Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் அண்ணாவுடன் யாழ் கள உறவுகள் ஓர் இனிய சந்திப்பு

Featured Replies

ஆகா படங்கள் எல்லாம் போட்டு அசத்தியிருக்கிறீங்கள்.

ஒரு புதுவிதமான அனுபவத்தை பெற்று தந்திருந்தது அந்த ஒன்றுகூடல். பக்கத்தில் இருந்தும் சந்திக்கலாம் என்று தோணும் போது எல்லாம் இது சாத்தியமாகுமா? என்றா கேள்விகள் தான் முன்வரும். அதையும் தாண்டி சுவிசில் இருந்து வந்த அஐிவன் அண்ணா எங்களை ஒன்று சேர்த்து இருக்கின்றார். கள உறவுகளை காணப்போகின்றோம் என்றா சந்தோசத்தை தவிர கண்டவுடன் எல்லோரும் நன்றாக கதைப்பார்களா? இல்லாவிடின் முழிசிக்கொண்டு இருக்கவேண்டுமா என்றா கேள்வியும் மனதில் எழமால் இல்லை. ஆனால் கண்டவுடன் ஒரே வணக்கம் அதற்கு அப்புறம் சொல்லவே தேவையில்லை. பல காலம் மிகவும் நன்றாக பழகியவர்கள் போல் ஒருவரை ஒருவர் நக்கலடித்தும் சிரித்து கொண்டேயிருந்தோம்.

அஐிவன் அண்ணாவை பற்றி சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை. எவ்வளவு பெரிய ஆள் வந்து எங்களுடன் இருந்து சகஐமாக கதைத்து சிரித்தது ஆச்சரியப்படவேண்டிய ஒன்றாக இருந்தது. மிக மிக ஒரு சகோதரனுக்குரிய பண்புகளுடன் பழகியது எல்லோருக்கும் பிடித்திருந்தது.

அடுத்து ரசிகை. கதை எடுப்பது குறைவாக தான் இருந்தது. ஆனாலும் சிரித்து சிரித்து சிரித்துக்கொண்டே இருந்தா. கேட்ட கேள்விகளுக்கு பதில். அஐிவன் அண்ணாவும் முயற்சி செய்து அவாவை கதைக்க வைத்து கொண்டிருந்தார். பார்ப்போம் பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஒன்றுகூடல் முடிந்து வீட்டிற்கு திரும்புகையில் மீண்டும் சந்திப்போமா என்று கேட்டது சந்தோசமாகவும் மன நிறைவையும் தந்திருந்தது

அடுத்து சினேகிதி. களத்தில் எப்படி கதைப்பவோ அப்படியே நேரிலும் கதைத்தார். கடியோ கடி. அந்த இடத்தை விட்டு போகவே மனம் இல்லமால் திருப்பி போனார். போனவா சும்மா போயிருக்கலாம். என்னை விட்டு இனி எதாவது சாப்பிட்டால் இரவு ஒழுங்காக படுக்க மாட்டீர்கள் என்று வெருட்டல் வேறு போட்டு விட்டு போனார்.

அடுத்து அருவி நிதர்சன். ஒருவர் கொம்பியுட்டாருடன். மற்றவர் கமாராவுடன். கடி கடி என்று கடித்து கொண்டிருந்தார்கள். அங்கு வந்தும் அரசியல் கதைத்து கொண்டிருந்தார்கள். ஒருவரை ஒருவர் எவ்வித பாரபட்சமும் காட்டமால் எல்லோருமே நல்ல நண்பர்களாக கதைத்து கொண்டிருந்தோம்.

சினேகிதி தனது அறிமுக உரையில் தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் இப்படித்தான் கதைத்தார்.

