Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா கோபம் : நடுங்கிய விருதுக்குழு

Featured Replies

ilaiaraja.jpg

எவ்வளவு உயரிய விருதுகள் கொடுத்தாலும் அதற்காக ஒரேயடியாக சந்தோஷப்படுகிறவர் அல்ல இசைஞானி இளையராஜா.

என் வேலை இசையமைப்பது மட்டும்தான். இசையின் பெருமையை விருதுகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்று நம்புகிறவர் அவர். அப்படிப்பட்டவருக்கு நேர்ந்த அதிர்ச்சிதான் இனிமேல் நீங்கள் படிக்கவிருப்பது.

புத்தாண்டை ஒட்டி பல்வேறு தனியார் அமைப்புகள் சினிமாக்காரர்களுக்கு ஏதாவது ஒரு விருதை கொடுத்து கவுரவிப்பது வழக்கம். அப்படி ஒரு விழாவுக்கு இளையராஜாவை அழைத்தார் சினிமா பிரபலங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர். ஐயா... நீங்க நேர்ல வந்து இந்த விருதுகளை உங்க கையால கொடுத்தா அவங்க சந்தோஷப்படுவாங்க என்றாராம் இளையராஜாவிடம். இதை நம்பி சம்பந்தப்பட்ட விழாவுக்கு போய்விட்டார் அவர். அதன்பிறகு நடந்ததுதான் ரகளை. போன இடத்தில் இளையராஜாவுக்கும் ஒரு விருதை அறிவித்துவிட்டார்கள்.

தம்பி என்னை என்ன சொல்லி அழைச்சிட்டு வந்தீங்க? விருது கிடைக்கும்னு அலையுறவனா நான்? வளர்ற கலைஞர்களுக்கு உங்க கையால விருது கொடுங்கன்னு கேட்டுக்கிட்டதாலதான் நான் இங்க வந்தேன். வந்த இடத்தில் எனக்கும் ஒரு விருதை போனா போவுதுன்னு கொடுக்கிறீங்களா, அல்லது இந்த விருதை நான் வாங்கிட்டு போய் பாதுகாக்கிற அளவுக்கு உங்க விருது பெருமைக்குரியதா... சொல்லுங்க என்று அழைத்துப்போனவரை எகிற ஆரம்பித்துவிட்டார்.

விழாவை வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அதைவிட நடுக்கத்தோடு நின்றிருந்தார் விழாவுக்கு ராஜாவை அழைத்துச் சென்றவர். யார் செய்தது சரி? வாசகர்களாகிய நீங்களே சொல்லுங்களேன்..

http://www.4tamilmedia.com/cinema/cinenews/10916-2013-01-05-14-23-46

  • Replies 71
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் விருது கொடுக்கப் போகிறோம் என்று முன்னமே சொல்வதுதானே முறை? :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரேயடியாக சொல்ல முடியாது 

இளையராஜா இசை ஞானியாக இருக்கலாம் ஆனால் அவருக்கு மண்டைக்கர்வம் ரொம்பவே அதிகம் 

உதாரணம்: A.R ரஹ்மான் இவளவு சிறிய காலத்திலே இவளவு உச்சிக்கு போனதற்கு காரணம் அவரின் குணம் 

இளையராஜா எவ்வளவு திறமை இருந்தும் இந்த அளவுக்கு சாதிக்காததற்கு காரணம் அவரின் மண்டை கர்வம் 

ரஹ்மான் எப்போதும் புதியவர்களுக்கு வாய்ப்புகொடுக்கும் ஒரு புதுமைவாதி அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் ஏராளம் 

ஆனால் இளையராஜா விரைவில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார் அதற்கு அவர் சொல்லும் காரணம் 

நான் கஷ்ட்டப்பட்டு தான் முன்னேறினேன் அதைபோல் அவர்களும் கஷ்ட்டப்படட்டும் என்பது 

இப்படியானவர் தான் நம் இசை ஞானி .....இல்லாவிட்டால் பாடகர் ஹரிஹரன் எப்போதோ  தமிழ் படங்களில் பாடியிருப்பார் 

AtonK..

