறையைச் சேர்ந்தவர்கள் எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தனர். சிலர் ஒலிப்பதிவுச் சாதனங்களில் மு.தியின் உரையைப் பதிவு செய்தனர். சிலர் அதை ரகசியமாகச் செய்தனர்.ஆனால், மு.தி. தன்னுடைய உரையைத் தொடர்ந்து கேள்விகளுக்கு இடமளித்தார். பலர் கேள்விகளை எழுப்பினர். அப்போதிருந்த நெருக்கடி நிலையின் வளர்ச்சியைப் பற்றிய கேள்விகளே அதிகமாக இருந்தன. மாலை இருண்டு இரவாகும்போது கூட்டம் முடிவடைந்தது. இருளோடு கரைந்தவாறு பலரும் வெளியேறினர்.

பலருக்கு மு.தியின் உரை வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும். சிலருக்கு அது எரிச்சலை ஊட்டியிருக்கும். சிலருக்கு அது மேலும் இருளாகவே இருந்திருக்கும்.ஆனால், அந்த உரை ஆற்றப்பட்ட காலத்தினாலும் ஆற்றப்பட்ட முறையினாலும் உரை நிகழ்ந்த சூழலினாலும் மிகுந்த முக்கியத்துவமாக இருந்தது. இயக்கத்தையும் தலைமையையும் பகிரங்கமாக விமர்சித்து, எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்கும் பொறுப்பு சகலருடையதும் என்று அது வலியுறுத்தியது.

ஆனால், இந்த உரையை அடுத்து நடந்த நிகழ்ச்சிகள் அவ்வளவு மகிழ்ச்சியளிக்கும் படியாக அமையவில்லை. ஓரளவுக்கு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப்போல அந்த உரை பலவிதமாக வியாக்கியானம் செய்யப்பட்டது. அவரவர் தத்தமது நிலைப்பாட்டுக்கும் புரிதலுக்கும் ஏற்றமாதிரி அதை கூட்டிக் குறைத்து எடுத்துக் கொண்டனர். காவிச்சென்றனர். மற்றவர்களுக்கும் அதைத் தமக்கேற்றவாறு பகிர்ந்தனர்.

இதேவேளை இயக்கத்தின் முக்கியஸ்தர்களாக இருந்த தளபதி கேணல் தீபன், ஜெயம், பானு, சசிகுமார், போன்றவர்களும் புலனாய்வுத்துறையின் முக்கியஸ்தர்களாக இருந்த மாதவன் மாஸ்ரர், கபிலம்மான், பொட்டம்மான், கபில், தூயமணி போன்றவர்களும் அரசியல்துறைப் பொறுப்பாளராக அப்போதிருந்த சு.ப.தமிழ்ச் செல்வன் மற்றும் அவருடைய அணியைச் சேர்ந்தவர்களும் அந்த உரையை  ஒலிப்பதிவு செய்யப்பட்ட சீடிக்களில் கேட்டனர். இதற்காக பல சீடிக்கள் பரிமாறப்பட்டன.

ஒரு கட்டத்தில் அந்த உரை தொடர்பாக பல வகையான அபிப்பிராயங்கள் பரவின. சிலர் அந்த உரை இயக்கத்தைச் சீற்றமடைய வைத்துவிட்டது என்றார்கள். சிலர் அந்த உரை இயக்கத்தின் கவனத்திற்குப் போய் விட்டது என்றார்கள். இரண்டிலும் ஓரளவுக்கு உண்மையிருந்தது.ஆனால், அந்த உரை நடந்த அன்றிரவே தமிழீழ நுண்கலைக் கல்லூரிக்குப் பொறுப்பாக இருந்தவர் ,தமிழ்ச்செல்வனால் அழைக்கப்பட்டு விவரம் கேட்கப்பட்டார். பாலகுமாரன், பரா, ரமேஸ், ரவி, தமிழினி போன்ற அரசியல்துறையைச் சேர்ந்தவர்கள் மறுநாள் நடந்த தமிழ்ச் செல்வனுடனான சந்திப்பில் இது குறித்து பதிலளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலைமையானது மு. தியிடத்திலும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களிடத்திலும் ஒரு வித கேள்வியை – அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்க்கையையும் அளித்தது. ஏறக்குறைய ஒரு விதமான உட்பதற்ற நிலை பொதுவாகவே உருவாகியிருந்தது.

00000000

(தொடரும்……………..)

http://eathuvarai.net/?p=3349

  • கருத்துக்கள உறவுகள்

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…02
 
வரலாறு ஒரு போதும் தட்டையானதோ ஒற்றைப்படையானதோ அல்ல. யாருடைய விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தும் இருப்பதில்லை. அது உள்ளபடி, உண்மையின் அடிப்படையில் இருக்கும்.

இதையும் நீங்கள் தான் எழுதுகிறீர்கள்!
பின்பு ஏன் குத்தி முறிகிறீர்கள் என்றும் புரியவில்லை.
வரலாறு அது தன்பாடிட்கு கிடந்துட்டு போகட்டுமே.
 
உங்களுக்கு சுய விளம்பரம் தேவை!
தமிழன் எப்பாடு பட்டாலும் பரவாயில்லை. ஏதாவது ஊடக அடையாள அட்டை வைத்து உங்களை காத்துகொண்டு. இப்போ எதை அவித்தால் எதிர்மறையாக அவியும் என்று கணக்குபோட்டு அவித்து விடுவது.
 
பிரபாகரனுக்கும் உங்களுக்கும் இவளவு வயது வித்தியாசம்?
பதினாறு வயதில் நாட்டுக்காக வீடை விட்டு வெளியேறினான்.
நீங்கள் இதுவரையில் நாட்டுக்காக எதை செய்து கிழித்தீர்கள் என்று ஒரு பட்டியலை போடுங்கள். ஒப்பிட்டு பார்க்க உதவியாக இருக்கும்.
 
எதையாவது செய்பவன்தான் ............... பிழைகளோடு என்றாலும் ஒன்றை செய்ய முடியும்.
இன்று 400- 500 பயணிகளை ஏற்றிக்கொண்டு பறக்கும் விமானங்கள் ரைட் சகோதர்கள் பரந்த விமானத்தில் இருந்து திருத்திய பிழைகள்தான். அத்தனை பிழைகளோடு அந்த விமானத்தில் அவர்கள் பறக்க வில்லை என்றால் . என்று எம்மாலும் பறக்க முடிந்திருக்காது. 
அவர்களின் விமானம் பறக்காது .............. அப்படி பறந்தாலும் அதில் யாரும் போக முடியாது ......... சாவு தேவையானவர்கள் வேண்டுமானால் போகலாம். என்று  கட்டுரை வடிக்க அன்றும் பல  உங்களை போன்ற குறளி  வித்தை கார்கள் இருந்தார்கள். (இப்போ மக்கள் பொழுது போக்கிற்கு  இந்த கட்டுரைகளை வாசித்து சிரித்துகொண்டு விமானங்களில் நாடுநாடாக பறக்கிறார்கள்).
 
உங்களை போன்ற தமிழனை கொண்ட இனத்திற்கே புலிகள் போராடினார்கள் என்று முதலில் கொட்டை  எழுத்தில் போட்டுவிட்டு எழுதுங்கள். அதன் பிறகு கீழே வாசிக்க யாருக்கும் தேவை இருக்காது . எத்தனை பிழைகளை தண்டவேண்டி இருந்திருக்கும் என்பதற்கு அந்த ஒரு வரி போதும்.
  • கருத்துக்கள உறவுகள்

*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04

ஈழநாதத்தில் வெளிவந்த நிலாந்தனின் அரசியல் பத்தி இடைநிறுத்தப்பட்டது மட்டுமல்ல, அதற்குப் பின்னர் தமிழீழத் தொலைக் காட்சியில் அவர் அரசியல் விவாத நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கவும் அழைக்கப்படவில்லை. பதிலாக அவர் தெரிவித்த கருத்துகளை மறுதலிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டன.

