Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொடரை எழுதுறதை விட,எழுதின பிறகு அத் தொடர் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய தில்லும் இருக்க வேண்டும்...சாஸ்திரியிடம் அந்த தில் இல்லை

 

நன்றி  ரதி

சாத்திரியின் தொடரை நானும் முழுமையாக வாசித்தேன். நான் சிறுவயதிலிருந்து பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு குழுவினரின், அமைப்புக்களின், அரசுகளின் இராச்சியங்களில் பெற்ற பல்வேறு அனுபவங்களும், அவை தொடர்ப்பாக கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும் தொடர்பாய் நிறைய எழுதவேண்டும் என்று விரும்பினேன். முன்புபோல் கருத்துக்களத்தில் நீண்ட வாதங்களில் பங்குபெறுவதற்கு தற்போது நேரம் இல்லை. எனவே ஒதுங்கிக்கொள்ளவேண்டியுள்ளது.

 

ரமணன் எனும் பெயரில் ஒருவர் சாத்திரியின் இந்தத்தொடர் சம்மந்தமாக காட்டமான விமர்சனங்களை இங்கு எழுதிவந்தார். அவரது கருத்துக்களை தற்போது காணவில்லை. சாத்திரியின் தொடரை இங்கு விறுவிறுப்பாக நகர்த்தியதில் அவரின் பங்களிப்பும் உள்ளது என்றே கூறவேண்டும். பல சமயங்களில் நகைச்சுவையாகவும் அமைந்தன. எவரதும் கருத்துக்களுடன் உடன்படுவதோ அல்லது உடன்படாமைக்கோ அப்பால் பலரது எண்ண ஓட்டங்களை அறியமுடிந்தது.

 

சரித்திரத்தின் சரித்திரம் என்று ஓர் தலைப்பை இங்கு கண்ணுற்றேன். பல தடவைகள் மீண்டும் மீண்டும் அந்தத்தலைப்பு யாழ் கருத்துக்களத்தை மேலோட்டமாக நோட்டமிட்டபோது தென்பட்டது. ஒவ்வொரு தடவையும் அதைப்பார்த்தபோது சாத்திரியின் சரித்திரம் எனும் தலைப்பில் யாரோ ஏதோ எழுதியுள்ளார்களோ என்றே ஓர் உணர்வு ஏற்பட்டது. இது ரமணன் என்பவரின் கருத்துக்களை வாசித்ததன் பாதிப்போ தெரியவில்லை.

 

2008ம் ஆண்டு யாழ் கருத்துக்களத்தில் சூடான விவாதங்களில் ஈடுபட்டபோது சாத்திரியினால் நான் "மீட்பர்", "மாற்றுக்கருத்து மாணிக்கம்" போன்ற சில சொற்பதங்கள் மூலம் இங்கு விளிக்கப்பட்டேன். இப்போது சாத்திரியையே மாற்றுக்கருத்து மாணிக்கமாக பலரும் இங்கு விளிக்கும்போது சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை.

நன்றி அண்ணா தாங்கள் எனது கருத்துக்களை கவனித்து வந்ததற்கு . ஆனால் நான் இந்த தொடருக்கும் காட்டமான பதில் கொடுத்து இருந்தேன் ஆனால் அதில் ஒரு வரியா கூட நிர்வாகம் /சாத்திரியின் ஆதரவாளர் விட்டு வைக்காமல் எனக்கு ஏன் என்று கூட சொல்லாமல் வெட்டி/தூக்கி விட்டார். பல இடங்களில் என் கருத்துக்கள் வெட்டு வாங்கப் பட்டது . ஆனால் எதுக்கும் சாத்திரி பதில் சொல்லவில்லை யாழின் ஜனநாயகம் கண்டு நான் மகிழ்வுற்றேன்

 நன்றி ஆர்.ரமணன் 

மூச்சு இருக்கும் வரை ஓயாது எம் பணி

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் 

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் தொடரை வாசித்து முடித்தபோது செவிவழியாகக் கேள்விப்பட்ட பல விடயங்களை எழுத்தில் கண்டதான உணர்வுதான் வந்தது. எனினும் இவற்றில் உண்மை எது பொய் எது என்று பிரித்தறிவது கடினம் என்றுதான் நினைக்கின்றேன். அப்படிப் பிரித்து அறிந்தும் ஒரு பிரயோசனமும் இல்லை என்பது வேறு விடயம்..

 

இன ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் இறுதியில் பங்கு பிரிப்புப் போராக வந்து, வெறும் உரையாடல்களில் கூட ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்துள்ள 2009 மே மாதத்திற்கு பின்னரான இக்காலத்தில், சிறிலங்கா அரசு மீது போர்க்குற்றங்களை அழுத்தமாகப் பிரயோகித்து அரசியல் விடுதலையை வெல்வதற்கு இரகசியச் செயற்பாடுகள் தேவையா என்ற கேள்வியும் வருகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொடரை எழுதுறதை விட,எழுதின பிறகு அத் தொடர் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய தில்லும் இருக்க வேண்டும்...சாஸ்திரியிடம் அந்த தில் இல்லை

 

அப்படியா கேள்வியே கேட்காமல் பதில் சொல் என்றால் எப்படி ??  கேள்வி கேட்கும் தில் இருக்வேண்டும்  கேள்வியை கேட்ட பின்னர் பதில் சொல் என்கிற தில் இருக்வேண்டும் . பிறகு தான் ஜில் ஜில்.

