Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் : இரா. சம்பந்தன்

Featured Replies

'நாங்கள் எமது செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவோ புலம்பெயர் சமூகத்திடமிருந்து நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்காகவோ அரசியல் நடத்­தவில்லை. நாங்கள் நிதானமாக, யதார்த்தமாக அரசிய லில் ஈடுபடுகின்றோம். எமது முக்கியமான நோக்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதேயா கும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். புலி­களை தாமே அழித்­தோ­மென பலர் தம்பட்டம் அடித்து வரு­கி­றார்கள். ஆனால் உண்மைநிலை அது­வல்ல. விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் என்றே நான் கரு­து­கிறேன்"

 

இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி­ன­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் கூறினார்.


தமிழ் பேசும் மக்­களின் இன்­றைய அர­சியல் நெருக்­கடி குறித்து ஞாயிறு வீர­கே­ச­ரிக்கு அவர் அளித்த விசேட பேட்­டி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,


நான் நாடா­ளு­மன்­றத்தில் கடை­சி­யாக ஆற்­றிய உரையில் விடு­தலைப் புலிகள் வட,கிழக்கில் போராட்­டத்தை ஆரம்­பித்த போது அதற்கு நியாயம் இருந்­தது என்று பேசி­யி­ருந்தேன். அதை நியா­யப்­ப­டுத்­தி­யு­முள்ளேன். ஆனால் காலப்­போக்கில் விசே­ட­மாக சர்­வ­தேச சமூகம் விடு­த­லைப்­ பு­லி­களை வேறு வித­மாக நோக்கினார்கள். தவ­றாக கரு­தி­னார்கள். அவர்களை சர்­வ­தேச சமூகம் வேறு வித­மாக கருது­வ­தற்கு ஏற்­பட்ட கார­ணங்­க­ளையும் நான் தெளி­வாக எடுத்­துக்­கூ­றினேன். கூற வேண்­டிய தேவையும் உள்­ளது.

 

புலி­களை தாமே அழித்­தோ­மென பலர் தம்­பட்டம் அடித்து வரு­கி­றார்கள். ஆனால் உண்மை நிலை அது­வல்ல. விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் என்றே நான் கரு­து­கிறேன். சர்­வ­தேச சமூ­கத்தால் உலக நாடு­களால் விடு­த­லைப்­பு­லிகள் வேறு வித­மாக கரு­தப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால் நியா­யத்தின் அடிப்­ப­டையில் அவர்கள் போராட்டம் தொடர்ந்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு இவ்­வி­த­மான நிலை ஏற்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்­லை­யென்றே தான் கூறி­யி­ருக்­கின்றேன்.

 

நாங்கள் ஒரு பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு அதன் உண்­மையை உணர்ந்து இந்த நாட்டில் வாழக்­கூ­டிய மக்­களும் ஆத­ரிக்­கக்­கூ­டிய அந்த மக்­க­ளையும் இணைத்து அவர்­களின் ஆத­ர­வு­க­ளையும் திரட்டி பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைப் பெற வேண்டும்.

 

உண்­மையின் அடிப்­ப­டை­யிலும் நீதியின் அடிப்­ப­டை­யிலும் நியா­யத்தின் அடிப்­ப­டை­யிலும் போரா­டு­வோ­மானால் எதையும் சாதிக்க முடியும். ஆன­ப­டியால் நான் பேசு­வது நியா­யத்தை, நீதியை, உண்­மையைக் கொண்டு வரக்­கூ­டிய விதத்தில் இருக்க வேண்­டு­மென்று விரும்­பு­கின்றேன்.


புலம்­பெயர் சமூகம் என் மீது குற்றம் சுமத்­து­வ­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. எமது மக்­க­ளையோ புலம்­பெ­யர்ந்த மக்­க­ளையோ தீவி­ர­மாக சிந்­திப்­ப­வர்­க­ளையோ திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக பேசும் பழக்கம் என்­னி­ட­மில்லை.

 

அர­சியல் தீர்­வின்றி நாங்கள் எதையும் செய்ய முடி­யாது இலங்கை அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு அத்­தி­யா­வ­சி­ய­மான தேவை­யல்­ல­வெ­னக் ­க­ரு­து­கி­றார்கள். அதற்கு அமை­வா­கவே தமது நிகழ்ச்சி நிரலை நிறை­வேற்றிக் கொண்டு போகின்­றார்கள். விசே­ட­மாக வட கிழக்கைப் பொறுத்­த­வரை இன விகி­தா­சா­ரத்தை மாற்­றி­ய­மைக்­கக்­கூ­டிய விதத்தில் தமிழ் பேசும் மக்­களின் அடை­யா­ளங்­களை இல்­லாமல் செய்­யக்­கூ­டிய வகை­யிலும் நிரந்­த­ர­மான பாதிப்­பொன்றை உண்டு பண்­ணக்­கூ­டிய விதத்­திலும் பல விட­யங்­களை அர­சாங்கம் செய்து கொண்டு போகின்­றது. இதன் ஒரு அங்­க­மா­கவே யாழ். குடா­நாட்டில் பூர்­வீக கிரா­மங்­களின் பெயர்­களை மாற்றும் நட­வ­டிக்­கைகள் அமைந்து காணப்­ப­டலாம்.

 

ஆன­ப­டியால் தான் அர­சியல் தீர்வுப் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காணப்­பட வேண்­டு­மென்­பதில் அரசு அக்­கறை காட்­ட­வில்லை. எங்­களைப் பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு இல்­லாத தற்­போ­தைய நிலை தொட­ரு­மாக இருந்தால் எங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் பெரும் ஆபத்து ஏற்­ப­டக்­கூடும். இந்­நிலை தொடர அனு­ம­திக்க முடி­யாது.

 

சர்­வ­தேச சமூ­கமும் தன்னால் இயன்ற முயற்­சி­களை தீர்வு காண எடுத்து வரு­கின்­றது. இங்கு வாழும் அனைத்து மக்­களும் குறிப்­பாக பெரும்­பான்மை சமூகம் எமக்­கொரு தீர்வு வர ஒத்­து­ழைக்க வேண்டும். அதே வேளை எமது நிலைப்­பாட்டை வலி­யு­றுத்த சாத்­வீ­கப்­போ­ராட்டம் ஒன்றை எற்­ப­டுத்­து­வதன் மூலம் தான் அதை நாங்கள் முழு­மை­யாக வெளிக்­கொண்டு வர முடியும் எமது அபி­லா­ஷை­களை வெளிக்­காட்ட முடியும்.

 

இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூ­கத்­துக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் எமது நிலை­மையை தெளி­வாக எடுத்­துக்­காட்ட வேண்­டு­மானால் சாத்­வீ­கப்­போ­ராட்­டத்தில் தமிழ் பேசும் மக்கள் ஈடு­பட வேண்­டிய தேவை தற்­போது உரு­வாகி வரு­கி­றது. அப்­போ­ராட்­டத்தை நாங்கள் எவ்­வித வன்­மு­றை­யு­மின்றி ஒழுக்­க­மாகஇ அமை­தி­யாக சாத்­வீக போரை செய்ய வேண்­டிய காலம் நெருங்கி வரு­கி­றது. இது விட­ய­மாக நாம் எல்­லோ­ரு­டனும் கூடிக்­க­லந்து ஆலோ­சித்து முடிவு எடுக்க வேண்டும்.

