Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரிதி அண்ணன் கொலையும் சிறகடிக்கும் கற்பனைக் குதிரைகளும்.

Featured Replies

உங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று கருத்தெழுதும் ஆட்களுக்கு நான் பதில் கருத்து எழுதி எனது நேர‌த்தை வீணாக்குவதில்லை என நினைத்திருந்தேன் ஆனாலும் இந்த பதில் நெடுக்கருக்கும் சேர்த்து...முதலில் நான் எழுதினதை முழுமையாக வாசிக்கவும் அரை குறையாய் வாசிச்சு போட்டு,அதில் கொஞ்ச‌த்தை கொண்டு வந்து போட்டு விட்டு அதற்கொரு விளக்கம் தர‌ வேண்டாம்.
 
நெடுக்கரின்ட‌ கவிதைக்கு நீங்கள் விளக்கம் கொடுக்கிறீங்கள் நீங்கள் ஏதோ அவரோடு சேர்ந்திருந்து கவிதை எழுதின மாதிரி...நீங்கள் சொன்ன விளக்கத்தை மனதில் வைத்து தான் நெடுக்கர் கவிதை எழுதியிருந்தால் நான் கேள்வி கேட்ட உட‌னே இந்த பதிலை நெடுக்கர் எனக்கு எழுதியிருப்பார்...பாவம் நெடுக்கர் தக்க சமயத்தில் வந்து அவருக்கு உதவியிருக்கிறீங்கள்.ஆனால் இதை அவர் எனக்கு பதில் எழுத முதல் எழுதியிருந்தால் அவர் கஸ்ட‌ப்பட்டு திண்ணையில் எந்நேர‌மும் நிற்கும் உங்கள போல ஆட்களையும் சேர்த்து தான் எழுதினேன் என பதில் எழுதியிருக்க மாட்டார்.
 
//
பரிதி அண்ணா உயிருடன் இருந்த போது அவர் மேல் குற்றச்சாட்டு வைத்து கட்டுரை எழுதாதவர்கள் எல்லாம் இறந்த பின்னர் அவர் மேல் பலவாறு பழிசுமத்தி கட்டுரை எழுதுகிறார்கள். அதை எல்லாம் கேட்க மாட்டீர்கள்.//
 
ஓ இந்தக் கவிதையில் இப்படி சொல்லப்பட்டு இருக்குதா? எனக்கு தமிழறிவு இல்லவே இல்லை ஆனால் நான் கேள்வி கேட்ட உட‌னே நெடுக்கர் இந்தப் பதிலை சொல்லியிருக்கலாம்[எப்படி எழுதுவார் நீங்கள் சொல்கின்ற மாதிரி உண்மையிலேயே நினைச்சு கவிதை எழுதியிருந்தால் கட்டாயம் எழுதியிருப்பார்.]...எனக்கு எது பிழை என்று படுதோ அதை நேரடியாய் சாஸ்திரி என்டில்லை யாரிட்டையும் கேட்கின்ற தைரியம் எனக்கு இருக்கு...எனக்குத் தெரியும் எது சரி/பிழை? எதை கேட்க வேண்டும் என்று...இந்த உசுப்பேத்திற வேலையெல்லாம் என்னோட வைத்திருக்க வேண்டாம்
 
//
ஒருவர் இறந்த பின் அவர் மேல் பழி போடும் போது இறந்தவர் பற்றிய உண்மை நிலையை தெளிவு படுத்த வேண்டிய கட்டாயமும் பலருக்கு உள்ளது. அதில் தவறை காண்பது என்பது மிகப்பெரும் தவறு. அதை போலி கவிதை என்று முத்திரை குத்துவது உங்கள் சுயநலம்.//
 
இந்த கவிதையில் எங்கே பரிதியின் உண்மை நிலையை தெளிவுபடுத்தி நெடுக்கர் எழுதியிருக்கிறார் என சொன்னால் நல்லது[நீங்களே மேலே சொல்லி இருக்கிறீங்கள் நெடுக்கர் பரிதியை விமர்சித்து கவிதை எழுதவில்லை என்று]...ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றிக் பிழையாக கதைக்க கூடாது அது தானே உங்கட‌ வாதம் சரி ட‌க்லஸ் எப்ப மண்டையை போடுவார் என பார்த்துக் கொண்டு இருக்கிறேன் அவர் செத்த பிறகாவது நீங்கள் அவரைப் பற்றி கூடாமல் கதைக்கிறீர்களோ என பார்க்கத் தான்
 