பொயிலை போட்ட

பொக்கை வாயால

சத்திமின்றி ரத்தமின்றி

தாயகக் குரல் கொடுக்கும்

அருவி வந்திருக்கீக

வன்னில தென்றல் வீச ஆசைப்படுற

யாருக்கோ பிரியமாகப் பிரியப்படுற

கணணி வித்தகர்

நிதர்சன் வந்திருக்கீக

எள்ளுச்சம்மபலுக்காக ஏங்க -வைத்து

கவியாலும் கதையாலும்

பாட்டாலும் பட்டிமன்றத்தாலும் கட்டி வைத்த

இரசிகர்களின் இரசிகை வந்திருக்கீக

கண்ணைக் கட்டிக் கோபம் போட்டு

உறவுகளைத் தடுமாற வைத்த

றமாக்கா வந்திருக்கீக

பக்கத்திலிருந்தும் பார்க்காதிருந்த நம்மை

சுவிஸிலிருந்து வந்து ஒன்றுகூட வைத்த

பல்துறைப் பண்பாளர் அஜீவன்

அண்ணா வந்திருக்கீக

அன்பான உறவுகளை காண வைத்தது இந்த யாழ்களம். அதற்கு மிகவும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். அன்று 6 பேர் சந்தித்தோம். அடுத்த சந்திப்பில் ஒரு 20 பேர் என்றாலும் சந்திக்க மாட்டோமா?

  • Replies 226
  • Views 34.8k
  • Created
  • Last Reply

மேற்கோள்:

அடுத்த சந்திப்பில் ஒரு 20 பேர் என்றாலும் சந்திக்க மாட்டோமா?

நிச்சயமாய் நடக்கும் - போதிய கால அவகாசத்துடன் - ஒரு நிகழ்வு - ஒழுங்கு செய்யப்படும் இடத்தில் - ரமா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா படங்கள் எல்லாம் போட்டு அசத்தியிருக்கிறீங்கள்.

அடுத்து அருவி நிதர்சன். ஒருவர் கொம்பியுட்டாருடன். மற்றவர் கமாராவுடன். கடி கடி என்று கடித்து கொண்டிருந்தார்கள். அங்கு வந்தும் அரசியல் கதைத்து கொண்டிருந்தார்கள். ஒருவரை ஒருவர் எவ்வித பாரபட்சமும் காட்டமால் எல்லோருமே நல்ல நண்பர்களாக கதைத்து கொண்டிருந்தோம்.

நல்ல காலம் நான் தப்பித்துக் கொண்டேன், அருவி, நிதர்சன் கடித்த கடியில் நீங்கள் இன்று வேலைக்கு லீவாமே உண்மையா? :wink:

மேற்கோள்:

அடுத்த சந்திப்பில் ஒரு 20 பேர் என்றாலும் சந்திக்க மாட்டோமா?

நிச்சயமாய் நடக்கும் - போதிய கால அவகாசத்துடன் - ஒரு நிகழ்வு - ஒழுங்கு செய்யப்படும் இடத்தில் - ரமா!

சரி சரி :lol::D:lol:

அப்ப வெண்ணிலா, இந்த பெயர்களில் ஒன்றுக்கு சொந்த காரியோ? :roll:

நான் என்ன கனடாவிலா இருக்கிறன்? :cry:

ஒரு இனிய மாலைப் பொழுதில் ஸ்கபரோவில் அஜீவன் அண்ணாவுடன் இனிமையான சந்திப்பு

இனிதாகவே நடைபெற்றது. இந்த ஒன்றுகூடல் ஒரு புதுமையான மகிழ்வான நிறைவான நிகழ்வாக

அமைந்திருந்தது. ஒரு வித்தியாசமான அனுபவம். சந்திக்கும் வரையும் இந்த ஒம்றுகூடல் நடைபெறுமா

என்ற சந்தேகம் அப்படி சந்தித்தால் நேரே அறிமுகமில்லாதவர்களிடம் எப்படி

பேசுவது என்ற ஒருவித படபடப்பு ஆனால் எல்லோரையும் சந்தித்த அப்புறம்

அந்த படபடப்பு நீங்கி எல்லோரும் ரொம்ப நாள் பழகிய நண்பர்கள் உறவினர்கள்

போல் மிகவும் ஒரு சகஜமான சந்திப்பாக மாறியது. நிரம்பவே சந்தோசம்.