அப்படியா கேள்வியே கேட்காமல் பதில் சொல் என்றால் எப்படி ??  கேள்வி கேட்கும் தில் இருக்வேண்டும்  கேள்வியை கேட்ட பின்னர் பதில் சொல் என்கிற தில் இருக்வேண்டும் . பிறகு தான் ஜில் ஜில்.

நான் ஒரு கேள்வி தங்கள் பழைய தொடரில்கேட்டிருந்தேன்.பதில் இன்னமும் வரவில்லை.புலிகளின் வெளிநாடு வருவாயின் அளவை பெற்றுகொண்ட மூல்த்தை கேடிருந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு கேள்வி தங்கள் பழைய தொடரில்கேட்டிருந்தேன்.பதில் இன்னமும் வரவில்லை.புலிகளின் வெளிநாடு வருவாயின் அளவை பெற்றுகொண்ட மூல்த்தை கேடிருந்தேன்.

 

மூலம் எது தனி  நபர் வியாபாரமா கடத்தல்களா. போதைப்பொருள் வியாபரமா  மக்களிடம்  தன்மையாகவும் மிரட்டியும்  பெறப்பட்டைவையா  என்பதை தனியாக தெளிவு படுத்தவும்.

நாங்கள் இட்ட கருத்துகளை அழித்துவிட்டால் கேள்வியே யாரும் கேட்கவில்லை என்று அர்த்தமோ? சாத்திரிக்கு தனிப்படவும் கருத்துகளை அனுப்பினோம்... கேள்விகளுடன்... பதில்களை தரலாமே தில் இருந்தால்......

 

கடைசியில் தகவல்களின் வறுமையே சாத்திரியிடம் எஞ்சிநிற்கிறது என்பது மட்டுமே உண்மை....

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா கேள்வியே கேட்காமல் பதில் சொல் என்றால் எப்படி ??  கேள்வி கேட்கும் தில் இருக்வேண்டும்  கேள்வியை கேட்ட பின்னர் பதில் சொல் என்கிற தில் இருக்வேண்டும் . பிறகு தான் ஜில் ஜில்.

 

 

நீங்கள் எழுதும் இத் தொடரில் சிலர் உங்கள் திரி தொடர்பாக பல கேள்விகளை கேட்டு இருந்தனர் ஒருத்தருக்கும் இது வரை நீங்கள் பதில் சொல்லி நான் காணவில்லை...முதலில் அவர்களுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்...உங்களுக்கு ஆதரவாக எழுதினால் அதற்கு பதில் கருத்து எழுதுகின்றீர்கள் ஆனால் உங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து எழுதினால் பேசாமல் இருக்கிறீர்கள் அல்லது நிர்வாகத்தை மிரட்டி[நீங்களோ அல்லது உங்கள் ஆதரவாளார்களாகவோ இருக்கலாம்] அவர்களது கருத்தையே நீக்க வைக்கிறீர்கள்.
 
நீங்கள் எழுதிய இந்த இறுதிப் பாகத்தில் கூட‌ இளங்கதிரிக்கான உங்களது பதில்களை ஆவலோடு எதிர் பார்த்திருந்தேன்...ஆனால் அவர‌து கருத்துக்களை நீக்கினது தான் மிச்சம்...உங்களுக்கு தில் இருந்தால்,சரியான பதில்கள் இருந்தால் தாருங்கள்...தயக்கமேன்...நன்றி  
  • கருத்துக்கள உறவுகள்

2009 மே மாதத்திற்கு பின்னரான இக்காலத்தில், சிறிலங்கா அரசு மீது போர்க்குற்றங்களை அழுத்தமாகப் பிரயோகித்து அரசியல் விடுதலையை வெல்வதற்கு இரகசியச் செயற்பாடுகள் தேவையா என்ற கேள்வியும் வருகின்றது.

 

இனி மேல் ரகசிய செயல்பாடுகளை நம்பியிருப்பதை நாம் தவிர்க்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் ரகசிய செயல்பாடுகளை நம்பியிருப்பதை நாம் தவிர்க்கவேண்டும்

 

இன்னும் மிக உன்னதமான இலட்சியத்திற்காக இரகசியமாக செயற்படுகின்றோம் என்று சொல்பவர்களை நம்புபவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

சிந்திக்க வேண்டிய விடயம்தான் ............இரகசிய செயல்பாடு என்பது  அல்லது வெளிப்படையான செயல்பாடு என்பது அந்தந்த சூழலிலேயே தங்கியுள்ளது என்று  சிந்திக்க வேணுமா ....???

 

.புலம்பெயர்வாழ் மண்ணில் அன்று தேசிய உணர்வோடு ,பல சவால்கள் மத்தியிலும் வெளிப்படையாக செயல்பட்டவர்களை ,ஒவ்வொருவராக கைது செய்து சிறையில் வைத்த நிலையை சிந்திக்கவேணுமா .............???

 

அல்லது அதே உணர்வுடன் இன்றும் ஆபத்து என்று தெரிந்தும் ஆனால் செயல்படவேணும் என்ற உணர்வில் செயல்பட்டுக்கொண்டு இருப்பவர்களைப்பற்றி சிந்திக்கவேணுமா....????