பருதி உயிரோடு இருக்கும் போது அவரைப் பற்றி புகழ்ந்து நெடுக்ஸ் கவிதை எழுதியிருக்கலாம் ஆள் எப்ப மண்டையைப் போடும் என பார்த்திட்டு இருந்து கவிதை எழுதுன மாதிரி இருக்குது...அடுத்தது நெடியவனோ,தனமோ தெரியாது ஆனால் நெடுக்ஸ் இப்பவே இவர்களை பற்றி தெரிஞ்சிட்டு கவிதை வடிக்கிறது நல்லம்...பிறகு எதாவது நட‌ந்த பிறகு சாஸ்திரி கட்டுரை எழுத அதற்கு போட்டியாய் நெடுக்கர் தனக்கு அவர்களை தெரியும் என்ட‌ மாதிரி கவிதை எழுதுறதை விட்டு இப்பவே எல்லாத்திற்கும் ஆயத்தமாய் இருக்கிறது நல்லது...அல்லது சாஸ்திரி கட்டுரை எழுதினால் தான் அதற்கு பதிலாய் நெடுக்கர் கவிதை எழுதுவாரோ தெரியாது...சாஸ்திரி எதாவது எழுதினால் அது பிழை என்டால் போய் நேர‌டியாய் அந்த திரியில் எழுத தைரியமில்லை...ஏதோ ஒன்டை நினைச்சு நெடுக்கர் கவிதை எழுதப் போக அதற்கு விளக்கம் கொடுக்க இன்னொரு காரியதரிசி
 
இதற்கு மேலும் இந்த திரியில் வந்து எழுதி இந்த திரியை வளர்த்துவேன் என எதிர் பார்க்க வேண்டாம் நன்றி வணக்கம்

நான் 3 பந்திகளாக கருத்து எழுதியிருக்கிறேன்.

அதில் முதல் பந்தி இந்த கவிதை தொடர்பாக நீங்கள் தவறான புரிந்துணர்வை கொண்டிருப்பதால் அது பற்றி சரியான விளக்கம் தந்திருந்தேன்.

2 ஆவது பந்தி... நீங்கள் (கவிதையுடன் தொடர்பில்லாமல்) எழுதிய கருத்துகளை  வைத்து உங்களிடம் நானும் (கவிதையுடன் தொடர்பில்லாமல்) அதே போன்றதொரு கேள்வி கேட்டிருந்தேன்.

3 ஆவது பந்தி... பரிதி அண்ணா இறந்த பின் அவர் என்னென்ன செய்தார் என்று எழுதினால் அது போலி கவிதை என்று சொல்லும் உங்கள் கருத்தை மறுத்து பதிலளித்திருந்தேன். அதாவது ஒருவேளை யாரும் பரிதி அண்ணா இறந்தபின் கூட அவர் என்னென்ன செய்தார் என்று எழுத வேண்டிய சந்தர்ப்பம் வந்தாலும் அதில் தவறில்லை, அந்த சந்தர்ப்பம் எதற்காக வந்தது என்பது பற்றி எழுதியுள்ளேன்.

இங்கு யாரும் இறந்தவர்கள் மேல் பழி சுமத்தக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் உயிருடன் இருக்கும் வரை பழி சுமத்தாமல் எதற்கு இறந்த பின் பழி சுமத்துகிறார்கள்? அவ்வாறு சுமத்தப்படும் பழி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை ஆதாரத்துடன் தர வேண்டும்.

உயிருடன் இருக்கும் போது ஒருவரில் பழி சுமத்தினால் குறிப்பிட்ட நபரே விளக்கம் கொடுக்க முடியும். இறந்த பின் ஆதாரமற்று பழி சுமத்தினால் நிச்சயம் மற்றவர்கள் தான் பதிலளிக்க முடியும்.

இதற்கும் டக்ளசுக்கும் முடிச்சுப்போடுவது உங்கள் புரிந்துணர்வற்ற தன்மையை காட்டுகிறது. டக்ளஸ் இப்பொழுது உயிருடன் இருக்கும் போதே அவர் நடவடிக்கைகளை கூறி அவர் மேல் எல்லோரும் விமர்சனம் வைத்து விட்டோம். கிட்டடியில் கூட ஒரு திரியில் பலர் டக்லஸ் மேல் விமர்சனம் வைத்துள்ளார்கள்.

திண்ணை பற்றி அவர் எழுதியதில் கூட என்னை குறிப்பிட்டதாக நான் காணவில்லை. ஏனென்றால் இதுவரை ஊரிலோ அல்லது யாழிலுள்ள திண்ணையிலோ நான் தமிழீழ தலைவர்கள் பற்றிய வதந்தியை உண்மையாக்கி கதைத்ததில்லை. நெடுக்ஸ் அண்ணா திண்ணை பேச்சு பற்றி எழுதியதை முழுமையாக வாசியுங்கள்.

ஒரு கவிதையை புரிந்து கொள்ளும் அனைவரும் அது பற்றிய விளக்கம் கொடுக்கலாம். உதாரணமாக இசை அண்ணா "ஆரம்பகாலத்தில் பரப்பிவிடப்பட்ட வதந்திகளை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றிகள் நெடுக்ஸ்" என்று குறிப்பிட்டுள்ளார். அதற்காக அவரும் சேர்ந்து நெடுக்ஸ் அண்ணாவுடன் கவிதை எழுதினார் என்று அர்த்தமா?

எனக்கு தான் எல்லாம் தெரியும் என்று நான் என்றுமே சொன்னதில்லை. ஆனால் நான் அவ்வாறு நினைக்கிறேன் என்று நீங்கள் தான் நான் யாழுக்கு வந்த புதிதிலிருந்து எனக்கு சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் உங்களுக்கு எல்லாம் தெரியும் மற்றவனெல்லாம் மடையன் என்ற கணக்கில் நீங்கள் தான் கருத்து எழுதுகிறீர்கள்.

