Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதிகளுக்கு விரைவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் - இந்தியா நம்புகிறது?

Featured Replies

தமிழர் பகுதிகளுக்கு விரைவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் - இந்தியா நம்புகிறது? [ செவ்வாய்க்கிழமை, 22 சனவரி 2013, 16:18 GMT ] [ அ.எழிலரசன் ]

salman-peries.jpgசமத்துவமான, நீதியான, கௌரவமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு தமிழர்தரப்புடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

அத்துடன் தமிழர் பகுதிகளுக்கு அர்த்தமுள்ள அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

புதுடெல்லியில் இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்துடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். 

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற 8வது கூட்டுக்குழுக் கூட்டத்தில் இந்தியாவும் சிறிலங்காவும் இரட்டை வரிவிதிப்பை தவிர்த்தல், அனைத்துலக தீவிரவாதத்துக்கு எதிரான போர், போதைப்பொருள் தடுப்பு ஆகிய மூன்று உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளன. 

அத்துடன் திருகோணமலையில் சிறப்பு பொருளாதார வலயத்தையும், மருந்துப் பொருள் மற்றும் ஆடைகள் கொத்தணியையும் சிறிலங்காவில் நிறுவவும் இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன. 

மீனவர்களுக்கு எதிராக வன்முறைகளைப் பிரயோகிப்பதில்லை என்றும் இந்தியாவும் சிறிலங்காவும் இணக்கம் கண்டுள்ளன. 

சிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவவுள்ளது. 

அதேவேளை, இன்றைய சந்திப்பின் போது, தமிழர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். 

“எதிர்காலத்தில் சிறிலங்காவில் தமிழ்ச்சமூகம் நீதியாகவும், கௌரவமாகவும், சமத்துவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். 

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மீதிருந்தும், தேசிய நல்லிணக்கத்தின் மூலமும்,அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்று எட்டப்படும் என்று நாம் நம்புகிறோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதனிடையே, அடுத்த மூன்று ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் டொலராக உயர்த்தவும் இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20130122107647

 “எதிர்காலத்தில் சிறிலங்காவில் தமிழ்ச்சமூகம் நீதியாகவும், கௌரவமாகவும், சமத்துவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மீதிருந்தும், தேசிய நல்லிணக்கத்தின் மூலமும்,அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்று எட்டப்படும் என்று நாம் நம்புகிறோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கேப்பிலவு இல்லை சாம்பூர்  மக்கள் தாங்களும் விரைவில் சொந்த நிலங்களில் மீள குடியமர்த்தப்படுவார்கள் என 'நம்புவது' நியாயம்.

ஆனால் ஆசியாவின் இரண்டாவது வல்லரசும் அவ்வாறே 'நம்புவது' மூலம் தமிழர்களை ஏமாற்றுவதே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தொடர்ந்து இதனைத்தான் சொல்லி வருகின்றது ஆனால் இதுவரைக்கும் எதுவும் நடந்த பாடத்தெரியவில்லை ..

  • தொடங்கியவர்

இந்தமுறை யாழ்ப்பாண உபதூதுவர் மகாலிங்கம் தாங்கள் இலங்கையுடன் பெரிய ஒப்பந்தங்கள் செய்துவிட்டதாகத்தான் பேசியிருந்தார். மார்ச்சின் பின் இலங்கை எல்லா ஒப்பந்தங்களையும் கிழிக்கும். ஆனால் அதுவரைக்கு இந்தியாவை அமெரிக்க பிரேரணையை எதிர்க்க இலங்கை பயன்படுத்த திட்டம் போட்டிருக்கிறது. காங்கிரசை தமிழ் நாட்டால் கூட்டித்துடைக்காவிட்டால் இந்தியாவை திருத்த முடியாது. வரும் மத்திய தேர்தல் வரை ஈழத்தமிழர் பாடு பிராச்சனைதான்.

சந்திக்க வேண்டியது. பல விடயங்கள் பேசப்பட்டது, பல விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டது என்று சொல்ல வேண்டியது. பின்னர் மீண்டும் எல்லா உறுதிமொழிகளையும் இலங்கை மீறும்போது வேடிக்கை பார்க்க வேண்டியது.

இது தான் சுழற்சி முறையில் நடக்குது. எவ்வளவு காலம் தான் நம்புகிறோம் நம்புகிறோம் என்று சொல்லுற.

சிலர் இன்னமும் இல்லை நாங்களே எங்களின் தீர்வை எடுப்பம் என்று நிக்கினம் அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கின்றார்கள் போல .

தமிழர்களுக்கு தீர்வோ அதிகாரமோ கையில் கிடைக்க கூடாது என்பதில் இந்தியா இலங்கையை விட உறுதியாக இருக்கிறது... 

  • தொடங்கியவர்
சிலர் இன்னமும் இல்லை நாங்களே எங்களின் தீர்வை எடுப்பம் என்று நிக்கினம் அவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கின்றார்கள் போல .

அதற்கு பிறகு?

சந்தர்ப்பம் கொடுத்த பிறகு இலங்கையை வந்து ஒரு அடியில் அடிக்க இருக்கிறது போலை இந்தியா?

அர்சுனனிடம் இந்தியா நடத்திய இரகசியப் பேச்சு அது. :icon_idea::D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தம்..............................

  • கருத்துக்கள உறவுகள்

செல்வநாயகம் ஐயாவின் கனவில் உதித்த தமிழீழத்துக்கு பிரபாகரனும் போராளிகளும் மக்களும் நிஜ வடிவம் கொடுத்தார்கள். அங்கு உலகின் பூகோள நலனில் இருந்து நாம் கொஞ்சம் மாறுபட்டு.. நீதி தர்மம் என்று நிற்கப் போய் இப்ப அது.. பறியோயிட்டுது. அதனை எந்தப் பூகோள நலனை வைச்சு எங்களிடம் இருந்து தட்டிப்பறித்தார்களோ.. அதே பூகோள நலனை.. வைச்சு.. நாங்களும் ஒரு வலையைப் பின்னி மீட்பதுதான் புத்திசாலித்தனம்.

இந்தியாவை மடக்க.. எமக்கு சீனா.. பாகிஸ்தான் உறவு.. அவசியம். அதேபோல்.. மேற்குலக வல்லாதிக்க நலன்களை தெற்காசியாவுக்குள் இழுத்து வருவதும் அவசியம். இவை எல்லாவற்றையும் கலந்த ஒரு மிக்ஸரில இருந்து தான் எமக்கு தீர்வு கிடைக்குமே தவிர.. நீதி.. தர்மம்.. மண்ணாங்கட்டி என்று கொண்டும்.. சிங்களத்தையும் இந்தியாவையும் நம்பிக் கொண்டும்..  இருந்தால் இன்றல்ல.. என்றுமே எமக்கு தீர்வு கிடைக்காது.