 

அல்லது போராட்டத்தின் வெற்றி வரையும் தம்பட்டமடித்துவிட்டு .....அது மௌனித்தவேளை ,,,,,,,தாம்தீம்தோம்  அடிப்பவர்களை பற்றி சிந்திக்கவேணுமா....???? 

 

அல்லது  மற்றவனை தம்மைப்போல்  பேயனாக நினைத்து செயல்படுகாலம் வரை மௌனமாக இருந்து விட்டு செயலிழந்த காலத்தில் கட்டுரைகளும் ,கவிதைகளும் ,அதற்கு ஆதரவாக பின்னோட்டங்களும் எழுதுபவர்களைப்பற்றி சிந்திக்கவேணுமா ..........???

 

எதைப்பற்றி சிந்திக்கவேணும் ..சிந்திப்பதுகூட வெளிப்படையாக இருக்கவேணுமா ......???????

சாத்திரி போராட்டகால கதைகளை எழுதவும்..அது கிளுகிளுப்பாகவும்..திரில்லிங்காகவும்  இருக்கும்
இந்த நாய்-பூனை சண்டையை வாசிக்க ஒரே இழவெடுப்பா இருக்கு..அதுக்கு வியாக்கியானம் வேறே குடுக்கோணும்..

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வேண்டிய விடயம்தான் ............இரகசிய செயல்பாடு என்பது  அல்லது வெளிப்படையான செயல்பாடு என்பது அந்தந்த சூழலிலேயே தங்கியுள்ளது என்று  சிந்திக்க வேணுமா ....???

 

.புலம்பெயர்வாழ் மண்ணில் அன்று தேசிய உணர்வோடு ,பல சவால்கள் மத்தியிலும் வெளிப்படையாக செயல்பட்டவர்களை ,ஒவ்வொருவராக கைது செய்து சிறையில் வைத்த நிலையை சிந்திக்கவேணுமா .............???

 

அல்லது அதே உணர்வுடன் இன்றும் ஆபத்து என்று தெரிந்தும் ஆனால் செயல்படவேணும் என்ற உணர்வில் செயல்பட்டுக்கொண்டு இருப்பவர்களைப்பற்றி சிந்திக்கவேணுமா....????

 

அல்லது போராட்டத்தின் வெற்றி வரையும் தம்பட்டமடித்துவிட்டு .....அது மௌனித்தவேளை ,,,,,,,தாம்தீம்தோம்  அடிப்பவர்களை பற்றி சிந்திக்கவேணுமா....???? 

 

அல்லது  மற்றவனை தம்மைப்போல்  பேயனாக நினைத்து செயல்படுகாலம் வரை மௌனமாக இருந்து விட்டு செயலிழந்த காலத்தில் கட்டுரைகளும் ,கவிதைகளும் ,அதற்கு ஆதரவாக பின்னோட்டங்களும் எழுதுபவர்களைப்பற்றி சிந்திக்கவேணுமா ..........???

 

எதைப்பற்றி சிந்திக்கவேணும் ..சிந்திப்பதுகூட வெளிப்படையாக இருக்கவேணுமா ......???????

 

ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் இரகசியச் செயற்பாடுகளுக்கான தேவை இருந்தது. எனினும் இன்று ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் இரசியச் செயற்பாடுகள் என்று சொல்லப்படுபவை சாதித்தவை என்ன? சில கொலைகளையும், துரோகி என்று ஆளையாள் பட்டம் சூட்டலையும் தவிர எதையுமே உருப்படியாகச் சொல்லமுடியாது.

 

அத்தோடு இரகசியச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரே தம்மை ஜனநாயக மனித நேயச் செயற்பாட்டார்கள் என்று சொல்லி புலம்பெயர் அமைப்புக்களில் செல்வாக்குச் செலுத்துவதனால், இந்த அமைப்புக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இராஜதந்திர வட்டாரங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் உள்ளது. இத்தகைய காரணங்களால்தான் தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் இழுபறிக்கு உள்ளாகி தேக்க நிலையில் உள்ளன. இந்தத் தேக்க நிலைமைகள் காரணமாக உண்மையான அக்கறையுள்ளவர்கள் ஒன்றில் அரசியலில் செயற்படுவதில் இருந்து வெளியேறுகின்றார்கள். அல்லது அல்லற்படும் மக்களினது மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்ய தம்மால் இயன்றவரை தமக்குத் தெரிந்த வழிகளில் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

 

எனினும் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் எந்த அரசியல், மனிதாபிமான நடவடிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தை மீறிச் செய்யப்பட்டால் அவற்றின் வீச்சு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதால், சிலர் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து இயங்கும் கே.பி. போன்றவர்களுடன் நேரடியாகச் சேர்ந்து வேலை செய்கின்றார்கள். இப்படியான நிலைமைகளுக்கு எல்லாம் வெளிப்படைத் தன்மையற்ற மறைமுகச் செயற்பாடுகளே முக்கிய காரணம்.

