Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு வரமாட்டேன்! புரட்சித்தமிழன் சத்யராஜ்.

Featured Replies

படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது. தமிழனத்தைக் கருவறுக்க நினைக்கும் இலங்கைக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று நடிகர் சத்யராஜ் நிபந்தனை விதித்திருக்கிறார்.

இது குறித்து தெரியவருவதாவது:

சத்யராஜ் இப்போது ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்தப் படத்தில் அவரை நடிக்கக் கேட்டபோது, திரைத்துறையில் இதுவரை இல்லாத சில நிபந்தனைகளைப் போட்டு அவர்களை அதிர வைத்ததோடு தமிழர்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறார் சத்யராஜ்.

படத்தில் நடிக்கக் கேட்டவுடன், ஐந்து நிபந்தனைகளை விதித்தாராம் சத்யராஜ்.

அவற்றில் முக்கியமானது என்னவென்றால், படப்பிடிப்புக்காகவோ அல்லது படத்தின் விளம்பரங்களுக்காகவோ இலங்கைக்குக் கூப்பிடக்கூடாது என்பதுதானாம்.

தமிழனத்தைக் கருவறுக்க நினைக்கும் அந்தநாட்டுக்கு எப்போதும் நான் வரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

அதோடு நில்லாமல் இன்னொரு நிபந்தனையில், ஹிந்திப் படம் என்பதற்காக தமிழர்களையோ தமிழநாட்டையோ கிண்டல் செய்கிற மாதிரியோ அவர்களை விமர்சிக்கிற மாதிரியோ காட்சிகள் மற்றும் வசனங்கள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

வாய்மொழியாக மட்டுமின்றி இவற்றை எழுத்துபூர்வமான ஒப்பந்தமாகக் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக நின்று, அப்படி ஒரு ஒப்பந்தம் தயாராகி அவர்கள் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பின்பே நடிக்கப் போனாராம் சத்யராஜ்.

இதுபோன்றதொரு நிபந்தனைகளை அந்தப் படக்குழுவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லையென்றாலும் சத்யராஜ் நடிக்கவேண்டுமென்பதற்காக அவற்றை ஏற்றுக்கொண்டு நடிக்க வைத்திருக்கின்றனர்.

பணத்துக்காக எந்த வாயப்பையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிற இந்நேரத்தில் தேடிவந்த வாய்ப்பு இல்லையென்றாலும் பராவயில்லை என்று தமிழனாக நின்ற சத்யராஜ், புரட்சித்தமிழன் பட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவராக மாறிவிட்டார்.

http://thaaitamil.com/?p=40839

பணத்துக்காக எந்த வாயப்பையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிற இந்நேரத்தில் தேடிவந்த வாய்ப்பு இல்லையென்றாலும் பராவயில்லை என்று தமிழனாக நின்ற சத்யராஜ், புரட்சித்தமிழன் பட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவராக மாறிவிட்டார்

உண்மையில் இவற்றை கேட்கும்போது புதிய உற்சாகம் கிடைக்கிறது........கலைஞர்களும் ,பிரபல்யங்களும்,அரசியல்வாதிகளும் ,சொல்லொன்று செயல் ஒன்று என்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் ,புரட்சித்தமிழன் என்று பெயர் சூட்டி ,தமிழர்களுக்காக ஓங்கி குரல் கொடுத்துவரும் மதிப்புக்குரிய சத்தியராஜ் அவர்களுக்கு நன்றிகளும் ,வாழ்த்துக்களும் ..............

கொள்ளும் கொள்கையில் குரங்காக ,கொடுமையை கண்டால் புலியாக ,குறிவைத்துப்பார்ப்பதில் கொக்காக ..........குணத்தில் யானையின் வடிவாக ........................

  • கருத்துக்கள உறவுகள்
சத்தியராஜை யாரும் இலங்கைக்கு கட்டாயம் வா என வெற்றிலை,பாக்கு வைச்சு கூப்பிட்ட மாதிரி ஓவர் பில்டப்பாய் இருக்குது...யாராவது கூப்பிட்டு மறுத்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்குது
 
புலம்பெயர்ந்த தமிழனுக்கு இருக்கா????????????????????

