Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுத்த தமிழில் கதைக்கும் ஒரு நல்ல பாடகி மற்ற பிரமணிகளுடன் ஒப்பிடும்போது, எந்தவித பந்தாவுமில்லை, மன வருத்தமாக இருக்கின்றது

  • Replies 68
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நித்தியசிறி மகாதேவன் மற்றும் அவரது பிள்ளைகள்....

தன்யசிறி மகாதேவன்

தேஜசிறி மகாதேவன்

 

 

கண்கள் கலங்குகின்றது இந்த இணைப்பை பார்க்க, பிள்ளைகளுக்கு இந்த கஷ்டம் தேவையா 

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சியான... செய்தி. நித்தியஸ்ரீயும், அவரது குழந்தைகளும்... விரைவில், இந்த அதிர்ச்சியான நிகழ்விலிருந்து விடுபட, மனத்தைரியதை இறைவன் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
நி‌த்யஸ்ரீ கணவ‌ர் உ‌யிரை ப‌றி‌‌த்த 'தா‌ழ்வு மன‌ப்பா‌‌ன்மை'
வெள்ளி, 21 டிசம்பர் 2012( 10:40 IST )
 
''நித்யஸ்ரீயின் கணவர் என்று சொல்வது அவருக்கு பிடிக்காது. மகாதேவனின் மனைவி நித்யஸ்ரீ என்று சொன்னால்தான் அவருக்கு பிடிக்கும். நித்யஸ்ரீயை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவது மகாதேவனுக்கு பிடிக்காது'' எ‌ன்று நித்யஸ்ரீயின் குடும்ப நண்பர்கள் கூ‌றியதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
 
பாடகி நித்யஸ்ரீயின் பாட்டி டி.கே.பட்டம்மாள் இந்திய அரசின் 'பத்ம விபூஷன்' விருதை பெற்றவர். அவர் மிகப்பெரிய கர்நாடக இசை மேதை. நித்யஸ்ரீயின் தந்தை சிவக்குமாரும் மிருதங்க வித்வான், தாயார் லலிதாவும் சிறந்த பாடகி. நித்யஸ்ரீயின் சகோதரி காயத்ரியும் நல்ல பாடகிதான்.
 
இப்படியொரு பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த நித்யஸ்ரீ செல்வவளம் பெற்றவர். கோட்டூர்புரம் பகுதியில் அவரது குடும்பத்துக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. புகழிலும், செல்வத்திலும் புகழோடும், செல்வத்தோடும் வாழ்ந்தாலும், நித்யஸ்ரீ, கணவர் மகாதேவனுக்கு அடங்கிய பெண்ணாகத்தான் வாழ்ந்து வந்தார்.
 
13 வருடங்களுக்கு முன்பு அவர்கள் திருமணம் நடந்தது. மகாதேவனும் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும், நிறைய தாழ்வு மனப்பான்மை கொண்டவர். ஊர் உலகம் மகாதேவனை, நித்யஸ்ரீயின் கணவர் என்று சொல்வது அவருக்கு பிடிக்காது. மகாதேவனின் மனைவி நித்யஸ்ரீ என்று சொன்னால்தான் அவருக்கு பிடிக்கும்.
 
நித்யஸ்ரீயை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவது மகாதேவனுக்கு பிடிக்காது. தனக்கு தெரியாமல் நித்யஸ்ரீ எதையும் செய்யக்கூடாது என்று மகாதேவன் நினைத்தார். நித்யஸ்ரீயின் இன்னிசை கச்சேரிகளைக்கூட மதாதேவன்தான் முடிவு செய்வார். மகாதேவன் சொல்லும் கச்சேரியில்தான் நித்யஸ்ரீ கலந்துகொள்ள வேண்டும். தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் நித்யஸ்ரீ கணவரிடமே கொடுத்துவிடுவார். மிகவும் தங்கமான அந்த பெண்ணுக்கு இப்படியரு சோகமும், சோகம் தாக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
 
தனது தாயார் இறந்தபிறகு, மகாதேவன் மனஉளைச்சலோடு காணப்பட்டார் என்பதும் உண்மை. இதுபோன்ற ஒரு இறுக்கமான சூழலை தாங்கிக்கொண்டு நித்யஸ்ரீ வாழ்ந்து வந்தார். இறுதியில் அவரது தலையில் பெரிய கல்லை தூக்கிப்போட்டுவிட்டு மகாதேவன் இப்படியரு முடிவை எடுத்திருக்கக்கூடாது எ‌ன்று குடும்ப நண்பர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
  • கருத்துக்கள உறவுகள்