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய இந்தக் கட்டுரையில் எழுதப் பட்டிருக்கும் தெய்வீகன் என்பவரே தற்சமயம் இலங்கை இராணுவத்தால் மூன்று பேரில் கோபியோடு கொல்லப் பட்டவர்களில் ஒருவராவார்.இவரது பெயரை தேவியன் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.இவரை மலேசியாவில் வைத்து இலங்கைப் புலனாய்வு பிரிவு கைது செய்ததாக அறிய முடிகின்றது.இங்கு நான் எழுதிய பெயர்களில் கஸ்ரோவின் கிளிநொச்சி அலுவலகமான நந்தவனத்தில் இருந்த நந்தகோபன் ஈரானில்  வைத்து கைது செய்யப் பட்டுளார்.நந்தவனத்தில் இருந்தவர்களில் மற்றொருவரான இரும்பொறைக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. இவர் தற்சமயம் யெர்மனியில் வசிக்கிறார். வினாயகம் பிரான்சில் பாரிஸ் பு றநகர் பகுதியில் வசிக்கிறார். இவர்களும் இந்த கைது நடவடிக்கையில் இலங்கை கொண்டு செல்லப் படலாம் நோர்வேயில் இருக்கும் நெடியவன் கடைசிவரை பத்திரமாகவே இருப்பார். அவரை நோர்வே காப்பாற்றும். .இந்த நாடகத்தின் இறுதி காட்சிகள் மர்மமானதாகவே இருக்கும்.'(யாழிலை திட்டு வாங்கி கன நாளாகுது அதுதான் )

  • கருத்துக்கள உறவுகள்

குருடன் பெண்டாட்டிக்கு அடிச்சகதை எழுதும் உங்கள் கணக்கு தவறு சாத்திரியார். 

இப்பிடி வந்து நீங்களே உங்களை பிரபலப்படுத்தினாலே தவிர உங்களை இங்கை ஒரு நா....ம் தேடாது.

  • கருத்துக்கள உறவுகள்

 

நீங்கள் எழுதிய இந்த இறுதிப் பாகத்தில் கூட‌ இளங்கதிரிக்கான உங்களது பதில்களை ஆவலோடு எதிர் பார்த்திருந்தேன்...ஆனால் அவர‌து கருத்துக்களை நீக்கினது தான் மிச்சம்...உங்களுக்கு தில் இருந்தால்,சரியான பதில்கள் இருந்தால் தாருங்கள்...தயக்கமேன்...நன்றி  

 

தில் இருந்தால் இப்பிடி லொள்லொள் வராது ரதி. இது வெறும் பிலிம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருடன் பெண்டாட்டிக்கு அடிச்சகதை எழுதும் உங்கள் கணக்கு தவறு சாத்திரியார். 

இப்பிடி வந்து நீங்களே உங்களை பிரபலப்படுத்தினாலே தவிர உங்களை இங்கை ஒரு நா....ம் தேடாது.

 

சும்மா ஒரு தகவலை சொல்லி வைச்சன்  அவ்வளவுதான். மற்றபடி அடுத்த இலண்டன் பட்டியல் தயாராகுதாம்.  :icon_mrgreen:  :icon_mrgreen:  அது கிடக்கட்டும்.அதுதான் சொல்லிட்டனே யாழிலை திட்டு வங்கி கன நாள் ஆகுது எண்டு.தாராளமாய் திட்டுங்கோ...அடுத்த வருடமும்  நான் இந்த பகுதியை யாழில் புதுப்பிக்க நேரிடலாம் அப்போ இன்னும் சில பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம் எனவே அடுத்த வருடம் சந்திப்போம்

:)

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.

 

கடந்த

பகுதியில் பரிதிக்கும்  தலைமைச் செயலக  தமிழரசனிற்கும் நடந்த பேச்சு

வார்த்தைகளின் பின்னர்  தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு  பரிதி

ஒத்துக்கொண்டு அறிக்கை  வெளியிடுவதற்கு  முன்னராக  அதனைத் தடுத்து

நிறுத்துவதற்காக   லண்டன்  தனத்திடம் இருந்தும்  சுவிஸ் ரகுபதியியாலும்  

கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து  ஜெர்மனியில் இருந்த இரும்பொறை

பிரான்சிற்கு  விரைந்து வந்ததும்  பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை

பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக

செயலகம் சார்ந்த  இணையத் தளங்கள்  இந்தக் கொலையை  தலைமைச் செயலகத்தை

சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில்

இறங்கியிருந்தார்கள். அதற்காக அவர்கள் அவிழ்த்த பொய் செய்திகள்தான் 

பாரிசில் வினாயகம்  சுற்றி வழைத்து கைது. தமிழரன். கைது. கனி என்பவர்

என்கிற  பரபரப்பு செய்திகள். இவை எல்லாவற்றையும் விட  அதிர்வு என்கிற

அனைத்துலகத்தின்  அம்மம்மா குழல்(ஊதுகுழல் )இணையம் வெளியிட்ட செய்தியை

பார்த்து  விழுந்து  விழுந்து சிரிப்பதா  அல்லது  கோவி  கோவி அழுவதா

என்றே தெரியாதிருந்தது.