நானும் ரமாவும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் அதனால் எனக்கு அவவுடன்

சகஜமாக கதைக்க கூடியதாக இருந்தது. அவவுடன் தான் நான் நிகழ்வு நடைபெறும்

இடத்திற்கு சென்றேன். போற வழி இல்லாம். எனக்கு சரியான எக்ஸைட்டிங்கா

இருக்கு நான் நேர எப்படி கதைப்பனோ தெரியா.அஜீவன் அண்ணா பெரிய

ஆள் எப்படி அவரோட கதைக்கிறது என்று அவவை டென்ஸன் பண்ணிக்

கொண்டே போனேன். அவ டோண்ட் வொறி நான் இருக்கிறன் தானே எண்டு

என்னை சமாதனப்படுத்தினாலும் அவக்கும் டென்ஸன் தான்.

அப்புறம் அந்த இடத்துக்கு நானும் ரமாவும்தான் முதல் சென்றது.

பின்பு அஜீவன் அண்ணாவும் அவரது நண்பரும் வந்திருந்தார்கள்.

நான் பொதுவா முதன் முதாலா ஒருதரோடையும் நானா வலிய போய்

கதைக்க மாட்டன். கேக்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுவன் அப்புறம் பழகினால்

பிறகு சொல்லத் தேவை இல்லை என நினைக்கிறன். சோ அஜீவன் அண்ணாவோடை

மற்ற ஆக்கள் வரும் வரையும் ரமா தான் கதைத்தது. நான் கேக்கிறதுக்கு மட்டும்

பதில் தான் சொன்னேன். அப்புறம் அவரோடை கதைத்தேன்.

ஆனால் அஜீவன் அண்ணா பெரிய ஆள் அவரோடை எப்படி கதைப்பது

எண்ட டென்ஸன் எல்லாம் அவரோடை பார்த்து கதைச்ச அப்புறம் இருந்த

இடம் காணாமல் பறந்து விட்டது. அவரும் நம்மைப் போல ரொம்ப

நாள் பழகியது போல் தான் பெரிய ஆள் என்ற பாகுபாடு இல்லாது தனது

நகைச்சுவையான பேச்சால் எல்லோர் மனதையும் கவர்ந்தார்.

அப்புறம் சிநேகிதி வந்தார். எல்லாரும் அவடை கதையை பார்த்தால் பெரிய

மனுசி எண்டு நினைப்பியள் ஆனல் ஆள் அப்படி இல்லை ரொம்ப சின்னப்பிள்ளை.

அதை அஜீவன் அண்ணா கூட அவக்கு சொன்னார். அவ களத்தில கதைக்கிற (கடிக்கிற)

மாதிரித்தான் நேருலயும் சரியான கடி. நல்ல நகைச் சுவையாக கதைத்தார்.

அப்புறம் நம்ம தோஸ்துமார் அருவியும் நிதர்சனும் வந்தார்கள்.

சிநேகிதியைப் போல அவையை பார்த்த அப்புறமும் எனக்கு ஏமாற்றம் தான்.

பெரிய ஆக்கள் மாதிரி கற்பனை பண்ணினான் பார்த்தால் இரண்டு சின்ன பெடியள்.

அக்கா அக்கா எண்டு நல்லா நகைச்சுவையா கதைச்சாங்கள். அருவி கொஞ்சம் கதை

குறைவு ஆனல் நிதர்சன் அருவி கொட்டுற மாதிரி கதைச்சுக்(கடிச்சுக்) கொண்டே இருந்தார்.

அந்த மாலைச் சந்திப்பு பிரிய மனம் இல்லாது எல்லோரும் போக வெளிக்கிட்டுட்டும்

நின்று கதைத்து விட்டுத் தான் சென்றோம். என்னால் இந்த சந்திப்பை வாழ் நாள்

முழுக்க மறக்க ஏலாது. அவ்வளவு இனிமையான ஒரு நிகழ்வு.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நான் பொதுவா முதன் முதாலா ஒருதரோடையும் நானா வலிய போய்  

கதைக்க மாட்டன். கேக்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லுவன்.  

ஒ!! அப்படியா நாம் நம்புகின்றோம்!! :wink: :wink:

 

ஆனால் அஜீவன் அண்ணா பெரிய ஆள் அவரோடை எப்படி கதைப்பது  

படத்தைப் பார்த்தால் உங்கள் உயரமளவு தானே வருவார்! எப்படி பெரிய ஆள் என்று எல்லாம் சொல்லுவீர்கள்! :roll: :wink:

ஹலோ றமாக்காவா?

