Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் Downing Streetஇல் சற்றுமுன் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

556763_519344304751658_1665178790_n.jpg

 

 

302807_519344318084990_1313078156_n.jpg

 

 

32380_519344341418321_1335902864_n.jpg

 

 

403131_519344354751653_1828600014_n.jpg

 

 

35888_519344378084984_121978760_n.jpg

 

156921_519344394751649_305952578_n.jpg

 

 

598593_519344408084981_842944634_n.jpg

 

 

481542_519344414751647_444256708_n.jpg

 

 

530393_519344454751643_1161659881_n.jpg

 

598522_519344281418327_1819405539_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே

 

உங்கள் பலமும் குரலும் தான் இன்று தமிழனைக்காக்கும்

424914_661266090553740_191098444_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பதாகைகளையும் வாசித்துப் பார்த்தேன்!

சொல்ல வேண்டிய அவ்வளவத்தையும், சொல்லியிருக்கின்றார்கள்!

மனிதாபிமானமுள்ள மனிதர்களை, இது நிச்சயம் தட்டி எழுப்பட்டும்!

சொந்தங்களுக்கு நன்றிகள்!

லண்டன் இளையோர் அமைப்பினால் பிரித்தானிய முதலமைச்சர் வாசஸ்தலத்திற்குமுன்னால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுகெதிராக இலங்கை ராணுவத்தின் அடாவடித்தனத்தைக கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட நம் மக்களின் எண்ணிக்கை இதுதான்.வெறும் 350..வெட்கக்கேடு.மக்கள்போராட்டம் நடத்தப்படவேண்டும் என வாய்கிழியப் பேசுவோர் எங்கே?.மாவீரர் தினத்தை இரண்டாக்கி போட்டிபோட்டு மாவீர வியாபாரம் செய்தோர் எங்கே?.பொதுநலம் பேசிக்கொண்டே வெறும் சுயநலத்துடன் வாழ்வோர் எங்கே? நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்கள் எங்கே? BTF உறுப்பினர்கள் எங்கே? TCC உறுப்பினர்கள் எங்கே? GTF எங்கே?.எங்கே ?எங்கே?.எல்லாமே பச்சை சுயநலம்..எல்லாமே வெறும் பேருக்கும் புகழுக்கும் தம வாழ்வாதாரத்துக்கும்தான் என்பது தெளிவாகிவிட்டது.

 

இதுதான் நீங்கள் அந்த மாவீரருக்கு செய்யும் கைமாறா?..எதற்காக போட்டிபோட்டு மாவீரர் தினம் நடத்துகிறீர்கள்..எங்களுக்கு விளக்கு கொளுத்துங்கோ, மக்களிடம் £5 கார்த்திகள் பூ விற்று அந்த பூவை நமக்குப் போடுங்கோ என்று உங்களை நம் மாவீரர் கேட்டார்களா?.சமகாலத்தில் எதை நடத்தவேண்டுமோ அதை செய்யாமல் ஏன் இந்த வியாபாரம்?.வியாபாரம் செய்வதை விட்டு போராட்டங்களை எழுச்சியுடன் தொடர்ச்சியாக, ஒற்றுமையாக பொதுநலத்துடன் நடத்தி தமிழ் ஈழத்தை வென்று மாவீரருக்கு சமர்ப்பியுங்கள்.அதுதான் உண்மையான மாவீரர் தினமாக இருக்கமுடியும்..அழுக்கு மனதுடன் நீங்கள் ஏற்றும் தீபத்தில் அவர்கள் ஆத்மா சாந்தியடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆர்ப்பாட்டம் தேவை கருதி காலதாமதம் செய்யாமல்.. மாணவர்களை மையமாகக் கொண்டு மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று. குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றும் கூட. இதில் வெளியார் பங்குபற்றவே இல்லை என்று குறைபிடிப்பதிலும்.. அவர்களையும் உள்வாங்கி பெரிதொரு ஆர்ப்பாட்டத்தை செய்ய ஒத்துழைப்பதும் கோருவதும் பொது மக்களின் கடமை. அதனை அவர்கள் இளையோர் முன் வைக்கலாம்..!

 

மேலும்.. தகவல்களுக்கு...

 

https://www.facebook.com/tyouk.media

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு நன்றிகள் பல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்போராட்டங்களுக்கு மாணவ சமுதாயத்தின் பங்கு அளப்பரியது.இதிலாவது மாணவர் சமுதாயம் ஒன்றுபடவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜயா நன்றி

உந்த கொடியோட போனால் ஒருவனும் கிட்ட வரான் ,எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் .

