Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நண்பன்..அவன் காதல்...நான்...நடுவில கொஞ்சப்பக்கம் எனக்கு கண்டம்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கீறோகொண்டாவின் TVS விக்டர் புதுசாக யாழ்ப்பாணத்தில அறிமுகமான நேரம்... தெரிஞ்ச பெடியன் ஒருத்தன் ஊருக்குள் முதன்முதல் புதிசாக இறக்கி இருந்தான்....அது எழுப்பிய இரைச்சல் அழகிய ஒரு ரியூனிங்காக இருந்தது வாசிகசாலையில் குந்தியிருந்த எனதும் நண்பனதும் காதுகளுக்கு...அப்பொழுது ஆளையால் பார்த்தபார்வைகளிலேயே முடிவெடுத்தோம்..வாசிகசாலை டியூட்டி முடித்து அவரவர் வீடுகளுக்கு நுழைந்ததும் அர்ச்சனையை ஆரம்பித்திருந்தோம்...அடித்து அடித்து அம்மியையும் நகர்த்தலாம் என்பது உண்மையோ இல்லையோ நச்சரித்து நச்சரித்து வீட்டுக்காறரின் மனதை மாற்றலாம் என்பது  எங்கள் இருவரதும் வாழ்வில் பலவிடயங்களில் நிரூபணமாகி இருக்கிறது...அதிலொன்றுதான் இந்த கீறோ கொண்டா சீன்...
 
வாசிகசாலையில் இருந்து ஆளையாள் பார்த்த கணத்தில் எடுத்தமுடிவு செயலாக சிலநாட்கள் ஆகியிருந்தாலும் அதுகடைசியில் நடந்தே விட்டது..ஆம் மோட்டர்பைக் கடைசியில் இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கும் திருமணம்போல் கடைசியில் இரண்டு வீட்டிலும் காட்டப்பட்ட பச்சை சிக்னலால் எடுப்பதாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது...
 
முதல் நாள் இரவு முழுக்க எனக்கு நித்திரை வருகுதே இல்லை..தலைமாட்டில் வைத்திருந்த கசியோ மணிக்கூட்டில் அடிக்கடி நேரம் பாத்துவிட்டு குப்பிறபடுப்பதும் பின் எழுந்து மீண்டும் நேரம் பார்ப்பதுமாக அந்த இரவு அகாலமரணமடைந்துகொண்டிருந்தது...கடைசியில் விடிந்தே விட்டது தெரியாமல் விடியும் நேரத்தில்தான் நித்திரையாகி அந்த இரவு முழுவதும் தூங்காமல் இருந்த என் உழைப்பெல்லாத்தையும் வீணாக்கிவிட்டிருந்தேன்..
 
இதைவிட பெரியகாமடி என் நண்பண் வீட்டில் நிகழ்ந்திருந்தது..என்வீட்டில் நான் மட்டும்தான் தூங்கவில்லை..ஆனால் அவன் வீட்டில் அவனுடன் சேர்ந்து பாவம் இன்னொரு வயதான சீவனும் தூங்கவில்லை..அம்மாச்சியை அவன் அன்று இரவுமுழுக்க தூங்கவிடவில்லை..(அம்மாச்சி அவனோட அம்மம்மா..) அன்று இரவுமுழுக்க அவன் அலப்பறை தாங்கமுடியாமல் தூங்காமல் இருந்த அந்த வயதான ஜீவனின் கண்கள் அடுத்த நாள் பெரிதாக வீங்கிப்போக சலரோக வருத்தம் இருந்த அம்மாச்சியை விடியவெள்ளனவே வைத்தியசாலை கொண்டுபோய்விட்டிருந்தார் இவனது தந்தை..
 
நாங்கள் இருவரும் இவை எவற்றைப்பற்றியும் கவலைப்படாமல் நித்திரையாலை எழும்பினவுடன்(விடியக்காலமை தூங்கிப்போன என்னை மாடு என்று திட்டியபடி போனடித்து எழுப்பியவன் நண்பனே..)குளித்து திருநீறு பூசி துளசிக்கு செம்பிலை தண்ணியும் பூவும் கொண்டுபோய் ஊத்திக்கும்பிட்டுவிட்டு பக்திப்பழங்களாய் விடியக்காலமையே பஸ்பிடித்து கிளம்பி விட்டிருந்தோம் யாழ் நகரத்துக்கு..மடியிலை இரண்டுபேரிடமும் கத்தைகத்தையாய் வீட்டிலை மோட்டர்பைக் வாங்க தந்த பணம்..எவனாவது ஆட்டையைப்போட்டுவிடுவானோ என்ற பயத்திலை இருவரும் வேகமாய் பஸ்ஸின் பின்சீற்றில் ஒருமூலையில் போய் உடகார்ந்துகொண்டோம்..
 