இதேகாலப்பகுதியில் அமரதாஸின் ஒளிப்படங்களின் தொகுதி ஒன்று ‘வாழும்கணங்கள்’ என்ற பெயரில் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இந்தப் தொகுதியை வெளியிட்டது தமிழீழ நுண்கலைப் பிரிவு. இந்த நிகழ்வில் நிலாந்தன் விமர்சன உரையாற்றினார். ஒளிப்படங்களைப் பற்றித் தன்னுடைய கண்ணோட்டத்தை அவர் முன்வைக்கும்போது ‘கருவி முக்கியமல்ல. கலைஞனின் திறனே முக்கியமானது. நல்ல ஒளிப்படங்களுக்கு அதைப்பற்றிய அழகியல் உணர்வும் சமூக அக்கறையும் முக்கியமானது. படங்களின் செய்தியும் அதைச் சொல்லும் விதமும் ஒருங்கிணையும்போதே படங்கள் சிறக்கின்றன. அவையே கலையாகின்றன…..’ என்று தெரிவித்தார்.

ni-fin-p2-280x300.png

இது நடந்து இரண்டு நாட்களில் நிலாந்தனுக்கு ஒரு கடிதம் வந்தது. தமிழீழப் புகைப்படப் பிரிவுக்குரிய கடிதத் தலைப்பில், அதனுடைய பொறுப்பாளர் செந்தோழன் கையொப்பமிட்டு அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். அதுவொரு கண்டனக் கடிதம். ஆனால், உண்மையான அர்த்தத்தில் அது அச்சுறுத்தற் கடிதமே. ‘புகைப்படத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டுக்கார்கள் தொடக்கம் புலம்பெயர் மக்கள் வரையில் புகைப்படப்பிரிவின் படங்களைப் பார்த்துப் பாராட்டுகிறார்கள். தலைவரும் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதையெல்லாம் பொருட்படுத்தாமல், புகைப்படங்களைப் பற்றி வியாக்கியானம் செய்திருக்கிறீர்கள். போராளிகள் எடுத்த புகைப்படங்கள் உங்களுடைய கண்ணுக்கும் கவனத்திற்கும் தெரியாமல்போனது கண்டிக்கத்தக்கது…..’ என்றெல்லாம் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

சந்தேகமில்லை, அதுவொரு எச்சரிக்கைக்கடிதம்தான். மட்டுமல்ல, புகைப்படத்தைப் பற்றிக் கதைப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றும் அதில் கேட்கப்பட்டிருந்தது. ஒரு பொது இடத்தில் பகிரங்கமாக வைக்கப்பட்ட ஒரு கருத்துக்கு இப்படி அளிக்கப்பட்ட எதிர்வினையை நிலாந்தன் நண்பர்களிடம் தெரிவித்தார்.

அந்தக் கடிதத்தைப் பிரதியெடுத்துப் புலிகளின் முக்கியதஸ்தர்களாக இருந்த அனைவருக்கும் நிலாந்தன் அனுப்பினார். எல்லா இடங்களிலும் மௌனம் வேர்விட்டது.

நிலாந்தனின் அபிப்பிராயங்கள் தொடர்பாக புலிகள் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு மேலும் சில பின்னணிகள் இருந்தன. அன்ரன் பாலசிங்கத்தின் மரணத்தை அடுத்து அவரை முன்வைத்து ஈழநாதத்தில் நிலாந்தன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். கட்டுரையின் தலைப்பு பிதாமகன். அதில் பாலசிங்கம், அவருடைய அணுமுறைகள் தொடர்பாக ஒரு மென்னிலையான மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இன்னொன்று, சதாம் ஹுசைன் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் எழுதப்பட்ட கட்டுரையில் சதாமை முன்னிறுத்தி, புலிகளின், பிரபாகரனின் அரசியலை நிலாந்தன் எழுதியிருந்தார். கதவுகளை இறுக மூட மூட அதைத் திறக்கும் முயற்சிகளே நடக்கும். அப்படியான ஒரு நிலையில், ஜனநாய வெளியற்ற நிலையிற்தான் சதாமின் வீழ்ச்சி ஏற்பட்டது. எதிரிகளுக்கான வாசலை இலகுவாக தானே திறந்து வைத்தார் சதாம் என்று அந்தக் கட்டுரை கூறியது.

இதெல்லாம் புலிகளுக்கு உவப்பான விசயங்களாக இருக்கவில்லை. ஆனால், தான் உணரும் விசயங்களையும் கண்ணுக்கு முன்னே நிகழ்கின்ற நிகழ்ச்சிப்போக்கினையும் வெளிப்படுத்துவது அவசியம் என்பது நிலாந்தனின் நிலைப்பாடு.

அவருடைய இத்தகைய நிலைப்பாட்டின் காரணமாக முன்னரும் ஒரு தடவை அவர் எழுதும் பத்தி இடைநிறுத்தப்பட்டது. அது 1993 இல்.  அப்பொழுது ஈழநாதத்தில் வாரப்பத்தி எழுதி வந்தார் நிலாந்தன். அந்த நாட்களில் யாழ்ப்பாண முற்றுகையைப்பற்றி கொழும்பில் தீவிரமாக யோசிக்கப்பட்டது. கொழும்பின் சிந்தனை எப்படியாக உள்ளதென தன்னுடைய ஆய்வை முன்வைத்திருந்தார் நிலாந்தன். விளைவு, அவர் எழுதுவதற்கான வெளி இழுத்து மூடப்பட்டது.

பிடிக்காத அபிப்பிராயங்களை அடக்குவதற்கு குரல்வளையை நெரிக்கும் வழிமுறை இலங்கையில் பிரசித்தம். அதற்கொரு பாரம்பரியமே உண்டு. குரல்வளையை நெரித்ததில் எல்லாக் கைகளுக்கும் பங்குண்டு. இப்பொழுதும் இதுதான் நிலை.

மாற்றுச் சிந்தனை, மாற்று அபிப்பிராயம் போன்றவற்றை ஏற்கும் பண்பும் பக்குவமும் பலரிடமும் கிடையாது. ஆகவே அடிப்படையில் இவர்கள் எல்லாரும் ஒன்றே. ஆளாளுக்கு, தரப்புகளுக்கிடையில் விகித வேறுபாடுகள் இருக்கலாம். மற்றபடி வித்தியாசங்கள், வேறுபாடுகள் எல்லாம் பெரிய அளவில் கிடையாது. துப்பாக்கியுடன் நின்றால் மட்டும்தான் ஜனநாயக விரோதம். துப்பாக்கியைக் கைவிட்டு விட்டால் ஜனநாயகம் தளைத்தோங்கி விடும், புதிதாக அது செழித்துப் பூக்கும் என்று சிலர் நம்பலாம். அவர்களுடைய புரிதல் அந்தளவுக்கு இருந்தால் அதற்கான தண்டனையை நாம்தான் பெற வேண்டும். இப்பொழுது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

பிறருடைய கருத்துகளைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக அவர்களைப்பற்றிப் பழிசொல்வது, அவர்களுடைய பின்னணி, முன்னணியைப்பற்றிப் பேசி,  முன்வைக்கப்பட்ட கருத்தை, நியாயத்தை, நிலைப்பாட்டைத் திசை திருப்புவது அல்லது அதை மூடித்திரையை விரித்து விடுவது. இது முழு  அயோக்கியத்தனமே.