 

தங்­க­ளு­டைய தென்­னா­பி­ரிக்க விஜயம் சம்­பந்­த­மாக என்ன பலனை எதிர்­பார்க்க முடி­யு­மென வின­விய போது


பயணம் மேற்­கொள்­வ­தற்கு முன்பு எதையும் எதிர்வு கூற முடி­யாது. வெற்­றி­ய­ளிக்கும் அல்­லது தோல்வி அளிக்கும் அல்­லது என்­ன­வி­த­மாக முடி­வ­டை­யு­மென்று இப்­போ­தைக்கு கூற முடியா விட்­டாலும் தென்­னா­பி­ரிக்­காவில் நீண்ட கால­மாக இருந்து வந்த தேசி­யப்­பி­ரச்­சினை அங்­குள்ள பெரும்­பான்மை சமூ­க­மான கறுத்த இன மக்­களை சிறு­பான்மை வெள்­ளைச்­ச­மூகம் ஆண்டு வந்த நிலைக்கு ஜன­நா­யக ரீதி­யாக தீர்வு காணப்­பட்­டது. ஜன­நா­ய­கத்தின் அடிப்­ப­டையில் அந்த நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்­பட்­டது. எனவே அந்த நாட்டு அர­சியல் தலை­வர்கள் கூடிய அனு­பவம் கொண்­ட­வர்கள்.


அவர்­களைப் பொறுத்­த­வரை இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் நேர்­மை­யா­கவும் விசு­வா­ச­மா­கவும் நடந்து கொள்ள முனை­கி­றார்கள். இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண வேண்­டு­மென்ற நல்­நோக்­கத்­துடன் எங்­களை அழைத்­துள்­ளனர்.

 

இலங்­கை­ய­ர­சாங்­கத்தின் குழு­வினர் தென்­னா­பி­ரிக்­கா­வுக்குச் சென்று வந்­துள்­ள னர். நாங்கள் அவர்­களால் அழைக்­கப்­ப­டு­கின் றோம். அங்கு செல்­வதன் மூலம் இலங்­கை­ ய­ரசின் நிலையை அறிய வாய்ப்பு எமக்­குண்டு.


கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக தமிழ்த்­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு இலங்கை அர­சாங்­கத்­துடன் விசு­வா­ச­மாக பேசி வந்­துள்­ளது. அர­சியல் தீர்வு காண நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த கடும் முயற்சி மேற்­கொண்டு வந்­துள்ளோம் எமது முயற்சி கைகூ­ட­வில்லை நாம் எதிர்­பார்த்­தது நடக்­க­வில்லை. இலங்­கை­ய­ரசு இந்த முயற்­சியில் எந்­த­ள­வுக்கு விசு­வா­ச­மாகஇ நேர்­மை­யாக நடந்து கொள்­கி­றது என்­பது பற்றி கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய எங்­க­ளுக்கு பொது­வாக தமிழ் மக்­க­ளுக்கு சந்­தே­கங்கள் உண்டு. இருந்த போதிலும் தென்­னா­பி­ரிக்­காவின் முயற்­சியை நாங்கள் வர­வேற்­கின்றோம். அவர்கள் நல்­நோக்­கத்­துடன் இந்த முயற்­சியில் இறங்­கி­யுள்­ளனர்.

 

இருந்த போதிலும் நாங்கள் இலங்கை அர­சைப் ­பொ­றுத்­த­வரை அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். இலங்கை அர­சாங்­க­மா­னது தென்­னா­பி­ரிக்­காவின் நல் முயற்­சியை தங்­க­ளுக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்தி விடு­வார்கள் எனப் ­ப­யப்­ப­டு­கின்றோம். நாங்கள் விசு­வா­ச­மாக தீர்வு காண முய­லு ­கின்றோம் என்ற நிலைப்­பாட்டை உரு­வாக்­கக்­கூ­டிய வகையில் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். தென்­னா­பி­ரிக்­காவின் முயற்­சியும் அமைய வேண்டும். இது­பற்றி தென்­னா­பி­ரிக்க அர­சுக்கு நாங்கள் தெளி­வாக எடுத்­துக் ­கூ­றி­யி­ருக்­கின்றோம். அவர்­களும் அதை அறி­வார்கள். இந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எனது தலை­மையில் அடுத்த வாரம் செல்ல இருக்­கின்றோம்.

 

எமது பயணம் உட­ன­டி­யாக ஒரு நல்ல முடிவைத் தேடித்­த­ரு­மென்றோ சாத­க­மாக அமை­யு­மென்றோ சொல்ல முடி­யா­விட்­டா லும் தாம­த­மில்­லாமல் ஏதா­வது நன்மை நடை­பெ­றக்­கூ­டிய சாதக நிலை காணப்­ப­டு­மானால் அதை நடை­மு­றைப்­ப­டுத்த எம் மால் இயன்ற முயற்­சி­களை எடுப்போம்.

 

 

 

இந்­திய அரசின் இன்­றைய நிலைப்­பாடு எவ்­வாறு இருக்­கின்­றது என அவ­ரிடம் வின­விய போது


நாங்கள் இந்­தி­யாவின் நிலை பற்றி அதி கம் பேசக்­கூ­டாது. அண்­மையில் நாம் இந்­தியா சென்­றி­ருந்த போது இந்­தி­யப்­ பி­ர­தமர் ஏனைய அமைச்­சர்கள் அர­சியல் தலை­வர் கள் ஆகி­யோரைச் சந்­தித்­தி­ருக்­கின்றோம். அவர்­க­ளிடம் நாங்கள் கூற வேண்­டிய விட­யங்­க­ளையும் அவர்­க­ளிடம் கூறி­யுள்ளோம். கடந்த வருடம் மார்ச் மாதம் ஜெனீ­வாவில் நடை­பெற்ற மனித உரி­மைப்­பே­ர­வைக்­ கூட்­டத்தில் பல பேர் எதிர்­பார்த்­த­தற்கு மாறாக சாத­க­மாக வாக்­க­ளித்­தார்கள் இது எதிர்­பா­ராத மாற்­ற­மாக இருந்­தது.

 

இலங்கை இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தை தீர்த்து வைப்­ப­தற்கு மேலும் அக்­க­றை­யாக செயல்­பட முயல வேண்­டு­

மென்று நம்­பு­கின்றோம். நாங்கள் இந்­தி­யா­விடம் கேட்­டி­ருக்­கின்றோம். சொல்­லி­யி­ருக்­கிறோம். அந்த முயற்சி தொடர வேண்டும்.