  • கருத்துக்கள உறவுகள்
சத்தியராஜை யாரும் இலங்கைக்கு கட்டாயம் வா என வெற்றிலை,பாக்கு வைச்சு கூப்பிட்ட மாதிரி ஓவர் பில்டப்பாய் இருக்குது...யாராவது கூப்பிட்டு மறுத்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்குது
 
உங்களுக்கு வாசிக்கப் பஞ்சி போல. அதுதான் அரையும் குறையுமா விளங்கி ஏதோ உளறுறீங்க.

சத்யராஜ் இப்போது ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்தப் படத்தில் அவரை நடிக்கக் கேட்டபோது, திரைத்துறையில் இதுவரை இல்லாத சில நிபந்தனைகளைப் போட்டு அவர்களை அதிர வைத்ததோடு தமிழர்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறார் சத்யராஜ்.

அந்தாள் முன் நிபந்தனையாக இதனை ஹிந்திக்காரங்களிட்ட சொல்லி உள்ளது. உங்களட்ட இல்லை. அப்புறம் ஒப்பந்தத்தில கையொப்பம் வைச்சிட்டன்.. அதனால இலங்கைக்குப் போனன்.. சிரானியோட.. ராஜபக்சவோட படம் எடுத்தன்.. என்ற நிலைக்கு அவர் போக வேண்டிய அவசியம் வரக்கூடாது என்பதற்காக சொல்லி இருக்கிறார் போல. இந்த விடயத்தில... பில்டப்பை விட அந்தாள் ஒரு முன்மாதிரியா இருக்க விரும்பிறது தான் தெரியுது.

அதுக்கு நீங்கள் ஏன்.. பொருமி கொட்டுறீர்கள்..?????! :lol:

Edited by nedukkalapoovan

அதுதானே சத்தியராஜை தாம்பூலத்தட்டு வைத்து இலங்கைக்கு அழைக்க அவரிடம் என்ன தகுதி இருக்கு ..........................சப்போஸ் குறைந்த பட்சம் ஈழத்தமிழர்க்கு எதிராக இதுவரை ஒன்றும் கூட பல்டி அடித்துப்பெசியிருந்தால்கூட ................ம்ம்ம் அல்லது பணம் ,புகழ் சம்பாதிப்பதற்கு ஏதாவது போராட்டத்தையும், விடுதலைப்புலிகளைப்ப்பற்றி மாறான கருத்துக்கூட சொல்லவில்லையே......அல்லது அவர் ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதியில்லையே ............................என்ன தகுதியிருக்கு .......................... தன்மானம் என்ற தமிழனின் இரத்தம் மட்டும் ஓடுது .....................

  • கருத்துக்கள உறவுகள்

புலி,தேசியம் என கதைத்துக் கொண்டு அங்கால போய் உங்கட பிள்ளைகளை சகல வசதிகளோடு கவனமாய் வைத்து படிப்பித்து கொண்டு ஊரான் பிள்ளையை பலி கொடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்னா ஊன்னா பல தமிழீழ சொந்தங்களை நீ யோக்கியமா ..நான் யோக்கியம்.. அலோ எல்லாந்தான் வெளிநாட்டுக்கு ஓடி போனீர்கள்... இதில் என்ன பிரிவினை..   ம சத்யராஜ் குறித்து எனக்கு சரியான மதிப்பீடு இல்லை.. விடுவம் அவரு ஏதோ செய்கிறாரு..  விட்டு விட்டு போகவேண்டியதானே உங்களுக்குள்ள ஏன் கில்மா..?