நீங்கள் எனக்கு கருத்து எழுத விரும்பாதது போல் நெடுக்ஸ் அண்ணாவும் சாத்திரி அண்ணாவின் திரியில் கருத்து எழுத விரும்பாமல் இருக்கலாம். தவிர அவர் சாத்திரி அண்ணாவின் திரியை வைத்து தான் இந்த கவிதை எழுதினார் என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? இது அன்று தொடக்கம் இன்றுவரை வதந்தி பரப்பும் அனைவருக்கும் பொதுவாக எழுதப்பட்டது என்றே நான் உள்வாங்குகிறேன்.

கவிதையை வாசித்து முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் உங்களுக்கு பிடிக்காத நபர்கள் மேல் நீங்கள் விரும்பிய படி தாக்குதல் நடத்த வேண்டாம்.

துளசிக்கு சாத்திரியிடம் துணிவாக கேட்கும் தைரியம் இல்லை. இவர் அவரோடு சம்பந்தப்பட்டவர் அல்லது இவரை அவர் இனங்கண்டுவிட்டார் என்று நினைக்கிறேன்.பல இடங்களில் இவர் சாஸ்த்திரியை கூல் பண்ணி சமாளிச்சு எழுதுவதை கண்டிருக்கிரன்.இப்படி மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டும் விலாங்குமீன் போல இவர் யாழ்களத்தில் இழுபடுவதை பார்க்கும்போது நான் சில இடங்களில் மனதுக்குள் சிரித்திருக்கிறன்.ஈந்த வித்துவத்தில் இவர் உங்களைபார்த்து அதை கேட்கவில்லை இதைக்கேட்கவில்லை,அவரிடம் கேட்கவில்லை இவரிடம் கேட்கவில்லை என்று எழுதுவதைப்பார்க்க மீண்டும் சிரிப்பை வரவைக்கிற வேலையாக தெரியுது. :lol:  :icon_idea:

ரதி அக்கா அந்த கருத்தில்என்னை குறிப்பிடவில்லை சாத்திரி அண்ணாவின் திரியில் நேரடியாக எழுத நெடுக்ஸ் அண்ணாவுக்கு துணிவில்லை என்று சொல்லியிருக்கிறார். அதை கூட சரியாக உள்வாங்காமல் என்னை புகுத்தி எழுதியுள்ளீர்கள். :D யார் யார் எந்த திரியில் எழுதுவதென்பது அவரவர் விருப்பம். :D

சாத்திரி அண்ணாவின் திரியில் அவர் பற்றிய குற்றச்சாட்டுகளை நான் நேரடியாக தான் வைத்திருக்கிறேன்.

நான் ஒன்றும் அவரை சடைந்து கதைக்கவில்லை. அவரில் உள்ள ஒரு விடயம் பிடிக்காவிட்டாலும் இன்னொரு விடயம் பிடித்திருந்தால் அதை நான் வரவேற்பேன். உங்களை போல் எவரையும் எதிரியாக நோக்கும் எண்ணம் எனக்கு இல்லை. :)

சாத்திரி அண்ணாவுடன் நான் சம்பந்தப்பட்டவரும் அல்ல. அவர் என்னை இனங்காணவும் இல்லை. ஆனால் வேறு யாரோ ஒரு ஆண் அதுவும் யாழின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தான் நான் என்று நினைத்து அனைவரும் என்மேல் யாழுக்கு வந்த புதிதிலிருந்து இன்றுவரை தனிமனித தாக்குதல் நடத்தினார்கள். :D ஆனால் யாரை நான் என்று நினைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் இல்லை.

மன்னிக்கவும் நெடுக்ஸ் அண்ணா. திரியுடன் சம்பந்தமில்லாத இந்த பதிலுக்கு.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

 இக்கருத்துடன் எனக்கும் உடன்பாடில்லை புத்து.

எம்மில் ஆயிரம் எழுத்தாளர்கள் இருக்கின்ற போதும்.. ஏன் எம்மால் இன்னொரு சிவராமையோ.. பாலகுமாரையோ உருவாக்க முடியல்ல... காரணம்.. தேடல் அற்ற.. ஆழமற்ற.. ஆதாரமற்ற கற்பனைகளை எழுத்துக்களில் அள்ளிக்குவிப்பதால் ஆகும்..!

:)

இதைப்பற்றி நானும் நீண்ட காலமாய் சிந்தித்தது உண்டு..எமது எழுத்தாளர்கள் ஒன்றில் புலிகளை புகழ்ந்து எழுதுவார்கள் இல்லை என்றால் இகழ்ந்து எழுதுகின்றார்கள்.மக்களுக்கு தேவையான அரசியல் அறிவை கொடுக்க தவறுகிறார்கள்...இந்த விடயத்தில் புலிகளும் பிழை விட்டுள்ளார்கள். புலிப்போராளிகளுக்கு தலைவர் பிரபாகரனின் ஆயுத பயிற்சியில் இருந்த அறிவு,தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் அரசியல் அறிவில் இருக்கவில்லை என்பது எனது கருத்து...இருந்திருந்தால் இன்றைய காலகட்டத்தில் பல சிவராம்களும்,பாலகுமார்களும் உருவாகியிருப்பார்கள்... புளொட்டால்...ஒரு சிவராம் ஈரோஸ் ஆல் ...ஒரு பால்குமார் ஈபியால் ......அற்புதன் உருவாக்க முடியும் என்றால் ஏன் புலிகளால் முடியவில்லை.......