இன்று யாழ்பாணத்தில் ஒரு ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடந்தது ,கனேடிய அரச பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டார்கள் .அவர்கள் வைத்த கருத்து பலரை கடுப்பேத்திவிட்டது.குதிரை கஜேந்திரன் இளைய தலைமுறை கனடாவில் என்ன செய்கின்றார்கள் என குய்யோ முறையோ என கத்துகின்றார் .

சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்க நின்று சுய இன்பம் பெறுவதில் தான் எத்தனை சந்தோசம்.

உந்த கொடியோட போனால் ஒருவனும் கிட்ட வரான் ,எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் .

இன்று யாழ்பாணத்தில் ஒரு ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடந்தது ,கனேடிய அரச பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டார்கள் .அவர்கள் வைத்த கருத்து பலரை கடுப்பேத்திவிட்டது.குதிரை கஜேந்திரன் இளைய தலைமுறை கனடாவில் என்ன செய்கின்றார்கள் என குய்யோ முறையோ என கத்துகின்றார் .

சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்க நின்று சுய இன்பம் பெறுவதில் தான் எத்தனை சந்தோசம்.

 

வாழ்க்கை முழுக்க குறைகளை மட்டுமே கண்டு பிடிக்காமல் ஆக்கபூரவமாக ஏதாவது செய்ய முனையுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கொடியோட போனால் ஒருவனும் கிட்ட வரான் ,எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் .

இன்று யாழ்பாணத்தில் ஒரு ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடந்தது ,கனேடிய அரச பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டார்கள் .அவர்கள் வைத்த கருத்து பலரை கடுப்பேத்திவிட்டது.குதிரை கஜேந்திரன் இளைய தலைமுறை கனடாவில் என்ன செய்கின்றார்கள் என குய்யோ முறையோ என கத்துகின்றார் .

சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்க நின்று சுய இன்பம் பெறுவதில் தான் எத்தனை சந்தோசம்.

நீங்கள் என்ன கொடியை அல்லது என்னமுறையில் இப்படியான பிரச்சனைகளை அணுக வேண்டுமென நினைக்கின்றீர்கள்? யார் இப்படியான போராட்டத்தை முன்னெடுப்பதற்க்கு தகுதியானவர்கள் என்று நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த கொடியோட போனால் ஒருவனும் கிட்ட வரான் ,எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் .

இன்று யாழ்பாணத்தில் ஒரு ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடந்தது ,கனேடிய அரச பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டார்கள் .அவர்கள் வைத்த கருத்து பலரை கடுப்பேத்திவிட்டது.குதிரை கஜேந்திரன் இளைய தலைமுறை கனடாவில் என்ன செய்கின்றார்கள் என குய்யோ முறையோ என கத்துகின்றார் .

சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்க நின்று சுய இன்பம் பெறுவதில் தான் எத்தனை சந்தோசம்.

 

மகிந்தாவின் புலித்துவேசம் புலத்தமிழரைப் பார்துக் குரைக்கின்றது. அர்யுனனின் புலித்துவேசம் காலைத்தூக்கி அபிஷேகம் செய்கின்றது. அந்த ஈரம் தான் ஐயாவின்  உபதேசம்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள் ..இளையோர்களே....போற்றுவோர் ..போற்றட்டும்....குறை கூறி...

                                                               தூற்றுவோர் தூற்றட்டும்......

உங்கள் வழி சிறந்த வழி.....சொல்வதை சொல்லிவிட்டீர்கள்.....ஒவ்வொரு நாட்டிலும் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.....வந்தவர் தொகை பற்றி கதைப்பவர்....பகல் கனவு காணுகிறார்.....அவர் போன்ற சிலரால்தான் ...எமது போராட்டம் முனைப்பு பெருகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கொடியோட போனால் ஒருவனும் கிட்ட வரான் ,எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும் .

இன்று யாழ்பாணத்தில் ஒரு ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடந்தது ,கனேடிய அரச பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டார்கள் .அவர்கள் வைத்த கருத்து பலரை கடுப்பேத்திவிட்டது.குதிரை கஜேந்திரன் இளைய தலைமுறை கனடாவில் என்ன செய்கின்றார்கள் என குய்யோ முறையோ என கத்துகின்றார் .

சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்க நின்று சுய இன்பம் பெறுவதில் தான் எத்தனை சந்தோசம்.