மாற்று அபிப்பிராயத்தை அங்கீகரிக்காத சூழலும் மனமும் ஏதேச்சாதிகாரத்தின் அசல் வடிவமே. இதைப் பற்றிப் பல கோடி வார்த்தைகளைப் பலரும் எழுதியும் பேசியும் விட்டார்கள். இதைச் சொல்லிச் சொல்லியே வரலாறும் களைத்துச் சலிப்படைந்து விட்டதது. தமிழ்ச் சூழலிலும் அரிச்சுவடி தொடக்கம் பல வகுப்புகள் இதைப் பற்றி போதித்து விட்டாயிற்று. ஆனாலும் நிலைமையில் ஒரு படிகூட முன்னேற்றமில்லை.

வெறியோடு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்து ஆணைகளை மற்றவர் மீது பிரயோகிக்கவே, ஏற்றிவிடவே முயற்சிக்கின்றனர். தங்களுடைய அபிப்பிராயத்தைத் தவிர வேறொன்று இல்லை, இருக்கக் கூடாது என்பதே பலருடைய விருப்பமும். அந்த விருப்பத்தை நடைமுறைப்படுத்தவே மற்றவர்களுடைய குரல்வளையை நெரிக்கிறார்கள். அது முடியாதபோது எதிராளியை விலக்குவது, குற்றம்சாட்டுவது, வசைபாடுவது, தூற்றுவது எல்லாம் நடக்கின்றன. இதெல்லாம் அதிகாரத்தின் பாற்பட்ட விசயங்கள்.

ranil.jpg

அரசொன்றிடம்தான் அதிகாரம் இருக்கும் என்றில்லை. அரசுக்கு அப்பால் சாதாரண தரப்புகளிடமும் அதிகாரம் குவிந்துள்ளது.  அரசிடம் இருக்கும் அதிகாரத்தையும் விட இந்த மாதிரியான போக்கை வைத்திருக்கும் உளவியலில், கருத்தியலில் இருக்கும் அதிகாரம் பெரிது. இதைக் கடைப்பிடிக்கும் தரப்பினரிடம் உள்ள அதிகாரம், இத்தகைய போக்கினை நடைமுறைப்படுத்துகின்ற ஊடகங்களிடம் – ஊடகவியலாளர்களிடம் இருக்கும் அதிகாரம் போன்றன இன்னும் வலியன. அரசின் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கால எல்லையைக் கொண்டது. அது ஆட்சி மாற்றமொன்றின் போது அல்லது ஆட்சிக் கவிழ்ப்பொன்றின் மூலம் மாற்றி விடக்கூடியது. அல்லது தலைமைத்துவ மாற்றங்களில் நெகிழ்ந்து கரைந்து விடக்கூடியது. அதற்கப்பால் நீடித்தாலும் அதை மக்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தோற்கடிக்க முடியும். ஆனால், வெளியே ஒரு சமூக நோயாகப் பரவியிருக்கும் இந்த நிலை எளிதில் மாறிவிடக் கூடியதல்ல. இதனுடைய வேர்கள் பல முனைகளில் நீண்டு ஓடிவிடக்கூடியன. பல தளங்களில் ஊடுரூவிப் பின்னிப் பிணைந்து விடக்கூடியன.

இத்தகைய பாரம்பரியத்தை உடைய தமிழ் அரசியல் தளத்தில், இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றும் புலிகள், நெருக்கடிக் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், தங்களுக்கு உவப்பில்லாத விசயங்களையிட்டு எச்சரிக்கையடைந்தனர். இடைக்காலத்தில் அவர்களிடமிருந்த நெகிழ்ச்சி, நெருக்கடிக் காலத்தில் சுருங்கி இறுகியது.

ஆரம்ப காலப் புலிகளிடத்தில்  கடும்போக்கும் தீவிரத்தன்மையும் நிறைந்திருந்தது. ஆனால், 1990 களுக்குப் பின்னர் மாற்று அபிப்பிராயங்களை உடனடியாக எதிர்க்காமல், அவற்றுக்கு உடனடித் தண்டனை, பகிரங்க நடவடிக்கை என்ற வகையில் காரியமாற்றாமல், விட்டுப்பிடித்தல், ஓரளவுக்கு அபிப்பிராயங்களுக்குச் செவிமடுத்தல் என்றவகையில் அவர்களுடைய அணுகுமுறைகள் இருந்தன.

புலிகளிடம் ஏற்பட்டிருந்த மெல்லிய நெகிழ்ச்சியான போக்கு அல்லது தந்திரோபாயம் இது எனலாம். இதனால்,  முன்னரைப்போலன்றி, பின்னர் பல வகையான அபிப்பிராயமுடையவர்கள் புலிகளுக்கிசைவாக ஆதரவு நிலையெடுக்கவும் இணைந்து பங்காற்றவும் முயன்றனர்.

t-b-fi1-194x300.png

இது சற்று விரிவடைந்து பல்வேறு தரப்பினரும் மாற்றுக் கருத்து நிலையோடும் புலிகளில் இணையவும் தொடங்கினர். இடதுசாரிகள், முற்போக்காளர்கள், ஆன்மீகவாதிகள், தேசியவாதிகள், கடும் தேசியவாதிகள், ஜனநாயகவிரும்பிகள், மனிதநேயிகள், பெண்விடுதலையாளர்கள், ஆணாதிக்கர்கள், சாதிவெறியர்கள், சாதியத்துக்கெதிரானோர், பிரதேசவாதிகள், இயக்கப்பற்றாளர்கள், தலைமை விசுவாசிகள் எனப்பல தரப்பினர். இவ்வாறு பல வகையான அபிப்பிராயங்களைக்கொண்டிருந்தோரின் ஒருகூட்டமைப்பாக பிந்திய புலிகள் அமைப்பு இருந்தது. குறிப்பாக 1990 களுக்கு பிந்திய புலிகள். 2000 க்குப் பின்னர் இந்த நிலைமையில் மேலும் நெகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனையிறவு வெற்றிக்குப் பின்னர் இது இன்னும் விரிவடைந்தது. 2002இல் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் இந்த நெகிழ்ச்சி மேலும் அதிகரித்து, பரஸ்பரம் எதையும் பேசலாம் என்ற அளவுக்கு ‘தோற்றம்’ காட்டியது.இதற்கெல்லாம் காரணம், அவர்கள் ஒரு அரசாக வளர்ச்சியடைந்து வந்தமையே. அரசொன்றாக வளர்ச்சியடையும்பொழுது, அதனுடைய கட்டமைப்புகள், பரிபாலனங்கள் என்றெல்லாம் ஏராளம் விவகாரங்கள் முன்னே நிற்கும். இவை கடும்போக்கிற்கு அல்லது தீவிரத்தன்மைக்கு முற்று முழுதாக இடமளிக்காது. எனவே விட்டுக்கொடுப்பும் சமரசமும் தவிர்க்க முடியாதாக இருந்தன. விருப்பமில்லாது விட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், நிலை, கட்டம்.

