Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிக்காதீங்கப்பா.... :)

Featured Replies

வடிவாக இருக்கின்றது படம்.... முகத்தில் சாந்தம் இருப்பது வடிவைக் கூட்டுகின்றது.

மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.........!!

  • Replies 57
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் துளசி 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள்....வரைதலுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக வரைந்துள்ளீர்கள் துளசி, வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை பாராட்டுக்கள்

:) இன்றுதான் பார்த்தேன் .............உங்களிடம் இந்த திறமையும் இருக்கின்றதா. வாவ் .....ஒட்டுமொத்தத்தில் சகலகலாவல்லவி ............வாழ்த்துக்கள் மேலும் வளர ..........

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைச்சொல்லணும்

சொல்லவேண்டிய  இடத்தில் சொல்லவேண்டியதை சொல்லாமல் விடுவதும் ஒருவித தப்புத்தான். :icon_idea:

இந்த திரியை துளசி  இங்கு இணைத்தபோது

என்னடா இதைக்கூட திரியாக்கி  இணைக்குதே.

பகிடி விடப்போகிறார்கள் என்று தான் உண்மையில் நினைத்தேன்.

ஆனால் நான் எதிர்பார்த்தற்கு நேரர் எதிர்மாறாக

இந்த யாழ்கள  உறவுகளின் பாராட்டுதல்களும் விளக்கங்களும் விசாரிப்புக்களும் ஊக்கங்களும் மிகவும் ஆச்சரியம் தருவனவாக இருக்கிறது. அதிலும் நெடுடுக்கினதும் தப்பிலி  மற்றும் நிழலி ஆகியோரின் கருத்துக்கள் மேலும் மேலும் மேம்பட வைப்பன.

இந்த யாழ்கள நெருக்கம் இந்த ஒழுக்கம் போற்றப்படவேண்டியது. 

தொடர்க ஒற்றுமை. வாழ்க பல்லாண்டு.

நன்றி அக்கா... ஆனால் இப்ப நேரம் இருப்பதால் செல்கிறேன். ஜனவரியிலிருந்து கிழமைக்கு 20 மணித்தியாலம் பிரெஞ்சு படிக்க போக வேணும். கட்டாய படிப்பு. எனவே அதன் பின் இதே தினத்தில் இங்கு செல்ல நேரம் கிடைக்குமோ தெரியாது. :)

பிரெஞ்சு படிக்கப்போவது குறித்து பாராட்டுக்கள்.

தனியே  பாடசாலைப்படிப்பு அல்லது புத்தகப்படிப்பு எமக்கு மொழி அறிவைத்தராது.   அதற்கான  தொடர்புகளும் பயிற்சிகளும் தொடர்ந்து  பிரெஞ்சு மொழியில் பேசுதலும் முக்கியம். 

கிழமைக்கு 20 மணித்தியாலம் என்பது மிகவும  குறைவானது.

எனவே  தங்களால் இந்த வகுப்பையும் தொடரமுடியும்.

உங்களின் ஆரம்ப அடிப்படை  தெரிந்தவர்களின் தொடர்பாடல்

நீண்டகால அடிப்படையில் தங்களுக்கு தேவையாகவும்  பெரும் உதவியாகவும்  இருக்கும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
அருமையாக வரைந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் துளசி 
 
பி;கு: எனது புகைப்படத்தை அனுப்புகின்றேன் வரைந்து அனுப்புங்கள் ஏனென்றால் உண்மையான படத்தைவிட வரைந்த படம் நன்றாக இருப்பதனால் நான் அனுப்பும் எனது படத்தை விட என்னை அழகாக வரைவீர்கள் என்பதற்காக ......  :D  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக வரைந்துள்ளீர்கள் துளசி வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக வரைந்து இருக்கின்றீர்கள் துளசி. எனது அவதாரில் இருக்கும் படத்தையும் வரைந்து தந்தால் (உதடுகள் இழுபடக்கூடாது) நன்றாக இருக்கும் <_<