பஸ் கைதடிப்பிள்ளையாரைக் கடந்தபோது யன்னலோரம் இருந்து பிள்ளையாரை பார்த்து போறகாரியம் வெற்றியாக முடியவேண்டும் என்று கையெடுத்துக்கும்பிட நினைத்தாலும் பஸ்ஸிற்குள் பெட்டையள் இருந்ததால் அந்த முடிவை செயலாக்காமல் மனதுக்குள்ளையே கும்பிட்டுவிட்டு கம்முன்னு இருந்தோம்..வழமையாக கைதடிப்பிள்ளையாரை கடக்கும்போது பஸ்ஸை நிறுத்தும் டிரைவர் அன்று கோயிலுக்கு கிட்டவந்ததும் கியறை மாத்தி இன்னும் கொஞ்சம் வேகமாக இழுத்துக்கொண்டுபோனமாதிரி இருந்தது..வீட்டில் மனிசிக்காறியுடன் சண்டைபோல...
 
ஒருமாதிரி காசை மடியில கட்டிக்கொண்டு யாழ்நகரை பயத்திலையே நேரம்போனது தெரியாமல் வந்து சேர்ந்திருந்தம்...கடைக்குள்ளபோனதும் கலர்கலராக அடுக்கி இருந்த மோட்டர்பைக்குகள் நடுவில் TVS விக்டரை மட்டுமே கண்களால் துளாவி நிண்ட எல்லா மோட்டர்பைக்கையும் நாலைஞ்சுதரம் தடவிப்பார்த்து பல கட்ட பரிசோதனைகளின் பின் ஆளாளுக்கு ஒவ்வொரு TVS விக்டரை செலக்ட் பண்ணி பதிவெல்லாம் முடிச்சு காசைக்கட்டி விட்டு புதிசாக்கட்டின பொண்டாட்டிமாதிரி தள்ளிக்கொண்டு வீதிக்கு வந்து சேர்ந்தோம்..
 
வடிவாய் ஒருக்கா சீற்றை தடவி விட்டு ஏறிஉட்கார்ந்து ஸ்டாட் பண்ணிணதும் இருவருக்கும் பெருமை பிடிபடவில்லை..நேர பெற்றொல் நிரப்பும் இடத்துக்கு விட்டு டாங்புல்லா பெற்றோல் அடிச்சுக்கொன்டு ஜாம் ஜாம் எண்டு கண்டி வீதியால பறந்து வந்தபொழுது கனவுலகில் மிதப்பது போலிருந்தது...பள்ளிக்கூடம் படிக்கிற வயசிலை உனக்கு மோட்டர்பைக்கேக்குதோ என்று வீட்டில் வாங்கிய வசவுகள் எல்லாம் மோட்டார்பைக்கில் பறந்துகொண்டிருந்த அந்தகணத்தில் தேனாக இனித்தன..மோட்டார்பைக்குடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது எனக்கு தெரியவில்லை எனது நண்பன் விரைவிலேயே ஒரு வில்லங்கத்துடன் வரப்போகிறான் என்று..
 
மோட்டர்பைக் வாங்கி ஒரு மாதத்திலேயே ஒரு லவ்வையும் வாங்கி இருந்தான் எனது நண்பன்..அவன் லவ்வை வாங்கி இருந்தால் பருவாயில்லை..கூடவே எனக்கு பாட்ரைம் சம்பளமில்லா வேலையும் தந்து அசத்திவிட்டிருந்தான்... 
 
அவன் லவ் பண்ணுற பெட்டைவிட்டுக்கு பின்னாலை ஒருகாணிக்குள்ள சின்னக் கோவில் ஒன்று இருந்தது..ஒரு பெட்றூம் வீடளவு இருந்த அந்தக்கோவிலுக்குள்ளை இரவு ஊரே உறங்கினாப்பிறகு இவன் பெட்டையை சந்திக்கும்போது அதன் பின்னாலை இருந்த தண்ணியில்லா தீர்த்தக் கேணிக்குள்ளை இறங்கி மறைஞ்சிருந்துகொண்டு இவர்களுக்கு நான் தான் காவல் இருக்கவேணும்..
 
