Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பாரிய திட்டமே கொழும்பில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புலிகளின் பாரிய திட்டமே கொழும்பில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம்
15 டிசம்பர் 2012
 
விடுதலைப்புலிகள் அமைப்பு மேற்கொண்ட பாரிய திட்டம் காரணமாகவே கொழும்பு நகரில் 50 சதவீதமாக இருந்த சிங்களவர்கள், 25 சத வீதமாக குறைவதற்கு காரணம் என தெரியவந்துள்ளதாக அரசசார்பு சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.
 
கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள புலிகளின் 17 சொத்து விற்பனை நிறுவனங்கள் கொழும்பு நகரில் வசித்த சிங்கள குடும்பங்கள் வசித்த வீடுகளை கொள்வனவு செய்து, தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்தன. 
 
இந்த வீடுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தமிழர்களும், வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.
 
இலங்கை முதலீட்டுச் சபையில் பணியாற்றிய புலிகளுக்கு ஆதரவான உயர் அதிகாரி ஒருவரின் உதவியுடன், புலிகளின் நிறுவனங்களுக்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.  வன்னி இராணுவ நடவடிக்கைக்கு பின்னர், குறித்த அதிகாரி நாட்டில் இருந்து வெளியேறியதுடன், புலிகளின் நிறுவனங்களும் காணாமல் போயுள்ளன.
 
விடுதலைப்புலிகளின் நிறுவனங்கள் இலங்கையில் உள்ள 40 பாரிய நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 பில்லியன் ரூபாவை பயன்படுத்தியுள்ளதுடன் அமெரிக்காவில் உள்ள வர்த்தகரான ராஜ் ராஜரட்னம் அவற்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை பெற்றிருந்தார் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது. 
 
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் கொழும்பு நகரில், 40 வீத முஸ்லிம்களும், 33 வீத தமிழர்களும், 24 வீத சிங்களவர்களும் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.(லங்காசைபர்நியூஸ் 15-12)
 
  • கருத்துக்கள உறவுகள்
Power of  Economy.
 
தமிழரின் கடும் உழைப்பின் பலன்.
 
இங்க மட்டும் இல்லை. லண்டன், டொரோண்டோ விலும் இதுதான் கதை.
 
புலம்பாமல், முடிந்தால் பணத்தினை திரட்டி தமிழர் வீடுகளை திருப்பி வாங்குங்கள் அல்லது கோத்தா ஸ்டைலில் இடிஅமின் செய்தது போல் தமிழர்களை வடக்கே, கிழக்கே திரத்துங்கள்.

தமிழர்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிடும் காலம் நெருங்குகிறது. சிறிலங்கா மீதான புறக்கணிப்பையும் கை விட வேண்டும். இலங்கைத் தீவு முழுவதும் வாழ்கின்ற உரிமை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உண்டு.

இந்தத் தீவின் தீர்மானிக்கும் சக்தியாக வருவது பற்றி பொருளாதார பலம் மிக்க உலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். உலகம் மேலும் சுருங்கிக் கொண்டு போகும் நிலையில் அதன் பலாபலன்களை அறுவடை செய்வது எப்படி என்பது பற்றி பேச வேண்டும்.

உலகம் வந்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத்தை பிரித்துத் தரும் என்கின்ற கனவை விட்டு விட்டு, மாற்றுப் பாதைகளை தேட வேண்டும்.

Edited by சபேசன்

கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள புலிகளின் 17 சொத்து விற்பனை நிறுவனங்கள் கொழும்பு நகரில் வசித்த சிங்கள குடும்பங்கள் வசித்த வீடுகளை கொள்வனவு செய்து, தொடர்மாடி வீடுகளை நிர்மாணித்தன. 
 
இந்த வீடுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தமிழர்களும், வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர்.

 

உலக சிங்களவர்களின் (பதினெட்டு மில்லியன்கள்)  பொருளாதார பலம் என்ன?

 

உலக தமிழர்களின் (அறுபது + மில்லியன்கள்) பொருளாதார பலம் என்ன?  

 

நாங்கள் பலமானவர்கள்  :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் என்றால் சும்மாவா?

 

சிங்களவர்கள் வன்னியைப் பிடிக்கமுயன்றால் மதவாச்சியில் நிற்போம் என்று சொன்னதை நம்பவில்லை அவர்கள்.

 

இப்போது சிங்களவர்களால் தமிழர்களின் தாயகப் பகுதிகள்  கைப்பற்றப்பட்டிருந்தாலும், கொழும்பு நகரம் தமது பிடிக்குள் இல்லையென்பதை சிங்களவர்கள் உணர்ந்துள்ளனர்.  

Edited by கிருபன்

Power of  Economy.
 
தமிழரின் கடும் உழைப்பின் பலன்.
 
இங்க மட்டும் இல்லை. லண்டன், டொரோண்டோ விலும் இதுதான் கதை.
 
புலம்பாமல், முடிந்தால் பணத்தினை திரட்டி தமிழர் வீடுகளை திருப்பி வாங்குங்கள் அல்லது கோத்தா ஸ்டைலில் இடிஅமின் செய்தது போல் தமிழர்களை வடக்கே, கிழக்கே திரத்துங்கள்.

 

உண்மைதான்.

 

சிங்கப்பூர்  போன்று தமிழீழமும் முன்னேறி இருக்கும். மலேசியா போன்று சிங்களமும் முன்னேறி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிடும் காலம் நெருங்குகிறது. சிறிலங்கா மீதான புறக்கணிப்பையும் கை விட வேண்டும். இலங்கைத் தீவு முழுவதும் வாழ்கின்ற உரிமை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உண்டு.

இந்தத் தீவின் தீர்மானிக்கும் சக்தியாக வருவது பற்றி பொருளாதார பலம் மிக்க உலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். உலகம் மேலும் சுருங்கிக் கொண்டு போகும் நிலையில் அதன் பலாபலன்களை அறுவடை செய்வது எப்படி என்பது பற்றி பேச வேண்டும்.

உலகம் வந்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத்தை பிரித்துத் தரும் என்கின்ற கனவை விட்டு விட்டு, மாற்றுப் பாதைகளை தேட வேண்டும்.