ஆகவே இப்போதைக்கு மேற்குலக நலன் சார்ந்து ஒரு வலையைப் பின்னிக் கொள்வதே நமக்குச் சிறப்பு. அதை இன்று தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்போர் செய்வினமோ.. என்னமோ..??! அல்லது காலம் காலமாக..  இந்திய குடியரசின் காலில் சரணாகதியடைந்து கிடைக்கப் போயினமோ என்னமோ..??! :icon_idea:

Edited by nedukkalapoovan

ஆகவே இப்போதைக்கு மேற்குலக நலன் சார்ந்து ஒரு வலையைப் பின்னிக் கொள்வதே நமக்குச் சிறப்பு.

அதற்கு எங்களிடம் எண்ணெய் வளம் இல்லையே.... ஏனைய விடயங்களில் தமிழர்களால் மேற்குலகுக்கு நன்மை இல்லாத போது எப்படி அவர்களை எங்கள் பக்கம் இழுப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

வெரும் நம்மிக்கையில் என்ன நடக்கப்போகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிடம் என்ன வளம் உள்ளது.. அவர்களிடம் உள்ளது.. பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நிலம்.

எம்மிடம் உள்ளதோ.. பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நிலமும்.. கடலும்..!

புலிகளை இந்தியா அழிக்கக் காரணம்.. இவற்றின் மீது தனது நேரடி கண்காணிப்பைக் கொண்டு வரத்தான்.

அதற்குக் காரணம்.. ஒட்டுமொத்த இந்தியாவின் பாதுகாப்பே இன்று தென்னிந்தியா சார்ந்து தான் உள்ளது.

இந்தியா எமது நிலம் பறிபோவதை இட்டுக் கவலைப்படாது. காரணம்.. அங்கு தனது செல்வாக்கை பெருக்கக் கூடிய பலவீனம் பரவுவதை அது விரும்பும்.

வடக்குக் கிழக்கை இணைத்து.. தமிழர்களிடம் தீர்வை கொடுக்கனுன்னு முடிவு கட்டி இருந்தார்.. அதை 1987 இலேயே செய்திருக்கலாம். புலிகள் அல்ல அதற்குக் காரணம். புலிகளைப் பலவீனப்படுத்தி வைச்சால் தான் தான் ஆட்டுவது போல சிறீலங்காவும் தமிழர்களும் ஆடுவார் என்ற நினைப்பு தான் 1987 இந்திய வருகைக்குக் காரணம்.

இறுதியில்.. பிரேமதாச இந்தியாவை ஆட்ட.. புலிகள் இன்னொரு பக்கம்.. ஆட்ட.. கடைசியில்.. வெறுத்துப் போன இந்தியா.. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஒரு நிரந்தர முடிவு எழுதி.. புலிகளுக்கும் எழுதிவிட்டுள்ளது.

சுதந்திரக் கட்சி ஆட்சியாளர்கள் நீண்ட இந்திய விசுவாசிகள். அவர்களின் சீனப் பூச்சாண்டி.. இந்திய மாட்டின் மூக்கில் போட்ட மூக்கணாங்கயிறு மட்டுமே. ஆனால் ஐதேக கட்சி.. மேற்குலகம் சார் கட்சி. அதன் பலம் பலவீனம் இந்தியாவின் நலனில் முக்கியமானது. ஐ தே கட்சிக்கு புலிகளை முற்றாக அழிக்கும் நோக்கம் இருக்கவில்லை. காரணம்.. அப்படிச் செய்வது இந்தியாவின் கிடுங்குப் பிடிக்குள் தாம் போக நேரிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது.

இன்று.. சுதந்திரக் கட்சி.. சீன பொருண்மிய வளர்ச்சியை தனக்குச் சாதமாக்கிக் கொண்டு.. இந்திய மாடு தம்மீது.. முசுறாமல் சீனப் பூச்சாண்டி.. காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் இந்திய மாட்டுக்கு நல்ல சகுனம் அல்ல. அது அதற்கும் தெரியும். அதுதான் இப்போ மீண்டும் தமிழர் நலனில் ஏதோ அக்கறை உள்ளது போல் அது நடிக்கிறது. ஒவ்வொரு தடவையும்.. இந்திய மாட்டின் சிங்கள மூக்கணாங்கயிறு இறுகும் போதும்.. இந்திய மாடும் தமிழ் மக்களை நக்கிக் கொடுக்கும். அதற்காக அது.. தமிழ் மக்களுக்கு நல்லது செய்யத் துடிக்கிறது என்பதல்ல அர்த்தம்.

எனவே இந்த பூகோள அரசியல் சித்து விளையாட்டுக்குள் நாம் திறமையாக விளையாடவிட்டால்.. அதுவும் சும்மா இல்ல ஜனநாயகப் போர்வை.. மனித உரிமைக் காவலர்கள் போர்வை.. மத சமத்துவப் போர்வை போர்த்திக்கிட்டு விளையாடாவிட்டால்.. எங்களுக்குத் தான் பாதகம். புலிகள் இதனைச் செய்திருந்தாலும் கூட.. இந்திய மாடு அவர்களை எட்டி உதைக்கவே செய்திருக்கும். இந்திய மாட்டிற்கு தெரியும்.. பிரபாகரன் நிஜப் புலி.. புலித்தோல் போர்த்திய பூனை அல்ல என்று.

இன்று எம் நிலத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய வகையில்.... சீன ரகன்களும்.. இந்திய மாடுகளும்.. அமெரிக்க.. கழுகுகளும்.. சிங்களச் சிங்கங்களும்.. சுதந்திரமாக திட்டங்களை வகுத்துச் செயற்பட முடிகிறது. காரணம்.. இவைக்கு பொது இடைஞ்சலாக புலிகள் அங்கு இருந்தமை. ஆனால் தமிழர்கள் இன்னும் புலிகளாக இயங்கக் கூடிய நிலை உள்ளது. அது ஆயுதம் தாங்கிய புலிகளாக அல்ல.. தந்திரம் சார்ந்த புலிகளாக. அந்த வெற்றிடத்தை நிரப்பாமல்.. நாம்.. நிமிர்வது கடினம்..! அதை ஒற்றுமையால் கூட்டுச் செயற்பாட்டால் இலகுவாக அடையலாம். தமிழர்கள் அதற்கு விடா முயற்சி செய்வதே அவசியம். விலை போவதிலும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இலங்கைக்கு பக்கத்தில் அதிகாரப்போட்டி வருவதால் மட்டும்தான் மேற்குலகம் கிட்டவரும். நாம் எமது தீர்வுகளில் மேற்குலகின் அபிலாசைகளுக்கு இடம் அளிக்க வேண்டும். தமிழ் ஈழத்தை பிரித்து தந்தால் நிபந்தனை இல்லாமல் அவர்களின் போட்டிகளுக்கு இடமளிக்க தயார் என்று தெரியவைக்க வேண்டும். இந்தியாவின் அபிலாசைகளை மேற்குலம் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் அதற்குள் போனால் சிங்களத்தை விட மோசமாகத்தான் கிந்தியம் எம்மை நடத்தும். காங்கிரசுடன் மம்மதா கதைப்பது போல துணிச்சல் மிக்க ஜெயலலிதாவுக்கு கூட முடியாதது. அந்த நேரத்தில் கனி மொழி, லெனின், ஸ்டலின்  இவர்கள் எல்லாம் தமிழ் நாட்டுல் தமது பங்குக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவை வளைக்கத்தக்கதான மூலதனம் எம்மிடம் இல்லை. இந்தியாவை விட்டு வேறுபாதை பார்ப்பதுதான் சரி. தேவையாய் இருந்தால் மேற்குநாடுகளை தமிழ் நாட்டை முதலில் பிரித்துவிடும்படி கேட்க வேண்டும்.