முதல் இரண்டு நாள் கொலை நடுக்கத்துடன் போனது எனக்கு..ஆனால் பிரச்சினை எதுவும் வரவில்லை..அதனால் மனதில் கொஞ்சம் தைரியம் வந்திருந்தது..கிழமைக்கு ஒருதடவை அல்லது இருதடவை இவர்கள் சந்திப்பார்கள்..இவனது தகப்பன் சரியான சந்தேகப்பிராணி.. வீட்டில் இருந்து அந்தாளின் கண்ணில் படாமல் இரவு அவளை சந்திக்கபோவது என்பது பகல்கனவு..இவன் தகப்பனின் கண்ணில் இருந்து தப்ப ஒரு ரெக்னிக் பண்ணுவான்..எங்களுக்கு வடமராட்சி மணல்காட்டுக்கு கிட்ட ஒரு நண்பன் இருந்தான்..அது இவனது தகப்பனுக்கும் தெரியும்..எங்கள் இருவரது வீட்டுக்கும் அவன் வருவதுண்டு..அவன் வீட்டுக்கு போவதாகவும் அங்க நின்றுவிட்டு அடுத்த்நாள்தான் வருவேன் என்றும் இவன் வீட்டில் சொல்லிவிட்டு அரிச்சந்திரன்வீட்டுக்கு பக்கத்துவீட்டு பாலகன்போல் அவ்வளவு நல்லபிள்ளையாக வீட்டிலிருந்து கிளம்புவான்..
 
வீட்டிலிருந்து இருவரும் மோட்டர்பைக்கில் மாலை கிளம்பி வடமராட்சி போவம்..நண்பண் வீட்டுக்கு போனால் அவனையும் கூட்டிகொண்டு மணல்காடு கடற்கரைக்குபோவம்..அங்கு கடற்கரையில் சரசரவென்று இரைந்துகொண்டிருக்கும் சவுக்கமரங்களின் சத்ததை கேட்டபடி சுத்தமான கடற்காத்தை வாங்கியவாறு நேரம்போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அல்லது மண்ணுக்குள் புதைந்திருக்கும் நாவல்மரங்களில் மணலில் ஏறி நின்று நாவல்பழம் பிடுங்கி சாப்பிட்டுவிட்டு ஒரு ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவோம்..
 
நண்பன் வீட்டுக்கு போகாவிடில் பருத்திதுறை அல்லது நெல்லியடி என்று சுற்றிவிட்டு வீடு திரும்புவோம்..இங்கு நான் வீடென்று சொல்லுவது நண்பனின் வீடல்ல..எனது வீட்டை..இருவரும் எனது வீட்டுக்கே போவோம்..வீட்டுக்கு போகமுன்னம் எங்கட ரவுனுக்கை இருந்த பேமசான கொத்துக்கடைக்குள் ஒதுங்காமல் வீட்டுக்கு போகமாட்டம்...இதனால் இருவரும் வீட்டில் சாப்பிடமால் அம்மாவிடம் திட்டுவாங்குவது வழமை...
 
ஊருக்குள் நுழையும்போது நாங்கள் ஒரு ரெக்னிக் செய்வம்..எனது வீடும் நண்பனது வீடும் ஓரளவு கிட்ட இருந்ததால் எங்களது மோட்டர்பைக் இரையும் சத்தம் கேட்டாலே இவனது அப்பாவிடம் நாங்கள் மாட்டுப்பட்டுவிடுவம்..அந்தாள் எங்கடை மோட்டர்பைக் சத்தத்தை வைத்தே தொலைவில் வரும்போதே நாங்கள்தான் வருகிறோம் என்று கண்டுபிடித்துவிடுவார்..அதனால் ஊருக்குள் நுழையும்போதே இருவரது மோட்டர்பைக்கினது கெட்லைட்டையும் அணைத்துவிட்டு உச்சவேகத்தில் ஓடி வந்து வீட்டுக்கு கிட்டவந்ததும் எஞ்சினை ஓf பண்ணிவிட்டு கிளைச்சைப் பிடித்துக்கொண்டு வந்தவேகத்திலயே வீடுவரைக்கும் போய் சேர்ந்துவிடுவம்...
 