 

சபேசனின் கருத்தே எனதும். இலங்கைத் தீவைப் பிரிப்பது சரியல்ல.. சிங்களவர்களை வங்காளதேசத்தில் குடியேற்றினால் சரி..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிடும் காலம் நெருங்குகிறது. சிறிலங்கா மீதான புறக்கணிப்பையும் கை விட வேண்டும். இலங்கைத் தீவு முழுவதும் வாழ்கின்ற உரிமை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உண்டு.

இந்தத் தீவின் தீர்மானிக்கும் சக்தியாக வருவது பற்றி பொருளாதார பலம் மிக்க உலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். உலகம் மேலும் சுருங்கிக் கொண்டு போகும் நிலையில் அதன் பலாபலன்களை அறுவடை செய்வது எப்படி என்பது பற்றி பேச வேண்டும்.

உலகம் வந்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத்தை பிரித்துத் தரும் என்கின்ற கனவை விட்டு விட்டு, மாற்றுப் பாதைகளை தேட வேண்டும்.

 

எதுக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதிவிடுகளேன் எப்படி என்று :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கொழும்பிற்கு வரக் காரணம்.. அவர்களின் தாயகத்தை சிங்களவர்கள் ஆயுத முனையில் அபகரித்து நிற்பதும்.. வெளிநாட்டு போக்குவரத்து மற்றும் பணப்பரிவர்த்தனைகளை.. வியாபாரங்களைச் செய்யவுமே. தமிழர் தாயகத்தை விட்டு சிங்களவர்களும் அவர்களின் இராணுவமும் வெளியேறினால்.. தமிழர்கள் கொழும்பில் இருக்க வேண்டிய அவசியம் வராது. அவர்கள் தங்கள் தாயகத்திலேயே விமான நிலையம் கட்டி... துறைமுகம் கட்டி.. வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேணி வியாபாரத்தையும் செய்து கொள்வார்கள். வசதி எப்படி..??! :)

 

இங்கு சிலர் தமிழீழம் ஏதோ புலிகளின் பிரச்சனை என்ற கணக்கில காட்ட நிற்கினம்.. ஆனால் அது புலிகளுக்கு முந்தைய கருத்தியல் ஆகும் என்பதை சிந்திக்க மறுக்கினம். மிட்டாய் கடைக்கு முன்னால் போய் நின்று கொண்டு.. கணத்துக்கு கணம் விருப்பம் மேறும் சின்னப் பிள்ளைகள் போல.. சின்னப்பிள்ளைத்தனமான கொள்கைகளை விட்டிட்டு உருப்படியா ஏதேனும் சொல்ல இருந்தால் சொல்லலாமே..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
எதுக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதிவிடுகளேன் எப்படி என்று :D

 

 

சபசேன், அகோதா, உங்கள் கருத்து எனது கருத்துடன் ஒத்து போகின்றது.
 
உடையார், இதோ உங்களுக்கான விளக்கம்.
 
எனது அரசியல் பார்வை வித்தியாசமானது. சிலர் ஒத்து போவார்கள். சிலர் புரியவில்லை எனபார்கள்.
 
1. நான் 2004 ல் இலங்கை சென்ற போது கொழும்பில் ஒரு ஆட்டோகாரர் , சிங்களத்தில் சொன்னார்: 83 ல் திரத்திய தமிழர்கள் இன்று பணத்துடன் வந்து எம்மை தெகிவளை வரை திரத்தி விட்டார்கள் என சொன்னார். அது தான் இன்று மீண்டும் சொல்லப் பட்டிருக்கின்றது.
 
இது தான் வடக்கு தெற்கிலும் நடக்கும். அரச காணிகள்  சிங்களவர்களுக்கு  உறுதியுடன் கிடைகின்றது. மகிந்த காலம் முடிந்ததும், திரும்பிச் செல்லக் கூடிய புலத் தமிழர்கள், பணத்தினைக் கொடுத்து, உறுதிக் காணியினை வாங்குவார்கள்.
 
இதையே புலம் பெயர் யூதர்கள், பாலஸ்தினியர்களுடன் செய்து தமது நாட்டினை உருவாகிக் கொண்டார்கள்.
 
2. 1997 வரை மேற்குலகின், கிழக்காசியாவின் பொருளாதார தளமாக HongKong விளங்கியது. இன்று சீனாவின் கையில் இருக்கும் இந்த நாடு, சீனாவின் மிகப் பெரும் பொன் முட்டை இடும் வாத்தாக  உள்ளது. 
 
மறு புறம் சிங்கபூர் 74% சீனர்கள் கொண்ட நாடு. ஆகவே இங்கு மேற்குலகு  நம்பிக்கை வைக்க முடியாது. எனவே ஒரு சிறிய நம்பிக்கைக்குரிய புதிய பொருளியல் கேந்திர தளம் தேவை. அதுவும் ஆசியா, துரித கதியில் வளரும் காலம் இது என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது.
 
ஆசியாவின் முன்னாள் பொருளாதார பலமே, ஆயுத பலம் கொண்ட காலனித்துவ வாதிகளை முன்னர் வரவைத்து இருந்தது. இவ்வாறு வந்து தமது நாடுகளை வளம் மிக்க தாக்கினர்.
 
(திருவனந்தபுரம் பத்மசுவாமி கோவில் நிலவரை இன்றைய  பொக்கிஷ மதிப்பு $1billion. சிந்தித்துப் பார்த்தால், இது தான் கோவில்கள் உடைத்து அழிக்கப் படகாரணம்)
 
இப்போது காற்று மாறி வீசுவதால், மீண்டும் ஆசியா முக்கியத்துவம் பெறுகின்றது.
 
இஸ்ரேல், மத்திய கிழக்கில், மேற்குலகின் இராணுவ, பொருளியல் கேந்திர தளம் ஆக விளங்க காரணம்  அவர்களது மிகப் பெரிய % மக்கள் மேற்குலகுடன், புலம் பெயர்வு மூலம் பிரஜாஉரிமை கொண்ட தொடர்பினை வைத்து உள்ளார்கள்.
 
இதனை வேறு கோணத்தில் பார்த்தால், புலம் பெயர்ந்த தமிழர்கள், பெரும் பணத்துடன் திரும்பிச் செல்லும் போது, அமெரிக்கராக, கனேடியராக, பிரித்தானியர், ஐரோப்பியர் ,ஆவுஸ்திரேலியர் ஆகவும் இருப்பார்கள்.
 