எனவே விருப்பமில்லாத விசயங்களாக இருந்தாலும் அவற்றைக் கேட்பது, சிலவற்றைப் பொருட்படுத்தாததைப்போல விடுதல், எதையும் மறுக்காமல் கேட்டல்(காதுகொடுத்தல்), ஆனால் அதைப் பற்றிக் கவனத்தில் எடுக்காது விடுதல் (இது ஒரு வகையில் அவமானப்படுத்தல்தான்) என்ற வகையில் இதனைக் கையாண்டனர்.

ஆனால், இந்தக்காலத்தில் பல வகையான கருத்துக்களையும் ஓரளவு விவாதிக்கக்கூடிய, பேசக்கூடிய நிலை உருவானது. அப்பொழுது தடைசெய்யப்பட்டிருந்த பல விசயங்கள் தளர்வுக்குள்ளாகின. புலிகளைக்கடுமையாக விமர்சிக்கின்ற பத்திரிகைகள், புத்தகங்கள் கூட புலிகளால் நடத்தப்பட்ட அறிவு அமுது போன்ற புத்தகக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. வன்னிக்கு வரவே அஞ்சியவர்கள் புலிகளின் முகாமில் படுத்துறங்கினார்கள். அவர்களுடைய வண்டிகள், வாகனங்களில் ஏறித்திரிந்தனர்.

2002 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப்பின்னர் கிளிநொச்சிக்கு வந்திருந்த தராகி டி.சிவராம் அறிவு அமுது புத்தகக்கடையில் இருந்த புத்தகங்களைப்பார்த்துவிட்டு ஆச்சரியம் தாளமுடியாமல் சொன்னார், ‘நாங்கள் நினைத்த புலிகள் வேறு, இங்கே (வன்னியில்) இப்போதுள்ள புலிகள் வேறு’ என்று. அறிவு அமுதுவில் கால் மாக்ஸில் இருந்து பெரியார் வரையில், அல்தூசர், கிராம்சி, ழான் போல் சாத்தர், காம்யு எனச் சகலருடைய புத்தகங்களும் இருந்தன. அசோகமித்தினும் இருந்தார். சுந்தர ராமசாமியும் இருந்தார். ஷோபா சக்தியும் சக்கரவர்த்தியும் ஜெயமோகனும் இன்குலாப்பும் அறிவுமதியும் காசி. ஆனந்தனும் பா.செயப்பிரகாசமும் இருந்தனர்.

அந்தளவுக்கு தாராளவாதம் நிலவியது. இந்த தாராளவாதத்தின் எல்லை எந்தளவு? அதனுடைய வகை எப்படியானது? என்பதெல்லாவற்றுக்கும் சரியான பதிலோ முறையான விளக்கமோ இல்லை. ஆனால், நீளக்கயிற்றில் உலாத்தக் கூடிய அளவுக்கு உலாத்தலாம். இதனால்தான் சிவராம் போன்றோர் காந்த விசையால் கவரப்பட்டவர்கள் போல பிறகெல்லாம் வன்னிக்குத் தொடர்ச்சியாகப் படையெடுத்தனர். பின்னாட்களில் கொழும்பிலிருந்ததை விட வடக்கிலும் கிழக்கிலும் சிவராம் நின்ற நாட்களே அதிகம். அதிலும் கிளிநொச்சியிலும் படுவான்கரையிலும் சிவராம் சைக்கிளில் அல்லது மோட்டார் சைக்கிளில் தனிக்காட்டு ராஜா போல் உலாத்தித்திரிந்தார். சிவராம் மட்டுமல்ல, அவரைப் போலப் பலருக்கும் வன்னி இனித்தது. ஆனால், வன்னியிலிருந்தவர்களுக்கு….. இதையெல்லாம் பார்க்கச் சிரிப்புத்தான் வந்தது.

சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சம்மந்தன், ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம் போன்றோர் கிளிநொச்சிக்கு துணிந்துவரக்கூடிய தெம்பு வந்ததற்கும் காரணம் சிவராம் போன்றோர் வன்னிவாசிகளைப்போல் கிளிநொச்சியில் சுற்றித்திரியக்கூடியதாக இருந்ததே.புலிகளின் இந்த நெகிழ்ச்சி அல்லது இந்தத் தந்திரோபாயம் பலரையும் வளைத்துப்போட வாய்த்தது. அதேவேளை புலிகளிடம் ஏற்பட்டுள்ள குணமாற்றம் அல்லது பண்பு மாற்றம் இது என்று பலராலும் கருதப்பட்டது. புலிகள் ஜனநாயகத்தளத்தை நோக்கி மெல்ல மெல்ல விரிவடைந்து வருகின்றார்கள் என்ற அபிப்பிராயங்கள் உருவாகின. சரித்திரத்திலேயே எதிர்பாராத பல சம்பவங்கள் இந்தக்காலத்தில் நடந்தன. ஒருபோதுமே பிரபாகரன் தான் சந்திக்க விரும்பாத மனிதர்களையெல்லாம் சந்தித்தார். அதைப்போல தாங்கள் ஒருபோதுமே பிரபாகரனைச் சந்திக்கமாட்டோம் என்றிருந்தோர் பிரபாகரனுடன் கைகுலுக்கினார்கள்@ விருந்துண்டார்கள். பலதையும் பத்தையும் பேசினார்கள். சிலர் பிரபாகரனுக்கு ஆலோசனைகளைக்(?) கூட வழங்கினார்கள். இதெல்லாம் உள்ளேயும் வெளியேயும் பல அதிர்வலைகளை – புரியாத புதிர்களை உருவாக்கின.

இத்தகையதொரு நிலையில் இயக்கம் பற்றி –  அதனுடைய போராட்ட நடைமுறை பற்றி – போராளிகள் பற்றி – கட்டமைப்புக்கள் பற்றி – இயக்கத்தின் அரசியல் பற்றி – தலைமையைப் பற்றி – பொறுப்பாளர்கள், தளபதிகளைப் பற்றி சர்வதேச அரசியற்ச+ழல் பற்றியெல்லாம் பல மட்டங்களிலும் விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் பகிரப்பட்டன. கடுந்தொனியில் இல்லையென்றபோதும் பரவலாக இந்த விமர்சனங்கள் இருந்தன. அபிப்பிராயங்களைப் பகிரும் போக்கு மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து வந்தது.

tna-mp1.jpg

இது அடுத்த கட்ட வளர்ச்சியடைந்து, பொது மேடைகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கூட மெல்லிய அளவில் மாற்று அபிப்பிராயங்களைப் பகிரக்கூடிய நிலைக்குச் சென்றது. ஆனால், இந்த நிலையை இயக்க விசுவாசிகளாக இருந்தோராலும் தலைமைப்பீடத்துக்கு நெருக்கமாக தங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்போராலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இயக்கத்தின் இந்த மாதிரியான நெகழ்ச்சியை எதிர்த்தார்கள். பதிலாக பேசப்படும் விசயங்களைத் திரிப்பதிலும் அதற்கெதிராகத் தலைமைப்பீடம் நிலைப்பாடு எடுக்கும் விதமாகவும் நடந்து கொண்டார்கள். புலிகள் இயக்கத்தின் மரபார்ந்த நிலைப்பாடான கடும்பிடியைத் தளர விடுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அது இயக்கத்தையும் போராட்டத்தையும் பலவீனப்படுத்தும் என்று நம்பினார்கள். கண்ட விசயங்களையும் கண்டநிண்ட தரப்பினரையும் சேர்த்தால் அது எல்லாவற்றையும் பாழடிக்கும் என்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

இதேவேளை, முந்திய காலம் வேறு. அதனுடைய நிலைமைகளும் தேவைகளும் வேறு. இன்றைய நிலைமையும் தேவைகளும் பிரச்சினைகளும் வேறு. ஆகவே கால நிலவரங்களுக்கு ஏற்றமாதிரி மாற்றங்கள் செய்யப்படுவது அவசியம் என்ற அபிப்பிராயங்களும் வலுவாக முன்வைக்கப்பட்டன.