இப்படி வந்த ஒரு நாள் ஒரு சோகசம்பவம் நிகழ்ந்திருந்தது எமக்கு..எங்கடை வீட்டில் இருந்து ஒரு நாலைந்து வீடு தள்ளி இருந்த ஒருவீட்டில் வடிவான் இளம் பெட்டை ஒருத்தி இருந்தவள்...பெடியன் ஒருத்தன் அவளை விரும்பித்திரிஞ்சவன்..எங்கடை கெட்ட நேரம்..நாங்கள் மோட்டர்பைக்கை ஓf பண்னிட்டு வந்த ஒருநாள் பார்த்து அவன் அந்த பெட்டையை வீடுவரை மோட்டார்பைக்கில் திரத்திக்கொண்டு வந்திருக்கிறான்..பெட்டையும் விழுந்தடிச்சு ஓடிவந்து வீட்டை சொல்லி அழுதிருக்கு..வேகமாய் வரும் நாங்கள் கணக்காய் அந்த பெட்டைவீட்டு வாசல்ல எஞ்சினை ஓf பண்னினால்தான் அந்தவேகத்திலை வீட்டை போய் சேருவம்..வழமை போல அண்டைக்கும் அந்தவீட்டு வாசல்லை எஞ்சினை ஓf பண்ண பெட்டையின்ர வீட்டுக்காரர் அந்தப்பெடியன் தான் திரும்பவும் வந்திருக்கிறான் என்று நினைத்து கும்பலாக எங்களை வீடுவரை துரத்தி வந்தார்கள்..ஊர் நாய் எல்லாம் விழுந்தடிச்சு குரைக்குது சனசந்தடியால்..அவிட்டு விட்ட அவங்கடவீட்டு நாய் வேறை அவங்களைவிட வேகமாய் எங்களை துரத்திவருகுது...கடிச்சால் காலில்தான் கடிக்கமுடியும்...அதாலை நான் காலைத்தூக்கி ராங்கில் வச்சிட்டன்..வீட்டுவாசலில் வைத்து எங்கள் மூஞ்சைக்கு டோச் அடித்துபார்த்தபிறகுதான் கூட்டமே திரும்பிபோனது...அன்று எனது நண்பனால் நிகழவிருந்த பெருங்கண்டம் ஒன்றில் இருந்து அதிர்ஸ்டவசமாக தப்பி இருந்தாலும் பின்னாடி இன்னும் பல கண்டங்கள் அவனால் எனக்கு காத்திருந்தன..
 
(அடுத்த பாகத்தில மிச்ச கண்டங்களைப்பற்றி எழுதுறன்..)
 
 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகளில் தான் வாழ்கிறோம், என்று சுபேஸ் அடிக்கடி சொல்லுவதைப் பற்றிப் பல தடவைகள் நினைத்துப் பார்த்திருக்கிறேன்!

 

இன்று தான் புரிகின்றது, நினைவுகளிலும் வாழ முடியும் என்று!

 

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்றேன்! :lol:

தொடருங்கள்....காதலிச்சால் கட்டாயம் இரவில் சந்திக்கனுமா, இப்படிதான் பலர்? ஒரு பார்வை / கடிதம் போதாதா? அப்படி என்னதான் செய்கின்றாங்க இரவில்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
தொடருங்கள்....காதலிச்சால் கட்டாயம் இரவில் சந்திக்கனுமா, இப்படிதான் பலர்? ஒரு பார்வை / கடிதம் போதாதா? அப்படி என்னதான் செய்கின்றாங்க இரவில்? :rolleyes:

 

வயது வந்தவர்களுக்கு  மட்டும் 

இவன் பெட்டையை சந்திக்கும்போது அதன் பின்னாலை இருந்த தண்ணியில்லா தீர்த்தக் கேணிக்குள்ளை இறங்கி மறைஞ்சிருந்துகொண்டு இவர்களுக்கு நான் தான் காவல் இருக்கவேணும்..

 

