Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ

Featured Replies

இது வரை தமிழகத்தில் இல்லாத ஒரு புதிய திட்டமாக சிற்றுண்டி அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது, சுகாதாரமான குறைந்த விலையில் உணவு கிடைக்க வழி செய்யும் நோக்கில் சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி துவங்கப்படுகிறது. இந்த உணவகத்தில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் விற்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


இது தொடர்பான முதல்வர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 

வயிற்றுக்கு சோறிட வேண்டும்: நோயற்ற சமுதாயம் அமைத்திட வேண்டும் என்ற நோக்கில் சத்தான உணவு வழங்கும் பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியாரின் நோக்கத்தின் அடிப்படையில் சென்னையில் மலிவு விலை சிற்றுண்டி அமைக்கப்படுகிறது.

 

 

ஆயிரம் சிற்றுண்டி : @@சென்னையை பொறுத்தவரை தள்ளுவண்டிகாரர்கள், பாரம் தூக்குபவர்கள், கூலி வேலை செய்பவர்கள், மேலும் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலர் சுகாதாரமான உணவு கிடைக்காமலும், செலவு அதிகம் ஆவதாலும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சென்னையில் ஆயிரம் சிற்றுண்டி அமைக்கப்படும். இதில் முதல் கட்டமாக வார்டு ஒன்றுக்கு ஒரு உணவகம் வீதம் 200 கடைகள் திறக்கப்படும்.

 

இங்கு ரூ. 5 க்கு சாம்பார் சாதம் , ரூ. 1க்கு இட்லி, ரூ. 3 க்கு தயிர்சாதம் விற்கப்படும். இதற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாதம்தோறும் 500 மெட்ரிக் டன் அரிசி வழங்கிட ஆணை பிறப்பிக்கப்படுகிறது. சிற்றுண்டி தயாரிக்கும் முறையை மாநகராட்சி நகர்ப்புற அலுவலர்கள் கண்காணிப்பார்கள். இந்த திட்டம் மூலம் சென்னையில் பலரும் பயன் அடைவர் இவ்வாறு இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

 

ஜெ., பொங்கல் வாழ்த்து: @@பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல்வர் ஜெ., வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: தமிழர் திருநாளாம் பொங்கல் நன்நாளில் இல்லம்தோறும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு தமது இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B0%E0%AF%8D-052400275.html

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றோடு புழு பூசிகள் பல்லி பாம்பு போன்றவற்றையும் சாம்பாரில் காண , உண்ண மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.......

  • கருத்துக்கள உறவுகள்
இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ//
 
ஓட்டுபோடுங்க சாமி..ஓட்டு..
 
(கோவை சரளாஸ்ரைல்ல கூவிப்பாருங்க...பொருத்தம் ப்ரம்மாதமாய் இருக்கும் :D)

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இலவசத்தை சிலர் எதிர்ப்பதால்.. தற்போதைய சீசன்.. மலிவுவிலை.. :D

  • தொடங்கியவர்

ஒரு பணக்கார நாடான இங்கிலாந்தில் இப்படி நடக்கின்றது

--------------------------------------------------------------------------------------

 

லண்டன் மாணவர்களுக்கு இலவச காலை உணவு

 

லண்டனில் உள்ள பள்ளிகளில், ஏழை மாணவர்கள், காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருவதை, மேயர் கண்டுபிடித்தார். தற்போது அவர்களுக்கு, இலவச காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.லண்டனில், 5,000க்கும் அதிகமான ஏழை மாணவர்கள், காலை உணவு சாப்பிடாமல், பட்டினியுடன்,பள்ளிக்கு வருகின்றனர்.