இது,  மேற்குலகின் பொருளியல் கேந்திர தளம் ஆக அமைய அவர்களுக்கு மிகப் பெரிய 'நம்பிக்கை' தரும் பலம். இதுவே எமது பலமும் ஆகும்.
 
அதி உயர் படைத்துறை தொழில் நுட்பமுள்ள,  நவீன காலத்துக்கு, முக்கியமில்லாத திருகோணமலை கடல் படைத்தளம் போன்ற விடயங்களை தவிர்த்து இந்த வகையில் நாம் சிந்திக்க வேண்டும்.
 
குறுகிய பார்வை கொண்ட மகிந்த மட்டும் இதனை சரியாக புரிந்து இருந்தால், இன்று புலம் பெயர் தமிழரை வெத்திலை பாக்கு வைத்து அழைத்து, சிங்களவர்கள் மத்திய கிழக்கு வேலை தேடி போகாமல், உள்ளூர் வேலை செய்ய வைத்திருக்கலாம்.
 
சபேசன் சொன்னதை நான் மீண்டும் தருகின்றேன்:
 
தமிழர்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிடும் காலம் நெருங்குகிறது. சிறிலங்கா மீதான புறக்கணிப்பையும் கை விட வேண்டும். இலங்கைத் தீவு முழுவதும் வாழ்கின்ற உரிமை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உண்டு.
 
இந்தத் தீவின் தீர்மானிக்கும் சக்தியாக வருவது பற்றி பொருளாதார பலம் மிக்க உலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். உலகம் மேலும் சுருங்கிக் கொண்டு போகும் நிலையில் அதன் பலாபலன்களை அறுவடை செய்வது எப்படி என்பது பற்றி பேச வேண்டும்.
 
அவர் வேறு காரணம் வைத்திருக்கலாம். ஆனால் எனது பார்வை இது தான்.

Edited by Nathamuni

நன்றி நாதமுனி.

முன்னர் ஒரு திரியில் நான் உலகத்தமிழர்கள் தமக்கென ஒரு நிதிப்பிரிவை உருவாக்கவேண்டும் என எழுதி இருந்தேன், அதற்கு "உலகத்தமிழர்  பொருளாதார பேரவை" எனவ ஒரு பெயரும் இட்டிருந்தேன்.

 

- இது ஒரு மேற்குலக நாட்டில், அமெரிக்காவில், தலைமையகத்தை கொண்டிருக்கும்.
- இதில் ஒரு குழு தெரிவு செய்யப்பட்டு இது நிர்வகிக்கும்
- இதன் கிளைகள் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லா பதிவு செய்யப்படும்.
- இதில் உலகத்தமிழர்கள் முதலீடுகள் செய்வார்கள்
- அந்த முதலீட்டை ஒரு உலகத்தரம் வாய்ந்த நிறுவனம் நிர்வகிக்கும் ( உதாரணம் Goldman and Sachs )
- முதலீட்டில் இருந்து முதலீட்டாளர்களுக்கு மாத வருமானம் (dividend) , மற்றும் வேறு எந்த வழியில் இந்தப்பணம் உலக தமிழர்களுக்கு பயன்படுகின்றது என்ற அறிக்கையும் வரும்.
- தமிழர்கள் உலகத்தில் வாழு நாடுகளில் அவர்களின் தேவைக்கு ஏற்ப பொருளாதார உதவிகளை வழங்கும், தமிழர் பகுதிகளில் முதலீடுகளை செய்யும், சமூக உதவிகளையும் முன்னெடுக்கும்.
- இந்த அமைப்பானது ஒரு அரசியல் சக்தியாகவும் உதவும்

வீடுகளையும் வியாபரங்களையும் வாங்கும் போது உலக பொருளாதாரம் சர்வதேசமயப்பட்டிருகிறது என்ற கருத்து பாரரிய சவலைத்தருகிறது.

 

உதாரணத்திற்கு வளர்ந்து வரும் இந்தியா சீனா போன்ற நாடுகளில் உள்ள கம்பனிகளில் பங்கு வாங்கினால் அது விரைவில் வளரும். ஆனால் அது பாதுகாப்பில்லாத முதலீடுகள். 

 

அதே நேரம் மேற்கு நாட்டு கம்பனிகளில் வாங்கினால் அதன் பெறுமானம் அதே அளவில் இருந்துவிடலாம். ஆனால் நம்பிக்கையாக ஓய்வூதிய நாளில் பயன் படுதத முடியும்.

 

எனவே முதலீடுகள் பரம்பலாக இருக்க வேண்டும்.

 

ஆனால் பயம் இங்கேதான் வருகிறது. ஒரு உதாரணத்திற்கு சேர்த்தபணத்தில் கொழும்பிலும் குப்பிளானிலுமாக வீடுகள் வாங்கிவிட்டால் தமிழ் ஈழம் பிரியும் போது ஒரு பகுதி முதல் அழியலாம்.  அத்தாவது இரண்டு தோணியிலும் கால்களை வைத்து இரண்டையும் இறுக பிடித்துக்கொண்டு நின்றால் நட்டாற்றில் தோணிகள் பிரியும் போது கால்சட்டை நடுவில் கீழிந்து பிரிந்து விடப்போகிறமாதிரி ஒரு பயம் வருகிறது.   

 

இருந்தாலும் அதுவேதான் நோக்கம். அதாவது ஈழம் பிரியாவிட்டால் தமிழ் பகுதிகளில் இருக்கும் தமிழ் சொத்துகள் ஆமியால் விரைவில் அபகரிக்கப்பட்டு முடிந்துவிடும். கொழும்பு பொன்ற இடங்களில்தான் இனி தமிழரின் கடைசியாயக  அழியும் சொத்துக்கள் இருக்க போகிறது. ஆனால் தமிழீழம் பிர்ந்தால் குப்பிளானில் காணி தன்னும் மிஞ்சும். இதனால்  முதலிடும் போது குப்பிளானிலும், கொழும்பிலும் முதல் இடுங்கள். தமிழீழம் பிரிவதை அக்கறையுடன் செய்ய முயலுங்கள். முயற்சி தோற்றாலும் பாதி முதல் மிஞ்சும். முயற்சி வென்றாலும் பாதி முதல் மிஞ்சும். மேலும் இப்படி செய்வத்தால் நீங்கள் எல்லோரும் உங்கள் சொந்த முதலை மட்டும் கவனத்தில் வைத்து தமிழீழம் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதிக்க வேண்டி வராது. பொதுவில் தமிழ் ஈழத்தை காப்பாறினால் தமிழ் மக்கள் ஆமியிடம் அரயண்டப்படாமல் தங்கள் சுய கௌரவத்துடன் வாழலாமா முடியாதா என்பதை வைத்து தமிழ் ஈழம் பிரிய வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானித்துவிடலாம்.