டிஸ்கி:

வெளிநாட்டுக்கு ஓடி வந்தவர்கள் ஈழத்தினை நோக்கி ஏதுவுமே சொல்லகூடாதமப்பா... எந்த ஊரு நியாயம் இது...? குல்பி ஐஸ் வாங்கி தருவாங்க சப்பிட்டு திரியுங்க எல்லாம்.... ரொப்பிக்கு சூப்பிஸ்தானு இ ரோப்பிக்கு

:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
புலி,தேசியம் என கதைத்துக் கொண்டு அங்கால போய் உங்கட பிள்ளைகளை சகல வசதிகளோடு கவனமாய் வைத்து படிப்பித்து கொண்டு ஊரான் பிள்ளையை பலி கொடுங்கோ

நீங்க மட்டும் என்ன குடும்பத்தை போராட்டத்துக்கு அர்ப்பணிச்சிட்டு.. நீங்களும் உங்க சகோதரமும்.. வெளிநாட்டு மோகத்தில ஓடி வந்தனீங்களோ.. அதே மோகம் மற்றவனிலும் இருந்திட்டுப் போகட்டன். அவன் அற்லீஸ்.. புலி.. தேசியம் என்றாவது இங்க இருந்து உண்மையா உழைக்கிறான்.. கதைக்கிறான். நீங்க இங்க வந்தும் அதை சீரழிக்கிறனுன்னு நிற்கிறீங்களே..! எது திறம்..???! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
நீங்க மட்டும் என்ன குடும்பத்தை போராட்டத்துக்கு அர்ப்பணிச்சிட்டு.. நீங்களும் உங்க சகோதரமும்.. வெளிநாட்டு மோகத்தில ஓடி வந்தனீங்களோ.. அதே மோகம் மற்றவனிலும் இருந்திட்டுப் போகட்டன். அவன் அற்லீஸ்.. புலி.. தேசியம் என்றாவது இங்க இருந்து உண்மையா உழைக்கிறான்.. கதைக்கிறான். நீங்க இங்க வந்தும் அதை சீரழிக்கிறனுன்னு நிற்கிறீங்களே..! எது திறம்..???! :lol:

நான் தப்ப இங்கே ஓடி வந்து போட்டு என்ட‌ பிழைப்பிற்காக/சுய நலத்திற்காய் உங்களைப் போல ஊரில் இருப்பவர்களை பலியிட‌வில்லை/உசுப்பேத்தவில்லை
 
என் மேல் கடும் ஆத்திர‌த்தில் இருக்கிறீர்கள் என்பதை இப்படி திரிக்கு திரி நீங்கள் கருத்து எழுதுவதில் இருந்து தெரிகிறது...போய் சில்லென்று ஜஸ்கிறீம் சாப்பிடுங்கோ :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்

நான் தப்ப இங்கே ஓடி வந்து போட்டு என்ட‌ பிழைப்பிற்காக/சுய நலத்திற்காய் உங்களைப் போல ஊரில் இருப்பவர்களை பலியிட‌வில்லை/உசுப்பேத்தவில்லை.

ஆமா நீங்க பேசிப் பலியிடல்ல. அவங்க பலியிட நீங்க அதில பிழைப்பு நடத்தனனீங்க. அதை ஒத்துக்கொள்ளுங்க. இவ்வளவு இரக்கப்படுற நீங்க ஊரில இருந்து ஏன் பலியிடுறீங்க.. நான் உங்க பிரச்சனையை பேசி தீர்க்கிறனுன்னு.. சிங்களவனோட போய் பேசி தீர்த்திருக்கலாமே..??!

அதையும் செய்யல்ல.. எதுவும் செய்யல்ல.. அவங்களை சாட்டி சூழ்நிலையைச் சாட்டி ஓடி வந்திட்டு.. இப்ப சொகுசா இருந்து கொண்டு.. சாத்தான் வேதம் ஓதுறீங்க. உங்களைப் போல வெறும் சுயநலச் சந்தர்ப்பவாதிகளை விட தான் தேசத்துக்கு செய்யாமல் விட்டதை உணர்ந்து பரிகாரம் தேடிக்க முனையிறவன் எவ்வளவோ மேல். அவனைக் குறை சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்குது...???! :lol:

உங்களோட ஆத்திரப்பட என்ன இருக்குது. பரிதாபப்படத்தான் முடியுது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
நான் தப்ப இங்கே ஓடி வந்து போட்டு என்ட‌ பிழைப்பிற்காக/சுய நலத்திற்காய் உங்களைப் போல ஊரில் இருப்பவர்களை பலியிட‌வில்லை/உசுப்பேத்தவில்லை
 