 

இந்­தி­யாவை விமர்­சிப்­பதால் எதையும் அடை­ய­லா­மென்று நான் நினைக்­க­வில்லை. எமது பிரச்­சி­னைக்கு தீர்வு காண இந்­தியா ஒரு காலகட்­டத்தில் தன்னால் இயன்ற அதிக முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளது. ஆனால் அது கைகூ­ட­வில்லை. அது கைகூ­டாமல் போன­தற்கு ஒரு வகையில் நாங்­களும் பொறுப்­பா­ன­வர்கள் என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

 

இது பற்றிச் சிந்­திக்­கி­ற­வர்கள் இந்த உண்­மையை மறுக்க முடி­யாது. எனவே எமது கரு­மங்­களை கவ­ன­மாக கையாள வேண்டும் பகி­ரங்­க­மாக இந்­தி­யாவை பேசு­வதன் மூலம் விமர்­சிப்­பதன் மூலம் அந்த நாட்டை எமக்கு சாத­க­மாக செயற்பட வைக்க முடியாது.

 

எமது கருத்தை இந்தியாவுக்கு சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய முறையில் சொல்லியுள்ளோம். அவ்வாறு சொல்வதன் மூலமே எமது நோக்கை நிலையை நிறைவேற்ற முடியும்.


இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைப்பேரவையினால் ஆராயப்பட்டு வருகின்றது. மனித உரிமைப் பேரவையினர் இலங்கைக்கு வருகை தந்து பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் எம்மையும் சந்தித்துப் பேசினார்கள். ஜெனீவாவின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் ஐ.நா.சபை அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்திச் சென்றுள்ளனர். எல்லோரையும் நாம் சந்தி த்து உரையாடியுள்ளோம். ஜெனீவாவின் மனித உரிமைப் பேர வைக் கூட்டம் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ளது. அக்கூட்டம் நடை பெறுவதற்கு முன்பாகவும் இன்னும் பலர் வரவிருக்கின்றார்கள்.

 

இவ்வாரமும் பலர் இலங்கைக்கு வரவிரு க்கின்றார்கள். அவர்கள் உண்மையை அறிந்து நியாயத்தின் அடிப்படையில் நடந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம் என சம்பந்தன் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2745

Edited by akootha

  • தொடங்கியவர்

 'நாங்கள் எமது செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவோ புலம்பெயர் சமூகத்திடமிருந்து நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்காகவோ அரசியல் நடத்­தவில்லை. நாங்கள் நிதானமாக, யதார்த்தமாக அரசியலில் ஈடுபடுகின்றோம். எமது முக்கியமான நோக்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதேயா கும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். புலி­களை தாமே அழித்­தோ­மென பலர் தம்பட்டம் அடித்து வரு­கி­றார்கள். ஆனால் உண்மைநிலை அது­வல்ல. விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் என்றே நான் கரு­து­கிறேன்"


இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி­ன­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் கூறினார்.

 

 

புலிகள் தமிழர்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி அந்தக்கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடினார்கள். அதனால் தான் எதிரிகள் உட்பட சர்வதேசத்தால் உலக விதிமுறைகளுக்கும் அப்பால் சென்று அழித்தனர், மக்கள் உட்பட.

 

அதுவே அழிவிலும் இன்றும் எமது மக்களின் விடுதலை உரிமையை துடிப்புடன் வைத்துவிட்டு சென்றுள்ளார்கள் அந்த வீரர்கள். கூட்டமைப்பிற்கு கூட இன்றுள்ள மதிப்பையும் செல்வாக்கையும் தந்துவிட்டு போயுள்ளவர்கள் அந்த மாவீரர்களே.

 

 

ஒவ்வொரு வசனத்திலும் நிறைய பொருளோடு பேசியிருக்கிறார். பாரளுமன்றத்தில் பேசியத்திலிருந்து விலகாமல் பேசியிருக்கிறார். போன முறை சில சொற்கள் தீ மூட்டியதால் இந்த முறை தவித்திருக்கிறார். பொருள் மாறிவிடாமல் இருக்க கவனம் செலுத்தியிருக்கிறார். 

 

தமிழ் மக்களின் பஞ்சம் பசி என்ற ஏமாற்றுக்களை அரசு கயில் எடுத்து, பொருளாதார அபிவிருத்தி, ஆபத்துக்கு உதவி என்ற என்ற பெயரில் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்க உதவி போகவில்லை. அகதிகளுக்கு உதவி, பொருளாதார,உதவி, (பறி போய்விட்ட  )ஆடை  ஏற்றுமதி உற்பத்தி,  என்ற பேரில்  தமிழ் நிலங்கள் வன்புணர்வுக்குட்படுத்தபட்டு பறிபோகாமல் இருக தீர்வுதான் முக்கியம். தீர்வு இரண்டொரு ஆணடுகளுக்கிடையில் வந்து சேரவிடால் இனி வடக்கில் கூட்டமைப்பு இருக்கப் போவதிலை என்றதை எடுத்து சொல்கிறார்.

 

சர்வதேச கமேடியர்கள் விடிய விடிய இராமாயணம் கேட்காமல் உடனடி தீர்வு மூலம் அதிகாரத்தை நமக்கு வாங்கி தரவேண்டும். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் தானும் கலைஞர் கருணாநிதி போல சொல்லுறதை எல்லாம் சொல்லிட்டு.. சிலேடை.. சிரட்டை என்று.. அரசியல்வாதியாகலாம் என்று நினைக்கிறார் போல..! காலம்.. ஒரு இடைவெளியை விட்டுள்ளது. அதை நிரப்ப.. எத்தனை பேர் எத்தினை வகையில முயற்சிக்கிறாங்கப்பா. எல்லாம் தமிழனின் தலையெழுத்து. :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்து சரியான சந்தர்ப்பங்களில் சம்பந்தமே இல்லாமல் கதைக்கும்....இவர்களை எல்லாம் நம்பி அமெரிக்க குழுவும் ஆபிரிக்க குழுவும் சந்திப்பதில் என்ன லாபம்....

தங்களை தாங்களே அழிக்கின்றோம் என்ற விளக்கம் கூட அவர்களிடம் இருக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை தாங்களே அழிக்கின்றோம் என்ற விளக்கம் கூட அவர்களிடம் இருக்கவில்லை .

 

அர்ஜுன் அண்ணா.. இது உண்மையானால் முப்பது வருடங்கள் அவர்கள் சமாளித்திருக்க வழி இல்லை. என்றோ முடிந்திருப்பார்கள். நிகழ்தகவின் அடிப்படையில் இது சாத்தியமில்லை.

 

ஏழு வருடங்களுக்கு முன்னர் ஒரு முன்னாள் போராளியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கொஞ்சம் கருணா அனுதாபி போல் பேசினார். எப்போது ஆயுதப்போரை நிறுத்தவேண்டும் என்பது கருணாவுக்குத் தெரிந்திருந்தது என்று சொன்னார்..  :rolleyes: 

 

ஆயுதப்போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஒரு புரிதல் இருந்தது. ஆனால் ஒவ்வொருவரின் கால நேர அளவும் மாறுபட்டுள்ளது.