 

 

 

 

என்னுடைய கருத்துக்கு மோசமான எதிர்வினையை தராது ஆரோக்கியமான முறையில் பலர் பதில் கூறியிருப்பது நம்பிக்கையை தருகிறது.

இதுவரை தமிழர்கள் யூதர்கள் போன்று செயற்பட்டது இல்லை. இனிமேல் அப்படி செயற்பட்டால் நன்மைகள் உண்டு.

சிங்களவர்கள் இதுவரை வெற்றிகரமாக அயலில் இருக்கின்ற பெரிய ஒரு இனத்தை சமாளித்து தமது இனத்தையும் நிலத்தையும் தக்க வைத்துக் கொண்டார்கள். இன்றைக்கு தமிழர்களில் உள்ள தீவிரவாத சிந்தனையாளர்களே அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள்.

இலங்கையில் பதற்றம் இல்லாது போனால், இலங்கை மீதான தமது புறக்கணிப்பை தமிழர்கள் கைவிட்டால், புலம்பெயர் மற்றும் தமிழ்நாட்டு தமிழர்களின் முதலீடுகள் வந்து குவியும். மெது மெதுவாய் பெரும் மாற்றம் உருவாகும்.

இது சிரித்து கொண்டும் கட்டி அணைத்துக் கொண்டும் செய்கின்ற யுத்தம். ஆனால் இதுவரை தமிழர்கள் இதில் தமது திறமையை நிரூபிக்கவில்லை என்பதும் உண்மை.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்துக்கு மோசமான எதிர்வினையை தராது ஆரோக்கியமான முறையில் பலர் பதில் கூறியிருப்பது நம்பிக்கையை தருகிறது.

இதுவரை தமிழர்கள் யூதர்கள் போன்று செயற்பட்டது இல்லை. இனிமேல் அப்படி செயற்பட்டால் நன்மைகள் உண்டு.

சிங்களவர்கள் இதுவரை வெற்றிகரமாக அயலில் இருக்கின்ற பெரிய ஒரு இனத்தை சமாளித்து தமது இனத்தையும் நிலத்தையும் தக்க வைத்துக் கொண்டார்கள். இன்றைக்கு தமிழர்களில் உள்ள தீவிரவாத சிந்தனையாளர்களே அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள்.

இலங்கையில் பதற்றம் இல்லாது போனால், இலங்கை மீதான தமது புறக்கணிப்பை தமிழர்கள் கைவிட்டால், புலம்பெயர் மற்றும் தமிழ்நாட்டு தமிழர்களின் முதலீடுகள் வந்து குவியும். மெது மெதுவாய் பெரும் மாற்றம் உருவாகும்.

இது சிரித்து கொண்டும் கட்டி அணைத்துக் கொண்டும் செய்கின்ற யுத்தம். ஆனால் இதுவரை தமிழர்கள் இதில் தமது திறமையை நிரூபிக்கவில்லை என்பதும் உண்மை.

 

 

நீங்கள் நல்லாவே கற்பனை செய்கிறீர்கள். தென்னிலங்கையில் உள்ள தமிழர்களின் சொத்துக்களை ஒரே இரவில் பறிக்கும்.. அதிகார பலமும் ஆயுத பலமும் சிங்களவனிடம் உள்ளதை ஏனோ அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள்.

 

யூதர்கள் அப்படியல்ல. அவர்களிடம் பண பலத்துக்கு நிகராக.. அனைத்துப் பலங்களும் உள்ளன. அதுமட்டுமன்றி பலமிக்க வல்லரசுகளின் பலம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன. தமிழர்களிடம் உள்ள தீவிர தேசப்பற்று மட்டுமே..தாயகப் பூமிகளையாவது விற்றுவிடாமல் காப்பாற்றும். இன்றேல் தாயகமும் தென்னிலங்கை சொத்தும் சேர்ந்து முஸ்லீம்களிடமும் சிங்களவர்களிடமும் பறிபோகும் நிலையே தோன்றும்.

 

நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள்.. முஸ்லீம்கள் வர்த்தகம் மூலம் (தமிழரைப் போன்று வெளிநாட்டுக் காசில் அல்ல) கொழும்பை ஆக்கிரமித்தது மட்டுமன்றி.. கிழக்கையும் ஆக்கிரமித்து விட்டார்கள். கண்டியையும் ஆக்கிரமித்து விட்டார்கள். யாழ்ப்பாணத்தையும் ஆக்கிரமிக்கிறார்கள். கிளிநொச்சியும் போகுது. மன்னாரும் போயாச்சு.

 

அவர்கள் என்ன.. பலஸ்தீன சித்தாந்தத்தையா செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..??!

 

சும்மா கனவு காண்பதை நிறுத்தி.. எமக்கான அரசியல் பலத்தை.. தாயக நிலப்பரப்பை தக்க வைக்கிற வழியைச் சொல்லுங்க..! :lol:

Edited by nedukkalapoovan

அப்படி பறிக்க முடியாது. அது சிங்களவர்களுக்கும் பொருளாதாரரீதியில் பெரும் பாதகமாய் முடியும். அத்துடன் தமிழர்கள் உலகை சிறிலங்காவை நோக்கி கவனிக்க வைத்திருக்கிறார்கள். காரணம் இன்றி ஆயுத முனையில் கொள்ளையிடுகின்ற காலம் எங்கள் கண் முன்னேயே வேகமாக முடிந்து கொண்டிருக்கிறது. காரணத்தை சிங்களவர்களுக்கு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் கவனமாக இருந்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

உறுதியற்ற உலகின் மீதான நம்பிக்கைகள் எமது பலவீனம். எம்மை விட முஸ்லீம்கள் முஸ்லீம் நாடுகளின் ஆதரவோடு.. பலமாக உள்ளனர். 1983 இல் அடித்து விரட்டிய போதும் அதற்கு முன்னரும் அடித்து விரட்டப்பட்ட போதும்.. உலகம் ஏனென்று கேட்கவில்லை. முள்ளிவாய்க்காலில் அடிக்கப்பட்ட போது கேட்கவில்லை. ஏன் நேற்று பல்கலைக்கழகத்தில் அடிக்கப்பட்டு.. கடத்தப்பட்டு.. கொல்லப்பட்ட போதும் யாரும் கேட்கவில்லை..! இந்த நிலையில்.. உலகம் எம்மை உன்னிப்பாக கவனித்துக் காப்பாற்றும் என்பது நம்பக் கூடிய ஒன்றல்ல.