 

காரணம் அவர்களது செய்தியில் 

வினாயfம் சுற்றி வழைத்து கைது  என்பதோடு செய்தியை உறுதிசெய்வதானால் 

பிரெஞ்சு புலனாய்வு த் துறையோடு தொர்பு கொள்ளவும் என்று  077 என்று

தொடங்கும் ஒரு இலக்கத்தையும் எழுதியிருந்தார்கள்.   அதை படிப்பவர்கள்

பாவம் பிரெஞ்சு  புலனாய்வுத் துறை  அவர்களிற்கு  சாதாரண தொலைபேசி இணைப்பே

இல்லை  கைத்தொலைபேசி   தான் பாவிக்கிறாங்கள் என்று நினைத்து விட்டு அந்த 

இலக்கத்திற்கு போனடித்திருந்தால் இந்த இணைப்பு பாவனையில் இல்லையென்று 

சொல்லியிருக்கும். அட பாவமே  பிரெஞ்சு புலனாய்வு துறையிடம் பணம்

இல்லாததால்  தொலைபேசி கட்டணத்தை கட்டவில்லையென்று நினைத்திருப்பார்கள்.

 

அவர்களின் இந்த திட்டமும் பிசுபிசுத்து போக  அனைத்துலகச் செயலகத்தின் அடுத்த திட்டம்தான்  மீள இணையும் புலிகள் என்கிற ஒரு காணொளி.

இந்தக்

காணொளியானது இறுதிக் கட்ட யுத்தத்தில்  நாட்டை விட்டு விட்டு வெளியேறி 

அவுஸ்ரேலியா போவதற்காக இந்தோனோசியாவில்  தங்கி நிற்கும் புலிகள் அமைப்பை

சேர்ந்தவர்களால் தயாரிக்கபட்டிருந்தது. இவர்களிற்கு அனைத்துலகச் செயலகமே

பணஉதவி செய்துவிட்டு அப்படியொரு காணொளியினை தயாரித்து அனுப்புமாறு

கோரியிருந்தனர்.  காணொளியினை பார்ப்பவர்களிற்கு  அதனை தயாரித்ததன்

நோக்கம் புரியும்.

http://youtu.be/5tzmQA5THo8

 

 

ஆனால் 

பரிதியின் கெலையை பிரெஞ்சு காவல்த்துறை  ஆரம்பத்தில் மூன்று கோணங்களில்

விசாரிக்க ஆரம்பித்திருந்தனர். அவை. 1) இலங்கை புலனாய்வுத் துறை.  2) உள்

வீட்டு மோதல்கள் அதில் தலைமைச் செயலகம்.  அல்லது

அனைத்துலக்கத்திற்கிடையேயான  குழு மோதல்.  விசாரணைகளின் ஆரம்பத்திலேயே  

கொலை சம்பந்தமாக   பரிதியுடன் நெருக்கமாக  இருந்த பாம்புக் குழுவை

சேர்ந்த  இருவர்  கைதானதும் தலைமைச் செயலகத்திற்கும் கொலைக்கும் எவ்வித

தொடர்பும் இல்லையென்று உறுதியாகிவிட்ட நிலையில்தான்  அடுத்ததாக அவர்களத

விசாரணை  இலங்கை புலனாய்வு பிரிவா அல்லது அனைத்துலகத்தின்  உள்வீட்டு

மோதலா? என்கிற கோணத்தில் விசாரணைகள் போய்க்கொண்டிருந்தது. 

அப்பொழுதான்  பிரான்சின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான Le

Parisienபத்திரிகையில் இலங்கையரசே  பரிதியின் கொலைக்கு பின்னால் 

இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

 

 

ஆனால்

இது போன்ற  அரசியல் கொலை பற்றிய செய்திகளில் தகவல் அடிப்படையாக  ஒரு

விசாரணை  அதிகாரியை மேற்கோள் காட்டியோ அல்லது உள்துறை அமைச்சர் அல்லது

அதன் குரல் தரவல்ல அதிகாரிகளை  மேற்காட்டியே செய்தி வெளியாவது  வழைமை. அதன்

அண்மைய ஊதாரணம்  பாரிசில் படுகொலை செய்யப் பட்ட மூன்று குர்திஸ்தான்

போராளிகள் பற்றிய செய்திகளை பிரெஞ்சு பத்திரிகைகள் வெளியிட்ட விதத்தினை

படித்திருந்தவர்களிற்கு புரிந்திருக்கும். ஆனால் பரிதி பற்றி Le

Parisienபத்திரிகையில் ஒரு மொட்டை செய்தியாகவே வெளிவந்திருந்தது.

