Jump to content

செய்முறை உதவி தேவை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் யாருக்காவது சுவையான வாய்ப்பன் எண்ணெய் குடிக்காமல் செய்யும் முறை தெரியுமா?...நிறைய வாழைப்பழம் பழுத்து கனிந்து போய் இருக்குது.சும்மா பழம் என்டால் எறிந்து விடலாம் ஆனால் இந்தப் பழத்தை எறிய மனமில்லாமல் இருக்குது ஆகவே யாராவது வாழைப்பழத்தில் செய்யக் கூடிய பலகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ.செய்ய வேண்டும்...நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாமிதம் செய்யுங்கோ :D நல்லாருக்கும்

என்ட‌ வாழைப்பழம் நல்லாய் கனிந்திட்டுது பஞ்சாமிர்தம் செய்யேலாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பன்

தேவையானவை...

  • கோதுமை மா - 2கப்

  • நன்கு பழுத்த வாழைப்பழம் - 2 பெரியது

  • சீனி - 1/2கப்

  • பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி

  • உப்பு

  • எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை...

  • கோதுமை மாவினுள் உப்பு, பேக்கிங் பவுடர், சீனி சேர்த்து கலக்கவும்.

  • பின்னர் வாழைப்பழத்தை நன்கு மசித்து கோதுமை மா கலவையுடன் கலந்து நன்கு பிசையவும்.

  • கலவை சிறிது கெட்டியான சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்வரை பிசையவும். தேவைப்படில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

  • பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை கொதிக்க வைக்கவும்.

  • கையை தண்ணீரில் நனைத்து ஈரக் கையுடனேயே மாவை சிறிய பந்து போன்ற உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் எண்ணெயினுள் போட்டு பொரித்தெடுக்கவும்.

  • சுவையான வாய்ப்பன் தயார்.

[size=2] Note:[/size]

[size=2]
ஒவ்வொரு முறை உருண்டை பிடிக்கும் போதும் கையை தண்ணீரில் நனைக்கவும். வாழைப்பழம் நன்கு கனிந்திருந்தால் மா கெட்டியாக வராது. எனவே பிசையும் போது மேலதிகமாக சிறிது மா சேர்க்கவும்
[/size]

http://www.arusuvai....tamil/node/4771

(மன்னிக்கவும் எண்ணெய் குடிக்காமல் செய்யும் முறை எல்லாம் தேடிப்பாத்தன் கிடைக்கல.. :( )

Spoiler
அக்கா..என்ன விரதத்துக்கு வாங்கிய வாழைப்பழம் மிஞ்சிவிட்டதா..? :D எண்ணெய் குடிச்சுத்துன்னா என்னைய அடிக்கவரவேணாம்.. :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி சுபேஸ்...நான் தேடிப் பார்த்தேன் காணவில்லை நீங்கள் மினக்கெட்டு தேடித் தந்துள்ளீர்கள்...எனக்கு ஓர‌ளவுக்கு செய்யும் முறை தெரியும் ஆனால் நான் செய்தால் எண்ணெய் அதிகம் குடிக்குது அத்தோடு உருண்டையாகவும் வர‌மாட்டேங்குது...நான் முந்தி ஒரு வீட்டை சாப்பிட்டனான் அங்கே அழகான உருண்டையாகவும்,எண்ணெய் குடிக்காமல் சாப்பிட‌க் கூடியதாக இருந்தது ஆனால் எனக்கு அப்படி வருதில்லை அது தான் ஏன் என்று தெரியுதில்லை :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, உருண்டையா வர வேண்டும் என்று அடம் பிடியாமல், கப் கேக் ஹோல்டேர்ஸ் வாங்கி அதுக்குள்ள போட்டு, அவனில் போட்டு பேக் பண்ணி எடுத்து சாப்புடுங்க.

வித்தியாசமாகவும் இருக்கும், இந்த உடலுக்கு கூடாத எண்ணெய் தவிர்த்ததாயும் இருக்கும்.