 

மேலும்.. அண்மையில் சிறீலங்கா தமிழர்களின் நீண்ட கால சேமிப்பை அபகரிக்கும் சட்டத்தை கொண்டு வந்தது. எவரும் அதையிட்டு கருசணை காட்டவில்லை. ஆட்சியும் அதிகாரமும் படைப்பலமும் உலகை ஏமாற்றும் தந்திரமும் கொண்ட சிங்களவர்களை வெறும் பணத்தால்.. சொத்துக்களால் வெல்லலாம் என்பது வெறும் கனவு மட்டுமாகவே இருக்க முடியும்.

 

இந்தச் செய்தி மூலம்.. சிங்களம் ஒன்றை நாசூக்காகச் சொல்லி உள்ளது.

 

40% மாக உள்ள முஸ்லீம்களின் பெருக்கத்தை கண்டுகொள்ளாத சிங்களம் 33% (மலையக தமிழர்கள் உட்பட)  கண்டு பொருமி நிற்கிறது. இதற்குக் காரணம் உள்ளது.

 

1. சர்வதேசத்திற்கு தமிழர்கள் கொழும்பில் வாழக்கூடிய நிலை உள்ள போது ஏன் வடக்குக் கிழக்கில் சிங்களவர்கள் வாழ முடியாது என்பதை நிறுவ நிற்கிறது. இதன் மூலம் தமிழர்களின் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் கோரிக்கைகளையும் சர்வதேசத்தின் முன் நியாயமற்றவை என்று காட்ட நிற்கிறது.

 

2. சிங்கள மக்களிடையே இனவாதத்தைத் தூண்டி விடுவதோடு.. தமிழர் விரோதப் போக்கை நிலைநிறுத்த நினைக்கிறது.

 

தமிழர்கள் மீது புலிக்குற்றச்சாட்டு வைக்கும் சிங்களம் முஸ்லீம்கள் மீது எதனையும் வைக்காததற்குக் காணம்..???! ஜிகாத் குற்றச்சாட்டை ஏன் வைக்கவில்லை..???! ஆக அடிப்படையில்... இந்தக் குற்றச்சாட்டின் மூலம் இரண்டு விடயங்களில் சிங்களம் ஆதாயம் தேடிக் கொள்கிறதே தவிர.. தமிழர்களின் பரம்பலை இட்டு அது கவலை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி.. தமிழர்களை நேரடியாக விரட்டி அடிப்பதன் வாயிலாக சிங்களம்.. தனக்குச் சார்ப்பான சர்வதேச அனுதாபத்தை இழக்காது. ஆனால் அதே நேரம் தமிழர்களின் வெளிநாட்டில் இருந்து வரும் சொத்துக்களை பிடுங்கும் சட்டங்களை கொண்டு வரும். அதற்கான ஒரு அபாய அறிவிப்பாக இதனையும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டதையும் இணைத்துக் காட்டலாம்.

 

சிங்களம் செய்யப் போகும்.. மாற்றம் ஒன்றிற்கான அடிப்படையே இவ்வறிவிப்புக்கள். இது நிச்சயம் தமிழர்களை அதிர்ச்சியடைய வைக்குமே அன்றி.. மகிழ்ச்சிப்படுத்தாது.

 

இப்படியான அறிவிப்புக்களின் பின்னால் உள்ள அபாயத்தை மக்களுக்கு இனம்காட்டாமல் மறைப்பது கூட அவர்களை ஆபத்தில் சிக்க வைப்பதற்குச் சமன். அதாவது வன்னிப் போரில் தேள்வடிவ பதில் தாக்குதல் ஆய்வுக்கட்டுரைகளின் மறு பிறப்பாக இவற்றை நோக்கலாம்..!

 

மக்கள் இந்த அறிவிப்புக்கள் தொடர்பில் அவதானமான நகர்வுகளைச் செய்வதோடு.. தாயக நில இருப்பை பாதுகாக்கும் வகையிலும் முதலீடுகளை அங்கு நோக்கியும் நகர்த்துவதோடு தாயக நிலத்தை அந்நியர்களுக்கு விற்பதனை நிறுத்தவும் வேண்டும். சிறீலங்காவின் பொருண்மிய நெருக்கடி சிங்களம் தமிழர்களின் சொத்துக்களை மறைமுகமாக அபகரிக்கத் தூண்டும் என்பதையும் மக்கள் உணர்ந்து செயற்படச் செய்வதோடு... தமிழர்களின்  தாயகக் கோட்பாட்டிற்கும்.. அரசியல் தாகத்திற்கும் பாதிப்பற்ற வகையில் இந்த இடரிலும் இருந்தும் மக்கள் வெளிவர அவர்களைத் தயார் செய்ய.. வழிகாட்ட வேண்டும்.

 

அதைவிட்டு மக்களுக்கு உண்மைகளை சரிவர இனங்காட்டாது.. கற்பனை உலகில் மிதக்க விட்டு சிங்களத்திற்கு சார்பாக விடயங்கள் நடந்தேற ஊக்குவிப்பது தவறான வழிகாட்டலாகவே இருக்க முடியும். அது மீண்டும் எம் இனம் பலவீனத்தை அவநம்பிக்கையை சந்திக்கவே செய்யும். :icon_idea:

 

 

Edited by nedukkalapoovan

சபேசன்,

 

நீங்கள் சிங்களவர்களைப் பற்றி படிக்க இன்னும் நிறைய இருக்கு. நெடுக்கு கூறியது போல தமிழர்களின் வளங்களை ஒரே நாளில் பறிக்கக் கூடிய அதிகாரமும், அதற்குரிய தீவிர தமிழர் எதிர்ப்பு மனநிலையும் சிங்களவர்களிடம் இருக்கு. அரசியல் ரீதியில் தமிழ் மக்கள் மேலும் பலவீனமாகும் போது, பொருளாதார ரீதியிலும் அவர்களை பலவீனப்படுத்த அனைத்து அதர்ம வழிகளிலும் சிங்களம் கண்டிப்பாக முயலும்.