  • தொடங்கியவர்

புலிகள் அறவே உருவாக்கவில்லை என்பது தவறு.

யோகரட்ணம் யோகி போன்ற நல்ல அரசியல் எழுத்தாளர்களை புலிகளும் தோற்றுவித்திருந்தனர்.

ஈரோஸ்.. புளொட்.. ஈபி ஆட்கள் நாட்டுக்காக சண்டை பிடிச்சவையோ...???! புலிகள் உருவாக்கிய போராளிகள் நாட்டுக்காக கால ஓட்டத்தில் உயிர் திறந்ததும்.. இந்த இடைவெளிக்குக் காரணம். அதற்கு மத்தியிலும்.. யோகி.. திலீபன்.. கரிகாலன் போன்ற நல்ல அரசியல் எழுத்தாளர்கள் தோற்றுவிக்கப்பட்டே இருந்தனர். இவர்களை விட உள்ளிருந்து விடுதலைப்புலிகள்.. ஈழநாதத்தில் எழுதி வந்தவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெறுமனவே புலிகள் யாரையும் உருவாக்கவில்லை என்பது சரியான பார்வையல்ல.

தாயகத்தில் ஒரு கட்டத்தில் Hot spring என்ற விடுதலைப்புலிகளின் ஆங்கில பத்திரிகை வந்தது. அதனை பள்ளிக்காலத்தில் வாசித்திருக்கிறேன். சிவராமின் ஆக்கங்களைப் போல நல்ல பரந்துபட்ட பார்வைகள் அதிலும். வெறுமனவே இயக்கங்களைத் திட்டித்தீர்ப்பதை விடுத்து.. புலிகள் மக்களுக்கு அரசியல் தெளிவு பற்றி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். எதிரியின் நகர்வுகள்.. இராதந்திரங்கள் குறித்தும்.. சர்வதேச அணுகுமுறைகள் குறித்தும் போதித்தனர். தங்களின் பலம் பலவீனம் பற்றியும் அவர்கள் பேசத்தவறவில்லை.

அதேவேளை.. புலிகள் மற்றைய இயக்க திறமையாளர்களை குறிப்பாக தமிழரின் தாயகக் கனவில் இருந்தும் விலகி நடக்காத அரசியல் மற்றும் திறமையாளர்களை வளர்த்தெடுக்க.. ஊக்குவிக்கத் தவறவில்லை என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால்.. புலிகளைத் தத்தெடுத்து வேறு எந்த இயக்கமாவது மக்கள் நலன் நோக்கி வளர்த்து விட்டிருப்பதாகத் தெரியவில்லை..??????????????????!.. மாற்று இயக்கங்களால் உள்வாங்கப்பட்ட சில புலிகள் கூட புலிகளைத் திட்டித்தீர்க்கவும்.. போராட்டத்தை பலவீனப்படுத்தவும்.. எதிரிகளுக்கு காட்டிக்கொடுக்கவும் பயன்படுத்தப்பட்டனரே அன்றி.. மக்களின் பொது அரசியல் விருப்பை விடுதலைக் கனவை நன்வாக்கவோ.. அடையவோ என்று வளர்க்கப்படவில்லை. இன்றும் அதே நிலையில் தான் அவர்கள்.  இவர்கள் தான் இன்று ஜனநாயகம்.. மாற்றுக் கருத்து என்று மக்களின் கொள்கைகளை கூறுபோட்டும் விற்கிறார்கள். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அறவே உருவாக்கவில்லை என்பது தவறு.

யோகரட்ணம் யோகி போன்ற நல்ல அரசியல் எழுத்தாளர்களை புலிகளும் தோற்றுவித்திருந்தனர்.

ஈரோஸ்.. புளொட்.. ஈபி ஆட்கள் நாட்டுக்காக சண்டை பிடிச்சவையோ...???! . :icon_idea::)

அவர்களும் முயற்சித்தார்கள் ஆனால் முடியவில்லை :D :D.... சண்டை பிடிச்சதில் புலிகளுக்கு நிகர் புலிகள்தான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..... எழுத்து துறையை பற்றி தான் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்,சில நேரம் அதிக அளவில் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் கருத்துக்களை போராளிகள் உள்வாங்கியிருந்தால் இன்று புலிகளை வசைபாடும் முன்னாள் புலி போராளிகளின் எழுத்துக்கள் வித்தியாசமான பார்வையில் இருந்திருக்க கூடும்.....ஆயுத போராளிகளை உருவாக்கிய அளவுக்கு எழுத்து போராளிகளை உருவாக்கவில்லை ...இன்றைய காலகட்டத்தில் 100 ஆயுதபோரளிக்கு ஒரு எழுத்து போராளி சமன்....அதை தற்பொழுது சில/பல புலி உறுப்பினரும் செய்கிறார்கள்...