அர்ஜுன் அண்ணா.. இது உண்மையானால் முப்பது வருடங்கள் அவர்கள் சமாளித்திருக்க வழி இல்லை. என்றோ முடிந்திருப்பார்கள். நிகழ்தகவின் அடிப்படையில் இது சாத்தியமில்லை.

 

ஏழு வருடங்களுக்கு முன்னர் ஒரு முன்னாள் போராளியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கொஞ்சம் கருணா அனுதாபி போல் பேசினார். எப்போது ஆயுதப்போரை நிறுத்தவேண்டும் என்பது கருணாவுக்குத் தெரிந்திருந்தது என்று சொன்னார்..  :rolleyes:

 

ஆயுதப்போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஒரு புரிதல் இருந்தது. ஆனால் ஒவ்வொருவரின் கால நேர அளவும் மாறுபட்டுள்ளது.

 

கருணா வேறு சம்பந்தர் வேறு.  கருணா புலிகள் தோற்கும் என்றதை எதிர்வு கூறிய காலங்களின் போது பிரிந்து போகவில்லை.  புலிகள் இலங்கையில் அசைக்க முடியாத அமைப்பு என்று நினத்து அதை வைத்து தனக்கு தேவையான பால் கறக்க முயன்றார்.  இன்று தனது அதிபர் பதவியில் இருந்து கொண்டு எப்படி இலங்கையை மற்றய நாடுகளால் அசைக்க முடியாது என்று நினைத்து மகிந்தா அன் கோ அதை வைத்து தமக்கு வேண்டிய பால் கறக்கிறார்களோ இதே மனோநிலயில் தான் கருணா புலிகள் இயக்கத்தில் இருந்தார். இதனால் கட்டுக்கோப்பான இயக்கதை விட்டு ஓட வேண்டி நேர்ந்தது மட்டுமல்ல, தன்னுரைக்காப்பாற்ற எதிரியிடம் சரண் அடைந்தார். கருணா, தலைவருக்கு, இனி சண்டை வேண்டாம், நாம் வெல்ல மாட்டோம் என்று அறிவுரை கூறியதாக சரித்திரம் இல்லை.

 

இன்றைய சம்பந்தரின் பேச்சில் ஒவ்வொரு வரிக்கும் பொருள் காணப்படுகிறது. அதை புலனாய்வு செய்து புலிகளை தோற்கடித்த சர்வதேசத்துக்கு சாதரண பொதுமகனை விட நன்றாக விளங்கும். தமிழ் மக்களின் பொறுப்பை கையில் வைத்திருந்த புலிகளை தோற்கடித்த சர்வதேசம் இன்று ஒளித்து விளையாடமல் முன்னல் வந்து தமிழ் மக்களின் பொறுப்பை எடுக்க வேண்டும்.

 

சம்பந்தர் அரசுக்கு புலிகளை அளிக்க முடியவில்லை என்பதை தளாராத உறுதியுடன் இரண்டாம் தடவை பேசியிருக்கிறார். அவர் மனத்தாலை அழித்தவர்கள் இன்றைய தமிழ் மக்களின் நிலைக்கு பொறுப்பெடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்து சொல்ல விளைகிறார். ஆனால் இடித்துரைக்க முடியாது.

 

அர்ச்சுன் இழுக்கும் திசையில் இழுபடவேண்டியதேவை இல்லை. அர்ச்சுனுக்கு தனது பிரச்சாரத்தை கேட்டு சம்பந்தர் தன் பக்கம் வந்துவிட்டார்  என்ற மாதிரி எழுத ஆசையாய் இருக்கு. புலிகள் தாங்கள் அழிவதையே அறிய முடியாத முட்டாள்கள் மட்டும்தான் என்று சம்பந்தர் பேசவில்லை.  புலிகளை அரசுகுக்கு வெல்ல முடியவில்லை என்றது ஒன்றை மட்டும் தான் சொல்கிறார். வேண்டுமாயின் அரசியல் பொறுபில்லாத நான் பயப்பாடாமல் சர்வதேசம் தான் புலிகளை அழித்தது என்று கூறலாம். ஆனால் சம்பந்தர் சரவதேசத்துக்கு தெரிந்த ஒரு விடத்தை அவர்களுக்கு இடுத்துக்கூறி அவர்களை எதிரியாக்குவது ராஜதந்திரமாக இருக்காது. புலிகள் தோற்றபின்னர் தமிழ் மக்களின் நிலையை எடுத்து விளக்கினால் அவர்கள் தங்கள் கடந்த கால நடத்தைகளுக்கு பொறுப்பெடுப்பர்கள் என்று நம்புகிறார்.

 

Edited by மல்லையூரான்

நிகழ்தகவின் அடிப்படையில் இதை பார்க்க முடியாது .நான் சொல்வதோ அல்லது சம்பந்தர் சொல்வதோ எழுந்தமானமாக எங்களுக்குள் எழுந்த கருத்தல்ல .

புலிகள் மாறாத சில செயல்பாடுகளால் அது தொடர்பாக சர்வதேசம் தொடர்ந்து எடுத்து வந்த முடிவுகளும் இந்தியாவின் நிலைபாடும் தான் புலிகள் அழியகாரணமாயின.இது ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல பல வருடங்களாக பல வித அழுத்தங்கள் கொடுத்தும் மாற்றம் எதுவுமில்லாததால் வந்தது .

புலிகள் இந்த அழுத்தங்களை எவ்வளவு சீரியஸ் ஆக எடுத்தார்கள் என தெரியவில்லை ஆனால் அதை அவர்கள் பெரிதாக விளங்க்கிக்கொண்டதாக தெரியவில்லை .தமிழ்செல்வன் சுவிஸ் வந்திருந்த போது அவர் ஆற்றிய உரை சர்வதேச அரசியலின் அடிப்படையே தெரியாமல் வெறுமனே தமிழ் மக்களை விசிலடிக்க வைக்கும் பேச்சாகவே இருந்தது .

புலம் பெயர்ந்த புலிகளை விடுங்கள் அவர்கள் கனவுலகில் இருந்தார்கள் ,தேசியம் என்று புலிகளுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பலருடன் கதைக்கும் போது அவர்கள் சொல்லும் நியாயம் "எங்களுக்கு உண்மை தெரிகின்றது அதற்காக புலிகளை எதிர்த்து அவர்களை பலவீனப்படுத்த கூடாது புலிகளின் தோல்வி முழு தமிழனின் தோல்வியாகிவிடும்".இது என்ன லொஜிக் என்று எனக்கு விளங்கவில்லை

அழிய போகின்றார்கள் என்று தெரிந்த பின் ஆதரவு கொடுத்து என்ன பலன் என்று புரியவில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பே தப்பு!!!....

GORDEN WEISS-THE CAGE

FRANCES HARRISON-STILL COUNTING DEAD

இந்த இரண்டு புத்தகங்களும் பல உண்மைகள் சொல்லி நிற்கின்றன .இலங்கை அரசின் கொடூரமுகமும் புலிகளின் அரசியல் பலவீனமும் மிக தெளிவாக பதியப்பட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்தகவின் அடிப்படையில் இதை பார்க்க முடியாது .நான் சொல்வதோ அல்லது சம்பந்தர் சொல்வதோ எழுந்தமானமாக எங்களுக்குள் எழுந்த கருத்தல்ல .