இது வழக்கமாக எல்லோரும் சொல்லுற குற்றச்சாட்டுக்கள்தான்.  :D

திறமை நிறைந்தவர்களுக்கு தலைக்கனம் வருவது இயல்புதான். மேற்கத்தைய இசை வல்லுனர்களிடமும் இந்த இயல்புகள் உண்டு.

இசையில் பரவாயில்லை என்கிற ஒரு நிலை இல்லை. சுருதி சுத்தம், தாள நேரக்கட்டுக்கள் எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாதவை.

இளையராஜாவின் காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. பாடகர்கள் சுருதி சுத்தம் இல்லாமல் ஒரு இடத்தில்தன்னும் பாடிவிட்டார் நகைப்புக்கு இடமாகிவிடும். புதியவர்களை அறிமுகப்படுத்துவதில் உள்ள சிக்க இங்கேதான் ஆரம்பமாகிறது.

இளையராஜா மட்டுமல்ல.. எம்.எஸ்.வி காலத்தில்கூட அதிகமான புதிய பாடகர்கள் அறிமுகமாகவில்லை. அதற்கும் காரணம் மேற்கூறியதே..

இக்காலத்தில் நான்கூடப் பாடலாம்.. :D சுருதியை மென்பொருளில் சரிசெய்துவிடுவார்கள்..! என்ன.. கொஞ்சம் அதிகப்படியான வேலையாக இருக்கும்.. :D

ரகுமான் முதற்கொண்டு இப்போது பலர் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவதன் சூட்சுமம் இதுவே..

அதுமட்டுமல்லாது, பாடகர்களை விதம்விதமாகப் பாடச்சொல்லி பதிவு பண்ணி வைத்துக் கொள்கிறார்கள். புகழ்பெற்ற கிட்டார் பிளேயர்களைக் கூப்பிட்டு இந்தப் பாடலின் பின்னணியை இசைத்துத் தாருங்கள் என்று கேட்கிறார்கள். :rolleyes: பிற்பாடு, எடிட்டிங் செய்து ஒரு பாடலை உருவாக்குகிறார்கள்.. அண்ணளவாக இரு வாரங்கள் பிடிக்கிறது ஒரு பாடலை உருவாக்குவதற்கு. இக்கணத்தில் இளையராஜா அன்றும் இன்றும் எடுத்துக் கொள்ளும் அரை நாள் ஒரு பாடலுக்கு என்பது சிந்திக்கத் தூண்டுகிறது அல்லவா?? :D

ஆக, ரகுமான் காலத்தில் இருந்து இசையமைப்பு என்பது ஒரு கூட்டுப் பணி.. உதாரணமாக,

கல்லூரி சாலை என்கிற பாடலில் வரும் பின்னணி கிட்டார் இசையை உருவாக்கி, வாசித்தது எல்லாம் பிரசன்னா.. ஆனால் பாடலின் இசை ரகுமான் என்று இருக்கும்.

சீனாத்தானா பாடலில் வரும் பிரபலமான வீணை இசையை உருவாக்கி வாசித்தவர் ராஜேஷ் வைத்யா.. ஆனால் இசை மற்றொருவர் என்று டைட்டிலில் வரும்.. :D

எம். எஸ்.வி, இளையராஜா காலங்களில் அப்படியல்ல..

:rolleyes:

இளையராஜாவின் இசை விருதுகளுக்கு அப்பாற்பட்டது; இளையராஜாவின் பெயரில் மற்றவர்களுக்கு விருது கொடுப்பது தான் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

திறமைகள் இருப்பவ்களை  கர்வமுள்ளோர் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள்.  இதில் சிலர் விதிவிலக்காக  இருக்கலாம்.

ஆனால் எல்லோருக்கும் கொடுக்கும்போது இவருக்கு கொடுக்காமல் விடுவது சரியல்ல  என்றும் சம்பந்தப்பட்டவர் யோசித்திருக்கலாம்.

அத்துடன் இசையானி  அமைதியானவர்

இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை  உபயோகிப்பவரல்ல.  நம்பும்படியாக இல்லை.

அத்துடன் இதற்குள் இவருக்கு மன்னரான அல்லது பின்னரானவர்களை ஒன்றுபடுத்தி  பேசுவதும சரியல்ல.