என் மேல் கடும் ஆத்திர‌த்தில் இருக்கிறீர்கள் என்பதை இப்படி திரிக்கு திரி நீங்கள் கருத்து எழுதுவதில் இருந்து தெரிகிறது...போய் சில்லென்று ஜஸ்கிறீம் சாப்பிடுங்கோ :lol:
 
ஒரு சிலரில் தங்களுக்குள்ள  கோபத்துக்காக

தாயகத்துக்காக பாடுபடும் அத்தனை பேரையும் நீங்கள் வசை  பாடுவதைவிடவா ரதி...... :(

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு சிலரில் தங்களுக்குள்ள  கோபத்துக்காக

தாயகத்துக்காக பாடுபடும் அத்தனை பேரையும் நீங்கள் வசை  பாடுவதைவிடவா ரதி...... :(

நான் யார் மேலும் கோபத்தை வைத்துக் கொண்டு கருத்தெழுதுவது இல்லை அண்ணா...எனக்கு சரி/பிழை எனப் பட்டால் என் கருத்துக்களை எழுதுவேன்...அது சாஸ்திரியாய் இருந்தாலும் சரி நிழலி,நெடுக்கராக இருந்தாலும் சரி...இங்கு கருத்து எழுதும் பல பேர் மாதிரி போலி வேசம் போட என்னால் முடியாது

தாயகத்திற்கு யாரும் பாடுபடுவதானால் அங்கு போயிருந்து பாடுபடுங்கள் ,வயது போய்விட்டால் பிள்ளைகளை அனுப்புங்கள் அங்கிருக்கும் பல்கலைகழக பிள்ளைகளுடன் சேர்ந்து போராட .

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நீங்க பேசிப் பலியிடல்ல. அவங்க பலியிட நீங்க அதில பிழைப்பு நடத்தனனீங்க. அதை ஒத்துக்கொள்ளுங்க. இவ்வளவு இரக்கப்படுற நீங்க ஊரில இருந்து ஏன் பலியிடுறீங்க.. நான் உங்க பிரச்சனையை பேசி தீர்க்கிறனுன்னு.. சிங்களவனோட போய் பேசி தீர்த்திருக்கலாமே..??!

அதையும் செய்யல்ல.. எதுவும் செய்யல்ல.. அவங்களை சாட்டி சூழ்நிலையைச் சாட்டி ஓடி வந்திட்டு.. இப்ப சொகுசா இருந்து கொண்டு.. சாத்தான் வேதம் ஓதுறீங்க. உங்களைப் போல வெறும் சுயநலச் சந்தர்ப்பவாதிகளை விட தான் தேசத்துக்கு செய்யாமல் விட்டதை உணர்ந்து பரிகாரம் தேடிக்க முனையிறவன் எவ்வளவோ மேல். அவனைக் குறை சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்குது...???! :lol:

உங்களோட ஆத்திரப்பட என்ன இருக்குது. பரிதாபப்படத்தான் முடியுது. :)

ஜயோ பாவம் யார் யார் மேல் பரிதாபப்படுகிறது என்டதொரு விவஸ்தையே இல்லையா ஆண்டவா

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திற்கு யாரும் பாடுபடுவதானால் அங்கு போயிருந்து பாடுபடுங்கள் ,வயது போய்விட்டால் பிள்ளைகளை அனுப்புங்கள் அங்கிருக்கும் பல்கலைகழக பிள்ளைகளுடன் சேர்ந்து போராட .

நீங்களே அதற்கான வழிகாட்டியா இருக்கலாமே. வெளிநாடுகளில பத்திரமா இருந்து கொண்டு.. புலிகளுக்கு பாடம் எடுக்கிற நீங்க முதலில அதைச் செய்யுங்க..! :lol:

ஜயோ பாவம் யார் யார் மேல் பரிதாபப்படுகிறது என்டதொரு விவஸ்தையே இல்லையா ஆண்டவா

இதுக்கேன் ஆண்டவனைக் கூப்பிடுறீங்க. அவனே பரிதாப்பப்பட்டுத்தான் உங்களை விட்டு வைச்சிருக்கிறான் பூலோகத்தில..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
தாயகத்திற்கு யாரும் பாடுபடுவதானால் அங்கு போயிருந்து பாடுபடுங்கள் ,வயது போய்விட்டால் பிள்ளைகளை அனுப்புங்கள் அங்கிருக்கும் பல்கலைகழக பிள்ளைகளுடன் சேர்ந்து போராட .