Link to comment
Share on other sites

எண்ணெய் குடிக்காமல் செய்யும் முறை தெரியுமா

எண்ணெய் நன்றாக கொதித்த பின்புதான் உணவுப் பொருளை போட வேண்டும். போட்டு ஓரிரு நிமிடங்களில் தீயை அளவாகக் குறைக்க வேண்டும். கொதிக்காத எண்ணெயில் பொரித்தால் எண்ணெய் குடிக்கும். (இது எல்லா உணவிற்கும் பொதுவான முறை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சுபேஸ் சொன்னதில் ஒன்று குறைகிறது. மாவை நன்கு பிசைந்து கையில் ஒட்டாத பதத்தில் ஒருமணி நேரம் விட்டபின் பொரிக்க புசு புசுவென நன்கு பொங்கி பெரிதாக வரும். உடனே சுட்டால் கல்லுப் போல் வரும். எண்ணெய் கொதித்தபின் போடவேண்டும் ஆனால் அடுப்பைக் குறைத்து விட்டு அவதிப் படாமல் செய்தால் சுவையான வைப்பன் தாயார். [/size]

எப்பிடி தாயார் ஆனது வாய்ப்பன் :)

Link to comment
Share on other sites

கையை அதிகம் கழுவக்கூடாது.. :rolleyes: அப்படிச் செய்யும்போது கையில் உள்ள பக்ரீரியாக்கள் மாவில் புகுந்து விளையாடி நல்ல உப்பலாக வரும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிய வாழைப்பழம் அதிகம் பழுத்தால் நாங்கள் செய்வது....

குரக்கன் மா ரொட்டி... :wub:

குரக்கன் மா, வாழைப்பழம், கொஞ்சம் சர்க்கரை (எனக்கு பிடிக்கும் என்பதால்) சேர்த்து ரொட்டிக்கு மா குழைப்பது போல் குழைத்து... சிறிது எண்ணை தெளித்த ரொட்டி கல் (frying pan) இல் ரொட்டி போல் சுட்டு எடுத்தால்..

எண்ணை குடிக்காது... குரக்கன் மா கோதுமை மாவை விட உடல் நலத்திற்கு சிறந்தது...வாய்பனுக்கு போடும் சீனி (சர்க்கரை என்ன எண்டு கேக்கிறது....கேக்கிறது... <_< ) தேவை இல்லை....2-3 நாள் வைத்து சாப்பிடலாம்.. அதுக்கும் கூடினா கல்லு மாதிரி வந்திடும்.

செய்து பாருங்கள்...கூடுதலாக பிடிக்கும் என் நம்புகிறேன். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, உருண்டையா வர வேண்டும் என்று அடம் பிடியாமல், கப் கேக் ஹோல்டேர்ஸ் வாங்கி அதுக்குள்ள போட்டு, அவனில் போட்டு பேக் பண்ணி எடுத்து சாப்புடுங்க.

வித்தியாசமாகவும் இருக்கும், இந்த உடலுக்கு கூடாத எண்ணெய் தவிர்த்ததாயும் இருக்கும்.

இதுவும் நல்ல ஜடியாவாத் தான் இருக்குது நன்றி நாதமுனி...நானும் முதல் அதைத் தான் யோசித்தனான் ஆனால் சாமிக்கு படைத்த பழம் என்ட படியால் முட்டை போட்டு கேக் செய்ய விருப்பமில்லை.

எண்ணெய் நன்றாக கொதித்த பின்புதான் உணவுப் பொருளை போட வேண்டும். போட்டு ஓரிரு நிமிடங்களில் தீயை அளவாகக் குறைக்க வேண்டும். கொதிக்காத எண்ணெயில் பொரித்தால் எண்ணெய் குடிக்கும். (இது எல்லா உணவிற்கும் பொதுவான முறை)

நான் நினைக்கிறேன் நீங்கள் சொன்ன மாதிரி இல்லாமல் எண்ணெய் கொதிக்கும் முன் போட்டு பொரித்து விட்டேன் போல இருக்குது அத்தோடு மாவின் அளவைக் குறைத்ததால் எண்ணெய் குடித்து விட்டது என்று நினைக்கிறேன்...இன்டைக்கு வடிவாய் செய்து பார்க்க வேண்டும்...நன்றி தப்பிலி.