எல்லாத் தரப்பையும் சமாளித்து, ஒரு சமனிலையைப் பேண விரும்பினார் பிரபாகரன். தனித்தமிழ் பேணப்பட வேண்டும் என்று சொல்லும் தமிழேந்தியையும் அவர் அங்கீகரித்தார். தனித்தமிழில் எல்லாவற்றையும் எழுத முடியாது என்று சொன்ன புதுவை இரத்தினதுரையையும் ஏற்றுக்கொண்டார். புதிய விருந்தாளிகளாக வந்திருக்கும் அரசியல்வாதிகளையும் ஊடகவியலாளர்களையும் நம்ப முடியாது என்று ஒரு தரப்புச் சொல்ல, அவர்களை அரவணைத்து, அரசியல், ஊடகப் பலத்தைப் பெருக்க வேண்டும் என்று இன்னொரு தரப்புச் சொன்னது. இரண்டின் அபிப்பிராயங்களையும் ஏற்று, இரண்டு தரப்புக்கும் சமாதானம் சொல்லி புதிய விருந்தாளிகளைக் கைளாள்வோம் என்று வைத்திருந்தார். இப்படியே எல்லாவற்றையும் அனுசரித்துச் செல்லவேண்டிய ஒரு நிலையை மெல்ல மெல்ல புலிகள் ஏற்றுக்கொண்டிருந்தபோதே நான்காம் கட்ட யுத்தம் கருக்கொண்டது.

sivaram1.jpg

ரணிலுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர முடியாத ஒரு கட்டத்துக்குச் சென்றன. ரணில் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியிருந்தபோது அவருடைய அரசாங்கத்தைக் கலைத்தார் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க.

தன்னுடைய அதிகாரத்தைப் பிரயோகித்து, ரணில் அரசாங்கத்தில் இருந்து சில முக்கிய அமைச்சுகளைப் பறித்து, அந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளினார்சந்திரிகா குமாரதுங்க.  பிறகு புலிகளுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை செல்லுபடியற்றது என்றார். இதையெல்லாம் எதிர்த்து தன்னை நிறுவ முடியாத நிலையில் அன்று பலவீனமான நிலையில் இருந்தார் ரணில்.

எனவே அவரை இலகுவாகத் தள்ளிவிழுத்தி விட்டு, ஆட்சியைப் பறித்தார் சந்திரிகா. அந்தநேரம் ரணிலைக் காப்பாற்றுவதற்கு புலிகள் தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கொழும்பிலும் யாரும் இருக்கவில்லை. இந்தியாவோ, அமெரிக்கா உள்ளடங்கிய மேற்குலகோ முயற்சிக்கவில்லை. திரைமறைவில் சில முயற்சிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், பகிரங்கத்தளத்தில் ரணில் தனித்து விடப்பட்டார். தனித்து விடப்பட்ட ரணில் தோற்றுப்போனார்.  இதனால், நிலைமைகள் மேலும் சிக்கலடைந்தன.

இதேவேளை, இந்த நிலைமையானது, பெரும் நெருக்கடியை எதிர்காலத்தில் உருவாக்கப்போகிறது என அடித்துக்கூறினார் மு. திருநாவுக்கரசு. கொழும்பில் பலவீனமான ஒரு தலைமை இருக்கும்போதே தமிழர்கள் தமக்குச் சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது அவருடைய அபிப்பிராயம்.  இதை அவர் பலரிடமும் விளக்கினார். எந்தத்தரப்பில் இருந்தாவது, எந்த வழியின் ஊடாகவும் உரிய தரப்பிடம் சேதி போகட்டும் என்பதே அவருடைய நோக்கம்.

மாறியுள்ள உலக ஒழுங்கில் ஜனநாயகத்தை உள்ளடக்கமாகக் கொள்ளாத எத்தகைய அரசியற் போராட்டங்களும் நல்விளைவைத் தராது என்பது அவருடைய கருத்து. முறையான ராசதந்திரமும் வெளியுறவுக் கொள்கையும் அவசியம் என்றார். உள்நாட்டில் ஜனநாயக ரீதியில் மக்களையும் சமூகங்களையும் வளர்த்தெடுக்கும்போதே மக்கள் போராடும் திறனையும் துணிவையும் நியாயத்தையும் தார்மீக பலத்தையும் பெறுவர் என்று சொன்னார். இந்தக் கருத்துகளை மையப்படுத்தி அவர் பலருடனும் உரையாடல்களைச் செய்தார். எழுதினார். சமஷ்டியா தனிநாடா, ஒற்றை மைய உலகில் போரும் சமாதானமும் போன்ற புத்தகங்கள் இந்த அடிப்படைகளை வலியுறுத்தி அல்லது மையப்படுத்தி அவரால் எழுதப்பட்டன. கருத்தரங்கங்களையும் ஏற்பாடு செய்து அதிலே பேசினார்.

000000

(தொடரும்………..)

http://eathuvarai.net/?p=3018

சதாம் உசைனுக்கு அரசாங்கம் ஆனாலும் சாத்தியமா இருந்துச்சு ........

சதாம் போல கடும் போக்கு உடைய பிரபாகரனுக்கு .....
அரசு என்று வரும்போது அது சாத்தியம் இல்லாம் போய்விட்டது.
 
"அரசு என்று வரும்போது அது சாத்திய படாது"
அது எப்படி சதாமிற்கு இப்படி கேட்டால்?
உங்களின் கட்டுரைகளை நான் நம்பிய முட்டாள் ஆகிவிடுவேன்.
அது எப்படி முதல் பந்தியில் சாத்தியமாக இருந்த விடயம் 
மூன்றாம் பந்தியில் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது?
 
கட்டுரை எழுதுவதுவதை தவிர வேறு எதையும் நீங்கள் செய்தீர்கள் என்று நாம் அறியவில்லை. ஒரு கட்டுரையையே முன் பின் முரண் இன்றி எழுத முடியவில்லை.  இந்த  சொடிப்புக்குள் நின்றுகொண்டுதான். உண்மையான் விமர்சனம் விண்ணாணம் வராலாறு  என்று யாரோ முன்பு எழுதிய குப்பைகளையெல்லாம் வாசித்துவிட்டு மீண்டும் கொட்டிவிடுகிரீர்கள். ஒரு பக்க கட்டுரைக்குள் இத்தனை முரண்பாடு.
நீங்கள் போட்டு கிண்டுவது 30 வருடம் உங்களை விட வில்லங்கம் பிடிச்ச மனிதர்களோடு  மல்லுகட்டியத்தை என்பதை கொஞ்சம் நினைவில் வைத்து தொடுங்கள். 
 
ஆமி போட்ட குண்டுகளையே கொஞ்சம் தாங்க கூடியதாக இருந்துச்சு.
தொடரும்..... தொடரும்... என்று நீங்கள் போடும் குண்டுகள்தான் எஞ்சியவர்களையும் 
சாகடிக்கிறது.

மேலே இருப்பது "நிலாந்தனின்" மேற்கோள்

கீழே இருப்பது கட்டுரை யாளரின் சொந்த இலக்கணம்.
சதாம் எல்லா கதவுகளையும் மூடினார் என்பதை கட்டுரையாளரும் ஏற்றுகொள்கிறார்.
 