இஸ்ரேலிடம் என்ன வளம் உள்ளது.. அவர்களிடம் உள்ளது.. பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நிலம்.

எம்மிடம் உள்ளதோ.. பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நிலமும்.. கடலும்..!

புலிகளை இந்தியா அழிக்கக் காரணம்.. இவற்றின் மீது தனது நேரடி கண்காணிப்பைக் கொண்டு வரத்தான்.

காரணம்.. ஒட்டுமொத்த இந்தியாவின் பாதுகாப்பே இன்று தென்னிந்தியா சார்ந்து தான் உள்ளது.

இந்தியா எமது நிலம் பறிபோவதை இட்டுக் கவலைப்படாது. காரணம்.. அங்கு தனது செல்வாக்கை பெருக்கக் கூடிய பலவீனம் பரவுவதை அது விரும்பும்.

எம்மிடம் உள்ள பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நிலமும் கடலும் முன்னர் என்றால் அமெரிக்காவுக்கு பிரயோசனப்பட்டிருக்கலாம். ஆனால் இப்பொழுது இந்தியாவுக்கு பிரயோசனப்பட்டாலும் அமெரிக்காவுக்கு தேவைப்படாது என்று நினைக்கிறேன். அந்தளவுக்கு அவர்கள் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. தெற்காசியாவை கண்காணிப்பது தொடக்கம் அனைத்தையுமே அவர்களால் அமெரிக்காவில் இருந்தபடியே செய்ய முடியும்.

இலங்கையில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்து விட்டது. அதை தடுக்க வேண்டும் என்றால் கூட இனி அமெரிக்காவால் முடியாது. விரும்பினால் இலங்கை மீது தாக்குதல் நடத்தி இலங்கையை கைப்பற்றலாம். ஆனால் இலங்கையை கைப்பற்றுவதால் அவர்களுக்கு பிரயோசனம் கிடைக்காது. எண்ணெய்வளம் இருந்திருந்தால் அதை செய்திருக்கும்.

இப்பொழுது அமெரிக்காவே சீனாவிடம் கடன்வாங்குகிறது. எனவே அமெரிக்காவும் கூடியவரை சீனாவுடன் மோதுவதை தவிர்க்கும். இனி எதிர்கால உலக வல்லரசு சீனா தான்.

அத்துடன் மகிந்த உண்மையில் பயங்கர புத்திசாலி. எமது தலைவரே அவரை பாரட்டியவராச்சே... இவ்வளவு இக்கட்டான சூழலிலும் மற்றைய நாடுகள் தம் மேல் கைவைத்து விடாமல் இருக்குமாறு மிகவும் தந்திரமாக கையாள்கிறார்.

சீனாவும் அமெரிக்காவும் ஒருமிக்க எமது பக்கம் திரும்பினால் தான் எமக்கு விடிவு உள்ளது. அது தான் எவ்வாறு சாத்தியம் என்று இன்னும் புரியவில்லை. :unsure:  ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்றால் யார்?

சாதாரண குடி மக்களா?
அந்நாட்டு அரசியல் வாதிகளா?
அங்கிருக்கும்  ஆடுமாடுகளா?
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்றால் யார்?

சாதாரண குடி மக்களா?
அந்நாட்டு அரசியல் வாதிகளா?
அங்கிருக்கும்  ஆடுமாடுகளா?

இதுதான் இப்போதைக்கு, எனக்குத் தெரிந்த இந்தியா! :o

Indian%20Politicians%20New%20Look8.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எம்மிடம் உள்ள பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நிலமும் கடலும் முன்னர் என்றால் அமெரிக்காவுக்கு பிரயோசனப்பட்டிருக்கலாம். ஆனால் இப்பொழுது இந்தியாவுக்கு பிரயோசனப்பட்டாலும் அமெரிக்காவுக்கு தேவைப்படாது என்று நினைக்கிறேன். அந்தளவுக்கு அவர்கள் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. தெற்காசியாவை கண்காணிப்பது தொடக்கம் அனைத்தையுமே அவர்களால் அமெரிக்காவில் இருந்தபடியே செய்ய முடியும்.

இலங்கையில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்து விட்டது. அதை தடுக்க வேண்டும் என்றால் கூட இனி அமெரிக்காவால் முடியாது. விரும்பினால் இலங்கை மீது தாக்குதல் நடத்தி இலங்கையை கைப்பற்றலாம். ஆனால் இலங்கையை கைப்பற்றுவதால் அவர்களுக்கு பிரயோசனம் கிடைக்காது. எண்ணெய்வளம் இருந்திருந்தால் அதை செய்திருக்கும்.

இப்பொழுது அமெரிக்காவே சீனாவிடம் கடன்வாங்குகிறது. எனவே அமெரிக்காவும் கூடியவரை சீனாவுடன் மோதுவதை தவிர்க்கும். இனி எதிர்கால உலக வல்லரசு சீனா தான்.

அத்துடன் மகிந்த உண்மையில் பயங்கர புத்திசாலி. எமது தலைவரே அவரை பாரட்டியவராச்சே... இவ்வளவு இக்கட்டான சூழலிலும் மற்றைய நாடுகள் தம் மேல் கைவைத்து விடாமல் இருக்குமாறு மிகவும் தந்திரமாக கையாள்கிறார்.

சீனாவும் அமெரிக்காவும் ஒருமிக்க எமது பக்கம் திரும்பினால் தான் எமக்கு விடிவு உள்ளது. அது தான் எவ்வாறு சாத்தியம் என்று இன்னும் புரியவில்லை. :unsure:  ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை.

அமெரிக்காவிற்கும் எமது நிலம் அவசியம் என்பதை வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஜே ஆருடன் போட்ட ஒப்பந்தம் மூலமும் அமெரிக்க கடற்படை திருமலை துறைமுகப் பாதுகாப்பு மீது காட்டிய தீவிர அக்கறை மூலமும்.. இனங்காட்டி விட்டுள்ளது.

அமெரிக்கா சீனாவையோ.. இந்தியாவையோ.. பாகிஸ்தானையோ.. தெற்காசியாவையோ.. தென்கிழக்காசியாவையோ கட்டுப்படுத்த வேண்டும் என்றால்.. அதற்கு தெற்காசியாவில் பலமான ஒரு கடற்படை தளம் அவசியம்.

அதன் மூலமே நெருக்கடியான காலங்களில்.. போர் விமானங்களை தாங்கும் கப்பல்களுக்கு விநியோகங்களை செய்ய முடியும். துருப்புக்களை நகர்த்த முடியும். இராணுவ தங்கலை.. கண்காணிப்பு நிலைகளை.. ஏவுகணை எதிர்ப்பு நிலைகளை அமைக்க முடியும். அமெரிக்காவில் இருந்து கொண்டு அதைச் செய்வது என்பது அவ்வளவு சாத்தியமில்லை.

இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி அல்ல. இந்தியாவை அமெரிக்கா strategic partner  (Not ally)  (age of empires என்ற strategic game விளையாடினீங்க என்றால்.. அனுபவ ரீதியாக இந்த இரண்டு சொல்லாடலுக்கும் இடையில் உள்ள வேற்றுமையை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்) என்ற நிலையில் தான் வைத்திருக்கிறது. இந்திய - அமெரிக்க நட்பு என்பது அமெரிக்காவின் பூகோள நலனின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அம்சமாகும். இந்தியா அமெரிக்காவோடு இப்படி இருக்க.. ரஷ்டியாவோடு.. ally என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்காலின் பின்..  இப்போதும் கூட.. எமக்கு தந்திரோபாய அரசியல் காய்நகர்த்தல்கள் செய்ய.. நிறைய சாதகமான காரணிகள் உள்ள போதும்.. எமது அரசியல் தலைமைகள் இன்னும் புதிய பரிமானத்தில்.. புதிய அணுகுமுறையில் அது குறித்துச் சிந்திக்காமல்.. பழைய கிழடி கதவைத் திறவடி என்ற நோக்கில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சங்கரி.. சம்பந்தன்.. சுமந்திரன்.. டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. இவர்கள் எப்பவாவது  strategically யோசனை செய்து அரசியல் செய்திருக்கிறார்களா..???! இல்லவே இல்லை.

இந்த விடயத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முன்னெடுப்புக்கள் சில உண்மையில் வரவேற்கத்தக்கதாக உள்ளது. அதாவது.. strategic political position என்ற ஒரு நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருப்பது உண்மையில்.. பலவேறு அமைப்புக்களாக போராட விரும்பும் ஒரு சூழலில்.. நல்ல ஒரு முடிவு. ஆனால் சம்பந்தன் ஐயாவின் strategic political position பற்றி எனக்கு அவ்வளவாக தெளிவில்லை.

அதுபோக தாயகக் களத்தில்..  நல்ல தந்திரோபாய அரசியல்.. செய்யக் கூடிய இளையவர்களை  கட்சிகளை விட்டு அடித்து விரட்டிவிட்டார்கள். இப்போ.. மீண்டும் சிங்களத்துக்கு நோகாத தீர்வு என்ற பொன்னம்பலம்.. அமிர்தலிங்கம் கால அந்தப் பழைய சித்தாந்தத்திற்கு மீள்கிறார்கள்..! இதற்கு தமிழ் மக்களுக்கு இந்தியாவின் உதவி தேவை என்ற எண்ணக் கருதுகோள்.. முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல்.. தேசிய தலைவர் பிரபாகரனால்.. 19 ஆண்டுகள்.. ஒரு புதிய தந்திரோபாயத்தோடு..  ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்த முடிந்தது என்றால்.. ஏன் ஜனநாயக அரசியலை நடத்த முடியாது..??! முடியும். ஆனால் நாங்கள் விலை போகும் அரசியலை விட்டு வெளில வரமாட்டம். அதுதான் செய்ய இலகு. தேசிய தலைவர்  பிரபாகரன் போல.. துணிந்து நில்.. துணிந்து செய்.. செய் அல்லது செத்துமடின்னு நடக்க நாங்க என்ன  முட்டாள்களா..??! அப்படின்னு நினைக்கிற.. செயற்படுற அரசியல் ஞான சூனியங்களே இன்று எமக்கான தலைவர்கள்.

1987 இல் தேசிய தலைவர் பிரபாகரன்.. இந்தியப் படைகளை எதிர்கொண்டிராவிட்டால்.. de-facto நிலையில் கூட நாம் தமிழீழத்தை இந்த உலகிற்கு அடையாளப்படுத்தி இருக்க முடியாது. இன்று.. உலக வரலாற்றில்.. தமிழீழம்.. de-facto state ஆக இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் இருந்துள்ளமை பதியப்பட்டுள்ளது... ( வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் சார்ந்து செய்யப்பட்ட இந்த ஆய்வறிக்கையை ஒருக்கா படியுங்கள்.. https://docs.google.com/viewer?a=v&q=cache:CQ4npEBV3DIJ:www.aph.gov.au/Parliamentary_Business/Committees/House_of_Representatives_Committees%3Furl%3Dpjcis/proscription/submissions/sub35a.pdf+&hl=en&gl=uk&pid=bl&srcid=ADGEEShDXQ9Rh0p107BuM5kkIgdX1QwAlc1IOt5EpDZiBEDIXhzUaavYkCfa5hx1iGsbwesI4uzpYo-5utZIstBAZhSUU9YYir6HUTUV7bolex25vhK7UU3BQN49NP6dCxpc_PxuJ89F&sig=AHIEtbQkWUIzNOrv1bzCBkUZKyGNnLIKLw )

இந்த தகுதி சும்மா வரவில்லை. எத்தனையோ மக்களின் போராளிகளின் தியாகத்தால் வந்தது. இதனைக் கூட இந்தியா சொல்கிறது என்பதற்காக தாரைவார்க்கக் கூடிய சம்பந்தன் போன்ற அரசியல்.. தலைமைகளை வைச்சுக் கொண்டு.. நாங்கள் strategical moves செய்வது கடினம் தான். ஆனால் இன்றைய இளைய தலைமுறை அதனைச் செய்ய முடியும். அதற்கான பலம்.. புகலிடத்திலும் உள்நாட்டிலும் உள்ளது. அதனைப் பலப்படுத்தி ஒரு பொதுமைப்பாடன.. கட்டமைப்பின் கீழ்.. அந்த இளைஞர்கள் எல்லா அரசியல்வாதிகளையும் ஒன்றுபடுத்த முனைந்தால்.. அது வெற்றி பெற்றால்.. அதுவே எமக்கு சாதமாக இருப்பதோடு.. தமிழக மக்களின் உலகத் தமிழினத்தின் ஆதரவையும் நமக்காக தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே எமது அரசியல் ரானிக். இந்திய நடுவன் அரசு அல்ல.. எமக்கு உதவி. எமக்கு உதவ விரும்புவதும் முடிவதும்.. தமிழகமாகவே எப்போதும் இருக்க முடியும்.