புலிகள் மாறாத சில செயல்பாடுகளால் அது தொடர்பாக சர்வதேசம் தொடர்ந்து எடுத்து வந்த முடிவுகளும் இந்தியாவின் நிலைபாடும் தான் புலிகள் அழியகாரணமாயின.இது ஒரு நாளில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல பல வருடங்களாக பல வித அழுத்தங்கள் கொடுத்தும் மாற்றம் எதுவுமில்லாததால் வந்தது .

புலிகள் இந்த அழுத்தங்களை எவ்வளவு சீரியஸ் ஆக எடுத்தார்கள் என தெரியவில்லை ஆனால் அதை அவர்கள் பெரிதாக விளங்க்கிக்கொண்டதாக தெரியவில்லை .தமிழ்செல்வன் சுவிஸ் வந்திருந்த போது அவர் ஆற்றிய உரை சர்வதேச அரசியலின் அடிப்படையே தெரியாமல் வெறுமனே தமிழ் மக்களை விசிலடிக்க வைக்கும் பேச்சாகவே இருந்தது .

புலம் பெயர்ந்த புலிகளை விடுங்கள் அவர்கள் கனவுலகில் இருந்தார்கள் ,தேசியம் என்று புலிகளுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருந்த அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பலருடன் கதைக்கும் போது அவர்கள் சொல்லும் நியாயம் "எங்களுக்கு உண்மை தெரிகின்றது அதற்காக புலிகளை எதிர்த்து அவர்களை பலவீனப்படுத்த கூடாது புலிகளின் தோல்வி முழு தமிழனின் தோல்வியாகிவிடும்".இது என்ன லொஜிக் என்று எனக்கு விளங்கவில்லை

அழிய போகின்றார்கள் என்று தெரிந்த பின் ஆதரவு கொடுத்து என்ன பலன் என்று புரியவில்லை .

 

புலிகளின் மாறாத செயல்பாடுகள்.. அவை எவை என்று ஒருக்கால் பார்ப்போம்.. :D

 

தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்கள்..! முதல் தற்கொலைத்தாக்குதல் நெல்லியடியில் 1986/87 இல் என நினைக்கிறேன். மேற்குலகில் முதல் தடை அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டது என எண்ணுகிறேன். ஆக, ஒரு 12 வருடங்கள் தேவைப்பட்டிருக்கு அமெரிக்காவுக்கு. :D

 

இரண்டாவது சிறுவர் போராளிகள். இந்த சிறுவர் போராளிகள் பிரச்சினை தலைதூக்க முன்னமே அமெரிக்கா தடையைக் கொண்டுவந்துவிட்டது.. :D ஆக, இந்த அழுத்தம், தடை என்பதெல்லாம் அரசியல் சம்பந்தப்பட்டதே தவிர, அக்கறையின்பாற்பட்டதல்ல..

 

இப்படி, மேற்குலகமும், இந்தியாவும் அரசியலைத்தான் இன்றுவரை செய்கின்றன. அரசியல் அழுத்தங்களுக்காக போராட்டப்பாதையை மாற்றலாமா என்பதுதான் கேள்வி. அன்றே மாற்ரியிருந்தால் இன்று தீர்வு வந்திருக்குமா? சிந்திக்கவேண்டிய கேள்வி.

 

இதற்குப் பதில்தேடி அதிக தூரம் போகவேண்டியதில்லை. இதோ புலிகளை ( அல்லது "தீர்வுக்கான இடையூறை" எனவும் வாசிக்கலாம்) நீக்கி நான்கு வருடங்கள் முடியப்போகின்றன. புலிகள் மீது யாரெல்லாம் அழுத்தம் கொடுத்தார்களோ, என்ன தீர்வை விரும்பி அழுத்தம் கொடுத்தார்களோ அவர்களால் இதுவரை முடிந்தது ஒன்றுமில்லை. இன்றும் அறிக்கைகள் மட்டுமே பலாபலன். ஆக, இவர்கள் செய்வது வெறும் அரசியலே அன்றி உண்மையின்பாற்பட்ட விமர்சனங்கள் அன்று. அப்படியான பொய்முகங்களைக் கொண்ட இந்த இராஜதந்திரிகளின் சொல்லை அன்றே புலிகள் கேட்காது விட்டதில் என்ன ஆச்சரியம்? :rolleyes:

 

போகும் பாதை எதுவாக இருந்தாலும் ஊர்போய்ச் சேர்ந்தால் சரிதான். :rolleyes:

 

 

நாங்கள் நினத்த மட்டு சுடுகுது மடியை பிடி என்று சர்வதேசம் இயங்குவதில்லை .

இப்ப எந்த ஊர் போய் சேர்ந்திருக்கின்றீர்கள் ,நீங்களெல்லாம் வெளிநாடு வந்திருப்பதை சொல்லுகின்றீர்களா ?

ஊர் போய் சேராவிட்டாலும் பரவாயில்லை பாழும் கிணற்றில் அந்த அப்பாவி மக்களை தள்ளிஇருக்க வேண்டாம் .

  • தொடங்கியவர்

 இந்­தி­யாவை விமர்­சிப்­பதால் எதையும் அடை­ய­லா­மென்று நான் நினைக்­க­வில்லை. எமது பிரச்­சி­னைக்கு தீர்வு காண இந்­தியா ஒரு காலகட்­டத்தில் தன்னால் இயன்ற அதிக முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ளது. ஆனால் அது கைகூ­ட­வில்லை. அது கைகூ­டாமல் போன­தற்கு ஒரு வகையில் நாங்­களும் பொறுப்­பா­ன­வர்கள் என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

 

 

கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பானவர் என்ற ரீதியில் இந்தியாவை நம்பியே தமிழினத்தை ஏமாற்றக்கூடாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நினத்த மட்டு சுடுகுது மடியை பிடி என்று சர்வதேசம் இயங்குவதில்லை .

இப்ப எந்த ஊர் போய் சேர்ந்திருக்கின்றீர்கள் ,நீங்களெல்லாம் வெளிநாடு வந்திருப்பதை சொல்லுகின்றீர்களா ?

ஊர் போய் சேராவிட்டாலும் பரவாயில்லை பாழும் கிணற்றில் அந்த அப்பாவி மக்களை தள்ளிஇருக்க வேண்டாம் .

 

நாங்கள் வெளிநாடு வந்ததை சத்தியமா சொல்ல இல்லை.. :D

 

இப்போது எந்த ஊர் போய்ச் சேர்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறீங்கள். சரியான கேள்வி.

 

போராட்ட ஆரம்பகாலத்தில் இந்தியாவால் பொம்மலாட்டமாக நடத்தப்பட்ட போராட்டத்தை இன்று ஐநாவில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். அமெரிக்க குழு வந்து போவதில் நிற்கிறது. ஐநாவில் ஒரு பிரேரணை வரும் சந்தர்ப்பத்தில் இருக்கிறது. இதற்குமேல் எங்கு போகும் என்று கேட்காதீர்கள். அதற்கும் ஒரே ஒரு பதில்தான் உண்டு.