மூன்றாம் பந்தியில் புலிகள் கொஞ்சபேரை உள்ளுக்கு விட்டார்கள்.
அதை எப்படி திரிப்பது? என்று கேள்வி வரும்போது குத்துகரணம் போட்டு.
அது ஒரு அரசு என்று வரும்போது சாத்தியம் இல்லையாம்.
  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாம் கட்ட ஈழப்போரை இவர்கள் நடாத்துவார்கள்தானே? :D ஏன் வருத்தம்?? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாம் கட்ட ஈழப்போரை இவர்கள் நடாத்துவார்கள்தானே? :D ஏன் வருத்தம்?? :huh:

அப்படிதான்  இவளவு நாளும் நானும் நினைத்திருந்தேன் .

இந்த தொடரும் ....... தொடரும் குண்டுகளை போட்டு அதற்கு முன்பே எங்களை சாகடித்து விடுவார்கள்போல் இருக்கிறதே.
  • கருத்துக்கள உறவுகள்

கருணாகரனும் நிலாந்தனும் கடைசிவரை முள்ளிவாய்க்காலில் நின்றவர்கள். வன்னியில் நடந்தவற்றைப் பற்றித் தெரிந்தவர்கள் என்ற வகையில் அவர்களின் கருத்துக்களைத் தட்டிக் கழிக்கமுடியாது. முள்ளிவாய்க்கால் அவலம் நடக்காமல் தமிழரின் ஆயுதப் போராட்டம் யாரும் எதிர்பார்க்காத வகையில் முடிவுக்கு வராமல் இருந்திருந்தால் அவர்களின் கருத்துக்களைக் கண்டுகொள்ளாமல் விடலாம்.

எங்கே தவறு நடந்தது என்று ஆராயாமல் தவறே நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையுமில்லை என்று மகிந்த சொல்வதையும் நம்பத்தான் வேண்டிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இருவர் மட்டுமல்ல.. மூன்று லட்சம் மக்கள் இறுதிவரை நின்றிருந்தார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது..!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இருவர் மட்டுமல்ல.. மூன்று லட்சம் மக்கள் இறுதிவரை நின்றிருந்தார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது..!

உண்மைதான். ஆனால் அந்த மூன்று லட்சம் மக்களும் சொல்லாத கதைகள் எல்லாம் நாங்கள் கேட்க விரும்பாத கதைகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இருவர் மட்டுமல்ல.. மூன்று லட்சம் மக்கள் இறுதிவரை நின்றிருந்தார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது..!

மூன்றுஇலட்சத்தில்  வெறும் 3 பேர் தான் எழுதுகின்றார்கள்.  3 இலட்சம் பேரும் எழுத வெளிக்கிட்டால்??

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றுஇலட்சத்தில்  வெறும் 3 பேர் தான் எழுதுகின்றார்கள்.  3 இலட்சம் பேரும் எழுத வெளிக்கிட்டால்??

அந்த மூன்று லட்சம் பேரும் எழுத அல்லது கதைக்கவாவது செய்ய வேண்டும்..! அதற்குத்தான் அவர்களுக்கான சுதந்திரம் தேவைப்படுகிறது..!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மூன்று லட்சம் பேரும் எழுத அல்லது கதைக்கவாவது செய்ய வேண்டும்..! அதற்குத்தான் அவர்களுக்கான சுதந்திரம் தேவைப்படுகிறது..!

இப்பதானே 3 பேரால் முடிகிறது  பொறுத்திருந்தால் சில நேரம்  3 இலட்சம் பேர் எழுதாவிட்டாலும் 3 ஆயிரம் பேராவது எழுதலாம்.அல்லது கதைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

கருணாகரனுக்கு வேற வேலை இல்லை....:D

  • கருத்துக்கள உறவுகள்

கருணாகரனுக்கு வேற வேலை இல்லை.... :D

அதெண்டால்உண்மைதான். ..இப்ப மட்டுமல்ல முன்னரும்தான்.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கருணா எண்டு பேர் வாறதுகள் எல்லாம் இப்பிடியா தான் இருக்கு என்னத்த சொல்ல

By the way

இவர் யாரு? கேள்வி பட்டதே இல்லையே? :D

  • கருத்துக்கள உறவுகள்

கருணாகரனும் நிலாந்தனும் கடைசிவரை முள்ளிவாய்க்காலில் நின்றவர்கள். வன்னியில் நடந்தவற்றைப் பற்றித் தெரிந்தவர்கள் என்ற வகையில் அவர்களின் கருத்துக்களைத் தட்டிக் கழிக்கமுடியாது. முள்ளிவாய்க்கால் அவலம் நடக்காமல் தமிழரின் ஆயுதப் போராட்டம் யாரும் எதிர்பார்க்காத வகையில் முடிவுக்கு வராமல் இருந்திருந்தால் அவர்களின் கருத்துக்களைக் கண்டுகொள்ளாமல் விடலாம்.

எங்கே தவறு நடந்தது என்று ஆராயாமல் தவறே நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையுமில்லை என்று மகிந்த சொல்வதையும் நம்பத்தான் வேண்டிவரும்.

கருணாவும் 3ஆம் கட்டம் மட்டும் அவர்களோடுதான் இருந்தான். இப்போ கடவுள் வடிவில் மகிந்தவை காண்கிறேன் என்கிறான். தமிழ் மக்களை காக்க கோத்தபாய கடவுள் ஒன்றே போதும் என்கிறான்.

தனது வயிற்ரை கழுவ எது தேவையோ அதை சொல்கிறான். இவர்களைபோல்தான் அவனும் புதிதாக எதையும் சொல்லவில்லை ஏற்கனவே அங்கே நக்கி கொண்டு ஏவறை  விட்டுவந்த டகிலஸ் போன்றவர்கள் சொன்னதை இப்போ இவன் சொல்கிறான்.
 
கருணா பிரிந்த போது  கிழக்கில் போராளிகளாக இருந்தவர் சிலர்களின் பெயர்கள் தெரிந்திருந்தது என்பதால். குருபரன் என்று ஒருவர் தனது மௌனத்தை கலைத்தார் 
பிரபாகரன் என்பவர் இவர் எப்போதும் மௌனத்தை கலைக்க  விட கூடாது என்பதற்காகவேதான் கருபுலி படையணியை உருவாக்கி வைத்து தன்னை அச்சுறுத்தி வந்ததுபோலவும் . இப்போ கரும்புலி  படையணி இல்லை என்று ஆன  பின்பு மௌனத்தை  கலைப்பதுபோலவும்  ஒரு சினிமா காட்டி "மௌனம்  கலைகிறது" என்று மெகா சீரியல்  காட்டி திரிந்தார். பலரும் அதையும் காவி திரிந்தார்கள்.
 
இப்போ இவர்கள் அதே சீரியலை வன்னியில் தெரிந்த சில போராளிகளின் பெயரை போட்டு  காட்டுகிறார்கள்.
இவளவு குப்பைகளையும் வாசித்தவர் என்ற அடிப்படையில். உங்கள் நெஞ்சுக்கு உண்மையாக  இருந்து இவற்றில் இருந்து குறைந்தது ஒரு ஐந்து விடயத்தை. உப்பு சப்புடன்  தமிழருக்கு தேவையான மாறுபட்ட எழுத்துக்கள் என்று சுட்டிகாட்ட முடியுமா?  முதலாம் ஆள் எழுதாத மூன்றாம் ஆள் எழுதியிருக்கிறார் என்று எதையாவது  வசிக்க முடிகிறதா? 
 