எம்மிடம் இருப்பது எண்ணெய் வளம் இல்லை. ஆனால் நிறையக் கனிய வளம் உள்ளது. புல்மோட்டை கனியங்களின் தேவை இன்று உலகில் அதிகரித்துள்ளது. அதற்கும் மேலாக எம்மிடம் strategic land and sea இருக்குது. 6 - 7 கோடி மனித வலு இருக்குது. இவை அருகிவிடும் எண்ணெய் வளத்தை விட அருகாத வளங்களாகும். இதனை அமெரிக்காவும் நன்கறியும்.. மேற்குலகும் அறியும். இந்தியாவும் அறியும்..! தேசிய தலைவர் பிரபாகரனும்.. இதனை வைத்துக் கொண்டு தான்.. தன்னால் இந்தப் போராட்டத்தை வெல்ல முடியும் என்று நம்பினார். ஆனால்... செப் 11 எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. புலிகளுக்கு பயங்கரவாதம் என்ற.. ஒற்றைச் சொல்லாடல் மூலம்.. செக் வைக்க முடிவு கட்டியதற்கும்..  இந்த நில.. கடல் வளங்களில் புலிகள் தனி ஆளுமை கொண்டமையும் ஒரு காரணம். புலிகள் கரந்தடிப்படையாக இருந்த போது ஊக்கி வளர்த்தவர்கள்.. புலிகள் மரபுப்படையணியாக்கி.. de-facto state உருவாக்கிய போது பயங்கரவாதிகள் ஆக்கினார்கள் என்றால் அதுவே போதும்.. எமது நிலம்.. கடலின் முக்கியத்துவம் பேச..!

ஆனால்.. எம்மில் பலர் இன்னும்.. முள்ளிவாய்க்கால் தோல்வி.. போராட்டம் தோல்வி என்று கொண்டிருக்கிறார்களே தவிர.. தேசிய தலைவர் பிரபாகரன் de-facto state நிலையில் விட்டதை.. republic state என்ற நிலைக்கு கொண்டு வர யாரும் முயல்வதாகத் தெரியவில்லை. மாறாக.. de-facto state ஐ கூட demolish பண்ணவே நினைக்கிறார்கள்... செயற்படுகிறார்கள். இதில் சிங்களவனை விட தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லீம்களுமே மும்மரமாகச் செயற்படுகின்றனர். அதுதான் வேதனை. :icon_idea::(

[திருத்தம்: தேசிய தலைவருக்கு அதிக முதன்மை தன்மை அளிக்கும் நோக்கிலும் அவரின் கெளரவம் கருதியும்.. அவரின் பெயர் தனியே உச்சரிக்கப்பட்ட இடங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.]

Edited by nedukkalapoovan

அமெரிக்காவிற்கும் எமது நிலம் அவசியம் என்பதை வொய்ஸ் ஒவ் அமெரிக்கா ஜே ஆருடன் போட்ட ஒப்பந்தம் மூலமும் அமெரிக்க கடற்படை திருமலை துறைமுகப் பாதுகாப்பு மீது காட்டிய தீவிர அக்கறை மூலமும்.. இனங்காட்டி விட்டுள்ளது.

அமெரிக்கா சீனாவையோ.. இந்தியாவையோ.. பாகிஸ்தானையோ.. தெற்காசியாவையோ.. தென்கிழக்காசியாவையோ கட்டுப்படுத்த வேண்டும் என்றால்.. அதற்கு தெற்காசியாவில் பலமான ஒரு கடற்படை தளம் அவசியம்.

அதன் மூலமே நெருக்கடியான காலங்களில்.. போர் விமானங்களை தாங்கும் கப்பல்களுக்கு விநியோகங்களை செய்ய முடியும். துருப்புக்களை நகர்த்த முடியும். இராணுவ தங்கலை.. கண்காணிப்பு நிலைகளை.. ஏவுகணை எதிர்ப்பு நிலைகளை அமைக்க முடியும். அமெரிக்காவில் இருந்து கொண்டு அதைச் செய்வது என்பது அவ்வளவு சாத்தியமில்லை.

இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி அல்ல. இந்தியாவை அமெரிக்கா strategic partner  (Not ally)  (age of empires என்ற strategic game விளையாடினீங்க என்றால்.. அனுபவ ரீதியாக இந்த இரண்டு சொல்லாடலுக்கும் இடையில் உள்ள வேற்றுமையை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்) என்ற நிலையில் தான் வைத்திருக்கிறது. இந்திய - அமெரிக்க நட்பு என்பது அமெரிக்காவின் பூகோள நலனின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அம்சமாகும். இந்தியா அமெரிக்காவோடு இப்படி இருக்க.. ரஷ்டியாவோடு.. ally என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.

முள்ளிவாய்க்காலின் பின்..  இப்போதும் கூட.. எமக்கு தந்திரோபாய அரசியல் காய்நகர்த்தல்கள் செய்ய.. நிறைய சாதகமான காரணிகள் உள்ள போதும்.. எமது அரசியல் தலைமைகள் இன்னும் புதிய பரிமானத்தில்.. புதிய அணுகுமுறையில் அது குறித்துச் சிந்திக்காமல்.. பழைய கிழடி கதவைத் திறவடி என்ற நோக்கில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சங்கரி.. சம்பந்தன்.. சுமந்திரன்.. டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. இவர்கள் எப்பவாவது  strategically யோசனை செய்து அரசியல் செய்திருக்கிறார்களா..???! இல்லவே இல்லை.

இந்த விடயத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முன்னெடுப்புக்கள் சில உண்மையில் வரவேற்கத்தக்கதாக உள்ளது. அதாவது.. strategic political position என்ற ஒரு நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருப்பது உண்மையில்.. பலவேறு அமைப்புக்களாக போராட விரும்பும் ஒரு சூழலில்.. நல்ல ஒரு முடிவு. ஆனால் சம்பந்தன் ஐயாவின் strategic political position பற்றி எனக்கு அவ்வளவாக தெளிவில்லை.

அதுபோக தாயகக் களத்தில்..  நல்ல தந்திரோபாய அரசியல்.. செய்யக் கூடிய இளையவர்களை  கட்சிகளை விட்டு அடித்து விரட்டிவிட்டார்கள். இப்போ.. மீண்டும் சிங்களத்துக்கு நோகாத தீர்வு என்ற பொன்னம்பலம்.. அமிர்தலிங்கம் கால அந்தப் பழைய சித்தாந்தத்திற்கு மீள்கிறார்கள்..! இதற்கு தமிழ் மக்களுக்கு இந்தியாவின் உதவி தேவை என்ற எண்ணக் கருதுகோள்.. முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது.

இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல்.. பிரபாகரனால்.. 19 ஆண்டுகள்.. ஒரு புதிய தந்திரோபாயத்தோடு..  ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்த முடிந்தது என்றால்.. ஏன் ஜனநாயக அரசியலை நடத்த முடியாது..??! முடியும். ஆனால் நாங்கள் விலை போகும் அரசியலை விட்டு வெளில வரமாட்டம். அதுதான் செய்ய இலகு. பிரபாகரன் போல.. துணிந்து நில்.. துணிந்து செய்.. செய் அல்லது செத்துமடின்னு நடக்க நாங்க என்ன  முட்டாள்களா..??! அப்படின்னு நினைக்கிற.. செயற்படுற அரசியல் ஞான சூனியங்களே இன்று எமக்கான தலைவர்கள்.