இவர்கள் தான் இன்று ஜனநாயகம்.. மாற்றுக் கருத்து என்று மக்களின் கொள்கைகளை கூறுபோட்டும் விற்கிறார்கள்
அதை தற்பொழுது சில/பல புலி உறுப்பினரும் செய்கிறார்கள்...ஆகவே இது புலி,ஈபி,ஈரோஸ்,புளொட்,ஈபிடிபி,டெலோ என்ற பிரச்சனையல்ல ...தமிழர் பிரச்சனை ....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி  நெடுக்கு கவிதைக்கு

பருதியண்ணாவின் குடும்பம் அரச வீட்டுக்கு பதிந்து அதற்காக காத்திருக்கிறது

சிலர் அவரது இழப்புக்கு பின் அவரது குடும்பத்துக்கு சில  உதவிகளை  செய்ய  முன் வந்தபோது

அந்த அம்மா சொன்னது

நானும எனது பிள்ளையும் வெளிநாட்டிலிருக்கின்றோம்

உழைத்து சாப்பிடுவோம்

ஏதாவது செய்வதாயின் வன்னி  மக்களுக்கு செய்யுங்கள்

அதுவே பருதி  அண்ணாவுக்கு நீங்கள் செய்யும் சாந்தியாக அமையும் என.

சொத்துக்களை  எடுத்தவர்கள் என்ற பட்டம்.............???

பணம் பருதியண்ணாவிடம்  இல்லை.

அப்போ...........??? :(  :(  :(

எனக்கு இப்பொழுதெல்லாம் நாம் பழகும் கூட்டம் மனித கூட்டம் தானா என ஐயம் வருகிறது. :(

நன்றி  நெடுக்கு கவிதைக்கு

இதைப்பற்றி நானும் நீண்ட காலமாய் சிந்தித்தது உண்டு..எமது எழுத்தாளர்கள் ஒன்றில் புலிகளை புகழ்ந்து எழுதுவார்கள் இல்லை என்றால் இகழ்ந்து எழுதுகின்றார்கள்.மக்களுக்கு தேவையான அரசியல் அறிவை கொடுக்க தவறுகிறார்கள்...இந்த விடயத்தில் புலிகளும் பிழை விட்டுள்ளார்கள். புலிப்போராளிகளுக்கு தலைவர் பிரபாகரனின் ஆயுத பயிற்சியில் இருந்த அறிவு,தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் அரசியல் அறிவில் இருக்கவில்லை என்பது எனது கருத்து...இருந்திருந்தால் இன்றைய காலகட்டத்தில் பல சிவராம்களும்,பாலகுமார்களும் உருவாகியிருப்பார்கள்... புளொட்டால்...ஒரு சிவராம் ஈரோஸ் ஆல் ...ஒரு பால்குமார் ஈபியால் ......அற்புதன் உருவாக்க முடியும் என்றால் ஏன் புலிகளால் முடியவில்லை.......

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் .

ஆரம்பத்தில் அப்படியான பலர் புலிகளில் இருந்தார்கள் ஆனால் அவர்கள் சொல்வது எதுவும் புலிகளுக்கு தேவைபடவில்லை.போடுவதுமாத்திரம் தான் கொள்கை என்றால் வேறு தேவை எதற்கு .

இந்த கவிதை புலிகளுக்கு தான் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.வெறும் ஆயுதமும் மற்றவர்களை வசை பாடுவதும் தான் புலிகளின் இரு கண்கள் .ஆயுதம் முள்ளிவாய்காலுடன் முடிந்த கதை மற்றது இன்னமும் தொடருது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புலிகள் அறவே உருவாக்கவில்லை என்பது தவறு.

யோகரட்ணம் யோகி போன்ற நல்ல அரசியல் எழுத்தாளர்களை புலிகளும் தோற்றுவித்திருந்தனர்.

ஈரோஸ்.. புளொட்.. ஈபி ஆட்கள் நாட்டுக்காக சண்டை பிடிச்சவையோ...???! :lol:  :lol:  :lol: புலிகள் உருவாக்கிய போராளிகள் நாட்டுக்காக கால ஓட்டத்தில் உயிர் திறந்ததும்.. இந்த இடைவெளிக்குக் காரணம். அதற்கு மத்தியிலும்.. யோகி.. திலீபன்.. கரிகாலன் போன்ற நல்ல அரசியல் எழுத்தாளர்கள் தோற்றுவிக்கப்பட்டே இருந்தனர். இவர்களை விட உள்ளிருந்து விடுதலைப்புலிகள்.. ஈழநாதத்தில் எழுதி வந்தவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெறுமனவே புலிகள் யாரையும் உருவாக்கவில்லை என்பது சரியான பார்வையல்ல.