ஒவ்வொருவரும் அந்தந்த கால மன்னர்கள்தான்.

விசுகு அண்ணா.. நான் ஒப்பிட்டதற்குக் காரணம் முந்தைய Atonk இன் பதிவே.. அதில் உள்ள ஒப்பீட்டிற்குப் பதில் எழுத வேண்டி வந்துவிட்டது.

மற்றும்படி, வீட்டில் அம்மாவின் சமையலையும், மக்டானல்ட்ஸ் சாப்பாட்டையும் ஒப்பிடுவது சரியல்ல என்பது தெரிந்ததே.. :D

இசை, ஒருவரை புகழ்ந்து பேசும் போது இன்னொருத்தரை மட்டம் தட்ட கூடாது! :rolleyes: அது ஒரு நல்ல கருத்தாளனுக்கு அழகல்ல! இசை மாமேதை இசைஞானி இருக்கும் போதே ஒருவன் அவரை விட கூடுதலாக மக்கள் மனதை ஈர்த்து இருகிறார் என்றால்...! அது றஹ்மானின் திறமையே... றஹ்மானின் 46வது பிறந்தநாள் இன்று, அவருக்கு என் வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி இளையராஜா உருவாக்கிய சிம்பொனியை அவர் வெளியிடவில்லை என்றும் அதற்கான காரணம் அந்த சிம்பொனி இசையைப் பற்றி பலர் சிலாகித்திருந்தாலும் (சிலர் விமர்சித்திருந்தார்கள்) ஏதோ குறை இருப்பதாக இசைஞானி கருதுவதே என்றும் இசையில் தேர்ச்சி பெற்ற எனது நண்பர் ஒருவர் சொன்னார்.

இசைஞானி 26 வயதில் பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்தபோது சங்கீதத்தை முறையாகப் பழகியிருக்கவில்லை. ஆனால் குறுகிய காலத்தில் எல்லா வகையான (மேற்கத்திய, கிழக்கத்திய) இசைகளையும் அவற்றுக்கான தேர்ந்த குருமார்களிடம் இருந்து கற்று அவற்றில் நிபுணராக திகழ்கின்றார். அத்தோடு பாடல்களுக்கு இசை அமைக்கும்போது நுண்ணிய விபரங்களை எல்லாம் கவனித்து வாத்தியக் குழுவைவையும் பாடகர்களையும் அட்சரம் பிசகாமல் தான் விரும்பியவாறே பாடலை உருவாக்கப் பணிப்பார்.  இது இளையராஜாவின் அர்ப்பணிப்பைத்தான் காட்டுகின்றது. அதைத் தவறாக பலர் தலைக்கனம் என்று சொல்லுகின்றார்கள். அத்தோடு தனது இசையைத் தான் உருவாக்குவதில்லை, கடவுள் சொல்வதைத் தான் செயற்படுத்துகின்றேன் என்ற அவரது ஆன்மீக பக்கத்தையும் கவனிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
இசை, ஒருவரை புகழ்ந்து பேசும் போது இன்னொருத்தரை மட்டம் தட்ட கூடாது! :rolleyes: அது ஒரு நல்ல கருத்தாளனுக்கு அழகல்ல! இசை மாமேதை இசைஞானி இருக்கும் போதே ஒருவன் அவரை விட கூடுதலாக மக்கள் மனதை ஈர்த்து இருகிறார் என்றால்...! அது றஹ்மானின் திறமையே... றஹ்மானின் 46வது பிறந்தநாள் இன்று, அவருக்கு என் வாழ்த்துக்கள்!

எழுத முன்னம் யோசித்ததுதான் ராஜா.. :D ஆனால் எழுதவேண்டி வந்ததன் காரணம் Atonk இன் பதிவுதானே அன்றி வேறல்ல. அதே சமயத்தில் மனதில் உள்ளதை எழுதாமலும் விட முடியாதுதானே.. :D

சனத்தொகை கூடும்போது, ஊடக வசதிகள் கூடும்போது வீச்சின் எல்லையும் கூடும். பாரதியாரை அவர் வாழ்ந்த காலத்தில் தெரிந்து வைத்திருந்த மக்கள் எண்ணிக்கையைவிட வைரமுத்துவின் வீச்சு அதிகம்தானே..