1987 இல் பிரபாகரன்.. இந்தியப் படைகளை எதிர்கொண்டிராவிட்டால்.. de-facto நிலையில் கூட நாம் தமிழீழத்தை இந்த உலகிற்கு அடையாளப்படுத்தி இருக்க முடியாது. இன்று.. உலக வரலாற்றில்.. தமிழீழம்.. de-facto state ஆக இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் இருந்துள்ளமை பதியப்பட்டுள்ளது... ( வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் சார்ந்து செய்யப்பட்ட இந்த ஆய்வறிக்கையை ஒருக்கா படியுங்கள்.. https://docs.google.com/viewer?a=v&q=cache:CQ4npEBV3DIJ:www.aph.gov.au/Parliamentary_Business/Committees/House_of_Representatives_Committees%3Furl%3Dpjcis/proscription/submissions/sub35a.pdf+&hl=en&gl=uk&pid=bl&srcid=ADGEEShDXQ9Rh0p107BuM5kkIgdX1QwAlc1IOt5EpDZiBEDIXhzUaavYkCfa5hx1iGsbwesI4uzpYo-5utZIstBAZhSUU9YYir6HUTUV7bolex25vhK7UU3BQN49NP6dCxpc_PxuJ89F&sig=AHIEtbQkWUIzNOrv1bzCBkUZKyGNnLIKLw )

இந்த தகுதி சும்மா வரவில்லை. எத்தனையோ மக்களின் போராளிகளின் தியாகத்தால் வந்தது. இதனைக் கூட இந்தியா சொல்கிறது என்பதற்காக தாரைவார்க்கக் கூடிய சம்பந்தன் போன்ற அரசியல்.. தலைமைகளை வைச்சுக் கொண்டு.. நாங்கள் strategical moves செய்வது கடினம் தான். ஆனால் இன்றைய இளைய தலைமுறை அதனைச் செய்ய முடியும். அதற்கான பலம்.. புகலிடத்திலும் உள்நாட்டிலும் உள்ளது. அதனைப் பலப்படுத்தி ஒரு பொதுமைப்பாடன.. கட்டமைப்பின் கீழ்.. அந்த இளைஞர்கள் எல்லா அரசியல்வாதிகளையும் ஒன்றுபடுத்த முனைந்தால்.. அது வெற்றி பெற்றால்.. அதுவே எமக்கு சாதமாக இருப்பதோடு.. தமிழக மக்களின் உலகத் தமிழினத்தின் ஆதரவையும் நமக்காக தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே எமது அரசியல் ரானிக். இந்திய நடுவன் அரசு அல்ல.. எமக்கு உதவி. எமக்கு உதவ விரும்புவதும் முடிவதும்.. தமிழகமாகவே எப்போதும் இருக்க முடியும்.

எம்மிடம் இருப்பது எண்ணெய் வளம் இல்லை. ஆனால் நிறையக் கனிய வளம் உள்ளது. புல்மோட்டை கனியங்களின் தேவை இன்று உலகில் அதிகரித்துள்ளது. அதற்கும் மேலாக எம்மிடம் strategic land and sea இருக்குது. 6 - 7 கோடி மனித வலு இருக்குது. இவை அருகிவிடும் எண்ணொய் வளத்தை விட அருகாத வளங்களாகும். இதனை அமெரிக்காவும் நன்கறியும்.. மேற்குலகும் அறியும். இந்தியாவும் அறியும்..! பிரபாகரனும்.. இதனை வைத்துக் கொண்டு தான்.. தன்னால் இந்தப் போராட்டத்தை வெல்ல முடியும் என்று நம்பினார். ஆனால்... செப் 11 எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. புலிகளுக்கு பயங்கரவாதம் என்ற.. ஒற்றைச் சொல்லாடல் மூலம்.. செக் வைக்க முடிவு கட்டியதற்கும்..  இந்த நில.. கடல் வளங்களில் புலிகள் தனி ஆளுமை கொண்டமையும் ஒரு காரணம். புலிகள் கரந்தடிப்படையாக இருந்த போது ஊக்கி வளர்த்தவர்கள்.. புலிகள் மரபுப்படையணியாக்கி.. de-facto state உருவாக்கிய போது பயங்கரவாதிகள் ஆக்கினார்கள் என்றால் அதுவே போதும்.. எமது நிலம்.. கடலின் முக்கியத்துவம் பேச..!

ஆனால்.. எம்மில் பலர் இன்னும்.. முள்ளிவாய்க்கால் தோல்வி.. போராட்டம் தோல்வி என்று கொண்டிருக்கிறார்களே தவிர.. பிரபாகரன் de-facto state நிலையில் விட்டதை.. republic state என்ற நிலைக்கு கொண்டு வர யாரும் முயல்வதாகத் தெரியவில்லை. மாறாக.. de-facto state ஐ கூட demolish பண்ணவே நினைக்கிறார்கள்... செயற்படுகிறார்கள். இதில் சிங்களவனை விட தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லீம்களுமே மும்மரமாகச் செயற்படுகின்றனர். அதுதான் வேதனை. :icon_idea::(

 உடம்பெல்லாம் மயிர் கூச்செறிகிறது :( மேதகு தலைவரின் பெயரை எவ்வளவு லாவகமாக பாவிக்கின்றீர்கள். பொட்டம்மான் கூட இப்படி பாவித்திருப்பாரோ தெரியா

  • கருத்துக்கள உறவுகள்
 உடம்பெல்லாம் மயிர் கூச்செறிகிறது :( மேதகு தலைவரின் பெயரை எவ்வளவு லாவகமாக பாவிக்கின்றீர்கள். பொட்டம்மான் கூட இப்படி பாவித்திருப்பாரோ தெரியா

மேதகு தலைவர்.. என்ற மதிப்பும் மரியாதையும்.... மனசில உணர்வோடு...இருக்கனுமே தவிர எழுத்தில்.. எல்லா இடத்திலும்.. இருக்கனுன்னு அவசியம் இல்லைத் தானே.  மேலும் பிரபாகரன் எல்லோருக்கும் மேதகு இல்லைத்தானே. தமிழ் மக்களால் தானே மேதகுவாகப் பார்க்கப்படுகிறார்... போற்றப்படுகிறார். அமெரிக்கனும்.. சிங்களவனும் வெளிப்படைக்கு (உள்ளுக்க கருதினாலும்) அப்படிக் கருதிறாங்களா இல்லைத்தானே. சர்வதேச அரசியல் பற்றி எழுதும் போது பிரபாகரன் (சர்வதேசத்தால் அறியப்பட்ட பெயரின் அடிப்படையில்) என்று விளிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.. இருந்தாலும் திருத்திக் கொள்கிறேன். பொட்டம்மான் தலைவரின் பாசறைத் தோழர். அவர் பிரபாகரனுன்னு அழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அத்தோடு நெருங்கிய நண்பர்களும் கூட..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

தானா கனியிற கனியை அடிச்சு கனிய வைக்க முயற்சித்த மொக்கு கோஷ்டிகள் பற்றி பக்கம் பக்கம் ஆக எழுதுவதே பலர் தொழிலாகிவிட்டது .

