Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது துபாய்...யா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில வாரங்களாகவே கடும் குளிரால் வாடிய அமீரக மக்கள், நேற்றும், இன்றும் துபாயில் கடும் மூடுபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளனர். மூடுபனி காரணமாக அபுதாபி - துபாய் அதிவேக போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. துபாய் விமான நிலையத்தில் இருபது விமான சேவைகளும் ரத்தாகியுள்ளது.

 

 

மூடு பனியில் மூழ்கிய துபாய் நகரின் சில படங்கள்

 

 

1944375931.jpg

Sheik zayed Road

 

 

2527389193.jpg

New Etisalat Building

 

 

3137625355.jpg

Dubai Metro

 

 

3250851435.jpg

Clock Tower

 

 

1975555680.jpg

Sky scrappers in Sheik Zayed Road

 

 

964758177.jpg

Poor visibility to walk

 

 

 

271619239.jpg

Dubai Creek

 

 

3436473370.jpg

Near Gold Souq

 

 

4023908465.jpg

Women in fog

 

 

2918383372.jpg

Dangerous driving

 

 

Image Source: Gulf News.

 

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன ஒப்பீடு...!

 

 

541671_425439420861279_1444020941_n.jpg

 

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன், துபாயின் 'ஷேக் சையத்' சாலை (Inter Change no:1)

 

|

|

|

V

 

அதே இடம் சில வருடங்களுக்கு முன்...

 

1156432057.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பணம் இருந்தால் எந்தப் பாலைவனத்தையும் அழகாக்கலாம் என்று தெரிகிறது. படங்கள் நன்றாக உள்ளன அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணைக்காசு  ஆட்டம் போடுது 

  • கருத்துக்கள உறவுகள்

அழகு

தொடருங்கள்

ராஜவன்னியன், டுபாயில் இன்னும் பனி கூடி, உறை நிலை அளவுக்கு குளிர் கூடி நீங்கள் எல்லாம் யாம் இங்கு பெறும் இன்பம் பெற மனசார வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் இப்படி கட்டாரில் (Qatar) & பக்ரைன் (Bahrain) ல் அதிகம் வாறது, காற்று அடித்தால் தாங்க முடியாது குளிரை.

 

நல்ல ஒரு இடம் ஓமான் மட்டுமே.

 

நன்றி பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எண்ணைக்காசு  ஆட்டம் போடுது 

 

துபாயில் எண்ணெய் வளம் இல்லை

முழுக்க, முழுக்க சுற்றுலா மற்றும் வணிகத்தில் வரும் வருமானமே.

 

எப்படி மேற்குலக சுற்றுலா பயணிகளை கவர்த்திழுக்க வேண்டுமென சூட்சுமம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது! (அப்படி சொல்லிக்கொடுப்பதும் மேற்குலக 'கன்சல்டிங்' நிறுவனங்கள் தான்).

 

மிக அழகாக திட்டமிட்டு, 'துபாய் மெரீனா' என்ற புது நகரை உருவாக்கியுள்ளார்கள்.

 

சரியான திட்டமிடல், நேர்த்தியாக செயல்படுத்தும் தன்மை, திட்டங்கள் முடிவுற்றதும் அதன் மூலம் பெறப்படும் வருமானம்(Return on Investment), ஊழல் குறைந்த நிர்வாகம், சீரிய தொலை நோக்கு, குறைவான மக்கள் தொகை.

 

மிக முக்கியம் - குற்றங்களை களைய & தண்டிக்க இசுலாமிய சட்டம்

 

( பிறந்த நாட்டில் ஆயிரம் சட்டங்கள், விதண்டாவாதங்கள் பேசும்  நம்மவர்கள், மத்திய கிழக்கு மண்ணில் கால் வைத்தவுடன் 'கப்..சிப்' என்று ஒடுங்கி விடுவர். இதை விமான நிலையத்தில் சுங்கச் சோதனைக்கான வரிசையில் நிற்க, தள்ளுமுள்ளுபட்டு முந்துவதிலிருந்து அவதானிக்கலாம். :rolleyes:)

 

மேற்குலகத்தவர்களை விட, ஆசிய கண்டத்தவர்கள் மீது கொட்டப்படும் மதரீதியான பாகுபாடுகள், சட்டங்களை நிலைநிறுத்துவதை தவிர்த்தால், (இங்கே வாழும் நாமும் ஒழுங்காக இருந்தால்), துபாய் நகரம் வாழ்வதற்கு, பாதுகாப்பான, செளகரியமான இடமே! :)

 

 

2q80d5h.jpg

 

28ti1zk.jpg

 

29bkf85.jpg

 

e5hiqb.jpg

 

5ppenc.jpg

 

2zxnl3m.jpg

 

 

படங்கள்: இணையத்திலிருந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன், டுபாயில் இன்னும் பனி கூடி, உறை நிலை அளவுக்கு குளிர் கூடி நீங்கள் எல்லாம் யாம் இங்கு பெறும் இன்பம் பெற மனசார வாழ்த்துகின்றேன்.