ஓம் நீங்கள்?

நான் சினேகிதி கதைக்கிறன்.

ஓ எங்க காணாமல் போட்டீங்கள்.பொலிஸூக்குத் தகவல் குடுக்கோணும் என்று நினைச்சன்.

ஆ..சரி எப்ப அஜீவன் அண்ணாவைச் சந்திக்கிறம்?

வியாழன் இல்லை வெள்ளிக்கிழமை என்று முடிவெடுத்திருக்கிறம்

ம் ரசி அக்கா சொன்னா ஒவ்வொருதர் ஒவ்வொரு சாமான் வாங்கிக்கொண்டு வாறதெண்டு..நான் என்ன வாங்குறது?

சாப்பாட்டு அருவியும் நிதர்சனும் வாங்குவினம். நீங்கள்தான் எல்லாரையும் வரவேற்கவேணும்.ஒரு கவிதை எழுதிக்கொண்டு வாங்கோ.

ஹா கவிதையா?

ம் சும்மா நக்கல் பண்ற மாதிரி ஏதும் எழுதுங்க.

சரி எழுதிப் பார்க்கிறன்.

==============================================

ஹலோ றமாக்கா.

என்ன சினேகிதி இனனும் இறங்கேலையா? நானும் ரசிகையும் ஏற்கனவே வந்தாச்சு.

நான் ஒரு 10 நிமிசத்தில அங்க வந்திடுவன்.

ஓகே

றமாக்கா நான் உங்கட அபாட்மன்ற் கிட்ட நிக்கிறன் வெளில வாங்கோ.

ஹாய்..

ஹலோ வாங்கோ அம்மணி...யாரெண்டு தெரியுதோ?

ம் றமாக்கா. தூனே.

ஹா இதா ரசி அக்கா...எங்கயோ பார்த்திருக்கிறன் உங்களை.

(ரசி அக்கா சிரிப்பு மட்டும்தான்)

ஆமா என்ன ரசி அக்கா றமாக்கா இரண்டு பேரும் ஒரே மாதிரி உடுப்பு?? சொல்லி வச்சு போட்டனீங்களோ.

ச சீ அப்படி அமைஞ்சிட்டுது.

ஹாய் அஜீவன் அண்ணா.நான் சினேகிதி.

ஹாய் சினேகிதி நான் அஜீவன்.நானாரோ டொக்டர் வாறாவெண்டு நினைச்சன்.இது என்ர நண்பர்.

ஹாய்.

எங்க மிச்ச இரண்டு பேரையும் காணேல்ல.

10 நிமிசத்தில வாறமெண்டிச்சினம் இன்னும் வரேல்ல.

என்ன ரசி அக்கா கதைக்க மாட்டீங்களோ.

(அவா சிரிப்புத்தான்).

சத்தம் கேட்குது வரினம் போல இரண்டு பேரும்.

ஹா ஹா வாங்கோ வாங்கோ.

வணக்கம் வணக்கம்.

சரி எல்லாரும் அறிமுகம் செய்வமா?

சினேகிதி இப்ப எல்லாரையும் நீங்கள் .வரவேற்க வேணும்.

ஹா எங்க நான் உங்களுககு அனுப்பினது?? திருத்தச் சொல்லி அனுப்பினானெல்லோ.

சொறிடா நான் வேலையால அப்பிடியே இங்க வந்தது மெயில் பார்க்கேல்ல.

அரோஹரா.