1) பிரபாகரன் சர்வதிகாரி (இதை எழுத தயங்கும்போது புலிகளின் தலைமை என்று சாடுகிறார்கள்) 
 
2) புலிகள் எந்த விமர்சனங்களையும் ஏற்க தயாராக இருக்கவில்லை.
 
3) உலகத்தில் உள்ள அச்சா பிள்ளைகளான அமெரிக்கா யப்பான் ஐரோப்பா போன்றவர்கள். புலிகளை ஜெனநாயக பாதைக்கு வருமாறு அழைத்தார்கள். அதற்கு அவர்கள்  செவி சாய்க்கவில்லை. (சிங்கள அரசு ஏதாவது பயங்கர செயல்களில் ஈடுபட்டால்தானே அப்படி கேட்க வேண்டும்  என்பதால் அவர்களை யாரும் கேட்கவில்லை)  
 
4) புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்த மக்களுக்கு வாய் திறக்கவே வழி இருக்கவில்லை.
 
இவற்றை கடந்து எதை எழுதுகிறார்கள்? இதை புலிகள் இல்லாவிட்டால் நாம் தமிழ் ஈழம் பெற்றுகொடுத்திருப்போம்  என்று பினார்த்திதினவர்கள் 1980ஆம் ஆண்டிலேயே  எழுதியதுதானே. அப்போ சர்வதேச அரசியல் என்று அதற்குள் யாரும் யப்பனை சேர்க்கவில்லை  இப்போ யப்பானையும் சேர்கிறார்கள்.
ஒரே மாவை போட்டு எத்தனை பேர் அரைக்கிறீர்கள்? அவர்களின் வயிற்று  பிழைப்பை தவிர அல்லது அதை தாண்டி இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் எழுதி வாசிக்க ஆவலோடு  இருக்கிறேன். ஒருவேளை எங்களுக்கு விளங்காத ஒரு விடயத்தை  நீங்கள் விளங்கி இருக்கலாம். 
 
இது கருணாகரனுடன் முடியபோவதில்லை. வயிற்று பிழைப்புக்கு இனத்தை விற்பது க்கு யார் துணிகிறானோ அவனுக்கு எழுதவும் தெரிந்துவிட்டால். கட்டுரை தயார்.
முன்பு ஒருநாளில் எமது தலைமைகள் விட்ட பிழைகளுக்காக எம்மை பின்னம் கைகளை கட்டி வானில்  ஏற்றி சென்ற சாத்திரியும் எழுதுகிறார். அங்கிருந்த பெட்டைகளுக்கு படம் காட்டத்தான் அதை சாத்தரி போன்றவர்கள் செய்தார்கள். படம் எங்கோ எடுபட்டதும் ஒரு பெட்டையையும் கூட்டி கொண்டு ஓடிவிட்டார்கள். 
இப்போ "நெடியவன் நெளிகிறார்"  "வதனன் வளைகிறார்" என்று மாதம் ஒன்று தயாரிக்கிறார்கள். வளையாதவர்கள் வரைகிறார்கள் என்று அதையும் சிலர் காவி திரிகிறார்கள்.
எல்லா பாடங்களும் புலிகளுக்காகத்தான்.  போய்  முடியுமிடம்   அதுதான்.
 
புலிகள்  யாருக்கும் வளையவில்லை. வளைய வேண்டியவர்கள் அவர்களும் இல்லை.  எந்த மிரட்டலுக்கும் அடிமைதனத்திட்கும் அடிபணியோம் என்று சொல்லிதானே ஆயுதங்களை கையில் எடுத்தார்கள். பின்பு இடையில் ஏன் அமெரிக்க மிரட்டலுக்கும் இந்திய பார்பானிய வெறிக்கும் அவர்கள் வளைந்திருக்க வேண்டும்? 
உலக ஏகபத்தியம் புலிகளின் குரல் வளையை எவளவுக்கு நசுக்கியது என்பது ஒருசிலர் மட்டுமே அறிந்த உண்மை. 
ஒரு தலைப்பின் கீழ் நடந்த கருத்தாடலில். "நீங்கள் எழுதினீர்கள் பிரபாகரன் விட்ட பிழை சொல்கெமை வன்னிக்குள் விட்டதுதான் என்று" உண்மை அதுதான்.
 
1987ஆம் ஆண்டு அனைத்து ஆயுதங்களையும் இந்தியாவிடம் கொடுத்துவிட்டு. இந்திய இராணுவம் சுற்றி நிற்க சாதாரண பொதுமக்களை போல்தான் புலிகளும் இருந்தார்கள். கதியால் அலம்பல் வெட்டுவதற்கு கோடரி கத்தி போன்ற ஆயுதங்களை மக்களாக இருந்த எங்களிடம்தான் கேட்டு வாங்கினார்கள்.
இந்த விமர்சனங்களை மூட்டை மூடையாக கட்டி வைத்திருந்தவர்கள் அப்போது எங்கே போனார்கள்? அவிட்டு தந்திருக்கலாமே நாமும் வேண்டி சாப்பிடு இருப்போம். 
லிபரேசன் ஒபெரசனுக்கு ஓடி சென்று தொழில் துரவுகளை இழந்துதான் வேலைகள் இன்றி பெரும் தொகையான மக்கள் இருந்தார்கள். எங்களுக்கும் பொழுது போயிருக்கும். 
 
உங்களுக்கு பாடம் எடுக்கும் எண்ணம் இல்லை இந்த கட்டுரைகளை இன்னொரு இடத்தில் இருந்து நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களை ஒரு முறை பிரபாகரனின் இடத்தில் வைத்து பாருங்கள். இந்த 30 வருடத்தில் எத்தனை பேர் பின்னுக்கும் முன்னுக்கும் நின்று கத்தியால் குத்தினார்கள். இவற்றை எல்லாம் தாண்டி தமிழனை கரை சேர்க்க வேண்டிய  ஒரே தேவையில் இருந்து ஒரு இம்மி அசைந்ததா?
எல்லாளன் எத்தனை  வயதில் துட்கை முனுவுடன் போருக்கு சென்றான்? சூழ்ச்சி என்பது அவனுக்கு தெரியாமலா இருந்திருக்கும்? போர்விதிகளுக்கு உட்பட்டுதான் சென்றான். பிரபாகரன் நினைத்திருந்தால் இலங்கையில் சிங்களவனா தமிழனா வாழ்வது என்று ஒரு முடிவை எடுத்திருக்கலாம். போர்விதிகளை தாண்ட விரும்பவில்லை. தமிழனின் துர்பாக்கியம் தலைவர்களும் கண்ணியமானவர்களாக இருந்துவிடுகிறார்கள்.
ஒரு ரவுடி தலைவன் ஆனால் தமிழனுக்கு எப்போதோ  விடி வந்திருக்கும். போட்டு தள்ள வேண்டும். பூர் என்று சொன்னால் இரும்பு கதவை கூட திறந்து பூர கூடிய வலிமை உடைய இளையவர்களும் இருந்தார்கள். "கண்ணியம் காத்த ஒரே காரணம்" இன்று நாம் ஓடி திரிகிறோம்.
அசோகன் புத்த துறவி ஆகி போனபோது கூட வந்தவர்களை இவர்கள்  இருக்க விட்டு விட்டார்கள். அப்போதே போட்டு தள்ளியிருக்க வேண்டும். கோவில்களை கட்டி கும்பிட்டு கொண்டு  இருந்துவிட்டார்கள். மனிதனாக முன்னோர் இருந்ததன் பயனை  நாம் அனுபவிக்கிறோம்.
 