 

ரொம்ப நல்ல மனசுக்காரர் நம்ம நிழலி..! வாழ்த்துக்கு நன்றி. :rolleyes:

 

கடும் குளிரால் தொண்டை கட்டி மூன்று நாளா பேச இயலவில்லை. குளிருக்கு தீர்த்தம் பருக பழக்கமும் இல்லை, மனமும் இல்லை.

ராஜவன்னியன் இப்படி கட்டாரில் (Qatar) & பக்ரைன் (Bahrain) ல் அதிகம் வாறது, காற்று அடித்தால் தாங்க முடியாது குளிரை.

 

நல்ல ஒரு இடம் ஓமான் மட்டுமே.

 

நன்றி பகிர்வுக்கு

 

வாஸ்தவம்தான்... ஆனால் ஓமானில் இந்தியர்களின் ஆதிக்கத்தால் (too much politics & tricks) செழிப்பு இல்லை. இயந்திர வாழ்க்கைதான், உடையார்!

அழகு

தொடருங்கள்

 

நன்றி விசுவர்... கள உறவுகள் விரும்பினால் தொடர்கிறேன்.

பணம் இருந்தால் எந்தப் பாலைவனத்தையும் அழகாக்கலாம் என்று தெரிகிறது. படங்கள் நன்றாக உள்ளன அண்ணா.

 

கருத்துக்கு நன்றி.

 

ஆனால் பணம் மட்டும் இருந்தால் போதாது, அதை சரியான வழியில் திட்டமிட்டு செலவழிக்க மனமும் வேண்டுமில்லையா சுமேரியர்?

அழகான படங்கள். இணைப்புக்கு நன்றி. தொடருங்கள் வன்னி அண்ணா.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சில படங்கள்....

 

 

mvmg4j.jpg

 

 

a5nnl.jpg

 

 

mn15cg.jpg

 

 

2afgb5z.jpg

 

 

34dl7cg.jpg

 

 

34zk7c6.jpg

 

 

icls77.jpg

 

 

xrksg.jpg

 

 

jq4abd.jpg

 

 

2s1nk0z.jpg

 

 

acsp3t.jpg

 

 

nn7g2h.jpg

 

 

தொடருமா....?

 

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருக்கு

ஆனால் ஏதோ ஒன்று குறையுது

 துபாய்  என்பதாலா.... :lol:  :D  :D



தமிழ்சிறி

தமிழ்சிறி

தமிழ்சிறி........

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருக்கு

ஆனால் ஏதோ ஒன்று குறையுது

 துபாய்  என்பதாலா.... :lol:  :D  :D

தமிழ்சிறி

தமிழ்சிறி

தமிழ்சிறி........

 

ஸ்ஸ்..யப்பா...! இந்த வயசு போன 'மைனர்' லொள்ளு தாங்கலை.... :lol:

 

 

300whox.jpg

 

பாலையில் ஒட்டக சவாரி...

 

 

 

'விசுவர்'காக....

 

2hhzr0i.jpg

 

பாலையில் 'பெல்லி' டான்ஸ்...

  • கருத்துக்கள உறவுகள்
மிக முக்கியம் - குற்றங்களை களைய & தண்டிக்க இசுலாமிய சட்டம்

 

 

பாடசாலையில் புகுந்து  குழந்தைகளை சுட்டுத்தள்ளவில்லை.நடுவீதியில் பெண்ணை வல்லுறவு செய்து விட்டு பின்னர் கொலை செய்து வீதியில் வீசவில்லை எனும் போது இஸ்லாமிய சட்டம் மக்களுக்கு பாதுகாப்பை தருகின்றது என்றே தோன்றுகிறது. மேற்கு நாடுகள் தங்களால் இயலாவிட்டால் மட்டம் தட்டுவதில் வல்லவர்கள் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.
 
டுபாயின் காட்சிகள் அழகாக உள்ளன. மேலும் படங்களை இணையுங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

அழகாக இருக்கு

ஆனால் ஏதோ ஒன்று குறையுது

 துபாய்  என்பதாலா.... :lol:  :D  :D

தமிழ்சிறி

தமிழ்சிறி

தமிழ்சிறி........

துபாயில் உயர்ந்த‌ கட்டிடங்களை... பார்த்தால், மனசு குளிருமா? பெண்கள் எல்லாம்... உச்சந் தலையிருந்து, உள்ளங்கால் வரை கறுப்பு அங்கியால்... போத்துக் கொண்டு திரிவதைப் பார்க்க‌... ஆர் கிழவி, ஆர் குமரி என்றே.... தெரியாமல் இருப்பதால் எனக்கு, ஐரோப்பா தான் பிடிக்கும். :D  :lol:  :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துபாயில் உயர்ந்த‌ கட்டிடங்களை... பார்த்தால், மனசு குளிருமா? பெண்கள் எல்லாம்... உச்சந் தலையிருந்து, உள்ளங்கால் வரை கறுப்பு அங்கியால்... போத்துக் கொண்டு திரிவதைப் பார்க்க‌... ஆர் கிழவி, ஆர் குமரி என்றே.... தெரியாமல் இருப்பதால் எனக்கு, ஐரோப்பா தான் பிடிக்கும். :D  :lol:  :wub:

 

தவறாக எடை போட்டுள்ளீர்கள்... நீங்கள் தெய்ரா துபாய், ரிக்கா வீதியிலுள்ள விடுதி பஃப்களில் சென்று வாருங்கள்.