  • கருத்துக்கள உறவுகள்
உங்களுக்குகோட்டு சித்திரம் மிக அழகாக வருகிறது...நீங்கள் வரைந்த உருவத்தில் அதிகம் இடம்பெற்றிருப்பது அலங்காரவடிவங்கள்.. O/L இல் அலங்காரவடிவங்கள் பலவற்றை படித்திருக்கிறேன்...சில நினைவில் இருக்கின்றன..பல மறந்துபோய்விட்டன..தெய்வீக அலங்கார வடிவங்களில் சூரியன் சந்திரன் போன்றனவும்..பிராணிகளில் மகரம்,சிம்மம்,செரபெண்டிய;மத்சய(மீன்) போன்றனவும்...தாவரங்களில் நாரிலதா,சீனமலர்,தாழம்பூ,சப்புமலர்,பலாபெத்தி,கத்தரிமலர்,அன்னாசிமலர்,பூவும் மொட்டும்,கேதுவடிவம்,அரசிலை,நாகமலர், போன்றனவும்..உயிரற்றவற்றில் குந்திரிக்கன்,இரட்டைச்சுழி,தியரல,நீரலை,கல்பிந்து,தனிச்சுழி,சீப்புரு, போன்றனவும் வரைந்ததாக ஞாபகம்.. அது ஒரு அழகிய காலம்..நானும் O/L இல் சித்திரம்தான் எடுத்திருந்தேன்..எனக்கு மிகப்பிடித்தது சித்திரம்...
 
எழுத்து பிறக்காத முன்பே வரைகலைகள் பிறந்திருக்கிறது என்பதை பண்டை காலத்துச் சான்றுகள் நினைவுப்படுத்துகின்றன. மிகவும் பழமை வாய்ந்த கலைகளில் ஓவியக் கலையும் ஒன்று எனவும் அது உயரியக்கலையாகவும் கூறப்படுகிறது.முன்னொருகாலத்தில் வீட்டின் வரவேற்புச் சுவரில், படுக்கையில், திருப்தி படாமல் வீசப்பட்ட குப்பைத்தொட்டியில் என ஓவியருடனும் ஓவியங்களுடனும் மிக அழகான வண்ணங்களுடன்  சித்திரம் தீட்டிக் கொண்டிருந்த என் நாள்கள் தொலைந்து பலவருடங்கள் ஆகிவிட்டன....நீங்கள் விட்டுவிடாமல் தொடருங்கள்..கலைகள் அற்புதமானவை..மனிதமனத்துக்கு அமைதியையும் நிறைவையும் தருபவை..அதிலும் சித்திரம் மிக அற்புதமானது..உங்களுக்குள் இருக்கும் இந்த திறமையை வளங்கள் நிறைந்த இந்த நாட்டில் பட்டைதீட்டிகொள்ளுங்கள்..சந்தர்ப்பங்கள் எம்மை தேடிவருவதில்லை..நாம்தான் அவற்றை உருவாக்கவேண்டும்...

Edited by சுபேஸ்

உங்களுக்கு ART நன்கு வரும்போல் உள்ளது,நேரத்தை பிரயோசனமாக செலவழித்தால் எதிர்காலத்தில் மிகவும் உதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் O/Lஇல் சித்திரம் தான் எடுத்தேன் ஆனால் எங்கள் பாடசாலையில் ஒரு பொம்பிளைப்பிள்ளை கூட சித்திரம் எடுக்கேல்லை. :unsure:  எனிவே.. நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள். :)

Edited by ஜீவா

நானும் ஓல் இல் சித்திரம் தான் எடுத்தேன் ஆனால் எங்கள் பாடசாலையில் ஒரு பொம்பிளைப்பிள்ளை கூட சித்திரம் எடுக்கேல்லை. :unsure:  எனிவே.. நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள். :)