தாயகத்தில் ஒரு கட்டத்தில் Hot spring என்ற விடுதலைப்புலிகளின் ஆங்கில பத்திரிகை வந்தது. அதனை பள்ளிக்காலத்தில் வாசித்திருக்கிறேன். சிவராமின் ஆக்கங்களைப் போல நல்ல பரந்துபட்ட பார்வைகள் அதிலும். வெறுமனவே இயக்கங்களைத் திட்டித்தீர்ப்பதை விடுத்து.. புலிகள் மக்களுக்கு அரசியல் தெளிவு பற்றி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். எதிரியின் நகர்வுகள்.. இராதந்திரங்கள் குறித்தும்.. சர்வதேச அணுகுமுறைகள் குறித்தும் போதித்தனர். தங்களின் பலம் பலவீனம் பற்றியும் அவர்கள் பேசத்தவறவில்லை.

அதேவேளை.. புலிகள் மற்றைய இயக்க திறமையாளர்களை குறிப்பாக தமிழரின் தாயகக் கனவில் இருந்தும் விலகி நடக்காத அரசியல் மற்றும் திறமையாளர்களை வளர்த்தெடுக்க.. ஊக்குவிக்கத் தவறவில்லை என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால்.. புலிகளைத் தத்தெடுத்து வேறு எந்த இயக்கமாவது மக்கள் நலன் நோக்கி வளர்த்து விட்டிருப்பதாகத் தெரியவில்லை..??????????????????!.. மாற்று இயக்கங்களால் உள்வாங்கப்பட்ட சில புலிகள் கூட புலிகளைத் திட்டித்தீர்க்கவும்.. போராட்டத்தை பலவீனப்படுத்தவும்.. எதிரிகளுக்கு காட்டிக்கொடுக்கவும் பயன்படுத்தப்பட்டனரே அன்றி.. மக்களின் பொது அரசியல் விருப்பை விடுதலைக் கனவை நன்வாக்கவோ.. அடையவோ என்று வளர்க்கப்படவில்லை. இன்றும் அதே நிலையில் தான் அவர்கள்.  இவர்கள் தான் இன்று ஜனநாயகம்.. மாற்றுக் கருத்து என்று மக்களின் கொள்கைகளை கூறுபோட்டும் விற்கிறார்கள். :icon_idea::)

:lol:  :lol:  :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்துக்களைப்பார்த்தால்

எனது மக்களுக்கு இதைவிட விளக்கம்  இருக்கும் போலுள்ளது

சரி  ஒரு    பேச்சுக்கு  புலிகளுக்கு ஆயுதத்தால் போராட மட்டும்தான்  தெரியும் என்று வைத்துக்கொள்வோம்

அதில் அவர்கள் உலக சாதனை பலவற்றை  செய்து காட்டியவர்கள்

மற்றவர்கள்

எழுத்துப்பணியில் இருந்தவர்கள்  எவராவது உலகத்துக்கு எமது பிரச்சினையை  கொண்டு வருவதில் ஏதாவது செய்தார்களா?

அல்லது புலிகளை பயங்கரவாதிகளாக்காட்டவும்

அவர்கள்  சர்வதேசத்தோடு ஒன்றிணைவதை  தடுக்கவும் வேலை  செய்தார்களா?

இலங்க அரசு இவர்களையும்  இவர்களது எழுத்துக்களையும் தனக்கு ஆதரவான  நாடுகளுடன் ஒன்றிணைத்து எம்மை பலவீனப்படுத்தியதா இல்லையா?

எனவே இவர்களையும் தாண்டி புலிகள் இந்த பக்கத்தையும் பலமாக்கி  இருக்கணும்  என்கிறீர்களா?

அப்ப  இவர்களை ஒதுக்கும் செயலை  அவர்கள் செய்ததைத்தானே இன்று வசை பாடல் எனன்கிறீர்கள்???? :(  :(  :(

ஒன்று மட்டும் புரிகிறது

போராட்டத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி  நின்றோர் இவற்றை  இன்று எழுதுகின்றார்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி நானும் நீண்ட காலமாய் சிந்தித்தது உண்டு..எமது எழுத்தாளர்கள் ஒன்றில் புலிகளை புகழ்ந்து எழுதுவார்கள் இல்லை என்றால் இகழ்ந்து எழுதுகின்றார்கள்.மக்களுக்கு தேவையான அரசியல் அறிவை கொடுக்க தவறுகிறார்கள்...இந்த விடயத்தில் புலிகளும் பிழை விட்டுள்ளார்கள். புலிப்போராளிகளுக்கு தலைவர் பிரபாகரனின் ஆயுத பயிற்சியில் இருந்த அறிவு,தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் அரசியல் அறிவில் இருக்கவில்லை என்பது எனது கருத்து...இருந்திருந்தால் இன்றைய காலகட்டத்தில் பல சிவராம்களும்,பாலகுமார்களும் உருவாகியிருப்பார்கள்... புளொட்டால்...ஒரு சிவராம் ஈரோஸ் ஆல் ...ஒரு பால்குமார் ஈபியால் ......அற்புதன் உருவாக்க முடியும் என்றால் ஏன் புலிகளால் முடியவில்லை.......

ஒரு யோகி, ஒரு திலீபன், ஒரு தமிழ்ச்செல்வன்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் .