 

இஸ்ரேல் வெறுக்கிறது என்பதற்காக எவரும் பலஸ்தீனக் கொடியை விட்டுவிடவில்லை. PLO மேற்குக் கரையை ஆள கமாஸ் ஹாசாவை ஆள்கிறது. ஆனால் இரு அமைப்புக்களும் பலஸ்தீன தேசம் என்ற அடிப்படையில் ஒற்றுமைப்படுகின்றன.

 

ஆனால் நீங்கள்...???! எந்த விசயத்தில ஒற்றுமைப்பட்டிருக்கிறீர்கள்.. எதிரிகளுக்கு யார் நல்லா காட்டிக்கொடுக்கிறது.. சொந்த இனத்திற்கு எவர் நல்லா துரோகம் செய்வதில் என்பதில தவிர.. வேறு எதில..????!

 

மேற்குநாடுகளே.. பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருக்கிற நாடுகளே.. இந்தக் கொடி.. புலிகளதல்ல.. தமிழீழத் தேசியக் கொடி.. தமிழர்களின் அடையாளம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில்.. நீங்கள் எதற்கு அதனை பெரிதுபடுத்தி.. அதனை அழிக்க நினைக்கிறீங்க.. அல்லது ஒளிக்க நினைக்கிறீங்க. தாயகத்தில்.. ஒரு கொடியும் பிடிக்கல்ல.. அப்படி இருந்தும் அந்த மக்களின் உணர்வுகளை சிங்களவன் மதிக்கிறானா.. இந்தியன் மதிக்கிறானா.. இல்லையே.

 

குறைஞ்சது.. இந்தக் கொடி பிடிக்கப்படும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கன் ஒரு கண்டனை அறிக்கையாவது தந்தான். ஆனால்.. கொடி பிடிக்கப்படாத நாடுகளில்.. உங்கள் அமைப்புக்கள் உயிர்ப்போடு இயங்கும் நாடுகளில்.. எவரும் எந்தக் கண்டனத்தையும் இன்னும் பதியேல்லையே..??! நீங்கள் இந்தக் கொடியைப் பிடிக்காமல் சாதித்தது என்ன...??! பூபாளத்தில் காழ்ப்புணர்ச்சிக் கட்டுரை எழுதி கக்கினதை தவிர..????!

 

செயல் உள்ளவன் அதிகம் கதைக்கமாட்டான். செயலற்றவன் தான் எதிலும் குறைபிடிப்பான். புலிகளை வெறுக்கிறவை தமிழீழத்தை வெறுக்கனும் என்ற அவசியம் இல்லை. தமிழீழம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமை. நீங்கள் எல்லோரும் தமிழீழத்தை உச்சரிச்சிட்டுத்தான் இப்போ இந்த சொகுசு வாழ்க்கை வாழுறீங்கள். அந்த நன்றிக்கடனுக்காகவாவது.. அதை அடைய ஒரு வழி செய்யலாமே.

 

சரி புலிகள் தான் இவ்வளவு காலமும் உங்களின் வழிமுறைகளுக்கு தடையாக இருந்தாங்க என்றால்.. இன்று உங்கள் வழிமுறையில்.. தமிழீழம் சாத்தியம் என்பதை மக்களுக்கு நம்ப வையுங்களன். அதைவிட்டிட்டு.. ஜனநாயகம் ஆட்டிக்குட்டி என்று கொண்டு.. இல்லாத புலிகளுக்கு இன்னும் வகுப்பெடுத்திட்டு ஏன் திரியுறீங்க. புலிகளை கணக்குப் பண்ணவா நீங்கள் எல்லாம் தோற்றம் பெற்றீர்கள். அப்படி என்றால் பிரபாகரனிடம் கேட்டு புலிகளின் மத்திய குழுவில் இடம்பிடிச்சு அவர்களோடு சேர்ந்து இந்தப் போராட்டத்தை வெற்றி பெற வைச்சிருக்கலாமே. ஆனால் நீங்கள் அப்படியும் செய்யல்ல. அப்ப புலிகள் சொன்னது உண்மை என்றாகிடுது. அதாவது தமிழீழ விடுதலை நசுக்கவே நீங்கள் தோற்றம் பெற்றுள்ளீர்கள் என்ற புலிகளின் குற்றச்சாட்டைத்தானே நீங்கள் எல்லோரும் இன்றும் வலுப்படுத்திக்கிட்டு இருக்கீங்க.