பொயிலை போட்ட

பொக்கை வாயால

சத்திமின்றி ரத்தமின்றி

தாயகக் குரல் கொடுக்கும்

அருவி வந்திருக்கீக

வன்னில தென்றல் வீச ஆசைப்படுற

யாருக்கோ பிரியமாகப் பிரியப்படுற

visual graphics வித்தகர்

நிதர்சன் வந்திருக்கீக

எள்ளுச்சம்மபலுக்காக ஏங்க -வைத்து

கவியாலும் கதையாலும்

பாட்டாலும் பட்டிமன்றத்தாலும் கட்டி வைத்த

இரசிகர்களின் இரசிகை வந்திருக்கீக

கண்ணைக் கட்டிக் கோபம் போட்டு

உறவுகளைத் தடுமாற வைத்த

றமாக்கா வந்திருக்கீக

பக்கத்திலிருந்தும் பார்க்காதிருந்த நம்மை

சுவிஸிலிருந்து வந்து ஒன்றுகூட வைத்த

பல்துறைப் பண்பாளர் அஜீவன்

அண்ணா வந்திருக்கீக

எல்லாரையும் றமாக்கா சார்பில் வரவேற்கிறேன்.

அருவி : பொயிலைக்குப் பதிலா பபிள்கம் என்று போடுவம் என்ன? நான் பொயிலை சாப்பிடுறேல்ல.

சரி ரசி அக்கா எங்க எள்ளுச் சம்பல்?

ரசி அக்கா : எங்கட வீட்ட கிறைன்டர் உடைஞ்சிட்டு அதான் எள்ளுச் சம்பல் செய்யேல்ல..இன்னுமொருநாள் கொண்டு வாறன்.

சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கதைப்பம்.

வடை கட்லட் ஏதோ ஒரு இனிப்பு சாப்பாடு நிதர்சன்ட் அம்மா சுட்ட தட்ட வடை எல்லாம் சாப்பிட்டம்.

வரேக்கயே தேத்தண்ணி கேட்டுக்கொண்டு வந்தவா சினேகிதி...இந்தாங்கோ குடியுங்கோ என்றா றமாக்கா.

அஜீவன் அண்ணா தான் எல்லாருக்கும் சம்பல் பரிமாறப்போறன் என்று எழும்பினார்.அஜீவன் அண்ணான்ட நண்பர் படம் எடுத்தார்.நிதர்சன் தன்ர காமெராவில எடுக்கிற படம் யாழ்ல வருமென்றார்.அதுக்கு அருவி யாழ்ல வந்தால் ஒரு கொலை நடக்கும் என்றார்.றமாக்க காமெரா உடையும் என்றா.அதுக்கு படம் யாழ்ல போட்ட பிறகுதானே காமெரா உடையும் அது பறவாயில்லை என்றார் அருவி.

அஜீவன் அண்ணா கொண்டுவந்திருந்த "சொல்லப்படாத படங்கள்" என்ற குறும்படங்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூலைக் கொஞ்ச நேரம் பார்த்தம்.பிறகு அஜீவன் அண்ணான்ர நிழல் யுத்தம் பற்றிய சிறிய உரையாடல்ல தொடங்கி எப்பிடி அஜீவன் அண்ணாவை ஒவ்வொருதருக்கும் தெரியும் என்று கதைச்சம்.ரசி அக்காக்கும் றமாக்காக்கும் யாழ்ல தெரியுமாமாம் என்று சொல்ல அதுக்கு அருவி யாழ்ல தந்திதானே தெரியும் அஜீவன் அண்ணா எப்பிடி தெரிவார் என்றார்.

நிதர்சனுக்கு; சுவி;ஸ் நிகழ்ச்சியொன்றின் நிழல் படத்தில் அறிமுகமானாராம்.

நான் நிழல் யுத்தம் குறும்படம் பார்த்தேன்இஅந்தப்படத்தில் வரும் கதாநாயகி கோயிலுக்குச் செல்வதற்கு பட்டுடுத்தி நிறை நகையெல்லாம் அள்ளிப் போட்டுக்கொண்டு வெளிக்கிட்டு நிற்பதாக ஒரு காட்சி வரும்.அத நான் படம் பார்த்ததும் மறந்துவிட்டேன்.பின்பு ஒருநாள் தமிழ்மணத்தில் அஜீவன் அண்ணாவின் வலைப்பூ வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது அஜீவனண்ணாதான் அந்தப்படத்தின் இயக்குனர் எனத் தெரிய வந்தது.மின்னஞ்சல் போட்டுக் கேட்டன் ஏனப்படி அந்தப் படத்தில் வரும் பெண் நிறை நகை போட்டவா என்று.அப்பிடித்தான் எனக்கு அஜீவன் அண்ணா அறிமுகமானார்.