 

ரசியுங்கள், ஆனால் வாலாட்டினால்....நசுக்...!   :lol: 

 

  • கருத்துக்கள உறவுகள்

தவறாக எடை போட்டுள்ளீர்கள்... நீங்கள் தெய்ரா துபாய், ரிக்கா வீதியிலுள்ள விடுதி பஃப்களில் சென்று வாருங்கள்.

 

ரசியுங்கள், ஆனால் வாலாட்டினால்....நசுக்...!   :lol: 

 

 

வன்னியன்.... தெய்ராவிலுள்ள, ரிக்கா வீதிக்குப் போய்.. நசுக்கிடாமல், எதுவும் செய்ய முடியாதா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வன்னியன்.... தெய்ராவிலுள்ள, ரிக்கா வீதிக்குப் போய்.. நசுக்கிடாமல், எதுவும் செய்ய முடியாதா? :D

 

ம்ம்...ஏதோ சிறுவர்கள் சொல்லுவார்களே...?   ஆ...ஆசை... தோசை... அப்பளம்... வடை..!!

பின்னி, பெடலெடுத்துவிடுவார்கள்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தவறாக எடை போட்டுள்ளீர்கள்... நீங்கள் தெய்ரா துபாய், ரிக்கா வீதியிலுள்ள விடுதி பஃப்களில் சென்று வாருங்கள்.

 

ரசியுங்கள், ஆனால் வாலாட்டினால்....நசுக்...!   :lol: 

 

 

ஏனய்யா

சந்தோசமா அழகை ரசிக்கும் போது  இந்த வார்த்தை

தானாக கையால் பொத்திக்கிட்டேன் :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏனய்யா

சந்தோசமா அழகை ரசிக்கும் போது  இந்த வார்த்தை

தானாக கையால் பொத்திக்கிட்டேன் :lol:  :D  :D

 

விசுகு, வன்னியன் சொன்னது.... கையை வெட்டிவிடுவார்கள் என்று.

நீங்கள் உங்கள் கையால், எதை... பொத்தினீர்கள்? :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி

தமிழைப்புரிந்து கொள்ளுங்கள்

கையை  வெட்டுவது என்றால் நறுக்

இது நசுக்............... :D

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்...ஏதோ சிறுவர்கள் சொல்லுவார்களே...?   ஆ...ஆசை... தோசை... அப்பளம்... வடை..!!

பின்னி, பெடலெடுத்துவிடுவார்கள்! :lol:

 

பின்னி பெடலெடுப்பது என்றால் என்ன? வன்னியன்.

எங்கள் ஊரில்....  ஒரு எச்சரிக்கை, இரண்டு வெருட்டு, மூன்று அடி, ஆக மிஞ்சினால்... நாலு நாயின், தலையை வெட்டி வீட்டு வாசலில் போட்டு அதன் ரத்தத்தை... சுவரெங்கும் தெளித்து விடுவார்கள். அதுக்கும் அடங்கவில்லை என்றால், அஞ்சாவதாய் வெள்ளை வானில் கடத்தல் தான்.... அதோடை... ஆள், அவுட். ஐ.நா. வந்தாலும்... கண்டு பிடிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பின்னி பெடலெடுப்பது என்றால் என்ன? வன்னியன்.

 

 

துபாய் போயி ஒரு சேக்கின் பொண்டாட்டியின் கையைப்புடிச்சு இழுங்கள்...பின்னர் தெரியும் அண்ணை.. :D 

  • கருத்துக்கள உறவுகள்

துபாய் போயி ஒரு சேக்கின் பொண்டாட்டியின் கையைப்புடிச்சு இழுங்கள்...பின்னர் தெரியும் அண்ணை.. :D 

 

சேக்கின் பெண்டாட்டி, பெண் உடுப்புப் போட்ட... அவரின் "பொடி காட்"டா (Bodyguard), உண்மையான பெண்டாட்டியா... என்று, எப்படி கண்டு பிடிப்பது சுபேஸ். :rolleyes:  :icon_idea:

சிறி

தமிழைப்புரிந்து கொள்ளுங்கள்

கையை  வெட்டுவது என்றால் நறுக்

இது நசுக்............... :D

 

உங்களின், கருத்தை... மிகவும் ரசித்தேன். எப்படி, இப்பிடி... எல்லாம் யோசிக்கிறீர்கள் விசுகு. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

துபாய் இப்படி குளிர் வலயத்துக்குள் சிக்கியிருகிறதே!

எந்த மாதத்தில் இனி வெப்பம் வருமோ
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.