 

மே 2009 இல் போர் முடிவுற்ற நேரத்தில் எமது பிரச்சினை இன்று உள்ள முன்னேற்றத்தைக் காணப்போகிறது என்று யாராவது சொல்லியிருந்தால் கல்லெறிந்திருப்பீர்கள்.. :D அவ்வளவு நம்பிக்கையீனம் காணப்பட்டது. ஆனால் முன்னேற்றம் ஏற்படவே செய்தது.

 

இன்றும் என்ன ஊருக்குப் போயிருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்.. இன்னும் இடையில் ஒரு ஊரில்தான் பிரச்சினை நிற்கிறது. ஆகவே, பழிபோட்டுக்கொண்டிராமல், இனி வரப்போவதை நினைப்பதுதான் நல்லது.. :unsure:

 

மே 2009 இல் போர் முடிவுற்ற நேரத்தில் எமது பிரச்சினை இன்று உள்ள முன்னேற்றத்தைக் காணப்போகிறது என்று யாராவது சொல்லியிருந்தால் கல்லெறிந்திருப்பீர்கள்.. :Dஅவ்வளவு நம்பிக்கையீனம் காணப்பட்டது. ஆனால் முன்னேற்றம் ஏற்படவே செய்தது.

 

நமக்கு உரிமை கிடைக்குமோ இல்லையோ; போராட்டத்தில் முன்னேற்றம் காணப்பட்டுத்தான் இருக்கிறது.

 

 

Edited by மல்லையூரான்

நாங்கள் நினத்த மட்டு சுடுகுது மடியை பிடி என்று சர்வதேசம் இயங்குவதில்லை .

இப்ப எந்த ஊர் போய் சேர்ந்திருக்கின்றீர்கள் ,நீங்களெல்லாம் வெளிநாடு வந்திருப்பதை சொல்லுகின்றீர்களா ?

ஊர் போய் சேராவிட்டாலும் பரவாயில்லை பாழும் கிணற்றில் அந்த அப்பாவி மக்களை தள்ளிஇருக்க வேண்டாம் .

 

முயற்சி செய்யாமல் முன்னேற்றம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க கூடாது.

 

அத்துடன் இங்குள்ளவர்கள் அங்குள்ள மக்களை பாழும் கிணற்றில் தள்ளி விடவில்லை. ஒட்டுக்குழுக்கள் தான் புலிகளையும் அப்பாவி மக்களையும் பாழும் கிணற்றில் தள்ளி விட்டார்கள்.

Edited by துளசி

புலிகளை எப்படி திட்டம் போட்டு இந்தியா அழித்ததோ அதே போலக்கூட்டணியையும் அழிக்கின்றது.இதுதான் உண்மை.இந்தியா உண்மையாக இயங்கியிருந்தால் 14க்கு மேற்பட்ட இயக்கங்களை ஏன் ஒரே நேரத்தில் இயக்கியது.ஆரம்பத்திலேயே தமிழனைக்கவிழ்பதாகத்தான் திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த முடிந்த அழிவு புலிகளால் விரும்பி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலானது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 30 வருடகால போராட்டத்தினை வழிநடத்தி தமிழர்க்கென்று ஒரு தனியரசை நிறுவும் தறுவாயில் இருந்தவர்கள் வெறும் ஐ. நா அங்கீகாரத்துக்காகத்தான் தமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும், லட்சக்கணக்கான மக்களின் கொலைகளையும், 40,000 இற்கும் மேலான போராளிகளின் தியாகத்தையும், தமிழரின் ஒட்டுமொத்த இருப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டுப் போனார்கள் என்பதை நியாயப்படுத்தமுடியாது. முள்ளிவாய்க்கால் முடிவை புலிகளின் தலமையோ அல்லது சாதாரண போராளிகளோ விரும்பியோ அல்லது எதிர்பார்த்திருக்கவோ மாட்டார்கள் என்பது நிச்சயம். அப்படியிருக்க, ஐ. நா அங்கீகாரத்துக்காகத்தான் இவையெல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டதென்பது ஒரு சாட்டு மட்டுமே. கோர்டென் வைஸ் மற்றும் பிரான்சிஸ் ஹரிசன் ஆகியோரின் புத்தகங்களைப் படிக்கும்போது ஒரு விடயம் திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது புலிகள் எனும் இயக்கம் முற்றாக இராணுவ ரீதியில் அழிக்கப்படவேண்டுமென்பதில் ஐ. நா உற்பட எல்லா நாடுகளுமே உறுதியாக இருந்திருக்கின்றன. இதனால்த்தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புகளின் மத்தியிலும்கூட இராணுவ தாக்குதலை நிறுத்தவேண்டும் என்கிற கோரிக்கை எந்த நாட்டினாலும் விடுக்கப்படவில்லை. குறிப்பாக ஐ. நா வின் அந்நாள் பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவராக இருந்த ஜப்பான் நாட்டவர், "பயங்கரவாதிகளான புலிகளியக்கம் அழிக்கப்பட வேண்டும், அதனால் இலங்கை அரசு நடத்தும் இராணுவ நடவடிக்கையை நிறுத்தச் சொல்வது நியாயமற்றது. ஓவொருமுறையும் போர் நிறுத்தம் செய்வதும், பின்னர் பேச்சுவார்த்தைகளைக் குழப்பி தாக்குதல்களை ஆரம்பிப்பதும் அவர்கள்தான். ஆகவே அவர்களுக்கு இனி அந்தச் சந்தர்ப்பத்தை வழங்காக்கூடாது" என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். இவரின் கருத்தையே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளும் கொண்டிருந்தன. இன்று எந்த ஐ. நா வின் அங்கீகாரத்துக்காக புலிகள் போராட்டத்தையும் மக்களையும் கைவிட்டுச் சென்றார்கள் என்று நியாயம் கற்பிக்கிறோமோ அதே ஐ. நா தன் அன்றைக்கு புலிகளியக்கம் எந்த விலை கொடுத்தாவது அழிக்கப்படவேண்டும் என்று உறுதி பூண்டிருந்தது. இலங்கை அரசு தமிழருக்கெதிராகச் செய்து வரும் இனவழிப்பை ஐ. நா இதுவரை விளங்கிக்கொள்ளவில்லை என்று நாங்கள் நம்பினால் அது எமது முட்டாள்த்தனம். நடப்பவை யாவும் எல்லோருக்கும் நன்கே தெரிந்திருந்தது. தெரிந்திருந்தும் எவரும் வாயே திறக்கவில்லை. எவையுமே புலிகளின் திட்டத்தின்படி நடக்கவில்லை. சர்வதேசத்தின் திட்டத்தின்படிதான் நடந்தது. புலிகள் அழியட்டும், இழப்புக்களுக்கு நாங்கள் நிவாரணம் வழங்குவோம் என்று அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். அப்படியிருக்க நாங்கள் வாய்ச்சவடால் விடுவது வேதனை. பலர் கூறும் இன்னொரு விடயம்தான், புலிகள் மக்களை கட்டாயமாக தம்முடன் அழைத்துச் சென்றதென்பது. இறுதி நாட்களில் வீட்டிலிருந்து ஒரு நபராவது இயக்கத்தில் இணைய வேண்டுமென்று புலிகள் கட்டாயப்படுத்தியதாக பல சாட்சியங்களை வைத்து பிரான்சிஸ் அம்மையார் எழுதுகிறார். இப்படிக் கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பல பிள்ளைகள் சில நாட்களிலேயா முன்னரங்கில் கொல்லப்பட்டு வந்ததாகக் கூறுகிறார். புலிகள் தம்முடன் இறுதிவரை மக்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது உண்மைதான். எந்தவொரு கெரில்லா இயக்கமும் அதைத்தான் செய்திருக்கும். அதைவிட, மக்கள் கூட புலிகளுடன் செல்வதையே ஒரு கட்டம் வரை விரும்பியிருந்தனர். ஆனால் அவ்வாறு புலிகளுடன் செல்வதால் வேண்டுமென்றே தாம் கொல்லப்படுகிறோம் என்று தெரிந்தபோது பலர் இராணுவப் பக்கம் சென்றுவிட முயன்றனர். ஏனெறால் இராணுவப் பக்கம் சென்றுவிட்டால் கொல்லப்படுவதற்கான நிகழ்தகவும் குறுகிவிடுகிறது. இதனை இராணுவம் மருந்து மற்றும் உணவுப் பொருட்களைத் தடை செய்து மேலும் ஊக்கப்படுத்தியிருந்தது. மக்கள் தம்மை மீறி இராணுவப் பக்கம் செல்வதை புலிகள் நிச்சயம் விரும்பியிருக்கப்போவதில்லை. இதனால் மக்களுக்கும் புலிகளுக்குமிடையே பல கசப்புணர்வுகள் ஏற்பட்டன. இவை கோர்டன் வைசினாலும், ஹரிசனாலும் பலவிடங்களில் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இறுதியாக, புலிகள் தம்மை நெருங்கிவந்த ஆபத்தினை அறிந்திருக்கவில்லை, அல்லது அவர்களுக்கு அது தெரியப்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. சர்வதேசம் வரும், ஒரு தீர்வு வரும் என்று அவர்கள் எண்ணியிருந்ததாக பலர் தெரிவித்திருக்கிறார்கள். இதை பிரான்சிஸ் ஹரிசன், கோர்டன் வைஸ் மற்றும் வெளியே வந்து சேர்ந்த பொதுமக்கள் பலர் கூறியிருக்கிறார்கள். கண்ணைப்போலக் காத்துவந்த இயக்கத்தையும், போராட்டத்தையும், ஒரு இனத்தின் நம்பிக்கையையும் புலிகள் வேண்டுமென்றே அழித்துவிட்டுச் சென்றார்கள் என்று எழுதுவதால் நாம் செய்வது அவர்களுக்கும் அந்த மக்களுக்கும் எதிரான துரோகமே.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சில  உண்மைகள் உண்டு