இதை கண்டுபிடித்த ஆசிரியர்கள் பலர், இந்த மாணவர்களுக்காக, தினமும், வீட்டிலிருந்து கூடுதலான உணவை எடுத்து வந்து, இவர்களுக்கு வழங்கி வந்தனர்.விஷயத்தை கேள்விப்பட்ட லண்டன் மேயர், போரிஸ் ஜான்சன், அறக்கட்டளையிலிருந்து, 6 கோடி ரூபாயை, மாணவர்களின் காலை உணவு திட்டத்துக்காக வழங்கியுள்ளார்.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 95 சதவீத ஆசிரியர்களும், மாணவர்களும் சாப்பிடாமல், பள்ளிக்கு வந்தது, தற்போது தெரிய வந்துள்ளது. மேயர் நிதியுடன், பல்வேறு தொண்டு நிறுவனங்களும், காலை உணவு திட்டத்துக்கு, நிதி அளிக்க முன்வந்துள்ளன.

 

http://tamil.yahoo.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%A3%E0%AE%B5-183500589.html

  • கருத்துக்கள உறவுகள்

தரம் உயர வைக்காது தரம் குறைய வைக்கும் அவர்களும் மலிவு விலையில் கொடுக்க வேண்டி வரும் ஆகவே பல கலப்படங்கள் செய்து பல்வேறு தில்லு முல்லுகள் செய்து உணவை மலிவாக விற்க முற்படுவார்கள்

  • தொடங்கியவர்

இட்லி இலவசம் ; சாம்பார் சாதம் 1 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; என கருணாநிதி அறிவிக்கவேண்டும்  :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தினமலரில் படத்துடன் ஒரு செய்தி குஞ்சு பொரிக்காத அழுகிய முட்டைகளை அங்குள்ள தாஸ்மாக் என்ற மதுபான சாலைகளுக்கு விற்பதனை

தரம் உயர வைக்காது தரம் குறைய வைக்கும் அவர்களும் மலிவு விலையில் கொடுக்க வேண்டி வரும் ஆகவே பல கலப்படங்கள் செய்து பல்வேறு தில்லு முல்லுகள் செய்து உணவை மலிவாக விற்க முற்படுவார்கள்

 

அப்போது மேலதிக அரச சிற்றுண்டிச்சாலைகளை மக்கள் திறக்க வைப்பார்கள். தனியார் கடைகளுக்கு யாரும் போகாமல் அவை மூடப்படும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  முயற்சி

 

ஆனால் இதனை  நடைமுறைப்படுத்துவது பெரும் சிக்கலானது.

ஒழுங்கான கண்காணிப்பு இல்லாது விட்டால்......

ஊழலும் பதுக்கல்களும் களவும் அதிகாரப்போட்டிகளும் லஞ்சமும்  அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நடுத்தர மக்கள் அரசு நடத்தும் கடைகளுக்கு போக மாட்டார்கள் அவர்கள் எல்லாம் சரவண பவனும் முனியாண்டி விலாசும் தான் அரசு நடத்தும் கடைகளுக்கு ஒரு gf ஆ கூட்டிட்டு போக முடியுமா? அவ நினைப்பா பேசாம ஒரு பிச்சைக்காரன லவ் பண்ணி இருக்கலாம்னு எங்கள மாதிரி யூத் ஓட பிரச்சனைகளையும் புரிஞ்சிக்கிங்க சார் :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டம் மூலம் சென்னையில் பலரும் பயன் அடைவர் ஆமா ஆமா புரட்சித் தலைவரின் சத்துணவு திட்டத்தை சொதப்பினது மாதிரி தான் இதுவும் முடியும் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் அல்லது அவங்கட பினாமிகள் இப்போதே பணம் பண்ண கிளம்பிருப்பாங்ளே.