நான் O/L எடுத்த போது யாழ் பரியோவான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். அங்கு வரைதல் மட்டும் தான்..வேறு தெரிவு இல்லை. எனக்கோ ஒரு கோட்டைக் கூட ஒழுங்காக போட முடியாது. சூடு போட்டாலும் என்னால் மாங்காயைக் கூட ஒழுங்காக கீற வராது. வரைதல் ஆசிரியரின் பெயர். தேவராஜா. எப்பவும் பிரம்புடன் தான் திரிவார். அவரிடம் தான் அதிகளவு அடி வாங்கியிருக்கின்றேன். நான் OL பரீட்சையில் வரைந்த விதத்தினைப் பார்த்து பரீட்சையை கண்காணிக்க வந்த ஆசிரியர் ஒருவர் தானே கொஞ்சம் வரைந்து உதவி செய்தார். அப்படியிருந்தும் S தான் எடுத்தேன் !!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் O/Lஇல் சித்திரம் தான் எடுத்தேன் ஆனால் எங்கள் பாடசாலையில் ஒரு பொம்பிளைப்பிள்ளை கூட சித்திரம் எடுக்கேல்லை. :unsure:  

அடப்பாவமே..காஞ்சிருப்பியேடா?? :D

நான் சித்திரத்துக்கு வந்தது ஒரு விபத்து..ஆறாம் வகுப்புவரை சங்கீதமே எடுத்தன் ஏழாம் வகுப்பில் டீச்சர் பாடச்சொல்ல பொடியங்களோட சேர்ந்து வம்புக்கு பிழைபிழையாக பாட கோபத்தில் ரீச்சர் தாளம்போட வச்சிருந்த கொட்டனாலை எறிய அது கையிலை பட்டு நொந்துபோய் அந்தகோபத்திலை அரைகுறையிலையே எழும்பி நேர சித்திர டீச்சரிட்டை போய் சித்திரம் எடுக்கபோறன் எண்டு சேர்ந்திட்டன்..பின்னாளில் சித்திரமே ரொம்ப பிடிச்சுப்போச்சு..பிடிச்சது கிடைக்காடி கிடைச்சதை பிடிச்சது ஆக்கிகொள்ளவேனுமெண்டது உண்மைதான்...உனக்கு சித்திரத்துக்குதான் பொண்ணுங்க இல்லை..எங்களுக்கு A/L வரும்வரை கண்ணிலை காட்டலை..ஆனாலும் ரியூசன் அந்தகுறையைய் தீர்த்துவச்சது... :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நான் சித்திரம் தான் எடுத்தேன் ஆனால் நான் சித்திரத்தில் F என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் :lol:  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன எடுத்தேன் ...................வேணாம்

அப்ப எல்லாம் இலை விடலை நண்பா..

படுபாவியள் மொனிட்டர், ஃப்ரிபெக்ட் எண்டு பள்ளிக்காலம் முடியும் வரைக்கும் போட்டிட்டாங்கள் அதாலை கலவன் பாடசாலையா இருந்தும் ஒரு பிகரை கூட பார்க்கேல்லை ஆனால் ரியூசனிலை கலைபட்டிருக்கிறம்.

நானும் உன்னைப்போலத்தான் நண்பா 6ம்வகுப்புவரை நடனம் எடுத்தனான். பிறகு பொடியள் எல்லாம் பழிக்க சங்கீதம் எடுத்தனான் ஆனால் 3ம் தவணைப்பரீட்சையில் எனக்கு சங்கீத ரீச்சர் போட்ட மார்க்ஸ் 34 அந்த தவணையிலையே நான் குறைவாக எடுத்த மதிப்பெண். பிறகு ரீச்சரோடை ஏன் மார்க்ஸ் குறைய போட்டனிங்கள் எண்டு சண்டை பிடிச்சு 8ம் வகுப்பிலை இருந்து தான் சித்திரம்.