நி‌த்யஸ்ரீ கணவ‌ர் உ‌யிரை ப‌றி‌‌த்த 'தா‌ழ்வு மன‌ப்பா‌‌ன்மை'
 
''நித்யஸ்ரீயின் கணவர் என்று சொல்வது அவருக்கு பிடிக்காது. மகாதேவனின் மனைவி நித்யஸ்ரீ என்று சொன்னால்தான் அவருக்கு பிடிக்கும். நித்யஸ்ரீயை மற்றவர்கள் புகழ்ந்து பேசுவது மகாதேவனுக்கு பிடிக்காது'' எ‌ன்று நித்யஸ்ரீயின் குடும்ப நண்பர்கள் கூ‌றியதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
 

இதனை கடம் வாசித்த மகாதேவன், நித்யசிறீயை திருமணம் செய்ய முதல் யோசித்திருக்க வேண்டும்.

திருமணம் செய்து... இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்... இப்படிச் செய்திருக்கக் கூடாது.

முன்பொருமுறை... சசிகலாவின் கணவர் நடராஜனும் தன்னை நடராஜன் என்று அழைக்கும் படி... பத்திரிகையாளரிடம் கூறியதாக ஞாபகம்.

நேற்று வரை மாயன் கேலண்டரை வைத்து உலகம் அழியப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் வாழ்க்கை இருண்டு போனது மட்டும் நிஜம்.இவர் கணவர் மகாதேவன் நேற்று மதியம் கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த நித்யஸ்ரீ மற்றும் அவர் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி பல்வேறு இதயங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
mahadevan_car_with_20%E0%AE%A4%E0%AF%87%
இந்நிலையில் மகாதேவன் தற்கொலைத் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்போது நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் மன அழுத்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

தற்போது வெளியாகும் விஷ்யம் இதுதான்::

பழம்பெரும் கர்நாடக இசைக்கலைஞரான டி.கே. பட்டம்மாளின் பேத்தியான நித்யஸ்ரீக்கும் மகாதேவனுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நித்யஸ்ரீயின் இல்லற வாழ்க்கை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அமைதியான இசை வெள்ளமாகத்தான் சென்று கொண்டிருந்தது. அதன் பின்னர்தான் கணவரின் மன அழுத்த நோய் அவரது வாழ்வில் புயல்போல தாக்கத் தொடங்கியது.

இதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாகவே நித்யஸ்ரீ நிம்மதி இழந்து தவித்து வந்துள்ளார். பல நேரங்களில் மகாதேவன் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே பொது இடங்களில் நடந்துள்ளார். அவரது கார் டிரைவரான சுரேசிடம் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. காரில் செல்லும்போது தேவையில்லாமல் கைகளை ஆட்டிக் கொண்டும், சத்தம் போட்டுக் கொண்டும் இருப்பார் என அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

திடீரென காரை நிறுத்தி எந்த இடமாக இருந்தாலும் இறங்கி சிறுநீர் கழிப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். டிரைவர் சுரேஷ் தினமும் 8 மணிக்கெல்லாம் மகாதேவனின் வீட்டுக்கு வந்து விடுவார். சபரிமலைக்கு சென்றிருந்ததால் நேற்று காலையில் 11 மணிக்குத்தான் சுரேஷ் சென்றுள்ளார்.
NITHYASHREE-Mahadevan.jpg
உடனே சுரேசை அழைத்துக் கொண்டு அடையாறு போர்ட் கிளப்புக்கு மகாதேவன் காரில் சென்றுள்ளார். அவரது 2 மகள்களும் அங்கு டென்னிஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாலையில் பயிற்சி வகுப்பு உள்ளதா? என விசாரித்து விட்டு, காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது டிரைவரை முன் சீட்டில் அமர வைத்து விட்டு மகாதேவன் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

கோட்டூர்புரம் பாலத்தில் வந்ததும் திடீரென காரை நிறுத்தி இறங்கியவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.காரை நிறுத்திவிட்டு மகாதேவன் இறங்கியதும், சிறுநீர் கழிக்கத்தான் செல்கிறார் என நினைத்தேன் என்று டிரைவர் சுரேஷ் போலீசில் கூறியுள்ளார்.

மனஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த மகாதேவன் நித்யஸ்ரீயிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதுபற்றி போலீசார் நித்யஸ்ரீயிடம் விசாரித்தபோது எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார்.
nithayasri-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%
 

 

கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி மகாதேவனின் தாய் சாரதா இறந்துள்ளார். இதன் பின்னர் மகாதேவனின் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இதற்காக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடமும் போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை கேட்டறிந்தனர்.

இதன் மூலம் மன அழுத்த நோயால் அவர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் மங்களகரமாக மேடையில் அமர்ந்து தனது வசீகர குரலால் இசை பிரியர்களை கட்டிப்போட்ட நித்யஸ்ரீ தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதது கண்களை கலங்கச் செய்தது.

 

 

http://www.aanthaireporter.com/?p=17452

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் இணைப்பு- ஏன் தற்கொலை செய்து கொண்டார் மகாதேவன்? - நித்யஸ்ரீ வாக்குமூலம்

தன் தாயார் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்த மகாதேவன், அவர் இறந்ததைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார், என்று வாக்குமூலம் அளித்துள்ளார் பாடகி நித்யஸ்ரீ. பிரபல கர்நாடக மற்றும் சினிமா பின்னணி பாடகியான நித்யஸ்ரீ மகாதேவன், மார்கழி இசை விழாவில் பிஸியாக இருக்கும் நேரம் இது. திடீரென்று அவரது கணவர் நேற்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், நித்யஸ்ரீயிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் நித்யஸ்ரீ கூறியிருப்பதாவது: எனது கணவர் மகாதேவன் பகல் 12 மணியளவில் காரை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். கார் பேட்டரியை மாற்றுவதற்கு செல்வதாகத்தான் சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த 10 நிமிடத்துக்குள் அவர் ஆற்றில் குதித்துவிட்டார் என்ற செய்தியை டிரைவர் சுரேஷ், என்னிடம் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. நானும் கோட்டூர்புரம் பாலத்துக்கு ஓடிச் சென்றேன். அவரை, தீயணைப்பு வீரர்கள் தேடிக்கொண்டிருந்தனர். அதற்குமேல் என்னால் அங்கு நிற்கமுடியவில்லை. எப்படியும் அவர் உயிரோடு நல்லபடியாக வருவார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார்? என்று என்னால் சொல்லமுடியவில்லை. எனது கணவர், அவரது தாயார் சாந்தா மீது அதிகமாக பாசம் வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி எனது கணவரின் தாயார் சாந்தா இறந்துபோனார். அந்த சோகம், எனது கணவரை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது. எப்போதும் தாயாரை நினைத்தபடி மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு, டாக்டரிடம் சிகிச்சை அளித்து வந்தோம். தாயாரை பறிகொடுத்த சோகம்தான் அவரை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டது என்று நான் நினைக்கிறேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை," என்றார்.

 

தற்கொலை செய்த மகாதேவனுக்கு என்ன பிரச்சனை? பாடகி நித்யஸ்ரீயின் கார் டிரைவர் பரபரப்பு தகவல்

 

 

கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரின் கார் டிரைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் நேற்று மதியம் கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியைக் கேட்ட நித்யஸ்ரீ விஷத்தைக் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். இந்நிலையில் மகாதேவனின் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நித்யஸ்ரீ மகாதேவனை மணந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக மகாதேவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக நித்யஸ்ரீ வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று கூறப்படுகிறது. மகாதேவன் பல்வேறு சமயத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பாராம். இந்த தகவல் அவரின் கார் டிரைவர் சுரேஷிடம் நடத்திய விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து சுரேஷ் கூறுகையில், காரில் செல்கையில் மகாதேவன் திடீர் என்று கை, கால்களை ஆட்டுவார், சத்தம் போடுவார். காரை நிறுத்தச் சொல்லி எந்த இடம் என்றும் பார்க்காமல் சிறுநீர் கழிப்பார். நான் தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்வேன். சபரிமலைக்கு சென்றதால் நேற்று காலை 11 மணிக்கு தான் வேலைக்கு சென்றேன். அவரது வீ்ட்டுக்கு சென்றவுடன் காரில் ஏறிக் கொண்டு போட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். நானும் அழைத்துச் சென்றேன். அங்கு அவரின் மகள்கள் டென்னிஸ் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை சந்தித்து மாலையில் பயிற்சி உள்ளதா என்று கேட்டுவிட்டு காரில் கிளம்பினார். அப்போது என்னை முன் சீட்டில் அமர வைத்துவிட்டு அவர் காரை ஓட்டினார். கோட்டூர்புரம் பாலத்தில் அவர் காரை நிறுத்தியதும் வழக்கம் போல சிறுநீர் கழிகக்த் தான் செல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் ஆற்றில் குதித்துவிட்டார் என்றார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மகாதேவன் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். ஆனால் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று நித்யஸ்ரீ தெரிவித்துள்ளார். மகாதேவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவர் தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.

tamiloneindia

 

பிரபல கர்நாடகஇசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை - நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சி?

 

பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின் கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இன்று பகல் 12.45 மணி அளவில் தனது காரில் வந்து கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாற்றின் பாலத்தில் நிறுத்திவிட்டு, ஆற்றில் குதித்துள்ளார். 

திடீரென ஒருவர் காரை நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்ததை பார்த்தவர்கள், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஆற்றில் குதித்து சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை மீட்டனர். 

இன்று காலை ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே மகாதேவன், கோபத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி? 

இதனிடையே கணவர் இறந்தது குறித்து தகவலறிந்த பாடகி நித்யஸ்ரீயும், தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் நிலை குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை. 

பாடகி நித்யஸ்ரீ, மறைந்த பிரபல கர்நாடக பாடகி பட்டம்மாளின் பேத்தி ஆவார்.

நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

20-12-2012 - 08: 32

பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். கர்நாடக இசைப் பாடகியான இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார்.

இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர்புரம் பாலத்தில் காரில் சென்று ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்..

இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் சென்றதாகவும். அங்கு பாலத்தில் வண்டியைநிறுத்தி விட்டு அடையாறு ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து சென்று நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலை மீட்டனர். அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி

இதனிடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86766/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்வுமனப்பான்மை ஆபத்தானது. ஆண் என்கிற ஆதிக்க மனப்பான்மை அதைவிட ஆபத்து.

 

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பெயர் யார் என்று கேட்டால் பலருக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. :D

அதுக்காக, அவர் இங்கிலாந்தின் கூவத்திற்குள் (தேம்ஸ்) குதிக்கவா போறார்? :D

மூன்று கர்நாடக சிகரங்களிலும், பட்டம்மாள் இயபாலும் ஒரு உயர்ந்த சிகரமாக வாசித்த ஞாபகம். பட்டமாள்தான் ஆண்களுமட்டும் என்றிருந்த கர்நாடக சங்கீத மேடைகளில் துணிச்சலாக மேடை ஏறிய முதல் பெண்ணாகவும் கூறப்பட்டிருந்தது. (மற்றய இருவரும் அவரின் பதையை பின்பற்றியவர்கள்தாம்)

 

:(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை செய்த மகாதேவனுக்கு என்ன பிரச்சனை? பாடகி நித்யஸ்ரீயின் கார் டிரைவர் பரபரப்பு தகவல்

 

சென்னை: கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரின் கார் டிரைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

 

பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் நேற்று மதியம் கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்நிலையில் மகாதேவனின் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது.

 

அதன் விவரம் வருமாறு,

 

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நித்யஸ்ரீ மகாதேவனை மணந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக மகாதேவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக நித்யஸ்ரீ வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று கூறப்படுகிறது. மகாதேவன் பல்வேறு சமயத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பாராம். இந்த தகவல் அவரின் கார் டிரைவர் சுரேஷிடம் நடத்திய விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

 

இது குறித்து சுரேஷ் கூறுகையில்,

 

காரில் செல்கையில் மகாதேவன் திடீர் என்று கை, கால்களை ஆட்டுவார், சத்தம் போடுவார். காரை நிறுத்தச் சொல்லி எந்த இடம் என்றும் பார்க்காமல் சிறுநீர் கழிப்பார். நான் தினமும் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்வேன். சபரிமலைக்கு சென்றதால் நேற்று காலை 11 மணிக்கு தான் வேலைக்கு சென்றேன்.