சபேசன் "கொழும்பை புலிகள் பிடித்துவிட்டார்கள்" என்று கிளறப்படும் இந்த புதுப் புரளியை மென்மையாக்கி, அப்படி ஒரு புரளி கிளறியதின் நோக்கம் ஒரு இனவன்முறையத் தூண்ட இல்லை என்றதை முன்வைக்க முனைகிறார். வழமையான தமிழ் செய்திகள் போல அந்த செய்தியும் விபரமில்லாமல் எழுதப்படிருந்தாலும் அதன் ஒரே நோக்கம் தமிழர் மீது தாம் எப்போதும் இனக்கலவரத்தை  பாவிக்கமுடியும் என்பதை நினவு படுத்தவே, ஆமிதான் தேவை என்பது இல்லையென்பதாகும். இதன் கருத்து "யாழ்ப்பாண பலகலைகழகத்தை வைத்தோ அல்லது கிளிநொச்சியில் இளம் பெண்களுக்கு செய்ததை வைத்தோ நீங்கள் ஆமியை குறை கூறினால் நாங்கள் அத்தோடு வேறு பாதைகளை சேர்த்துக்கொள்ளத்தாயாரக இருக்கிறோம்" எனப்துதான் இந்த மிரட்டல் விடப்பட்டதின் நோக்கம். இது காலத்தேவையை இட்டு இந்தக் காலத்திற்கு அளவாக சொல்லப்பட்டிருக்கு 

 

ஆயுத முனையில் நமது செல்வங்களை கொள்ளையிட நாம்தான் காரணம் ஆகிறோம் என்பது சபேசனின் மிகக் குறைந்த தர விவாதக் கருத்து. சபேசனுக்கு மட்டும் அல்ல எல்லா மாற்றுக்கருத்தாளர்களுகும் 1948-1983 ஆணடு வரையும் நடந்தவைகள் மறந்து போய்விட்டது. அதை மறுத்து விபரம் எழுத முயல்வதே அவமானம்.

 

தமிழர்கள் உலகை சிறிலங்காவை நோக்கி திருப்பி இருக்கிறார்கள் என்று இந்த திரியில் தனக்கு சாதகமாக சபேசன் எழுதுகிறார். ஆனால் இது சபேசனால் இதுவரையில் மறுக்கப்பட்ட ஒரு விடயம். தமிழர் சரியான பாதையின் சென்று உலகத்தை சிறிலங்கா மீது கவனம் வைக்க செய்த்துவிட்டார்கள். தொடர்ந்து முயன்று இனவழிப்பு குற்ற விசாரனையை கொண்டு வரபோகிறார்கள். இதில் தான் தப்புவது அரிது என்று மகிந்தாவே அண்மையில் பேசியிருக்கிறார். மகிந்த தன்னை ஒரு சர்வதேச ராஜதந்திரி தனது பதவிக்காலம் முடிந்த பின்னராவது கோட்டில் நிறுத்த போவதாக மிரட்டுகிறார் என்று சொல்லிருக்கிறார். 

 

இனி ஒரு இனக்கலவரம் வராது என்பது போல் சபேசன் எழுதலாம். ஆனல் அந்த வாக்குறுதியை சபேசனுக்கு மகிந்த கொடுக்கவில்லை.

 

சம்பந்தர் தான் ஏன் மார்சில் ஜெனிவாரவில்லை என்பதற்கு மகிந்தாவால் இனக்கலவரம் தோன்றும் என்று மிரட்டப்பட்டதாலேயே என்று கூறினார். அந்த நேரம் இது யாழில் பலவழிகளில் விவாதிக்கப்படிருக்கிறது.

 

பல இடங்களில் முஸ்லீம்பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு, தேர்தல் நேரம், அம்பாறை,கல்முனை போன்ற இடங்களில் பல சிறு சிறு சம்பவங்கள் அரசால் தூண்டபட்டிருந்தன. இது தேவைக்கேற்ப அளவாகத்தூண்டப்படிருந்தன. தேவை ஏற்படின் நாடு முழுவதிலும் அரசுக்கு தூண்ட முடியும்.

 

உள்நாட்டுக்கலவரத்தை வெளிநாடுகள் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. அப்படி அவை செய்யபோகின்றனவாயின் அவை முதலில் போர்குற்ற அளவில் பெரிதாக நடந்தவைகளை கவனமெடுக்கத் தாயாராகிவிட்டன என்பதுதான் கருத்து. அதாவது ஒருவருடத்திற்கு மேலாக 146,000 பொதுமக்கள் இறந்ததற்கு ஒன்றும் இதுவரையில் செய்யாத அரசுகள் ஒரு 1000 பேர் ஓறிருநாளில் இறப்பதை எதோ செய்யும் செய்யும் என்பது நிஜமில்லாத கதை. 

 

 

 இனக்கலவரம் போல ஒன்று தமிழர்களின் சொத்துகளை சூறையாட இனித் தேவை இல்லை.  கனடாவில் இருந்து தனது சொத்துக்களை பார்வையிட போனவரை கொன்று அவரின் சொத்துக்கள் கையடக்கப்பட்டத்தாக ஆறு மதங்களுக்கு முன்தான் செய்திகள் வெளிவந்திருந்தன. பலவழிகளில் சட்டங்கள் போடப்பட்டு  அவர்களின் சொத்துக்கள் தொடர்ந்து சூரையாப்பட்டுகொண்டே இருக்கிறது. சிங்கள நீதி அரசரின் கணவரின் சொத்துக்கள் கையட்டக்கப்பட போகும் நேரத்தில் தமிழரின் சொத்துக்கள  பாதுக்காகப்பாக இருக்கிறதென்பது ஒரு வகை வதந்தி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
பலரது வாதங்கள் கடந்த கால அனுபவங்கள் சார்ந்ததாக காணப் படுகின்றன.
 
எனது வாதம், எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்பதனைப் பற்றியது.
 