 

ஒரு சொல்லும் இல்லை.. செயலும்  இல்லை.. ஒன்றும் இல்லை.. வெட்டி குறை மட்டும் தான் உங்கட மாற்றுக் கருத்து ஜனநாயகம் என்றால் அதில எங்க ஜனநாயகம் இருக்குது. மக்களுக்கு என்ன பிரயோசனம் இருக்குது...???! இதில பாசிச எண்ணங்களே அதிகம் உள்ளது.

 

அங்க தாயகத்தில ஒருத்தர்.. மாவீரர் இல்லங்களே இருக்கக் கூடாது என்றார். இன்னொருத்தர் புலிகளின் அடையாளங்களே வேண்டாம் என்றார்.. அந்த முட்டாள்களுக்கு போராளிகளை புலிகளாய் பார்க்கத் தெரிந்த அளவிற்கு அவர்கள் அந்த மண்ணின் மக்களின் பிள்ளைகள் என்ற அடிப்படை விளங்கேல்ல. இந்த விளக்கமற்றதுகள் எப்படி மக்களை மக்களின் உணர்வுகளை புரிந்து செயற்படுவார்கள். அவர்களின் புரிதல் எல்லாம் எதிரியிடம் எப்படி நல்ல பெயர் எடுப்பது. தங்களை தக்க வைத்துக் கொள்வது என்பதில் மட்டுமே தான் இருக்குது. அப்படி அரசியல் செய்து தமிழீழம் இல்ல.. ஒரு எள்ளுப் பருக்கையைக் கூட சிங்களவனிடம் இருந்து பெற முடியாது.

 

அப்படின்னா.. உங்கட மாற்று வழிமுறைகள் தான் என்ன..??! புலிக் கொடியை கைவிடுறது.. போராட்டங்களைக் கைவிடுறது.. மகிந்த கூப்பிடுற நேரம் போய் குந்தி இருந்து ரீ சாப்பிட்டு வந்து.. மக்களுக்கு பொய் சொல்லுறது. அந்தப் பொய்யை வைச்சு.. நீங்கள் கதிரை பிடிக்க வாக்குக் கேட்கிறது. இல்ல கூட..இருக்கிற ஆமிக்காரனை பந்தா பிடிச்சு கள்ளவாக்குப் போடுறது..! இப்படியே போய்க்கிட்டு இருந்தா தமிழ் மக்களின் நிலை.. அதோ கதிதான். அதிலும் புலிக்கொடியை தூக்கிப் பிடிச்சா ஏதேனும் விமோசனம் பிறக்கும்.. என்றது மட்டும் திண்ணம். அதுதான் இங்க இளையோரும் மற்றோரும் அதனை தூக்கிப் பிடிக்கினம். தங்கட அடையாளம்.. தேவை என்ன என்பதைச் சொல்லினம்.

 

சில தினங்களாக பெல்பாஸ்டில் கலவரம். ஒரு கவுன்சில்.. பிரிட்டனின் யூனியன் கொடியை இறக்கி வைக்க தீர்மானம் போட்டதற்கு இந்தச் சண்டை. ஆனால்.. நம்ம சனங்களில கொஞ்சம் இருக்கே.. இன்னும் சிங்களவன் தனக்குச் சார்ப்பாக தானே வடிவமைச்ச சிங்கக் கொடியை பூஜித்துக்கிட்டே இருக்கனும் என்றுதுகள்..! இதுகள் எல்லாம் எப்ப திருந்தி.. எப்ப தமிழீழம் அமையுறது. இதுகளை எல்லாம் எதிர்பார்த்தா பிரபாகரன் இல்ல.. எவருமே போராடி இருக்க மாட்டினம். இவர்களுக்கு குறை பிடிக்கிறது.. காட்டிக்கொடுக்கிறது.. இது தவிர வேற எதுவும் வரவே வராது. அப்படி வளர்க்கப்பட்டு விட்டார்கள். அதனை இளைய சமூகத்திடமும் வளர்க்க முனைகிறார்கள். ஆனால்.. தமிழ் மக்களின் தமிழீழ இலட்சிய ஆன்மாவின் முன்.. இவர்களின் பித்தலாட்டம் தோற்று ஓடிக்கொண்டு தான் இருக்கும்..! யாரும் புதிதாக வந்து இவர்களை தோற்கடின்னுன்னு இல்லை. இவர்களின் கொள்கையே அவர்களை தோற்கடிக்கும். மக்களிடம் காட்டிக்கொடுக்கும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.