 

அவரது வீ்ட்டுக்கு சென்றவுடன் காரில் ஏறிக் கொண்டு போட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். நானும் அழைத்துச் சென்றேன். அங்கு அவரின் மகள்கள் டென்னிஸ் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை சந்தித்து மாலையில் பயிற்சி உள்ளதா என்று கேட்டுவிட்டு காரில் கிளம்பினார். அப்போது என்னை முன் சீட்டில் அமர வைத்துவிட்டு அவர் காரை ஓட்டினார். கோட்டூர்புரம் பாலத்தில் அவர் காரை நிறுத்தியதும் வழக்கம் போல சிறுநீர் கழிகக்த் தான் செல்கிறார் என்று நினைத்தேன். ஆனால் ஆற்றில் குதித்துவிட்டார் என்றார்.

 

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மகாதேவன் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். ஆனால் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று நித்யஸ்ரீ தெரிவித்துள்ளார். மகாதேவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவர் தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.

 

http://tamil.oneindia.in/news/2012/12/21/tamilnadu-why-did-nithyasree-husband-commit-suicide-166654.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்வுமனப்பான்மை ஆபத்தானது. ஆண் என்கிற ஆதிக்க மனப்பான்மை அதைவிட ஆபத்து.

 

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பெயர் யார் என்று கேட்டால் பலருக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. :D

அதுக்காக, அவர் இங்கிலாந்தின் கூவத்திற்குள் (தேம்ஸ்) குதிக்கவா போறார்? :D

 

பெயர் இளவரசர் பிலிப்ஸ்! தாழ்வு மனப்பான்மைக்கு நேர் எதிராக, தனது மனைவியின் செல்வாக்கைப் பாவித்து பல தொண்டு நிறுவனங்களின் கௌரவத் தலைவராக இருந்து சேவை செய்து அண்மையில் தான் ஓய்வு எடுக்க ஆரம்பித்திருக்கிறார்-வயது தொண்ணூறு இருக்கும்! அரசிக்கு பாரிய உளவியல் பலமும் வழங்கும் ஒருவர் என்று செய்தி ஊடகங்களில் வாசித்திருக்கிறேன். ஆணோ பெண்ணோ இப்படித் தான் இருக்க வேண்டும்! குழந்தைகளையாவது நினைத்திருக்கலாம்! பிரார்த்தனைகள்!

வணிகம் ஒன்றே குறிக்கோள் எனும் ரீதியில் ஊடகங்கள் இச் செய்தியை எழுதுகின்றன. ஒரு குடும்பத்துக்குள் இருக்கக் கூடிய அல்லது பேண வேண்டிய ரகசியங்களைக் கூட வியாபார ரீதியில் அணுகுவது வேதனைக்குரியது. முக்கியமாக நித்தியசிறி  திமிர் பிடித்தவரா அவரது புகழாலும் திறமையாலும் கணவருக்கு அடங்க மறுத்தவரா என்ற நோக்கில் எழுதுவது ஆணாதிக்க சிந்தனை கொண்ட சமூகத்தின் கொடூர உளவியல் என்றே நினைக்கின்றேன்.

 

மகாதேவன் ஒரு முறை தற்கொலை செய்துகொண்டார். மீடியாக்கள் பல முறை நித்தியசிறியை கொல்லத் தொடங்கியுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

நித்யஸ்ரீ அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலம் தான் வலியை ஆற்றும். ஆண்டவன் அருள்புரிவானாக!

  • கருத்துக்கள உறவுகள்
மகாதேவன் ஒரு முறை தற்கொலை செய்துகொண்டார். மீடியாக்கள் பல முறை நித்தியசிறியை கொல்லத் தொடங்கியுள்ளன.

 

மேற்குலக ஊடகங்களை ஒப்பிடும்போது நம்முடையது பரவாயில்லை என நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
நேற்றைய எனது பதிவில் கோமகன் சிறிது அதிருப்தி அடைந்திருந்தாலும்,  உண்மையிலேயே நான் குறிப்பிடாத விரக்தி அடைய வைக்கும் நிலை என்ன வெனில், இது கர்நாடக சங்கீத உலகிற்கான இழப்புமாகும்.
 