  • கருத்துக்கள உறவுகள்

ரேசன் கார்டில் வாங்கும் இலவச அரிசியில் இட்லி தோசை சுட்டு விற்றால் விளங்கிடும்.. ஏதாவது கலவரம் நடந்தால்  எறிய கல்லு தேவையில்ல.. இந்த இட்லிகளை வாங்கி ஸ்டாக் வைத்திருந்தால் போதும்...ஆனால் இந்த அரிசி..அதையும் லோடு லோடாக வேற ஸ்டேட்டு ஓட்டல் மார்கள் கடத்தி எல்லாவற்றையும் செய்கிறார்க்ள்.. மேஜிக் செய்கிறார்கள்..என்ன ரெக்கனாலஜி யூஸ் பண்னுகிறர்கள் என்று தான் நமக்கு தெரியல..

டிஸ்கி:

அரிசிக்கு பாலீஸ் போடுங்களாம் பாலீஸ் .. அதாவது இரண்டாம் முறை அரவை இயந்திரத்தில் விடுவது...  எவன் எவனோ வெளிமாநிலத்துகாரன் எல்லாம் சாப்பிடுறான் விடுங்கப்பா...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பணக்கார நாடான இங்கிலாந்தில் இப்படி நடக்கின்றது

--------------------------------------------------------------------------------------

 

லண்டன் மாணவர்களுக்கு இலவச காலை உணவு

 

எனக்கு இதைப்பாக்க இன்னாரு பக்கம் ஞாபகம் வருகுது.ஏழை நாடான இலஙகையிலுருக்கும் போது எம்மவர்கள் மூன்று நேரம் சாப்பிட்டார்கள்.இங்கு பணக்கார நாடுகளுக்கு வந்த பின் காலை உணவு கட்.மற்ற நேரங்களும் ஏனோதானோ  நிலமைதான்.காரனம் அதுவும் பணம் தான் :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் பரிசு அரிசியில் யூரியா : பொதுமக்கள் அதிர்ச்சி

அரூர்: அரூர் அருகே, பொங்கல் பரிசு பொருள் அரிசியில், யூரியா கலந்து வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அரூரை அடுத்த கே.வேட்ரம்பட்டி, கரிபீலப்பட்டி ரேசன் கடைகளில் மொத்தம், 604 ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த, இரு தினங்களாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.கே.வேட்ரம்பட்டி, கரிபீலப்பட்டி ரேஷன் கடைகளில், நேற்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அவர்கள் வழங்கிய பச்சரிசியில், யூரியா கலந்திருந்ததை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வட்ட வழங்கல் அலுவலர் ஜாபர்அலி, ஆர்.டீ.ஓ., காமராஜ், தாசில்தார் குணசேகரன், எம்.எல்.ஏ., டில்லிபாபு ஆகியோர் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று, பொங்கல் பரிசு பொருட்களை பார்வையிட்டனர்."கடந்த, இரண்டு நாட்களாக பொங்கல் பரிசு பொருட்களுடன் வழங்கப்பட்ட பச்சரிசியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்' என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கே.வேட்ரம்பட்டி, கரிபீலப்பட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக வாங்கி பச்சரிசியை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் திருப்பி ஒப்படைக்குமாறு வட்ட வழங்கல் அலுவலர் ஜாபர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dinamalar

மலிவு விலை சாப்பாட்டிலும் இது தான் நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

 அரூர் அருகே, பொங்கல் பரிசு பொருள் அரிசியில், யூரியா கலந்து வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்//

 

 

சத்துக்காணாதென்று அரிசியில் உரம்போட்டு அனுப்பி இருக்கிறார்கள் போல..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை:சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், சலுகை விலை சிற்றுண்டி உணவகங்கள் துவங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

நடப்பு நிதி ஆண்டிற்கான, மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில், மாநகராட்சி சார்பில், 1,000 சலுகை விலை சிற்றுண்டி உணவகங்கள் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. தற்போது, முதல் கட்டமாக, 200 சிற்றுண்டி உணவகங்கள் திறக்கப்பட உள்ளன.