ஏன் அங்க நடக்கிற  போராட்டம்  எதையாவது ஆதரிக்கின்றீர்களா?

யாரையும்  ஆதரித்து பழக்கமே இல்லையே.

இது  என்ன புதுப்பழக்கம்????

இணையத்துக்கு  சூடான  செய்தி  தேவையோ.............???

தாயகத்திற்கு யாரும் பாடுபடுவதானால் அங்கு போயிருந்து பாடுபடுங்கள் ,வயது போய்விட்டால் பிள்ளைகளை அனுப்புங்கள் அங்கிருக்கும் பல்கலைகழக பிள்ளைகளுடன் சேர்ந்து போராட .

சத்தியராஜை யாரும் இலங்கைக்கு கட்டாயம் வா என வெற்றிலை,பாக்கு வைச்சு கூப்பிட்ட மாதிரி ஓவர் பில்டப்பாய் இருக்குது...யாராவது கூப்பிட்டு மறுத்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்குது

உண்மையாகப் போராடுவதானால் சத்தியராஜையே இலங்கைக்கு போகத்தேவை இல்லை என்கிறா ரதி அக்கா. நீங்கள் அவ விட்ட குறையில் தொடர்ந்து ஆனால் எதிர்க்கரையில்  இலங்கைக்கு போய்ப் போராடினால் தான் மட்டும் போராட்டம் என்கிறீர்கள். இதில் எப்படி உங்கள் கருத்து ரதி அக்காவின் கருத்தில் இணைந்தது என்பதை விளங்க படுத்தமுடியுமா? அப்போ அதில் நாம் கொஞ்சம் உருப்படியான சம்பாணை வைக்கலாம்..

சிறீதரன் புலம் பெயர் மக்களிடம் பணம் வாங்கியவர்; ஆகையால் இளைஞர்களை உசுப்பேத்த கிளிநொச்சி சென்று ஆமிகளால் தொடர்ந்து இரவு பகல் பலாத்காரம் செய்து பைத்தியங்களாக மாற்றப்பட்டுவிட்ட யுவதிகளை சந்திக்க முயன்றார் என்று நீங்கள் சொல்லலாம்.  ஆனால் தேவனந்தா யாரை உசுப்பேத்த கிளிநொச்சி சென்றார் என்றதை உங்களால் கிரகிக்க முடியுமா?

ரதி அக்கா "தேவானந்தாவை குத்தியன் என்று இழித்துப் பேசலாம், ஆனால் அவர் இருப்பதால் பல தமிழருக்கு கருணைகாட்டி வெளியில் எடுத்துவிடுகிறார்" என்று நினக்கிறார். எனவே தேவானந்தா எத்தனை இலைஞர் உசுப்பேத்துப்பட்டாலும் பரவாயில்லை என்று சிறீதரன் போன்று தானும் பலாத்தக்கரம் செய்யப்பட்ட யுவதிகளை சந்திக்க கிளிநொச்சி சென்றார். ஆனால் சித்தார்த்தன் அப்படித்தானும் ஒருவரும் உசுப்பேத்தப்பட்டுவிடக்கூடாது என்பதாலா அந்த பெண்களை பார்க்க போகவில்லை, ஆனால் "பல்கலைகழக மாணவர்களை அரசு கைது செய்தது தவறு" என்று அறிக்கை விட்டிருப்பது?