அதையெல்லாம் விட்டுவிடலாம்.  இந்தக் கொலையை இலங்கை  அரசே செய்தது என

வைத்துக் கொள்வோம்.  அரசியல் கொலைகளை  கன கச்சிதமாக உளவுப் பிரிவுகள்

மூலம் மேற்குலக நாடுகளும். இரஸ்யாவும்.  இஸ்ரவேலுமே இதுவரை செய்து

முடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் அனைத்து வளங்களையும்

பாவித்திருப்பதோடு கொலை நடந்து பல வருடங்களின் பின்னர் அதனோடு சம்பந்தப்

பட்டதொருவர்  ஓய்வு பெற்ற காலத்தில் ஒரு புத்தகத்தை எழுதினாலோ அல்லது

ஏதாவது ஒரு பத்திரிகையாளர் பல வருடங்களாக  நோண்டி விடயத்தை வெளியே கொண்டு

வந்தால்தான் வெளி வரும். ஆனால் அந்த உண்மைகள் வெளிவரும் போது அந்த விடயமே

மறந்து போய்விட்டிருப்பதோடு  அதை வைத்து எந்த நியாயமும் கிடைத்ததும்

இல்லை.இவங்கை போன்ற சிறிய நாடுகள் மேற்குலக நாடுகளிற்குள் புகுந்து

அரசியல் கொலைகளை செய்வதற்கு துணிய மாட்டாது காரணம் கொலையை இலங்கையரசுதான்

செய்ததென்று நேரடியாக உறுதிப் படுத்தப் பட்டால் பிரான்ஸ் போன்ற  பலமான

நாடுகளிற்கு  தங்கள் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையாகி  கெளரவ பிரச்சனையாகி

அது இலங்கை மீதான அழுத்தத்தை கொடுக்கும் என்று தெரியாத அளவிற்கு 

இலங்கையரசு முட்டாள் அல்ல .

 

அதுவும்  Le

Parisienபத்திரிகையில் வெளி வந்தது போல் இலங்கையரசின் தூதரகம் நேரடியாக

சம்பத்தப் பட்டிருக்காது. இலங்கைத் தூதரகத்திற்கே தெரியாமல் இலங்கை

புலனாய்வுத்துறை  வேறு தரகர்கள் ஊடாக கூலிக் கொலையாளர்களை வைத்து

நடத்தியிருக்கும். அப்படியே  தரகர்கள் ஊடாக கூலிக்கு ஆளை வைத்து  பரிதியை

கொலை செய்திருந்திருந்து பிரெஞ்சு புலனாய்வுத் துறை அதை

கண்டுபிடித்திருந்தாலும்  பிரெஞ்சு அரசு  தமிழர்களிற்கு அநீதி நடந்து

விட்டது என்று இலங்கை யரசை குற்றம் சாட்டவோ ஜ.நா சபையில் இலங்கைக்கெதிராக

தீர்மானமோ. அல்லது தமிழீழத்தை வாங்கித் தரப் போவது கிடையாது. பிரான்ஸ்

தன்னுடைய நலனிற்கு தேவையான ஏதோ ஒன்று இலங்கையிடமிருந்து  பெறமுடியுமானால் 

இலங்கையரசுடன் பேரம் பேசி இலங்கையை அடிபணியவைத்து தன்னுடைய தேவையை 

தீர்துக்கொள்ளும். அதே நேரம் பரிதி கொலைக்காக  நீதி கேட்டு கூட்டம்

போட்டாலென்ன  பாரிசில் இருந்து  ஜ.நா சபைவரை பிரதட்டை  தூக்கு  காவடி 

என்று எடுத்தால் கூட ஒன்றும் நடக்கப்போவதில்லை.காரணம் பரிதி பரிதி

பிரான்சில் தடைசெய்யப் பட்டதொரு அமைப்பின் பிரதிநிதி என்பதோடு  பிரெஞ்சு

காவல்த்துறையின் கண்காணிப்பில் இருக்கின்ற ஒரு முன்னை நாள் கைதி.

 

ஆனால்

தற்சமயம் பரிதியின் கொலை விசாரணை உள்வீட்டு விவகாரம் என்கிற கோணத்திலேயே

தான் போய்க்கொண்டிருக்கின்றது. கைதானவர்கள் பரிதியோடு நெருக்கமாக

இருந்த ஒரு வன்முறைக் குழுவினர். பரிதி தலைமைச் செயலகத்துடன் இணைவதை

விரும்பாத சுவிஸ் ரகுபதியும். லண்டன் தனமும் கொடுத்த அழுத்தத்தினால் 

இரும்பொறையே  பாம்பு குழுவிடம் பரிதியை  போடச் சொல்லியிருக்கலாம்.

இப்படி நடந்ததை பிரெஞ்சு காவல்த்துறை உறுதி செய்தாலும்  செய்ததும் தமிழன்

செத்ததும் தமிழன் . எனவே கணக்கு தீர்த்தல் என்கிற  வகையில் இந்த கொலையை

அடக்கி கைது செய்யப் பட்டவர்கள் விசாரணை கைதிகள் என்கிற பெயரிலேயே  ஆறு

அல்லது ஏழு வருடங்கள் கழித்து எச்சரித்து விடுவித்து விடுவார்கள்.  அவர்கள்

விடுவிக்கப்பட்ட செய்தி எந்த ஊடகத்திலும் வராது. ஆனால் உண்மையில்  என்ன

நடந்தது என்பதனை  ஊடுருவி தேடல்கள் நடத்தி கண்டு பிடித்து கொலையை வெளியே

கொண்டு வரும் அளவிற்கு எம்மவரின் எந்த ஊடகமோ  ஊடகர்களோ இல்லை.  எங்களை

நாங்களே மகிழ்ச்சிப் படுத்த  எழுதும் ஊடகங்களும்   தலைப்பை மட்டும் மாற்றி

விட்டு வெட்டி ஒட்டும் ஊடகங்கள் மட்டுமே எம்மிடம் உள்ளது.எனவே பரிதியின்

கெலை என்பது  இன்னும் சில காலங்களில் மறக்கப்பட்டதொன்றாகவே மாறிவிடும்.