  • தொடங்கியவர்

எல்லோருக்கும் நன்றி... தனித்தனியாக பதில் போடாததுக்கு மன்னியுங்கள். முக்கிய கருத்துகளுக்கு மட்டும் பதில் போடுகிறேன்.

தமிழரசு அண்ணா, கிருபன் அண்ணா, உங்கள் படங்களை வரையுமளவுக்கு எனக்கு அவ்வளவாக வரைய தெரியாது. :D
 
ஒன்றைச்சொல்லணும்

சொல்லவேண்டிய  இடத்தில் சொல்லவேண்டியதை சொல்லாமல் விடுவதும் ஒருவித தப்புத்தான். :icon_idea:

இந்த திரியை துளசி  இங்கு இணைத்தபோது

என்னடா இதைக்கூட திரியாக்கி  இணைக்குதே.

பகிடி விடப்போகிறார்கள் என்று தான் உண்மையில் நினைத்தேன்.

ஆனால் நான் எதிர்பார்த்தற்கு நேரர் எதிர்மாறாக

இந்த யாழ்கள  உறவுகளின் பாராட்டுதல்களும் விளக்கங்களும் விசாரிப்புக்களும் ஊக்கங்களும் மிகவும் ஆச்சரியம் தருவனவாக இருக்கிறது. அதிலும் நெடுடுக்கினதும் தப்பிலி  மற்றும் நிழலி ஆகியோரின் கருத்துக்கள் மேலும் மேலும் மேம்பட வைப்பன.

இந்த யாழ்கள நெருக்கம் இந்த ஒழுக்கம் போற்றப்படவேண்டியது. 

தொடர்க ஒற்றுமை. வாழ்க பல்லாண்டு.

பிரெஞ்சு படிக்கப்போவது குறித்து பாராட்டுக்கள்.

தனியே  பாடசாலைப்படிப்பு அல்லது புத்தகப்படிப்பு எமக்கு மொழி அறிவைத்தராது.   அதற்கான  தொடர்புகளும் பயிற்சிகளும் தொடர்ந்து  பிரெஞ்சு மொழியில் பேசுதலும் முக்கியம். 

கிழமைக்கு 20 மணித்தியாலம் என்பது மிகவும  குறைவானது.

எனவே  தங்களால் இந்த வகுப்பையும் தொடரமுடியும்.

உங்களின் ஆரம்ப அடிப்படை  தெரிந்தவர்களின் தொடர்பாடல்

நீண்டகால அடிப்படையில் தங்களுக்கு தேவையாகவும்  பெரும் உதவியாகவும்  இருக்கும்.

விசுகு அண்ணா, நானும் இவர்கள் பகிடி விடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். :) ஆனாலும் இங்கு இணைத்ததுக்கு காரணம் மற்றவர்களையும் தாம் வரைந்த படங்களை யாழில் இணைக்க தூண்டுவதற்கு தான்.

french class சேர்வதற்கு appointment எடுத்து போயிருந்தேன். அவர்கள் தான் சொன்னார்கள் சில இடங்களில் விரும்பிய நாளை தெரிவு செய்யலாம், சில இடங்களில் அவர்கள் சொல்லும் நாளுக்கு தான் நாம் போக வேண்டும் என்று. எனக்கு எப்படி கிடைக்கும் என்று தெரியவில்லை.

உண்மை தான். நான் கதைத்து பழகாததால் படித்த french ஐயும் இப்ப மறந்து விட்டேன். :(

உங்களுக்கு ART நன்கு வரும்போல் உள்ளது,நேரத்தை பிரயோசனமாக செலவழித்தால் எதிர்காலத்தில் மிகவும் உதவும்.

அந்த அளவுக்கு எனக்கு வரைய தெரியாது. :)

நானும் O/L இல் சித்திரம்தான் எடுத்திருந்தேன்..எனக்கு மிகப்பிடித்தது சித்திரம்...
 