ஒப்பந்த அடிப்படையில்:

இந்த உணவகங்களை நடத்தும் வேலை, ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப் பட உள்ளது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, விரைவில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது. அந்தந்த வார்டுகளிலேயே, உணவகங்கள் அமைக்கப் படுவதோடு, ஒப்பந்தம் எடுப்பவரே பணியாளர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். உணவகங்கள் அமைக்க தேவையான இடங்களை, மாநகராட்சி தேர்வு செய்யும்.அந்த இடத்திற்கான வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளையும், ஒப்பந்ததாரரே மேற்கொள்வார். வரும், 25ம் தேதிக்குள், மாநகராட்சி அதிகாரிகள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, இப்பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஒரு ரூபாய் இட்லி:

சலுகை விலை உணவகங்களில், இட்லி ஒன்று, ஒரு ரூபாய்க்கும்; சாம்பார் சாதம், ஐந்து ரூபாய்க்கும்; தயிர் சாதம், மூன்று ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என, அரசு அறிவித்து உள்ளது.இந்த விலை கட்டுப்படியாவதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், மாதம் தோறும், 500 டன் அரிசி, கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும்.உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மாநகர நல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்படும் என, அரசு தெரிவித்து உள்ளது.

சாத்தியமா?

குறைந்த விலையில் சுகாதாரமான உணவை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் துவங்கப்பட்டாலும், இதை சரிவர செயல்படுத்துவது சாத்தியமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, ஆலந்தூரில், நடைபாதையில் இட்லி கடை நடத்தி வரும், மணிகண்டன் கூறுகையில், ""விற்கும் விலைவாசியில், நான்கு ரூபாய்க்கே இட்லி கொடுப்பது கஷ்டமாக உள்ளது. மாநகராட்சி, ஒரு ருபாய்க்கு இட்லி கொடுப்பது, எத்தனை நாளைக்கு தான் தாக்கு பிடிக்குமோ. இதனால், எங்களுக்கு பாதிப்பு இருக்கத்தான் செய்யும்,'' என்றார்.

சேப்பாக்கத்தில், சிற்றுண்டி கடை வைத்திருக்கும் முத்து கூறுகையில், ""ஒரு ரூபாய்க்கு இட்லி என்பது, சாத்தியம் இல்லாத விஷயம். விலைவாசி அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில், மலிவு விலையில் உணவு வழங்குவதை, அரசு ஏற்று நடத்துவது வேடிக்கையாக உள்ளது,'' என்றார்.

எழும்பூர் பகுதியில், நடைபாதையில் மதிய சாப்பாடு கடை நடத்தி வரும் சுப்புலட்சுமி கூறுகையில், ""விலை குறைத்து சாப்பாடு போட்டாலும், சுவை இருந்தால் தான் மக்கள் சாப்பிடுவர். இல்யையென்றால், "உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்ற பழமொழி போல் தான் மாநகராட்சி உத்தரவு இருக்கும். நான் மீனுடன் சாப்பாடு போடுகிறேன்; மாநகராட்சி போடுமா?'' என்றார்.

விலையை கட்டுப்படுத்தும் வகையில், உணவகங்களுக்கு மலிவு விலை அரிசு வழங்கப்பட்டாலும். மற்ற செலுவுகள் எப்படி சமாளிக்கப்படும் என்பது, கேள்விக்குறியாக உள்ளது.

நியாயமா?

அதே நேரத்தில், திறந்த நிலை பொருளாதார கொள்கையை நாடு பேணி உள்ள நிலையில், சிறிய அளவில் தொழில் செய்து வரும் சாலையோர உணவகங்களின் பிழைப்பை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திட்டம் நியாயமானது தானா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதே போல், மலிவு விலையில் மூலப் பொருட்களை வழங்குவது, போட்டி சட்டத்திற்கு புறம்பானதா என்ற கேள்வியும் எழுகிறது.வார்டு கவுன்சிலர் மற்றும் காவல் நிலையத்திற்கு, மாதம், தலா, 10 ஆயிரம் ரூபாய் வரை கப்பம் கட்டி சாலையோர உணவகம் நடத்தி வரும் உரிமையாளர்களால், இந்த தேவையற்ற போட்டியை சமாளிக்க முடியுமா?