டோட்டலி உம்மை விளக்கு பிடிக்க பாவிச்சிருக்கிறார் உம்மடை கூட்டாளி :lol:  :lol: .  என்ன தில் இருக்கவேணும்  அவருக்கு  <_<  <_< ??  சத்தான நினைவு மீட்டலுக்கு எனது பாராட்டுகள் தம்பி சுபேஸ் :) :) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி பைக்கில் போய் அடிவாங்கின கதையை இன்னொருத்தரும் எழுதியிருந்தாரே??  :D  யாரவர்? :rolleyes: மறந்துபோச்சு..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களாவது பைக் பருவால்ல .... சுண்டல் சைக்கிள் தாவடி ல இருந்த அந்த பொண்ணோட வீட்டுக்கு முன்னாலா அப்பிடியே பெல் அடிச்சிட்டு போக அவங்க வீடு நாய் திரத்திட்டு வந்திச்சு பாருங்க சுண்டல் நேர வேலிக்க..... சுண்டல வந்து தூக்கி விட்டதே அவங்க அப்பா தான் ஏன் தம்பியவை பாத்து சைக்கிள் ஒடக்கூடதோ எண்டு கேக்க யோவ் நாங்க பாத்து ஓடுறது இருக்கட்டும் முதல்ல உங்க நாய பிடியா எண்டு சொல்ல வந்திச்சு பட் சொல்லேல்ல ஆனா ஒண்டு புரிது ஊர்ல பொண்ணுங்களோட அப்பா மார் எல்லாம் நாய வளக்குறது இதுக்கு தான் எண்டு.....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை அப்படியே மீண்டும் பழைய ஞாபகங்களைக் கிழறியுள்ளது..

"ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்ஸ்".. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
ஒவ்வொருவரும் ஊருப்பட்ட கதைகள் தங்களுக்கு பின்னால் வைத்திருக்கினம் எனக்குத் தான் ஒன்றுமில்லை...எழுதுங்கள் சுபேஸ் வாசிக்க ஆவலாய் உள்ளேன் :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்
ஒவ்வொருவரும் ஊருப்பட்ட கதைகள் தங்களுக்கு பின்னால் வைத்திருக்கினம் எனக்குத் தான் ஒன்றுமில்லை...எழுதுங்கள் சுபேஸ் வாசிக்க ஆவலாய் உள்ளேன் :lol:
 

 

உங்க வீட்டு நாய் ஒருத்தரையும் கலைக்கேல்லியா  .....அதுசரி ஒரு உறைக்குள்ள ரெண்டு வாள்  இருக்ககூடாது தானே  :D

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வை நேரில் காட்டுகிறீர்கள் சுபேஸ். தொடருங்கள் வாசிக்கக் காத்திருக்கிறோம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் எங்கையப்பா மிச்சம்.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கதை சூப்பர் மச்சி. 2002 - 2006 சமாதான காலத்தில் பல வீடுகளில் மோட்டார் சைக்கில் கேட்டு போராட்டம் தொடங்கியிருந்தது. நான் A/L முடிக்கும் வரை அப்பாவின் Yamha RX100. சோதினை முடிஞ்ச அடுத்தநாளே அப்பாவோட யாழ்ப்பாணம் இரத்தின கோபால்சுக்கு (Hero Honda Dealer) போய் ஒரு CBZ வாங்கினேன். சொந்தக்காசிலே வாங்கினபடியால அவளவு போராட்டம் நடத்த தேவை இருக்கவில்லை. Victor TVS கம்பனி சைக்கிள் மச்சி. யாழ்ப்பாணத்தில யசோ மோட்டோர்ஸ் தான் TVS & Bajaj dealer. நண்பர்களும் ஆளுக்கொரு மோட்டார் சைக்கில் வச்சிருந்ததால விதம் விதமா மாத்தி மாத்தி ஓடினோம். தொடர்ச்சியை கெதியில எதிர்பார்க்கிறோம்.

 

நண்பனே இல்லாவிட்டாலும்  பரவாயில்ல காதலிக்கிறவனுக்கு நண்பனா மட்டும் இருந்துவிடக்கூடாது. அவன்ர குடும்பம் முதல் ஊர் சனம் வரை அவனை எதோ உத்தமன் போலவும்,பழுதாக்கியது நாங்கள் தான் என்பதுபோலவும் எத்தனை கதைகளை கொட்டி திட்டுங்கள்.இடையில அவன்ர பேட்டை வேற அண்ணா உங்களைதான் நம்பி இருக்கிறன் என்று எல்லாத்தையும் கழுவி ஊத்திவிடும்.ம்ம்ம்ம்  ஓடுங்கோ ஓடுங்கோ நல்ல வேகமா ஓடுங்கோ எல்லா உண்மைகளையும் சொல்லிக்கொண்டு ஓடுங்கோ நாங்களும் வாறம் 

கதை நல்லாய் இருக்கு சுபேஸ். மிகுதியை கெதியாய் எழுதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபேஷ் இது கதையல்ல.உண்மை .நண்பன் காதலித்தது இருக்கட்டும் உங்கள் காதல் என்னாச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.