இலங்கையில் ஆயுத போராட்டத்தை நடாத்தினார்கள். சர்வதேசத்தில் ஒரு சிறிய அரசியல் மாற்றத்தை எமது பிரச்சனை பற்றி கொண்டுவந்தார்களா என்றால் பதில் பூச்சியம்.லண்டன் வந்த கிட்டுவை கூட எந்த ஒரு நாட்டிலும் வைத்திருக்கபண்ண முடியாத நிலை.ஒவ்வொரு நாடாக தடை பண்ணிக்கொண்டு வந்தார்களே ஒழிய இவர்களிலும் நியாயம் இருக்கின்றது என ஒரு குருவியும் சொல்லவில்லை .பாவம் தமிழினம் அழிய போகின்றார்கள் என்று சர்வதேச அனுசரணையுடன் எரிக் சொல்கெயுமை அனுப்பினால் கெடு குடி சொற்கேட்கவில்லை .அங்கு இருந்ததுதான் மொக்கு கோஸ்டி என்றால் புலம் பெயர்ந்த விண்ணாதி விண்ணர்கள் இங்கிருந்து சிஞ்ச்சிஞ்ச்சா.முழு ஊது குழல் ஊடகங்களும் 'கேள்வி எதுவும் கேட்காமல் காசை மட்டும் கொடுங்கோ தலைவர் பார்த்துக்கொள்ளுவார்".

புலம் பெயர்ந்த இந்த ஆய்வாளர்கள் மேல்தான் எனது முழு கோபமும் ,ஏதோ புலிகளை அமெரிக்க ருஷ்ய கணக்கு வல்லரசு போல சித்தரித்து ஆய்வு நடாத்திக்கொண்டு இருந்தார்கள்.(இதயசந்திரன் ,அருஸ்,சேரமான்,அனலை நிதிஷ் ) , சர்வதேச அரசியலின் அருச்சுவடியே இவர்களுக்கு தெரியாது ,பாட்டு பாடி பரிசு பெரும் புலவர் கணக்கு தலைவரையும் புலிகளையும் போற்றிக்கொண்டிருக்க வாலுகளும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள் .அது இன்றும் இங்கும் சிலரால் தொடரும் நிலைமையை நினைக்க சிரிப்பாக இருக்கு .

அதற்குள் சர்வதேசம் எங்களிடம் வராது எண்ணெய் இல்லை கனிமம் இல்லை திருகோணமலையை கொடுத்தால் பைப்பில கோக் வரும் என்று எதுவித அடிப்படை அறிவுமுல்லாமல் கருத்துக்களை அள்ளி தெளித்துகொண்டு இருக்கின்றார்கள் (இந்தியன் ஆமி இலங்கைக்கு போகும் போது எண்ணெய் என்னவோ இருந்த மாதிரி ).

சர்வதேசம் இன்று பெரும் அரசியல் பொருளாதார நிலையில் இருக்கு இனி எமது பிரச்சனையை முதன்மை படுத்துவது என்பது மிக கஷ்டம் ,அடுத்த நாலு வருடத்தில் அமெரிக்காவை எமது பக்கம் திருப்பினால் ஒழிய எதுவித தீர்வுமில்லாமல் ஒரு சிங்கள நாட்டில் தமிழர்களும் இருக்கின்றார்கள் என்றுதான் ஆகிவிடும் .

எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை பயங்கரவாதமாக்கி அனைத்தையும் கோட்டை விட்டு விட்டோம் ,அடாத்தும் அராஜகமும் தான் அரசியல் என நம்பிவிட்டோம் ,இதை புலம் பெயர்ந்த புண்ணாக்குகளும் கையிலேடுததுதான் மிக கேவலம் .நாட்டில் அராஜக ஆட்சியை வைத்திருந்ததுமல்லாமல் புலம் பெயர்ந்த இடங்களிலும் அப்படியானவர்களை பொறுப்பில் இருத்தியதற்கு நாம் கொடுத்த விலைதான் இவ்வளவு அழிவுகளும் .

  • கருத்துக்கள உறவுகள்
அண்ணே தானா கனிகிறது என்றால்  தமிழ் மக்களை பலோத்காரமாக பிடித்து சேர்த்த (நீங்கள் இது பற்றி எப்போதும் ஒரு வரி எழுதாதது உங்களின் அரசியல் வங்குறோத்து தன்மையை காட்டுகிறது) வரதராஜபெருமாள் சொன்ன மாநில சுயாட்சியை சொல்கிறீர்களா? 
அல்லது சந்திரிக்கா  தரப்போவதாக உலகுக்கு பம்மாத்து விட்ட தீர்வுபொதிகள் பற்றி சொல்கிறீர்களா??
இல்லை புலிகளுடனான நோர்வே அனுசரணையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அமெரிக்கா,யப்பானின் ஓரவஞ்சனையை அறியவில்லையா?
 
அதாவது நடுநிலை வகிக்க வரும் ஒருவர் புலிகள் அமெரிக்காவுக்கு அழைக்கப்படாமல் அரசை மட்டும் எப்படி அழைக்க முடிந்தது?? 
ஐரிஸ் கெரில்லாக்களை பயங்கரவாதிகளாக தனது பட்டியலில் இடாமல் புலிகளை பயங்கரவாதிகளாக்கியது எந்த விதத்தில் நியாயமாக பட்டது?
 
டக்ளஸ் குழு தான் அலன் தம்பதிகளை கடத்தி நாடகம் புரிந்தார்கள்.புலிகள் கொன்ற அல்லது கடத்திய அமெரிக்கர்களை அல்லது மேற்கு நாட்டவர்களை கூறுங்கள் பார்க்கலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
தானா கனியிற கனியை அடிச்சு கனிய வைக்க முயற்சித்த மொக்கு கோஷ்டிகள் பற்றி பக்கம் பக்கம் ஆக எழுதுவதே பலர் தொழிலாகிவிட்டது .

இலங்கையில் ஆயுத போராட்டத்தை நடாத்தினார்கள். சர்வதேசத்தில் ஒரு சிறிய அரசியல் மாற்றத்தை எமது பிரச்சனை பற்றி கொண்டுவந்தார்களா என்றால் பதில் பூச்சியம்.லண்டன் வந்த கிட்டுவை கூட எந்த ஒரு நாட்டிலும் வைத்திருக்கபண்ண முடியாத நிலை.ஒவ்வொரு நாடாக தடை பண்ணிக்கொண்டு வந்தார்களே ஒழிய இவர்களிலும் நியாயம் இருக்கின்றது என ஒரு குருவியும் சொல்லவில்லை .பாவம் தமிழினம் அழிய போகின்றார்கள் என்று சர்வதேச அனுசரணையுடன் எரிக் சொல்கெயுமை அனுப்பினால் கெடு குடி சொற்கேட்கவில்லை .அங்கு இருந்ததுதான் மொக்கு கோஸ்டி என்றால் புலம் பெயர்ந்த விண்ணாதி விண்ணர்கள் இங்கிருந்து சிஞ்ச்சிஞ்ச்சா.முழு ஊது குழல் ஊடகங்களும் 'கேள்வி எதுவும் கேட்காமல் காசை மட்டும் கொடுங்கோ தலைவர் பார்த்துக்கொள்ளுவார்".