இசை, இசைஞானி வாழும் காலத்தில் தானே றஹ்மானும் இருக்கிறார்!!!

இசையின் ராசா

நானும் உங்களுக்கு என்று எழுதவில்லை.

பொதுவாகத்தான் எழுதினேன்

இசையின் ராசாவுக்கு இசையை அசைப்பது பிடிக்காது என்று எங்களுக்கும் புரியும் ராசா..... :D

  • கருத்துக்கள உறவுகள்
இசை, இசைஞானி வாழும் காலத்தில் தானே றஹ்மானும் இருக்கிறார்!!!

உண்மைதான்.. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுச்சிக் காலம் உள்ளது. இளையராஜாவின் அந்தக்காலம் முடிந்துவிட்டது. தற்போதைய இளையராஜாவுக்கு ரகுமான் வேண்டாம்.. ஜீ.வி பிரகாஷ்கூட போட்டியில்லை.

இதற்குக் காரணம் மக்கள் ரசனை மாறிக்கொண்டே உள்ளமைதான். அந்த அந்தக்கால இளைஞர்களுக்கு ரசனைகளும் வேறு வடிவில் இருக்கும். இப்போது தமிழகத்திலேயே இட்லி, வடையை விட்டுவிட்டு பீட்சா, பேகர் என்று இருக்கிறார்கள் இளையோர்..

ஆகவே, இது சரி இது பிழை என்று ஒன்றுமில்லை. இளையராஜா எல்லாவற்றையும் தானே செய்பவர். மற்றவர்கள் அப்படி நினைப்பதில்லை. ஒரு கூட்டு முயற்சிபோல் செய்கிறார்கள். இதில் யாருக்கு அதிக பாண்டித்தியம் உள்ளது என்று கேட்டால் இளையராஜாவுக்கே என்பதுதான் உண்மை. ரகுமானே அதைச் சொல்லுவார்.

ரகுமானே அதைச் சொல்லுவார்.

உண்மைதான் இசை :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை :D

அது ரகுமானின் பெருந்தன்மை என்று நான் நினைக்கின்றேன்.

(ஏதோ என்னால் முடிந்தது)

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானிக்கு இவ்வளவு கொழுப்பு கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஒவ்வொரு  விதத்தில் மேதைகள்.நானும் முன்பு சொல்லுவேன் இளையராயா உயிரோட இருக்கும் வரைக்கும் அவர்தான் இளைக்கு ராஜா என்று.ரகுமானுக்கு இசையும் இசை தொழில் நுட்பமும் தெரிந்திருக்குது.ரசனை மாற்றம் என்று பல .இருவரும் மேதைகள்தான் பெருமைகள் எமக்குதானே.

இப்படியான இனிமையான இசையை வழங்கும் மாண்புமிகு இசைஞனி இளையராஜாவை வாதப்பொருளாக மாற்றுவதை வன்மையாய் கண்டிக்கிறேன் .

http://www.youtube.com/watch?v=90Zq1FLdrfE

இசை, ஒருவரை புகழ்ந்து பேசும் போது இன்னொருத்தரை மட்டம் தட்ட கூடாது! :rolleyes: அது ஒரு நல்ல கருத்தாளனுக்கு அழகல்ல! இசை மாமேதை இசைஞானி இருக்கும் போதே ஒருவன் அவரை விட கூடுதலாக மக்கள் மனதை ஈர்த்து இருகிறார் என்றால்...! அது றஹ்மானின் திறமையே... றஹ்மானின் 46வது பிறந்தநாள் இன்று, அவருக்கு என் வாழ்த்துக்கள்!

If I have seen further than others, it is by standing upon the shoulders of giants.

-Isaac Newton

(Using the understanding gained by major thinkers who have gone before in order to make intellectual progress.)