[size=5]சுபேஸ் சொன்னதில் ஒன்று குறைகிறது. மாவை நன்கு பிசைந்து கையில் ஒட்டாத பதத்தில் ஒருமணி நேரம் விட்டபின் பொரிக்க புசு புசுவென நன்கு பொங்கி பெரிதாக வரும். உடனே சுட்டால் கல்லுப் போல் வரும். எண்ணெய் கொதித்தபின் போடவேண்டும் ஆனால் அடுப்பைக் குறைத்து விட்டு அவதிப் படாமல் செய்தால் சுவையான வைப்பன் தாயார். [/size]

நன்றி சுமேரியர் நீங்கள் சொன்ன படி இன்று செய்து பார்க்கிறேன்.

கையை அதிகம் கழுவக்கூடாது.. :rolleyes: அப்படிச் செய்யும்போது கையில் உள்ள பக்ரீரியாக்கள் மாவில் புகுந்து விளையாடி நல்ல உப்பலாக வரும்.. :icon_idea:

கனடாவுக்கு வந்தால் உங்கட‌ கையால செய்த சாப்பாட்டை சாப்பிட‌க் கூடாது :lol:

அட‌ அந்தக் காலத்திலேயே நெடுக்கர் வாய்க்கன் செய்யும் முறை எல்லாம் எழுதியிருக்கிறார்...நன்றி கு.சா அண்ணா இணைப்பிற்கு

வாங்கிய வாழைப்பழம் அதிகம் பழுத்தால் நாங்கள் செய்வது....

குரக்கன் மா ரொட்டி... :wub:

குரக்கன் மா, வாழைப்பழம், கொஞ்சம் சர்க்கரை (எனக்கு பிடிக்கும் என்பதால்) சேர்த்து ரொட்டிக்கு மா குழைப்பது போல் குழைத்து... சிறிது எண்ணை தெளித்த ரொட்டி கல் (frying pan) இல் ரொட்டி போல் சுட்டு எடுத்தால்..

எண்ணை குடிக்காது... குரக்கன் மா கோதுமை மாவை விட உடல் நலத்திற்கு சிறந்தது...வாய்பனுக்கு போடும் சீனி (சர்க்கரை என்ன எண்டு கேக்கிறது....கேக்கிறது... <_< ) தேவை இல்லை....2-3 நாள் வைத்து சாப்பிடலாம்.. அதுக்கும் கூடினா கல்லு மாதிரி வந்திடும்.

செய்து பாருங்கள்...கூடுதலாக பிடிக்கும் என் நம்புகிறேன். :icon_idea:

குர‌க்கன் மா ரொட்டி வாழைப்பழம் போட்டு செய்வது இன்று தான் கேள்விப்படுகிறேன்...நல்ல சத்தான சாப்பாடாக இருக்கும்.இன்று அரைவாசிப் பழத்தில் வாய்ப்பனும்,நாளை மிச்ச வாழைப்பழத்தில் குர‌க்கன் மா ரொட்டியும் செய்து பார்ப்போம்...நன்றி சபேஸ் வித்தியாச‌மான் சமையல் குறிப்பை தந்தமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிய வாழைப்பழம் அதிகம் பழுத்தால் நாங்கள் செய்வது....

குரக்கன் மா ரொட்டி... :wub:

குரக்கன் மா, வாழைப்பழம், கொஞ்சம் சர்க்கரை (எனக்கு பிடிக்கும் என்பதால்) சேர்த்து ரொட்டிக்கு மா குழைப்பது போல் குழைத்து... சிறிது எண்ணை தெளித்த ரொட்டி கல் (frying pan) இல் ரொட்டி போல் சுட்டு எடுத்தால்..

எண்ணை குடிக்காது... குரக்கன் மா கோதுமை மாவை விட உடல் நலத்திற்கு சிறந்தது...வாய்பனுக்கு போடும் சீனி (சர்க்கரை என்ன எண்டு கேக்கிறது....கேக்கிறது... <_< ) தேவை இல்லை....2-3 நாள் வைத்து சாப்பிடலாம்.. அதுக்கும் கூடினா கல்லு மாதிரி வந்திடும்.

செய்து பாருங்கள்...கூடுதலாக பிடிக்கும் என் நம்புகிறேன். :icon_idea:

இது நல்ல ஈசியான முறையாக இருக்கு செய்து பார்க்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் [இது எனக்கு தேவையில்லாத விடயம் என்டாலும்] நீங்கள் பெண்ணா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.