சிங்கப்பூர் தீர்வு!

சுகாதாரமான உணவு கிடைக்க செய்வதற்கு ஏகப்பட்ட வழிகள் உள்ளன. அதில் பிரதானம் கண்காணிப்பு. அண்மையில் தான் இறைச்சி கடை மற்றும் உணவக உரிமங்களே சுகாதார துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இப்படி அடிப்படையே சீராக இல்லாத போது, அரசு உணவக தொழிலில் இறங்குவதில் என்ன பயன்?சிங்கப்பூருக்கே செல்லாமல், அனைத்து விஷயங்களுக்கும் சிங்கப்பூரோடு ஒப்பிட்டு காட்டும் அரசியல்வாதிகளுக்கு, சிங்கப்பூர் தீர்வு தென்படவில்லையா?சிங்கப்பூரில், ஒவ்வொரு பகுதியிலும் இயங்கிவந்த சாலையோர உணவகங்களை ஒருங்கிணைத்து, அந்தந்த பகுதியிலேயே தனி வளாகம் அமைத்து கொடுக்கப்பட்டது. அங்கு அவர்கள் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கின்றனரா என, கண்காணிக்கப் படுகிறது. இதன் மூலம், சிங்கப்பூர் அரசுக்கு, சாலையோர உணவகங்களிடம் இருந்து வரி மற்றும் வாடகை வ‹லிப்பது சுலபமாகிவிட்டது.ஆனால், நம் அரசோ, சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு, சட்டம்-ஒழுங்கு என்ற, பிரதான வேலைகளை விட்டு உணவகம் நடத்துவதில் முனைப்பாக உள்ளது. இதுவும், பல்வேறு தேவையற்ற திட்டங்களை போல் பயனளிக்காமல் போகும் என, சாலையோர உணவக உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Dinamalar

சென்னையில் மட்டும் 1000 உணவகங்கள் , 1000 உணவகங்களில் தின ஆயிரம் இட்லி விற்றால் நாள் ஒன்றுக்கு பாத்து லட்சம் இட்லி விற்கும் ... ஒரு இட்லிக்கு அரசுக்கு அடக்க விலை நாலு ரூபாய் ஆகும் ... எனவே ஒருநாளைக்கு நாற்பது லட்சம் நட்டம் ...இனி சாம்பார் சாதம் , தயிர் சாதம் நட்டம் சேர்த்தால் ஒரு நாளைக்கு ஒருகோடி நட்டம் ...அதாவது சென்னைக்கு மட்டும் வருடத்திற்கு சுமார் 400 கோடி நட்டம் ... தமிழகம் முழுவதும் அமுல் படுத்தினால் ரூபாய் 5000 கோடி நட்டம் ... இதை போக்குவரத்து துறை கடனை , மின்சார வாரிய கடனை , அல்லது வறட்சியால் பாதிக்க பட்ட விவசாயிகளுக்கு கொடுத்தால் தமிழ்நாடு முன்னேறும்... கலையில் 4 ரூபைக்க் நாலு இட்லி , மதியம் ஐந்து ரூபாய்க்கு ஒரு சாம்பார் சாதம் , இரவு மூணு ரூபாய்க்கு ஒரு தாயிற்சாதம் , மொத்தம் 12 ரூபாய் போதும்... மாதம் 360 ரூபாய் போதும் .. அலுவாலியா சொன்னது சரிதான்....ஒரு பயல் வேலை செய்ய மாட்டான்...தமிழகம் ஆண்டி மடமாகி கொண்டுள்ளது...

Thanks to dinamalar

தினமலர் வாசகர் ஒருவர் எழுதியது

Edited by SUNDHAL

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.