ஒரு தலமுறை போட்ட சாலையில் அடுத்த தலமுறை வேகமாக பயணிக்கமுடியும். அந்த தெளிவு அவர்களுக்கு இருக்கின்றது. இவர்கள் குறித்த எமது புரிதல்கள் எமது இயல்புகளுக்கேற்ப மிக குறுகியதாகவே எப்போதும் இருக்கின்றது. வள்ளலார் வாழ்க்கையில் நாவலர் நுழைந்தது போல் இவ்வாறான தலைப்புகளுக்குள் நுழைந்து எப்போதும் எம்மை நாமே சிறுமைப்படுத்திக்கொள்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரசிகன் ஒரு பூவைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் வாங்கி

அவரை மகிழ்விப்பதே ஒரு கலைஞனின் கொள்கையாக இருக்கவேண்டும்.

விருதை வாங்குவதால் அவரின் தரம் குறைந்துவிடும் என நினைப்பதே தவறு.

மற்றும்படி இளையராஜாவின் இசைக்கு யாரும் கிட்ட நெருங்கமுடியாது :D

தம்பி என்னை என்ன சொல்லி அழைச்சிட்டு வந்தீங்க? விருது கிடைக்கும்னு அலையுறவனா நான்? வளர்ற கலைஞர்களுக்கு உங்க கையால விருது கொடுங்கன்னு கேட்டுக்கிட்டதாலதான் நான் இங்க வந்தேன். வந்த இடத்தில் எனக்கும் ஒரு விருதை போனா போவுதுன்னு கொடுக்கிறீங்களா, அல்லது இந்த விருதை நான் வாங்கிட்டு போய் பாதுகாக்கிற அளவுக்கு உங்க விருது பெருமைக்குரியதா... சொல்லுங்க என்று அழைத்துப்போனவரை எகிற ஆரம்பித்துவிட்டார்.

இங்கு இளையராஜாவுக்கும் விருது தரவுள்ளோம் என்று கூறாமல் அவரை அழைத்து சென்றவரில் பிழை உள்ளது. எனவே இளையராஜாவுக்கு கோபம் வருவது நியாயம். ஆனாலும் அதை தன்மையாக சொல்லியிருக்கலாம். சொன்ன விதத்தில் இளையராஜாவிலும் பிழை உள்ளது.

விருது தரவிருக்கிறோம் என்பதை கூறாமல் என்னை அழைத்தது தவறு. விருது தருவீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன். மற்றவர்களுக்கு விருது வழங்குவதற்காக தான் வந்தேன். எனவே இந்த விருதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது போல் கூறியிருக்கலாம்.

"இந்த விருதை நான் வாங்கிட்டு போய் பாதுகாக்கிற அளவுக்கு உங்க விருது பெருமைக்குரியதா... " என்ற கேள்வியை கேட்டிருக்க கூடாது. பெருமைக்குரிய விருது இல்லை என்று அவர் கருதியிருந்தால் அந்த விருதை மற்றவர்களுக்கு வழங்குவதற்கு கூட அவர் சம்மதம் தெரிவித்திருக்க கூடாது.

எனவே ஒட்டுமொத்தத்தில் இருவரிலும் பிழை உள்ளது.

நான் ரகுமானின் ரசிகை. இளையராஜாவின் பாடல்களிலும் பல பிடிக்கும். கடும் உழைப்பு இளையராஜாவிடம் அதிகம் உள்ளது. மற்றவர்களுடன் நல்லபடி பழகும் முறை ரகுமானிடம் அதிகம் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தத்தில்  இளையராஜாவை விழுத்த என்று கொண்டுவரப்பட்டவர்  ஏ ஆர் ரகுமான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிரத்தினத்தின் முக்கிய பங்கு சொல்லி வேலையில்லை....மிண்டு குடுத்தவர் பாலச்சந்தர்......இளையராஜயாவினது வேலைப்பழுவின் சூழ்நிலை தெரியாமல் சூட்சி வேலை செய்தவர்கள்.

மொத்தத்தில்  இளையராஜாவை விழுத்த என்று கொண்டுவரப்பட்டவர்  ஏ ஆர் ரகுமான்.

வாவ்...!  என்ன ஒரு இசைஞானம்...!  உங்களை போல் இசை ஞானம் உள்ளவர்கள்  கருத்து களத்தில் இல்லை என்று ஒரு வருத்தம் இருந்தது அதை போக்கீட்டீங்க!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.