ஆரம்பத்தில் அப்படியான பலர் புலிகளில் இருந்தார்கள் ஆனால் அவர்கள் சொல்வது எதுவும் புலிகளுக்கு தேவைபடவில்லை.போடுவதுமாத்திரம் தான் கொள்கை என்றால் வேறு தேவை எதற்கு .

இந்த கவிதை புலிகளுக்கு தான் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.வெறும் ஆயுதமும் மற்றவர்களை வசை பாடுவதும் தான் புலிகளின் இரு கண்கள் .ஆயுதம் முள்ளிவாய்காலுடன் முடிந்த கதை மற்றது இன்னமும் தொடருது .

இதை நீங்கள் எழுதுவது தான் வேடிக்கையானது.நீங்கள் எந்த இயக்கத்தில் இருந்து வந்தீர்கள் என்பது உங்களை அடையாளம் காட்டியதிலும் பார்க்க என்ன யாழில் எழுதி இருந்தீர்கள் என்பதை (பல ஆயிரம் கருத்துக்களில்) 95%மானவை புலிகளின் வசைபாடல்கள் என்பதை யாவரும் அறிவோம்.இதில் நீங்கள் ஏனையோரை பார்த்து கை நீட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கையானது.

ஒரு பாலகுமார்,ஒரு அன்ரன் பாலசிங்கம் என்று சொல்லும் அளவுக்கு அரசியல் அறிவு மிக்க சந்ததியார் எப்படி கொல்லப்பட்டார் என இந்தக்களத்தில் உங்களால் கூறமுடியுமா?  சந்ததியார் புலிகள் இயக்கத்திலோ அல்லது ஈரோஸில் இருத்து இருந்தால் இப்படி குரூரமாக கொல்லப்பட்டிருப்பார் என நான் நினைக்கவில்லை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது உங்களுக்கு பொருந்தும் என்பதை "பூபாளம்" தொடங்கிய போதே சொல்லி இருந்தேன்.அது நிசத்தில் நடப்பது போல தான் தெரிகிறது.தொடரட்டும் உங்கள் பணி.உங்களின் நடிப்பு நீண்ட நாட்களுக்கு தொடராது என்பது மட்டும் திண்ணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் .

ஆரம்பத்தில் அப்படியான பலர் புலிகளில் இருந்தார்கள் ஆனால் அவர்கள் சொல்வது எதுவும் புலிகளுக்கு தேவைபடவில்லை.போடுவதுமாத்திரம் தான் கொள்கை என்றால் வேறு தேவை எதற்கு .

இந்த கவிதை புலிகளுக்கு தான் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.வெறும் ஆயுதமும் மற்றவர்களை வசை பாடுவதும் தான் புலிகளின் இரு கண்கள் .ஆயுதம் முள்ளிவாய்காலுடன் முடிந்த கதை மற்றது இன்னமும் தொடருது .

காகத்தைப் பார்த்து கரிச்சட்டி சொல்லக் கூடாது... நீ கறுப்புன்னு..! :lol:

முதலில உங்க முகம்.. மூஞ்சி.. முதுகு.. கையு.. காலில.. இருக்கிற இரத்தக்கறைகளை அகற்றிட்டு வந்து புலிகளுக்கு போதிமரத்து புத்திமதி சொல்லுங்க. கேட்கிறவன்.. குறைஞ்சது என்ன சொல்ல வாறீங்கன்னாவது கேட்பான்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
இந்த கவிதை புலிகளுக்கு தான் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.வெறும் ஆயுதமும் மற்றவர்களை வசை பாடுவதும் தான் புலிகளின் இரு கண்கள் .ஆயுதம் முள்ளிவாய்காலுடன் முடிந்த கதை மற்றது இன்னமும் தொடருது .

ஆயுதமும் வசைபாடலும் புலிகளுக்கு மட்டும் சொந்தம் அல்ல. புலிகளைப் போன்று இன்னுமொரு இயக்கம் பலம் வாய்ந்ததாக உருவாகி இருந்திருந்தாலும் நிலைமை வித்தியாசமாக இருந்திருக்காது. ஏனெனில் உட்கட்சி ஜனநாயகம் எதுவுமின்றி, உணர்வோடு போராடவென இணைந்த பல இளைஞர்களை உட்கொலைகள் செய்தது சகல இயக்கங்களிலும் நடைமுறையாக இருந்தது.

தற்போது ஆயுதம் இல்லாவிட்டாலும், வசைபாடுதல் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டோம் என்று சொல்லும் மாற்று இயக்கங்களிடமும் மலிந்தே இருக்கின்றது. அதனால்தான் புலிகள் முள்ளிவாய்க்காலில் அழிவுற்றபோது மாற்று இயக்கக்காரரும் திட்டுவதற்குப் புலிகள் இல்லையே என்று அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருந்தார்கள்.

இப்போது தமது பாவங்களை எல்லாம் புலிகளின் இரத்தத்தில் கழுவி மனிதயுரிமைவாதிகளாகவும், அகிம்சை அரசியல்வாதிகளாகவும், பன்மைத்துவப் பண்புகளை ஏற்பவர்களாகவும் நாடகமாடுகின்றார்கள். ஆனால் எத்தகைய போலி மரவுரிகளை அணிந்தாலும் உள்ளே இருப்பது வெறும் வன்மம் மிக்க ஆயுததாரிகளே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணை,

கொஞ்சம் யோசிச்சுப்பாருங்கோ, நீங்கள் எழுதிய கவிதையின் அர்த்தம் புரிஞ்சு எத்தனை பேர் கதைக்கினம்?!