பிறகு நிதர்சன் அஜீவன் அண்ணான்ர பிரண்டோட கொஞ்சம் அரசியல் கதைச்சார்.

ஒரு காட்ல எல்லாரும் சைன் பண்ணி அஜீவன் அண்ணாக்குக் குடுத்தம்.நிதர்சன் ஒரு வாழ்த்து மடல் அன்பளிப்புச் செய்தார்.

அஜீவன் அண்ணா தான் இதுவரை எடுத்த குறும்படங்களைக் கொண்டு வந்திருந்தார்.அருவிட்ட கொப்பி பண்ணி எல்லாருக்கும் அனுப்பச் சொல்லிக் குடுத்தவர்.றமாக்காக்கும் எனக்கும் அப்பத்தான் இளைஞன்ர உராய்வு கவிதைத் தொகுப்பு ஞாபகத்துக்கு வந்தது.றமாக்கா அதுவும் அனுப்புறன் என்று சொன்னா.

நான் வீட்ட போட்டன் மிச்ச ஆக்கள் இருந்து அலட்டிக்கொண்டிருந்தவை :wink: .ரெயின்ல இருந்துகொண்டு ஒருக்கா றமாக்காக்கு போன் பண்ண அவா சொன்னா ரசி அக்கா அருவி நிதர்சன் மூன்று பேரும் றமாக்கா வீட்ட வந்தவையாம் ;பழஞ்சோறு சாப்பிடினம் என்று.

இப்படி அந்த இனிய சந்திப்பு அமைந்தது.

ஏதாவது சொல்லாம விட்டிட்டனே?? ஓ அஜீவனண்ணா அடுத்த கோடை விடுமுறைக்கு கனடா வந்து குறும்படம் எடுக்கப் போறாராம்.

எல்லாரும் கதை சொன்னாச்சு.அருவி; மிச்சம் ஏதாவது இருந்தா வந்து சொல்லும். :lol:

நல்லாக் கதை சொன்னியள் , நாங்கள் எல்லாரும் வந்தமாதிரி இருந்திச்சு.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே நீங்களும் ஒரு சந்திப்பு நடாத்தினாலும் மகிழ்ச்சியா இருக்கும் :D

:shock: :shock: :shock: :shock:

eன்ன பாப்ஸ் கிட்ட அடிவாங்கி கொடுக்கிற plan ஆ? :evil: :evil: :evil: நானே பாப்ஸ்க்கு பயந்து ஒழிச்சு தரிரன்... :twisted:

அன்போடு

ஆரத்தழுவி

யாழ் கள நண்பர்

கூடி மகிழ்ந்த

சேதி கேட்டு

தூர தேசம்

பிரிந்து வாழ்ந்தும்

நேரே

பார்க்க முடியா விடினும்

விம்பம் மூலம்

பார்த்து அகம் மகிழ

இருவிழிகளும்

இமைக்கா

யாழ் திரையை

பார்த்த வண்ணம்

காத்திருந்தோம்.

இருந்தும் பயனில்லை

என்றிருக்க

இருள் மறைத்த

புகைப்படத்தில்

ஒரு முகம் மட்டும்

தெளிவுடனே

மகிழ்வோடு

காட்சி தர.

உற்று நாம் நோக்கினோம்

அது வேறு யாருமல்ல

யழ் கள கலைஞன்

குறும்பட கவிஞ்ஞன்

அஜிவன்.

அருகில் துணையாய்

நின்ற ஐய்வரின்

முயற்சியை வாழ்துவோம்

அதற்கு துடுப்பாய்

நின்ற எம் யாழையும்

மீண்டும் மீட்டுவோம்.

ம் இருவிழி நல்லாயிருக்கு உங்கட கவிதை :-) நீங்கள் பனங்கூடல்லயா இருக்கிறீங்கள்?

என்றாலும் அருவிக்கு குசும்பு கொஞ்சம் கூட தான்...

சுண்டல் - என்ன என்ன???