முன்னொருகாலத்தில் வீட்டின் வரவேற்புச் சுவரில், படுக்கையில், திருப்தி படாமல் வீசப்பட்ட குப்பைத்தொட்டியில் என ஓவியருடனும் ஓவியங்களுடனும் மிக அழகான வண்ணங்களுடன்  சித்திரம் தீட்டிக் கொண்டிருந்த என் நாள்கள் தொலைந்து பலவருடங்கள் ஆகிவிட்டன....

உங்களுக்கு என்ன results வந்தது? உங்கள் படங்கள் இருந்தால் யாழில் இணையுங்கள்... :)

நான் O/L எடுத்த போது யாழ் பரியோவான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். அங்கு வரைதல் மட்டும் தான்..வேறு தெரிவு இல்லை. எனக்கோ ஒரு கோட்டைக் கூட ஒழுங்காக போட முடியாது. சூடு போட்டாலும் என்னால் மாங்காயைக் கூட ஒழுங்காக கீற வராது. வரைதல் ஆசிரியரின் பெயர். தேவராஜா. எப்பவும் பிரம்புடன் தான் திரிவார். அவரிடம் தான் அதிகளவு அடி வாங்கியிருக்கின்றேன். நான் OL பரீட்சையில் வரைந்த விதத்தினைப் பார்த்து பரீட்சையை கண்காணிக்க வந்த ஆசிரியர் ஒருவர் தானே கொஞ்சம் வரைந்து உதவி செய்தார். அப்படியிருந்தும் S தான் எடுத்தேன் !!

:lol: :lol:

ஆனாலும் நீங்கள் மனம் வைத்திருந்தால் வரைய பழகியிருப்பீர்கள். :)

நான் சித்திரம் தான் எடுத்தேன் ஆனால் நான் சித்திரத்தில் F என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் :lol:  :D  :icon_idea:

சித்திரத்தில் fail விட்டால் வரைய தெரியாது என்றோ அல்லது pass பண்ணினால் வரைய தெரியும் என்றோ இல்லை. மனம் வைத்து முயற்சி செய்தால் வரையும் தன்மை வரும். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இருக்கும் நாடுகளில் அந்த நாட்டு மொழி கற்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆகவே முதலில் நீங்கள் இருக்கும் நாட்டின் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் பின்னர் கல்லுரியிலயோ இல்லை பல்கலையிலயோ விருப்பமான துறையில் மெலதிக படிப்பைத் தொடருங்கள் அப்புறம் வரைதலாக இருக்கட்டும்..இது கட்டளை அல்ல அன்பு வேண்டுகோள்...

ஓம் அக்கா, மொழி படிக்கவும் இப்ப normal class க்கு போறனான். :D ஆனால் கதைத்து பழகிறேல்லை... அதை தான் முயல வேணும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்ன results வந்தது? உங்கள் படங்கள் இருந்தால் யாழில் இணையுங்கள்... :)

எனக்கு C வந்தது...உங்களுக்கு சிலவருடங்களுக்குமுன்னர் எடுத்ததால்  எங்களுக்குபுள்ளியிடல் முறைமை  D,C...இல் இருந்தது...பின்னர் நீங்கள் எடுத்தபோது A,B...க்கு மாறிவிட்டது....வரைதலுக்கு எனக்குநல்ல மார்க்ஸ்தான் கிடைத்தது..ஆனால் எழுத்துபரீட்சையில் குறைந்துவிட்டது...நான் வரைந்த படங்கள் ஊரில் இருக்கிறது...நான் ஏழாம் ஆண்டில் இருந்து O/L வரை பாவித்த சித்திரக்கொப்பிகளை வீட்டில் சேகரித்து வைத்திருக்கன்....எடுத்தால் இணைக்கிறேன்..அதுக்கு முதல் கிருபன் அண்ணாவின் படத்தை ஒருமுறை பரீட்சாத்தமாக கீறிப்பாக்கபோகிறேன் ரொம்ப நாளைக்கு அப்புறம்..நல்லா வந்தால் இங்கு இணைக்கிறன்..பாவம்கிருபன் அண்ணா... :lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது. எனக்கு சித்திரம்தான் கைப்பழக்கம். முன்பு செய்த தொழிலும் அதனை அடிப்படையாகக் கொண்டது. விருப்பமான துறைகளில் தொழில் செய்வது நல்லது.