சத்திராஜ் தான் இலங்கை போகமுடியாது என்றவுடன் விழுந்து விழுந்து கொக்கரிக்கும் நீங்கள் எல்லாம் ஆமிகள் வலோற்காரமாக பெண்களை இராணுவத்தில் இணைத்து அதன்பின் பாலியல் வலோற்காரம் பண்ணி பைத்தியங்களாக்கிவிட்டு பெற்றொரை தன்னும் பார்க்க விடாமல் மீண்டும் அழைத்து சென்றுவிட்டார்கள் என்பதை பற்றி வந்த பல திரிகளில் உசுப்பேதாமல் இருக்கவா எழுதவதை தவிர்த்து ஒளித்து திரிகிறீகள். அந்த திரிகளில் உசுப்பேத்தாமல் ஒரு சொல் வருத்தம் தெரிவிக்க உங்களின் பாண்டித்திய மனங்களில் கற்பனையே ஓடவில்லையா?  இதன் பின் நீங்கள் மனதில் பட்டதை சட்டென்று சொல்லிவிடுவதாக எழுதுகிறீர்கள் என்றால் உங்கள் மனதில் எதுமட்டும் படுகிறது என்பது உங்களுக்கு விளங்குகிறதா?. நீங்கள் எல்லாம் கால் சாட்டை போடும் கேவலங்கள்தான் என்றால் அந்த திரிகளில் "ஏன் வீட்டில் இருந்த பெண்களை ஆமி இப்படி வெளியே இழுத்துவந்து இந்த வேலை செய்தது" என்று ஒரு சொல் எழுதுவதை ஏன் தவிர்க்கிறீர்கள்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார் மேலும் கோபத்தை வைத்துக் கொண்டு கருத்தெழுதுவது இல்லை அண்ணா...எனக்கு சரி/பிழை எனப் பட்டால் என் கருத்துக்களை எழுதுவேன்...அது சாஸ்திரியாய் இருந்தாலும் சரி நிழலி,நெடுக்கராக இருந்தாலும் சரி...இங்கு கருத்து எழுதும் பல பேர் மாதிரி போலி வேசம் போட என்னால் முடியாது

தங்களது சுதந்திரத்தை நான் மதிக்கின்றேன்

தன்னலமற்று

எமக்காக குரல் கொடுக்கும் ஒருவரைக்கூட மதியாது

அவருக்கு  ஏதோ தேவையிருக்கிறது என்பது போன்ற கொள்கைகள் விளக்கங்கள் எந்த பலனைத்தரும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

எல்லாவற்றையும் கவிட்டுக்கொட்டுவதை சுதந்திரம் என்பதற்குள்   கொண்டு வர முடியாது.

அது ஆபத்தான பாதையும் கூட.

சத்தியராஜை யாரும் இலங்கைக்கு கட்டாயம் வா என வெற்றிலை,பாக்கு வைச்சு கூப்பிட்ட மாதிரி ஓவர் பில்டப்பாய் இருக்குது...யாராவது கூப்பிட்டு மறுத்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்குது
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தாயகத்திற்கு யாரும் பாடுபடுவதானால் அங்கு போயிருந்து பாடுபடுங்கள் ,வயது போய்விட்டால் பிள்ளைகளை அனுப்புங்கள் அங்கிருக்கும் பல்கலைகழக பிள்ளைகளுடன் சேர்ந்து போராட .

எந்த வகையான கருத்திற்கு ஒரு கூட்டத்தில் பைத்தியத்தனமானது என்று பேர் கிடைக்கின்றதோ அந்தப் பட்டத்திற்கு உண்மையில் இருக்கின்ற நியாயத்தை அந்தப் பைத்தியத்தனமான கருத்து அந்தக் கூட்டத்திற்கு உபதேசம் செய்யப்புகும் அறியாமையால் வெளிச்சப்படுகின்றது!

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சத்தியராஜை யாரும் இலங்கைக்கு கட்டாயம் வா என வெற்றிலை,பாக்கு வைச்சு கூப்பிட்ட மாதிரி ஓவர் பில்டப்பாய் இருக்குது...யாராவது கூப்பிட்டு மறுத்திருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்குது
 
கருத்துக்களுக்கு ஆதாரம், மூலம் என்று எல்லாம் தேடவே வேண்டாம் எவற்றால் கருணாவிற்கு காச்சல் வருகின்றதோ அவற்றாலேயே இங்கே சிலருக்கு தும்மல், இருமல் என்று வருகின்றது. ஆலால் தும்மல். இருமல் இவற்றின் தோற்றுவாய்க்கும் இந்தக் கருத்துக்களின் உட் பொருட்களுக்கும் சம்பந்தம்  எவையுமே இருப்பதும் இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.