நீங்கள் சொல்ல வந்தத கருத்து இதுதான் 'வதந்திகளை நம்பாதீர்கள்'. !. போலிகளிடம் இருந்து விலகி இருங்கள் என்பதுதான். ஆனால்....'ஒவ்வொருவர் வைக்கும் விமர்சனமும், கருத்தும் திக்குத் திசை மாறிப்போய்க்கொண்டிருக்கு.

இந்தக்காரணத்தினால தான்......பல வேளைகளில் 'ஒதுங்கி இருப்பது நல்லது என்று எனக்குத் தோன்றும்.  'நாம் பேச வேண்டிய கால கட்டம் ஒன்று வரும்!......அன்று ' நரிகள் ஒதுங்கும்!!!!!!!.....

புலிகளைப் போன்று இன்னுமொரு இயக்கம் பலம் வாய்ந்ததாக உருவாகி இருந்திருந்தாலும் நிலைமை வித்தியாசமாக இருந்திருக்காது.

மிக மோசமாக இருந்திருக்கும். அதிலும் PLOTE , EPRLF பலம் பெற்றிருந்தால் பலத்த அழிவுகள் நடந்திருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ் அண்ணை,

கொஞ்சம் யோசிச்சுப்பாருங்கோ, நீங்கள் எழுதிய கவிதையின் அர்த்தம் புரிஞ்சு எத்தனை பேர் கதைக்கினம்?!

நீங்கள் சொல்ல வந்தத கருத்து இதுதான் 'வதந்திகளை நம்பாதீர்கள்'. !. போலிகளிடம் இருந்து விலகி இருங்கள் என்பதுதான். ஆனால்....'ஒவ்வொருவர் வைக்கும் விமர்சனமும், கருத்தும் திக்குத் திசை மாறிப்போய்க்கொண்டிருக்கு.

இந்தக்காரணத்தினால தான்......பல வேளைகளில் 'ஒதுங்கி இருப்பது நல்லது என்று எனக்குத் தோன்றும்.  'நாம் பேச வேண்டிய கால கட்டம் ஒன்று வரும்!......அன்று ' நரிகள் ஒதுங்கும்!!!!!!!.....

ஓநாய்களின் பிடியில் சிக்கியுள்ள ஆட்டுக்குட்டி..உயிர் பிரியும் நேரத்திலும் அனுங்கும்.. அதற்கு அதுவே தன் உயிர் காப்புக்கான கத்தலாக.. கதறலாக.. நம்பிக்கையாக இருக்கும். அந்த வகையில்.. நாங்கள் ஒதுங்கினால்.. உண்மை உயிர்விட்டு ஓநாய்களின் நரிகளின் ஊளையிடலும் சுடலைகளும் தான் எங்கும் மிஞ்சும்..! இன்று உண்மை உரத்து ஒலிக்க முடியாது அனுங்கும் நிலைக்கு ஓநாய்களின் நரிகளின் ஊளையிடல் மிகுந்துவிட்டுள்ளது. அது ஒரு நாள் அடங்கும்..! கால வட்டத்தில் இவை சகஜமே..! அதற்காக நீங்களோ நாங்களோ உண்மைகளை சொல்லத் தயங்கி ஒதுங்குவது அழகல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஓநாய்களின் பிடியில் சிக்கியுள்ள ஆட்டுக்குட்டி..உயிர் பிரியும் நேரத்திலும் அனுங்கும்.. அதற்கு அதுவே தன் உயிர் காப்புக்கான கத்தலாக.. கதறலாக.. நம்பிக்கையாக இருக்கும். அந்த வகையில்.. நாங்கள் ஒதுங்கினால்.. உண்மை உயிர்விட்டு ஓநாய்களின் நரிகளின் ஊளையிடலும் சுடலைகளும் தான் எங்கும் மிஞ்சும்..! இன்று உண்மை உரத்து ஒலிக்க முடியாது அனுங்கும் நிலைக்கு ஓநாய்களின் நரிகளின் ஊளையிடல் மிகுந்துவிட்டுள்ளது. அது ஒரு நாள் அடங்கும்..! கால வட்டத்தில் இவை சகஜமே..! அதற்காக நீங்களோ நாங்களோ உண்மைகளை சொல்லத் தயங்கி ஒதுங்குவது அழகல்ல..! :icon_idea:

நெடுக்ஸ் அண்ணை,

உவையெல்லாம் 'உண்மை தெரியாமலோ கதைக்கினம் எண்டு நினைக்கிறியள்!! நிச்சயமா இல்லை; அவையின்ற மனசுக்கே தெரியும். எது உண்மையெண்டு!.....மூண்டுகால் தான் முயலுக்கெண்டு உரக்க கூவுகினம் அவைக்கு 'உண்மை விளங்கி!!!!!!!!!!!!!!!!:)))) :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.