Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தி வழி (இந்தியா நோக்கிய ஈழத் தமிழனின் நடைப்பயணம்)

Featured Replies

14785_469044869826408_608065261_n.jpg

உலகத்தமிழ் உறவுகளே! அடிமைபட்டு அல்லல்படும் எமது உறவுகளின் உரிமைக் குரலாய் எழவேண்டியது புலம் பெயர் தமிழர்களினதும், உலகத் தமிழர்களினதும் கடமையும் காலத்தின் தேவையும் ஆகும். தாயக மண்ணில் அல்லல்படும் எம் சொந்தங்களின் வலியை நாம் எம் தோள்களில் சுமக்க வேண்டிய கட்டாயமும், காணாமல் போன தம் உறவுகளை தேடும் அந்த மக்களின் குரலாய் உலகம் எங்கும் ஒலிக்க வேண்டிய குரல் உலகத்தமிழர் குரலே. அந்த வகையில் பிரித்தானிய பாராளுமன்றம் நெல்சன் மண்டேலா சிலையருகே தொடங்கி இந்தியாவில் உள்ள காந்தி சமாதி நோக்கி நடைபயணம் மேற்கொள்கிறேன் .

 

 

உறவுகளே! இந்த நடைபயணம் நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு. எனினும் எம் விடுதலைக்காக போராடும், தேசியத்தையும் தேசிய தலைமையையும் ஏற்று எம் மக்களுக்காக போராடும் அனைத்து அமைப்புகளிடமும் புலம்பெயர் தமிழர்களிடமும், உலகத்தமிழர்களிடமும் ஆதரவை வேண்டி நிற்கிறேன். அதே போல் எனது அமைதியான போராட்டத்தை எல்லா ஊடகங்களும் காவிச்சென்று எம் மக்களுக்கும், உலக மக்களுக்கும் தெரியப்படுத்தி எமது மக்களுக்கான விடுதலைக்கு வலு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். நான் தன்னிச்சையாக நடைபயணத்தை ஆரம்பிப்பதால் எந்த ஊடகத்தையும் நான் நாடவில்லை. சமுக வலைத்தளமான முக புத்தகம் மூலம் [facebook] அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன். தேசியத்தையும் தேசியத் தலைமையையும் மதிக்கும் எந்த ஒரு அமைப்பும், எந்த ஊடகமாக இருந்தாலும் அவர்களின் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எது எப்படியோ எனது அமைதியான போராட்டத்தை முற்றுமுழுதாக எமது உறவுகளின் ஆதரவை நம்பியே தொடங்குகிறேன்.

 

நன்றி வணக்கம்

உங்களில் ஒருவன் லோகேஸ்வரன்

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் அகூதா . பல முறை  முயன்றும் முக நூலில் இருந்து , தனியே எடுக்க தெரியவில்லை . முத்துகுமாரின் நினைவு நாள் 29/01/2013 இல் இவர் தொடங்கும் நடைப் பயணம் வெற்றியடைய , உலகத்தமிழர் அனைவரும் ஒற்றுமையாய் கை கொடுப்போம்.

இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியடைய வாழ்துக்கள்...எத் தடை வரினும்...அதையுடைத்து தொடர்க உம் பயணம்.....

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வாழ்த்துக்கள்......ஆனால் இந்தியாவில் யாராவது காந்தி யார் என்று கேட்டா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்!

 

எதுக்கும் காந்தி தேசத்திடம், விசாவை முன்கூட்டியே எடுத்து வையுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரனின் காந்தி தேசத்தை நோக்கிய, மிக நீண்ட நடைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துகின்றேன். இதன் பின்னராவது, இந்தியா ஈழத்தமிழன் நலனில், உண்மையான அக்கறையைச் செலுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரனின் காந்தி தேசத்தை நோக்கிய, மிக நீண்ட நடைப்பயணம் வெற்றியடைய வாழ்த்துகின்றேன்.

இதன் பின்னராவது, இந்தியா ஈழத்தமிழன் நலனில், உண்மையான அக்கறையைச் செலுத்த வேண்டும்.