தப்பிலி அண்ணா..எனது படத்தை கோட்டுசித்திரமாக வரைந்துதாருங்களேன்...உங்கள் கைவண்ணத்தை ரசிப்போம்..Please..

அழகாக உள்ளது, துளசியின் வரைதல் இணைப்பும், அதன் தொடர்ச்சியான பகிர்வுகளும் பலநினைவுகளை எனக்குள்ளும் மீட்டுள்ளது.

எமக்கு க.பொ.சா.தஇல் அழகியற்கலை வைக்கப்படவில்லை. ஆசிரியர் தேவராஜாவின் சித்திரவகுப்பில் நானும் பயின்றுள்ளேன். அந்த வகுப்பறை சற்று வெளிச்சம் குறைவாக காணப்படும். நான் முன்பு நன்றாக வரைவேன், வீட்டிலும் பொழுதுபோக்காக வரைவது. தேவராஜா மாஸ்டரின் பாராட்டும் அப்போது கிடைத்தது. வரையும்போது அருகில் நின்றுபார்த்து இரசிப்பார். கடைசி தவணைப்பரீட்சையில் அவரிடமிருந்து கீறலுக்கு 59/60 கிடைத்தது. ஏனக்கு சித்திரத்தில் வில்லங்கமான பகுதியாக விளங்கியது அவுக்கணபுத்தர்சிலை, சந்திரவட்டக்கல் தொடங்கி அனைத்து சிங்கள அலங்காரங்கள், சிற்பங்கள் எனவிரியும் எழுத்துப்பரீட்சை. சித்திரத்திற்கு அப்போது இலவசபாடநூல் வழங்கப்படாமையால் எழுத்துப்பரீட்சை கடினமாகக்காணப்பட்டது. பதினாறு வயதுடன் காலசூழ்நிலைகள் காரணமாக வரைதலுக்கும் எனக்கும் வெகுதூரம் இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

நான் சித்திரத்துக்கு வந்தது ஒரு விபத்து..ஆறாம் வகுப்புவரை சங்கீதமே எடுத்தன் ஏழாம் வகுப்பில் டீச்சர் பாடச்சொல்ல பொடியங்களோட சேர்ந்து வம்புக்கு பிழைபிழையாக பாட கோபத்தில் ரீச்சர் தாளம்போட வச்சிருந்த கொட்டனாலை எறிய அது கையிலை பட்டு நொந்துபோய் அந்தகோபத்திலை அரைகுறையிலையே எழும்பி நேர சித்திர டீச்சரிட்டை போய் சித்திரம் எடுக்கபோறன் எண்டு சேர்ந்திட்டன்..பின்னாளில் சித்திரமே ரொம்ப பிடிச்சுப்போச்சு..பிடிச்சது கிடைக்காடி கிடைச்சதை பிடிச்சது ஆக்கிகொள்ளவேனுமெண்டது உண்மைதான்...உனக்கு சித்திரத்துக்குதான் பொண்ணுங்க இல்லை..

வழமையாய் சித்திரஆசிரியர்களே அதிகம் கோபப்படுவார்கள், மாணவர்களிற்கு அடிபோடுவார்கள் என்பதாய் நினைவு. சங்கீதம், நடன ஆசிரியர்கள் சித்திர ஆசிரியர்களைவிடப்பரவாயில்லை. சங்கீதம், நடனம் எடுக்கும் மாணவர்களுக்கு பரீட்சைகளில் சித்திரபாடம் எடுக்கும் மாணவர்களைவிட புள்ளிகளும் அதிகளவில் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக வரைந்துள்ளீர்கள் துளசி...வாழ்த்துக்கள்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.