புலம் பெயர்ந்த இந்த ஆய்வாளர்கள் மேல்தான் எனது முழு கோபமும் ,ஏதோ புலிகளை அமெரிக்க ருஷ்ய கணக்கு வல்லரசு போல சித்தரித்து ஆய்வு நடாத்திக்கொண்டு இருந்தார்கள்.(இதயசந்திரன் ,அருஸ்,சேரமான்,அனலை நிதிஷ் ) , சர்வதேச அரசியலின் அருச்சுவடியே இவர்களுக்கு தெரியாது ,பாட்டு பாடி பரிசு பெரும் புலவர் கணக்கு தலைவரையும் புலிகளையும் போற்றிக்கொண்டிருக்க வாலுகளும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள் .அது இன்றும் இங்கும் சிலரால் தொடரும் நிலைமையை நினைக்க சிரிப்பாக இருக்கு .

அதற்குள் சர்வதேசம் எங்களிடம் வராது எண்ணெய் இல்லை கனிமம் இல்லை திருகோணமலையை கொடுத்தால் பைப்பில கோக் வரும் என்று எதுவித அடிப்படை அறிவுமுல்லாமல் கருத்துக்களை அள்ளி தெளித்துகொண்டு இருக்கின்றார்கள் (இந்தியன் ஆமி இலங்கைக்கு போகும் போது எண்ணெய் என்னவோ இருந்த மாதிரி ).

சர்வதேசம் இன்று பெரும் அரசியல் பொருளாதார நிலையில் இருக்கு இனி எமது பிரச்சனையை முதன்மை படுத்துவது என்பது மிக கஷ்டம் ,அடுத்த நாலு வருடத்தில் அமெரிக்காவை எமது பக்கம் திருப்பினால் ஒழிய எதுவித தீர்வுமில்லாமல் ஒரு சிங்கள நாட்டில் தமிழர்களும் இருக்கின்றார்கள் என்றுதான் ஆகிவிடும் .

எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை பயங்கரவாதமாக்கி அனைத்தையும் கோட்டை விட்டு விட்டோம் ,அடாத்தும் அராஜகமும் தான் அரசியல் என நம்பிவிட்டோம் ,இதை புலம் பெயர்ந்த புண்ணாக்குகளும் கையிலேடுததுதான் மிக கேவலம் .நாட்டில் அராஜக ஆட்சியை வைத்திருந்ததுமல்லாமல் புலம் பெயர்ந்த இடங்களிலும் அப்படியானவர்களை பொறுப்பில் இருத்தியதற்கு நாம் கொடுத்த விலைதான் இவ்வளவு அழிவுகளும் .

அர்ஜீன் அண்ணா எழுதிய மேற்படி பந்திக்குள்..... 4000  மேற்குல கொள்கை வகுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய கருத்துகளின் வழி பிறந்த.. பொன்னான கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. இதனை ஒரு சொல்லும் விடாமல்.. பின்பற்றினால்.. தமிழீழம் தானே கனிஞ்சு அப்படியே இந்துமா கடலில்.. விழும். நாங்கள் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க எல்லாம் நடக்கும்..! அப்படியே பிளேன் ஏறி அதில இறங்க வேண்டியான். புலிகளுக்கு இது தெரியல்ல. பயங்கரவாத மொக்குகள்.

புலிகள் மொக்கு.. போராடிறவன் மொக்கு... அதனை வெளிநாட்டில இருந்து ஆராயுற வெளிநாட்டுக்காரன் மொக்கு..  இவர் மட்டும்.. தான் நவீன அரசியல் அயன்சுரீனு. 

இவரின் ஆலோசனைப்படி தான் இப்ப அமெரிக்காவே ஆப்கானிஸ்தானில் நடவடிக்கையில் இறங்கி.. இருக்குது. இது தெரியாமல்.. நாங்கள் எல்லாம்.. புலிக்கு விசிலடிக்கும் குஞ்சுகளாட்டம்.. வட்ட சேம்..! பப்பி சேம்.

ஒரு எவ் எப் மைக்கை மீன்பிடிப்படகில பொருத்தி வைச்சிட்டு.. இந்து சமுத்திரத்தின் ஒரு மூலைக்குள் பதுங்கிக் கிடந்து கொண்டு.. தமிழீழம் கண்ட பரம்பரையில வந்தவர்.. இன்னும் 1981 ம் ஆண்டு நித்திரைக்குப் போனவர் எழும்பல்லப் போல..! :icon_idea::rolleyes::(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தானா கனியிற கனியை அடிச்சு கனிய வைக்க முயற்சித்த மொக்கு கோஷ்டிகள் பற்றி பக்கம் பக்கம் ஆக எழுதுவதே பலர் தொழிலாகிவிட்டது .

1948 லிருந்து அரிசுன் காட்டிய இலவம் பழத்துக்கு முன்னால் காவல் இருக்கிறோம்.  கிளி அவசரப்படாவிட்டால்  விரைவில் ஒருநாள் அரிசுனின் பஞ்சு வெடித்து பறக்க இருக்கிறது.

அடுத்த நாலு வருடத்தில் அமெரிக்காவை எமது பக்கம் திருப்பினால் ஒழிய எதுவித தீர்வுமில்லாமல் ஒரு சிங்கள நாட்டில் தமிழர்களும் இருக்கின்றார்கள் என்றுதான் ஆகிவிடும் .

முன்னுக்குபின் முரனாக எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே.

புலிகள் தோற்றதையும் விட புலிகள் வெல்லுவார்கள் என்று சிலர் எழுதியதுதான் அவரின் மிகப்பெரிய கவலை. உடம்பு கட்டையில் போகும் வரை இந்த ஈனச்செயலை நினைத்து அவரின் உடம்பு கொதிக்கிறது.

மூன்று நாலு வயதில் ஆயுள் முடிந்து போன அவர்களை நான் மறந்தே பலகாலம் .அவர்களும் அதை மறந்து பலகாலம் .

தனிப்பெரும் அமைப்பாக முப்படையை இருபதுவருடமாக வைத்திருந்தவர்கள் அழிந்தது பற்றித்தான் நான் கதைப்பது .எத்தனை சந்தர்ப்பம் வந்தது .அத்தனையையும் கோட்டை விட்டார்கள் .பத்தாதற்கு அதே பாணியில் புலம் பெயர்ந்த புலிகளும் இன்று  செல்லும் பாதை முழு தமிழனையும் நாட்டில் நிரந்தர அடிமையாக்கும் வேலை ,சம்பந்தனுக்கு அது தெரிந்துதான் முடிந்தவரை அவர்களை  விலத்தி தனது அரசியலை செய்கின்றார் .

நெடுக்ஸ் ,

முள்ளிவாய்கால் முடிவு நீங்கள் எழுதிய கருத்துக்கள் அனைத்தையும் நிறுவி நிற்கின்றது.மொக்கு கூட்டமாக இருந்ததையாவது மன்னிக்கலாம் , முள்ளிவாய்கால் முடிவிற்கு பின்னரும் அப்படியே இருப்பது மொக்கர்கள்  இல்லை கள்ளர்கள் என்பதை காட்டுகின்றது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.