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இல்லாமல் இருந்தேனே என்று கவலையாக இருக்கிறது. இருந்தல் அஜீவனைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்

கனடாவில் இல்லாமல் இருந்தேனே என்று கவலையாக இருக்கிறது. இருந்தல் அஜீவனைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்

அப்போ எங்களை சந்திக்காதில் உங்களுக்கு கவலை இல்லையோ? :cry:

எங்கள் சந்தோச அனுபவங்களை சொல்லி உங்கள் எல்லோரையும் கவலைப்பட வைத்துவிட்டோமா? நீங்களும் உங்கள் நாடுகளில் இருக்கும் உறவுகளுடன் கதைத்து ஒன்று கூடலை ஏற்படுத்த வேண்டியது தானே. வேணும் என்றால் எங்களுக்கும் ரீக்கற்றை அனுப்புங்கோ நாங்களும் வாரோம் :wink: .

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ எங்களை சந்திக்காதில் உங்களுக்கு கவலை இல்லையோ? :cry:

கவலைதான். என்ன செய்வது. கனடா வரும் போது சந்திக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கவலைதான். என்ன செய்வது. கனடா வரும் போது சந்திக்கிறேன்

ஆச்சிக்கு தெரியுமா? என்ன போட்டு கொடுக்கவா..? :twisted: :twisted:

சினேகிதி ரமாக்கா ரசி அக்கா எல்லோரும் அஜீவன் அங்கிளின் சந்திப்பை அழகாக சொல்லி இருக்கிறீங்க. வாசிக்க வாசிக்க பொறாமையாக இருக்கு. ஆமா நான் கனடாவில் இருந்திருக்கலாமே என என்னையே நொந்து கொள்கின்றேன். :cry: :cry: :cry: :cry:

அடுத்த தடவை பார்த்துக்கலாம் ஆமா :P :P

ஐயோ வாசிக்க வாசிக்க ஆசையா இருக்கு..எல்லோரும் நீங்கள்..உணர்ந்ததை அழகா சொல்லி இருக்கீங்கள்..சூப்பர்..எனக்கு ஆசயாவும் இருக்கு..அதே நேரம்..ரொம்ப எரிச்சலாவும் இருக்கு :cry: சாறி அதுக்க் ஏன்னால ஒண்டும் செய்ய ஏலாதுங்கோ 8)

அப்போ எங்களை சந்திக்காதில் உங்களுக்கு கவலை இல்லையோ? :cry:

அதுதானே ரமா விடாதீங்க கேளுங்க. :)

எங்கள் சந்தோச அனுபவங்களை சொல்லி உங்கள் எல்லோரையும் கவலைப்பட வைத்துவிட்டோமா? நீங்களும் உங்கள் நாடுகளில் இருக்கும் உறவுகளுடன் கதைத்து ஒன்று கூடலை ஏற்படுத்த வேண்டியது தானே. வேணும் என்றால் எங்களுக்கும் ரீக்கற்றை அனுப்புங்கோ நாங்களும் வாரோம் :wink: .

சரி சரி அப்படியே எனக்கும் ஒரு டிக்கட் போடுங்கப்பா நானும் பிறியாதான் இருக்கன் வாறன், :wink:

சினேகிதி ரமாக்கா ரசி அக்கா எல்லோரும் அஜீவன் அங்கிளின் சந்திப்பை அழகாக சொல்லி இருக்கிறீங்க. வாசிக்க வாசிக்க பொறாமையாக இருக்கு. ஆமா நான் கனடாவில் இருந்திருக்கலாமே என என்னையே நொந்து கொள்கின்றேன். :cry: :cry: :cry: :cry:

அடுத்த தடவை பார்த்துக்கலாம் ஆமா :P :P

சரி சரி கவலைப்படாதீங்க வெண்ணிலா...

நீங்கள் வந்தால் கூடுதாலா வர்வேற்கிறம் ஏன் என்றால் நீங்கள் நிலாவாச்சே. :wink:

உண்மையாக நாங்கள் நேர கலந்து கொண்ட மாதிரி இருந்தது

நன்றி ரமாக்கா ரசி அக்கா சினேகிதி அருவி அன்ட் நிதர்சன்

அது சரி ரசி அக்கா அமைதியா இருந்ததா எழுதி இருக்கிறதை தான் நம்ப முடியேல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.