 

இது

இப்படியிருக்க  அனைத்துலகச் செயலகம் அடுத்த கட்ட ஆயுதப் போரை நடத்தப்

போவதாக கூறியிருப்பது தெய்வீகன் என்கிற  நபரை வைத்துத்தான்.தெய்வீகன்

என்பவர் யாரென்று சுருக்கமாக பார்த்து விடலாம். இவர் புலிகள் அமைப்பில் ஒரு

இளநிலை போராளி விமான ஓட்டியாக பயிற்சி பெறுவதற்காக புலிகள் அமைப்பினால் 

கிழக்கு ஜரோப்பிய  நாடொன்றிற்கு அனுப்பி விமான ஓட்டிக்கான கல்வியும் 

பயிற்சியும் பொற்றவர்  அதில் தேர்ச்சி பெறாததால்  திரும்பவும் வன்னிக்கு

அழைத்து  புலிகளின் உள்ளக புலனாய்வு பிரிவில் இணைக்கப் பட்டிருந்தார்.

இறுதிகட்ட யுத்தத்தில் இவரே வழங்கலிற்கும் பொறுப்பாக இருந்தவர். புலிகள்

அமைப்பின் இறுதி முயற்சியான ஆனந்த புரம் ஊடறுப்பு சமர் நடந்தவேளை  அதற்கு 

தலைவர் பிரபாகரனே  நேடியாக நின்று கட்டளைகளை வழங்கியிருந்ததும் அது

தோல்வியில் முடிந்து  புலிகள் அமைப்பின் முன்னணி தளபதிகளும் ஆயிரக்கணக்கான

போராளிகளும் பலியானதோடு தலைவர் பிரபாரன்  உயிர் தப்பியிருந்தார். அந்த

சண்டைக்காக மேலதிக ஆயுத மற்றும் காயமடைந்தவர்களிற்கான  அவசர மருத்துவ

உபகரணங்களை வழங்குமாறு களத்தில் நின்றிருந்த தளபதிகள்  தெய்வீகனை தொடர்பு

கொள்ள முற்பட்ட வேளை  தனது தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு

காணாமல் போயிருந்தவர். மீண்டும் 2010 ம் ஆண்டு தை மாதமளவில்  இந்தியாவில்

மதுரையில் நடமாடத் தொடங்கியிருந்தார்.

 

 அவரோடு வெளியக

புலனாய்வுத் துறையின் புகழேந்தி  மற்றும் தென்னவன் அல்லது கரிகாலனும்

மதுரையில் தங்கியிருந்து புலிகளின் அனைத்துலக செயலகத்தின் வெளிநாட்டு

கிளைகளோடு தொர்புகளை ஏற்படுத்தி தாங்கள் இன்னமும்  பலநூறு  போராளிகளுடன்

வன்னி காடுகளிற்குள்ளேயே நிற்பதாகவும் மறு பக்கம் கிழக்கு மாகாண

காட்டிற்குள்  ராமும் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும்  ராமின் 

தலைமையில் அடுத்த கட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக  தங்களிற்கு ஆயுதங்களை

பெறுவதற்காகவும்  அத்தியாவசிய தேவைகளிற்காவும் நிதி உதவி

கோரியிருந்தார்கள்.  அதை நம்பி அனைத்துலக செயலகமும் பணம்

அனுப்பியிருந்தார்கள்.

 

அன்றைய காலகட்டத்தில் தென்னவன்

என்கிற கரிகாலனும் என்னுடன் தொர்புகளை ஏற்படுத்தி கதைத்திருந்தார். பணத்தை

அனுப்பிவிட்டிருந்த அனைத்துலகச் செயலகத்தினர் தாக்குதல் எதுவும்

நடக்காததால் ஏமாற்றமடைந்து  ராமோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஏதாவது

தாக்குதல் செய்தால் தான்  இங்குள்ள மக்கள் நம்புவார்கள்  அப்பொழுதான் பணம்

சேகரித்து அனுப்பலாம் ஏதாவது தாக்குதலை  செய்யும்படி கேட்டிருந்தனர்.

ஆனால் இது வரை காலமும் தலைவரின் கட்டளைக்கிணங்கவே  தான்  தாக்குதல்களை

நடத்தியதாகவும்  வெளிநாட்டிலிருந்து  வரும் கட்டளைகளிற்கிணங்க தன்னால்

இயங்க முடியாது  தலைவரின் கட்டளை  வராமல்  தன்னால் எதையும் செய்ய

முடியாதென  ராம் எவ்வித தாக்குதலையும் செய்ய மறுத்து  தெய்வீகனின்

தொடர்பும் தனக்கு இல்லையென்று அவர்களிற்கு சொல்லிவிட்டிருந்தான். பின்னர்

ராமிற்கும் எனக்கும் நடந்த உரையாடல்களின்போது அதை தெரித்திருந்தான்.

அன்றை கால கட்டத்தில் தான் இலங்கை வான்படையின் உலங்கு வானுர்தியொன்று

காலநிலை காரணமாக  கட்டுப் பகுதியில் விபத்திற்குள்ளாக அதனை ராமின்

தாக்குதலிற்குள்ளானதாக  வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யவும் அனைத்துலகம்

முயன்றிருந்தது.