 


நன்றி பேராசிரியர்  பதிவுக்கு...........

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தமிழர்களுக்காக நீதிகேட்டு லண்டனிலிருந்து இந்தியா நோக்கிய நடைப்பயணம்! 
[saturday, 2013-01-26 08:25:46]
 
ஈழத் தமிழர்களது விடுதலைக்கான உரிமைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக லண்டனில் இருந்து இந்தியா நோக்கி ஈழத்தமிழர்களுக்கான நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 29 மாலை 6:00 மணிக்கு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு முன்பாக இந்த நடைபயணம் ஆரம்பிக்கவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான நீதி கோரும் நடை பயணங்கள் பல ஏற்கனவே நடந்திருந்தாலும் அவை அத்தனைக்கும் ஏதோ ஒரு அமைப்பின் பின் புலத்திலேயே நடைபெற்றது.ஆனால் இந்த நடை பயணமானது தனி ஒரு மனிதனாக தனது சுய விருப்பில் நடாத்திமுடிக்க தீர்மானித்துள்ளார் சி.லோகேஸ்வரன் என்பவர். ஏனெனில் தற்போது நிலவும் பிளவுகளுக்கு நடுவே தனது இந்த போராட்டம் சிக்கி திசைமாறாமல் இருக்கவும், தனது நோக்கம் சரியான முறையில் நிறைவேற வேண்டும் என்ற நோக்கோடே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சி.லோகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
 
  
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழர்களை கொன்றழிக்கும் கொடிய போரை சிறீலங்கா அரசு இராணுவ இயந்திரத்தின் மூலம் அரங்கேற்றிக்கொண்டிருந்த வேளை அங்குள்ள தமிழர்களை காக்கக் கோரி தமிழகத்தில் தன் உடலில் தீயிட்டு தமிழர்கள் நெஞ்சில் உணர்வுத் தீயை கொளுந்துவிட்டு எரிய வைத்த 'வீரத் தமிழமகன்" முத்துக்குமாரின் 4ம் ஆண்டு நினைவு நாளில் இந்த நடைபயணம் ஆரம்பிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.லண்டனிலிருந்து இந்தியா நோக்கி அதிக தூரம் கொண்டதும் கடினமானதுமான மனிதநேய நடைபயணமானை சி.லோகேஸ்வரன் அவர்கள் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதானது அண்மிக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
 
அது மட்டுமன்றி இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தி சமாதியை காந்திய வழியில் சென்றடையவுள்ள இந்த நடைபயணம் இற்றைக்கு 26 ஆண்டுகள் முன் நீராகாரம் கூட அருந்தாது இந்திய தேசத்திடம் ஐந்தம்சக் கோரிக்கையினை முன்வைத்து 12 நாட்கள் பட்டினிப் போர் புரிந்து உயிர் பிரியும் நேரத்திலும் 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்" என்று உணர்வையும் விடுதலை வேட்கையையும் விதைத்துச் சென்ற தியாக தீபம் திலீபனின் நினைவு நாளில் நிறைவு பெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் என்பதோடு மீண்டும் ஓர் மக்கள் புரட்சியையும் ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவிருக்கும் சி.லோகேஸ்வரன் 15.01.2009 அன்று இலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் தமிழீழ ஆதரவாளருமான தொல். திருமாவளவன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட போது அப்போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியத் தலைநகரில் அமைந்துள்ள பாராளுமன்றம் முன்பாக 6 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டவர்.
 
அதன் பின் தொடர்ந்து ஈழத்தமிழர்கள்அழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் கொதித்தெழுந்த தமிழர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வந்த வேளை அதன் உச்சமாய் தீக்குழிப்பு போராட்டங்களும் நடந்தமை அனைவரும் இலகுவில் மறக்கும் விடையம் அல்ல.
 
29.01.2009 அன்று 'வீரத் தமிழமகன்" முத்துக்குமார், அதன் பின் 12.02.2009 அன்று ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் 'ஈகப்பேரொளி" முருகதாசன் வரிசையில் 14.02.2009 அன்று லண்டனில் பிரித்தானியப் பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக தன் உடலில் தீ மூட்டிக் கொண்டவர்தான் இந்த நடைபயணம் மேற்கொள்ளும் லோகேஸ்வரன்.
 