 

ஆயுதப்போரை இனி  மக்கள் தாங்கமுடியாது  என்ற முடிவுக்கு தலைவர் வந்திருந்தார்.

சமாதான காலத்தில் பலருடனும் இதை தெரிவித்திருந்தார்.

 

2009இல் ஒன்றில் நாம் வென்றிருப்போம் அல்லது நாங்கள் இல்லாதிருப்போம் என்றே  முக்கிய  சந்திப்புக்களில் முக்கியமானவர்களிடம் தலைவர் தெரிவித்திருந்தார்.

 

இதன்படியே  முள்ளிவாய்க்கால் தீர்மானிக்கப்பட்டதாக நான் நினைக்கின்றேன்.

 

ஆனால் அதிலிருந்து அதை நகர்த்துவதில் நாம் தோல்வி  கண்டுவிட்டோம  என்பபது தான் கவலைக்குரியது.

இதில் சம்பந்தரும் அடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சில  உண்மைகள் உண்டு

 

ஆயுதப்போரை இனி  மக்கள் தாங்கமுடியாது  என்ற முடிவுக்கு தலைவர் வந்திருந்தார்.

சமாதான காலத்தில் பலருடனும் இதை தெரிவித்திருந்தார்.

 

2009இல் ஒன்றில் நாம் வென்றிருப்போம் அல்லது நாங்கள் இல்லாதிருப்போம் என்றே  முக்கிய  சந்திப்புக்களில் முக்கியமானவர்களிடம் தலைவர் தெரிவித்திருந்தார்.

 

இதன்படியே  முள்ளிவாய்க்கால் தீர்மானிக்கப்பட்டதாக நான் நினைக்கின்றேன்.

 

ஆனால் அதிலிருந்து அதை நகர்த்துவதில் நாம் தோல்வி  கண்டுவிட்டோம  என்பபது தான் கவலைக்குரியது.

இதில் சம்பந்தரும் அடக்கம்.

 

இதே கருத்துதான் ரகுநாதனுக்கும் சொல்ல விரும்புவது..

 

ஒரு சிறு இனம் ஆயுதப் போராட்டத்தை எவ்வளவு நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும் என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு இருக்கிறது.

 

2009 இல் நடந்த முக்கால்வாசி விடயங்கள் ஜெயசிகுறு சமயத்திலும் நடந்தவைதான். ஆனால் பெரிய வித்தியாசம் கப்பல்களை அழித்தது.

 

முள்ளி வாய்க்காலுக்குள் போவதற்க்குப் பதிலாக காட்டுக்குள் போயிருக்கலாம். எங்களுக்கே அப்ப்டித் தோன்றுகிறது. இது புலிகளுக்குத் தெரியாது என்று நினைப்பது எமது கற்பனை மட்டுமே.. லட்சக்கணக்கில் இந்திய அமைதிகாப்புப் படையால்கூட காட்டுக்குள் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. அவர்களைவிட சிறீலங்கன்கள் திறமை வாய்ந்தவர்கள் என்பது வாதத்திற்கு உகந்ததல்ல.

 

இந்தியா எதிர்பார்த்ததும் அதைத்தான். காட்டிற்குள் இருந்து நொட்டுவார்கள். பிரச்சினை கொதிநிலையிலேயே இருக்கும் என்பது. ஆனால் முள்ளிவாய்க்காலுக்குள் எல்லாம் முடிந்துவிடும் என்பது இவர்கள் எதிர்பாராதது.

 

பிரச்சினை இன்றிப் போனதும் இந்தியாவின் leverage குறைந்துவிட்டது. திடீரென்று ராம் கிழக்கில் போராட்டத்தை ஆரம்பித்ததையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

ஆக, முள்ளிவாய்க்கால் முன்பே எடுக்கப்பட்ட முடிவல்ல.. ஆனால் திடீர் முடிவும் அல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

பல நாடுகளில் முக்கியமாக சிறு நாடுகளில் கட்டாய இராணுவ பயிற்சி சிறார்களுக்கு உண்டு.