ஏனெனில், மிகவும் ஆச்சாரமான தமிழக கர்நாடக சங்கீத கலாச்சாரத்தில், ஒரு கைம்பெண் மீண்டும் சங்கீத மேடை ஏற முடியுமோ என்பது குறித்து ஊகிக்க முடியாது.
 
பாடகி ஜானகி அம்மா, பின்னனிப் பாடகி என்பதால் தொடர்ந்தார்.  பாடகி  சித்திரா இழந்தது மகள் என்பதால் விரைவில் மீண்டு வந்தார்.
 
இவர் எதிர்காலம் எப்படியோ, இது சங்கீத உலகிற்க்கு விரக்தி தரும் இழப்பு.
 
இதனால் தான் அவரது கணவரின் செயல் குறித்து கோபம் வந்தது. விசுகுவும் இவ்வாறே உணர்ந்திருப்பார் என நினைக்கின்றேன். 
நேற்றைய எனது பதிவில் கோமகன் சிறிது அதிருப்தி அடைந்திருந்தாலும்,  உண்மையிலேயே நான் குறிப்பிடாத விரக்தி அடைய வைக்கும் நிலை என்ன வெனில், இது கர்நாடக சங்கீத உலகிற்கான இழப்புமாகும்.
 
ஏனெனில், மிகவும் ஆச்சாரமான தமிழக கர்நாடக சங்கீத கலாச்சாரத்தில், ஒரு கைம்பெண் மீண்டும் சங்கீத மேடை ஏற முடியுமோ என்பது குறித்து ஊகிக்க முடியாது.
 
பாடகி ஜானகி அம்மா, பின்னனிப் பாடகி என்பதால் தொடர்ந்தார்.  பாடகி  சித்திரா இழந்தது மகள் என்பதால் விரைவில் மீண்டு வந்தார்.
 
இவர் எதிர்காலம் எப்படியோ, இது சங்கீத உலகிற்க்கு விரக்தி தரும் இழப்பு.
 
இதனால் தான் அவரது கணவரின் செயல் குறித்து கோபம் வந்தது. விசுகுவும் இவ்வாறே உணர்ந்திருப்பார் என நினைக்கின்றேன். 

 

எனது அதிருப்தி வேறுவகையானது . அதை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் . நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை .  பாரம்பரியம் மிக்க கர்நாடக சங்கீத உலகின் இசைவாரிசு , பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக இவற்றையெல்லாம் முறியடித்து மீண்டும் இசையுலகில் பவனிவரவேண்டும் . அவரது நெஞ்சுரத்தை அவரது பேட்டிகளில் நான் கண்டுள்ளேன்  . அவருக்கு சொற்களால் ஒத்தடம் கொடுப்பதுதான் இப்போதுள்ள நிலையில் நாங்கள் அவருக்குச் செய்யும் கைமாறு . சிலவேளைகளில் அவரும் இந்தப்பதிவை வருங்காலங்களில் பார்க்கலாம் . தமிழகத்திலதான் யாழுக்குப் பெரிய எண்ணிக்கையான வாசகர்கள் உள்ளனர் .

 குழந்தைகளையாவது நினைத்திருக்கலாம்! பிரார்த்தனைகள்!

 

சாரதி சொல்வது உண்மையானால் அவர் ஒரு மன நோயாளி.

 

இருந்தாலும் மனநோயாளி அதாம் லான்சா மாதிரி மேலும் 27 உயிர்களை வாங்கிக்கொண்டு போய்சேரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கூவம் ஆறு, என்பது... சென்னை வாசிகளின்... கக்கூஸ் வெளியேற்றும் இடம்.
அதனை... ஆறு, என்று... சொல்வதை விட, ஊரில் உள்ள கக்கூஸ், மூத்திரம், எச்சில், துப்பல் கலந்த பாணி.
அதில்... கால் வைத்தால்... சொறி, சிரங்கு, குட்டை, பாவாடை போன்ற வியாதிகள் தொற்றும்.
இனி... தமிழ்ப்படம் எடுப்பவர்கள், கொடைக்கானல் போகாமல்... கூவத்திலேயே படம் எடுக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.