 

பின்னர் சில காலங்கள் தெய்வீகனின்

தொடர்பு அறுந்து பேயிருந்ததோடு தென்னவன் (கரிகாலன் )பிரான்ஸ் வந்து

சேர்ந்ததும் மீண்டும் அனைத்துலக செயலகம் மற்றும் பழைய வெளிநாட்டு

கட்டமைப்பை சேர்ந்தவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்பொழுது

மீண்டும் என்னுடன்  ஒரு தொடர்பையும் ஏற்படுத்தியிருந்தார். இவர்தான் 

தற்சமயம் அனைத்துலக செயலகத்தோடு சேர்ந்து நின்று  தெய்வீகனால் அடுத்த கட்ட

ஆயுத போரை வழிநடத்த முடியும் என்று  அவர்களையும் நம்பவைத்து 

தெய்வீகனோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆயுதப் போர்

நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும்

ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர்

தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல

மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ்

நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன்

பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில்

சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான

அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது

நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக

செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான்

பதில் சொல்லும். 

 

இறுதியாக ஒரு வியடம்  அனைத்துலகச்

செயலக்த்தின்  டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது  பிரியனின்

தலைமையில் அண்மைக்காலமாக  டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி ஊடாக

தாயகத்தில் மக்களிற்கான உதவிகளை செய்து வருகிறார்கள். அதே போல சுவிஸ்

இளையோர் அமைப்பும்  தமிழர் ஒருங்கிணைப்பக் குழுவும் தங்கள் பிரதிநிதிகளை 

கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி கிழக்கு மக்களிற்கு உதவுகின்றனர்.இந்த

மாற்றம் வரவேற்கப்படவேண்டிய விடயம்.  இவர்களை முன் மாதிரியாக எடுத்து

மற்றைய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களும் வீணே  ஊருக்கு

போகின்றவன் உதவி செய்பவன் எல்லோரையும் துரோகி என்றும் அடுத்த கட்ட

ஆயுதப்போர் என்று கதைவிட்டு காலத்தை கடத்தாமல்   தாயகத்து மக்ககளிற்கான 

உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திவிடுவதே இனிவரும்

காலங்களில் செய்யக்கூடியதொன்றாகும்.செய்வார்களா????

 

கரிகாலன்(பிரான்ஸ்),

குட்டி(டென்மார்க்) பிரியன்,(டென்மார்க்) தனம் (இலண்டன்),

சிறீறவி'ஜெர்மனி) , அதிர்வு கண்ணன்(இலண்டன்)  பெஞ்சமின்(நோர்வே)

அம்புறுஸ்(இத்தாலி..தற்சமயம் பிரான்ஸ்) ஆகியோரது பங்கு பிரிப்புக்கள்

பற்றி இன்னொரு கட்டுரையில் தனியாக பார்க்கலாம்.  அதுவரை நன்றி வணக்கம்.

 

 

இக்கட்டுரையின் முதற்பகுதி எங்கே இருக்கிறது ?

தலைமைச் செயலகம் என்பது யார், அனைத்துலகச் செயலகம் என்பது யார் ? ஒரே குழப்பமாக இருக்கிறதே?? இத்ஜில் ஒருங்கிணைப்புக் குழு எங்கே வருகிறது?? நெடியவன் யார் ??

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதனிடமிருந்து இதை எதிர் பார்க்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பதோ வெகு சிலர். அதற்குள்ளும் ஆயிரத்தெட்டு பிளவுகள், காட்டிக் கொடுப்புகள். எவர் சரி, எவர் பிழையென்று தெரியவில்லை. அதனால்த்தான் கேட்டேன். நெடியவன் நோர்வேயில் இருக்கிறாராம், அவ்வளவு மட்டுமே தெரியும். நெடியவன் யார், அவர் என்ன செய்கிறார் என்று தெரியாது. ஒருங்கிணைப்புக் குழுக்களௌக்கு அவர்தான் பொறுப்பென்றார்கள். ஆனால் ஒவ்வொரு நாட்டிலுள்ள ஒருங்கிணைப்புக் குழுக்களும் தத்தமது பாட்டில் செயற்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு தகவலை சொல்லி வைச்சன்  அவ்வளவுதான். மற்றபடி அடுத்த இலண்டன் பட்டியல் தயாராகுதாம். 

அடுத்த வருடமும்  நான் இந்த பகுதியை யாழில் புதுப்பிக்க நேரிடலாம் அப்போ இன்னும் சில பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம் எனவே அடுத்த வருடம் சந்திப்போம்

:)

 

அப்புடீயே எப்பவாம் லண்டன் விபரத்தை வெளியிடப்போறீர்கள் சாஸ்திரி ? ஏன் அடுத்த வருடம் வரை வெயிட்டிங். தினமும் ஒவ்வொரு பெயரையும் வெளியிட்டால் வசூல் இன்னும் அதிகரிக்குமல்லொ.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138937#entry1002581

இங்கிட்டும் சாஸ்திரியின் தேசபக்தி பற்றி அரசியல் ஆய்வினை குருபரன் அளாசியிருக்கிறார்.

  • 5 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பேர் முக்கியிருக்கினம்  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.