ஆம், சிங்களத்துடன் ஆன கடந்த கால அனுபவம் கசப்பானது. காரணம், பொருளாதார தேவைகளுக்காக, தமிழர்கள் கொழும்பையும், தெற்கையும் சார்ந்து இருந்தார்கள். இதன் காரணமாக, சிங்கள மொழி மிடுக்குடன் எழுந்தது. திமிரின் காரணமாக, எளியோரினை அதட்டி மிதித்தது.
 
இப்போது நிலைமை அவ்வாறு இல்லை.
 
வலியோர், எளியோரினை நசுக்குவது சிங்களவர்களுக்கு மட்டும் பொதுவானது அல்ல. தமிழர் மத்தியிலும் இருந்தது.
 
(அதேவேளை சிங்களவர், தமிழர் பிரச்சினை மத்தியில் முஸ்லிம் மக்கள் வளர்ந்தார்கள் என்பது உண்மை. இதனை சிங்களவர், தமிழர் இரு பகுதியினரும் உணர்ந்து கொள்வதால், முஸ்லிம் மக்கள் சில நெருக்கடிகளை எதிர்காலத்தில் சந்திக்கலாம்.)
 
இந்தியாவின் தேசிய மொழி இந்தி, தலை நகரம் டெல்லி. ஆனால் மாராத்தி மொழி பேசும் மும்பை தான், வர்த்தக தலை நகரம். காரணம் மும்பை இந்தியாவின் பொருளாதார கேந்திர மையம்.
 
இதனை தான் நான் குறிப்பிட்டேன்.
 
மகிந்த, சிங்களவர்களுக்கு, கரை ஏற முடியாத ஒரு பெரும் கடனுடன் கூடிய நாட்டினை  விட்டுச் செல்வார்.
 
தமிழர்கள், மகிந்த காலத்தின் பின்னே, சர்வதேச தலையீட்டுடன் கூடிய  சரியான தீர்வு ஒன்றின் பின்புதான் நாடு திரும்புவார்கள். முதலிடுவார்கள். அவர்கள் முட்டாள்கள் அல்ல.
 
அப்போது கொழும்பு அல்ல. மும்பை போன்று தமிழ் பிரதேசம் ஒன்று தான் அவர்களது வர்த்தக தலை நகராக விளங்கும். அவர்களது முதலீடு இதனை உறுதிப் படுத்தும். அமெரிக்கா போன்று, பணம் உள்ளவனே, உலகின் ராஜா என்பது உலக நியதி. 
 
மேலும் புலத் தமிழர்களது முதலீடுகளை, அவர்கள் சார்ந்த அரசுகள், ஒழுங்கு படுத்தி உறுதிப் படுத்தும். (Foreign Investment).
 
முன்னர் போல் கொள்ளை அடித்து விட்டு, அந்த மேலை நாட்டு அரசுகளுடனோ நிறுவங்களுடனோ வியாபாரம் செய்ய முடியாது. 
 
கொழும்பில் அமைக்கப் பட்ட வீடுகள் கட்டிய புலம் பெயர் நிறுவனங்ககள், வரி விலக்குப் பெற இலங்கை Board of Investment அனுமதி வாங்கியவர்கள். இதனால் இது வெளிநாட்டு முதல் ஈடு ஆகின்றது. வீடுகள் வாங்கியோர் புலத் தமிழர்கள். அதுவும் வெளி நாட்டு முதல் ஈடு. பாதுகாப்பானது. இலங்கை அரசு நினைத்த மாதிரி கொள்ளை அடித்து திரத்த முடியாது.
 
நான் முன்னர் சொன்னது போல் முதல் இட்டவர்கள்,  முட்டாள்கள் அல்ல. கனடாவில் இருந்த உறவினர் சொல்லுக் கூட கேளாமல் சென்று கொலையான ஒருவரின் அனுபவத்தினை அளவு கோளாக கொள்வது சரியானதாக தெரியவில்லை, மல்லை.
 
ஆகவே பழைய கசப்பான அனுபவங்களை மீண்டும் எதிர்காலத்தில் நடக்கலாம் என சிந்திப்பதும் சரியாக இருக்கும் என தெரியவில்லை.
 
மறுபுறத்தே மீண்டும் ஒரு ஆயுதப் போரினை, புலம் பெயர் தமிழர் எண்ணம் எவ்வாறு இருப்பினும், களத்தில் உள்ள  தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என சொல்ல முடியாது. முன்னர் பொருளாதார பலமும் இல்லாததால், ஆயுத போராட்டம் தவிர்ந்த வேறு வழியும் இருந்திருக்க முடியாது.
 
அதேவேளை புலம் பெயர் தமிழர்களும் முன்னர் போல் பொருளாதார ரீதியில் உதவுவார்களா என சொல்லவும் முடியாது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
 
புலத் தமிழர்களது மளிகைப் பொருள் தேவைகள் இந்தியாவில் இருந்து வரும் பொருட்களினால் நிறைவேறுகின்றன. இவை எமது தமிழ் பிரதேசங்களுக்கு நகரும் காலம் வரும். அப்போது அங்கு வேலை செய்ய சிங்களவர்கள் வரக் கூடும்.
 
இவ்வாறு  புலம் பெயர்ந்தோர் பொருளாதார பலம் வேறு வகையில் தோல் கொடுத்து உதவப் போகின்றது.
 
எமது அரசியல் பலம் குறித்த வேலைத் திட்டங்களுடன், தனியே  பொருளாதார பலம் குறித்த தெளிவான சிந்தனை, நகர்வுகள் எம்மத்தியில் தேவையானது என்பதே எனது கருத்து. 

Edited by Nathamuni

இஸ்ரெலியர்கள் பரந்து வாழும் தமது மக்களின் பொருளாதார வளத்தை தமது நாட்டிற்காக முதலீடு செய்ய கேட்டுள்ளார்கள்:

http://www.israelbonds.com/home.aspx

 

இதன் இன்றைய பெறுமதி : 34 பில்லியன்கள்

 

கனடாவிலும் வேறு நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன.