அவன் எதிரி அவன் அடிக்கிறான்....... என்று இருந்துவிட்டால்.
இந்த நாதாரிகளின் தொல்லை அதை விட கொடியதாக இருக்கிறது.

தலைவர்,மனிதாபிமானம் காரணமாகத் தான் கடைசி நேரத்திலும் முள்ளி வாய்க்காலில் அழிந்து கொண்டு இருக்கும் நேரத்திலும் சிங்களப் பகுதியில் தற்கொலைத் தாக்குதலையோ,விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை என சொல்ல வேண்டாம்...அமெரிக்காட பேச்சை கேட்டுத் தான் இத் தாக்குதல்களை செய்யவில்லை...குறைந்த பட்சம் கடைசி நேரத்தில் தற்கொலை தாக்குதலை செய்து கொஞ்ச சிங்களவர்களை கொண்டு இருந்தாலாவது அதை தடுக்கவாவது எதாவது ஒரு உலக நாடு உள்ளுக்குள்ள பூந்து இருக்கும்.
 
தலைவர் போராட்ட ஆரம்ப கால கட்டத்தில் எல்லாம் சுயமாக முடிவு தான் எடுத்தவர் பிறகு போகப்,போக தனக்குத் துதி பாடுபவர்களது ஒரு பக்க கதையை கேட்க வெளிக்கிட்டார்...அதுவும் எங்கட அழிவுக்கு காரணமாய்ப் போயிட்டுது.
 
எது,எப்படி இருந்தாலும் கடைசி வரை நின்று போராடி தனது குடும்பம் முழுவதையும் நாட்டுக்காக கொடுத்த இவரது ஒப்பற்ற தியாகத்திற்கு ஈடு,இணை இல்லை
  • கருத்துக்கள உறவுகள்

இவளவு குப்பைகளையும் வாசித்தவர் என்ற அடிப்படையில். உங்கள் நெஞ்சுக்கு உண்மையாக  இருந்து இவற்றில் இருந்து குறைந்தது ஒரு ஐந்து விடயத்தை. உப்பு சப்புடன்  தமிழருக்கு தேவையான மாறுபட்ட எழுத்துக்கள் என்று சுட்டிகாட்ட முடியுமா?  முதலாம் ஆள் எழுதாத மூன்றாம் ஆள் எழுதியிருக்கிறார் என்று எதையாவது  வசிக்க முடிகிறதா? 
 
1) பிரபாகரன் சர்வதிகாரி (இதை எழுத தயங்கும்போது புலிகளின் தலைமை என்று சாடுகிறார்கள்) 
 
2) புலிகள் எந்த விமர்சனங்களையும் ஏற்க தயாராக இருக்கவில்லை.
 
3) உலகத்தில் உள்ள அச்சா பிள்ளைகளான அமெரிக்கா யப்பான் ஐரோப்பா போன்றவர்கள். புலிகளை ஜெனநாயக பாதைக்கு வருமாறு அழைத்தார்கள். அதற்கு அவர்கள்  செவி சாய்க்கவில்லை. (சிங்கள அரசு ஏதாவது பயங்கர செயல்களில் ஈடுபட்டால்தானே அப்படி கேட்க வேண்டும்  என்பதால் அவர்களை யாரும் கேட்கவில்லை)  
 
4) புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்குள் இருந்த மக்களுக்கு வாய் திறக்கவே வழி இருக்கவில்லை.
 
இது கருணாகரனுடன் முடியபோவதில்லை. வயிற்று பிழைப்புக்கு இனத்தை விற்பது க்கு யார் துணிகிறானோ அவனுக்கு எழுதவும் தெரிந்துவிட்டால். கட்டுரை தயார்.
 
ஒரு தலைப்பின் கீழ் நடந்த கருத்தாடலில். "நீங்கள் எழுதினீர்கள் பிரபாகரன் விட்ட பிழை சொல்கெமை வன்னிக்குள் விட்டதுதான் என்று" உண்மை அதுதான்.
 
கருணாகரனின் கட்டுரைகளில் உள்ளவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியும் என்று ஒருபோதும் சொல்லியதில்லை. எனினும் அரசியல் ரீதியான தவறுகள் எவ்வாறு தமிழர்களின் பலமாக விளங்கிய புலிகளை அழிவுக்குள் கொண்டுசென்று தமிழ்மக்களை நிர்க்கதியாக்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ளத்தான் வேண்டும்.

புலிகளின் தலைமைப் பீடத்தில் இருந்த பலர் இப்போது உயிரோடு இல்லாமல் இருந்தாலும், புலம்பெயர் நாடுகளில் உள்ள பலருக்கு (உ.ம்: விசுவநாதன் உருத்திரகுமாரன், எரிக் சொல்கைம்) பல உண்மைகள் தெரியும். அவற்றையெல்லாம் தமிழரின் நன்மை கருதி அவர்கள் வெளியில் சொல்லவில்லை என்றும் எடுக்கலாம் அல்லது தங்கள் சொந்த அரசியல் காரணங்களுக்காக சொல்லவில்லை என்றும் எடுக்கலாம். எனவே அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் உண்மைகளை வெளிக்கொணராத பட்சத்தில் முள்ளிவாய்க்கால் மட்டும் நின்று தப்பிப் பிழைத்த கருணாகரன், நிலாந்தன், மு. திருநாவுக்கரசு போன்றவர்கள் சொல்பவற்றில் இருந்து சில விடயங்களை உய்த்தறியத்தான் வேண்டும். இவர்கள் எல்லாம் வன்னியில் இருந்துகொண்டே புலிகள் மீது விமர்சனம் வைத்தவர்கள். புலிகள் தமது பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளில் இவர்களை அரசியல் விமர்சகர்களாக அனுமதித்தவர்கள். ஆகவே வயிற்றுப் பிழைப்புக்காக தூற்றுகின்றார்கள் என்பது சரியான வாதம் அல்ல.

பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கப் போவதில்லை என்பது உண்மையென்றாலும், தமிழர்களின் அரசியல் பாதை மீண்டும் பிழையான பாதையில் போகாமல் இருக்க நடந்த சம்பவங்கள் பற்றிய தெளிவு வெளியே கொண்டுவரப்படவேண்டும்.  முன்னர் கலாநிதி பாலசிங்கம் இத் தெளிவூட்டலைச் செய்தார். ஆனால் தற்போது எவருமில்லை என்பதால் பலர் எழுதும் விடயங்களில் இருந்து உண்மையைத் தேட வேண்டியுள்ளது.

பிற சக்திகள் எதனையும் நம்பாது தமிழ்மக்களை மாத்திரமே நம்பிச் செயற்பட்டு பெரும் வளர்ச்சியடைந்து பலமாகத் திகழ்ந்த புலிகள் அமைப்பு எவரது வாக்குறுதிகளை மேற்கு நாடுகளினால் பேச்சுவார்த்தை என்று கொண்டுவரப்பட்ட பொறிக்குள் விழுந்தது, எவரை நம்பி இறுதி நாட்களில் சரணடைந்து கூட்டுப் படுகொலைக்கு ஆளானது என்பது போன்ற கேள்விகள் இன்னமும் உள்ளன. இப்படி நம்பிக்கை கொடுத்து பேரழிவைக் கொடுத்தவர்கள் இன்றும் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தர உதவுகின்றோம் என்று சொல்லி ஏமாற்றுகின்றார்களா என்பதும் வெளித் தெரியாத ஒன்றுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.