சமாதானம் பேசிய நோர்வேயில் கட்டாய ஆட்சேர்ப்பு உண்டு.  மக்கள் தொகையுடன் பார்க்கும்போது ஆயுத ஏற்றுமதியிலும் உலகில் ஒராமிடம் நோர்வேக்கு தான்.

கனடாவில் ஒரு புலி எதிர்ப்பாளி ஆட்சேர்ப்பு பற்றி புலம்பியபடி இருந்தார்.  அப்படியென்றால் ஏன் உனது மகனை ஸ்கவுட்ஸ்இற்கு அனுப்புகிறாய் என்று கேட்டேன்.  அவர் முடிச்சு போட பழக என்று வெள்ளந்தியாக சொன்னார்.

எம்மவரில் பலருக்கு ஸ்கவுட்ஸ் ஒரு இராணுவத்தின் சிறுவர் படை என்று இன்னும் தெரியாது.

கனடாவின் உலக போர் ஒன்றில் இறந்த மாவீரன் ஒரு குழந்தை போராளி!

 

மேற்குலகம் தற்கொலைத் தாக்குதல், சிறுவர் போராளிகள் இவைகளை எதிர்க்க வலுவான காரணங்கள் உண்டு. தவிர்க்க முடியாத சேதங்களை மேற்கு நாட்டுப் படைகளுக்குத் தருபவர்கள் இந்த தற்கொலைத் தாக்குதல்காரர்கள்தான். சாகும் வரை துப்பாக்கியுடன் சென்று சண்டைபிடித்துச் சாகிறவர்களுக்கும், உடலில் குண்டுகட்டி வெடிக்க வைத்துச் சாகிறவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இரு வகையினரும் இறந்தே போகிறார்கள். ஆனால் வித்தியாசம் எதிராளியின் சேத விவரத்தில் உள்ளது.

 

முதல் வகையில், எதிராளிக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. திருப்பித் தாக்கலாம். நவீன தொழில் நுட்பத்துடன் முன்னமே கண்டுபிடிக்கலாம். ஆனால் தற்கொலைத் தாக்குதலில் அந்தச் சந்தர்ப்பம் மிகக்குறைவு. ஆகவே, மேற்குலகம் இதைத் தடை செய்துள்ளது. :D

 

அதேபோல, சிறூவர் போராளிகள் எதிரணியில் இருந்தால் அவர்களுடன் போரிடுவது தர்க்க ரீதியில் சரியில்லாது போய்விடும். ஆகவே அதையும் எதிர்க்கிறார்கள்.

 

அமெரிக்காவில் துப்பாக்கியுடன் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து சுட்டுக் கொன்றான் ஒருவன். தான் சாகும்வரை சுட்டான். உண்மையில் அவனும் ஒரு தற்கொலைத் தாக்குதல்தாரிதான். ஆனால் அந்த வெள்ளை பயங்கரவாதி அல்ல.. :rolleyes:

 

கமகாசி முறையில் ஜப்பானியர்கள் போர்விமானங்களை தற்கொலைத் தாக்குதலுக்குப் பாவித்தார்கள். அவர்களும் பயங்கரவாதிகள் அல்லர். :D

 

சிறுவர் போராளிகளை உலகப்போரில் ஈடுபடுத்திய மேற்கு நாடுகள் அதற்காக ஒரு சிறு சிறு வருத்தத்தைக்கூட தெரிவித்ததில்லை. இன்றும் அந்த சிறுவர் போராளிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள்.. :D

 

போனவருடம் என நினைக்கிறேன். ஆளில்லா விமானங்களாஇக் கொண்டு அமெரிக்கா தாக்குவது போர் மரபல்ல என்கிற ரீதியில் ஒரு விவாதம் போனது. அதாவது எதிராளிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. ஆனால் அதைப் பயங்கரவாதம் என்று சொல்லமாட்டார்கள்.. :D

நன்றி ரகுநாதன் .

நல்லதோ கெட்டதோ உண்மையை பேச இந்த உலகில் பலர் இருக்கின்றார்கள்.அதே உலகத்தில் தான் இறந்தவனின் கோமணத்தையும் உருவி வியாபாரம் செய்யவும் சிலர் இருக்கின்றார்கள் .அவர்களுக்கு நாடு ,இனம் ,மொழி ,அடுத்தவன் மரணம் ,துன்பம் பற்றி எதுவித அக்கறையுமில்லை தனது வியாபாரத்தை எப்படி நடத்துவது என்பது தான் பிரச்சனை .

கனடாவில் அதி தீவிர தேசியம் பேசியவர்கள் தான் இப்போ அரசுடனும் கே.பி யுடனும் நிற்கின்றார்கள் .கேட்டால் அந்த அநாதை பிள்ளைகளை பார்க்க மனம் மாறிவிட்டதாம் .இப்ப அந்த பிள்ளைகளுக்கென்று பணம் சேர்க்கின்றார்கள் பாவிகள் .

முப்பதுவருடமாக போராட்டத்தை வைத்து பிழைத்து இப்ப போராட்டதிற்கு பின் ஆன நிலையை வைத்து பிழைக்கிறான் .

இவர்கள் தான் இப்போ சம்பந்தனையும் தூற்ற தொடங்கியுள்ளார்கள் .

இதற்குள் தலைவரை வேறு இழுக்கின்றார்கள் .

இவர்கள் என்னமாதிரி எல்லாம் சுத்தினார்கள் என்பதெல்லாம் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகின்றது .அதை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை ஏனெனில் சுரணை என்ற சொல்லே அவர்கள் அகராதியில் இல்லை .

கனடாவில் ஸ்கவுட்ஸ்இற்கு பிள்ளை போவதும் நாட்டில் கட்டாயாமக்க பிடிக்கப்பட்டு முன்னரங்கில் நிற்பதையும் ஒப்பிடும் ஒருவருடன் கதைக்க என்ன இருக்கு ,

இங்கு சிலர் குளிருக்க நின்று கொடி பிடித்தது களத்தில்  துவக்கு பிடித்ததை விட பெருமையாக கதைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
கருணான்ட பிரிவிற்கு பிறகாவது புலிகள் கொஞ்சம் சுதாகரித்திருக்கலாம்...அவ்வளவு சனமும்,போராளிகளும் சாகமல் தப்பித்திருப்பார்கள்...இவ்வளவு அழிவும் வந்திருக்காது..நீண்ட கால ஆயுதப் போராட்டம் சரிவராது என்ட முடிவு கருணாவின் பிரிவோட தலைவருக்கு தோன்றியிருக்குமாயின் அப்பவே அமைப்பை கலைத்து விட்டு மறைந்திருக்கலாம்.
 
மறைந்திருந்து விட்டு நீண்ட காலத்திற்கு பிறகு புலம் பெயர் மக்களோடு சேர்ந்து அரசியல் ரீதியாக எதாவது முயன்றிருக்கலாம்...முப்பது வருடமாக போராடிய அமைப்பு விரல் சொடுக்கும் நேரத்தில் அழிந்து போனதென்பது கொடுமையிலும் கொடுமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.