மிகவும் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான கருத்து பறிமாற்றம் இங்கு அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. புதிய, நவீன உலகத்துக்கு ஏற்ப, புதிய சிந்தனை. இன்றைய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எதிர்கொள்ளும் சவால்கள், அதே சமயத்தில், இன்று உதயமாகி உள்ள வாய்ப்புகள், அனைத்தையும் எண்ணிப்பார்த்து, செயல் திட்டம் உருவாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
நாம் புலம் பெயர்ந்துள்ள நாடுகள் ஒரு பெரும் பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றன.
 
அதாவது அவர்கள் மிக அதிக மனித வலு செலவு காரணமாக, மனிதவலு மலிவான சீனாவுடனோ அதன் உற்பத்தி பொருட்கள் உடனோ சந்தையில் போட்டி போட முடியாமல் தவிக்கின்றன.
 
ஆனால் அகதியாக வந்த எமது மக்களின் மனித வலு, 'கையில் காசு' (வரி பிடிமானம் இல்லாமல்) என சொல்லி வேலை தருவோரிடம் வீண் ஆகின்றது.
 
உண்மையில் நாம் இந்த நாடுகளில் உற்பத்தி துறைகளில், எம்மிடையே  உள்ள மனித வலு கொண்டு, ஈடுபடும் போது, எம்மால் இந்த நாடுகளின் (brand name) பயன் படுத்தி சீனாவுடன் பொருத முடியும்.
 
சிந்தித்து பாருங்கள்: உதாரணமாக இந்திய சந்தைக்கு, ஒரே  பொருள் '
made in China என ஒன்றும் made in England என ஒன்றும் செல்லும் போது, விலையில் பெரிய வித்தியாசம் இல்லாவிடில், எதனை வாங்குவார்கள்?
 
அரசியல்வாதிகள் இந்த அகதி மனித வலு பயன்படுத்துதல் குறித்து பேச முடியாது. இனவாதம் என்பார்கள். ஆகவே நாம் தான் இது குறித்து தெளிவுடன் நடந்து பொருள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.
 
இது குறித்து ஒரு நண்பருடன் பேசிய போது, என்ன இருந்தாலும் சீனா காரனின், மனிதவலு மலிவு என்றார்.
 
ஆனால், உளுந்து வாங்கி ஊற வைத்து, வடை ஆக்கி, கடையில் கொடுத்து, ஐந்து, ஒரு பவுண்டுக்கு விற்கும் எமது மனித வலு குறித்து பேசிய போது, எனது கருத்தினை ஒத்துக் கொண்டார்.
 
ஒரு resturant போனால்  £6.95 + Wine அது இது என்று ஒரு பிரியாணிக்கு £20 செலவழியுமே என தமிழ் கடைகளில் பிரியாணி பார்சல், இரு பவுண்டுகளுக்கு வாங்க காலையில் காத்து இருக்கும் (என்ன இன்னும் டெலிவரி வரவில்லையே, என்னாச்சோ, என சில வேளைகளில் கவலைப்படும்) வெள்ளை, கறுப்பு இனத்தவர்கள்,   நான் சொல்லும் விடயத்திக்கு  சரியான சான்று.

Edited by Nathamuni

திறந்த உலக பொருளாதார கொள்கையில் புதிய தொழில்நுட்பங்களுக்கே முதலிடம்.  உதாரணத்திற்கு மருத்துவம். கனடாவில் வைத்தியர்களின் செலவில், அதாவது அவர்களின் வேளையில் அறுபது வீதத்தை தொழில்நுட்பம் இன்னும் இருபது வருடங்களில்  செய்யும் என்கிறார்கள்.

 

அதேவேளை தொழில்நுட்பம் கற்க முதலீடு தேவை. அதிலும் மேற்குலகம் முன்னணியில் நிற்கிறது. ஆனால் கீழைத்தேய நாடுகள் விரைவாக வளர்ந்துவருகின்றன.


கனடாவில் இளையர்வர்கள் இங்குள்ள டோயோட்டோ நிறுவனத்திற்கு  அழைத்து செல்லவுள்ளன. அங்கே ரோபோ தொழில்நுட்பம் அவர்கள் பார்க்க உள்ளார்கள். இப்படியான துறைகளில் எமது புலம்பெயர்ந்த  தாயக தலைமுறை வளர வேண்டும்.

 

Trip to Toyota Assembly Plant - Robotics Program (CYTA)


The Education and Career Development (ECD) Council of Canadian Tamil Youth Alliance (CTYA) is organizing a trip for young students!

Through our Robotics Program, we are providing young students the opportunity to see robotics in motion by attending and taking a tour of the Toyota Assembly Plant in Cambridge, Ontario. This trip is open to all students and it will provide them with the opportunity to directly see how the manufacturing plant operates.

 

Did you know that the Cambridge plant was the first Toyota manufacturing plant that was opened in Canada? We hope this will be a great educational trip for the students.

 

The planned date for this field trip is January 3rd, 2013. A school bus will be arranged to accommodate the students to this field trip. Parents can also join us.

 

If you would like your child to participate in this excursion, please reply to this email or call us to register by December 22, 2012. We are looking forward to an exciting trip.

 

ECD Council's Robotics Program is an initiative of Youth Recreation and Innovation Centre project.

 

Thank you,
Ramanaa S.
Director, Education and Career Development Council
Canadian Tamil Youth Alliance
E-mail: Ramanaa@ctya.org
Phone: 416 931 3937

நாதமுனி,

புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார பலத்தை சிறிலங்காவில் கொண்டு முடக்குவது ஆபத்தில்தான் முடியும். நினைத்த நேரத்தில் அதனை எடுத்துக் கொண்டு துரத்தி விடலாம். அதனை யாரும் தட்டிக் கேட்கப் போவதில்லை. உலக அளவில் சிறு சலசலப்புகள் கிளம்பும். அது நமக்குப் பிரயோசனமாகாது. முள்ளிவாய்க்கால் நல்லதொரு சாட்சி.

இதைவிட ஐரோப்பிய அமெரிக்க ஜனநாயகக் கோட்பாடுகள், தென் கிழக்காசியாவில் இல்லை. தனிமனித சார்பாக ஊழல் மிகுந்த பிரதேசம். அண்மைய வரலாறுகளில் மிகப்பெரிய இன அழிப்பையும் படுகொலைகளையும் ஜூஜூபியாக ஊதித் தள்ளி உலகத்திற்கு தண்ணி காட்டிய பிரதேசம்.

வரலாறில் இருந்து படிப்பினைகளைக் கற்பது தவறில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.