இருப்பினும் பிரித்தானியக் காவல்துறையினரின் துரித செயற்பாட்டால் காப்பாற்றப்பட்டு பின் தற்கொலைக்கு முயன்ற குற்றச்சாட்டில் கைதாகி 6 மாத காலம் சிறை இருந்து மீண்டவர்.அதன் பின்னும் ஓய்வில்லாது இன விடுதலைக்காய் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வரும் இவர் 2010ம் ஆண்டு, 2011ம் ஆண்டுகளில் நடைபெற்ற மனிதநேய நடைபயணங்களில் பங்குகொண்டவர். அத்தோடு 2010ல் மன்செஸ்ரர் பகுதியிலிருந்து லண்டன் வரை மனிதநேய துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இத்தனையும் செய்த இவர் ஒரு குடும்பத் தலைவர் என்பதும் நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறான நிலையிலும் தனது குடும்பம், தனது வாழ்க்கை என்று சுயநலத்தோடு வாழாமல் தனது தேசம் தனது மக்கள் எனும் தேசப்பற்றோடு செயற்படுவது போற்றுதற்குரியது.
 
இவரின் தேசப்பற்றிற்கும் கடின உழைப்பிற்கும் இந்த நடைபயணத்திற்கும் உலகத் தமிழர்களிடமும், மக்கள் கட்டமைப்புக்களிடம் இருந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறார் லோகேஸ்வரன்.
walk-260113-seithy.jpg
  • கருத்துக்கள உறவுகள்

முயற்சியும், நோக்கமும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

 

தமிழகத்தில் உள்ள தமிழுணர்வாளர்களிடமும் அவசியம் தெரியப்படுத்துங்கள்...உங்களுக்கு பக்கபலமாக இருக்க உதவும். ஏனெனில் இந்திய அரசியல் வர்க்கம், 'பிராந்து'களால் ஆன வலைப்பின்னல்!

155061_326743950769446_616961352_n.jpg

தயவுசெய்து உங்களது சுய விவரத்தை(முகப்பு படம் OR PROFILE PICTURE)கீழ்க்கண்ட படத்திக்கு மாற்ற வேண்ண்டுகிறோம்!

PLEASE BE KIND ENOUGH TO CHANGE YOUR PROFILE PICTURE to SHOW YOUR SUPPORT TO LOGESWARAN WHO IS WALKING ALL THE WAY FROM LONDON PARLIAMENT to INDIA MAHATHMA GANDHI FINAL REST PLACE.

STOP GENOCIDE OF TAMILS BY SRI-LANKA & FREE TAMILS!

தமிழர்களின் விடுதலை மூலம் உலக விடுதலை!

G 4 GENOCIDE TEAMs bringing WORLD FREEDOM through FREEDOM 4 TAMILS!!

முத்துக்குமாரின் நினைவு நாள்ஆனா எதிர் வரும் செவ்வாய் கிழமை 29/01/2013 6:30PM to 7:30pm லண்டன் பாராளமன்றம் முன்!

லோகேஸ்வரன் இந்தியா காந்தி துயிலும் இல்லம் நோக்கி நடைபயணம்!!

http://www.facebook.com/events/231888483613071/

 

தம்பி லோகேஸ்வரனுக்கு எனது மனபூரனமான வாழ்த்துகளும் உமது தியாகத்துக்கு எமது வணக்கத்துடன் பிரதானிகளும்!திலீபன் கண்ட மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!!அணைத்து தமிழ் தரப்பினரும் இந்த தம்பிக்கு உங்கள் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் உதவியையும் செய்யுமாறு வேண்டிநிகிறேன்.ஈழத்தில் இருந்து ஒரு அப்பா!!!

 

- முகநூல்

தமிழர்விடுதலைக்கான நடை பயணம்

 

வாகை தொலைக்காட்சி VAAKAITV நடைபயணம்

 

  • கருத்துக்கள உறவுகள்

லோகேஸ்வரன் அவர்களின் நடைப்பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.